ஆம், தேவன் அன்பானவராக இருக்கிறார். சாத்தான் நம்மை வேறு விதமாக யோசிக்க வைக்கலாம், ஆனால் தேவனின் ஏற்ற காலம் வரும் போது, அவரின் நண்மையை புரிந்துக்கொள்வோம், "அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வர்" எரே. 31:34. அதற்கு பிறகு வாக்கு பண்னப்பட்ட அந்த 'விடியற்காலத்து அக்களிப்பு' உண்டாகும், "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின" வெளி. 21:4//
இப்பதிவில் எரேமியா 31:34-ஐ சுட்டிக்காட்டி, எல்லாரும்தேவனை அறிந்துகொள்வார்கள் என பெரியன்ஸ் கூறுகிறார். அவரது கூற்றில் தவறில்லைதான். ஆனால் “எல்லாரும்” என்றால் எவர்களை வேதாகமம் குறிப்பிடுகிறது என அவர் சொல்லத் தவறியதுதான் தவறு. அவர் சொல்லத் தவறிய வசனங்கள்:
எரேமியா 31:1,2 அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். 17 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
இவ்வசனங்கள் “இஸ்ரவேலரில் ஒரு பிரிவினரைக்” குறித்தே கூறுகின்றன என்பதை நாம் முதலாவாக அறியவேண்டும். எனவே 34-ம் வசனம் கூறுகிற “எல்லாரும்” என்பதில் இஸ்ரவேலரின் ஒரு பிரிவினர் மட்டுமே அடங்குவார்கள்.
அந்த ஒரு பிரிவினர் யார்? பட்டயத்திற்குத் தப்பி மீந்த ஜனம்தான் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது என வசனம் 2 கூறுகிறது. இந்த “மீந்த ஜனம்தான்” அந்த “ஒரு பிரிவினர்”. இவர்களைத்தான் “எல்லாரையும்” என வசனம் 34 கூறுகிறது.
பட்டயம் என்றால் தேவவசனம் (எபேசியர் 6:17). தேவவசனம்தான் மனிதரை நியாயந்தீர்க்கும் என இயேசு சொல்கிறார் (யோவான் 12:48). தேவவசனமாகிய பட்டயத்தால் நியாயந்தீர்க்கப்பட்டு மீந்திருக்கும் ஜனங்களைக் குறித்துதான் வசனம் 34 கூறுகிறது.
7-ம் வசனத்தில் “இஸ்ரவேலில் மீதியான ஜனங்களை இரட்சியும்” என்று சொல்லும்படி தேவன் கூறுகிறார். ஆம், “இரட்சிப்பு எல்லோருக்கும் இல்லை, மீதியான ஜனங்களுக்கு மட்டுமே” என வசனம் சொல்வது கோவை பெரியன்ஸ் நண்பர்களுக்கு உரைக்கிறதா? அவர்களுக்கு உரைக்கிரதோ இல்லையோ, அவர்களால் மறைக்கப்பட்ட வசனங்கள் கூறுகிற உண்மையை நாம் அறிந்துகொள்வோமாக.
கிரியை தேவையில்லை எனக் கூக்குரலிடும் கோவை பெரியன்ஸ் நண்பர்கள், 16-ம் வசனத்தைக் கவனிக்கவில்லையா அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டார்களா? அல்லது “உன் கிரியைக்குப் பலன் உண்டு” என தேவன் சொல்வதை ஏற்க மனமில்லையா?
அதே 16-ம் வசனம், “அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்” என்றும் கூறுகிறது. அவ்வாறெனில் சத்துருவின் தேசத்திலுள்ளவர்கள், 34-ம் வசனம் கூறுகிற “எல்லாரில்” அடங்கமாட்டார்கள் அல்லவா?
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் என 30-ம் வசனம் கூறுகிறது. இவ்வாறு செத்தபின் மீந்திருக்கும் ஜனங்களைக் குறித்துதான் 34-ம் வசனம் கூறுகிறது.
இவையெல்லாம் நடந்த பின்னர் மீந்திருக்கும் ஜனங்களில் “எல்லோரும்” தேவனை அறிந்துகொள்வார்கள் என்றே 34-ம் வசனம் கூறுகிறது. இப்போது அவ்வசன பகுதியைப் படிப்போம்.
33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
இந்த ஜனங்களிடம், அவர்களின் அக்கிரமத்தை மன்னிப்பேன் எனக் கூறும் தேவன், 30-ம் வசனத்தில் “அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்” எனக் கூறக் காரணமென்ன? மீந்திருக்கும் இந்த ஜனங்கள் “மனந்திரும்பியவர்கள்; கிரியை செய்தவர்கள் (16-ம் வசனம்), குறிப்பாக இரக்கஞ்செய்தவர்கள்”. இரக்கமுள்ள அவர்கள் தேவனிடம் இரக்கம் பெறுவதால்தான், அவர்களின் அக்கிரமத்தை தேவன் மன்னிப்பார்.
ஆனால் 30-ம் வசனத்தில் கூறப்பட்ட ஜனங்கள் “மனந்திரும்பாதவர்கள்; கிரியை இல்லாதவர்கள்”. எனவேதான் அவர்களின் அக்கிரமத்தினிமித்தம் அவர்கள் சாவார்கள் என தேவன் சொல்கிறார்.
இப்படியாக எரேமியா 31:34-க்குப் பின்னே இத்தனை விஷயங்கள் இருக்க, கோவை பெரியன்ஸ் நண்பர்கள் “ஒரு வசனத்தை” மட்டும் எடுத்துப்போட்டு அதனடிப்படையில் சொல்லும் கருத்து சரியாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது.
//இப்படி ஒவ்வொரு சபையிலும் தனக்கு இஷ்டமான ஒன்றை மாத்திரமே பிடித்துக்கொண்டு இருப்பதினால் தான்,
ஏசாயா 28:8. போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.//
அதெப்படி சகோதரரே ஒவ்வொரு சபையும் தனக்கு இஷ்டமான ஒன்றை மாத்திரம் பிடித்துக்கொண்டிருக்க முடியும்?
நடப்பதெல்லாம் தேவசித்தம் என்கிறீர்கள்; நம் இஷ்டப்படி (அல்லது சுயாதீனப்படி) நாம் எதுவும் செய்யமுடியாது என அடித்துச் சொல்கிறீர்கள். இப்படி இப்படித்தான் நாம் நடக்க வேண்டும் என்பது ஆதியிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்கிறீர்கள். அத்தீர்மானத்தின்படித்தானே நாம் நடந்துவருகிறோம்? நம் சுய இஷ்டத்தினால் அல்ல, கீழ்ப்படுத்தினவரால்தான் நாம் எல்லோரும் மாயைக்குக் கீழ்ப்பட்டிருப்பதாக ரோமர் 8:21-ன் மூலம் சோல்சொல்யூஷன் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். பாவத்தின் தொடக்கம் எனும் திரியில் அவரது பதிவை சற்று படியுங்களேன்.
//"அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே, மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த்தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. ரோமர்8:20, 21,22.
இந்த வசனம் வேதத்தில்தான் உள்ளது என்பது தெரியுமா? இந்த வசனத்தை எப்போதாவது ஆழமாக தியானித்தோமா? கிறிஸ்தவ (துர்)உபதேசத்துக்கு சரியான அடி கொடுக்க(ஆப்பு வைக்க?) இந்த வசனங்கள் போதும். ஸ்ட்ராங் கிரேக்க அகராதியில் இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அர்த்தம் காண்போம்:
இந்த வசனங்களின் ஆற்றலிலிருந்து தப்பமுடியாது. தேவனே சிருஷ்டியை (படைப்பை) மாயைக்குக் கீழ்ப்படுத்தியுள்ளார், மேலும் அப்படிச் செய்யுமுன்பு அவர் யாருடைய அனுமதியையும் கேட்கவில்லை.//
உங்கள் கருத்தும் இதுதானே? இக்கருத்துப்படி நாம் அனைவரும் மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் என்பதுதானே உண்மை? அப்படியானால் யாராவது தங்கள் இஷ்டப்படி எதையாவது செய்யமுடியுமா?
ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தாரா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய ஆதாமின் இஷ்டம் அல்ல.
காயீன் ஆபேலைக் கொன்றானா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய காயீனின் இஷ்டம் அல்ல.
நோவா கால மனிதர்கள் அனைவரும் பாவம் செய்தார்களா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய அம்மனிதர்களின் இஷ்டம் அல்ல.
சோதோம் கொமோரா பட்டணத்தார் பாவம் செய்தார்களா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய சோதோம் கொமோரா பட்டணத்தாரின் இஷ்டம் அல்ல.
இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாக அடிக்கடி கலகம் செய்தார்களா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய இஸ்ரவேலரின் இஷ்டம் அல்ல.
சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனாரா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய சவுலின் இஷ்டம் அல்ல.
தாவீது ராஜா உரியாவின் மனைவி மீது இச்சை கொண்டாரா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய தாவீதின் இஷ்டம் அல்ல.
சாலொமோன் ராஜா அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்கள் வழியில் சென்றாரா, அதுவும் தேவனின் இஷ்டம்தானேயொழிய சாலொமோனின் இஷ்டம் அல்ல.
இன்னும் மனிதர்கள் பல்வேறுவிதமான அருவருப்பான பாவங்களை செய்தார்களா/செய்கின்றனரா/செய்யப்போகிறார்களா, இவை எல்லாமே தேவனின் இஷ்டம்தானேயொழியபாவம் செய்கிற மனிதரின் இஷ்டம் அல்ல.
இப்படி தேவனின் படைப்பான பல மனிதர்கள் தேவனின் இஷ்டப்படியே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்க, ஒருசில மனிதர் மட்டும் மாயைக்குக் கீழ்ப்படாமற் போனதன் இரகசியம்தான் எனக்குப் புரியவில்லை.
நோவா காலத்தில் அத்தனை மனிதரும் மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, நோவா மட்டும் மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
சோதோம் கொமோரா பட்டணத்தார் அனைவரும் மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, லோத்தின் குடும்பம் மட்டும் மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
இஸ்ரவேலரில் பெரும்பாலானவர்கள் மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, மோசே காலேப் யோசுவா போன்ற சிலர் மட்டும் மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
சவுல் ராஜா மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, சாமுவேல் தீர்க்கதரிசி மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
தாவீது ராஜா ஒரு சந்தர்ப்பத்தில் மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
இன்றும் கூட (கோவை பெரியன்ஸ் தளத்தின் கருத்துப்படி) நித்திய ஜீவன் தளம் உட்பட பல்வேறு விவாதமேடை தளத்தினர் அனைவரும் மாயைக்குக் கீழ்ப்பட்டு தேவனின் இஷ்டப்படி நடந்திருக்க, கோவை பெரியன்ஸ் தளத்தினர் மட்டும் மாயைக்குக் கீழ்ப்படாமல் போனதன் மர்மம் என்னவோ?
தமது சிருஷ்டி (படைப்பு) அனைத்தையும் தேவன் மாயைக்குக் கீழ்ப்படுத்தியிருக்க, சிலர் மட்டும் மாயைக்குக் கீழ்ப்படியாமற் போனது ஏனோ? ஒருவேளை இந்த சிலரை சாத்தான் சிருஷ்டித்திருப்பானோ? எல்லாம் கோவை பெரியன்ஸ் சகோதரர்களுக்குத்தான் வெளிச்சம்.
எது எப்படியானாலும், (கோவை பெரியன்ஸ் தளத்தின் கருத்துப்படி) நித்திய ஜீவன் தளம் உட்பட பல்வேறு விவாதமேடை தளத்தினர் அனைவரும் மாயைக்குக் கீழ்ப்பட்டு கிடப்பதும், 2000 சபைகள் மாயைக்குக் கீழ்ப்பட்டு கிடப்பதும் தேவனின் இஷ்டம் தானேயொழிய சம்பந்தப்பட்டவர்களின் இஷ்டம் அல்ல. அப்படியிருக்க தங்களது பின்வரும் வரியை நான் ஆட்சேபிக்கிறேன்.
//இப்படி ஒவ்வொரு சபையிலும் தனக்கு இஷ்டமான ஒன்றை மாத்திரமே பிடித்துக்கொண்டு இருப்பதினால் தான்,//
இவ்வுலகில் எவருமே தங்கள் இஷ்டப்படி எதுவும் செய்யமுடியாது என்பது உங்களது அசைக்கமுடியாத நம்பிக்கை. அப்படியிருக்க “எங்களுக்கு இஷ்டமான ஒன்றை நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பதாக” எழுத எப்படி முன்வந்தீர்கள்? அப்படியே நாங்கள் பிடித்துக் கொண்டிருந்தாலும் அதுவும் “தேவனின் இஷ்டம்தானே”? எனவே யார் என்ன செய்தாலும் (உங்கள் நம்பிக்கைப்படி) அது தேவனின் இஷ்டமாகவே இருப்பதால் நீங்கள் எல்லாவற்றையும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
(உங்கள் நம்பிக்கைப்படி) தேவனின் இஷ்டப்படி வாழ்ந்துவருகிற எங்களை தேவனுக்கு எதிராக திருப்பத்தக்கதாக நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனாலும் பிரச்சனையில்லை, நீங்கள் என்னதான் எங்களை மாற்ற முயன்றாலும், நாங்கள் தேவனின் இஷ்டப்படி மாயைக்குக் கீழ்ப்பட்டுத்தான் இருப்போம்; ஏனெனில் நாங்களெல்லாம் தேவனால் படைக்கப்பட்டவர்கள்.
தேவனால் படைக்கப்படாத சிலர் வேண்டுமானால், மாயைக்குக் கீழ்ப்படாமல் தெளிவுடன் இருக்கக்கூடும். அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
ஏசாயா 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஆகவே தான் தேவன் வேதத்தில் வைத்திருக்கும் திட்டங்களும் வெளிப்பாடுகளும் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக இருக்கும்!!//
அன்பான சகோதரரே! அநேகர் உங்களைக் குறித்து சொல்கிற பிரகாரம், “வேதவசனத்தைப் புரிந்துகொள்வதில்” உங்களுக்கு சற்று பிரச்சனை இருப்பதுபோலத்தான் உள்ளது.
மேலே நீங்கள் காட்டியுள்ள வசனத்தில் “கற்பனைகளும் பிரமாணங்களும் தான்” இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும் என வசனம் சொல்கிறது. ஆனால் நீங்களோ அவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி, “தேவனின் திட்டங்களும் வெளிப்பாடுகளும்” இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும் எனச் சொல்கிறீர்கள். வசனத்தை சற்று உற்றுப் படியுங்கள். தமிழைப் புரிந்துகொள்ள உங்களுக்குப் பிரச்சனையாக இருந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள்.
Isaiah 28:13 So then, the word of the LORD to them will become: Do and do, do and do, rule on rule, rule on rule; a little here, a little there so that they will go and fall backward, be injured and snared and captured. - NIV
நாம் என்னென்ன செய்யவேண்டும் நமக்கு என்னென்ன சட்ட திட்டங்கள் என்பவைகளில் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் அங்கேயும் இருக்கும்; அவற்றை நாம் தேடிப் பார்த்து அவற்றின்படி செய்யவேண்டும்; அப்படி செய்யாவிடில் அவற்றினால் நாம் சிக்குண்டு பிடிபடுவோம், விழுந்து நொறுங்கிப் போவோம் எனும் கருத்தைத்தான் இவ்வசனம் சொல்கிறது. “கிரியையால் பயனில்லை, கிரியையால் பயனில்லை” என ஓயாமல் நீங்கள் சொல்கிறீர்களே, “அந்தக் கிரியை வேண்டும்; இங்கேயும் அங்கேயும் எழுதியுள்ளதை தேடிப்பிடித்து அவற்றின்படி செய்ய வேண்டும்; இல்லாவிடில், விழுந்து நொறுங்கிப் போவீர்கள்; சிக்குண்டு பிடிபடுவீர்கள்” என்றுதான் தேவன் இவ்வசனத்தில் சொல்கிறார்.
ஒரு வரியிலுள்ள வசனத்தின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல், தடாலடியாக உங்கள் வசதிபோல் எப்படி மாற்றிவிட்டீர்கள்? இப்படித்தான் உங்களது அநேக புரிந்துகொள்தல்கள் இருக்கின்றன.
ஏசாயா 28:13-ன் context-ஐ நன்கு படித்துப் பாருங்கள். அறிவும் உபதேசமும் இல்லாத ஜனங்களிடம் “யார் அறிவைப் போதிப்பார், யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்” என 9-ம் வசனத்தில் தேவன் கேட்பது உங்களுக்குப் புரியவில்லையா? நீங்களோ அறிவும் உபதேசமும் வேண்டாம், தேவனின் திட்டங்கள் மட்டும் தெரிந்தால் போதும் என்கிறீர்கள்.
//உங்கள் புரிந்துக்கொள்ளுதல் உங்களுடன் இருக்கட்டும்!! என்னை தேவன் தன் சித்தத்தின்படியே நடத்தட்டும், நீங்கள் உங்கள் சித்தத்தின்படி நடந்துக்கொள்ளுங்கள்!!//
அன்பான சகோதரரே! நானும் நீங்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவுகட்டுவதற்காக நாம் இங்கே விவாதிக்கவில்லை. “வேதாகம உண்மையை” அறிவதுதான் உங்கள் தளத்தின் பிரதான நோக்கம்; நித்திய ஜீவனைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதுதான் எனது பிரதான நோக்கம். இந்த நோக்கத்துடன் நாம் பதிவுகளைத் தந்து பல்வேறு வேதபகுதிகளை தியானித்து நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.
இப்போதும் ஏசாயா 28:13-ன் உண்மையான கருத்து என்ன என்பது பற்றி நாம் விவாதித்துக்கொண்டிருக்கையில், “நீங்கள் உங்கள் புரிந்துகொள்தலில் இருந்துகொள்ளுங்கள், என்னை தேவன் தமது சித்தப்படி நடத்தட்டும்” என்று சொல்லி விவாதத்தை முடிப்பது எப்படி நியாயமாகும்?
ஏசாயா 28:13-ல் ஏதேனும் ஒரு வார்த்தையாவது “தேவனின் திட்டம், அல்லது வெளிப்பாடு” பற்றி கூறுகிறதா என்பதை நன்றாகப் பாருங்கள். கற்பனையும் பிரமாணமும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் இருக்குமென்றுதானே வசனம் கூறுகிறது? அப்படியிருக்க, எந்த வார்த்தையை வைத்து தேவனின் திட்டமும் வெளிப்பாடும்இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் இருக்குமென்று சொல்கிறீர்கள்?
ஏசாயா 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
வசனத்தை நன்றாகப் படியுங்கள்; இவ்வசனத்தின் ஏதாவது ஒரு வார்த்தையாவது தேவனின் திட்டத்தையோ வெளிப்பாட்டையோ குறிப்பதாக உள்ளதா?
ஒரு விவாதமேடை தளத்தின் நிர்வாகி என்ற வகையில், வேதவசனத்தின் சரியான கருத்தை மட்டுமே தளத்தில் வெளியிடும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா? அந்த பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு செல்லலாமா? சிந்தித்து பதில் தாருங்கள்.
ஏசாயா 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஆகவே தான் தேவன் வேதத்தில் வைத்திருக்கும் திட்டங்களும் வெளிப்பாடுகளும் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக இருக்கும்!!//
இப்படி ஒரு பதிவை கோவை பெரியன்ஸ் தள நிர்வாகி பெரியன்ஸ் அவர்கள் 17-8-11-ல் நித்தியஜீவனின் கிரியையா வசன பஞ்சமா??என்ற திரியில்தந்திருந்தார். இப்பதிவில் அவர் சொல்லியுள்ள கூற்று தவறு என இத்திரியில் 18-8-11-ல் நான் விபரமாக எடுத்துரைத்திருந்தேன்.
அதாவது ஏசாயா 28:13-ல் கற்பனை மற்றும் பிரமாணங்கள் தான் “இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்” இருக்குமெனக் கூறப்பட்டுள்ளதேயொழிய, பெரியன்ஸ் சொல்வதுபோல் “தேவனின் திட்டங்கள் மற்றும் வெளிப்பாடு” பற்றி கூறப்படவில்லை எனக் கூறியிருந்தேன். அத்துடன் இவ்வசனம் “கிரியையை” வலியுறுத்துவதாக உள்ளதாகவும் தகுந்த முறையில் விளக்கியிருந்தேன். எனது பதிவின் முழு விபரம்:
//அன்பான சகோதரரே! அநேகர் உங்களைக் குறித்து சொல்கிற பிரகாரம், “வேதவசனத்தைப் புரிந்துகொள்வதில்” உங்களுக்கு சற்று பிரச்சனை இருப்பதுபோலத்தான் உள்ளது.
மேலே நீங்கள் காட்டியுள்ள வசனத்தில் “கற்பனைகளும் பிரமாணங்களும் தான்” இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும் என வசனம் சொல்கிறது. ஆனால் நீங்களோ அவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி, “தேவனின் திட்டங்களும் வெளிப்பாடுகளும்” இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும் எனச் சொல்கிறீர்கள். வசனத்தை சற்று உற்றுப் படியுங்கள். தமிழைப் புரிந்துகொள்ள உங்களுக்குப் பிரச்சனையாக இருந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள்.
Isaiah 28:13 So then, the word of the LORD to them will become: Do and do, do and do, rule on rule, rule on rule; a little here, a little there so that they will go and fall backward, be injured and snared and captured. - NIV
நாம் என்னென்ன செய்யவேண்டும் நமக்கு என்னென்ன சட்ட திட்டங்கள் என்பவைகளில் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் அங்கேயும் இருக்கும்; அவற்றை நாம் தேடிப் பார்த்து அவற்றின்படி செய்யவேண்டும்; அப்படி செய்யாவிடில் அவற்றினால் நாம் சிக்குண்டு பிடிபடுவோம், விழுந்து நொறுங்கிப் போவோம் எனும் கருத்தைத்தான் இவ்வசனம் சொல்கிறது. “கிரியையால் பயனில்லை, கிரியையால் பயனில்லை” என ஓயாமல் நீங்கள் சொல்கிறீர்களே, “அந்தக் கிரியை வேண்டும்; இங்கேயும் அங்கேயும் எழுதியுள்ளதை தேடிப்பிடித்து அவற்றின்படி செய்ய வேண்டும்; இல்லாவிடில், விழுந்து நொறுங்கிப் போவீர்கள்; சிக்குண்டு பிடிபடுவீர்கள்” என்றுதான் தேவன் இவ்வசனத்தில் சொல்கிறார்.//
பெரியன்ஸ்-ன் கருத்துக்கு எதிராக இப்பதிவில் நான் கூறியிருந்த கருத்துக்கு அவர் எந்த மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை; மாறாக, பிரச்சனையை வேறு திசைக்கு திருப்பும்வண்ணம் பின்வருமாறு கூறியிருந்தார்.
//அன்புள்ள அன்பு அவர்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு வியாதி இருக்கிறது என்று தான் எனக்கும் தோன்றுகிறது!! இப்படி சத்தமாக எழுதிவிட்டால் இவனுக்கு உண்மையில் புரிந்துக்கொள்ளுதல் இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!! உங்கள் அளவிற்கு எழுத்து திறனால், வார்த்தை ஜாலங்களினாலும், அநேகரை "கவரும்" பக்குவம் எனக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னமோ வேதத்தில் உள்ள வசனங்களை நீங்கள் மாத்திரமே புரிந்துக்கொண்டிருக்கிற மமதை வேண்டாம்!! ஏனென்றால் தங்களின் பெரும்பாளுமான பதில்கள் முதலில் என்னை மட்டம் தட்டி பிறகு "இது எனக்கு தெரிந்த கருத்து" என்று எழுதி என்னமோ தாங்கள் சொல்லும் கருத்து 100 சதவிதம் ஏற்றுக்கொண்டப்பட்ட கருத்து போல் சொல்லி வருகிறீர்கள்!! எனக்கு உண்டான தேவ வசனத்தின் புரிந்துகொள்ளுதலில் நான் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்!!
ஆகையால் விவாதம் என்றால் விவாதத்தோடு நிற்கட்டும்!! நீங்கள் இப்படி தனிப்பட்ட விமர்சனங்கள் எழுப்புவது என்னமோ நான் முற்றிலும் தவறு என்றும் "என் கருத்து" என்று நீங்கள் சொல்லுவது மாத்திரம் முற்றிலும் புரிந்துக்கொள்ளுதல் உள்ள கருத்து என்று நினைக்க வேண்டாம்!! இது போன்ற விமர்சனங்களே பிறகு தனிப்பட்ட விமரசனத்தை தூண்டுகிறது!!
Isaiah 28:13 So then, the word of the LORD to them will become: Do this, do that, a rule for this, a rule for that; a little here, a little there— so that as they go they will fall backward; they will be injured and snared and captured.
இது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்: “அந்தக் கிரியை வேண்டும்; இங்கேயும் அங்கேயும் எழுதியுள்ளதை தேடிப்பிடித்து அவற்றின்படி செய்ய வேண்டும்; இல்லாவிடில், விழுந்து நொறுங்கிப் போவீர்கள்; சிக்குண்டு பிடிபடுவீர்கள்”
நீங்கள் மெச்சி கொள்கிறீர்கள், எனக்கு வசனம் புரியவில்லை என்று!! மிக்க நன்றி!! நான் எழுதியபடியே நீங்கள் எல்லா இடங்களிலும் கிரியை மாத்திரமே நாடுவதால் இல்லாதது கூட இருப்பதை போன்ற தோன்ற செய்கிறீர்கள்!!
இந்த வசனம் எந்த இடத்தில் அந்த கிரியை வேண்டும், என்கிறது!! நீங்கள் கிரியை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு இருக்கும் வசனங்களை வாசித்துக்கொண்டு, என்னமோ சகல புரிந்துக்கொள்ளுதலும் உங்களுக்கு இருக்கு என்கிற மாயை தோற்றுவிக்கிறீர்கள்!!
எப்படியோ நீங்கள் கிரியைகளினால் நீதிமானாக இருக்க பிரயாசப்படுகிறீர்கள்!! நாங்கள் கிருபையினால் நீதிமான்களாகி கொள்கிறோம்!!//
ஏசாயா 28:13-ம் வசனம் கிரியை பற்றி சொல்லவில்லை என்கிறார். இவ்விஷயத்தில் அவர் சொல்வது சரியா அல்லது நான் சொல்வது சரியா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் “தேவனின் திட்டமும் வெளிப்பாடும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக இருக்கும்” என பெரியன்ஸ் சொன்னது தவறா இல்லையா என்பதுதான் முதலாவதாக தீர்மானிக்க வேண்டிய விஷயம். இதைக் குறித்து பெரியன்ஸ் இதுவரை எந்த விளக்கமோ எதிர்ப்போ கூறவில்லை.
ஒரு தளத்தின் நிர்வாகி என்ற முறையில், ஒன்று தான் சொன்ன கருத்து சரிதான் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும், அல்லது தனது தவறை ஒத்துக்கொண்டு அதை அறிவிக்க வேண்டும். இவற்றில் எதுவுமே செய்யாமல், அவர் மவுனமாக இருந்தால் எப்படி? பதில் சொல்வாரா பெரியன்ஸ்? காத்திருப்போம்.
//யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
அவர் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன் என்கிறார், ஆனால் நீரும் உம்முடைய கோமாளி கூட்டமும் அது முடியாது என்று சொல்லிவருகிறீர்கள்!!//
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது என்றால் அது எப்போது? இயேசு ஏற்கனவே பூமியிலிருந்து உயர்த்தப்பட்டுவிட்டாரா? அல்லது இனிமேல்தான் உயர்த்தப்படப்போகிறாரா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி பெரியன்ஸை வேண்டுகிறேன்.
ஏசாயா 28:13-ம் வசனம் கிரியை பற்றி சொல்லவில்லை என்கிறார் பெரியன்ஸ். இவ்விஷயத்தில் அவர் சொல்வது சரியா அல்லது நான் சொல்வது சரியா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் “தேவனின் திட்டமும் வெளிப்பாடும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக இருக்கும்” என பெரியன்ஸ் சொன்னது தவறா இல்லையா என்பதுதான் முதலாவதாக தீர்மானிக்க வேண்டிய விஷயம். இதைக் குறித்து பெரியன்ஸ் இதுவரை எந்த விளக்கமோ எதிர்ப்போ கூறவில்லை.
ஒரு தளத்தின் நிர்வாகி என்ற முறையில், ஒன்று தான் சொன்ன கருத்து சரிதான் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும், அல்லது தனது தவறை ஒத்துக்கொண்டு அதை அறிவிக்க வேண்டும். இவற்றில் எதுவுமே செய்யாமல், அவர் மவுனமாக இருந்தால் எப்படி? பதில் சொல்வாரா பெரியன்ஸ்?
//ஆகவே தான் கிறிஸ்து உன்னதங்களில் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்த பிறகு, அனைவரையும் இழுத்துக்கொள்வார் என்கிறார்!!//
நல்லது. ஆனால் கிறிஸ்து தற்போது பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பதாக பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று:
1 பேதுரு 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்;
எனவே சுமார் 2000 வருடங்களுக்கு முன்னதாகவே கிறிஸ்து உயர்த்தப்பட்டுவிட்டார் என அறிகிறோம். ஆகிலும், யோவான் 12:32-ல் இயேசு சொன்னபடி, எல்லாரையும் அவரிடத்தில் இன்னமும் இழுக்கவில்லையே! ஏராளமான பேர் அவரிடம் இழுக்கப்படாமல்தானே மரித்துள்ளனர், மரித்துக் கொண்டிருக்கின்றனர்? இதற்கு பெரியன்ஸ்-ன் விளக்கம் என்ன?