சமீபத்தில் கோவை பெரியன்ஸ் தளத்தில் ஒரு விவாதத்தில் கலந்துகொண்டபோது, பின்வரும் வசனங்களை ஆதாரமாகச் சொல்லி, “ஏழைகளுக்குக் கொடுத்தாலே போதும், நித்திய ஜீவன் உத்தரவாதம் “ எனக் கூறியிருந்தேன்.
சங்கீதம் 41:1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். 2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்;
சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
ஏசாயா 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். 8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38 இது முதலாம் பிரதான கற்பனை. 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
மத்தேயு 9:13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்.
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
இதைப் படித்த அத்தளத்தின் சகோதரர் ஒருவர், “ஏழைகளுக்குக் கொடுப்பவன் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?” எனும் கேள்வியை எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.
ஏழைகள் மீது இரக்கம் பாராட்டி, அவர்களுக்குக் கொடுப்பவர்களை நீதிமான்கள் என இயேசு தீர்த்து, அவர்களுக்கு நித்திய ஜீவனையும் கொடுப்பதைக் குறித்து பின்வரும் வசனபகுதி தெளிவாகக் கூறுகிறது.
மத்தேயு 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
இத்தனை தெளிவாக இயேசு கூறியிருக்கையில், “ஏழைகள் மீது இரக்கம் பாராட்டி அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். இந்நிலையில், “ஏழைகளுக்குக் கொடுப்பவர்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா” எனும் கேள்விக்கான பதிலை நாம் எப்படிக் கண்டறிவது?
இக்கேள்விக்கான பதிலைக் கண்டறியுமுன், மனிதனின் சுபாவம் என்ன, அவனது மனசாட்சி என்றால் என்ன, அவனது சுயாதீனம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், அவனை ஒரு Robot ஆகப் படைக்கவில்லை. அவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்கதாக அவனுக்கு சுயாதீனத்தைக் கொடுத்தார்.
ஆனால் சில சகோதரர்களோ, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை. தேவன் மனிதனுக்கு சுயாதீனத்தைக் கொடுக்காவிடில், அவனிடம் அவர் இப்படியாகச் சொன்னது ஒரு நாடகமாகத்தான் இருக்கும்.
ஆதியாகமம் 2:16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
கனியைப் புசிக்கவேண்டாம் என மனிதனிடம் ஒருபுறம் சொல்லிவிட்டு, அவன் கனியைப் புசிக்கவேண்டும் எனவும் தேவன் சித்தப்பட்டால் அது தேவனை நாடகமாடுபவராகத்தான் காண்பிக்கும். ஆனால் தேவன் நாடகமாடுபவர் அல்ல. எனவே மனிதன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்கதான சுயாதீனத்தை தேவன் அவனுக்குக் கொடுத்தார் என்பதே மெய்.
ஆதியில் மனிதனுக்கு அநேக கட்டளைகளை/கற்பனைகளை தேவன் கூறவில்லை; ஒரேயொரு கட்டளையை மட்டும் கொடுத்தார். அக்கட்டளையை மனிதன் மீறியதையும் அதினிமித்தம் அவனும் இப்பூமியும் சபிக்கப்பட்டதையும் நாம் நன்கறிவோம்.
தேவகட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியைப் புசித்ததால் மனிதனின் அறிவில் ஒரு மாற்றம் உண்டானது. ஆம், மனிதன் நன்மை/தீமை அறியத்தக்க அறிவை உடையவனானான். இக்கருத்துக்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
ஆதியாகமம் 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
மனிதன் நன்மை தீமை அறியத்தக்க அறிவைப் பெற்றபின்னர்கூட, தேவன் மனிதனிடம் வேறு கட்டளைகளை/கற்பனைகளைக் கூறவில்லை. மனிதன் சுயமாக சிந்தித்து எது நன்மை எது தீமை என்பதை அறிந்து, நன்மையை ஏற்றுக்கொண்டு, தீமையை விலக்கவேண்டும் என்பதே தேவனின் சித்தமாக இருந்தது.
//ஆனால் சில சகோதரர்களோ, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை. தேவன் மனிதனுக்கு சுயாதீனத்தைக் கொடுக்காவிடில், அவனிடம் அவர் இப்படியாகச் சொன்னது ஒரு நாடகமாகத்தான் இருக்கும்.//
இதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை என்கிறீர்கள்!! இப்பொழுதோ அநேக வசனங்களை கொடுத்திருக்கிறோம்!! இந்த தளத்தில் சகோ அன்பு அவர்களின் பதிவுகளுக்கு கோவை பெரேயன்ஸ் தளத்தில் பதில் தந்திரிக்கிறோம்!! இந்த தளத்தில் பார்வையிடும் நண்பர்களுக்கு அதன் தொடுப்பை கொடுக்கிறேன், அவசியம் வாசித்து கோவை பெரேயன்ஸினால் குழப்பம் அடைகிறோம் என்கிற அச்சம் வேண்டியதில்லை!! பிதா ஒருவனை சேர்த்துக்கொள்ளாவிட்டா ஒருவனும் கிறிஸ்துவிடம் வர முடியாது என்கிற வசனத்தை நிச்சயமாக நம்புகிறேன்!!
//இதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை என்கிறீர்கள்!! இப்பொழுதோ அநேக வசனங்களை கொடுத்திருக்கிறோம்!! இந்த தளத்தில் சகோ அன்பு அவர்களின் பதிவுகளுக்கு கோவை பெரேயன்ஸ் தளத்தில் பதில் தந்திரிக்கிறோம்!!//
மீண்டும் சொல்கிறேன்:சில சகோதரர்கள் சொல்கிறதான, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனும் கூற்றுக்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை; அப்படி ஒரு வசனம் இருக்கவும் முடியாது.
“மனிதனுக்கென சுயாதீனம் எதுவும் கிடையாது, அவன் எந்தவொரு செயலையும் தேவசித்தப்படித்தான் செய்வான்” எனும் கூற்று மெய்யெனில் “இந்த விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” எனும் தேவனின் கட்டளை ஒரு போலியான கட்டளையாகத்தான் இருக்கமுடியும்.
சில சகோதரர்கள் வேதவசனங்களின் கருத்தை சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான், தவறான சில கோட்பாடுகளை தாங்களாக உண்டாக்கிக்கொண்டு, அதற்கு ஆதாரமாக சில வேதவசனங்களைக் காட்டுகின்றனர்.
இதற்கு உதாரணமாக, “தேவசித்தம்” சம்பந்தமான அவர்களின் கோட்பாட்டுக்கு ஆதாரமாகத் தந்துள்ள வசனங்களில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஏசாயா 43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
இவ்வசனத்தின்படி தேவன் செய்வதை யாராலும் தடுக்கமுடியாது என்பது மெய்தான்; ஆனால் மனிதன் செய்வதை, அதாவது தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதையோ அல்லது அவரது கட்டளையை மீறுவதையோ தேவன் தடுக்கிறார் என இவ்வசனம் சொல்கிறதா? நிச்சயமாக இல்லை.
சம்பந்தமில்லாத வசனத்தைத் தந்து “இதோ ஆதாரம்” என அறிவீனமாகச் சொன்னால் “தவறான கோட்பாடு” உண்மையாகிவிடாது.
இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கினாராம்; சரி, அந்த இருளின் அதிகாரி யார்? தேவனா, அல்லது வேறொருவரா? தேவனாக இருந்தால், அவரது சொந்த அதிகாரத்திலிருந்து அவரே விடுதலையாக்குவதில் எந்த விசேஷமும் இல்லையே! வேறொருவரின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்குவதுதான் விசேஷமானதான இருக்கும். எனவே இருளின் அதிகாரம் என்பது தேவனின் அதிகாரம் அல்ல. தேவனின் அதிகாரம் அல்லவெனில் வேறு யாருடைய அதிகாரமாக இருக்கமுடியும்? சாத்தானின் அதிகாரமாகத்தான் இருக்கமுடியும்.
அந்த சாத்தானின் அதிகாரத்திற்குள் மனிதர்கள் செல்கையில் தேவன் என்ன செய்துகொண்டிருந்தார்? அவரால் அதைத் தடுக்கமுடியவில்லையா? நிச்சயமாக அல்ல. தேவன் நினைத்தால் மனிதர்கள் இருளுக்குள் செல்லும்போதே அவர்களைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. ஏனெனில் மனிதனுக்கு சுயாதீன சித்தத்தை தேவன் கொடுத்திருந்தார். அந்த சித்தத்தின்படி அவன் இருளுக்குள் சென்று இருளின் அதிகாரத்தில் சிக்கிக் கொண்டான். ஆம், தேவனின் சித்தப்படி மனிதன் இருளின் அதிகாரத்தில் அகப்படவில்லை; மனிதன் தன் சுயசித்தத்தின்படித்தான் இருளின் அதிகாரத்தில் அகப்பட்டான். இந்த ஒரு ஆதாரமே போதும், “மனிதன் எந்தவொரு செயலையும் தேவசித்தப்படித்தான் செய்கிறான்” எனும் கூற்று தவறு என்பதற்கு.
இருளின் அதிகாரத்தில் அகப்பட்ட மனிதனை முழுக்க முழுக்க தேவன்தான் வெளியே கொண்டுவந்தாரா? அதுவும் இல்லை என்றுதான் பின்வரும் வசனங்கள் சொல்கின்றன.
எபேசியர் 6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள பிசாசின் அதிகாரங்கள், துரைத்தனங்கள், பொல்லாத ஆவிகள், அந்தகார லோகாதிபதிகள் எல்லாவற்றையும் சேர்த்துதான் இருளின் அதிகாரம் என கொலோசெயர் 1:13 கூறுகிறது. அந்த அதிகாரத்திலிருந்து வெளியே வருவதற்கு நாம் தான் போராட வேண்டும். நாம் போராடுவதும் போராடாதிருப்பதும் முழுக்க முழுக்க நம் சுயசித்தத்தைத்தான் சார்ந்ததேயொழிய தேவசித்தத்தை சார்ந்தது அல்ல.
இருளின் அதிகாரத்திற்கு எதிராக போராட முன்வருகிற நாம், நமது போராட்டதிற்கான ஆயுதங்களாக தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் நாம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்படியாக தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்து நாம் போராடும்போது, தேவன் தமது பரிசுத்த ஆவி மூலம் நமக்கு உதவிசெய்கிறார். அப்போது நாம் இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாவோம்.
கொலோசெயர் 1:13 கூறுகிற இருளின் அதிகாரத்திலிருந்து நாம் விடுதலையாவதில் இத்தனை விஷயங்கள் அடங்கியுள்ளன. இதையறியாமல், (சாத்தானைப் போல்) ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக்கொண்டு முட்டாள்தனமான கருத்துக்களையும் கொள்கைகளையும் சிலர் கூறிவருகின்றனர்.
அவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டால், “என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்” என தேவன் சொல்கிறபடியே (ஓசியா 4:6) நமக்கு நேரிடும்.
//கொலோசெயர் 1:13 கூறுகிற இருளின் அதிகாரத்திலிருந்து நாம் விடுதலையாவதில் இத்தனை விஷயங்கள் அடங்கியுள்ளன. இதையறியாமல், (சாத்தானைப் போல்) ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக்கொண்டு முட்டாள்தனமான கருத்துக்களையும் கொள்கைகளையும் சிலர் கூறிவருகின்றனர்.//
இந்த தளத்தின் வாசகர்களுக்காக: நாங்கள் ஏதோ ஒரே ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு இந்த தளத்தின் நிர்வாகியிடத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கிறார்!! இதோ இந்த தளத்தின் வாசகர்கள் முடிவு செய்யுங்கள், நாங்கள் சாத்தானை போல் ஒரே வசனத்தை வைத்து தான் முட்டாள்தனமான கருத்துக்களை சொல்லி வருகிறோமா என்று!! பொய் பேசுவதே ஒரு பாவ கிரியை என்பதை சகோ அன்பு அவர்கள் அறிந்திருக்க வேண்டும்!! உங்கள் கருத்துக்கு தோதாக தெரிகிற மாதிரியான ஒன்று இரண்டு வசனங்களை எடுத்து போட்டுக்கொண்டு, நாங்கள் சாத்தனை போல் ஒரே வசனத்தை பிடித்திக்கொண்டு இருக்கிறோம் என்று எழுதுவது எத்தகை செயல் (கிரியை) என்பது உங்களுக்கே வெளிச்சம்!!
இதோ ஒரே வசனத்தை சாத்தானை போல் பிடித்துக்கொண்டு முட்டாள்தனமான கருத்துக்கள் கொண்ட பதிவு!! இது கோவை பெரேயன்ஸ் தளத்தில் சகோ சோல் சொல்யூஷன் எழுதியது!!
//ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், அவனை ஒரு Robot ஆகப் படைக்கவில்லை. அவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்கதாக அவனுக்கு சுயாதீனத்தைக் கொடுத்தார்.
ஆனால் சில சகோதரர்களோ, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதற்கு ஆதாரமான எந்த வசனமும் வேதாகமத்தில் இல்லை.//
மீண்டும் எந்த வசனமுமில்லை என்று முட்டாள்தனமாக பதித்துள்ள நீங்கள் கீழ்க்கண்ட வசனங்களுக்கு என்ன பதில் தருவீர்கள்? தெரியாதமாதிரி விலகிவிடுவீர்களா? அல்லது நறுக்கென்று பதில் தருவீர்களா?
சங்கீதம் 115:3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
அட அன்பு சொல்கிறார் ஞானம் போதுமென்று என்ன பிரசங்கியாரே உளருகிறீர்?
ஏசாயா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
என்ன சித்தமானவைகளை செய்வீங்களா? காமெடி பண்ணாதீங்க தேவனே, 2தீமோ2:4 தான் நடக்காதே. மனுஷன் தயவு உங்களுக்கு வேண்டும்.
அப்போஸ்தலர் 13:22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
அட அவனுக்குச் சித்தமானதைத்தானே அவன் செய்வான்? போங்க ஆண்டவரே கொழப்புரீங்க...
யோபு37:6. அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
7. தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
8. அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
9. தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
10. தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
11. அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
12. அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
13. ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
கிழிஞ்சு போச்சு. காற்றும் மழையும் கூட உமது கைங்கரியம்தானா?
அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
ஒரு மனிதன் எங்கு குடியிருக்க வேண்டுமென்பது அவனது விருப்பத்தைப் பொறுத்தது. நீங்க யாரு முன்குறிக்றதுக்கு?
யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
பார்வோன் சுயாதீனமாக கடினப்படலயா?
யாத்திராகமம் 14:17 எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
அட பார்வோன் மட்டுமில்லாம எல்லாருமேவா?
உபாகமம் 2:30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
அவனையுமா?
II கொரிந்தியர் 5:5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
ஹலோ நான் தான் ஆயத்தப்படுகிறேன். என்ன உளருகிறீர்?
ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
என்னாத்த முன்குறித்தீரோ, அவனவன் சுயசித்தம் நடக்கும்போது இதெல்லாம் என்ன காமெடி?
எபேசியர் 1:12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
எல்லாவற்றையும் நடப்பிக்கிறீரா?
யாத்திராகமம் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
உள்ளத்தில் புத்தி தானாக வரும். படிச்சா புத்தி வந்துட்டுப்போது?
ஏசாயா 43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
மனிதன்! சந்தேகமிருந்தால் சகோ.அன்பைக் கேளுங்கள்.
ஏசாயா 44:7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
அட நிகழ்காரியம் வருங்காரியம் எல்லாம் மனிதன் எடுக்கும் முடிவைப்பொறுத்தது. மனிதன் எடுக்கப்போகும் முடிவே உமக்குத்தெரியாதே, நீர் எப்படிவருங்காரியங்களை முன்னறிவிப்பீர். உளராதீங்க தேவனே...
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வசனத்தை கேட்டு பிதாவை விசுவாசிப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வசனம் சொல்லுகிறது!! ஆனால் அன்பு அவர்களுக்கு கிரியை செய்தால் மாத்திரமே நித்திய ஜீவனாம்!! வேறு ஒன்றும் தேவையில்லையாம்!! பிதாவிடத்தில் விசுவாசம் கொண்டாலே இவை யாவும் நடக்கும்!! இனி விசுவாசம் உங்கள் சொந்த முயற்சியா, விசுவாசம் தேவனின் ஈவு என்கிறது வசனம்:
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ஆனால் சகோ அன்பு சொல்லுகிறார், இது என்னால் (அன்பு) என் கிரியையினால் உண்டானது!! விசுவாசிப்பதே ஒரு ஈவு என்று கொடுக்கப்படுகிறது, அந்த விசுவாசத்தை கொண்டு பிதாவை விசுவாசிப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வசனம் தெளிவாக சொல்லும் போது, இவருக்கு அப்படி பட்ட வசனமும், அப்படி பட்ட விளக்கமும் சாத்தானின் போதனையாக தெரிவதில் எந்த தவறும் இல்லை!! தன் கிரியை நம்பி, தேவனின் ஈவான கிருபையும் விசுவாசத்தையும் சாத்தான் ஒருவன் தான் தள்ளி வைக்க முடியும்!!
அடுத்து தேவ வாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அதினால் நித்தியஜீவன் உண்டென்று கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!! உடனே சகோ அன்பு சொல்லுகிறார், தேவ வாக்கியங்களில் எவை எல்லாம் கிரியை குறித்து சொல்லுகிறதோ அது மாத்திரமே நித்திய ஜீவனுக்கு உண்டான வசனங்கள் மற்றவை எல்லாம் சாத்தான் (நாங்க தான்) கொண்டு வரும் முட்டாள் தனமான கருத்தும் கோட்பாடுகளாம்!! அதாவது இவருக்கு கிறிஸ்து இயேசு சொல்லியும் இவர் இவர் பிடிவாதத்தில் நிலைத்திருப்பது எதை காட்டுகிறது!!??
கிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று மெய்யாகவே மெய்யாகவே கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!! ஆனால் இதுவும் சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான கருத்தும் போதனையுமாம்!! இவர் கிரியை செய்வதில் தான் நித்திய ஜீவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதினால் இவருக்கு நித்திய ஜீவனை குறித்தான மற்ற வசனங்கள் எல்லாம் சாத்தான் கொண்டு வந்த முட்டாள்த்தனமான போதனைகளாக தெரிகிறது!!
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
இது அவசியம் இல்லாத கோட்பாடு என்று சகோ அன்பு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!! ஒருவேளை இந்த போதனையும் சாத்தான் தான் கொண்டு வந்திருப்பானோ என்கிற அய்யம் இவருக்கு!!
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
இந்த வசனமும் சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான போதனையாக தோன்றுகிறது!! ஏனென்றால் அது எப்படி கிரியை இல்லாமல் ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும் அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவையும் அறிவது என்கிறார் சகோ அன்பு!!
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் நித்திய ஜீவன் என்பது சகோ அன்புக்கு சாத்தானின் முட்டாள்த்தனமான போதனையாக இருக்கலாம்!! அது எப்படி தேவனின் கிருபை வரம் என் அனுமதி இன்றி என்னில் செயல்ப்பட முடியும் என்றும் அவர் கேட்கலாம்!!
இத்துனை வசனங்கள் கொடுத்தாலும் சகோ அன்பு அவர் தளத்தில் சொல்லுவார், நான் (கோவை பெரேயன்ஸ் சகோதரர்கள்) ஏதோ ஒரே ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு சாத்தானின் போதனையை (சகோ அன்புக்கு சில் சமயம் அவர் கருத்துக்கு முரனான வசனங்கள் எல்லாம் சாத்தானின் போதனையாக தெரிகிறது) முட்டள்த்தனமான கருத்தும் கோட்பாடுகளையும் கொண்டு தந்துக்கொண்டிருக்கிறோம் என்பார்!!
சகோ அன்பு அவர்களே, கிரியை செய்தால் தான் நித்திய ஜீவன் என்றால் ஒன்றான் மெய் தேவனாகிய பிதாவையும் அவரின் குமாரனையும் அறிவதினால் உண்டாவது என்ன!!??
கிரியை கிரியை என்று சொல்லிக்கொண்டு ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு கிரியை செய்தால் போதும் நித்திய ஜீவன் உண்டு என்று நீங்கள் தான் ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு அதில் நிலைத்திருக்கிறீர்கள் என்பது எங்களின் குற்றச்சாட்டு!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
எபேசியர் 6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
//இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள பிசாசின் அதிகாரங்கள், துரைத்தனங்கள், பொல்லாத ஆவிகள், அந்தகார லோகாதிபதிகள் எல்லாவற்றையும் சேர்த்துதான் இருளின் அதிகாரம் என கொலோசெயர் 1:13 கூறுகிறது. அந்த அதிகாரத்திலிருந்து வெளியே வருவதற்கு நாம் தான் போராட வேண்டும். நாம் போராடுவதும் போராடாதிருப்பதும் முழுக்க முழுக்க நம் சுயசித்தத்தைத்தான் சார்ந்ததேயொழிய தேவசித்தத்தை சார்ந்தது அல்ல.//
இதை எல்லாம் நாமே செய்கிறோம், இதில் தேவ சித்தமே கிடையாதாம்!! உங்கள் சுய சித்தத்தினால் நீங்கள் செலெக்டிவாக சுலபமாக செய்ய முடிகிறதை மாத்திரமே செய்து வருகிறீர்கள்!! ஆகவே தான் இதற்கு முன் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் விற்று விட்டு, ஏழைகளுக்கு கொடுத்தீர்களா (கிரியை) என்று கேட்டத்தற்கு அது அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது என்று உங்களின் வழக்கமான பதிலை தந்தீர்கள்!! கிரியை செய்வதில் என்ன செலெக்டிவாக செய்ய வீண்டியிருக்கிறது!! இதையும் தானே கிறிஸ்து இயேசு அந்த இளைஞனின் மூலமாக உங்களை செய்ய சொல்லியிருக்கிறார்!! இப்பவும் இதை வாசித்து என்னை திட்டுவீர்களே தவிர இதற்கு உருபடியான ஒரு பதில் உங்களிடத்திலிருந்து வராது என்பதை அறிந்திருக்கிறேன்!!
அதே போல் தேவனும் செலெக்டிவாக தான் தன் சித்தத்தை நிறைவேற்றுவார் என்று சொல்லுவது தேவ தூஷனம்!! ஒரு விஷயத்தில் தேவ சித்தம் இல்லை என்று சொல்லுவதே தேவ தூஷனம்!! அப்படி இல்லாட்டி அவர் பாரபட்சம் பார்க்கும் தேவனாக இருப்பார்!!
கிரியை தான் செய்ய வேண்டுமென்றால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து இயேசு சொன்ன எல்லா கிரியையும் செய்கிறீர்களா!! உங்கள் கண் பாவம் செய்தால் அதை பிடிங்கி போட்டீர்களா!! உங்கள் கை பாவம் செய்தால் அதை வெட்டி போடுவீர்களா!!?? இதுவும் உங்களுக்கு முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒதுக்கி விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்!! கிரியை போதித்தால் முழுமையாக போதியுங்கள், செலெக்டிவாக, சுலபமாக செய்யக்கூடியதை கிரியை என்றும், மற்றவைகளுக்கு ஆவிக்குறிய அர்த்தம் என்று தப்பாக போதிக்க வேண்டாம்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//இந்த தளத்தின் வாசகர்களுக்காக: நாங்கள் ஏதோ ஒரே ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு இந்த தளத்தின் நிர்வாகியிடத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கிறார்!! இதோ இந்த தளத்தின் வாசகர்கள் முடிவு செய்யுங்கள், நாங்கள் சாத்தானை போல் ஒரே வசனத்தை வைத்து தான் முட்டாள்தனமான கருத்துக்களை சொல்லி வருகிறோமா என்று!!//
//உங்கள் கருத்துக்கு தோதாக தெரிகிற மாதிரியான ஒன்று இரண்டு வசனங்களை எடுத்து போட்டுக்கொண்டு, நாங்கள் சாத்தனை போல் ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறோம் என்று எழுதுவது எத்தகை செயல் (கிரியை) என்பது உங்களுக்கே வெளிச்சம்!!//
ஒன்றிரண்டு வசனங்கள் மட்டுமல்ல, அத்தனை வசனங்களும் எனது கருத்துக்குத் தோதானவைதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு மட்டுமே பதம். நான் 2 சோற்றை (வசனத்தை) பதம் பார்த்துள்ளேன். இரண்டுமே அவர்கள் கருத்துக்கு இசைவாக வேகவில்லை. இப்படியிருக்க ஒவ்வொரு வசனமாக எடுத்து நான் பதம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
இவர்கள் ஏராளமான வசனங்களைச் சொல்லியுள்ளதுபோல் சாத்தானும் தனது ஒவ்வொரு சோதனையிலும் ஏராளமான தேவவல்லமைகளை/வசனங்களைக் கூறியிருக்கலாம். ஆனால் அவன் ஒரேயொரு தேவவல்லமையை/வசனத்தை மட்டுமே சொன்னான். அவன் சொன்னதை மீண்டும் ஒருமுறை படிப்போமாக.
முதல் சோதனை:
மத்தேயு 4:3 நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.
2-வது சோதனை:
மத்தேயு 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது.
சாத்தானை நினைத்திருந்தால் பின்வருமாறு கூறப்பட்டுள்ளபடி ஏராளமான தேவவல்லமைகளை/வசனங்களைக் கூறியிருக்கலாம்.
முதல் சோதனை:
நீர் தேவனுடைய குமாரனேயானால், வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்யும்.
நீர் தேவனுடைய குமாரனேயானால், எட்டிக் காய்களை அத்திப் பழங்களாக மாற்றும்.
நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த மண்ணை கோதுமை மணிகளாக மாற்றும்.
இப்படி பலவிதமான தேவவல்லமைகளை சாத்தான் கூறியிருக்கலாம்.
2-வது சோதனை:
இயேசுவை சமுத்திரக் கரைக்குக் கொண்டுசென்று, நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த சமுத்திரத்தைப் பிளந்து நடந்து செல்லும்; ஏனெனில் மோசே சமுத்திரத்தை அடித்தபோது அது பிளந்து வெட்டாந்தரையாக ஆனதாக எழுதியிருக்கிறதே எனச் சொல்லியிருக்கலாம்.
இயேசுவை சமுத்திரக் கரைக்குக் கொண்டுசென்று, நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணும்; ஏனெனில், “அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்” என்று எழுதியிருக்கிறதே (நாகூம் 1:4) எனச் சொல்லியிருக்கலாம்.
இயேசுவை மலைக்குக் கொண்டுசென்று, நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த மலையை மிதித்து நொறுக்கும்; ஏனெனில், “இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” என்று எழுதியிருக்கிறதே (ஏசாயா 41:15) எனச் சொல்லியிருக்கலாம்.
இப்படி பல வசனங்களை சாத்தான் கூறியிருக்கலாம்.
ஆனால் அவன் ஒரேயொரு வல்லமை மற்றும் வசனத்தை மட்டுமே சொன்னான். ஏனெனில் எத்தனை வல்லமைகளை/வசனங்களைச் சொன்னாலும் அவையனைத்தும் ஒரேவித கருத்தாகத்தான் இருக்கும் என்பதையும் எல்லாவற்றிற்கும் இயேசு பதில் சொல்லிவிடுவார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். எனவே ஒரேயொரு வல்லமை மற்றும் வசனத்தைச் சொல்லி அவன் நிறுத்திக்கொண்டான்.
ஆனால் நம் சகோதரர்களோ ஒரேவிதமான கருத்தில் ஏராளமான வசனங்களைத் தந்து, “இதற்குப் பதில்தரவில்லை, அதற்குப் பதில்தரவில்லை” எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவர்களின் ஒவ்வொரு வசனங்களுக்கும் தனித் தனி பதில் தேவையில்லை; எபேசியர் 6:11-14 வசனங்களின் அடிப்படையிலான பதில் மட்டுமே போதும்.
மனிதன் நன்மை தீமை அறியத்தக்க அறிவைப் பெற்றபின்னர்கூட, தேவன் மனிதனிடம் வேறு கட்டளைகளை/கற்பனைகளைக் கூறவில்லை. மனிதன் சுயமாக சிந்தித்து எது நன்மை எது தீமை என்பதை அறிந்து, நன்மையை ஏற்றுக்கொண்டு, தீமையை விலக்கவேண்டும் என்பதே தேவனின் சித்தமாக இருந்தது.
தேவசித்தப்படியே நன்மையை ஏற்றுக்கொண்டு தீமையை விலக்குகிற மனிதர்களும் ஆதாமின் சந்ததியில் தோன்றினார்கள்; தேவசித்தத்திற்கு விரோதமாக நன்மையை விலக்கி தீமையை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களும் ஆதாமின் சந்ததியில் தோன்றினார்கள். இதற்கு முதல் உதாரணமாக காயீன் மற்றும் ஆபேல் விளங்குகின்றனர்.
ஆபேலிடமோ காயீனிடமோ, “நன்மையைச் செய், தீமையைச் செய்யாதே” என்றோ “கொலைசெய்யாதே” என்றோ யாரும் கூறவுமில்லை, கட்டளையிடவுமில்லை. ஆனால் ஆபேலின் காணிக்கையை தேவன் ஏற்றுக்கொண்டதால் எரிச்சலாயிருந்த காயீனிடம் தேவன் இவ்வாறு கூறினார்.
ஆதியாகமம் 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
தேவனின் இக்கூற்றிலிருந்து நாம் அறிவதென்ன? “ஆபேல் நன்மை செய்திருந்தான், காயீன் நன்மை செய்யவில்லை” என்பதே. காயீனிடமோ ஆபேலிடமோ நன்மை செய்யும்படி யாரும் போதிக்கவில்லை. ஆனால் ஆபேல் தனது நன்மை தீமை அறிகிற அறிவைப் பயன்படுத்தி, “நன்மை செய்வதை” தெரிந்துகொண்டான்; அவனது சகோதரனாகிய காயீனோ அதைத் தெரிந்துகொள்ளத் தவறினான். விளைவு? நன்மை செய்த ஆபேல் தேவனால் அங்கீகரிக்கப்பட்டான்; நன்மை செய்யத் தவறிய காயீன் தேவனால் புறக்கணிக்கப்பட்டான்.
இவ்விதமாக ஆதியிலேயே “நன்மை செய்தல்” எனும் கிரியைதான் மனிதன் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதிலும், புறக்கணிக்கப்படுவதிலும் முக்கிய பங்கு வகித்தது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஆபேல் நன்மை செய்ததிலும் தேவசித்தம் இடைபடவில்லை, காயீன் நன்மைசெய்யத் தவறியதிலும் தேவசித்தம் இடைபடவில்லை. ஆபேல் தன் சுயசித்தப்படியே நன்மை செய்தான்; காயீன் தன் சுயசித்தப்படியே நன்மைசெய்யத் தவறினான்.
சில சகோதரர்கள் சொல்வதுபோல், “ஆபேல் நன்மைசெய்ததும், காயீன் நன்மைசெய்யத் தவறியதும் தேவசித்தப்படித்தான் நடந்தன” என்றால், ஆபேலை தேவன் ஏற்றுக்கொண்டதும் காயீனைப் புறக்கணித்ததும் ஒரு பட்சபாத செயலாகத்தான் இருந்திருக்கும்.
தேவசித்தத்தால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு மனிதனை பாராட்டிஅங்கீகரிப்பதும் அநீதிதான், தேவசித்தத்தால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு மனிதனை வெறுத்துபுறக்கணிப்பதும் அநீதிதான்.
தேவசமுகத்தை விட்டு மனிதன் தள்ளப்பட்டபின்னர்: மனிதனோடு தேவன் மீண்டும் இடைபட்டு, அவனை ஏற்றுக்கொண்டதற்கான காரணம், அவனது நன்மைசெய்தல் எனும் கிரியையே என்பதற்கு வலுவான ஆதாரமாக ஆபேல் விளங்குகிறான்.
நன்மைசெய்தல் எனும் சுபாவத்தை தேவசாயல் மூலம் ஆபேல் பெற்றிருந்தான்; நன்மைசெய்தல் எனும் தெரிந்துகொள்தலை தனது நன்மை தீமை அறியத்தக்க அறிவைப் பயன்படுத்தியதன் மூலம் ஆபேல் செய்தான்; தான் தெரிந்துகொண்ட அந்த தெரிவை தனது சுயாதீன சித்தத்தின்படியே ஆபேல் செய்துமுடித்தான்.
காயீனும்கூட நன்மைசெய்வதற்கான சுபாவத்தை தேவசாயல் மூலம் பெறத்தான் செய்திருந்தான். ஆனால் தனது நன்மை தீமை அறியத்தக்க அறிவின் மூலம் நன்மைசெய்தலை தெரிந்துகொள்ள அவன் தவறினான்.
காயீன் ஆபேலைப் போலவே, நம்மனைவரிடமும் நன்மை செய்வதற்கான தேவசாயல் உள்ளது; தேவனை அறிந்தவர்கள்/அறியாதவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லோரிடமும் அந்த சாயல் உள்ளது. அதனால்தான் தேவனை அறியாத பல மனிதர்கள், தேவனை அறிந்த நம்மைவிட “நன்மை செய்வதில்மேலானவர்களாக” இருக்கின்றனர்.
காயீன் ஆபேலை கொலைசெய்த பின்னர், கொலை செய்வது ஒரு பாவம் என்பதை தேவன் நேரடியாக உணர்த்தினார். மாத்திரமல்ல, ஆதாமின் பாவத்தால் மரணம் எனும் தண்டனை எல்லோருக்கும் நியமிக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு மனிதனும் சுயமாகச் செய்கிற பாவங்களுக்கும் தனித்தனியே தண்டனை உண்டு என்பதை தேவன் மனிதனுக்கு உணர்த்தினார். பின்வரும் வசனங்கள் இக்கருத்துக்கு ஆதாரமாயுள்ளது.
ஆதியாகமம் 4:10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. 11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். 13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. 14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
தனது பாவத்திற்காக தனிப்பட்ட முறையில் காயீன் தண்டனை பெற்றான். இதேவிதமாக இன்றுவரையிலும் மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக தனிப்பட்ட முறையில் தண்டனை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர்; ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை. வியாதிதான் மனிதனின் பாவங்களுக்கான பிரதான தண்டனை என்பதை வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன (உபாகமம் 28:27; 2 சாமுவேல் 12:15; சங்கீதம் 103:3; 107:17; ஏசாயா 1:5; மத்தேயு 9:2; யோவான் 5:14; யாக்கோபு 5:15).
வேதாகமம் இவ்வளவாய் சொல்லியுள்ளபோதிலும் வேதாகமத்தை நன்கறிந்த நாம், நமக்கு வியாதி வருகையில் நாம் பாவம் செய்துள்ளோமோ என சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, வியாதிக்கான அறிவியல் ரீதியான காரணங்களின் அடிப்படையில் நம் வியாதியைக் குணமாக்க முயலுகிறோம்.
இப்பூமியில் நமக்கு நேரிடுகிற பல இன்னல்களுக்குக் காரணம் நமது பாவமும் நம் முன்னோர்களின் பாவமுமே. ஆயினும் தேவன் தமது சுயசித்தத்தின்படியும் சிலரை இன்னல்களுக்கு ஆளாக்குகிறார். இஸ்ரவேலரை சோதிக்கும்படி அவர்களை வருத்தத்தின்பாதையில் நடத்தினார் (உபாகமம் 8:3); சாத்தானின் சவாலை தோற்கடிக்கும்படி யோபுவை உபத்திரவத்திற்குள்ளாக நடத்தினார் (யோபு 2:3); தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படியாக ஒருவனை பிறவிக்குருடனாகப் பிறக்கச் செய்தார் (யோவான் 9:3). இன்னும் நாம் அறியக்கூடாத பல காரணங்களினிமித்தம் தேவன் நம்மை இன்னல்களுக்குள்ளாக நடத்தக்கூடும். ஆகிலும் நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ இன்னல்கள் நேரிடுகையில், நாம் தேவனுக்கெதிராக ஏதேனும் பாவம் செய்துள்ளோமா என ஆராய்ந்து அறிவது அவசியமே.
காயீன் ஆபேல் சம்பவத்தின்போது கொலைசெய்வது ஒரு பாவமென நேரடியாக உணர்த்திய தேவன், அப்போதுகூட வேறெந்த பாவத்தைக் குறித்தும் எடுத்துரைக்கவில்லை. ஆகிலும் நோவா காலத்தில், கொலையைத் தவிர்த்த வேறு செயல்களின் காரணமாக மனிதர்கள் அக்கிரமக்காரராகத் தீர்க்கப்பட்டனர்; அதே வேளையில் நோவா மட்டும் நீதிமான் எனவும் தீர்க்கப்பட்டார்.
மனிதர்கள் தங்கள் சுயமனசாட்சியின்படி செய்யும் செயல்களின் அடிப்படையில் அவர்கள் அக்கிரமக்காரர் எனவும் நீதிமான்கள் எனவும் தீர்க்கப்படமுடியும் என்பதற்கு ஆதாரமாக நோவாவும் அவரது காலத்தில் வாழ்ந்த ஜனங்களும் ஆதாரமாயுள்ளனர்.
தங்கள் சுயமனச்சாட்சியின்படி வாழ்ந்த ஜனங்களில் அநேகர் அக்கிரமக்காரராகத்தான் இருந்தனர் என்பதற்கு நோவா காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் ஆதாரமாயுள்ளனர். ஆகிலும் மனிதரின் மனச்சாட்சியானது தேவனின் நியாயப்பிரமாணத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் முடியும் என்பதற்கு நோவா ஓர் ஆதாரமாயுள்ளார்.
நோவாவைப் போன்ற சிலரது மனச்சாட்சி தேவனின் நியாயப்பிரமாணத்துடன் இசைவாக இருந்தபோதிலும், பெரும்பாலான மனிதரின் மனச்சாட்சி தேவனின் நியாயப்பிரமாணத்திற்க்கு விரோதமாகவே இருந்தது.
எனவே ஒரு காலகட்டத்தில் தேவன் தமது நியாயப்பிரமாணத்தை மனிதரிடம் நேரடியாக எடுத்துச் சொல்ல சித்தங்கொண்டார். தமது சித்தத்தை செயல்படுத்தும்படி இஸ்ரவேலர் எனும் ஒரு ஜாதியினரைத் தெரிந்தெடுத்து, அவர்களிடம் தமது நியாயப்பிரமாணத்தை எடுத்துரைத்து, அவர்களோடு ஓர் உடன்படிக்கையும் செய்தார். தமது நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் நடந்தால் அவர்களுக்கு ஆசீர்வாதம், நியாயப்பிரமாணத்தின்படி நடவாவிட்டால் அவர்களுக்கு சாபம் என்பதே அந்த உடன்படிக்கை.
அவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதம், என்னென்ன சாபம் என்பதை உபாகமம் 28-ம் அதிகாரம் விரிவாகக் கூறுகிறது. இஸ்ரவேலர் தமது நியாயப்பிரமாணத்தின்படி நடந்தால் அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு, புறஜாதியினர் முன்பாக அவர்கள் மேன்மை பெறுவார்கள் என்றும் தேவன் வாக்களித்தார். ஆனால் இஸ்ரவேலரோ பெரும்பாலான சமயங்களில் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறினர். இதினிமித்தம் தேவனால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதோடு புறஜாதியினர் மத்தியில் சிறுமைப்படவும் செய்தனர்.
தேவனிடம் நியாயப்பிரமாணத்தைப் பெற்ற இஸ்ரவேலர், அதினிமித்தம் 2 விதமான பின்விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. 1. நியாயப்பிரமாணத்தின்படி நடந்து, அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டு, புறஜாதியினர் முன் மேன்மை பெறுதல். 2. நியாயப்பிரமாணத்தை மீறி, தேவகோபாக்கினைக்கு ஆளாகி, சாபத்தைப் பெற்று, புறஜாதியினர் முன்பாக நிந்தனைக்குள்ளாதல்.
இஸ்ரவேலர் தேவனின் நியாயப்பிரமாணத்தைப் பெற்றதால் அது ஒருவிதத்தில் நன்மையாக இருந்தபோதிலும் மற்றொரு விதத்தில் தீமையாகவும் இருந்தது. இதேவிதமாகத்தான் நாமுங்கூட தேவனின் நீதி நியாயங்களை அறியும்போது, அவை ஒருவிதத்தில் நமக்கு அதிக நன்மையாகவும் இருக்கும், மற்றொரு விதத்தில் அவை நமக்கு அதிகத் தீமையாகவும் இருக்கும். எவர்களிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவர்களிடம் அதிகம் கேட்கவும்படும்; அறியாமல் குற்றம் செய்தவன் சில அடிகள் அடிக்கப்படுவான், அறிந்து குற்றம் செய்பவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என வசனம் சொல்கிறது (லூக்கா 12:47,48).
தேவனின் நியாயப்பிரமாணத்தை எல்லாரும் அறிவதென்பது ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயமில்லை. ஒருவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை அறியவில்லையெனில் அவன் தன் மனச்சாட்சியின் பிரமாணத்தின்படி நியாயந்தீர்க்கப்படுவான்; தேவனின் நியாயப்பிரமாணத்தை அறிந்தவனோ, அந்த நியாயப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்கப்படுவான் (ரோமர் 2:11-16).
இனி, தேவன் மனிதனிடம் மிகமுக்கியமாக எதிர்பார்ப்பது எது என்பதைப் பார்ப்போம்.
தேவனின் நியாயப்பிரமாணம் என்பது ஏராளமான நீதி நியாயங்களை உள்ளடக்கியதாகும். ஆகிலும், தேவனின் நியாயப்பிரமாணமானது இரண்டே இரண்டு பிரதான கற்பனைகளில் உள்ளடங்கி விடுவதாக இயேசு சொல்கிறார். அவை:
மாற்கு 12:29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். தேவனிடம் அன்புகூரவேண்டும், சகமனிதரிடம் அன்புகூரவேண்டும் என்பதே பிரதான 2 கற்பனைகளாகும்.
இவ்விரு கற்பனைகளில் முதல் கற்பனை தேவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் 2-வது கற்பனை தேவனை அறிந்தவர்கள்/அறியாதவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான் என 1 யோவான் 4:20-ல் யோவான் கேட்கிறார். தேவனை அறிந்தவர்களிடத்தில்தான் இக்கேள்வியை அவர் கேட்கிறார். இதிலிருந்து நாம் அறிவதென்ன? முதலாவது நாம் அன்புகூர வேண்டியது, கண்ட சகோதரனிடம்தான். இதைச் செய்யாமல் காணாத தேவனிடம் அன்புகூர்வது போலியான அன்பாகத்தான் இருக்கும். எனவே நாம் முதலாவதாகச் செய்யவேண்டியது, சகமனிதரிடம் அன்புகூருவதுதான். இதைத்தான் தேவன் நம்மிடம் முதலாவதாக எதிர்பார்க்கிறார். இக்கருத்துக்கு பின்வரும் வசனங்களும் ஆதாரமாயுள்ளன.
நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள் 14:31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
மத்தேயு 25:40 அதற்கு ராஜா (இயேசு) பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
ஏழைக்கு இரங்குகிறவன் தேவனை அறிந்தவனா அறியாதவனா என்ற கேள்வியே இல்லை; அவன் யாராக இருந்தாலும் அவன் தேவனுக்குத்தான் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை தேவன் திரும்பக் கொடுப்பார் எனும் வாக்குத்தத்தம் அனைவருக்கும் பொருந்தும்.
தரித்திரனுக்குத் தயை செய்பவன் ஒருவேளை தேவனை அறியாதவனாக இருந்தாலும், அவன் தன்னையறியாமலேயே தேவனைக் கனம்பண்ணுகிறவனாயிருக்கிறான். அதேவேளையில் தேவனை அறிந்த ஒருவன், - தேவனை வெகுவாகக் கனம்பண்ணுவதாகக் கூறுகிற ஒருவன் -, தரித்திரனுக்குத் தயை செய்யாதிருந்தால் அவன் தேவனைக் கனம்பண்ணாதவனாகத்தான் கருதப்படுவான்.
எனவே இவ்வுலக மனிதர் அனைவரிடமும் தேவன் பிரதானமாக எதிர்பார்க்கிற காரியம், சகமனிதரிடம் அன்புகூருவதுதான். இந்த அன்புகூருதல் என்பது நியாயப்பிரமாணத்தை அறிந்துதான் வரவேண்டுமென்பதில்லை. மனிதன் தேவசாயலாகப் படைக்கப்பட்டுள்ளதால், தேவசாயலின் ஒரு தன்மையான அன்பு, அனைத்து மனிதரிடமும் இயல்பாகவே இருக்கத்தான் செய்யும். எனவே தன் மனதின் பிரமாணத்தின்படியே ஒருவன் பிறனிடம் அன்புகூர முடியும்.
ஆனாலும் ஒருவனிடம் சுயநலம் மேலோங்கும்போது பிறரிடம் அன்பு செலுத்துவது குறைந்துவிடும். இப்படி தனது இயல்பான பண்பை காட்டத்தவறுபவர்களுக்காகத்தான் நியாயப்பிரமாணத்தை தேவன் கொடுத்தார். எனவே நியாயப்பிரமாணத்தை பெற்றவர்கள்/பெறாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைத்து மனிதரிடமும் தேவன் எதிர்பார்க்கிற பிரதான காரியம் பிறனிடம் அன்புகூருவதுதான்.
இந்த அன்புகூருதலில் நியாயப்பிரமாணம் முழுமையும் எப்படி அடங்கும்?
அன்புகூருதல் எனும் ஒரே கற்பனையில் நியாயப்பிரமாணம் முழுமையும் எப்படி அடங்கும்?
நியாயப்பிரமாண கற்பனைகள் முழுவதையும் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் எல்லா கற்பனைகளின் பின்னணியிலும் அன்பு எனும் பண்பு மறைந்திருந்திருப்பதை நாம் காணலாம்.
உதாரணமாக, கொலை செய்யாதே, பொய் சொல்லாதே, களவு செய்யாதே, பிறனது பொருளை இச்சியாதே எனும் பிரமாணங்களை எடுத்துக்கொள்வோம். பிறனிடம் அன்புகூருபவன் அவனைக் கொலை செய்வானா, அவனிடம் பொய் சொல்லி ஏமாற்றுவானா, அவனது பொருளைக் களவாடுவானா, அல்லது அவனது பொருள்மீது இச்சை கொள்வானா? நிச்சயம் மாட்டான். பிறனிடம் அன்புகூருபவன் தனக்கு மற்றவன் என்ன நீதி/நியாயத்தை செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறானோ அவையனைத்தையும் அவன் பிறனுக்கு செய்வான்.
இப்படி எல்லா கற்பனைகளின் பின்னணியிலும் அன்புகூருதல் எனும் பண்பு மறைந்துள்ள போதிலும், விபசாரம் செய்யாதே எனும் கற்பனைக்கும் அன்புகூருதலுக்கும் சம்பந்தம் இல்லாதைப்போல் நமக்குத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியிலும் அன்புகூருதல் எனும் பண்பு இருக்கத்தான் செய்கிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்.
விபசாரம் என்றால் என்ன? தனக்கு உரிமையில்லாத ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதுதான் விபசாரம். திருமணம் தான் ஒருவன் ஒரு பெண்ணோடு உறவு கொள்ள உரிமை அளிக்கிறது. திருமணம் செய்யாமல் ஒருவன் ஒரு பெண்ணோடு உறவுகொள்கையில்: அவன் வேறொரு பெண்ணுடன் திருமணமானவன் என்றால் தன் மனைவிக்கு துரோகம் செய்கிறான், அல்லது அவன் உறவுகொள்ளும் பெண் வேறொருவனை திருமணம் செய்திருந்தால் அப்புருஷனுக்கு இவன் துரோகம் செய்கிறான், அல்லது இருவருமே திருமணமாகாதவர்கள் எனில் அவர்களின் வருங்கால மனைவி/கணவனுக்கு அவன் துரோகம் செய்கிறான். எனவே எப்படிப் பார்த்தாலும், திருமணமின்றி ஒருவன் ஒரு பெண்ணோடு உறவுகொள்கையில் அவன் பிறனுக்கு துரோகம் செய்கிறவனாகத்தான் இருப்பான். பிறனுக்குத் துரோகம் செய்பவன் அவனிடம் அன்புகூராதவனாகத்தான் இருப்பான்.
எனவே விபசாரம் செய்யாதே எனும் கற்பனையின் பின்னணியிலும் அன்புகூருதல் எனும் பண்பு மறைந்துள்ளது.
இன்னும் வரி ஏய்ப்பு செய்தல் போன்ற சட்டமீறுதலுக்கும் பிறனிடம் அன்புகூருதலுக்கும் என்ன சம்பந்தம் என நாம் கேட்கலாம். வரி ஏய்ப்பு செய்பவன் அரசாங்கப் பணத்தைக் களவு செய்கிறான். அரசாங்கப் பணம் என்பது மக்களின் பணம்தான். எனவே அரசாங்கப் பணத்தைக் களவுசெய்பவன் பிறனின் பணத்தைத்தான் களவு செய்கிறான். எனவே பிறனிடம் அன்புகூருபவன் அரசாங்கப் பணத்தையும் களவாட மாட்டான்.
இப்படியாக அநீதியான எந்த செயலும் ஒருவகையில் பிறனை பாதிப்பதாகத்தான் இருக்குமென்பதால், பிறனிடம் அன்புகூருதல் எனும் கற்பனையில் நியாயப்பிரமாணம் முழுவதும் அடங்கியுள்ளதாக இயேசு கூறுகிறார்.
இதிலிருந்து நாம் அறிவதென்ன? பிறனிடம் அன்புகூருவதன் விளைவாக ஏழைகளுக்குக் கொடுப்பவன், பிற விஷயங்களில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனும் எண்ணம் இல்லாதவனாகத்தான் இருப்பான்.
ஒருவேளை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பிற விஷயங்களில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என ஒருவன் நினைத்தால், அவன் ஏழைகளுக்குக் கொடுப்பதன் காரணம் உண்மையான அன்பு அல்ல என்றே அர்த்தம்.
பிறனிடம் உண்மையான அன்புடையவனாக ஏழைகளுக்குக் கொடுப்பவன், மற்றெல்லா விஷயங்களிலும் தன்னால் பிறன் பாதிக்கப்படக்கூடாது என்றே நினைப்பான்.
எனவே அவன் மனமுவந்து பிற குற்றங்களை நிச்சயம் செய்யமாட்டான். ஆனாலும் நம் மாம்சம் பாவமாம்சம் என்பதால், ஒருவன் பிறனிடம் அன்புகூருபவனாக இருந்தாலும், சில வேளைகளில் தன்னை மீறி அவன் பாவம் செய்யக்கூடும் என்பது மெய்தான். அப்படி அவன் செய்தால் மத்தேயு 5:7-ன்படி, இரக்கமுள்ளவனாகிய அவன் தேவனிடம் இரக்கம்பெற்று, அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவன் நித்தியஜீவனைப் பெறுவான்.