நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


அறிந்ததும் அறியாததும் திரியின் 6-ம் பக்கம் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ள ஒரு கூற்று:

//கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது, எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்று சொல்லி தருவதற்கு அர்த்தம் புரிகிறதா!! அப்படி என்றால் சோதனையில் விழ (சோதனை கொடுப்பதில் வேறு சோதனையில் விழுவது வேறு) விடாமால் என்னை நடத்தும் என்று கேட்க சொல்லுகிறார்!! அப்படி என்றால் விழசெய்கிறவர் தேவன் தானே!! தேவன் அந்த விழுதலை அனுமதிக்கிறார்!!//

சோதனையில் விழச்செய்பவர் தேவன் தானாம்; ஆனால் தேவன் அவ்வாறு விழச்செய்யாதபடி தேவனிடமே நாம் ஜெபிக்க வேண்டுமென இயேசு சொல்கிறாராம்!

அதாவது சோதனையில் விழச்செய்கிறதான அந்த தேவசித்தம் நிறைவேறாதபடிக்கு தேவனிடமே நாம் ஜெபிக்க வேண்டுமாம்.

இது ஒரு முரண்பாடான கூற்றா அல்லது குழப்பமான கூற்றா என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


அறிந்ததும் அறியாததும் திரியின் 6-ம் பக்கம் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ள மற்றொரு கூற்று:

//மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

நிலைத்திருக்க செய்பவர் தேவனே!!//

ஆனால் அவர் அவ்வாறு நிலைத்திருக்கச் செய்யவேண்டுமெனில், சீஷர்கள் செய்யவேண்டிய சில காரியங்கள் உண்டு. அவை:

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; (கோவை பெரியன்ஸ்: நீங்கள் ஓடாவிட்டாலும் தேவன் உங்களை ஓடவைத்து விடுவார்)

26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; (கோவை பெரியன்ஸ்: நீங்கள் பயப்பட நினைத்தாலும் பயப்படமாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் பயப்படக்கூடாது எனும் தேவசித்தத்தை மீறி உங்களால் பயப்படமுடியாது)

32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். (கோவை பெரியன்ஸ்: நீங்கள் இயேசுவை அறிக்கை பண்ணுகிறீர்களா? அப்படியானால் அதினிமித்தம் மேன்மை பாராட்டாதிருங்கள். ஏனெனில் தேவன்தான் நீங்கள் இயேசுவை அறிக்கை பண்ணும்படி செய்கிறார்)

39 என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். (கோவை பெரியன்ஸ்: இயேசுவினிமித்தம் நீங்கள் ஜீவனை இழந்தீர்களல்லவா? அதினிமித்தம் மேன்மை பாராட்டாதிருங்கள். ஏனெனில் நீங்களாக உங்கள் ஜீவனை இழக்கவில்லை; தேவன் தான் உங்கள் ஜீவனை இழக்கச் செய்தார். இப்படியெல்லாம் செய்து நீங்கள் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி தேவன் செய்துவிடுவார்.)

தேவன் எவர்களை நிலைத்திருக்கச் செய்ய சித்தம் கொள்கிறாரோ அவர்களை மேற்கூறியபடி செய்ய வைத்து, அவர்களை நிலைத்திருக்கச் செய்துவிடுவார்.

ரொம்ப நல்லது, ஆனால் 33, 39 வசனங்களின்படி செய்வோரின் முடிவு என்ன?

33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். (கோவை பெரியன்ஸ்: அன்பர்களே, இயேசுவை மறுதலித்ததற்காக நீங்கள் கொஞ்சமும் வருத்தப்படவேண்டாம். ஏனெனில் நீங்களாக இயேசுவை மறுதலிக்கவில்லை; தேவன் தான் உங்களை மறுதலிக்க வைத்தவர். தேவன் அதற்கென்றே உங்களை நியமித்து வைத்துள்ளார். இயேசுவை நீங்கள் மறுதலித்ததால் உங்களுக்கு ஒரு ஆபத்தும் கிடையாது. ஒரேயொரு சின்ன பாதிப்பு மட்டும் நேரிடும். அதாவது பிதாவுக்கு முன்பாக இயேசு உங்களை மறுதலிப்பார். ஆனாலும் இதெல்லாம் தேவனின் நியமனம்தான்; எனவே இதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. உங்களுக்குத்தான் ஒரு விஷயத்தில் உத்தரவாதம் உள்ளதே. அதாவது 1 கொரி. 15:22-ன்படி நீங்கள்தான் உயிர்த்தெழுந்து விடுவீர்களே! பின் ஏன் வருத்தப்படுகிறீர்கள்? எனவே முடிவுபரியந்தம் நீங்கள் நிலைத்திராதபடிக்கு தேவன் செய்தாலும், முடிவில் அவர் உங்கள் இரட்சித்துவிடுவார்)

39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; (கோவை பெரியன்ஸ்: அன்பர்களே, நீங்கள் உங்கள் ஜீவனை காத்துக்கொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. தேவ நியமனத்தின்படிதான் நீங்கள் உங்கள் ஜீவனைக் காத்துக்கொண்டீர்கள். இதன் காரணமாக நீங்கள் உங்கள் ஜீவனை இழந்து போவீர்கள் என்பது மெய்தான். ஆனாலும் 1 கொரி. 15:22-ன்படி நீங்களும் நிச்சயமாக உயிர்த்தெழுந்து விடுவீர்கள். எனவே சற்றும் வருத்தம் வேண்டாம்.)

இப்பதிவை படித்து யாராவது குழம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. குழம்பினவர்கள் தெளிவு பெறவேண்டுமெனில் கோவை பெரியன்ஸ் தளத்தை அணுகவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யோவான் 14:23 திரியில் பெரியன்ஸ்:

//என்னில் அன்பாயிருந்தால் என்பது இயேசு கிறிஸ்துவில் அன்பாயிருப்பதை குறிக்கும். அவருடைய வசனத்தை கைக்கொள்ளுபவர்களே அவரில் அன்பாய் இருப்பதாக சொல்லுகிறார். அப்படி அன்பினால் இயேசு கிறிஸ்து சொல்லும் வார்த்தைகளை கைக்கொண்டால் மாத்திரமே பிதாவும் அந்த நபர் மேல் அன்பாக இருப்பார்.//

தீமைக்கு யார் காரணம்? தேவனா? திரியில் சோல்சொல்யூஷன்:

//வேதம் எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான். எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டதை தேவன் ஒத்துக்கொண்டார்.//

அப்படியானால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன் உட்பட யாருமே இயேசுவின் வசனத்தைக் கைக்கொள்ளப்போவதில்லை. எனவே யோவான் 14:23-க்கு பெரியன்ஸ் தந்த விளக்கத்தின்படி, பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன் உட்பட எவர் மீதும் பிதா அன்பாக இல்லை.

மாத்திரமல்ல, கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட பவுல், பேதுரு, யோவான் போன்ற அப்போஸ்தலர்கள் மீதும் பிதா அன்பாக இல்லை. ஆனால் அவர்கள் மூலம் தேவன் தமது வார்த்தைகளையும் பரலோக இரகசியங்களையும் சொல்லியுள்ளார். அதாவது எவர்கள் தமக்குக் கீழ்ப்படியவில்லையோ, எவர்கள் மீது தாம் அன்பாக இல்லையோ அவர்கள் மூலம் தமது வார்த்தைகளையும் இரகசியங்களையும் சொல்லியுள்ளார், அப்படித்தானே?

தீமைக்கு யார் காரணம்? தேவனா? திரியில் பெரியன்ஸ்:

//ரோமர் 11:7. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே அடைந்திருக்கிறார்கள்!! மற்றவர்களை தேவன் தெரிந்துக்கொள்ளாமல், அவர்களை கடினபடுத்தியிருகிறார்!!//

அப்படியானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கவில்லையா? எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான் என சோல்சொல்யூஷன் அழுத்தமாகச் சொல்கிறர்; அப்படியானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்தாரா?

சோல்சொல்யூஷன் மற்றும் பெரியன்ஸ்-ன் புரிந்துகொள்தலில் ஒரே குழப்பம்தான்!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஆமோஸ் 8:11 திரியில் சோல்சொல்யூஷன்:

//அந்த 'வசனம் கிடைக்காத' பஞ்சம் இப்போதுதான் என எண்ணத்தோன்றுகிறது. 'வசனம்' கிடைக்கிறது ஆனால் சரியான அர்த்தம்தான் கிடைக்கவில்லை. இந்த அர்த்தம் கிடைக்காத பஞ்சத்தினால்தான் இன்றைய கிறிஸ்தவ உலகத்தில், சனிக்கிழமை ஆராதனையா அல்லது ஞாயிறா?, நகைகள் போடலாமா கூடாதா?, கர்த்தருடைய பந்தி எப்படி ஆசரிப்பது? முழுநேர ஊழியமா அல்லது அரைநேரமா?, ஞானஸ்நானம் தெளிப்பா முழுக்கா?, தசமபாகமா முழுவதுமா?, கிறிஸ்மஸ் கொண்டாடலாமா தேவையில்லையா? ..... என்ற குழப்பம் மிகுதியாகி ஆயிரக்கணக்கான சபைப்பிரிவுகள். 'தெளிவான வசனம்' கிடைக்காத பஞ்சத்தினால்தானே இந்த குழப்பம்?//

ஆம், பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனுக்கும் “தெளிவான வசனம்” கிடைக்காத பஞ்சம்தான், எப்படி எனக் கேட்கிறீர்களா?

ஒருபுறம் தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறார்கள்; மற்றொரு புறம் இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிபவன் மீதுதான் தேவன் அன்பாக இருக்கிறார் என்கிறார்கள். இவர்களின் புரிந்துகொள்தலின்படி பார்த்தால், கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட எவருமே (பெரியன்ஸ், சோல்சொல்யூஷன், பவுல், பேதுரு, யோவான் etc etc) இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படியமாட்டார்கள். எனவே உலகில் எவர் மீதும் பிதாவாகிய தேவன் அன்பாக இருக்கமாட்டார்.

ஆனால் எல்லா மனிதர் மீதும் தேவன் அன்பாக இருப்பதாகவும் மற்றொரு திரியில் பெரியன்ஸ் கூறுகிறார்.

தேவனின் இயல்பான பண்புகள்!! திரியில் பெரியன்ஸ்:

//4. அன்பு.  இது தேவனின் மிகவும் உயர்வான பண்பாகும், ஏனென்றால் தேவன் அன்பாக இருக்கிறார் என்கிறது வேதம் (1 யோவான் 4:16). தேவன் தம் படைப்பான மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பின் பொருட்டே, தன் குமாரனை இந்த பூமிக்கு தந்தருளினார்!!

யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.//

ஆக, எவர்கள் மீதும் தேவன் அன்பாக இருக்கமாட்டார், ஆனால் எல்லார் மீதும் தேவன் அன்பாக இருக்கிறார் என வசனம் சொல்வதாக பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன் கூறுகின்றனர்.

அப்படியானால் வேதவசனம் முரண்படுகிறதா, அல்லது பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனின் புரிந்துகொள்தலில் தவறா?

வேதவசனம் நிச்சயம் முரண்படாது; எனவே பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனின் புரிந்துகொள்தலில்தான் கோளாறு. அதாவது ஆமோஸ் 8:11-க்கு அவர்கள் கொடுத்த விளக்கம் மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.

ஆம், “தெளிவான வசனம்” கிடைக்காமல் பெரியன்ஸ்ம் சோல்சொல்யூஷனும் வசன பஞ்சத்தில் கிடக்கின்றனர்.

அவர்கள் எந்த வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டனர்?

எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் எனும் வசனத்தைத்தான் தவறாகப் புரிந்துகொண்டனர். அதாவது எல்லாரையும் என்றால் “எல்லாரையும்தான்” எனச் சொல்லி உலகிலுள்ள அத்தனை மனிதரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் எனும் புரிந்துகொள்தல்தான் தவறு.

இவ்வசனத்திற்கான எனது புரிந்துகொள்தல் (மேலும் படிக்க இத்தொடுப்பை சொடுக்கவும்):

//தேவன் அனைவரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என வசனம் சொல்லவுமில்லை; தேவன் அனைவரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கவுமில்லை. எவர்களை கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்பதை அறிய ரோமர் 11-ம் அதிகாரத்தை சற்று சுருக்கமாகத் தியானிப்போம்.

ரோமர் 11-ம் அதிகாரம் ஒரு critical-ஆன அதிகாரம். மிகவும் ஆழமாகத் தியானித்தால்தான் அதன் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக இங்கு தியானிக்க முடியாவிட்டாலும், நம் விவாதத்திற்கு தேவையான சில வசனங்களை மட்டும் பார்ப்போம்.

ரோமர் 11:9,10 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

தாவீதின் இவ்வாக்கியங்கள் பின்வரும் வசனங்களில் காணப்படுகின்றன.

சங்கீதம் 69:22,23 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.  அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்

தாவீது சொல்கிற “அவர்கள்” யார்? தாவீதின் சத்துருக்களே என 4, 8, 12,14 வசனங்களிலிருந்து அறியலாம். அவரது சத்துருக்களில் பலர் அவரது சகோதரராகவும் இருந்தனர். எனவே “அவர்கள்” என தாவீது குறிப்பிடுவோரில் பலர் இஸ்ரவேலர்களும் தாவீதுக்கு மிகவும் நெருங்கினவர்களுமே.

அந்த “அவர்கள்” விழுந்துபோவதற்காக இடறவில்லை என்றும், அவர்களுடைய தவறினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்ததென்றும் ரோமர் 11:11-ல் பவுல் கூறுகிறார்.

இப்படிச் சொன்ன பவுல், அடுத்த வசனத்தில் அவர்களுடைய தவறினிமித்தம் வருத்தப்பட்டு அங்கலாய்க்கவும் செய்கிறார்.

ரோமர் 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

அவர்கள், அதாவது இஸ்ரவேலர், தவறு செய்தபோதிலும் (அதாவது கீழ்ப்படியாதபோதிலும்) அத்தவறு புறஜாதிகளுக்கு ஐசுவரியமானது. அவர்களுடைய தவறே புறஜாதிகளுக்கு ஐசுவரியமாய் இருந்தால், அவர்களின் நிறைவு புறஜாதிகளுக்கு எவ்வளவு ஐசுவரியமாய் இருந்திருக்கும் என பவுல் கேள்வி கேட்கிறார். இக்கேள்வியிலிருந்து நாம் அறிவதென்ன?

இஸ்ரவேலர் கீழ்ப்படியாமற்போனதற்குப் பதிலாக, கீழ்ப்படிகிறவர்களாக இருந்திருந்தால் அது புறஜாதிகளுக்கு மிகுந்த ஐசுவரியத்தைக் கொண்டுவந்திருக்கும் என்பதே.

இப்போது சொல்லுங்கள், இஸ்ரவேலரின் கீழ்ப்படிதலை தேவன் விரும்பியிருப்பாரா, அல்லது அவர்களின் கீழ்ப்படியாமையை தேவன் விரும்பியிருப்பாரா? நிச்சயம் கீழ்ப்படிதலைத்தான் விரும்பியிருப்பார். பவுலும் அதையே விரும்பியதால்தான், இஸ்ரவேலரின் தவறினிமித்தம் வருத்தப்படுகிறார்.

அடுத்து, 13-ம் வசனம் முதல் புறஜாதிகளிடம் பவுல் பேசுகிறார்.

ரோமர் 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?

15-ம் வசனத்தை சற்று கவனியுங்கள். இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேவன் அவர்களைத் தள்ளிவிட்டதுகூட புறஜாதியாராகிய உலகத்தை ஒப்புரவாக்கியிருந்தால், இஸ்ரவேலர் கீழ்ப்படிந்து அதினிமித்தம் தேவன் அவர்களை அங்கீகரித்திருந்தால், அது எத்தனை நல்லதாக இருந்திருக்கும்? எனக் கேள்வி கேட்கும் பவுல், அப்படி நடந்திருந்தால் அது மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதற்கு சமமாக இருக்குமல்லவா எனக் கேள்வி கேட்கிறார்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனதைவிட, கீழ்ப்படிந்திருப்பதுதான் நல்லதாக இருந்திருக்கும் என்பதுதானே?

அவ்வாறெனில் தேவன் இஸ்ரவேலரின் கீழ்ப்படிதலை விரும்பியிருப்பாரா? கீழ்ப்படியாமையை விரும்பியிருப்பாரா? நிச்சயம் கீழ்ப்படிதலைத்தான் விரும்பியிருப்பார். கீழ்ப்படிதலை விரும்பின அவர், தாமாகவே அவர்களை கீழ்ப்படியாமைக்கும் அடைத்துப் போட்டிருப்பாரா? நிச்சயமாக மாட்டார். இஸ்ரவேலர் தங்கள் சுய சித்தத்தின்படி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால்தான், அவர்களுக்குப் பாடம்புகட்டும்படி தேவன் அவர்களைக் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்.

தொடர்ந்து 16-ம் வசனத்தைப் படியுங்கள்.

ரோமர் 11:16 முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

இவ்வசனத்தில் முதற்பலனாகிய மாவு என எவர்களைப் பவுல் குறிப்பிடுகிறார் என்பது திட்டமாகத் தெரியவில்லை. ஒருவேளை யூதரையோ அல்லது லேவியரையோ குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் மொத்த மாவும், வேரும் கிளையுமான மரமும் மொத்த இஸ்ரவேலரையே குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். எவர்களை தேவன் முதற்பலன் எனக் கருதினாரோ, அவர்கள் பரிசுத்தமாக இருந்திருந்தால் மொத்த இஸ்ரவேலரும் பரிசுத்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இப்படியிருக்க, புறஜாதியினரை காட்டொலிவ மரத்திற்கு ஒப்பிட்டு, அடுத்த வசனத்தில் பவுல் கூறுகிறார்.

ரோமர் 11:17  சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

இஸ்ரவேலரில் கீழ்ப்படியாதவர்கள் தள்ளப்பட்டதைத்தான், சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க என பவுல் கூறுகிறார். (இந்த ஒப்பிடுதல் சரியே என்பதைப் பின்னால் வரும் வசனங்களில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.)

இஸ்ரவேலர் ஒலிவமரத்துக்கு ஒப்பிடப்படுகின்றனர்; புறஜாதியினர் காட்டொலிவ மரத்துக்கு ஒப்பிடப்படுகின்றனர். ஒலிவமரக் கிளை முறிக்கப்பட்ட இடத்தில், காட்டொலிவ மரம் ஒட்ட வைக்கப்படுகிறது. அதாவது கீழ்ப்படியாமையினால் தள்ளப்பட்ட இஸ்ரவேலரின் இடம், புறஜாதியினருக்குக் கொடுக்கப்படுகிறது.

இதினிமித்தம் புறஜாதியினர் பெருமை பாராட்டக்கூடாது என்பதே பவுல் சொல்ல வரும் போதனை. அவர்கள் ஏன் பெருமை பாராட்டக்கூடாது?

மரத்தின் வேரான இஸ்ரவேலர்கள் தான் (அதாவது கீழ்ப்படிந்த இஸ்ரவேலர்கள்), ஒட்டப்பட்ட கிளைகளைத் தாங்குகின்றனர். அதாவது கீழ்ப்படியாமையின் காரணமாகத் தள்ளப்பட்ட இஸ்ரவேலரின் இடத்தை புறஜாதியினருக்கு தேவன் கொடுத்தாலும், அந்தப் புறஜாதியினராகிய கிளைகளைத் தாங்குவது, வேராகிய இஸ்ரவேலரே.

தொடர்ந்து 19-21 வசனங்களில், சில கிளைகளான இஸ்ரவேலர் முறிக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லி, ஒட்டப்பட்ட கிளைகளான புறஜாதியினரை எச்சரிக்கவும் செய்கிறார் பவுல்.

ரோமர் 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.

இஸ்ரவேலராகிய கிளைகள் முறித்துப்போடப்பட்டதற்குக் காரணம் அவர்களின் அவிசுவாசமே (அல்லது கீழ்ப்படியாமையே). காட்டொலிவக் கிளைகளான புறஜாதிகள் ஒட்டப்பட்டதற்குக் காரணம் அவர்களின் விசுவாசமே (அல்லது கீழ்ப்படிதலே). விசுவாசத்தினிமித்தம் ஒட்டப்பட்ட புறஜாதியினர் மேட்டிமை கொள்ளக்கூடாது என்பதே பவுலின் போதனை. ஏன் அவர்கள் மேட்டிமை கொள்ளக்கூடாது?

சுபாவக்கிளைகளாக இருந்த இஸ்ரவேலரையே அவிசுவாசத்தினிமித்தம் தேவன் முறித்துப்போடுவாரென்றால், ஒட்டப்பட்ட கிளைகளான புறஜாதியினரையும் அதேபோல் முறித்துப்போடுவது நிச்சயமல்லவா? அதனால்தான் புறஜாதியினர் மேட்டிமை கொள்ளக்கூடாது எனப் பவுல் கூறுகிறார்.

தொடர்ந்து 22,23-ம் வசனங்களில், எவர்களிடத்தில் தேவன் கண்டிப்பாக இருப்பார், எவர்களிடத்தில் தேவன் தயவாக (இரக்கமாக) இருப்பார், எந்தக் கிளைகளை தேவன் வெட்டுவார், எந்தக் கிளைகளை தேவன் ஒட்டுவார் என்பதை பவுல் தெளிவாகக் கூறுகிறார்.

ரோமர் 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே.

விழுந்தவர்களாகிய (அதாவது கீழ்ப்படியாதவர்களாகிய) இஸ்ரவேலரிடத்தில் தேவன் கண்டிப்பைக் காண்பித்தார்; அதே வேளையில் கீழ்ப்படிந்தவர்களான (அல்லது விசுவாசிகளான) புறஜாதிகளிடத்தில் தேவன் இரக்கம் வைத்தார். தேவனின் இரக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், ஒட்டவைக்கப்பட்ட புறஜாதியினர் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்; நிலைத்திராவிட்டால் அவர்களுக்கும் இஸ்ரவேலரின் கதிதான் ஏற்படும்; அதாவது அவர்களும் இஸ்ரவேலரைப் போலவே வெட்டப்படுவார்கள்.

அதேவேளையில், வெட்டப்பட்ட இஸ்ரவேலர்கள் அவிசுவாசத்தில் நிலைத்திராவிட்டால் (அதாவது மீண்டும் விசுவாசத்திற்குள் வந்தால்) அவர்களும் மீண்டும் ஒட்டவைக்கப் படுவார்கள் (அதாவது தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்) எனப் பவுல் தெளிவாகக் கூறுகிறார்.

மொத்தத்தில் தேவதயவை அல்லது கண்டிப்பை ஒருவன் பெறுவதென்பது அவனது விசுவாசம் அல்லது அவிசுவாசத்தையே சார்ந்ததாக உள்ளது என அறிகிறோம்.

ஒட்டவைக்கப் பட்ட புறஜாதியினர் ஏன் பெருமை பாராட்டக்கூடாது என்பதற்கான ஒரு காரணத்தை 18-ம் வசனத்தில் பவுல் கூறினார். மற்றுமொரு காரணத்தை 24-ம் வசனத்தில் கூறுகிறார்.

ரோமர் 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

புறஜாதியிலிருந்து வந்தவர்களை விசுவாசத்தினிமித்தம் சேர்த்துக்கொண்ட தேவன், இஸ்ரவேலரில் விழுந்துபோனவர்கள் மீண்டும் விசுவாசத்திற்குள் வந்தால் அவர்களையும் சேர்ப்பது நிச்சயமென்பதால், புறஜாதியினர் எவ்விதத்திலும் பெருமைபாராட்டக் கூடாது எனப் பவுல் கூறுகிறார்.

அடுத்து ஓர் இரகசியத்தை பவுல் அறிவிக்கிறார்.

ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

இவ்வசனம் கோவை பெரியன்ஸ்-ஆகிய உங்களின் சித்தாந்தத்திற்கு சாதகமானது போல் தோன்றக்கூடும். அதாவது இஸ்ரவேலரின் மனதைக் கடினப்படுத்துவது தேவன் தான்; எனவே தேவசித்தப்படிதான் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமைக்குள் இருக்கின்றனர்; எல்லாமே தேவசித்தம்தான் என நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் அப்படியல்ல.

சற்று நிதானமாக, இதுவரை தியானித்ததை மீண்டும் பார்ப்போம். தேவன் சில கிளைகளை (அதாவது இஸ்ரவேலரை) முறித்ததற்குக் காரணம், அவர்களின் அவிசுவாசமே (அல்லது கீழ்ப்படியாமையே). அவர்களிடம் அந்த அவிசுவாசம் இல்லாதிருந்தால், புறஜாதியினரை அங்கீகரித்தல் என்பது நிச்சயம் நடந்திருக்குமென்றும், அது “மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதற்குச் சமமாக இருந்திருக்கும்” என்றும் 15-ம் வசனத்தில் பவுல் கூறுகிறார்.

ஆனால் இஸ்ரவேலரோ விழுந்து போயினர். இதனால் புறஜாதியினர் விசுவாசத்திற்குள் வருவதென்பது தாமதமாக நேர்ந்தது. மேலும், புறஜாதியினரில் விசுவாசத்திற்குள் வரவேண்டியவர்களின் எண்ணிக்கை இவ்வளவாய் இருக்கவேண்டுமென தேவன் நியமித்துள்ளதால், அந்த எண்ணிக்கை நிறைவாகும்வரை விழுந்துபோன இஸ்ரவேலர் அந்த கீழ்ப்படியாமைக்குள் இருப்பது அவசியமானது. எனவே, புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவு பெறுவதற்காகவே இஸ்ரவேலரை தேவன் கீழ்ப்படியாமைக்குள் வைத்துள்ளார்; அதாவது அவர்களின் கடின மனதை மாற்றாமல், அப்படியே அவர்களை விட்டுவைத்துள்ளார்.

எனவே, இஸ்ரவேலர் கீழ்ப்படியாமைக்குள் நிலைத்திருப்பதென்பது தேவசித்தமே; ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமைக்குள் விழுந்ததென்பது அவர்களின் சுயசித்தமேயன்றி, தேவசித்தம் அல்ல. இஸ்ரவேலரின் கீழ்ப்படிதல் மூலம் புறஜாதியினர் நன்மை பெறவேண்டும் என்பதே தேவசித்தம்; அதுவே புறஜாதிகளுக்கு அதிக நன்மையானதுங்கூட (வசனம் 12,15).

தொடர்ந்து 26-29 வசனங்களை விட்டுவிட்டு, 30-ம் வசனத்திற்குச் செல்வோம்.

ரோமர் 11:30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

இவ்வசனங்களில், “நீங்கள்” எனச் சொல்வது முன்னர் கீழ்ப்படியாமலிருந்து தற்போது விசுவாசத்திற்குள் வந்த புறஜாதியினரை; “அவர்கள்” எனச் சொல்வது கீழ்ப்படியத் தவறின இஸ்ரவேலர்கள். இப்புரிந்துகொள்தலுடன் இவ்வசனங்களைத் தியானிப்போம்.

விழுந்துபோன இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையால், புறஜாதியினர் இரக்கம் பெற்றனர். இவ்விதமாக புறஜாதியினர் இரக்கம்பெற்று, அவர்களின் எண்ணிக்கை நிறைவானதும் இஸ்ரவேலர்கள் இரக்கம் பெறுவார்கள். அதாவது: கீழ்ப்படியத் தவறின புறஜாதியினர் ஒரு காலத்தில் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்; பின்னர் இஸ்ரவேலர் கீழ்ப்படியத் தவறினபோது, புறஜாதியினர் இரக்கம் பெற்று, கீழ்ப்படியாமயிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளையில், கீழ்ப்படியத் தவறின இஸ்ரவேலர், புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவுண்டாவதற்கு ஏதுவாக, கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்.

புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவாகும்போது, இஸ்ரவேலர் கீழ்ப்படியாமையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். ஆக, மொத்தத்தில் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போடப்பட்ட இஸ்ரவேலரானாலும் சரி, புறஜாதியினராலும் சரி, அவர்கள் கீழ்ப்படியத் தவறியபின்னர்தான், தேவனால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்.

எனவே இஸ்ரவேலரும் புறஜாதியினரும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டதன் காரணம், அவர்களின் கீழ்ப்படியாமையேயன்றி, அவர்கள் மீதான தேவசித்தம் அல்ல.//



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//வசனமே தெரியாதவர்கள் சகோ அன்பை விட அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்!! ஆனால் வசனம் தெரியும் என்று நீதியின் கிரியைகளில் தன் இரட்சிப்பை தானே நிர்னையித்துக்கொள்ளும் அன்பு போன்றவர்கள் தான் பாவம் 2000 சபைகளில் தத்தளிக்கிறார்கள்!!

...உங்கள் நீதியின் கிரியை அத்துனை வலிமையானது என்றால் கிறிஸ்துவின் மரணம் வீண் என்று அப்போஸ்தலர் சொல்லுவது எல்லாம் உங்கள் கதோரமாக கூட படுவித்தல்லை என்று நினைக்கிறேன்!! ... எங்கள் கிரியை எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்கிற கிரியையின் உபதேசத்தில் தாங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்!!

... தேவனை ஞானத்தை அளவிட முடியாமல் இருப்பதால் தான் தீமையின் அனுமதிப்பை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாமால் தேவனை ஏதோ உங்களின் கிரியை கொண்டு காப்பாற்றி கிறிஸ்தவத்திற்கு ஒரு அவப்பெயர் வராமல் பாதுகாப்பு தருவதாக உங்களுக்கு ஒரு நினைப்பு!!

இன்று அத்துனை பெரிய வேதத்தை கைகளில் வைத்துக்கொண்டு அதில் உள்ள நீதியை மட்டும் போதிப்பது நீங்கள் ஆரோக்கியமான வசனத்தில் இருப்பதாக நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள்!! நீங்கள் கொண்டுள்ள அர்த்தம் எல்லா நீதியும் நியாயமும் நிறைந்தது என்று உங்கள் வாதத்திற்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்கிறீர்கள், அல்லது அதற்கு ஒரு கூட்டம் இருந்தாலும் இருக்கும்!!

நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?? சுயநீதியின் போதனையை கிறிஸ்துவின் ஈடுபலிக்கும் மேலாக உயர்த்தி பேசும் நீங்கள் எப்படி வசனத்தில் தெளிவாக இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமே!! இருக்கும் 2000 சபைகளும், ஒரு போதகரை நியமித்துக்கொண்டு வேதத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு இது தான் எங்கள் சபையின் தரிசனம், இது தான் எங்கள் பாஸ்டரின் தரிசனம் என்று அந்த தரிசனத்தின் மேல் விசுவாசத்தை வைத்திருக்கிறீர்கள்!! அப்படியே நீங்களும் தேவனின் கிருபையை பார்க்கிலும் உங்களின் கிரியை வலிமையுள்ளதாக நிரூபிக்க பிரயாசப்படுகிறீர்கள்!! நீங்கள் கிரியையின் மேல் வைத்திருக்கும் விசுவாசம் கிறிஸ்துவினால் உண்டான கிருபையை கொச்சைப்படுத்துகிறது!! இதுவே நீங்கள் எத்துனை பெரிய வசன பஞ்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது!!

வேதத்தில் ஒரு சில பகுதிகளை கிரிட்டிக்கலாக இருக்கு என்று சொல்லுவதே, நீங்கள் உங்கள் போதனைக்கு துனை தேடுகிறீர்கள் என்ரு தான் அர்த்தம்!!

மொத்த கிறிஸ்தவமே வசன பஞ்சத்தினால் தேவனின் கிருபை ஒன்று இருக்கிறது என்பதை மறந்து பிதற்றும் கூட்டமாக தான் காணப்படுகிறது!!//

எதற்கு சகோதரரே என்னைக் குறித்த தனிப்பட்ட வழ வழா விமர்சனங்கள்?

வசனம் தெரியாத பலர் என்னைவிட அன்பாக இருந்துவிட்டுப் போகட்டுமே! நான் நீதியின் கிரியைகளில்தான் இரட்சிப்பு என நிர்ணயித்துக் கொள்பவனாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே! அப்போஸ்தலர் சொல்வது எனது காதோரமாகக் கூட படவில்லை என்றே இருந்துவிட்டுப் போகட்டுமே! எனது கிரியை என்னை இரட்சித்துக்கொள்ளும் என்கிற கிரியையின் உபதேசத்தில் இருப்பவனாகவே நான் இருந்துவிட்டுப் போகட்டுமே! தேவனின் ஞானத்தை நான் அளவிடமுடியாதவனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!

எனது கிரியையைக் கொண்டு தேவனைக் காப்பாற்றி கிறிஸ்தவத்திற்கு அவப்பெயர் வராமல் பாதுகாப்பவனாக நான் இருந்துவிட்டுப் போகட்டுமே! வேதத்தில் உள்ள நீதியை மட்டும் போதித்து ஆரோக்கியமான வசனத்தில் இருப்பதாக நான் நினைத்துவிட்டுப் போகட்டுமே! நான் கொண்டுள்ள அர்த்தம் எல்லா நீதியும் நியாயமும் நிறைந்தது என்று எனது வாதத்திற்கு நானே சபாஷ் போட்டுக்கொள்பவனாக நான் இருந்துவிட்டுப் போகட்டுமே! சபையின் தரிசனத்திலும் பாஸ்டரின் தரிசனத்திலும் நான் விசுவாசமுள்ளவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

நான் கிரியையின் மேல் வைத்துள்ள விசுவாசம், கிறிஸ்துவினால் உண்டான கிருபையை கொச்சைப்படுத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! நான் எனது போதனைக்கு துணை தேடுவதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! என்னோடு சேர்ந்து மொத்த கிறிஸ்தவமே தேவனின் கிருபையை மறந்து பிதற்றும் கூட்டமாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

என்னைக் குறித்த தனிப்பட்ட விமர்சனங்களை ஏன் வரிசையாக அடுக்குகிறீர்கள்? உங்களது கூற்றுக்கள் சம்பந்தமான எனது வாதத்திற்குப் பதில் வாதம் வைக்காமல் எதற்கு என்னைக் குறித்த இத்தனை பெரிய பட்டியல்?

ஒருவர் கிறிஸ்துவின் வசனங்களைக் கைக்கொண்டால்தான் அந்த நபர்மீது பிதா அன்பாக இருப்பார் என்றும் சொல்கிறீர்கள்; தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டுள்ளார் என்றும் சொல்கிறீர்கள். அதாவது நீங்கள், பவுல், பேதுரு, யோவான் உட்பட அனைவரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள், பவுல், பேதுரு, யோவான் உட்பட எவருமே கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்பவர் அல்லதானே? அப்படியானால் நம்மில் எவர் மீதுமே பிதா அன்பாக இருக்க மாட்டார் தானே?

இக்கேள்விக்கு பதில் சொல்லாமல், என்னைப் பற்றி ஏதேதோ வழ வழா விமர்சனம் ஏன் செய்கிறீர்கள் சகோதரரே?

முடிந்தால் எனது வாதத்திற்கு பதில் சொல்லுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


//நீங்கள் இப்பவும் உங்கள் கிரியை உசத்தியாக நினைக்கிறீர்களே தவிர தேவனால் என்ன செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இல்லையே!!//

என்னைக் குறித்து இப்படிப்பட்ட விமர்சனத்தை பலமுறை சொல்லிவிட்டீர்கள். கிரியையைக் குறித்து வேதம் சொல்கிற வசனங்களை எடுத்துரைப்பவனுக்கு நீங்கள் கொடுக்கும் நியாயத்தீர்ப்பா இது? இம்மாதிரி விமர்சனங்களை மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்கிறீர்கள்; சோல்சொல்யூஷனோ சற்றும் நாகூசாமல் “முட்டாள், லூசு” என்கிறார். அதை நீங்கள் கண்டிப்பதுமில்லை. அப்படியானால் அவரது மட்டரகமான கூற்றுக்களை நீங்கள் அங்கீகரிப்பதாகத்தானே அர்த்தம்?

உங்கள் பதிவுகளையும் எனது பதிவுகளையும் நன்றாகப் படித்துப்பாருங்கள். தனிப்பட்ட விமர்சனங்களை நான் அதிகமாகச் சொல்லியுள்ளேனா, நீங்கள் அதிகமாகச் சொலியுள்ளீர்களா என்பதைப் பாருங்கள். நிச்சயமாக நான் மிகக் குறைந்த அளவில்தான் சொல்லியுள்ளேன். நீங்களோ வரிக்கு வரி “நான் சுயநீதிக்காரன், கிரியையை நம்புவன், கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்குபவன்” என உங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்கிறீர்கள்.

வசனம் சொல்வதைத்தானே நான் சொல்கிறேன்? அதற்கு எனக்குத் தண்டனையா? வசனங்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாததால்தான் என்னை மட்டுப்படுத்தி விவாதத்தை திசை திருப்புகிறீர்கள். மெய்யாகவே உங்களுக்கு வசனத்தின் மீது நம்பிக்கையிருந்தால், என்னைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், நான் சொல்கிற வசனங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். நானும் இனி உங்களைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை.

வாசித்ததில்லையா, உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்று” எனக் கேள்வி கேட்கிறீர்கள். ஆம், நான் வாசித்துள்ளேன்; ஆனால் எனது வேதாகமத்தில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, 3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

வசனங்கள் நாவல் போல் தொடர் கருத்தில் இருப்பதில்லை; துண்டு துண்டாக அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் இருக்குமென்கிறீர்கள். (அது சம்பந்தமான எனது எதிர்வாதத்துக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை) அது ஒருபுறம் இருக்கட்டும்.

மேலே கூறப்பட்டுள்ள 3 வசனங்களாவது ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என ஒத்துக்கொள்வீர்களா? இதையும் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் என்னால் உங்களோடு விவாதிக்க இயலாது.

மேலே கூறப்பட்டுள்ள 3 வசனங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என நீங்கள் ஒத்துக்கொண்டால், எனது வாதத்திற்குப் பதில் சொல்லுங்கள்.

சங்கீதக்காரன் “கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருந்தாராம்; கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாராம்”. இப்படியாக முதல் வசனம் கூறுகிறது. அப்படி கர்த்தருக்காக காத்திருந்து, அவரை நோக்கிக் கூப்பிட்டவனைத்தான் உளையான சேற்றிலிருந்து கர்த்தர் தூக்கி எடுத்தார்.

அப்படியானால், “கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருந்து அவரை நோக்கி கூப்பிடுகிற எவரையும் அவர் உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுப்பார்” என்பதுதானே உண்மை? இந்த உண்மைதானே இவ்வசனங்களிலிருந்து நமக்குக் கிடைக்கிற போதனை?

இப்போதனையிலிருந்து நாம் அறிவதென்ன? கர்த்தருக்காகக் காத்திருத்தல், அவரை நோக்கிக் கூப்பிடுதல் எனும் 2 கிரியைகளும் உள்ளவனை அவர் உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்பதுதானே? எனது வாதத்துக்கு நேரடியான எதிர்வாதம் வையுங்கள். அதை விடுத்து, “நான் அப்படி, இப்படி” என என்னைக் குறித்து எழுதாதீர்கள்.

சங்கீதக்காரனைக் குறித்து மற்றுமொரு கேள்வி. எல்லாரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறீர்கள். அப்ப்டியானால் சங்கீதக்காரனும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டவர்தானே? அப்படிப்பட்ட அவர், (தேவன் அவரை உளையான சேற்றிலிருந்து எடுப்பதற்கு முன்பாகவே) எப்படி கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருப்பவரானார்? எப்படி கர்த்தரை நோக்கி கூப்பிடுபவரானார்? தேவனால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட அவர், தேவனை மீறி வெளியே வந்துவிட்டாரா? 

அடுத்து, 3-ம் வசனத்தைப் பாருங்கள். சங்கீதக்காரனுக்கு தேவன் செய்ததைப் பார்த்து, மற்றவர்கள் தேவனுக்குப் பயந்து, அவரை நம்புவார்களாம்.

அதாவது உளையான சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட சங்கீதக்காரன் மற்றவர்கள் முன்பாக தேவனுக்கு ஒரு சாட்சியாக விளங்கினார். அப்படி விளங்கின அவரைப் பார்க்கிறவர்களும் தேவனுக்குப் பயந்து அவரை நம்புவார்களாம். அப்படியானால் உளையான சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட நாமுங்கூட மற்றவர்களுக்கு சாட்சியாக விளங்கவேண்டுமே! நம்மைப் பார்க்கிற பலரும் தேவனுக்குப் பயந்து அவரை நம்பவேண்டுமே!

நீங்கள் உங்களை “உளையான சேற்றிலிருந்து” எடுக்கப்பட்டவர் என்கிறீர்கள். அப்படியானால் உங்களைப் பார்க்கிற பலர், தேவனுக்குப் பயந்து அவரை நம்பியுள்ளார்களா? (உங்களைக் குறித்த தனிப்பட்ட இக்கேள்வி, என் வாதத்திற்கு நேரடியாக தொடர்புடையதாக இருப்பதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்.)

இன்னும் அந்த சங்கீதத்தின் பிற வசனங்களையும் படியுங்கள்.

8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். 10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

இவ்வசனத்தில் கூறப்பட்டவைகளெல்லாம் சங்கீதக்காரன் உளையான சேற்றிலிருந்து எடுக்கப்படுவதற்கு “முன்” அவர் செய்த காரியங்கள் என்பது எனது புரிந்துகொள்தல். நீங்கள் “முன்” அல்ல, “பின்” தான் எனப் புரிந்துகொண்டாலும் பரவாயில்லை. ஆனால் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி “நாம் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பவேண்டுமல்லவா? அவரது நியாயப்பிரமாணம் நம் உள்ளத்தில் இருக்கவேண்டுமல்லவா? அவரது நீதியை மகா சபையில் பிரசங்கிக்க வேண்டுமல்லவா? அவரது சத்தியத்தையும் இரட்சிப்பையும் பிறருக்குச் சொல்லவேண்டுமல்லவா? அவரது கிருபையையும் உண்மையையும் ஒளித்துவையாமல் மகா சபைக்கு அறிவிக்கவேண்டுமல்லவா?”

இக்கேள்விகள் ஒருபுறமிருக்க, பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

11 கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.

கர்த்தருடைய இரக்கம் எல்லாருக்கும் உண்டு என்பதை சங்கீதக்காரன் அறியவில்லையா? பின்னர் ஏன் கர்த்தரின் இரக்கம் தனக்குக் கிடைக்காமற் போய்விடுமோ என அவர் அஞ்சுகிறார்? அவரது இந்த அச்சத்திலிருந்து நாம் அறிவதென்ன? சிலருக்கு கர்த்தரின் இரக்கம் கிடைக்காமற்போகவும் வாய்ப்புண்டு என்பதுதானே?

சரி, யாருக்கு இரக்கம் கிடைக்காமற்போகும் என்பதையும் சற்று பார்ப்போம்.

சங்கீதம் 143: 12 உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

சங்கீதம் 40-ம் 143-ம் தாவீதால் எழுதப்பட்டவை. சங்கீதம் 40:11-ல் தேவகிருபை தனக்கு வேண்டும் என வேண்டுகிற தாவீது, சங்கீதம் 143-ல் தனது மீதுள்ள தேவகிருபையின்படி தனது சத்துருக்களை அழிக்கும்படி வேண்டுகிறார். இப்படி அவர் வேண்டுவதற்கான காரணத்தையும் கூடவே சொல்கிறார்.

ஆம், தாவீது தேவனுடைய அடியானாக இருப்பதால் தனக்கு தேவன் இரங்க வேண்டுமென்றும்,(அந்த இரக்கத்தின்படி) தனது சத்துருக்களை அழிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகிறார். எனவே எல்லோருக்கும் இரக்கம் கிடையாது என்பதே உண்மை.

எவர்கள் “தேவனின் அடியாராக, அவருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புவராக, அவரது நியாயப்பிரமாணத்தை உள்ளத்தில் வைத்திருப்பவராக, etc etc யாக இருக்கிறார்களோ” அவர்களுக்கே தேவனின் இரக்கம். இப்போது இரக்கம் சம்பந்தமான சில வசனங்களை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

யாக்கோபு 2:13  ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்;

உளையான சேற்றிலிருந்து எடுப்பது பற்றிய உங்களது விவாதத்திற்கு இவ்விதமாக நான் எதிர்வாதம் வைத்துள்ளேன். இவ்வாதத்தின் ஒவ்வொரு வரிக்கும் முதலாவது பதில் தாருங்கள்; அதன் பின்னர் மற்றவற்றிற்குப் போகலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//இப்படி தான் பாவம் என்று ஒன்றை சிறிய பாவம், பெரிய பாவம் என்று பிரிக்கிறீர்கள்!! தனிப்பட்ட விமர்சனம் செய்யாமல் கேள்வி கேட்டால் அதில் நியாயம்!! நான் கொஞ்சமாக விமர்சனம் செய்கிறேன், நீங்கள் அதிகமாக செய்கிறீர்கள் என்பதில் என்ன நியாயம்!!//

தன் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு பிறன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப்போடுவனைத்தான் இயேசு கடிந்துகொண்டார் (மத்தேயு 7:3,4). தன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்தபின்னர் பிறன் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட இயேசு அனுமதி கொடுத்துள்ளார் (மத்தேயு 7:5). எனது கண்ணில் உத்திரம் இலையென நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். எனவே உங்கள் கண்ணிலுள்ள துரும்பை மட்டுமல்ல, உத்திரத்தையும் எடுத்துப்போட எனக்கு அனுமதி உண்டுதான்.

இவ்விதமாக வேதவசனங்களைப் புரிந்துகொள்ளாமல் உங்கள் மனம்போல் நீங்கள் எழுதுவதால்தான் “நீங்கள் வசனத்தைப் புரிந்து கொள்வதில்லை” என எழுதுகிறேன் நான். வசனத்தைப் புரிந்து கொள்ளாதவரைப் பார்த்து “நீங்கள் வசனத்தைப் புரிந்து கொள்வதில்லை” எனச் சொல்லாமல், “நீங்கள் வசனத்தை நன்றாக புரிந்து கொள்கிறீர்கள்” என்றா எழுதமுடியும்?

//உங்களின் தனிப்பட்ட விமர்சனம் எப்படி என்றால், நீங்கள் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, "பிறர் சொல்லுகிறது போல், நீங்கள் வசனத்தை புரிந்துக்கொள்வதில்லை" என்றும், "பிறர் தான் உங்களை காமேடியர்கள் என்று சொன்னார்கள் ஆனால் அது உண்மையாக தான் இருக்கிறது" போன்ற போதனைக்கு அடுத்த விமர்சனங்களாக இல்லாமல், தனி மனித விமர்சனமாகிறது!!//

பைத்தியம் சைக்கிள் ஓட்டுகிற” ஒரு காமெடியை சோல்சொல்யூஷன் எழுதியிருந்தார். அதனால் அவரைக் காமெடியன் என்று நான் சொன்னேன். வசனத்தைச் சொல்லி விவாதிக்காமல் காமெடியை எழுதுபவரைப் பார்த்து காமெடியன் எனச் சொல்லாமல் ஹீரோ என்றா சொல்லமுடியும்? உங்களைக் காமெடியன் என நான் ஒருபோதும் சொல்லவில்லை.

//அப்படி பார்த்தாலும், நீங்கள் சுயநீதிக்காரர், உங்கள் கிரியை நம்புவர் என்கிற ஒரே அர்த்தத்தில் ஒரே விஷயத்தை பல முறை சொல்லியிருக்கிறேன்!! ஒத்துக்கொள்கிறேன், ஆனால் இதை தானே நீங்கள் போதிக்கிறீர்கள்!!//

எனது பதிவுகளில் எதன் அடிப்படையில் என்னை “சுயநீதிக்காரர், கிரியை நம்புபவர்” என்பதை முதலில் எடுத்துக்காட்டுங்கள். எனது ஏதேனும் ஒரு பதிவை அப்படியே எடுத்துக் காட்டுங்கள். இதை நீங்கள் கண்டிப்பாகச் செய்தேயாகவேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ... என்னை நீங்கள் சுயநீதிக்காரர், கிரியை நம்புபவர்” என நிரூபித்துக்காட்டினால், அதே நிரூபணத்தின் அடிப்படையில் பவுல், யோவான், பேதுரு, யாக்கோபு மற்றும் இயேசுவுங்கூட சுயநீதிக்காரர், கிரியை நம்புபவர்” என என்னால் நிரூபிக்கமுடியும். ஏனெனில் நான் எடுத்துச் சொல்லியுள்ள வசனங்கள் யாவும் அவர்களுடைய வசனங்கள்தானேயொழிய என் சுய வசனங்கள் அல்ல.

//இன்னும் நியாயப்பிரமானத்தின் போதனையை தருவதினால் கிறிஸ்துவின் இரத்தத்தை நிச்சயமாக அவமாக்குதல் தானே!! நீங்கள் சொல்லுவதை சொல்லி தானே உங்களை விமர்சனம் செய்கிறேன்!!//

நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே எனக் கலாத்தியர் நிருபத்தில் கூறிய அதே பவுல்தான் அதே கலாத்தியர் நிருபத்தில் இப்படியும் கூறியுள்ளார்.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனங்களில் பவுல் சொல்லியுள்ளவற்றில் எது நியாயப்பிரமாணத்தில் கூறப்படவில்லை? உங்களால் சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது. நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள இந்த அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்களாம். இவ்வாறு நான் சொல்லவில்லை; உங்கள் ஆஸ்தான போதகர் பவுல்தான் சொல்கிறார். அப்படியானால் இந்த அநீதிக்காரர்களுக்கு கிறிஸ்துவினால் நீதி வராதா? இவர்களுக்கு கிறிஸ்து மரித்தது வீணாகிப் போகுமா?

முதலாவது இக்கேள்விகளுக்கு பவுலிடமிருந்து பதிலைப் பெற்று எல்லோருக்கும் சொல்லுங்கள். அதன்பின் உங்கள் கேள்வியை என்னிடம் கேளுங்கள்.

//நியாயப்பிரமானம் என்பது இதை செய், அதை செய்யாதே வரைக்கும் அடங்கும்!! நீங்களோ அது தான் வேண்டும் என்கிறீர்கள்!! ஆனால் கிறிஸ்துவிற்குள் சேர்க்கப்பட்டவர்களுக்கு கிருபையும் சத்தியமும் கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின‌!!//

//அப்போஸ்தலர்களுக்கு சாட்சி கொடுக்க நீங்கள் சொல்லும் கிரியை தேவைப்படவில்லை, மாறாக பூரண கிருபையே தேவையாக இருந்தது!!//

//நீங்களோ கிரியையினால் விசுவாசியானவரோ!!??//

//இதோ அதே கிருபையை தான் நானும் சொல்லுகிறேன்!! தேவனுடைய கிருபை தான் சுவிசேஷம் என்று பிரசங்கித்தார்கள் அப்போஸ்தலர்கள்!!//

//கிறிஸ்துவிற்கு முன் ஆக்கினையாக தான் இருந்தது, ஆனால் கிறிஸ்துவிற்கு பின் கிருபையினால் குற்றங்களை நீக்க படுகிறது!!//

//ஆனால் கிரியைகள் தான் அவசியம் என்பது தானே உங்களின் வாதம்!!//

//பவுலின் கிரியைகளினால் அல்ல மாறாக தேவனின் கிருபையினாலே அழைக்கப்பட்டவர் அவர்!!//

//இந்த வசனம் பிரத்தியேகமாய் உங்களுக்கு:

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

தீத்து 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,

இன்னும் நிறைய இருக்கிறது!!//

நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்களாம். இவ்வாறு நான் சொல்லவில்லை; உங்கள் ஆஸ்தான போதகர் பவுல்தான் சொல்கிறார். அப்படியானால் இந்த அநீதிக்காரர்களுக்கு கிறிஸ்துவினால் நீதி வராதா? இவர்களுக்கு கிறிஸ்து மரித்தது வீணாகிப் போகுமா?

முதலாவது இக்கேள்விகளுக்கு பவுலிடமிருந்து பதிலைப் பெற்று எல்லோருக்கும் சொல்லுங்கள். அதன்பின்னர் உங்கள் மற்ற கேள்விகள் மற்றும் மேற்கூறிய விமர்சனங்களுக்கு நான் பதில் தருகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி முந்திக்கொள்கிறீர்கள்!! நீங்கள் ஒப்புக்கொண்டதை தான் நான் எழுதியிருந்தேன்!!//

உங்கள் கண்ணில் உத்திரமோ என் கண்ணில் உத்திரமோ, இப்போது அதுவல்ல பிரச்சனை. உங்கள் அபிப்பிராயப்படி என் கண்ணிலேயே உத்திரம் இருந்துவிட்டுப் போகட்டும்.

இனி தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம் என ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். ஆனால் நீங்கள் எனது விவாதத்தின் மையப் பகுதியை விட்டுவிட்டு மீண்டும் தனிப்பட்ட விமர்சனத்தின் மூலம்தான் வாதம் செய்கிறீர்கள்.

//ஒரு மனிதனுக்கு தேவன் தந்திருக்கும் இயல்பை நீங்கள் பெரிது படுத்துகிறீர்கள், அவ்வளவே!! இரக்கம் செய்வது என்பது தேவனின் தன்மை, அன்பு செய்வது தேவனின் தன்மை, அவரின் சாயலில் (தன்மையில்) இருக்கும் மனிதர்களுக்கு அவரே இதை கொடுத்திருக்கிறார்!! இதில் நீங்கள் ஏன் பெருமை பாராட்டுகிறீர்கள்!!??//

எனது வாதத்தின் மையப்பகுதியை விட்டுவிட்டு, என்னைத் தனிப்பட்ட விதமாக இவ்வாறு நீங்கள் சொல்வதிலிருந்து, உங்களால் எனது விவாதத்தின் மையப்பகுதிக்கு பதில் சொல்ல இயலவில்லை என்பது தெளிவாகிறது. நான் இரக்கத்தை மேன்மைபாராட்டினால் என்ன, பாராட்டாவிட்டால் என்ன? அதற்கும் நம் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

//நான் பெருமை பாராட்டுவது தேவனின் கிருபையை, இதற்கு உங்களிடத்தில் பதில் இல்லை!!//

நீங்களும் நானும் எதை மேன்மை பாராட்டினால் என்ன? அதனால் இங்கு யாருக்கும் பயனில்லை. பயனில்லாத விஷயத்தையே மீண்டும் மீண்டும் சொல்லி நேரத்தை விரயமாக்குகிறீர்கள். நீங்களோ நானோ தேவகிருபையை மேன்மை பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் அது எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. கிறிஸ்துவின் ஈடுபலி மூலம் நம் எல்லோருக்கும் தேவகிருபை ஏற்கனவே பலித்துவிட்டது. அதை வேண்டுமானல் ஒரு தனித் திரியில் பல வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டேயிருங்கள்; நானும் கூடச் சேர்ந்து பல வசனங்களைச் சொல்லுகிறேன்.

ஆனால் இப்போது கேள்வி: நாம் என்ன செய்யவேண்டும், நம்மிடம் தேவன் எதை எதிர்பார்க்கிறார், நாம் என்ன செய்தால் நித்திய ஜீவன் என்பதுதான். நாம் என்ன செய்தால் நித்தியஜீவன் என வசனம் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன். அதை உங்களால் மறுக்க முடியுமா? அதை விட்டுவிட்டு, “நீ அதை மேன்மை பாராட்டுகிறாய், நான் இதை மேன்மை பாராட்டுகிறேன்” என சொல்வதில் என்ன பயன்?

எனது விவாதத்தின் மையப்பகுதி இதுதான்:

//நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே எனக் கலாத்தியர் நிருபத்தில் கூறிய அதே பவுல்தான் அதே கலாத்தியர் நிருபத்தில் இப்படியும் கூறியுள்ளார்.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனங்களில் பவுல் சொல்லியுள்ளவற்றில் எது நியாயப்பிரமாணத்தில் கூறப்படவில்லை? உங்களால் சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது. நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள இந்த அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்களாம். இவ்வாறு நான் சொல்லவில்லை; உங்கள் ஆஸ்தான போதகர் பவுல்தான் சொல்கிறார். அப்படியானால் இந்த அநீதிக்காரர்களுக்கு கிறிஸ்துவினால் நீதி வராதா? இவர்களுக்கு கிறிஸ்து மரித்தது வீணாகிப் போகுமா?//

இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். உங்களால் சொல்ல முடியவில்லையெனில் அதை ஒத்துக் கொள்ளுங்கள்; இக்கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்.

////நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே எனக் கலாத்தியர் நிருபத்தில் கூறிய அதே பவுல்தான் அதே கலாத்தியர் நிருபத்தில் இப்படியும் கூறியுள்ளார்.//

இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்றும் விவாதிக்க வேண்டும் அல்லவா, இது அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று ஏன் விட்டுவிடுகிறீர்கள்!!??//

எந்த வசனத்தையும் விடவேண்டுமென நான் சொல்லவில்லை. எல்லா வசனத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றுதான் நான் சொல்கிறேன். எனது கேள்விக்குப் பதில்சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்; முடியவில்லையெனில் அதை ஒத்துக்கொள்ளுங்கள்; பின்னர் நான் பதில் தருகிறேன்.

//நான் ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்து என் சொந்த சரக்கை உங்களிடத்தில் கொடுக்கவில்லை!! வேத வசனத்துடன் கேட்கப்பட்டதில், வெறும் கேள்விகளை மாத்திரம் உங்கள் தளத்தில் போட்டிருப்பது திசை திருப்புதலாகும்!! அந்த கேள்விகளுக்கான வசனங்கள் ஒன்றும் நான் சொந்தமாக தையாரித்து யோசித்து எழுதியது கிடையாது??//

விவாதம் என்றால் “கேள்விகள் கேட்டு, பதில் வாங்கி” என்றுதான் இருக்கும். உங்கள் சொந்த சரக்கா, எனது சொந்த சரக்கா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. ஒரு வசனத்தை நீங்கள் சொல்லி உங்கள் கருத்தை வைக்கிறீர்கள்; நான் “மற்றொரு வசனம் இப்படியும் சொல்கிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன” எனக் கேட்கிறேன். 

//அப்படி என்றால் கிரியையின் உபதேசம் ஏன் என்று நீங்களும் பவுலிடம் கேட்களாமே!! அப்படியே எல்லாரையும் அடிமைத்தனத்திற்குள் அடைத்துப்போட்டு உங்களை போன்ற சிலரலை மாத்திரம் சுதந்திரமாக விட்டார் தேவன் என்றும் கேட்டு வாருங்கள்!!//

இவ்விரு கேள்விகளுக்கும் பதில் எனக்கு நன்றாகவே தெரியும். முதலில் எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்; அதன்பின் மற்றெல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன்.

கிரியை குறித்து நான் காண்பித்த எல்லா வசனங்களுக்கும் “இந்த ஒரு வசனம் போதும்” என்று சொல்லி நீங்கள் இவ்வசனத்தைப் போட்டுள்ளீர்கள்.

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

இதற்கு எதிர்வாதமாகத்தான் நான் சில கேள்விகளைக் கேட்டுள்ளேன். அவற்றிற்கு முதலாவது பதில் சொல்லுங்கள்.

//கிரியை என்பது மத சம்பந்தமானது மாத்திரம் அல்ல, அது கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களும் செய்வது தான்!! தேவ சாயலில் மனிதன் இருப்பதால் கிரியை சாத்தியமே!! ஆனால் கிரியை செய்துக்கொண்டு தேவன் இல்லை என்று சொல்லுபவன் மேலும் தேவனின் கிருபையே கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுகிறது!! மேலே உள்ள வசனம் அதற்கே சாட்சி!!//

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏன் இந்த Lecture?

//மத்தேயு 5:2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;

இந்த வசனங்கள் எல்லாமே கிரியை தான் போதிக்கிறதா??//

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், புதிய கேள்வியைத் தொடங்கிவிட்டீர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//இந்த வசனத்திற்கு பதில் சொல்லுங்கள் என்று தானே நான் கேட்கிறேன்!! ஏன் நீங்கள் முதலில் பதில் கொடுக்க கூடாதா??//

தேவகிருபை வேண்டாம் என நான் ஒருபோதும் சொல்லவில்லை; தேவகிருபையும் வேண்டும், நம் கிரியையும் வேண்டும் என்றுதான் நான் சொல்லிவருகிறேன். தேவகிருபை என்பது ஏற்கனவே எல்லோருக்கும் பலித்துவிட்டது. இது ஒரு தகவல் மட்டுமே. அதையே மீண்டும் மீண்டும் சொல்வதால் யாருக்கும் பயனில்லை.

ஒருவேளை யாராவது ஒருவர் “நான் என் கிரியையினால்தான் நீதிமானாகிறேன்” எனச் சொல்லி தன்னைத்தானே மேன்மைபாராட்டிக் கொண்டால், அவரிடம் “அப்படியல்ல சகோதரா! நாமெல்லோரும் ஏற்கனவே பாவத்தில்தான் பிறந்துள்ளோம்; பிறந்தபின் நாமும் பல பாவங்களைச் செய்கிறோம்; அப்பாவங்களை நம்மைவிட்டு நீக்கி நம்மை நீதிமானாக்குவது தேவகிருபையேயொழிய நாம் செய்கிற நீதியின் கிரியையல்ல. தேவகிருபையால் நீதிமானாக்கப்பட்ட நாம், தொடர்ந்து நீதிமானாக நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் நீதியின் கிரியைகளைச் செய்யவேண்டும். மற்றபடி நாம் நீதியின் கிரியைகளைச் செய்வதால்தான் நாம் நீதிமானாகிறோம் என எண்ணுவதையும் அதினிமித்தம் மேன்மைபாராட்டுவதையும் விட்டுவிடு” எனச் சொல்லலாம்.

ஆனால் நீங்களோ தேவகிருபை மட்டும் போதும்; கிரியை தேவையில்லை; கிரியை இல்லாவிட்டாலும் எல்லோரும் இரட்சிக்கப்பட்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவார்கள் என்றீர்கள். அதோடு மட்டுமின்றி கிரியையைப் போதிக்கிற என்னை “முட்டாள், லூசு, சுயநீதிக்காரன், கிரியையை மேன்மைபாராட்டுபவன், கிரியையை நம்புபவன்” என்று சொல்லி அவமதிக்கவும் செய்தீர்கள்.

இறுதியாக கிரியை குறித்த பல வசனங்களை நான் எடுத்துப்போட்டபோது, இந்த எல்லா வசனங்களுக்கும் இந்த ஒரு வசனம் போதும் என்று சொல்லி, “கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.” எனும் வசனத்தைக் காட்டினீர்கள். இவ்வசனத்துக்குப் பதிலாகத்தான் “கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” வசனங்களைக் காட்டி, நியாயப்பிரமாணம் கூறுகிற இந்த அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை எனப் பவுல் சொல்கிறாரே, இதற்கு என்ன விளக்கம் என உங்களைக் கேட்டேன்.

ஆனால் நீங்களோ விளக்கம் தராமல், என்னை விளக்கம் சொல்லும்படி கேட்கிறீர்கள். Truth Seekers தளத்தின் நிர்வாகியான உங்களுக்குத்தானே உண்மையைக் கண்டறிந்து மற்றவர்களுக்குச் சொல்வதில் முதல் பொறுப்பு உள்ளது? கிரியை தேவையில்லை என அடம்பிடிக்கும் நீங்கள்தானே கிரியைபற்றிய வசனங்களுக்கு விளக்கம் தரவேண்டும்? அதைவிடுத்து “என்னை விளக்கம் தரும்படி சொன்னால்” அதற்கு என்ன அர்த்தம்? இவ்விஷயத்தில் இன்னும் நீங்கள் “உண்மையைக் கண்டறியவில்லை” என்றுதான் அர்த்தம். ஒரு விஷயத்தில் உண்மையைக் கண்டறியாமல், அவ்விஷயம் பற்றி கருத்து சொல்பவனைப் பார்த்து “முட்டாள், லூசு, சுயநீதிக்காரன், கிரியை மேன்மைபாராட்டுபவன், கிரியை நம்புபவன்” எனச் சொல்கிற உங்களை நான் என்ன சொல்வது?

//தெரியும் தெரியும் என்று ஏன் பதில் தராமல் இருக்கிறீர்கள்!!//

அப்படியானால் நீங்கள் என்ன “தெரியாது, தெரியாது” என்றா சொல்கிறீர்கள்? நீங்களும் “தெரிந்துதானே” இத்தனை ஆவேசமாய் எதிராளியைப் பார்த்து “முட்டாள், லூசு” என்று சொல்கிறீர்கள்? அப்படிச் சொல்கிற உங்கள் முன் எதிராளி ஒரு வசனத்தை வைக்கையில் “அட முட்டாளே! இவ்வசனத்திற்கு இதுதான் அர்த்தம், இது புரியாமல் இருக்கிறாயே” என்று நீங்கள் சொன்னால், ஏற்கனவே நீங்கள் சொன்ன “முட்டாள், லூசு” வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் எதிராளியின் வசனத்துக்கு நீங்கள் விளக்கம் பதில்தராமல், அந்த எதிராளியையே முதலில் விளக்கம் தரும்படி கட்டாயப்படுத்துவது “உங்களது இயலாமையையும், வசனத்தைக் குறித்த உங்கள் அறியாமையையும்தான்” காட்டுகிறது.

இதை நீங்கள் ஒத்துக்கொண்டால், எல்லா விஷயங்களுக்கும் நான் விளக்கம் தருகிறேன். ஒத்துக் கொள்ள முடியாதெனில், “நீங்கள் தான் முதலில் விளக்கம் தரவேண்டும்”.

நீங்கள் ஒத்துக்கொள்ளவும் மறுத்து, விளக்கம் தரவும் மறுத்தால், சரியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு நான் விளக்கம் தருகிறேன், உங்களுக்காக அல்ல, தள அன்பர்களுக்காக.



-- Edited by anbu57 on Monday 22nd of August 2011 05:43:25 AM



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//அதாவது தேவ கிருபையும் வேண்டும் என்கிறீர்கள் ஆனால் அத்துடன் நம் கிரியையும் வேண்டும் என்கிறீர்கள்!! இப்படி எழுதுவது தான் தேவனின் கிருபையை அவமாக்குவதாகும் என்கிறேன்!! இதை தான் கிரியையில் மேன்மை பாராட்டுகிறீர்கள் என்கிறேன்!!//

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்; ஆனால் இயேசு என்ன சொல்கிறார்?

மத்தேயு 5:19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

உங்கள் வசதிக்காகக் கொட்டை எழுத்தில் பதிக்கப்பட்ட வேதவார்த்தைகளை சற்று உன்னிப்பாகப் படியுங்கள் சகோதரரே! கிரியை இருந்தால் மட்டும் போதாது, அதை மற்றவர்களுக்குப் போதிக்கவும் வேண்டும்; அப்படி போதிப்பவனே பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான் என இயேசு சொல்கிறார்.

நான் இயேசு சொல்வதை மதிப்பதா, அல்லது நீங்கள் சொல்வதை மதிப்பதா? நிச்சயம் நீங்கள் சொல்வதற்கு அல்ல. எனவே நீங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படிப்பட்ட உங்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர என்னால் வேறொன்றும் செய்யஇயலாது.

//அதாவது தேவ கிருபை தானே, அது தான் ஒரு முறை சொல்லிவிட்டாரே, அது எல்லாம் கொடுத்துவிடுவார் என்கிறதும், ஆனால் கிரியை என்பது நான் , என் முயற்சியில் செய்வது என்கிறீர்கள்!!//

ஆமாமய்யா ஆமாம். புரிந்துகொள்தலுக்கு நன்றி. கிருபையை தேவன் தான் கொடுக்கவேண்டும்; அதை நீங்கள் உங்கள் முயற்சியில் அவரிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கமுடியாது. அவராகத்தான் கிருபையைக் கொடுக்கிறார்; அதை எல்லோருக்கும் கொடுக்கிறார். இத்தகவலை/இவ்வுண்மையை நாம் புரிந்துகொண்டால் போதும்.

கிரியையைப் பொறுத்தவரை நாம்தான் நம் முயற்சியில்தான் செய்யவேண்டும். மாறாக, தேவனா வந்து ஒவ்வொருவர் கையையும் பிடித்து கிரியை செய்ய வைப்பார்?

//கிருபை என்பது ஒரு தகவல் மட்டுமே என்கிற அளவிற்கு தேவ கிருபை உங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது!! அய்யா, கிருபையை தான் தேவனின் சுவிசேஷமாக அறிவித்திருக்கிறார்கள் அப்போஸ்தலர்கள்!!//

ஆமாமய்யா, கிருபை எனும் தகவல், “நல்ல தகவல்” என்பதால் அது “நற்செய்தி”யானது. நற்செய்திக்கு மறுபெயர்தான் சுவிசேஷம். இப்படியாக கிருபை என்பது சுவிசேஷமாகவும் உள்ளது; அதை அப்போஸ்தலர்கள் அறிவித்தார்கள் என்பது மெய்தான். ஆனால் அதோடு அவர்கள் நின்றார்களா? இல்லையே! அதற்கு ஓர் உதாரணமாகத்தான் கலாத்தியர் 5:19-21-ஐக் காட்டினேன். இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்றும் பவுல் அறிவித்தாரே! இந்த அறிவிப்பும் சுவிசேஷம் தான். ஆனால் நீங்கள் கிருபை எனும் சுவிசேஷத்தைச் சொன்னால் மட்டும் போதும் என்கிறீர்கள்.

//கிருபையை மீண்டும் மீண்டும் சொல்லுவதினால் ஒரு பயனும் இல்லை என்று நீங்கள் எந்த அதிகாரத்தில் சொல்ல முடியும்!!//

கிருபையை மீண்டும் மீண்டும் சொல்வதினால் என்ன பயன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். அதை உங்களால் சொல்லமுடியவில்லையெனில், “பயன் இல்லை” என்றுதானே அர்த்தம்?

//கிரியை செய்தும் மரணத்திலிருந்து விடுப்படமுடியாத ஜனங்கள் அழிந்துகொண்டு இருந்தார்கள்!! கிறிஸ்துவின் ஈடுபலியினால் அந்த கிருபை வெளிப்பட்டது,//

கிருபை வெளிப்பட்ட பின் எல்லோரும் அழியாமலா இருக்கிறார்கள்? இப்போதும் ஜனங்கள் அழிந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

//உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை, ஆகவே தான் கிருபையை இத்துனை மட்டமாக, அதுவும் இருந்துவிட்டு போகுது என்கிற அளவிற்கு எழுதுகிறீர்கள்!!//

மீண்டும் மீண்டும் நான் எழுதுவது “இப்படி அப்படி” என தனிப்பட்ட முறையிலேயே எழுதுகிறீர்களே! அதுதான் வேண்டாம் என்கிறேன். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், கொடுத்த வசனத்துக்கு விளக்கம் தாருங்கள். நான் எப்படியும் இருந்துவிட்டுப் போகிறேன். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

//மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதினால் என்ன இப்போ!! அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா!! என்னிடத்தில் இதில் ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்கிறார் அப்போஸ்தலரான யோவான்!!//

மீண்டும் மீண்டும் தனிப்பட்ட முறையிலேயே பேசுகிறீர்களே! உங்களுக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதா? இன்னின்ன அநீதிகளைச் செய்பவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் எனப் பவுல் சொல்கிறார். அப்படியானால் அவனைப் பொறுத்தவரை கிறிஸ்துவின் இரத்தம் வீணாகிப் போகுமா என்பதுதான் எனது கேள்வி. கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.

//I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

ரோமர் 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

இந்த வசனத்தில் மீறுதல் என்பது கிரியை!! ஆனால் அந்த கிரியை தேவனின் கிருபைக்கு முன்னால் ஒன்றும் இல்லை என்கிறது வசனம்!! ஆனால் நீங்களோ, கிருபை இருக்கட்டும் என் கிரியை தான் பெரிது என்கிறீர்கள்!! கிருபையை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் யாருக்கு பயன் என்கிற அளவிற்கு உங்களின் போதனை இருக்கிறது!!//

மீண்டும் மீண்டும் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத்தான் முன்வருகிறீர்களேயொழிய, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டேன் என்கிறீர்களே! எனது போதனை எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அது சரியா தவறா என விவாதத்தின் இறுதியில் தீர்மானித்துக்கொள்வோம். இப்போது எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

கலாத்தியர் 5:19-21 வசனங்களில் இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என பவுல் சொல்கிறார். அப்படியானால் அநீதிகளைச் செய்த அவர்களுக்கு கிறீஸ்துவின் இரத்தம் வீணாகிப் போனதா என்பதுதான் என் கேள்வி.

மற்றவர்களைப் போல் “உங்களது புரிந்துகொள்ளும் சக்தியை” நான் சற்றேனும் விமர்சிக்கவில்லை. தயவுசெய்து எனது கேள்வியைப் புரிந்துகொண்டு நேரடியாகப் பதில் தாருங்கள்.

//ஆனால் அப்போஸ்தலருக்கு கிருபையை அறிவுப்பது தான் சுவிசேஷமாகவும், அதற்காகவே அவர் அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்:

அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.//

அய்யா, பவுல் சொல்கிற வசனம் எதையும் நான் மறுக்கவுமில்லை, புறக்கணிக்கவுமில்லை. ஆனால் இப்படியெல்லாம் சொன்ன அவர், கலாத்தியர் 5:19-21-ல் இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என ஏன் சொன்னார்? அநீதிகளைச் செய்தவர்களுக்குக் கிருபை கிடையாதா? அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தம் வீணாகிப் போனதா? இதுதான் என் கேள்வி.

//வாழ்க்கை முழுவதும் அவர் தேவனின் கிருபையை சொன்னது உங்களுக்கு அற்பமாக இருக்கலாம், ஏனென்றால் கிரியை அந்த அளவிற்கு உங்களுக்கு வலிமையாக இருக்கிறது!!//

சரி, பவுல் சொன்னது எனக்கு அற்பமாக உள்ளது; அப்படியே வைத்துக்கொள்வோம். ஆனால் இயேசு சொன்னதை நான் அற்பமாக எண்ணுவதா, வேண்டாமா? அதைச் சொல்லுங்கள்.

இயேசு சொன்னது: இந்தக் கற்பனைகளைக்கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

இயேசு சொன்னதைச் செய்து, பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்பட வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி நான் பெரியவன் எனப்படுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

//கிரியையினால் நித்திய ஜீவன் என்று வசனத்தை காட்டினீர்கள்!!

ஆனால் தேவனையும், அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று மற்றோரு வசனமும் சொல்லுகிறதே!! அந்த கிறிஸ்து தானே தேவ கிருபை!! அப்படி என்றால் அந்த கிறிஸ்துவை தானே, ஏன் மீண்டும் மீண்டும் சொல்லுகிறீர்கள் என்கிறீர்கள்!!?? நல்லது!!//

ஆமாமய்யா, தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதுதான் நித்திய ஜீவன் என வசனம் சொல்வதை மறுக்க முடியுமா? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே!

1 யோவான் 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

பாவம் செய்கிறவன் கிறிஸ்துவை அறியவில்லையாம். சும்மா கிறிஸ்துவை அறிந்துவிட்டேன் எனச் சொல்லிவிட்டு கிரியை இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு போகவேண்டாம். பாவம் செய்யாமலிருந்தால்தான் (அதாவது கிரியை இருந்தால்தான்) கிறிஸ்துவை அறிதல் என்பது முழுமை பெறும்.

1 யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா? உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.

சும்மா கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நிசான் மாதம் இந்த நாளில் இந்த நேரத்தில்தான் ராப்போஜனம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி இராப்போஜனம் எடுப்பதாலோ (முங்கி, தெளித்து, ஓடுற நீரில், தொட்டி நீரில்) ஞானஸ்நானம் எடுப்பதாலோ பயனில்லை. கிறிஸ்து நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும், ஆம், கிரியை வேண்டும்.

தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

அய்யா, தேவனை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என அறிக்கை பண்ணுகிறீர்களா? அப்படி அறிக்கை செய்தால் அதை கிரியையில் நீங்கள் நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபிக்காவிட்டால் தேவனை நீங்கள் மறுதலிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

1 யோவான் 4:6  நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.  7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

அய்யா, அன்பு எனும் கிரியை இல்லாவிட்டால் நீங்கள் தேவனை அறியவில்லை என அர்த்தமாம். இப்படி நான் சொல்லவில்லை, அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்.

எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

இஸ்ரவேலர்கள் யெகோவா தேவனை ஆராதித்தவர்கள்தான். ஆனாலும் அவர்கள் தேவனை அறியவில்லையாம். ஏன்? அவர்களிடம் நன்மைசெய்தல் எனும் நற்கிரியை இல்லை; மாறாக தீமைசெய்தல் எனும் துர்கிரியைதான் இருந்தது.

எரேமியா 22:15  நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எது அய்யா தேவனை அறிகிற அறிவு? நீதி நியாயம் செய்தல், சிறுமையும் எளிமையுமானவனின் நியாயத்தை விசாரித்தல் எனும் கிரியைகளைச் செய்வதுதான் தேவனை அறியும் அறிவு.

ஏசாயா 1:3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

இஸ்ரவேலருக்கு யார் தேவன் என்பது தெரியாதா? யெகோவா தேவனை அவர்கள் அறியாதவர்களா? நன்றாக அறிந்தவர்கள்தான். ஆனாலும் அவர்கள் தம்மை அறியவில்லை என தேவன் வருத்தப்படுகிறார். காரணமென்ன? 11-15 வசனங்களைப் படியுங்கள்.

அவர்கள் திரளான பலிகளைச் செலுத்தினார்கள் (இந்நாட்களில் நீங்கள் வருஷம் தவறாமல் திருவிருந்து அனுசரிப்பதுபோல), தேவசந்நிதியில் பவ்யமாக நடந்தார்கள் (இந்நாட்களில் ஆலயத்தில் ரொம்ப பவ்யமாக நாம் நடப்பதுபோல), காணிக்கைகளைப் போட்டார்கள் (நம்மைப் போலத்தான்), தூபங்காட்டினார்கள் (ஆம், தேவனையோ இயேசுவையோ நாம் ஆராதிப்பதைப்போலத்தான்), ஓய்வுநாளை ஆசரித்தார்கள் (நாம் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பதுபோலத்தான்), மாதப்பிறப்பை ஆசரித்தனர் (நாம் மாதந்தோறும் உபவாச நாள், இரவு விழிப்பு ஜெபம் ஆசரிப்பது போலத்தான்), பண்டிகை ஆசரித்தனர் (நம்மைப் போலத்தான்), கைகளை விரித்து மிகுதியாய் ஜெபம் பண்ணினார்கள் (இதுவுங்கூட நம்மைப் போலத்தான்); ஆனாலும் அவர்கள் மாட்டை விடவும் கழுதையை விடவும் மட்டமா தங்கள் எஜமானனாகிய தேவனை அறியாதிருந்தார்கள் (அட, இதுவுங்கூட நம்மைப் போலத்தான்). தேவன் அவர்களை ஏன் அப்படிச் சொன்னார்?

அவர்களிடம் நற்கிரியை இல்லை; துர்கிரியைதான் இருந்தது. நன்மை செய்யவில்லை, நியாயத்தைத் தேடவில்லை, ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கவில்லை, etc etc. (வசனங்கள் 16,17)

ஆமய்யா. கிரியை இருந்தால்தான் நாம் தேவனை அறிந்தவர்கள்; கிரியை இல்லையெனில் நாம் சடங்கச்சார அளவில் மட்டுமே தேவனை அறிந்தவர்கள்.

மேலே கூறப்பட்டுள்ள வசனங்களின்படி நாம் தேவனையும் இயேசுவையும் அறிந்தால் நிச்சயமாக நமக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவான் 17:3-ன்படி). நீங்கள் எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் கிரியை அவசியம் என்றுதான் முடிக்க வேண்டியதிருக்கும்.

இந்த வசனத்தையும் பாருங்கள்.

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறது.

யாக்கோபு 2:26 ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

ஆம், கிரியைகளோடு இயேசுவை விசுவாசிப்பதுதான் உயிருள்ள விசுவாசம். அந்த விசுவாசம் ஒருவனுக்கு இருந்தால், யோவான் 3:16-ன்படி அவனுக்கு நித்தியஜீவன்தான்.

இந்த வசனத்தையும் பாருங்கள்.

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

சொல்லர்த்தமான இயேசுவின் மாம்சத்தை நாம் தற்போது புசிக்கமுடியுமா, அவரது இரத்தத்தைப் பானம் பண்ணமுடியுமா?

தேவனின் வார்த்தைதான் மாம்சமாகி இயேசுவாகப் பிறந்தார். எனவே தேவனின் வசனங்கள்தான் இயேசுவின் மாம்சம்.

சரீரத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. அப்படியானால் இயேசுவின் இரத்தத்தைப் பானம்பண்ணுதல் என்பது அவரது உயிரை (அதாவது ஆவியை) பானம் பண்ணுவதாகும். இயேசுவின் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருப்பதாக இயேசு சொல்கிறார்.

எனவே அவரது மாம்சமாகிய தேவவார்த்தைகளைப் புசித்து, அவரது இரத்தமாகிய வசனங்களைப் பானம்பண்ணுபவனுக்கு நித்தியஜீவன் உண்டு.

தேவவார்த்தைகள்/வசனங்களைப் புசித்தல்/பானம்பண்ணுதல் என்றால் என்ன? அவற்றின்படி நடப்பதுதான் அவற்றைப் புசிப்பதும் பானம்பண்ணுவதுமாகும். எனவே எந்த வசனத்தில் நீங்கள் தொடங்கினாலும் அது கிரியையில் போய்தான் முடியும். அப்படி இல்லாவிட்டால் வேதவசனம் ஒன்றுக்கொன்று முரணாகிவிடும்.

//நீதிமான் ஒருவனும் இல்லை என்கிற வசனத்திற்கு மாற்று போதனை நீங்கள் சொல்லுவது!!//

ஆம், நிச்சயமாக. ஆனால் நான் மட்டுமல்ல, இயேசுவும் பேதுருவுங்கூட அப்படியே.

மத்தேயு 13:43  அப்பொழுது, நீதிமான்கள் (நன்றாக எழுத்துக்கூட்டி படித்துப் பாருங்கள்... நீ ... தி ... மா ...ன் ... க ...ள்..)தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

மத்தேயு 25:37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

1 பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

//என்றால் சத்தியத்தை தேடுவோர், ஆராய்வோர் என்று தான் அர்த்தமே தவிர, மற்றவர்களுக்கு சொல்வதில் முதல் பொறுப்பு உள்ளது என்று நீங்களாகவே ஒரு நியமனத்தை கொண்டு வர வேண்டாம்!!//

சரி, போகட்டும். எனது நியமனத்தை வாபஸ் பெறுகிறேன். சத்தியத்தைத் தேடுவோர் என உங்களைச் சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு, வேதத்தை ஆராய்ந்து சொல்வதில் மற்றவர்களைவிட குறைவான அல்லது சமமான பொறுப்பு மட்டுமே உண்டு என வைத்துக்கொள்வோம்.

//கிரியை தேவையில்லை என்று எங்கு எழுதியிருக்கிறேன்!! கிரியை எதற்கு உதவாது என்று தான் எழுதியிருக்கிறேன்!!//

சரி, இனி இப்படிச் சொல்கிறேன். “கிரியை எதற்கும் உதவாது என அடம்பிடிக்கும் நீங்கள்தானே கிரியை பற்றிய எனது வசனங்களுக்கு விளக்கம் தரவேண்டும்?

//கிரியை தெரியாத மதமே கிடையாது, ஆனால் கிருபையை யார் அறிவார்கள், யார் அறிவிப்பார்கள்!!??//

அன்பே கடவுள் என எந்த மதமும் சொல்லவில்லையா? எந்த மதம் எதைச் சொல்கிறது/சொல்லவில்லை என்பதை இங்கு நாம் விவாதிக்கவில்லை. நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவையென வேதாகமம் சொல்கிறதா இல்லையா என்பதைத்தான் விவாதிக்கிறோம்.

//என் விளக்கம் தந்தாகிவிட்டது!!//

இத்தனை நீண்ட பதிவைத் தந்துவிட்டு, “கலாத்தியர் 5:19-21 வசனங்களில் இன்னின்ன அநீதிகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என பவுல் சொல்கிறார். அப்படியானால் அநீதிகளைச் செய்த அவர்களுக்கு கிறீஸ்துவின் இரத்தம் வீணாகிப் போனதா” எனும் எனது கேள்விக்கு நேரடியான பதிலை இன்னமும் தரவில்லையே!

//கிரியை என்பது மனிதக்குலம் முழுவதும் இருக்கிறது,//

ஆம். கொலை, களவு, பொய், இச்சை, விபசாரம், அநீதி, தீமைசெய்தல், அன்பு, இரக்கம், நன்மை செய்தல், நீதி செய்தல் எனும் கிரியை மனிதகுலம் முழுவதும் உள்ளது.

//எதை குறித்து மீண்டும் மீண்டும் பேசக்கூடாதோ அதை நீங்கள் பேசுகிறீர்கள்!!//

இப்படியொரு Instruction சம்பந்தமான வசனம் எனக்கும் தெரியவில்லை, இயேசுவுக்கும் தெரியவில்லை, அப்போஸ்தலர்களுக்கும் தெரியவில்லை. என்னை விடுங்கள், நான் உங்கள் அளவுக்கு வேதாகமத்தைப் படிக்காதவன் என வைத்துக்கொள்வோம். ஆனால் இயேசுவுக்கும் அப்போஸ்தலர்களுக்குங்கூட அந்த வசனம் எப்படி தெரியாமல் போனது? உண்மையிலேயே you are great, இல்லை இல்லை sorry, you are the greatest.

//மேலும் முட்டாள் லூசு என்று நானாகவே யாரையும் சொல்லி எழுதியதில்லை, ஆனால் காரணம் இல்லாமல் சொல்லும் போது கிறிஸ்துவுக்கு வந்த அதே கோபம் எனக்கும் வரும்!!//

இதெல்லாம் எனக்கு ஒரு பெரியவிஷயம் இல்லை. நீங்கள் எப்போதும்போல் தாராளமாகக் கோபப்படுங்கள்.

//ஆகவே கிருபை குறித்தே மேன்மைப்பாராட்டுவேன், கிரியை குறித்து அல்ல!!//

நீங்கள் எதை மேன்மைபாராட்டுகிறீர்கள் என நான் கேட்கவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்கிறீர்கள், நான் கேட்டுக்கொள்கிறேன்.

//கிரியையை அறியாத ஜனம் இல்லை, ஆனால் கிருபையை கிறிஸ்தவர்களே அறிவதில்லை!!//

அன்பே கடவுள், இறைவன் அன்பாகவே இருக்கிறார் என புறமதத்தினர் சொல்ல நீங்கள் கேட்டதில்லையோ?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


//மத்தேயு 5:2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;

இந்த வசனங்கள் எல்லாமே கிரியை தான் போதிக்கிறதா??//

இதில்கூட சந்தேகமா?

+ 2-ல் 1200-க்கு 1180-க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் விரும்புகிற காலேஜில் விரும்புகிற பிரிவில் ஸீட் கிடைக்கும்” என ஒருவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? மாணவர்களே! நீங்கள் 1180-க்கு மேல் மதிப்பெண் வாங்கி அந்த பாக்கியத்தை சுதந்தரியுங்கள் என்பதுதானே?

இதேபோலத்தான் இப்படியிப்படி நடந்தால் இன்னின்ன பாக்கியங்கள் கிடைக்கும் எனச் சொல்லி, அப்பாக்கியங்களைச் சுதந்தரிக்கத்தக்கதாக அப்படியெல்லாம் நடங்கள் என இயேசு போதிக்கிறார்.

மத்தேயு 5:2-18 வசனங்களில் இயேசு உபதேசித்துச் சொன்னவைகள் யாவும் கற்பனைகள்தான். அக்கற்பனைகளைப் போதிப்பவனைக் குறித்துதான் 19-ம் வசனத்தில் இப்படிச் சொல்கிறார்.

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

இப்போதாவது சந்தேகம் தீர்ந்ததா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


நீண்டதொரு பதிவைத் தந்துள்ளீர்கள்; ஆனால் எனது  கேள்விக்கான பதிலாக பின்வரும் வரிகளை மட்டும் தந்துள்ளீர்கள்.

//எந்த அநீதிக்காரனுக்கும் கிறிஸ்துவின் இரத்தம் வீணாகி போவதில்லை, அனைவரும் அவரின் ஈடுபலியின் பலனை பெறுவார்கள், அவர்கள் நீதியின் கிரியை செய்திருந்தாலும் சரி, செய்யாமல் போனாலும் சரி!!//

எந்த அநீதிக்காரனுக்கும் கிறிஸ்துவின் இரத்தம் வீணாகிப் போவதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்; ஆனால் அநீதிக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை எனப் பவுல் கூறுகிறார்.

கலாத்தியர் 5:21-ல் மட்டுமல்ல, பின்வரும் வசனங்களிலும் அதே கருத்தைத்தான் பவுல் சொல்கிறார்.

1 கொரி. 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

(பவுலின் கூற்றுப்படி) அநீதிக்காரனாகிய ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்காவிட்டாலும், கிறிஸ்துவின் இரத்தம் அவனுக்கு வீணாகிப் போவதில்லை என்பதுதான் உங்களது உறுதியான பதில்.

Very Good, இத்தனை எளிதான/தெளிவான பதிலை வைத்துக்கொண்டு அதை இவ்வளவு நேரமாகச் சொல்லாததால் நான் மிகவும் குழம்பிப்போய்விட்டேன். நல்லவேளை, இப்போதாவது தெளிவான பதிலைத் தந்து எனது குழப்பங்களைப் போக்கிவிட்டீர்களே! மிகவும் நன்றி சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

1 யோவான் நிருபத்தில் காணப்படும் சில வசன பகுதிகள்:

பகுதி 1

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

பகுதி 2

1 யோவான் 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை போல் தோன்றுகின்றன. ஆனால் அவை முரணானவையல்ல. எப்படியெனில்:

முதல் பகுதி, நாம் அனைவரும் பாவிகள், பாவஞ்செய்தவர்கள் எனக் கூறுகிறது. இது 100-க்கு 100 உண்மையே! நம் கடந்தகால வாழ்வைப் பார்த்தால், நாம் எப்போதாவது கண்டிப்பாக பாவம் செய்திருப்போம். இதை ஒத்துக் கொள்ளாமல், “நான் பாவமே செய்யவில்லை” என நம்மில் யாராவது சொன்னால், நாம் பொய்யராகிவிடுவோம். இதைத்தான் முதல் பகுதியில் 10-ம் வசனத்தில் யோவான் கூறுகிறார்.

கடந்த காலத்தில் பாவஞ்செய்த நாம், கிறிஸ்துவை அறிந்தபின்னரும் அதேவிதமாகப் பாவஞ்செய்யக்கூடாது. கிறிஸ்துவை அறிந்த நாம் அவரோடுகூட நிலைத்திருக்க வேண்டும். அவரில் நிலைத்திருப்பவன் பாவம் செய்வதில்லை என பகுதி 2 கூறுகிறது. அதாவது நாம் பாவம்செய்யாதிருப்பதுதான் நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறோம் என்பதற்கு அடையாளம். மாறாக, கிறிஸ்துவை அறிந்த பின்னும் நாம் பாவஞ்செய்தால், நாம் கிறிஸ்துவை காணவுமில்லை, அறியவுமில்லை என யோவான் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

நாம் பாவமும் செய்துகொண்டு, கிறிஸ்துவையும் அறிந்துள்ளதாகக் கூறினால், நாம் சொல்வது பொய், கிறிஸ்துவை நாம் அறியவில்லை என்றுதான் அர்த்தம். இதைத்தான் பகுதி 2-ல் யோவான் கூறுகிறார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


//எந்த வசனம் கொடுத்தாலும் அந்த வசனத்திற்கு பதில் கொடுக்காமல், இப்படியும் சொல்லுகிறதே என்று தான் விவாதம் செய்கிறீர்கள்!!//

மத்தேயு 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

பிசாசு கொடுத்த வசனத்துக்கு இயேசுவுங்கூட, “இப்படியும் எழுதியிருக்கிறதே” என்று சொல்லித்தானே விவாதம் செய்தார்? அவரைப் பின்பற்றித்தானே நானும் விவாதம் செய்கிறேன். இது ஒரு தவறா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


//கிருபை மன்னிப்பை பெற்று தருகிறது எந்த விதமான கிரியையும் தேவையில்லாமல்:
லூக்கா 18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

ஆனால் கிரியை செய்கிறவர் சொல்லுவது:
லூக்கா 18:11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

இப்பொழுது இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்:
லூக்கா 18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.//

தேவகிருபையால் மன்னிப்பைப் பெற்ற பாவி, மீண்டும் பாவம் செய்துகொள்ளலாம் என இயேசு எப்போதாவது கூறினாரா? நிச்சயமாக அல்ல. மன்னிப்பு பெற்ற பாவியிடம் இயேசு சொன்னதை சற்று படியுங்கள்.

யோவான் 5:14 அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

யோவான் 8:11 ... இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

கிரியைகளைச் செய்து தன்னை உயர்த்திக்கொண்ட பரிசேயன், கிரியைகளைச் செய்திருக்க வேண்டியதில்லை என இயேசு கூறினாரா? நிச்சயமாக இல்லை. தான் செய்த கிரியைகளைச் சொல்லி தன்னைத்தான் உயர்த்தவேண்டாம் என்றுதான் இயேசு கூறினார்.

பரிசேயரைக் குறித்த இயேசுவின் மற்றொரு வசனத்தை சற்று படியுங்கள்.

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பரிசேயன் சொல்லிக்காட்டிய அந்த நீதிகளைவிட அதிக நீதி வேண்டுமாம்; அப்படி இல்லையெனில் நாம் பரலோகராஜ்யம் பிரவேசிக்க மாட்டோமாம்.

//எப்படி உயர்த்தினான்!! நான் அதை செய்கிரேன், இதை செய்வதில்லை, அவனை போன்று இருப்பதில்லை!! நீங்கள் விவாதம் செய்வது போல், நானும் எழுதலாம், இப்படி கிரியை கிரியை என்று சொல்லுபவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்று நான் அல்ல கிறிஸ்து இயேசுவே சொல்லுகிறார் என்று!!//

ஆயக்காரனைப் போல நீங்கள் “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என ஒவ்வொரு நாளும் பாவஞ்செய்துகொண்டு சொல்லிக்கொண்டேயிருங்கள். நான் உங்களை வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் என்னைப் பார்த்து, நான் பரிசேயனைப் போல் எனது கிரியையே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பதாக நீங்கள் கூறினால், அது உங்கள் அறியாமை.

நான் எனது கிரியையையா இங்கு பதித்துக் கொண்டிருக்கிறேன்? சற்றும் நிதானமின்றி கூறுகிறீர்களே! நித்தியஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் “கிரியை” வேண்டும் என வேதாகமம் சொல்வதை எடுத்துரைக்கிறேன், அவ்வளவே.

மீண்டும் சொல்கிறேன் ...

பரிசேயன் சொல்லிக்காட்டிய அந்த நீதிகளைவிட அதிக நீதி வேண்டுமாம்; அப்படி இல்லையெனில் நாம் பரலோகராஜ்யம் பிரவேசிக்க மாட்டோமாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


//

//இயேசு சொன்னது: இந்தக் கற்பனைகளைக்கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

இயேசு சொன்னதைச் செய்து, பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்பட வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி நான் பெரியவன் எனப்படுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?//

இந்தக் கற்பனைகள் என்பது முழு நியாயப்பிரமானத்தை குறிப்பதாகும்!! இது இயேசு கிறிஸ்து எனும் கிருபையை பற்றிக்கொள்வோருக்கு சொல்லப்படவில்லை, நியாப்பிரமானத்தினால் நீதிமான் ஆகலாம் என்கிற யூதர்களுக்கு சொல்லப்படது!!

//

ஆக, இயேசுவுங்கூட நியாயப்பிரமாண போதகர் என்றும், இயேசுவின் போதனை யூதர்களுக்கு மட்டுமே என்றும் சொல்கிறீர்கள்.

//இயேசு கிறிஸ்து நியாயப்பிரமானத்தின் கிரியையை யூதர்களிடம் போதித்தது உங்களுக்கு என்று எண்ணுவதை என்னால் ஒன்றும் மாற்ற முடியாது!!//

ஒருகாலத்தில் பழைய ஏற்பாட்டுப் போதனை “இஸ்ரவேலருக்கானது” என்றும், புதிய ஏற்பாட்டுப் போதனை “உலகத்தாரல்லாதவர்களுக்கானது” என்றும் கூறியதாக ஞாபகம்.

தற்போது, இயேசுவின் போதனை யூதர்களுக்கானது என்கிறீர்கள். எப்படியோ போகட்டும்.

ஆனால் நமக்கான போதனை எது எது என்பதை சற்று தெளிவாகச் சொல்லிவிட்டால் மிக நன்றாயிருக்கும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

//நீங்கள் தாராளமாக நியாயப்பிரமாணத்தை பின்பற்றலாம்!! நான் ஒன்றும் வேண்டாமென்று சொல்லவில்லை!!//

அன்பான சகோதரரே! நம் விவாதத்தின் நோக்கம் என்னவென்பதைப் புரியாமல், ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் “நான் கிரியைக்கு ஆதரவாகப்” பேசுவதாகவும், நீங்கள் “கிருபைக்கு ஆதரவாகப்” பேசுவதாகவும் நினைத்து, “நீங்கள் வேண்டுமானால் கிரியை செய்யுங்கள், எனக்கு கிருபை போதும்” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறீர்கள்.

நம் விவாதத்தின் நோக்கம் “நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை தேவையா, இல்லையா” என்பதை வேதவசனம் மூலம் அறிவது மட்டுமே! இதுவரையிலான உங்கள் பதிவிலிருந்து, “நாம் நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை தேவையில்லை” என்பதே உங்கள் கருத்து என நான் அறிகிறேன். நான் சொல்வது சரியெனில், அதாவது “நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை தேவையில்லை” என்பதே உங்கள் கருத்து எனில், பின்வரும் வசனங்களில் பவுலும் யோவானும் இவ்விதமாகச் சொல்லக் காரணமென்ன என்பதை நேரடியாகக் கூறுங்கள். அப்படிக் கூறாமல், மறுபடியும் “நீங்கள் கிரியையை மேன்மைப் படுத்துகிறீர்கள், நான் கிருபையை மேன்மைப்படுத்துகிறேன், நீங்கள் கிரியையை நம்புகிறீர்கள், நான் கிருபையை நம்புகிறேன், நீங்கள் கிரியையைப் பின்பற்றிக் கொள்ளுங்கள், நான் கிருபையைச் சார்ந்து கொள்கிறேன்” என்பது போன்று பதித்தால், உங்களுடனான எனது விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை தேவையா, இல்லையா” எனும் கேள்விக்கான உண்மையான பதிலை நீங்களும், நானும், தள அன்பர்களும் அறியவேண்டும் என்பதுதான் உங்கள் உண்மையான நோக்கமாக இருந்தால், நீங்கள் மெய்யாகவே “Truth Seekers" என்றால், பின்வரும் வசனங்களில் பவுலும் யோவானும் இவ்விதமாகச் சொல்லக் காரணமென்ன என்பதை நேரடியாகக் கூறுங்கள்.

ரோமர் 2:7  சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

1 தீமோ. 6:17  இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

இவ்வசனங்கள் இஸ்ரவேலருக்கான பழைய ஏற்பாட்டு வசனங்களுமல்ல, யூதர்களுக்கான இயேசுவின் நியாயப்பிரமாண போதனை வசனங்களுமல்ல, எந்த நிருபங்கள் “கிருபையைப்” பற்றி பேசுகிறதோ, அதே நிருபங்களில் கூறப்பட்டுள்ள வசனங்களே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


ஜோசப் பக்கம் திரியில்:

//உங்களை போன்ற கோமாளிக்கூட்டத்திற்கு கிறிஸ்துவும் லா பாயிண்ட் தான் பேசியிருக்கிறார்!!

மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாயக்காரர்களை போல் நடந்து, பஸ் வேனில் சென்றாலும் நடை ஜெபம் என்று சொல்லிக்கொண்டு, வீதிகளின் சந்து பொந்துகளிலும் நீங்கள் ஜெபம் செய்வீர்கள் என்று தெரிந்து தான் கிறிஸ்து எங்களுக்கு முன்மாதிரியாக லா பாயிண்ட் எடுத்து வைத்திருக்கிறார்!! ஓஹோ, உங்களுக்கு தான் கிறிஸ்துவினால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்கிற ஆழமான விசுவாசம் இருக்கிறதே, இயேசு கிறிஸ்து சொன்ன லா பாயிண்ட்டை எடுத்து சொன்னால் உங்களுக்கு கசக்க தான் செய்யும்!!

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

பார்த்தீரா!! அறைவீட்டுக்குள், கதவைப்பூட்டி தான் ஜெபிக்க சொல்லியிருக்கிறார் என் கர்த்தர்!! ஆனால் உங்களை போன்றோரை கூட்டம் கூட்டமாக நடத்தும் இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசு, நடந்தோ, படுத்துக்கொண்டோ, ஓடிக்கொண்டோ, எப்படிவேன்டுமென்றாலும் ஜெபிக்கலாம், சோம்பேறிகளாக வீட்டிற்குள் மட்டும் உட்கார்ந்து ஜெபிக்க வேண்டாம் என்கிற லா பாயிண்ட்டை எடுத்து விட்டிருக்கிறான், அதை தான் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்!! எங்கள் எஜமானன் கிறிஸ்து சொல்லுகிறபடியே நாங்கள் பூட்டிய அறையில் இருந்துவிட்டு பிதாவை நோக்கி ஜெபித்துக்கொள்கிறோம்!! ஆனால் ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக சந்து பொந்து, முற்சந்தி, மேடை, அலங்காரம், முழு இரவு, அமாவாசை இரவு, 3 நாட்கள் உபவாச கூட்டம் என்று கூட்டம் கூட்டமாக இருந்து "மாயக்காரர்களை" போல் இருந்துக்கொள்ளுங்கள்!!

7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

இதுவும் உங்கள் ஓநாய் கூட்டத்திற்கு தான்!! என்னத்த ஜெபிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்!!//

மிகமிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே! இதே மத்தேயு 6-ம் அதிகாரத்தில்தான் கிறிஸ்து பல லா பாயிண்ட்-களைச் சொல்லியுள்ளார். அவற்றில் சில:

மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இந்த லா பாயிண்ட் கிறிஸ்துவின் ஈடுபலியோடு உடைந்து விட்டது என்றும், கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பிறகு (பிறரது தப்பிதங்களை மன்னிப்பவன்/மன்னியாதவன் என்ற வித்தியாசமின்றி) எல்லோருக்கும் சரட்டுமேனிக்கு மன்னிப்பு உண்டு என்றும் ஒரு பதிவில் கூறினீர்கள். அப்படியானால் மத்தேயு 6:5-7-ல் கூறப்பட்டுள்ள லா பாயிண்ட்-களும் கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பின் உடைந்துவிட்டனதானே? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சகோதரரே!

மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! 24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

ஆனால் “கிருபையா கிரியையா” எனும் திரியில் கிறிஸ்துவின் லா பாயிண்ட் எல்லாம் யூதர்களுக்கு மட்டுமே எனக் கூறினீர்கள். அவ்வாறெனில் மத்தேயு 6:19-24-ல் கூறப்பட்டுள்ள லா பாயிண்ட்-களும் யூதர்களுக்குத் தானே? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சகோதரரே!



-- Edited by anbu57 on Wednesday 24th of August 2011 05:33:40 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


////உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.//

இப்படி நீங்கள் எழுதிவிட்டு ஏன் தேவையில்லாமல் என்னமோ நான் தான் உங்களை தனிப்பட்ட விமர்சனம் செய்கிறேன் என்கிறீகள்!!//

எனது பதிவை முழுமையாக எடுத்துப்போடாமல் “அரைகுறையாகப்” போட்டால் இம்மாதிரி அனர்த்தங்கள்தான் வரும். எனது முழுமையான பதிவைப் பாருங்கள்.

//1 யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா? உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.//

கிறிஸ்துவை அறிந்தவரான நீங்கள், கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லையெனில், 1 யோவான் 2:4-ன்படி, உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது என எழுதியுள்ளேன். இக்கூற்று உங்களுக்கு, எனக்கு மற்றும் அனைவருக்கும் பொருந்துகிற ஒரு கூற்றாகும். இது ஒரு தனிப்பட்ட விமர்சனம் அல்ல.

நீங்கள் கிறிஸ்துவை அறிந்துள்ளீர்களா? ஆமாம். ஆனால் கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லையா? ஆமாம் எனில், நிச்சயமாக நீங்கள் ஒரு பொய்யர்தான். இப்படியாக நான் சொல்லவில்லை; யோவான் சொல்கிறார்.

நீங்கள் கிறிஸ்துவை அறிந்துள்ளேன் என்றும் சொல்லி, அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலும் இருந்தால்தான் நீங்கள் பொய்யர்.

ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை அறியவில்லை என்றாலோ, அல்லது கிறிஸ்துவை அறிந்து அவரது கற்பனைகளைக் கைக்கொள்பவராக இருந்தாலோ நீங்கள் பொய்யர் அல்ல.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
Permalink  
 


பெரியன்ஸ்:

//மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதினால் என்ன இப்போ!! அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா!! என்னிடத்தில் இதில் ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்கிறார் அப்போஸ்தலரான யோவான்!! என்னிடத்தில் இதில் இருந்து நிச்சயமாக ஒரு சில கிரியைகள் இருக்கும், ஆனால் அந்த கிரியைகளுக்கு மேலாக தான் தேவ கிருபை இருப்பதினால் தான் தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது!!//

அதாவது பெரியன்ஸ் இவ்வாறு கூறுகிறார்:

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இக்கிரியைகளில் சில நிச்சயமாக என்னிடத்தில் இருக்கும்; ஆனாலும், அந்த கிரியைகளுக்கு மேலாக தேவகிருபை இருப்பதால், தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது.

ஆனால் பவுலோ இவ்வாறு சொல்கிறார்:

கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நாம் பெரியன்ஸ் சொல்வதை நம்புவதா? பவுல் சொல்வதை நம்புவதா?

பெரியன்ஸ் சொல்வதையும் அலட்சியமாக விட்டுவிட முடியாது. ஏனெனில் உண்மையைக் கண்டறியும் நோக்கத்தில் “Truth Seekers" எனும் தளத்தை சில ஆண்டுகளாக நடத்துகிற அவர், நல்லதொரு வேதஆராய்ச்சியாளர் என பலராலும் நம்பப்படுகிறார்.

அதே சமயத்தில் பவுல் சொல்வதையும் அலட்சியமாக விட்டுவிட முடியாது. அவர் பரலோக இரகசியங்களில் பலவற்றை அறிந்தவர், இயேசுவை நேரடியாகப் பார்த்தவர், அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டவர்.

எனக்கென்னமோ பவுல் சொல்வதுதான் சரியாக இருக்கும்போலுள்ளது; மற்றபடி அவரவர் இஷ்டம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard