பவுல் இவ்வசனங்களில் கூறியுள்ள அநீதிகள் யாவும் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டவைகளே!
கலாத்தியர் 2:21-ல் நியாயப்பிரமாணத்தால் நீதி வராது எனச் சொன்ன அவர், கலாத்தியர் 5:19-21-ல் நியாயப்பிரமாணம் கூறுகிற அநீதிகளை செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்கிறார்.
அப்படியானால் இந்த அநீதிக்காரர்களுக்கு கிறிஸ்துவினால் நீதி வராதா? இவர்களுக்கு கிறிஸ்து மரித்தது வீணாகிப் போகுமா?
ஒரு வசனத்தில் நியாயப்பிரமாணத்தால் நீதி வராது எனச் சொன்ன அவர், மற்றொரு வசனத்தில் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில்தான் நாம் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்போம் எனச் சொல்லக் காரணம் என்ன?
இக்கேள்விகளுக்கு பதிலறிய, கலாத்தியர் நிருபத்தின் முதல் 2 அதிகாரங்களை கவனமாகப் படித்து, அவற்றின் சாராம்சங்களை அறிவது அவசியமாயுள்ளது.
முதாவது அதிகாரத்தின் சாராம்சம்:
கலாத்திய நாட்டு சபையார், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்டிவிட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பினார்கள் (வசனம் 6). அவர்கள் திரும்பின அந்த சுவிசேஷம் எதுவென முதலாம் அதிகாரத்தில் கூறப்படவில்லை.
2-வது அதிகாரத்தின் சாராம்சம்:
இவ்வதிகாரத்தில் பவுல் ஒரு முக்கியமான தகவலை 3-ம் வசனத்தில் கூறுகிறார்.
3 ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
இத்தகவலிலிருந்து நாம் அறிவதென்ன? விருத்தசேதனம் பண்ணக் கட்டாயப்படுத்துவதென்பது கலாத்திய சபையில் ஒரு பிரச்சனையாக இருந்தது என்பதே. இக்கருத்துக்கு பின்வரும் வசனங்களும் ஆதாரமாயுள்ளன.
11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். 14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
நியாயப்பிரமாணத்திலுள்ள விருத்தசேதனம் போன்ற யூத முறைமைகள் கட்டாயப்படுத்தப்பட்டதென இவ்வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம். நியாயப்பிரமாணத்தின் இந்த முறைமைகளைத்தான் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் என அடுத்த வசனத்தில் பவுல் கூறுகிறார்.
இப்போது 11-15 வசனங்களை ஒருங்கிணைத்துப் படித்துப்பார்த்தால், நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் எனப் பவுல் கூறுவது விருத்தசேதனம் போன்ற யூத முறைமைகளைத்தான் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
விருத்தசேதனம் தவிர யூதர்களின் மற்ற முறைமைகள் என்னென்ன? பாவநிவாரண பலி (யாத். 29:36) மற்றும் பாவநிவாரண காணிக்கைகளே(யாத். 30:15; லேவி. 5:11)!
அந்நாட்களில் பாவநிவாரண பலி பாவநிவாரண காணிக்கை போன்ற நியமனங்களை இஸ்ரவேலரிடம் தேவன் கூறியிருந்ததால், பாவத்திற்கு நிவாரணமாக பலியையும் காணிக்கையையும் செலுத்தினால் தங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தாங்கள் நீதிமான்களாக்கப்படுவோம் எனும் நம்பிக்கை இஸ்ரவேலரிடம் இருந்தது.
விருத்தசேதனம் என்பது ஒருவன் பரிசுத்த ஜாதியில் சேர்க்கப்படுவதற்கான அடையாளமாக இருந்தது. ஆக, விருத்தசேதனம், பலி, காணிக்கை ஆகியவைதான் தங்களை நீதிமான்களாக்குகின்றன எனும் நம்பிக்கை இஸ்ரவேலரின் மனதில் ஆழமாக ஊறிப்போயிருந்தது. குறிப்பாக விருத்தசேதனமில்லாதவர்களை பரிசுத்தமற்றவர்களாகக் கருதி அவர்களோடு பழகுவதையே தவிர்க்குமளவு, விருத்தசேதனத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இந்த முறைமைகளெல்லாம் வெறும் நிழலான சடங்குகளே என்பதை அவர்கள் அறியவில்லை. மாத்திரமல்ல, கிறிஸ்துவானவர் வந்து அச்சடங்குகளை ஒழியப்பண்ணின பின்னருங்கூட, அந்த முறைமைகளைத்தான் அவர்கள் நம்பி வந்தனர். அத்தோடு நிற்கவில்லை, கிறிஸ்துவின் சபையில் சேரும்படி வந்த புறஜாதியினரையும் அம்முறைமைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவர்களின் கட்டாயத்திற்கு இணங்காமலும் விருத்தசேதனம் பெறாமலுமிருந்தவர்களோடு அவர்கள் ஐக்கியம் வைக்க மறுத்தனர்.
இந்த மாயத்தில் பேதுருவுங்கூட இழுப்புண்டு போனதைத்தான் 13-ம் வசனத்தில் பவுல் கூறுகிறார்.
மொத்தத்தில், கிறிஸ்துவின் பலியாலும் இரத்தத்தாலும்தான் தங்களது கடந்தகால பாவங்கள் நீக்கப்பட்டு தாங்கள் நீதிமானாக்கப்படுகிறோம் எனப் பவுல் கூறிய சுவிசேஷத்தை கலாத்தியர்கள் புறக்கணித்துவிட்டு, யூதர்களின் நியாயப்பிரமாண முறைமைகளால்தான் தாங்கள் நீதிமான்களாக்கப்படுவதாக நம்பினார்கள்.
இப்படியாக பவுல் சொன்ன கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புறக்கணித்துவிட்டு, யூதர்களின் முறைமைகள் எனும் வேறொரு சுவிசேஷத்திற்கு கலாத்தியர்கள் திரும்பினார்கள் (வசனம் 1:6). அந்த வேறொரு சுவிசேஷத்தினால், நிச்சயம் நீதி வராது; அப்படி வருவதாக இருந்தால், கிறிஸ்து மரிக்கவேண்டிய அவசியம் இல்லையே எனும் உண்மையைத்தான் கலாத்தியர் 2:21-ல் பவுல் கூறுகிறார்.
இவ்வசனத்தில் நியாயப்பிரமாணம் எனப் பவுல் சொல்வது, விருத்தசேதனம், பலி, காணிக்கை போன்ற முறைமைகளைத்தானேயன்றி, நியாயப்பிரமாணத்திலுள்ள நீதியின் கிரியைகளையல்ல. இப்புரிந்துகொள்தல் இல்லாததால்தான், நியாயப்பிரமாணம் முழுவதும் இனி தேவையில்லை என நாம் கருதுகிறோம்.
மாத்திரமல்ல, நியாயப்பிரமாணம் சொல்லும் நீதி/அநீதிகளைகலாத்தியர் 5:19-21 போன்ற பல வசனங்களில் அப்போஸ்தலர்கள சொல்லும்போது, “ஒரு புறம் நியாயப்பிரமாணம் வேண்டாம் எனச் சொல்கிற நிருப வசனங்கள், மறுபுறம் நியாயப்பிரமாண நீதிகளை போதிக்கின்றனவே” என நினைத்து நாம் குழம்பிப்போகிறோம்.
நியாயப்பிரமாண நீதியினால் நாம் நீதிமானாக்கப்படுவதில்லை எனும் கூற்றில், பவுல் சொல்கிற நியாயப்பிரமாணம் என்பது, விருத்தசேதனம் போன்ற சடங்கு முறைமைகளையே என்பதற்கு கலாத்தியர் நிருபத்தின் பின்வரும் வசனங்களும் ஆதாரமாயுள்ளன.
கலாத்தியர் 5: 2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். 5 நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். 6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 4-ம் அதிகாரத்திலும் நியாயப்பிரமாணம் எனப் பவுல் சொல்வதெல்லாம் “விருத்தசேதனம்” போன்ற சடங்குகளே. எனவேதான் ஒருபுறம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் நாம் நீதிமான்களாக்கப்படுவதில்லை எனக் கூறிய அவர், கலாத்தியர் 5:19-21 வசனங்களில் நியாயப்பிரமாணம் கூறுகிற சில அநீகளைச் சொல்லி, அவற்றைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இக்கிரியைகளில் சில நிச்சயமாக என்னிடத்தில் இருக்கும்; ஆனாலும், அந்த கிரியைகளுக்கு மேலாக தேவகிருபை இருப்பதால், தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது.//
இதை நான் எழுதவில்லை!! நீங்கள் தான் எழுதுகிறீர்கள்!! இதற்கு மேலே தான் எழுதியது!! உங்களின் கருத்தை அடுத்தவர் மேல் தினிக்க நினைக்காதீர்கள்!!//
எனது கருத்தை உங்கள் மீது திணிக்கவில்லை. நீங்கள் எழுதியதைத்தான் எல்லோரும் புரிந்துகொள்ளத்தக்கதாக சற்று modify செய்து கூறியுள்ளேன். இதோ உங்கள் பதிவு:
//மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதினால் என்ன இப்போ!! அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா!! என்னிடத்தில் இதில் ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்கிறார் அப்போஸ்தலரான யோவான்!! என்னிடத்தில் இதில் இருந்து நிச்சயமாக ஒரு சில கிரியைகள் இருக்கும், ஆனால் அந்த கிரியைகளுக்கு மேலாக தான் தேவ கிருபை இருப்பதினால் தான் தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது!!//
இதை சற்று modify செய்து இப்படியாகவும் எழுதலாமல்லவா?
//மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதனால் என்ன இப்போ? அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? என்னிடத்தில் இவற்றில் (இந்த மாம்சத்தின் கிரியைகளில்) ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யன் என்றும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்றும் சொல்கிறார் அப்போஸ்தலரான யோவான் (ஆதாரம்: 1 யோவான் 1:8,10)!! என்னிடத்திலும் இவற்றில் இருந்து (இந்த மாம்சத்தின் கிரியைகளிலிருந்து) நிச்சயமாக ஒரு சில கிரியைகள் இருக்கும், ஆனால் அந்த (மாம்சத்தின்) கிரியைகளுக்கு மேலாக தேவகிருபை இருப்பதினால்தான் தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது!!//
இப்படி நான் modify செய்ததால் நீங்கள் எழுதினதன் கருத்தில் மாற்றம் எதுவும் நேரவில்லைதானே? இனி, உங்களது இக்கருத்தின் அடிப்படையில் நான் எழுதியதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
//மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இக்கிரியைகளில் சில நிச்சயமாக என்னிடத்தில் இருக்கும்; ஆனாலும், அந்த கிரியைகளுக்கு மேலாக தேவகிருபை இருப்பதால், தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது.//
உங்கள் கருத்தைத்தான் அப்படியே எழுதியுள்ளேன். தவறிருந்தால் சொல்லவும். மன்னிப்பு கேட்டு, எனது பதிவுகளை நீக்கி விடுகிறேன்.
//நீங்கள் கிரியை உள்ள வசனங்களாக தேடிக்கொண்டிருக்கிறீர்கள்!!//
ஆம், நிச்சயமாக. பிதாவின் சித்தப்படி செய்பவனே பரலோகராஜ்யம் பிரவேசிப்பான் என இயேசு சொன்னதை அறிந்த நான், பிதாவின் சித்தம் என்ன என்பதைத் தேடி அதை என் கிரியையில் நிறைவேற்றும்படி கிரியை உள்ள வசனங்களைத்தானே நான் தேடவேண்டும்?
மாறாக, இயேசுவை நோக்கிகர்த்தாவே கர்த்தாவே என்று சொன்னாலோ, அல்லது இயேசுவை ஆராதிக்கிறேன் ஆராதிக்கிறேன் எனச் சொல்லி ஆராதித்தாலோ, அல்லது இயேசுவின் கிருபை தேவனின் கிருபை என்று சொல்லி கிருபையையே சொல்லிக் கொண்டிருந்தாலோ பரலோக ராஜ்யம் பிரவேசிக்க முடியுமா?
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
//மேலே சொல்லப்பட்ட மாம்சத்தின் கிரியைகள் பாவம் என்று அறிந்திருக்கிறேன்!! இந்த பாவங்களை செய்பவர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லையென்றும் அறிந்திருக்கிறேன்!! அதாங்க பரலோகம் போவதில்லை என்று!!
அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று தான் பவுல் சொல்லுகிறாரே தவிர, அவர்களுக்கு நித்தியஜீவன் கிடையாது என்று சொல்லவில்லையே!!//
இப்பொழுதுதான் எனது கேள்விக்கு நேரடியாக பதில் தந்துள்ளீர்கள். இப்படியாக நேரடியாக பதிலைத் தந்தால், விவாதிக்க மிகவும் தோதாக இருக்கும். மாறாக, “நீ அப்படிச் செய்கிறாய், நான் இப்படிச் செய்கிறேன், நீ அப்படி மேன்மை பாராட்டுகிறாய், நான் இப்படி மேன்மை பாராட்டுகிறேன், நீ சுயநீதிக்காரன், நான் தேவநீதிக்காரன்” எனச் சொன்னால் எப்படி விவாதிக்க முடியும்?
சரி, விவாதத்திற்கு வருவோம்.
கலாத்தியர் 5:19-21-ல் பவுல் சொன்ன “தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்தல்” என்பது, “நித்திய ஜீவனைப் பெறுதல்” அல்ல, “பரலோகம் செல்தல்” என்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது சரியென்றால், கலாத்தியர் 5:19-21-ல் “இந்த அநீதிக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை” எனப் பவுல் சொல்வதற்கும் கலாத்தியர் 2:21-ன்படி கிறிஸ்துவின் இரத்தம் வீணாவதற்கும் சம்பந்தம் இல்லைதான். எனவே அவற்றை ஒருங்கிணைத்து கேள்விகள் எழ வாய்ப்பில்லைதான்.
ஆனால் நீங்கள் சொல்வது சரியா, தவறா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இக்கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்குமுன், உங்களது தனிப்பட்ட ஓர் அறிக்கையிலுள்ள ஒரு முரண்பாட்டை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
பெரியன்ஸ்-ன் பதிவு 1:
//மாம்சத்தின் கிரியைகள் என்கிற ஒரு பெரிய லிஸ்டை தந்திருக்கிறீர்கள், அப்போஸ்தலர் எழுதியதை!! சரி, அதினால் என்ன இப்போ!! அந்த லிஸ்ட்டில் இருப்பது ஒன்றும் உங்களிடத்தில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா!! என்னிடத்தில் இதில் ஒன்றும் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும், சத்தியம் அவனிடத்தில் இருக்காது என்கிறார் அப்போஸ்தலரான யோவான்!! என்னிடத்தில் இதில் இருந்து நிச்சயமாக ஒரு சில கிரியைகள் இருக்கும், ஆனால் அந்த கிரியைகளுக்கு மேலாக தான் தேவ கிருபை இருப்பதினால் தான் தேவனின் ராஜியத்தின் நிச்சயம் எனக்கு இருக்கிறது!!//
தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கும் நிச்சயம் உங்களுக்கு இருப்பதாக இப்பதிவில் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் இவ்விதமாகவும் பதிவைத் தந்துள்ளீர்கள்.
பெரியன்ஸ்-ன் பதிவு 2:
//மேலே சொல்லப்பட்ட மாம்சத்தின் கிரியைகள் பாவம் என்று அறிந்திருக்கிறேன்!! இந்த பாவங்களை செய்பவர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லையென்றும் அறிந்திருக்கிறேன்!! அதாங்க பரலோகம் போவதில்லை என்று!!//
அதாவது தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதும் பரலோகம் செல்வதும் ஒன்றுதான் என்கிறீர்கள். எனவே “தேவனுடைய ராஜ்யத்தின் நிச்சயம்” இருக்கிற உங்களுக்கு “பரலோகம் செல்லும் நிச்சயம்” இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சரிதானே?
ஆனால் பதிவு 1-ல் மாம்சத்தின் கிரியைகளில் சில (அதாவது பாவம்) உங்களிடம் உண்டு எனக் கூறியுள்ளீர்கள். அதேவேளையில் தேவகிருபையால் “உங்களுக்கு தேவனின் ராஜ்யத்தின் நிச்சயம் உண்டு” என்றும் பதிவு 1-ல் கூறியுள்ளீர்கள்.
இது ஒருபுறமிருக்க, பாவம் செய்பவர்கள் பரலோகம் போவதில்லை என பதிவு 2-ல் கூறியுள்ளீர்கள். அப்படியானால் (பதிவு 1-ன்படி) பாவம் செய்பவரான நீங்கள் எப்படி “தேவனுடைய ராஜ்யத்தின் நிச்சயம் (அதாவது பரலோகம் போகிற நிச்சயம்) உங்களுக்கு உண்டு” எனக் கூறமுடியும்?
////சும்மா கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நிசான் மாதம் இந்த நாளில் இந்த நேரத்தில்தான் ராப்போஜனம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி இராப்போஜனம் எடுப்பதாலோ (முங்கி, தெளித்து, ஓடுற நீரில், தொட்டி நீரில்) ஞானஸ்நானம் எடுப்பதாலோ பயனில்லை. கிறிஸ்து நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும், ஆம், கிரியை வேண்டும்.//
கிறிஸ்து சொன்னதையும் அவரின் அப்போஸ்தலர்கள் சொன்னதையும் தான் செய்கிறோம்!! ஆனால் நியாயப்பிரமாணம் தான் முக்கியம் என்று நீங்கள் இருந்தால் இருந்துகொள்ளுங்கள்!! எது எங்களுக்கு பயனுள்ளது, எது பயனில்லாதது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்!! என்னமோ நீங்கள் விமர்சனமே செய்யாதது போல் என்னை கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துகிறீகள்!!//
எனது பதிவில் எந்தப்பகுதி உங்களை அசிங்கப்படுத்துகிறது என எனக்குத் தெரியவில்லை. மேலே நீங்கள் காட்டியுள்ள எனது பதிவின் முழுப்பகுதி:
//1 யோவான் 2:3 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா? உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.
சும்மா கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நிசான் மாதம் இந்த நாளில் இந்த நேரத்தில்தான் ராப்போஜனம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி இராப்போஜனம் எடுப்பதாலோ (முங்கி, தெளித்து, ஓடுற நீரில், தொட்டி நீரில்) ஞானஸ்நானம் எடுப்பதாலோ பயனில்லை. கிறிஸ்து நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும், ஆம், கிரியை வேண்டும்.//
தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்ற வசனத்தைச் சொல்லி, கிரியை இல்லாவிட்டாலும் நித்திய ஜீவன் உண்டு எனக் கூறினீர்கள். உங்களது அப்பதிவுக்குப் பதிலாகத்தான், “தேவனை அறிதல் என்றால் என்ன, கிறிஸ்துவை அறிதல் என்றால் என்ன?” என்பதை பல வசனபகுதிகள் மூலம் எடுத்துக் காட்டினேன். அவற்றில் ஒன்றுதான் 1 யோவான் 2:3-6 வசனபகுதி. அப்பகுதி கூறுகிற உண்மைகள்:
கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டால்தான் “கிறிஸ்துவை அறிந்துள்ளோம்” என்பது மெய்யாகும். அதாவது “கிறிஸ்துவை அறிந்துள்ளேன்” எனக் கூறுபவன் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், அவனது கூற்று பொய்யாகிவிடும்.
ஆம், கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்தல் என்ற “கிரியை” இல்லாவிடில், நாம் அவரை அறிந்துள்ளதாகக் கூறுவதும் அவரில் நிலைத்திருப்பதாகக் கூறுவதும் வெறும் பொய்யும் ஏமாற்றும்தான்.
இவ்வுண்மையின் அடிப்படையில்தான், “கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமலும் கிறிஸ்து நடந்தபடியே நடக்காமலும் இருந்துகொண்டு, நிசான் மாதம் இந்த நாளில், இந்த நேரத்தில் ராப்போஜனம் எடுக்கவேண்டும் என்று சொல்லி ராப்போஜனம் எடுப்பதாலும் பயனில்லை, இப்படித்தான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி ஞானஸ்நானம் எடுப்பதாலும் பயனில்லை” எனக் கூறினேன். இதற்கும் உங்களை அசிங்கப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
ஞானஸ்நானத்தையும் ராப்போஜனத்தையும் கைக்கொள்கிற நீங்கள், “கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டு வந்தால், கிறிஸ்துவை நீங்கள் அறிந்துள்ளதாகக் கூறுவது மெய்யாகும். மாறாக, கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் கிறிஸ்துவை அறிந்துள்ளதாக நீங்கள் கூறுவது பொய்யாகிவிடும்” என்றேன்.
“ஞானஸ்நானம் ராப்போஜனம்” மட்டும் எடுத்துகொண்டு, கிறிஸ்துவின் கற்பனைகளை நீங்கள் கைக்கொள்ளாதிருந்தால், கிறிஸ்துவை அறிந்துள்ளதாக நீங்கள் கூறுவது பொய்யாகிவிடும். இப்படி நீங்கள் பொய்யராவது நிச்சயம் உங்களுக்கு அசிங்கம்தான். ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.
கிறிஸ்து நடந்தபடியே நடவாமல், கிறிஸ்துவின் நிலைத்திருக்கிறேன் என நீங்கள் சொன்னால், அப்போதும் நீங்கள் பொய்யராவீர்கள். இதுவும் உங்களுக்கு அசிங்கம்தான். ஆனால் இதற்கும் நான் பொறுப்பல்ல.
கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறுபவனிடம், அவரது கற்பனைகளைக் கைக்கொள்கிறதான கிரியையும் வேண்டும் என்பதை தகுந்த வசன ஆதாரத்தோடு நான் கூறியுள்ளேன். இதற்கான உங்கள் பதில் என்ன? அதை முதலில் சொல்லுங்கள்.
//கிரியை தேவையில்லை என்று எங்கு எழுதியிருக்கிறேன்!! கிரியை எதற்கு உதவாது என்று தான் எழுதியிருக்கிறேன்!!//
பெரியன்ஸ்-ன் இவ்வரியிலுள்ள எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற் குறியீட்டுப் பிழை நீக்கப்பட்ட பின் இவ்வரி:
//கிரியை தேவையில்லை என்று எங்கு எழுதியிருக்கிறேன்? கிரியை எதற்கும் உதவாது என்று தான் எழுதியிருக்கிறேன்!!//
“கிரியை தேவையில்லை” எனும் சொற்றொடருக்கும் “கிரியை எதற்கும் உதவாது” என்ற சொற்றொடருக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை யாராவது பெரியன்ஸ்-க்கு விளக்க முடிந்தால் விளக்கும்படி வேண்டுகிறேன்.
அதை அவர் விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி; அவர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த “கிரியை எதற்கும் உதவாது” எனும் உண்மை(?) இயேசுவுக்கும் தெரியவில்லை, பவுலுக்கும் தெரியவில்லை.
பெரியன்ஸ் அவர்கள் அரும்பாடுபட்டு கண்டுபிடித்த “கிரியை எதற்கும் உதவாது” எனும் உண்மை(?) இயேசுவுக்கும் பவுலுக்கும் தெரியவில்லை என்பதற்கு ஆதாரமான சில வசனங்கள்:
மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
அதாவது, பரலோகத்திலிருக்கிற பிதாவை மனுஷர்கள் மகிமைப்படுத்துவதற்கு “நம் நற்கிரியைகள் உதவுகின்றன” என இயேசு சொல்கிறார். இதை நான் சொன்னதும், “இயேசுவின் இப்போதனை நியாயப்பிரமாண போதனையாகும்; இதை யூதர்களுக்குத்தான் இயேசு சொன்னார்” எனச் சொல்லிப்பார்ப்பார் பெரியன்ஸ். அதற்கு நான் ஒரு பதிலைக் கொடுத்துவிட்டால், “உங்கள் நற்கிரியைகளைக் கண்டு எத்தனை பேர் பிதாவை மகிமைப்படுத்தினார்கள்?” என என்னிடம் கேள்வியைத் திருப்புவார்.
ஆனால் அவர் இப்படி கேட்பதால், இவருக்கு நான் ஏன் கணக்கு கொடுக்க வேண்டும்? இவர் என்ன நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ளவரா? நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ளவரான இயேசுவுக்கு நான் கணக்கு கொடுத்துக் கொள்வேன்.
அநேகமாக நியாயத்தீர்ப்பு நாளில் பெரியன்ஸ் இயேசுவிடம் பெரும் வாக்குவாதம் செய்து சண்டை போடுவார் என நினைக்கிறேன். “என்ன ஆண்டவரே! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் கிருபைதான் பெரிது, மனுஷரின் கிரியை எதற்கும் உதவாது எனும் உண்மையைக் கண்டுபிடித்து அன்பு57-உடன் பெரும்போராட்டம் போராடி எழுதி வந்தேன், இப்பொழுது கிரியையை பெரிதுபடுத்தி கிரியைக்குத்தக்க பலனைக் கொடுக்கிறீர்களே! உங்கள் கிருபைக்காக வக்கலாத்து வாங்கி போராடின என்னை நீங்கள் இப்படி Insult செய்யலாமா? இது உமக்கு நியாயமா?” என்றெல்லாம் கேட்பார் என நினைக்கிறேன்.
அதற்கு இயேசு என்ன பதில் சொல்வார் என்பதை நியாயத்தீர்ப்பு நாளில் பார்த்துக்கொள்வோம்.
சத்தியத்தின்படி செய்பவன்தான் ஒளியினிடத்தில் வருவானாம். “சத்தியத்தின்படி செய்தல்” எனும் கிரியை ஒளியினிடத்தில் வருவதற்கு உதவும் என்பதை இப்போதாவது பெரியன்ஸ் ஏற்றுக் கொள்வாரா?
கிரியைகளுக்கு தேவன் அளிக்கிற பலன் என்ன? அடுத்த வசனங்களில் பவுல் கூறுகிறார்.
ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நம் நற்கிரியைகள் உதவுமா இல்லையா என்பதை தள அன்பர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.
1 தீமோத்தேயு 6:17 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
கிரியையினால் வரக்கூடிய பலன்கள் பற்றி இயேசுவும் பவுலும் சொன்ன சில வசனங்களை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.
நம் கிரியைகளுக்குப் பலன் உண்டு என இயேசுவும் பவுலும் சொல்வதை நாம் நம்புவதா, அல்லது “கிரியை எதற்கும் உதவாது” என பெரியன்ஸ் சொல்வதை நம்புவதா என்பதை தள அன்பர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.
//கிரியையினால் நித்திய ஜீவன் என்று வசனத்தை காட்டினீர்கள்!!
ஆனால் தேவனையும், அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று மற்றோரு வசனமும் சொல்லுகிறதே!!//
பெரியன்ஸ் சொல்கிற இவ்வசனம் யோவான் 17:3 ஆகும். தேவனை/இயேசுவை அறிதல் என்றால் வெறுமனே அவர்கள் யார் என அறிதல் மட்டுமல்ல, நாம் என்னசெய்ய வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிதலுமாகும் என்பதை விளக்கும்படி பின்வருமாறு நான் கூறியிருந்தேன்.
************************************
ஆமாமய்யா, தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதுதான் நித்திய ஜீவன் என வசனம் சொல்வதை மறுக்க முடியுமா? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே!
1 யோவான் 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
பாவம் செய்கிறவன் கிறிஸ்துவை அறியவில்லையாம். சும்மா கிறிஸ்துவை அறிந்துவிட்டேன் எனச் சொல்லிவிட்டு கிரியை இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு போகவேண்டாம். பாவம் செய்யாமலிருந்தால்தான் (அதாவது கிரியை இருந்தால்தான்) கிறிஸ்துவை அறிதல் என்பது முழுமை பெறும்.
1 யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா? உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.
சும்மா கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, நிசான் மாதம் இந்த நாளில் இந்த நேரத்தில்தான் ராப்போஜனம் எடுக்கவேண்டும் எனச் சொல்லி இராப்போஜனம் எடுப்பதாலோ (முங்கி, தெளித்து, ஓடுற நீரில், தொட்டி நீரில்) ஞானஸ்நானம் எடுப்பதாலோ பயனில்லை. கிறிஸ்து நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும், ஆம், கிரியை வேண்டும்.
தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
அய்யா, தேவனை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என அறிக்கை பண்ணுகிறீர்களா? அப்படி அறிக்கை செய்தால் அதை கிரியையில் நீங்கள் நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபிக்காவிட்டால் தேவனை நீங்கள் மறுதலிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
1 யோவான் 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
அய்யா, அன்பு எனும் கிரியை இல்லாவிட்டால் நீங்கள் தேவனை அறியவில்லை என அர்த்தமாம். இப்படி நான் சொல்லவில்லை, அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்.
எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
இஸ்ரவேலர்கள் யெகோவா தேவனை ஆராதித்தவர்கள்தான். ஆனாலும் அவர்கள் தேவனை அறியவில்லையாம். ஏன்? அவர்களிடம் நன்மைசெய்தல் எனும் நற்கிரியை இல்லை; மாறாக தீமைசெய்தல் எனும் துர்கிரியைதான் இருந்தது.
எரேமியா 22:15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எது அய்யா தேவனை அறிகிற அறிவு? நீதி நியாயம் செய்தல், சிறுமையும் எளிமையுமானவனின் நியாயத்தை விசாரித்தல் எனும் கிரியைகளைச் செய்வதுதான் தேவனை அறியும் அறிவு.
ஏசாயா 1:3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
இஸ்ரவேலருக்கு யார் தேவன் என்பது தெரியாதா? யெகோவா தேவனை அவர்கள் அறியாதவர்களா? நன்றாக அறிந்தவர்கள்தான். ஆனாலும் அவர்கள் தம்மை அறியவில்லை என தேவன் வருத்தப்படுகிறார். காரணமென்ன? 11-15 வசனங்களைப் படியுங்கள்.
அவர்கள் திரளான பலிகளைச் செலுத்தினார்கள் (இந்நாட்களில் நீங்கள் வருஷம் தவறாமல் திருவிருந்து அனுசரிப்பதுபோல), தேவசந்நிதியில் பவ்யமாக நடந்தார்கள் (இந்நாட்களில் ஆலயத்தில் ரொம்ப பவ்யமாக நாம் நடப்பதுபோல), காணிக்கைகளைப் போட்டார்கள் (நம்மைப் போலத்தான்), தூபங்காட்டினார்கள் (ஆம், தேவனையோ இயேசுவையோ நாம் ஆராதிப்பதைப்போலத்தான்), ஓய்வுநாளை ஆசரித்தார்கள் (நாம் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பதுபோலத்தான்), மாதப்பிறப்பை ஆசரித்தனர் (நாம் மாதந்தோறும் உபவாச நாள், இரவு விழிப்பு ஜெபம் ஆசரிப்பது போலத்தான்), பண்டிகை ஆசரித்தனர் (நம்மைப் போலத்தான்), கைகளை விரித்து மிகுதியாய் ஜெபம் பண்ணினார்கள் (இதுவுங்கூட நம்மைப் போலத்தான்); ஆனாலும் அவர்கள் மாட்டை விடவும் கழுதையை விடவும் மட்டமாக தங்கள் எஜமானனாகிய தேவனை அறியாதிருந்தார்கள் (அட, இதுவுங்கூட நம்மைப் போலத்தான்). தேவன் அவர்களை ஏன் அப்படிச் சொன்னார்?
அவர்களிடம் நற்கிரியை இல்லை; துர்கிரியைதான் இருந்தது. நன்மை செய்யவில்லை, நியாயத்தைத் தேடவில்லை, ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கவில்லை, etc etc. (வசனங்கள் 16,17)
ஆமய்யா. கிரியை இருந்தால்தான் நாம் தேவனை அறிந்தவர்கள்; கிரியை இல்லையெனில் நாம் சடங்கச்சார அளவில் மட்டுமே தேவனை அறிந்தவர்கள்.
மேலே கூறப்பட்டுள்ள வசனங்களின்படி நாம் தேவனையும் இயேசுவையும் அறிந்தால் நிச்சயமாக நமக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவான் 17:3-ன்படி). நீங்கள் எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் கிரியை அவசியம் என்றுதான் முடிக்க வேண்டியதிருக்கும்.
************************************
மெய்யாகவே தேவனை/இயேசுவை அறிதல் என்றால் என்ன என்பதை இவ்வளவாய் வசனங்களைக் கொண்டு நான் விளக்கின பின்னரும் சகோ.பெரியன்ஸ் அவர்கள் இப்படியாகப் பதித்துள்ளார்.
//தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று வசனம் தானே சொல்லுகிறது!! இதில் என்ன கிரியை இருக்கிறது!!//
இவரது இவ்வரியில் சற்று பிழை உள்ளது; அப்பிழையைத் திருத்தி அவரது வரியைப் படிப்போம்.
//தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்றுதானே வசனம் சொல்லுகிறது? இதில் என்ன கிரியை இருக்கிறது?//
இவரது இவ்வரியைப் படித்தபின் இவருக்கு ஒரு விஷயத்தைப் புரியவைக்கமுடியும் எனும் நம்பிக்கையை நான் முழுமையாக இழந்துவிட்டேன்.
அடுத்து, யார் யாருக்கு நித்தியஜீவன் என்பது பற்றிய சில வசனங்களைத் தந்து, அவற்றிற்கும் கிரியைக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல விளக்கமும் தந்துள்ளார்.
//யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; பிதாவை பிதா என்று விசுவாசிக்கிறவர்களுக்கும் நித்திய ஜீவன் உண்டு!!
யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து கிறிஸ்து யார் என்று அறிந்துகொள்பவர்களுக்கும் நித்தியஜீவன்!!
யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மெய்யாகவே மெய்யாகவே என்று உறுதியாக சொல்லுகிறார் கிறிஸ்து!! அதாவது கிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கும் நித்தியஜீவன்!!
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாததினால், மாம்சத்தையும் இரத்தத்தையும் வேறு அர்த்தம் கொண்டு எழுதுகிறீர்கள்!! நாங்கள் பின்பற்றுகிறோம்!! இதை என் நினைவாக செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர் மாத்திரம் அல்ல, தன் அப்போஸ்தலர்கள் மூலமாகவும் அவர் இதை சொல்லியிருக்கிறார்!! ஆனால் நித்திய ஜீவன் உண்டு!!
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். ஒன்றான மெய்தேவனை மற்றும் அவரின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை அறிவதே நித்தியஜீவன்!!
I யோவான் 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். விசுவாசத்தினால் நித்தியஜீவன்!!//
கிரியையில்லாத விசுவாசம் செத்தது எனும் அடிப்படை உண்மைகூட தெரியாமல் எழுதுகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக highlight-ஆக ஒரு வசனத்திற்கு இவர் தந்துள்ள விளக்கத்தை சற்று படிப்போம்.
//விசுவாசத்தினால் நித்தியஜீவன்!!
இந்த விசுவாசம் நம் கிரியை அல்ல, இது தேவன் நடப்பிக்கும் தேவனின் கிரியை என்கிறது வசனம்!!
யோவான் 6:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
பலர் ஏதோ விசுவாசம் கொள்வது தேவனுக்கு பிடித்த, தேவன் விரும்புகிற (தேவனுக்கேற்ற) கிரியை என்று இதை விளக்குவார்கள்!! ஆனால் வசனம் அப்படி இல்லை!!
ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பது தேவனின் கிரியையாயிருக்கிறது என்பதை தான் வசனம் சொல்லுகிறது!!
John 6:29 Jesus answered, “The work of God is this: to believe in the one he has sent.”
John 6:29 Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.
இந்த வசனம்:
இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனின் செயலாக (கிரியையாக) இருக்கிறது என்றார்!!
இது தான் சரியான மொழிப்பெயர்ப்பாகும்!! //
யோவான் 6:29-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்துப்போட்டு, மனுஷன் செய்யவேண்டிய கிரியையை, தேவனின் கிரியையாகக் காட்டியுள்ளார். அவரது இம்முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பு, அதே NIV-ல்:
John 6:28 Then they asked him, "What must we do to do the works God requires?"
யோவான் 6:28-ல் “the works God requires” என மொழிபெயர்க்கப்பட்ட அதே கிரேக்க வார்த்தைகளான “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் வார்த்தைகள்தான், 6:29-ல் “The work of God” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அதாவது “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் கிரேக்க வார்த்தைகள் 28-ம் வசனத்தில் “the works God requires” என்றும், 29-ம் வசனத்தில் ”The work of God” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்விரு மொழிபெயர்ப்புகளில் “context”-க்கு பொருத்தமானதாக எது இருக்கும் எனப் பார்த்தால், “the works God requires” என்பதுதான் பொருத்தமானதாக இருக்குமென அறியலாம்.
மனிதனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் எனச் சொல்வதில்தான் அர்த்தம் இருக்குமேயொழிய, தேவனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் என்பதில் என்ன அர்த்தம் இருக்கும்?
தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் வசனவிளக்கம் தர முயலுகிறார் என்பதற்கு, அவரது இவ்விளக்கம் ஆதாரமாயுள்ளது.
// கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமலிருக்கிறீர்களா? உங்களைப் போன்ற பொய்யன் வேறு யாரும் கிடையாது.//
திரு.அன்பு அவர்களே,
தாங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக சொல்லப்படுவதற்கான காரணம் மேற்கண்ட வரிகளில் "உங்களைப் போன்ற பொய்யன்" என்பது தானே; அதனை நீங்கள் இவ்வாறு எழுதுவீர்களானால் உங்கள் வாதம் தெளிந்த நீரோடையைப் போலத் தொடருமல்லவா?
// கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இருந்தால் என்னைப் போன்ற பொய்யன் வேறு யாரும் இருக்கமுடியாது..// என்று எழுதினால் என்ன..?
ஆலோசனைக்கு நன்றி சகோ.ஆர்யதாசன் அவர்களே! நீங்கள் சொல்லும் விதம் ஒரு விதத்தில் better தான். எனினும் எனது நோக்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதல்ல. யோவான் சொல்கிற உண்மையை, நேரடியாக பெரியன்ஸ்-க்கு convey பண்ணி, அவரை உணர்வுபெறச் செய்யவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.
இவ்வளவாய் எழுதியுங்கூட அவர் அதைப் புரிந்துகொள்ளாமல், தேவனை/இயேசுவை அறிவதற்கும் அவர்களின் கற்பனைகளைக் கைக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை என்பது போலத்தான் எழுதியுள்ளார்.
//தேவனையும் கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்றுதானே வசனம் சொல்லுகிறது? இதில் என்ன கிரியை இருக்கிறது?//
இனி அவரோடு விவாதம் வேண்டாம் என அவரே சொல்லிவிட்டார்.
//நாங்கள் செய்யும் கிரியை என்னவென்றும் சத்தியத்திற்காக நாங்கள் செய்வது என்னவென்றும் தேவனுக்கு தெரியும்!! தேவனின் கிருபை செய்ய முடியாததை அன்பு57ன் கிரியை செய்து முடிக்கும் என்கிற மமதையில் இருக்கும் உங்களுடன் இனியும் இந்த விஷயங்களை குறித்து விவாதிக்க நான் தயாராக இல்லை!! தேவன் தாமே அந்த கிருபையின் மேன்மையை நீங்கள் புரிந்துகொள்ளும்படி செய்யட்டும்!!//
எனவே அவரிடம் நேரடியாக நான் விவாதம் செய்யப்போவதில்லை. ஆகிலும் வேதவசனங்களுக்கு எதிரான அவரது கருத்துக்களை தொடர்ந்து எடுத்துரைக்கவே செய்வேன், அவருக்காக அல்ல, இணைய தளங்களைப் பார்வையிடுகிறவர்களுக்காக.
anbu57 wrote:...அவரிடம் நேரடியாக நான் விவாதம் செய்யப்போவதில்லை. ஆகிலும் வேதவசனங்களுக்கு எதிரான அவரது கருத்துக்களை தொடர்ந்து எடுத்துரைக்கவே செய்வேன், அவருக்காக அல்ல, இணைய தளங்களைப் பார்வையிடுகிறவர்களுக்காக.
உங்கள் முயற்சிகளுக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்; வாழ்த்துக்கள்..!
யோவான் 6:29 மொழிபெயர்ப்பு விவகாரத்தில் நான் ஏதோ தகாதவிதமாய் சகோ.பெரியன்ஸ்-ஐ கண்டித்ததாக என்மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் நான் பதில் சொல்லியேயாக வேண்டுமென நிர்ப்பந்திக்கவும் செய்கிறார். எனவே இவ்விவகாரத்தில் அவர் கேட்டுக்கொண்டபடியே எனது பதிலைத் தருகிறேன்.
இவ்விவகாரத்தில் பெரியன்ஸ் மற்றும் எனது பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்தால்தான் தள அன்பர்கள் அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இருவரின் பதிவுகளையும் இங்கு தருகிறேன்.
I யோவான் 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். விசுவாசத்தினால் நித்தியஜீவன்!!
இந்த விசுவாசம் நம் கிரியை அல்ல, இது தேவன் நடப்பிக்கும் தேவனின் கிரியை என்கிறது வசனம்!!
யோவான் 6:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
பலர் ஏதோ விசுவாசம் கொள்வது தேவனுக்கு பிடித்த, தேவன் விரும்புகிற (தேவனுக்கேற்ற) கிரியை என்று இதை விளக்குவார்கள்!! ஆனால் வசனம் அப்படி இல்லை!!
ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பது தேவனின் கிரியையாயிருக்கிறது என்பதை தான் வசனம் சொல்லுகிறது!!
John 6:29 Jesus answered, “The work of God is this: to believe in the one he has sent.”
John 6:29 Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.
இந்த வசனம்:
இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனின் செயலாக (கிரியையாக) இருக்கிறது என்றார்!!
யோவான் 6:29-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்துப்போட்டு, மனுஷன் செய்யவேண்டிய கிரியையை, தேவனின் கிரியையாகக் காட்டியுள்ளார். அவரது இம்முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பு, அதே NIV-ல்:
John 6:28 Then they asked him, "What must we do to do the works God requires?"
யோவான் 6:28-ல் “the works God requires” என மொழிபெயர்க்கப்பட்ட அதே கிரேக்க வார்த்தைகளான “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் வார்த்தைகள்தான், 6:29-ல் “The work of God” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அதாவது “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் கிரேக்க வார்த்தைகள் 28-ம் வசனத்தில் “the works God requires” என்றும், 29-ம் வசனத்தில் ”The work of God” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்விரு மொழிபெயர்ப்புகளில் “context”-க்கு பொருத்தமானதாக எது இருக்கும் எனப் பார்த்தால், “the works God requires” என்பதுதான் பொருத்தமானதாக இருக்குமென அறியலாம்.
மனிதனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் எனச் சொல்வதில்தான் அர்த்தம் இருக்குமேயொழிய, தேவனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் என்பதில் என்ன அர்த்தம் இருக்கும்?
தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் வசனவிளக்கம் தர முயலுகிறார் என்பதற்கு, அவரது இவ்விளக்கம் ஆதாரமாயுள்ளது.
Does any one ELSE other than Br Anbu57 finds a "REQUIRES" here? or "the work God REQUIRES"!! But still he finds that REQUIRES is very well in context!! And inspite of his error, he is eager to make CAUTION me stating,
//ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்கது.//
நான் எந்த மொழிபெயர்ப்பையும் மறைக்கவில்லை, இது உங்களின் தேவை இல்லாதOut of contextகுற்றசாட்டு!! இந்த பதிவை காலையில் எனக்கு கொடுக்க நேரம் இல்லாததால் இப்பொழுது தருகிறேன், இதற்கு அவசியம் பதில் எழுதுங்கள்!!
REQUIRES என்கிற ஒரு பதமே இல்லை!! ஆனால் அன்புக்கு அது சரி என்று படுவதற்காக இல்லாததை இருக்கு என்று சொல்ல முடியுமா!! முடியாதே!! @@@ என்கிற வார்த்தை இல்லை என்றால் இல்லை தான்!! அன்பு கொடுக்கும் கிரியையின் போதனைக்கு அது ஒத்து போவதால், 29ம் வசனத்தில் இல்லாவிட்டாலும் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டுமாம்!! ஏன்!!??
ho(3588) Original Word: ὁ, ἡ, τό Part of Speech: Definite Article Transliteration: ho, hé, to Phonetic Spelling: (ho) Short Definition: the Definition: the, the definite article.
ergon(2041) Original Word: ἔργον, ου, τό Part of Speech: Noun, Neuter Transliteration: ergon Phonetic Spelling: (er'-gon) Short Definition: work, labor, action, deed Definition: work, task, employment; a deed, action; that which is wrought or made, a work.
ho(3588) Original Word: ὁ, ἡ, τό Part of Speech: Definite Article Transliteration: ho, hé, to Phonetic Spelling: (ho) Short Definition: the Definition: the, the definite article.
theos(2316) Original Word: θεός, οῦ, ὁ Part of Speech: Noun, Feminine; Noun, Masculine Transliteration: theos Phonetic Spelling: (theh'-os) Short Definition: God, a god Definition: (a) God, (b) a god, generally.
எனும் கிரேக்க வார்த்தைகள் 28-ம் வசனத்தில் “the works God requires” என்று அல்ல, மாறாக "the works the (of) God" என்றே உள்ளது!! NIVயில் REQUIRES என்று மொழிப்பெயர்த்ததை தன் வசதிக்காக சேர்த்துக்கொண்டு 29ம் வசனமும் அதையே தான் சொல்லுகிறது என்கிற ஒரு முடிவிற்கு வந்திருக்கிறார்!! இதுவே வசனத்தை புரட்டுவதாகும்!! அதாவது இல்லாத REQUIRES என்கிற வார்த்தையை வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டு அதை பல வர்ணங்களில் எழுதிவிட்டு, திசை திருப்புகிறார் அன்பு!! இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!! கிரேக்க மொழியிலிருந்து எழுதுகிறீர்கள் என்றால், உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்!! உங்கள் வசதிக்காக எதையும் திரிக்க வேண்டாம், சகோ அன்பு அவர்களே!!
இவராகாவே இல்லாத ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டு தவறான ஒரு தகவலை வெளியிட்டு, இது தான் பொருத்தமானதாக இருக்கும் என்கிற முடிவிர்கு வேறு வந்திருக்கிறார்!! இதை வேத புரட்டல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது!!
அதாவது தேவனின் கிரியைகளை செய்ய நாம் என்ன கிரியைகள் செய்ய வேண்டும் என்றே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்!! இதோ சில மிகவும் நெருக்கமான, சரியான மொழிப்பெயர்ப்புகள்:
John 6:28 Darby Translation (DARBY) 28They said therefore to him, What should we do that we may work the works of God?
John 6:28 Wycliffe Bible (WYC) 28 Therefore they said to him, What shall we do, that we work the works of God?
தேவனின் கிரியைகளை செய்ய நாம் என்ன கிரியை செய்ய வேண்டும்? என்று தங்களின் கிரியைகள் மேல் நோக்கமாக இருந்த ஜனங்களிடம் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்,
John 6:29 KJV Jesus answered and said unto them This is the work of God that ye believe on him whom he hath sent
John 6:29 Darby Translation (DARBY) 29Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.
John 6:29 Wycliffe Bible (WYC) 29 Jesus answered, and said to them, This is the work of God, that ye believe to him, whom he sent.
அதாவது, பிதா அனுப்பியவரை விசுவசிக்க செய்ய வைப்பதே தேவனின் செயலாக இருக்கிறது!!
யோவான் 6:28, 29, இரு வசனங்களிலும், தேவனுக்கு ஏற்ற செயல் என்கிற பதமே கிடையாது, மாறாக தேவனின் செயல் (கிரியை) என்றே இருக்கிறது!!
29ம் வசனத்தில் மனிதனின் செயலை குறித்தே வசனம் சொல்லவில்லை!! மாறாக மனிதனுக்கு விசுவாசத்தை கொடுப்பது, தேவனின் செயலே (கிரியை) என்று தான் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!!
அன்பு அவர்கள் தங்களின் கருத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் வசனவிளக்கம் தர முயலுகிறார் என்பதற்கு, அவரது இவ்விளக்கம் ஆதாரமாயுள்ளது!! அன்பு அவர்களுக்கு தேவனின் கிரியையை விட தன் கிரியை மீது அதிக நம்பிக்கை இருப்பதற்கு அவர் தந்திருக்கும் விளக்கம் இது!! REQUIRES என்கிற ஒரு வார்த்தையே கிடையாது!!! ஆனால் Contextபடி அது தான் பொருந்துதாம், ஆகவே அது தான் சரியாம்!! இத்தனைக்கும் கிரேக்க வார்த்தைகள் (Transliterated) மற்றும் அதன் Strong's எண்களை கொடுத்தவர், அதோடு அர்த்தத்தையும் (நான் கொடுத்தது போல்) கொடுத்திருந்தால், அவரது அறைகுறை பதிவை அவரே நீக்கியிருப்பார்!! ஏனென்றால் வசனத்துடன் சேர்த்து ஒரு வார்த்தையை கொடுத்து தனது போதனைக்கு ஏற்ப வசனத்தை லாவகமாக மாற்றியமைத்து அதர்கு பல வர்ணங்களில் பதில் பதிந்து, என்னை கண்டித்தும் இருக்கிறார்!! இது ஒன்றும் ஆரோக்கியமான விவாதம் இல்லை சகோ அன்பு அவர்களே!! நீங்கள் வார்த்தையை சேர்த்துக்கொண்டு என்னை எந்த சட்டத்தில் கண்டிக்கிறீர்கள்!! நீங்கள் இதற்கு அவசியம் பதில் பதிவு செய்ய வேண்டும்!!
யோவான் 6:29-ன் 2 ஆங்கில மொழிபெயர்ப்புகளை பெரியன்ஸ் அவர்கள் முதலாவதாக தந்திருந்தார். அவை:
John 6:29 Jesus answered, “The work of God is this: to believe in the one he has sent.” (1)
John 6:29 Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent. (2)
இவை எந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் என பெரியன்ஸ் குறிப்பிடவில்லை. ஆயினும் நான் பல sources மூலம் பார்த்ததில், அவர் தந்துள்ள முதல் மொழிபெயர்ப்பு New International Version (NIV) என்றும், 2-வது மொழிபெயர்ப்பு New American Standard Bible என்றும் அறிந்தேன்.
இந்த 2 ஆங்கில மொழிபெயர்ப்புகளில், 28-ம் வசனம் இவ்விதமாகக் காணப்படுகிறது.
John 6:28 Then they asked him, "What must we do to do the works God requires?" NIV
John 6:28 Therefore they said to Him, "What shall we do, so that we may work the works of God?" NASB
இவற்றில் NIV மொழிபெயர்ப்பில் “the works God requires” எனும் சொற்றொடர் காணப்படுவதை நாம் தெளிவாகக் காணலாம். இன்னும் நேரடியாகக் காண விரும்புபவர்கள் பின்வரும் தொடுப்புக்குச் சென்று பார்க்கலாம்.
பெரியன்ஸ் அவர்கள் 29-ம் வசனத்திற்குத் தந்திருந்த 2 மொழிபெயர்ப்புகளில் ஒன்று, NIV மொழிபெயர்ப்புதான் என்ற எண்ணத்தில்தான், 28-ம் வசனத்திற்கான NIV மொழிபெயர்ப்பை நான் எடுத்துக் காட்டினேன். அதில் “the works God requires” என்ற சொற்றொடர் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், “the works God requires” எனும் சொற்றொடர் ஏதோ எனது சொந்த மொழிபெயர்ப்பு என்பதுபோல் பெரியன்ஸ் குற்றஞ்சாட்டுகிறார்.
இப்போது பெரியன்ஸ்-க்கு சாதகமாக ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது என்னவெனில்: 29-ம் வசனத்திற்கு அவர் தந்துள்ள முதலாம் மொழிபெயர்ப்பு, NIV மொழிபெயர்ப்பாக இராமல், வேறொரு மொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும். இதை பெரியன்ஸ் ஒத்துக்கொண்டு, அந்த வேறொரு மொழிபெயர்ப்பு எதுவென்று கூறினால், அவரை நான் கண்டித்தது நிச்சயமாக தவறுதான். அதற்காக நான் பெரியன்ஸ்-இடம் மிகுந்த மனவருத்தத்தோடு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், அவர் தந்துள்ள முதல் மொழிபெயர்ப்பு NIV மொழிபெயர்ப்புதான் எனில், நிச்சயமாக அவர் கண்டனத்திற்குரியவர்தான். ஏனெனில் 29-ம் வசனத்தை NIV மொழிபெயர்ப்பில் பார்த்த அவர், 28-ம் வசனத்தையும் NIV மொழிபெயர்ப்பில் கட்டாயமாகப் பார்த்திருக்க வேண்டும்; அதில் “the works God requires” எனும் சொற்றொடர் இருப்பதையும் பார்த்திருக்க வேண்டும். அதைப் பார்த்த அவர், அச்சொற்றொடர் அடங்கிய 28-ம் வசனத்தை விட்டுவிட்டு, 29-ம் வசனத்தை மட்டும் போட்டது நிச்சயம் கண்டனத்திற்குரிய தவறுதான்.
பெரியன்ஸ்-ன் பதிலுக்குப் பின் இவ்விவகாரம் இன்னும் அலசப்படும்.
பெரியன்ஸ்-க்கு ஒரு வேண்டுகோள்:
தமிழ் வேதாகமத்தில் யோவான் 6:26-40 வசனங்களை எடுத்து, அவற்றில் ஏதேனும் மொழிபெயர்ப்பு திருத்தம் இருந்தால் அத்திருத்தத்தைச் செய்து, அத்திருத்தத்தோடு யோவான் 6:26-40 வசனங்களை இங்கு பதிக்குமாறு வேண்டுகிறேன்.
//NIVயில் REQUIRES என்று மொழிப்பெயர்த்ததை தன் வசதிக்காக சேர்த்துக்கொண்டு 29ம் வசனமும் அதையே தான் சொல்லுகிறது என்கிற ஒரு முடிவிற்கு வந்திருக்கிறார்!!//
NIV-ல் REQUIRES என மொழிபெயர்த்துள்ளதாக பெரியன்ஸ் ஒத்துக்கொண்டுள்ளார். பின்னர் எப்படி REQUIRES எனும் அவ்வார்த்தையை என் வசதிக்காக நான் சேர்த்துக்கொண்டுள்ளதாக என்மீது அவர் குற்றஞ்சாட்டுகிறார்? 29-ம் வசனத்திற்கு அவர் எந்த மொழிபெயர்ப்பை எடுத்துப் போட்டுள்ளாரோ (NIV மொழிபெயர்ப்பு)அதே NIV மொழிபெயர்ப்பில் 28-ம் வசனத்தை மொழிபெயர்த்துள்ளதைத்தானே நான் எடுத்துப்போட்டுள்ளேன்?
29-ம் வசனத்திற்கு NIV மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டவர், 28-ம் வசனத்திற்கு அதே NIV மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்? 28-ம் வசனத்திற்கான NIV மொழிபெயர்ப்பை நான் எடுத்துக்காட்டினால், அதிலுள்ள “REQUIRES” எனும் வார்த்தையை என் வசதிக்காக நான் சேர்த்துக்கொண்டுள்ளதாக எப்படி குற்றஞ்சாட்டுகிறார்?
அடுத்தடுத்துள்ள 2 வசனங்களில் (28,29), 29-ம் வசனத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டால், 28-ம் வசனத்திற்கும் அதே மொழிபெயர்ப்பை ஏற்கத்தானே வேண்டும்? ஒருவேளை 2 வசனங்களின் மொழிபெயர்ப்பை இணைத்துப் பார்க்கையில் அவற்றினிடையே anomaly இருப்பதாகத் தெரிந்தால், அதைக் குறித்த விளக்கத்தை அவர் கூறியிருக்க வேண்டுமே! இதை அவர் செய்யாததால்தான் 28-ம் வசனத்தின் NIV மொழிபெயர்ப்பை அவர் மறைத்தது கண்டிக்கத்தக்கது என நான் கூறினேன்.
28, 29 வசனங்களில் ஒரே set of Greek words (அதாவது “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் வார்த்தைகள் காணப்படுகின்றன. அவை 28-ம் வசனத்தில் “the works God requires” என்றும் 29-ம் வசனத்தில் ”The work of God” என்றும் NIV மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 29-ம் வசனத்திற்கான NIV மொழிபெயர்ப்பைக் காட்டி தனது வாதத்தை வைத்த பெரியன்ஸ், 28-ம் வசனத்திற்கும் அதே NIV மொழிபெயர்ப்பை காட்டி, அவற்றின் கருத்திலுள்ள anomaly-யை முதலில் நீக்கியிருக்க வேண்டும். இதை அவர் செய்யாததால்தான் அவரது செயல் கண்டிக்கத்தக்கது என நான் கூறினேன்.
இனி, 28,29-ம் வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் set of Greek words-ல் சர்ச்சைக்கு இடமான “ho(3588)” எனும் வார்த்தைக்கு, அகராதியில் என்ன அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
இவ்வார்த்தைக்கு அகராதி மூலம் பெரியன்ஸ் தந்துள்ள அர்த்தம்:
ho(3588) Original Word: ὁ, ἡ, τό Part of Speech: Definite Article Transliteration: ho, hé, to Phonetic Spelling: (ho) Short Definition: the Definition: the, the definite article.
இதே வார்த்தைக்கு Strong's Dictionary-ல் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்:
ho (ho); including the feminine he (hay); and the neuter to (to); in all their inflections; the def. article; the (sometimes to be supplied, at others omitted, in English idiom):
KJV - the, this, that, one, he, she, it, etc..
இந்த 2 அகராதியிலும் of எனும் ஆங்கில வார்த்தை காணப்படவில்லை. ஆனால் 29-ம் வசனத்தைப் பொறுத்தவரை NIV-யிலும் சரி, மற்ற பல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் சரி, of எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகராதியில் இல்லாத ஒரு வார்த்தையை எப்படி பல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கான விளக்கத்தைத் தரும்படி சகோ.பெரியன்ஸ்-இடம் வேண்டுகிறேன்.
இனி, 29-ம் வசனத்திற்கான சகோ.பெரியன்ஸ்-ன் தமிழ் மொழிபெயர்ப்பையும் அவரது விளக்கங்களையும் பார்ப்போம்.
//இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனின் செயலாக (கிரியையாக) இருக்கிறது என்றார்!!
இது தான் சரியான மொழிப்பெயர்ப்பாகும்!!//
//ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பது தேவனின் கிரியையாயிருக்கிறது என்பதை தான் வசனம் சொல்லுகிறது!!//
//பிதா அனுப்பியவரை விசுவாசிக்கச் செய்ய வைப்பதே தேவனின் செயலாக இருக்கிறது!!//
யோவான் 6:26-29 வசனங்களில், 29-ம் வசனத்திற்கு மட்டும் “பெரியன்ஸ்-ன் தமிழ் மொழிபெயர்ப்பை” போட்டு மற்ற வசனங்களுக்கு நம் தமிழ் வேதாகம வசனங்களைப் போட்டு, அப்பகுதியைப் படிப்போம்.
யோவான் 6:26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனின் கிரியையாயிருக்கிறது என்றார். (இது பெரியன்ஸ்-ன் மொழிபெயர்ப்பு; “தேவனுக்கேற்ற” என்பதுதான் நம் தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு)
இவ்வசனங்களின் கருத்தில் “ஒருங்கிணைப்பு” என்பது, 29-ம் வசனத்தில் நம் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பை பயன்படுத்தும்போது வருகிறதா, அல்லது பெரியன்ஸ்-ன் மொழிபெயர்ப்பை பயன்படுத்தும்போது வருகிறதா என்பதைத் தீர்மானித்து தெரிவிக்கும்படி தள அன்பர்களிடம் வேண்டுகிறேன்.
எந்த ஒரு காரியத்திலுமே தெளிவான முடிவையெட்டுவதற்கு விட்டுக்கொடுத்தலும் பரந்த மனப்பான்மையும் வேண்டும்; நேர்மையான நோக்கமும் எண்ணமும் செயல்பாடும் வேண்டும்; நம்முடன் ஈடுபட்டிருப்பவரிடம் நம்பிக்கையும் வேண்டும்; "தான்" என்ற கர்வம் இருக்கவே கூடாது..!
திரு.அன்பு அவர்களிடம் நல்ல நோக்கங்கள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது;வாழ்த்துக்கள்.
//உங்கள் விளக்கமும் தப்பு, உங்கள் சோர்சஸ்@@ம் தப்பு!! அவைகளில் முதல் மொழிபெயர்ப்பு NIV தான், ஆனால் இரண்டாம் மொழிபெயர்ப்பு DARBY Translation!! இதை என் பதில் பதிவில் எழுதியிருக்கிறேன்!!//
முதல் மொழிபெயர்ப்பு NIV தான் என ஒத்துக்கொண்டீர்கள்; அது போதும். 2-வது மொழிபெயர்ப்பு எதுவாக இருந்தாலும் அது இப்போது பிரச்சனையில்லை. ஏனெனில் அதன் அடிப்படையில் உங்கள் மீது நான் கண்டனம் தெரிவிக்கவில்லை. முதல் மொழிபெயர்ப்பான NIV மொழிபெயர்ப்பின் அடிப்படையில்தான் என் கண்டனத்தைத் தெரிவித்தேன்.
அடுத்தடுத்த 2 வசனங்களில் ஒரு வசனத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உங்கள் விவாதத்தை வைக்கும்போது, அடுத்த வசனத்திற்கும் அதே மொழிபெயர்ப்பைப் பார்த்து 2 வசனங்களும் கருத்தொருமித்துள்ளதா என்பதை verify செய்து வாதம் செய்வதுதான் நியாயமானது. குறிப்பாக அவ்விரு வசனங்களிலும் ஒரே "set of Greek words" ஒரு வசனத்தில் ஒரு விதமாகவும் மற்றொரு வசனத்தில் வேறு விதமாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அவ்வுண்மையை வெளியரங்கமாகத் தெரிவித்து அந்த anomaly-க்கான உங்கள் விளக்கத்தையும் தெரிவித்து உங்கள் வாதத்தை வைப்பதுதான் நியாயம்; அதை நீங்கள் செய்யவில்லை. எனவே உங்கள் மீதான எனது கண்டனம் நியாயமானதே.
//எந்த ஒரு மொழிப்பெயர்ப்பும் பூரணமானது என்பதை நான் நம்புவதில்லை!! நீங்கள் கிரேக்க Tools வைத்திருப்பதினால் அதிலிருந்து வார்த்தையின் அர்த்தங்களை பார்த்து NIV மொழிப்பெயர்ப்பு முழுவதும் சரி தான் என்று ஆதாரம் காட்டி விட்டு, அதன் பின் என்னை கண்டித்து எழுதலாம்!! கிரேக்க வார்த்தைகளின் அர்த்தங்களை எழுதியாச்சு, அது NIVயில் இல்லாதது என் தவறு கிடையாது!! என்னமோ நான் 28ம் வசனத்தை மறைத்து அதை வேதத்திலிருந்து எடுத்துப்போட்டு வெறும் 29ம் வசனத்தை மத்திரம் காட்டி ஏமாற்றுவதான குற்றச்சாட்டு தவறானது தான்!!//
NIV-ன் தவறுக்கு உங்களைப் பொறுப்பாக்கவில்லை. முந்தின வசனத்தில் NIV-ன் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கையில், அத்தவறை எடுத்துக்கூறாமல், அடுத்த வசனத்துக்கு NIV மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி உங்கள் வாதத்தை வைப்பது சரியல்ல என்பதுதான் எனது குற்றச்சாட்டு.
28-ம் வசனத்துக்கும் 29-ம் வசனத்துக்கும் நேரடியான நெருங்கின தொடர்பு உள்ளது என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். 28-ம் வசனத்தில் “நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்பதுதான் ஜனங்களின் கேள்வி. இக்கேள்விக்குப் பதில் சொன்ன இயேசு, “ஜனங்கள் என்னசெய்யவேண்டும்” என்பதைத் தான் தமது பதிலில் கூறியிருப்பார்.
மேலும், 28-ம் வசனத்திலும் 29-ம் வசனத்திலும் ஒரே “set of Greek words”-ஐப் பயன்படுத்தித்தான் கேள்வியும் கேட்கப்படுகிறது; பதிலும் சொல்லப்படுகிறது. எனவே எந்த பதிலை எதிர்பார்த்து கேள்விகேட்கப்பட்டதோ, அதே பதிலைத்தான் இயேசுவும் சொல்லியிருப்பார். அதாவது “ஜனங்கள் என்ன செய்யவேண்டும்” எனும் கேள்வி கேட்கப்படுகையில், “ஜனங்கள் என்னசெய்யவேண்டும்” என்பதைத்தான் இயேசு தமது பதிலில் சொல்லியிருப்பாரேயொழிய “தேவன் என்ன செய்கிறார்” என்பதைச் சொல்லியிருக்கமாட்டார்.
யோவான் 6:27-29 வசனங்களில் காணப்படும் உரையாடலுக்கு இணையான ஒரு கற்பனை உரையாடலைச் சொல்கிறேன்; சற்று கவனியுங்கள்.
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமிடையேயான ஓர் உரையாடல்:
ஆசிரியர்:அழிந்துபோகிற பணத்துக்காகவும் வேலைக்காகவும் அல்ல; மரணம் வரை நிலைநிற்கிற அறிவைப் பெறுவதற்கே பாடம் படியுங்கள்; அந்த அறிவை நான் உங்களுக்குத் தருவேன்; அதை நம் கல்வித்துறை முத்திரித்துள்ளது.
மாணவர்கள்:கல்வித்துறைக்கு ஏற்றபடி பாடம் படிக்க நாங்கள் என்னசெய்யவேண்டும்?
என்னாலியன்றவரை யோவான் 6:27-29 வசனங்களின் கருத்தைப் புரியவைக்க முயற்சித்துள்ளேன். ஆனால் நீங்கள் வழக்கம்போல் இந்த உதாரண உரையாடலையும் பரியாசம்தான் செய்வீர்கள். அப்படியே செய்துகொள்ளுங்கள்.
//நான் மூன்று முறை உங்களிடம் சில வசனங்களை கொடுத்து இதுவும் கிறிஸ்து இயேசு செய்ய சொன்ன கிரியைகள் தான் என்று கேட்டும், அதற்கு மாத்திரம் ஏனோ பதில் இல்லை!! அது "கிரியை"கள் இல்லையா??!! அதை செய்யாமல் நீங்கள் மாத்திரம் தேவனையோ கிறிஸ்துவையோ "அறிந்து" கொண்டேன் என்று எப்படி துணிச்சலாக பொய் சொல்லுகிறீர்கள்!!
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
லூக்கா 18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
மத்தேயு 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;//
கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல், கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனக் கூறுகிற யாராயிருந்தாலும் அவன் பொய்யன்தான் (1 யோவான் 2:3,4 வசனங்களின்படி).
இவ்வுண்மைக்கு யாரும் விதிவிலக்கல்ல. நானோ நீங்களோ யாராக இருந்தாலும் கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறிக்கொண்டு, அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இருந்தால், நானாயிருந்தாலும் நீங்களாக இருந்தாலும் நாம் பொய்யர்தான்.
இப்போது உங்களது குற்றச்சாட்டு:கிறிஸ்துவின் மேற்கூறிய கற்பனைகளின்படி நான் கைக்கொள்ளவில்லை என்பதுதானே!
நல்லது; குற்றச்சாட்டைக் கூறியுள்ள நீங்கள், அதற்கான ஆதாரத்தைக் கூறவில்லையே! முதலாவது ஆதாரத்தைக் கூறுங்கள்; அதன்பின்னர் உங்கள் குற்றச்சாட்டு சரியா தவறா என்பதை நான் சொல்கிறேன்.
பின்குறிப்பு:குறிப்பிட்ட இந்த வசனங்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்பதிலிருந்து, இவ்வசனங்களின்படி நீங்கள் நடக்கவில்லை என ஒத்துக்கொள்வதுபோல் தெரிகிறது.Am I corect? If your answer is "yes", then you become a lier. OK
அதாவது நீதிமான்களுக்கும் நித்திய ஜீவன், பாவிகளுக்கும் நித்திய ஜீவன் எனும் கோவைபெரியன்ஸ் தளத்தின் சத்தியம் என் போன்றோருக்கு அதிர்ச்சியாகவும் தவிப்பாகவும் உள்ளது என்கிறார் சோல்சொல்யூஷன்.
இப்படிச் சொல்கிற அவர், வேறொரு திரியில் ஆதாம் இப்படிச் சொல்வதாகக் கற்பனையாக எழுதுகிறார்:
//கொஞ்சம் தொலைவில் வினேதமான மீசையுடன் ஒருவர் கோபமாக நின்றுகொண்டு இருந்தார். மீண்டும் அந்த 2009 போதகரிடம் "அதோ அவரைத் தெரியுமா?" என்றேன். அவரும் பார்த்துவிட்டு "அவரைப் பற்றி படித்திருக்கிறேன், அவர் பெயர் ஹிட்லர் சுமார் 60லட்சம் யூதர்களை கொன்று குவித்திருக்கிறார். அவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்ததால் கோபமாக இருக்கிறார் போலும்" என்றார்.
"அடப்பாவி, அவர் எவ்வளவு காலம் பாதாளத்தில் வேதனைப்பட்டார்" என்று கேட்டேன். போதகரும் கொஞம் யோசித்துவிட்டு "கிட்ட தட்ட 1100 வருடங்கள் இருக்கும்" என்றார். எனக்கோ பயங்கர கோபம் வந்தது, என்ன அநியாயம் இது, ஒரு பழம் சாப்பிட்டதற்கு 6000 வருட தண்டனை, 60 லட்சம்பேரைக் கொன்று குவித்தவனுக்கு வெறும் 1100 வருடங்கள்தானா?//
ஆதாமின் சார்பாக “சோல்சொல்யூஷன்” இப்படி கேள்வி கேட்கிறார். அதாவது சிறு பாவம் செய்தஆதாமுக்கு 6000 வருட தண்டனையும், மாபெரும் பாதகம் செய்தஹிட்லருக்கு 1100 வருட தண்டனையும் எப்படி நியாயமாகும் என சோல்சொல்யூஷன் கேள்வி கேட்கிறார். அவரது கேள்வி நியாயம் தான்; ஆனால் மாபெரும் பாதகனுக்கும் நித்திய ஜீவன், நீதிமானுக்கும் நித்திய ஜீவன் எனும் அவரது கருத்து மட்டும் எப்படி நியாயமாகும்?
//மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Matthew 12:32 Anyone who speaks a word against the Son of Man will be forgiven, but anyone who speaks against the Holy Spirit will not be forgiven, either in this age or in the age to come.
இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக பேசப்படும் எதைவும் மன்னிக்கப்படும் என்கிறது வசனம்!! இயேசு கிறிஸ்து தான் பிதா என்று சொல்லும் கூட்டத்தார், இயேசு கிறிஸ்து மரித்தார் ஆனால் மரிக்கவில்லை என்று சொல்லும் கூட்டத்தார், இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே, இயேசு கிறிஸ்துவே சர்வவல்லமையுள்ள தேவன், இயேசு கிறிஸ்து ஆவியில் அல்ல சரீரத்தில் தான் உயிர்த்தார் என்கிற போதனை, இயேசு கிறிஸ்துவின் பலியினால் உண்டான இரட்சிப்பை சகல உலகாத்தாரும் அனுபவிப்பார்கள் என்பதை மறுக்கும் கூட்டத்தார்!! இன்னும் நிறைய இருக்கிறது!! இப்படி எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவிற்கு விரோதமாக அவர் படைக்கப்பட்டு, அவர் மாம்சத்தில் வந்த நோக்கம், அவர் பரலோகம் சென்று தேவனின் வலது பக்கத்தில் வீற்றிருந்து, அவர் மீண்டும் ராஜாவாக வரப்போகும் அனைத்தையும் மறுதலித்து உருவான கிறிஸ்தவ கோட்பாடுகள் தான் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தைகளாகும்!! ஆனாலும் கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலின் பயனாக இந்த தூஷனங்கள் எல்லாம் மன்னிக்கப்படுமாம்!!
எது மன்னிக்கபட மாட்டாது?
சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிதாவை குறித்தான அறிவு, இவரின் நேசக்குமாரனான கிறிஸ்துவை குறித்தான ஞானம், இவர்களின் சிந்தையும் வல்லமையுமான ஆவியை குறித்தான அறிவு, இந்த தெளிவை தேவனிடத்திலிருந்து அவரின் வார்த்தைகளிலிருந்து பெற்றவர்கள், மீண்டுமாக தேவனை மறுதலித்து, கிறிஸ்துவின் நிலையை மறுதலித்து போனால் அது மன்னிக்கப்படமாட்டாதாம்!! ஏனென்றால் இந்த அறிவானது, இந்த ஞானமானது, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தான் கிடைக்கிறது!! பிதாவிடத்திலிருந்து அவரின் ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு மாத்திரமே அது மன்னிக்கப்படாது என்கிற ஒரு கண்டிஷன் இருக்கிறது!!//
பிதாவிடமிருந்து அவரது ஆவியானால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு அப்பாவம் மன்னிக்கப்படமாட்டாது என 12-05-2011-ல் பதித்த இப்பதிவின் மூலம் பெரியன்ஸ் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் இதே பெரியன்ஸ் 26-06-2011-ல் அறிந்ததும் அறியாததும் திரியில் இவ்வாறு பதித்துள்ளார்.
//சகோ அன்பு: //எவர்களுடைய தப்பிதங்களை பிதா மன்னியாதிருப்பார் என்பதைத்தான் இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இப்பொழுது உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். தப்பிதங்கள் மன்னிக்கப்படாத இவர்கள் உயிர்த்தெழுவார்களா மாட்டார்களா? உயிர்த்தெழுவார்கள் எனில் உயிர்த்தெழுதலின்போது இவர்கள்மீது அவர்களின் பாவம் இருக்கும்தானே? நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.//
இந்த வசனம் கிறிஸ்து இயேசு ஈடுபலியாக செலுத்தும் முன் உரைக்கப்பட்டது!! கிறிஸ்துவின் ஈடுபலி நம் பாவங்களை கழுவ வல்லமையுள்ளதாக இருப்பதால், பாவங்களுக்கு தனியாக நீங்கள் மன்னிப்பு கேட்டு பெற்று தான் மன்னிப்பு பெறவேன்டிய அவசியம் இல்லை!! இது கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின்!! இந்த ஒரு விஷயம் வேதத்தில் இருப்பதால், வேதத்தை வாசித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் பின்பற்ற ஏதுவாக இருக்கலாம், இதையே வேதத்தை அறியாதவர்கள் எப்படி பின்பற்றுவார்கள்!?
ஆக, என் கருத்து என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் செக் வைக்கும் அந்த வசனம், கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் சொல்லப்பட்டது, கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் பாவங்கள் மன்னிக்கப்படுகிற நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது!! ஏனென்றால் கிறிஸ்துவிற்குள் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்பதில் எந்த கண்டிஷனும் கிடையாது, அதாவது நீங்கள் தப்பிதங்களை மன்னித்தீர்களா, இல்லையா போன்ற எந்த கண்டிஷனும் இல்லை!!//
ஆனால் முதல் பதிவில் ஏதோ ஒரு விளக்கத்தைச் சொல்லி, ஒரு பிரிவினரின் குறிப்பிட்டதொரு பாவம் மன்னிக்கப்படமாட்டாது என்கிறார்; ஆனால் 2-வது பதிவில், கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் கூறப்பட்ட மத்தேயு 6:15-ன் கண்டிஷன் இல்லாமற்போய்விடும் எனச் சொல்லி, எல்லோரது பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கும் என்கிறார்.
அதாவது மத்தேயு 12:32-ன் கண்டிஷனை கிறிஸ்துவின் ஈடுபலியால் மாற்றமுடியாது என்கிறார்; அதேவேளையில் மத்தேய் 6:15-ன் கண்டிஷனை கிறிஸ்துவின் ஈடுபலி மாற்றிவிடும் என்கிறார். இந்த முரண்பாடும் குழப்பமும் ஏனோ?
//ஆக நீஙக தேவப்பட்டா பாராட்டுவீக, இல்லாவிட்டால் பைத்தியம்பீங்க... டபுள் கேம் ஆட வெக்கமாயில்லை.//
இப்படியாக என்னை வசைபாடும் சோல்சொல்யூஷன் அறிந்ததும் அறியாததும் திரியில் எனது தளத்தைக் குறித்து எழுதியது:
//மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தங்கள் தளத்துக்கு வந்தேன். நேர்த்தியாக இருந்தது. திரித்துவத்துக்கு ஜோசப்பின் கட்டுரைக்கு முழு விளக்கமளிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் நற்கிரியைக் கோட்பாடு, மீண்டும் தண்டனை போன்றவற்றில்தான் உடன்பாடில்லை. கிறிஸ்துவைத் தொழுவது சரியல்ல என்ற விஷயத்தை ஏற்றுக்கொண்டேன். உங்கள் பழைய வாதமும் ஒரு காரணம். நன்றி!//
எனது தளம் நேர்த்தியாக உள்ளது என்றெல்லாம் பாராட்டிய இவர், சமீபகாலமாக எப்படியெல்லாம் என்னை வசைபாடினார் என்பது அனைவரும் அறிந்ததே! இதனால் அவருங்கூட வெக்கமில்லாமல் டபுள் கேம் ஆடுவதாகக் கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது.
ஏனெனில், ஒருவரது ஒரு கருத்து நம் கருத்தோடு ஒத்துப்போகும்போது அவரைப் பாராட்டுவதும், மற்றொரு கருத்து ஒத்துப்போகாதிருக்கையில் அதைக் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பதும் இயல்பான நடைமுறைகள்தான்.
இம்மாதிரி நடைமுறைகள் தன்னிடத்திலும் இருக்கும் என்பதை அறியாமல், என்னைப் பார்த்து டபுள் கேம் ஆடுபவன், வெட்கமில்லாதவன் எனச் சொல்லி சோல்சொல்யூஷன் என் மீது கல்வீசினார். இப்போது அதே கல் அவருக்கெதிராகவே திரும்பிவிட்டது.
மத்தேயு 7:1 நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்;
//மூளை சற்றே வித்தியாசமாக முடிவெடுக்கும் திறனுடன் மனிதனுக்கு படைக்கப்பட்டுள்ளது.//
இது என்ன புது கருத்தாக உள்ளது?
ஆதாம் பாவம் செய்தது தேவனின் சித்தப்படித்தானேயொழிய ஆதாமின் சுயசித்தப்படி அல்ல என்கிறார்.
பார்வோனின் மனம் கடினப்பட்டதும் தேவனின் சித்தப்படித்தானேயொழிய பார்வோனின் சுயசித்தப்படி அல்ல என்கிறார்.
தாவீது உரியாவின் மனைவியிடம் விபசாரம் செய்து உரியாவைக் கொன்றதும் தேவனின் சித்தப்படித்தானேயொழிய தாவீதின் சுயசித்தப்படி அல்ல என்கிறார்.
இவ்வுலக மனிதர்கள் அனைவருமே கீழ்ப்படியாமைக்குள் கிடப்பதுவும் தேவனின் சித்தப்படித்தானேயொழிய மனிதர்களின் சுயசித்தப்படி அல்ல என்கிறார்.
மொத்தத்தில் நடப்பது எல்லாமே தேவனின் சித்தமேயொழிய மனிதனின் சித்தம் கிஞ்சித்தும் கிடையாது என்கிறார்.
அவர் சொல்கிற இவையெல்லாம் உண்மையென்றால்:
மனிதனின் மூளைக்கு முடிவெடுக்கும் திறன் ஏன் கொடுக்கப்பட்டது? அத்திறனால் அவனுக்கு என்ன பயன்? என்னதான் மனிதன் முடிவெடுத்தாலும், அம்முடிவின்படி (அதாவது தன் சுயசித்தத்தின்படி) அவனால் நடக்கமுடியாதே! தேவனை விசுவாசிப்பதாக இருந்தாலும் அதை அவனுக்குள் இருந்து தேவன் தான் செய்யமுடியுமேயொழியமனிதன் சுயமாக சிந்தித்து முடிவெடுத்து செய்ய முடியாதே! பின்னர் எதற்கு மனிதனுக்கு முடிவெடுக்கும் திறன்?