நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியாதா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியாதா?
Permalink  
 


கோவை பெரியன்ஸ் தளத்தின் ஒரு திரியில் நண்பர் சோல்சொல்யூஷன் இப்படியாக ஒரு சவால் விடுத்துள்ளார்:

//சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?//

இவரது இந்த சவால் ஓர் அர்த்தமற்ற சவாலாகும்.

ஒரு நீதிபதியால் ஒரு கொலைக்குற்றவாளியை மரணதண்டனையிலிருந்து விடுவிக்க முடியவே முடியாது” என யாராவது சொல்ல முடியுமா எனச் சவால் விடுவதைப் போல்தான் சோல்சொல்யூஷனின் சவாலும் உள்ளது.

ஒரு நீதிபதியால் ஒரு கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கவும் முடியும், மரணதண்டனையிலிருந்து விடுவிக்கவும் முடியும் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும்.

Yes, he can do both things ie either awarding death punishment or not awarding death punishment.

தண்டனை கொடுத்தல், கொடாதிருத்தல் எனும் 2 காரியங்களுக்கும் ஒரு நீதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவர் எதைச் செய்வார் என்பதுதான் கேள்வி. இக்கேள்விக்கு பதில் என்னவாக இருக்கமுடியும்?

சட்டத்தின்படியும் நீதியின்படியும் அவர் செயல்படுவார் என்பதே.

ஆம், ஒரு குற்றவாளிக்கு மரணதண்டனை கொடாதிருக்க ஒரு நீதிபதிக்கு அதிகாரம் உள்ளபோதிலும், அவர் தனது அதிகாரத்தை சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டுத்தான் செய்வார். அப்படி செய்தால்தான் அவர் உண்மையான நீதிபதியாக இருக்கமுடியும்.

அந்த நீதிபதியைப் போல்தான், மனிதரை இரட்சிக்கும் விஷயத்தில் நம் தேவனும் செயல்படமுடியும். தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் (He can) என்பது 100-க்கு 100 உண்மைதான். ஆனால் அவர் தமது நீதியின்படியும் தமது நியாயத்தின்படியும் தாம் வகுத்த சட்டத்தின்படியும் நடப்பதாக இருந்தால், “அவரால் அனைவரை மட்டுமல்ல, ஒருவரைக்கூட இரட்சிக்க முடியாமற்போக வாய்ப்புண்டு” என்றுதான் சொல்லவேண்டும்.

ஆம், மனிதரில் எவருமே தமது நீதி நியாயத்தின்படியும் தமது கற்பனைகளின்படியும் நடக்கவில்லையெனில் அவர்களில் ஒருவரைக்கூட தேவன் இரட்சிக்க மாட்டார் என்பதும் 100-க்கு 100 உண்மையே. மனிதனின் இரட்சிப்பு என்பது தேவனின் கரத்தில் மட்டுமில்லை; மனிதனின் கரத்திலும் உள்ளது. இப்படிச் சொன்னால் “நான் தேவதூஷணம் செய்வதாக” சில மேதாவிகள் கூறக்கூடும். ஆனால் வேதவசனம் அப்படித்தான் கூறுகிறது. வேதவசனம் சொல்வதைத்தான் நான் சொல்கிறேனேயொழிய என் சுயமாக எதையும் சொல்லவில்லை.

எனது கூற்றுக்கு ஆதாரமாக, ஏசாயா 59-ம் அதிகாரம் ஒன்றே போதுமானது. அதை முழுமையாக/கவனமாகப் படித்துப்பார்த்தால், நம் இரட்சிப்பு எப்படி நிறைவேறும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஏசாயா 59:1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஆம், தேவனால் நம்மை இரட்சிக்க முடியும்தான். ஆனால் அந்த இரட்சிப்புக்குக் குறுக்கே நிற்பது நமது அக்கிரமங்களே. நம்மிடம் அக்கிரம் இருக்கும்வரை தேவனால் நம்மை இரட்சிக்க முடியாதுதான்.

ஏசாயா 59:8 சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.

ஆம், தேவனால் நம்மனைவரைக்கும் சமாதானத்தைத் தரமுடியும்தான். ஆனால் நாம் நியாயமில்லாமல் நடந்து நம் பாதைகளை நாமே கோணலாக்கிக்கொண்டால் நம்மில் ஒருவரும் சமாதானத்தைப் பெறஇயலாது. ஏனெனில்:

ஏசாயா 59:17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். 18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

தேவனிடம் நீதியும் உண்டு, இரட்சிப்பும் உண்டு என்பதால் நீதிசரிக்கட்டுதலைச் செய்கிறார்; மனிதர்களின் கிரியைகளுக்குத்தக்கதான பலனையும் கொடுக்கிறார். இப்படிச் செய்கையில் தங்கள் மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கு அவர் இரட்சிப்பையும் தருகிறார்.

ஏசாயா 59:20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சீயோன் என்பது தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஜனங்களைக் குறிக்கிற ஓர் உவமானமாகும்.

இதெல்லாம் பழைய ஏற்பாட்டின் காரியங்கள், புதிய ஏற்பாட்டின்படி எல்லோருக்கும் கிருபை உண்டே எனச் சிலர் சொல்லலாம். அவர்கள் பின்வரும் வசனங்களைப் படிப்பார்களாக.

மத்தேயு 24:13 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

அநேகரின் அன்பு தணிந்து போகிற அக்காலத்தில்கூட முடிவுபரியந்தம் நிலைநிற்பவன்தான் இரட்சிக்கப்படுவான் என இயேசு தெளிவாகக் கூறுகிறார். எனவே இரட்சிக்கப்படுவதென்பது சம்பந்தப்பட்ட மனிதனின் கையில்தான் உள்ளது.

இன்று நம்மில் சிலர் தங்களின் அறியாமையினால், “முடிவுபரியந்தம் நிலைநிற்காதவர்களும் தேவகிருபையால் இரட்சிக்கப்படுவார்கள்” எனச் சொல்கின்றனர். ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் இயேசுவிடம், “தேவகிருபையால் நீர் நித்திய ஜீவனை உண்டாக்கியுள்ளதாகப் பவுல் கூறியுள்ளாரே, எனவே நான் முடிவுபரியந்தம் நிலைநிற்காவிட்டாலும் நீர் என்னை இரட்சிக்கத்தான் வேண்டும்” எனச் சொன்னால் அப்பேச்சு நிச்சயமாக எடுபடாது. இயேசு அவர்களிடம் ஒரே வார்த்தையில் “என் வசனம்தான் உங்களை நியாயந்தீர்க்கிறது, நீ முடிவுபரியந்தம் நிலைநின்றுள்ளாயா? அப்படியானால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்; இல்லாவிட்டால், என்னை விட்டு அகன்று போ” என்பார்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

இரட்சிப்பு என்பது அந்தந்த மனிதனின் கரத்திலும் உள்ளது என்பதற்கு இவ்வசனம் பலமான ஆதாரமாயுள்ளது.

யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

இவ்வசனத்தின் அர்த்தமென்ன? இயேசு எனும் வாசல் வழியாய் ஒருவன் உட்பிரவேசிக்காவிட்டால், அவனது இரட்சிப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதுதானே?

யோவான் 12:47  ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

இயேசு இவ்வுலகத்திற்கு வந்ததென்னவோ நம் எல்லோரையும் இரட்சிக்கத்தான். ஆனால் அவரையும் அவரது வார்த்தைகளைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அவர் நம்மை இரட்சிப்பது கேள்விக்குறியாகிவிடும்.

ஏனெனில் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவின் வசனம் தான் நம்மை நியாயந்தீர்க்கும். இயேசுவின் வசனம் என்ன சொல்கிறது?

மத்தேயு 25:40 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்...

45 மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

நன்மை செய்த நீதிமான்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்பதும், நன்மை செய்யாத அநீதிமான்கள் பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்கு சென்று ஆக்கினை அடைவார்கள் என்பதும் இயேசு சொன்ன வசனங்களே.

இப்படியான வசனங்கள்தான் கடைசி நாளில் நம்மை நியாயந்தீர்க்கும். எனவே நாம் செய்கிற நன்மைகள்தான் நம்மை நித்தியஜீவனுக்குள் கொண்டு செல்லும் என இயேசு தெளிவாகச் சொல்கிறார்.

இயேசு எனும் வாசல் வழியாக உட்பிரவேசித்தல் என்றால், “இயேசுவை விசுவாசித்தல், இயேசுவின் பெயரால் ஞானஸ்நானம் பெறுதல், திருவிருந்து எடுத்தல், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லுதல், இயேசுவின் கிருபை மற்றும் தியாகத்தைச் சொல்லுதல்” என்றுதான் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவின் வசனங்களின்படி நடப்பதுதான் வாசலாகிய அவர் வழியாகப் பிரவேசித்தலாகும் என்பதை நாம் உணர்வதில்லை.

வாசல் என்றால் என்ன? நாம் கடந்து செல்வதற்கு வழியாக இருப்பதுதான் வாசல். ஒரு வாசல் வழியாகப் பிரவேசிக்கையில், அவ்வாசலைக் கடந்துபோக என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக: மிதியடிகளை இங்கே கழற்றவும் என வாசலில் எழுதி வைத்திருந்தால், நம் மிதியடிகளைக் கழற்றிவிட்டுத்தான் அவ்வாசல் வழியாகப் பிரவேசிக்கவேண்டும்.

அவ்வாறே இயேசு எனும்வாசல் வழியாகப் பிரவேசிக்கவேண்டுமெனில் அவர் சொல்லியபடி நாம் நடக்க வேண்டும். இதையறியாமல் வெறுமனே “இயேசுவே இயேசுவே” எனச் சொல்லிக்கொண்டும் சடங்காச்சார செயல்களை செய்துகொண்டும் இருப்பதுதான், “இயேசு எனும் வாசல் வழியாகப் பிரவேசிப்பதாக” நாம் கருதுகிறோம்.

சோல்சொல்யூஷன் கேட்டுக்கொண்டபடியே ”தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது” எனும் அர்த்தமற்ற கூற்றை நான் சொல்லாவிடினும், “மனிதனின் நற்கிரியைகள் இல்லாமல் தேவன் ஒருவரையும் இரட்சிக்க மாட்டார்” எனும் கூற்றை வசன ஆதாரத்தோடு நான் திட்டமாகக் கூறியுள்ளேன்.

இனி அவர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் செய்யாதிருப்பதும் அவர் இஷ்டம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மேற்கூறிய பதிவுக்கு கோவை பெரியன்ஸ் தள நிர்வாகி பெரியன்ஸ், நான் கொடுத்துள்ள வசனங்களுக்கு பதிலோ விளக்கமோ சொல்லாமல், தனது வழக்கமான பாணியில், “சிறுபிள்ளைத்தனமானது, நாத்திகம், பிசாசின் உபதேசம்” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் தந்துள்ளார்.

நான் தந்துள்ள வசனங்கள்:

மத்தேயு 24:13 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

யோவான் 12:47  ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

மத்தேயு 25:40 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்...

45 மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

இவற்றில் கடைசி வசனத்திற்கு மட்டும் பின்வரும் வசனத்தையே பதிலாகத் தந்துள்ளார்.

பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

இவ்வசனத்தின் மூலம் நீதிமான் யாருமே இல்லை என சொல்ல வருகிறாரா? நீதிமான யாருமே இல்லையெனில், நீதிமான்கள் நித்திய ஜீவனை அடையச் செல்வார்கள் என இயேசு சொன்னது தவறா?

நண்பர் பெரியன்ஸ் அவர்களே!

நீங்கள் விளக்கம் சொல்லவேண்டிய வசனங்கள் இன்னும் பல உண்டு. அவை:

ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

எல்லோருக்கும் இரட்சிப்பு என உங்களுக்குத் தெரிந்த விஷயம், பவுலுக்குத் தெரியவில்லையோ?

1 கொரி. 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

அது யார் கெட்டுப்போகிறவர்கள்? அவர்களுக்கு இரட்சிப்பு கிடையாதா? “இரட்சிக்கப்படுகிற நமக்கு” எனப் பவுல் பிரித்துப்பேசக் காரணமென்ன?

1 கொரி. 9:22  பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

அதான் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு தானே? பின்னர் ஏன் சிலரை மட்டும் இரட்சிக்கும்படிக்கு எனப் பவுல் சொல்கிறார்?

பெரியன்ஸ்:

//மனிதனின் செயல்கள் தேவனின் சித்தத்தையே முறியடிக்கும் வல்லமையுள்ளது என்று நீங்கள் கொடுத்த வசனங்கள் உங்களுக்கு போதிக்கிறது!! சபாஷ்!!//

சரி, அவற்றை விடுங்கள். பினவரும் வசனங்கள் எதைப் போதிக்கின்றன?

1 கொரி. 15:2  நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

பவுலின் பிரசங்கத்தைக் கைக்கொண்டால்தான் இரட்சிப்பு என இவ்வசனம் போதிக்கிறதா? அல்லது வேறுவிதமாகப் போதிக்கிறதா?

பவுலின் பிரசங்கத்தைக் கைக்கொள்ளாவிடில் நம் விசுவாசம் விருதாவாகிப் (வீணாகிப்) போவதைப் போல, இயேசுவின் இரத்தமும் வீணாகிப் போகுமா?

வழ வழா, கொழ கொழா விமர்சனம் இல்லாமல் நேரடியான பதிலைக் கூறவும்.

2 கொரி. 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.

கெட்டுப்போகிறவர்கள், இரட்சிக்கப்படுகிறவர்கள் என 2 பிரிவு உண்டா? எல்லோருக்கும் இரட்சிப்பு என்றல்லவா நீங்கள் கூறுகிறீர்கள்?

இரட்சிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே (நித்திய) ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையா? மற்றவர்களுக்கெல்லாம் மரண வாசனைதானா? பதில் தரவும்.

2 கொரி. 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

தேவனுக்கேற்ற துக்கம் இருந்தால் மட்டுமே இரட்சிப்பா? அப்படியானால் மற்றவர்களை கிறிஸ்துவால் இரட்சிக்க முடியாதா? குறிப்பாக லௌகீக துக்கம் உடையவர்களை இரட்சிக்க முடியாதா? அவர்கள் மரணத்திலேயே இருக்க வேண்டியதுதானா?

பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

என்ன, இரட்சிப்பு நிறைவேற நாம் பிரயாசப்பட வேண்டுமா? அப்படியானால் கிறிஸ்து பிரயாசப்பட்டதெல்லாம் வீணாகிப் போனதா?

1 தீமோ. 4:16  உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

என்ன, தீமோத்தேயு இரட்சிப்பாரா? அப்படியானால் கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாமற் போய்விட்டதா?

யாக்கோபு 2:14  என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

இக்கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன். கிரியை, விசுவாசம் எதுவுமே இல்லாவிட்டால்கூட எல்லோருக்கும் இரட்சிப்பு என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் யாக்கோபோ, விசுவாசம் இருந்தால்கூட பயனில்லை, கிரியையும் வேண்டும் என்கிறார். எல்லாவற்றுக்கும் சரியான விளக்கத்தைத் தருவீர்களென நம்புகிறேன்.

யாக்கோபு 5:19 உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

அதான் எல்லோரையும் மரணத்திலிருந்து கிறிஸ்து இரட்சித்துவிட்டாரே? பின்னர் ஏன் பாவியைத் திருப்புவன் அவனை மரணத்திலிருந்து இரட்சிப்பான் என யாக்கோபு கூறுகிறார்? மனிதர்கள் யாரையும் இரட்சிக்க முடியாது என்ற உண்மை யாக்கோபுக்குத் தெரியாதா?

வெளி. 21:24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 25 அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. 26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

எல்லா ஜனங்களுக்கும் இரட்சிப்பு உண்டல்லவா? அப்படியானால் எல்லா ஜனங்களும் வெளிச்சத்தில் நடப்பார்கள் எனக் கூறலாமே! அதைவிடுத்து “இரட்சிக்கப்படுகிறவ்ர்கள் வெளிச்சத்தில் நடப்பார்கள்” எனக் 24-ம் வசனம் கூறக் காரணமென்ன? அப்படியானால் “இரட்சிக்கப்படாதவர்கள்” என ஒரு பிரிவினர் இருப்பார்களா? அவர்களை கிறிஸ்துவால் இரட்சிக்க முடியாதா? பதில் தரவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்-ன் அகராதியிலும் மூல பாஷை அகராதியிலும் சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள்:

1 கொரி. 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

பெரியன்ஸ்-ன் அகராதி:

இரட்சிக்கப்படுகிறவர்கள் = கிறிஸ்துவின் சாயலுக்குரிய இரட்சிப்பைப் பெறுகிறவர்கள்

கெட்டுப்போகிறவர்கள் = பூமிக்குரிய நித்திய வாழ்வாகிய இரட்சிப்பைப் பெறுகிறவர்கள்

மூலபாஷை அகராதி:

இரட்சிக்கப்படுகிறவர்கள் = (NT:4982) sozo (sode'-zo) = from a primary sos (contraction for obsolete saoz, "safe"); to save, i.e. deliver or protect (literally or figuratively): = காப்பாற்றப்படுகிறவர்கள், விடுவிக்கப்படுகிறவர்கள், பாதுகாக்கப்படுகிறவர்கள்

கெட்டுப்போகிறவர்கள் = (NT:622) apollumi (ap-ol'-loo-mee) = from NT:575 and the base of NT:3639; to destroy fully (reflexively, to perish, or lose), literally or figuratively: = முழுவதுமாக அழிபவர்கள்

2 கொரி. 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.

பெரியன்ஸ்-ன் அகராதி:

ஜீவனுக்கேதுவான = பரலோகத்திற்கேதுவான

மரணத்திற்கேதுவான = பூமிக்குரிய நித்திய ஜீவனுக்கேதுவான

மூலபாஷை அகராதி:

ஜீவனுக்கேதுவான = (NT:2222) zoe (dzo-ay') = life (literally or figuratively): = வாழ்வுக்கேதுவான

மரணத்திற்கேதுவான = (NT:2288) thanatos (than'-at-os) = (properly, an adjective used as a noun) death (literally or figuratively): = சாவுக்கேதுவான

முழு விவரமறிய இத்தொடுப்பைச் சொடுக்கவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

கடந்த பதிவுக்கு முந்தின பதிவில் நான் தந்த வசனங்களில் சிலவற்றிற்கு  விளக்கம் தந்துள்ள பெரியன்ஸ், இன்னமும் விளக்கம் தரவேண்டிய வசனங்கள்:

2 கொரி. 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

(பெரியன்ஸ்-ன் புரிந்துகொள்தலின்படி இவ்வசனம் கூறுகிற இரட்சிப்பு என்பது பரலோக வாழ்வைக் குறிப்பதாக வைத்துக்கொண்டாலும், அதற்காக ஏன் பயமும், நடுக்கமும்? பெரியன்ஸ்-ன் புரிந்துகொள்தலின்படி, இவர்கள் பரலோக வாழ்வை இழந்தாலும் பூமியில் நித்திய ஜீவன் கிடைக்குமே!! பின் ஏன் பயமும் நடுக்கமும் கொள்ளவேண்டும்? எல்லாருக்கும் நித்திய ஜீவன் உறுதி எனும்போது பயமோ நடுக்கமோ தேவையில்லையே!)

(இன்னுமொரு முக்கியமான விஷயம்: பெரியன்ஸ்-ன் கொள்கைப்படி நடப்பதெல்லாம் தேவசித்தம் எனும்போது, நடக்கப்போகிற ஒன்றை நினைத்து இவர்கள் ஏன் பயமும் நடுக்கமும் கொள்ள வேண்டும்? மாத்திரமல்ல, இரட்சிப்பு நிறைவேற இவர்கள் ஏன் பிரயாசப்படவேண்டும்? இவர்களின் பிரயாசம் தேவசித்தத்தையும் மிஞ்சிவிடுமா? தேவசித்தத்தைவிட இவர்களின் பிரயாசம் வல்லமையானதா?)

யாக்கோபு 5:19 உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

வெளி. 21:24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 25 அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. 26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்:

//நீங்கள் உங்களை அறியாமலே கிறிஸ்துவின் ஈடுபலியை நக்கல் செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அன்பு அவர்களே!! உங்கள் கேள்விகள் எனக்கு எந்தவிதத்திலும் நஷ்ட்டத்தை உண்டு பண்ணாது, ஆனால் நிச்சயமாக உங்களின் விசுவாசத்தை பிரதிபலிக்கும்!! நீங்கள் ஏதோ கேள்வி கேட்டு மடக்குவது போல் நினைத்து கிறிஸ்துவின் ஈடுபலியை நைய்யாண்டி செய்கிறீர்கள்!!//

//நீங்கள் உங்களை அறியாமலே கிறிஸ்துவின் ஈடுபலியை நக்கல் செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அன்பு அவர்களே!!//

அதனாலென்ன? பெரியன்ஸ்-ன் “சுவிசேஷப்படி” எனக்கும் நித்திய ஜீவன் உண்டு எனும் உத்தரவாதம் இருக்கும்போது எனக்கென்ன நஷ்டம்? இதற்காக ஏன் பெரியன்ஸ் இத்தனை வருத்தப்படுகிறார்? ஒருவேளை அவரது “சுவிசேஷத்தில்” அவருக்கு முழுநம்பிக்கை இல்லையோ?

//உங்கள் கேள்விகள் எனக்கு எந்தவிதத்திலும் நஷ்டத்தை உண்டு பண்ணாது,//

பெரியன்ஸ்-ன் லாப/நஷ்டத்துக்காக நான் பதிவுகளைத் தரவில்லை. அவரது “வினோதமான சுவிசேஷத்தால்அப்பாவிகள் வஞ்சிக்கப்படாதிருக்கவே எனது பதிவுகள்.

//நீங்கள் ஏதோ கேள்வி கேட்டு மடக்குவது போல் நினைத்து கிறிஸ்துவின் ஈடுபலியை நைய்யாண்டி செய்கிறீர்கள்!!//

ஆம், நிச்சயமாக பெரியன்ஸ்-ஐ மடக்கி அவரது வினோதமான சுவிசேஷம் தவறு என நிரூபித்து, அப்பாவிகள் தப்புவிக்கப்படவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் கிறிஸ்துவின் ஈடுபலி நையாண்டி செய்யப்படுவதாக பெரியன்ஸ் கருதினால், அதற்காக ஏன் இத்தனை பாரப்படுகிறார்? அதான், எனக்கும் நித்திய ஜீவன் உண்டு என்ற உத்தரவாதம் உள்ளதே! பின் ஏன் பெரியன்ஸ்-க்கு இத்தனை கவலை, பாரம்?

ஒருவேளை கிறிஸ்துவின் மீதுள்ள “அன்பு” அவருக்கு இத்தனை பாரத்தைக் கொண்டுவருகிறதோ? மெய்யாகவே அவர் கிறிஸ்துவின் மீது அன்புள்ளவரென்றால் அவர் செய்ய வேண்டியது என்ன?

யோவான் 14:15  நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

யோவான் 14:21  என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் .

யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்.

கிறிஸ்துவின்மீது மெய்யாகவே பெரியன்ஸ் அன்பு கூர்ந்தால், அவர் முதலாவது கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளட்டும்; அப்படியே கிறிஸ்துவின்மீது அன்பு கூருவதாகச் சொல்வோரிடம், கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி போதிக்கட்டும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சோல்சொல்யூஷன்:

//நண்பர் ஜோசஃப் அவர்களே, "இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு செய்தால் நாங்கள் இந்தத் தளத்தையே மூடிவிடுகிறோம் என்று சொல்கிறோம்.//

மனிதனின் கிரியை இல்லாமல் “இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது” என்பதற்கு தகுந்த வேத வசன ஆதாரங்கள் ஏராளம் உண்டு.

அவற்றை ஏற்கனவே இத்திரியில் நான் பதிவு செய்துள்ளேன்.

எனவே நான் சொல்கிறேன்:

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

சோல்சொல்யூஷன் சொன்னபடியே தனது தளத்தை மூடுவாரா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சோல்சொல்யூஷன்:

//சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?//

சோல்சொல்யூஷன் கேட்டுக்கொண்டபடி இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

சகோ.பெரியன்ஸ் கேட்டுக்கொண்டபடியேயும் சொல்லிவிடுகிறேன்.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

உண்மையைச் சொல்ல ஏன் நடுங்க வேண்டும்?

சவாலில் சொன்னபடியே யாரையும் விமர்சிக்காமல், தளத்தை உடனடியாக மூடவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

"இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது."

எனும் இவ்விரு கூற்றுக்களையும் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவோ, நடுங்கவோ வேண்டியதில்லை. ஏனெனில், இவ்விரு கூற்றுகளும் உண்மையாயிருந்தாலும் பொய்யாயிருந்தாலும், அதினிமித்தம் எனது இரட்சிப்பு பாதிக்கப்படப்போவதில்லை. எப்படியெனில்:

உண்மையாயிருந்தால், உண்மையைச் சொன்ன எனது இரட்சிப்புக்கு பங்கம் வரப்போவதில்லை.

பொய்யாயிருந்தால்,

"இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும்.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியும்."

எனும் கூற்றுக்கள் உண்மையாகிவிடும். அதாவது இயேசுவால்/தேவனால் என்னையும் இரட்சிக்க முடியும் என்பது உண்மையாகிவிடும். ஆகவே எனக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் எனது இரட்சிப்புக்கு பங்கமில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்:

//இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது; தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிறார் கிரியையை நம்பி இருக்கும் "நித்திய ஜீவன்" தளத்தின் நிர்வாகி அன்பு அவர்கள்!!

இப்படி பட்ட ஒரு விகாரமான நம்பிக்கையை வைத்துக்கொண்டு தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில் அவர் வேண்டுமென்றால் பெறுமை கொள்ளலாம், ஆனால் இந்த தளத்தை பொறுத்த மட்டும் இது வரையில் சொல்லப்பட்ட தேவதூஷனங்களிலும் பெரிதான தேவ தூஷனம் இதுவே!!

இப்படி பட்ட ஒரு நம்பிக்கையை பகிரங்கமாக அறிவித்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கும் அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள்!! அவருக்கு இதை சொல்லுவதில் சற்றும் அச்சமும் பயமும் கிடையாதாம்!!

ஆதியாகமம் 18:14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

என்றால், அன்பு அவர்களை பொறுத்தவரையில் கர்த்தரால் ஆகாத காரியம் என்னவென்றால் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாதாம்!! கரு செத்து போன பிறகு குழந்தை கொடுக்க முடிகிற கர்த்தருக்கு எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகி!!

இதோ அவர் தன் தளத்தில் பதிவு செய்தவைகளை இங்கே வெளியிடுகிறேன்://

அய்யா பெரியன்ஸ் அவர்களே!

எனது பதிவை எவ்வளவாய் கூவி அறிவிக்கமுடியுமோ அவ்வளவாய் கூவி அறிவித்துக்கொள்ளுங்கள். அது எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் உங்கள் சவால் பற்றி எதுவும் சொல்லாமல் இப்படி மவுனமாயிருந்தால் எப்படி?

உங்கள் (வாய்ச்) சவடாலின்படி உங்கள் தளத்தை உடனடியாக மூடுகிற வழியைப் பாருங்கள்.

எனது பதிவு சம்பந்தமாக நீங்கள் சொல்லுகிற எதுவும் எனக்குப் பொருட்டல்ல; அதற்குப் பதில் விவாதம் தர எனக்கு அவசியமுமில்லை.

எனது எதிர்பார்ப்பெல்லாம் உங்கள் சவால் நிபந்தனைப்படி உங்கள் தளத்தை மூடவேண்டும், இனி யாரைப் பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லவும் கூடாது.

உங்கள் நாக்கு சுத்தமாயிருந்தால், சொன்னதைச் செய்யும் நேர்மைத்திறமிருந்தால், வேறெதுவும் சொல்லாமல் தளத்தை மூடவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

anbu57 wrote:
உங்கள் நாக்கு சுத்தமாயிருந்தால், சொன்னதைச் செய்யும் நேர்மை திறமிருந்தால், வேறெதுவும் சொல்லாமல் தளத்தை மூடவும்.

 இதைவிட நாகரீகமாக அறைகூவல் விட யாராலும் முடியாது,எதிர்தரப்பினர் மெய்யாகவே நியாய உணர்வு உடையவர்களாக இருந்தால் இனி அரைகுறையாக எழுதுவதையும் பண்பட்டவர்களை எதிர்ப்பதையும் கைவிட வேண்டும். முதலில் கற்றுக்கொள்ளட்டும், பிறகு தங்களைவிட சிறியவர்க்கு பெரியவரின் அனுமதியுடன் போதிக்கட்டும்.

கடவுளுடைய காரியங்களை நிதானமாகவும் பதட்டமில்லாமலும் ஆராயத் தூண்டும் ஐயா அன்பு அவர்களுக்கு நன்றி.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பதிவுக்கு நன்றி சகோ.ஆர்யதாசன் அவர்களே!

பெரியன்ஸ்:

//அன்பு அவர்களே,

நீங்கள் எழுதியதை நான் எழுதினேன், அவ்வளவே!! இதில் நான் எதையும் சேர்த்துக்கொண்டு (கூவி) வெளியிட எனக்கு அவசியமில்லை!!//

நான் எழுதியதை அப்படியே போட்டால் பரவாயில்லை. கூடவே “விகாரமான நம்பிக்கை”, “பெரிதான தேவதூஷணம்”  “வக்கிரமான அறிக்கை”என்பது போன்ற விமர்சனங்கள்தான் “கூவுதல்”. உண்மையில் உங்களுக்கு நேர்மை என்பது சற்றாகிலும் இருந்தால், எனது அறிக்கை பற்றி சிறு விமர்சனம்கூட செய்திருக்கக்கூடாது.

//தளத்தை மூடுவதாக ஜோசப்பிடம் சவால் விட்டவர் சகோ சோல் அவர்கள்!! நீங்கள் ஏன் முந்திக்கொள்கிறீர்கள்!! நான் சொன்னது வரை நான் தளத்தை மூடிவிடுவதாக எந்த சவாலும் விடவில்லை!!//

இதுதான் “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” எனச் சொல்வது. தங்கள் நிர்வாகத்தில் இருக்கும் தளத்தில் கீழ்க்கண்ட 2 சவால்களை உங்கள் நண்பர் சோல்சொல்யூஷன் தந்துள்ளார்.

1. //நண்பர் ஜோசஃப் அவர்களே, "இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு செய்தால் நாங்கள் இந்தத் தளத்தையே மூடிவிடுகிறோம் என்று சொல்கிறோம்.//

2. //சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?//

இவ்விரு பதிவுகளிலும் “நாங்கள் மூடிவிடுகிறோம்”, “நாங்கள் விமர்சிக்க மாட்டோம்” என உங்களையும் சேர்த்து பன்மையில் சொல்லியுள்ளார். ஒருவேளை உங்களுக்கு தமிழ் பிரச்சனை என்பதால் நாங்கள் எனும் வார்த்தை பன்மை (plural) என்பதை நீங்கள் அறியீர்களோ என்னவோ. அறியாவிட்டால் இப்போது அறிந்துகொள்ளவும்.

இதுவரை இணைபிரியா நண்பராக உங்களோடிருந்து, உங்கள் பதிவுகளில் சரிசமமாகப் பங்கெடுத்தவரை, இப்படி திடீரெனத் தனிமைப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்ததென்பது தெரியவில்லை.

முதல் சவாலையாவது ஜோசப்புக்கான தனி சவால் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது சவாலில் “ஒருத்தனும்” பதில் சொல்லவில்லை எனத் திமிர்த்தனமாய் எழுதியுள்ளாரே, அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

இதுவரை “ஒருத்தனும்” சவாலை எதிர்கொள்ளாததால் சோல்சொல்யூஷனின் மமதைக் கூற்றுக்கள் உங்களுக்கு இனிப்பாக இருந்தன. அதனால்தான் அவற்றுக்கு இந்நாள் வரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் கண்குளிர பார்த்து ரசித்து வந்தீர்கள். சவாலை எவனும் எதிர்கொள்ள மாட்டான் என்ற திமிரும் அசட்டு நம்பிக்கையும் உங்களுக்கும் இருந்ததால் அவற்றிற்கு எதிராக எதுவும் சொல்லாமல் வரவேற்று ரசித்து வந்தீர்கள்.

தற்போது சவாலை நான் எதிர்கொண்டதும், அவரது கூற்றுக்கள் உங்களுக்குக் கசப்பாக உள்ளன. எனவேதான் இணைபிரியாத நண்பரைத் தனிமைப்படுத்தி, அவரது கூற்றுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி அவரை மறுதலிக்கிறீர்கள்.

உண்மையில் அவரது கூற்றுக்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லையெனில், “நாங்கள்” என்ற வார்த்தையால் அவர் உங்களை சவாலில் இணைத்தபோதே அதை நீங்கள் ஆட்சேபித்திருக்க வேண்டும். அப்போது சும்மா இருந்துவிட்டு, இப்போது நழுவுவதென்பது, இணைபிரியா நண்பருக்குச் செய்கிற “நம்பிக்கைத் துரோகமாகும்”.

நம்பிக்கைத் துரோகம் செய்யாமை, நேர்மை, சொல் தவறாமை என்பதெல்லாம் கிரியையின் அடிப்படையான செயல்களல்லவா? எனவே அவற்றை உங்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான்.

சவால் நம்பர் 1 ஜோசப்புக்கு உரியதுதான் என்றாலும், அதே சவாலை மற்றொருவர் ஏற்றுக்கொண்டு எதிர்கொண்டால், அந்த மற்றொருவருவருக்கும் நீங்கள் (அதாவது நீங்கள் மற்றும் சோல்சொல்யூஷன்) கடமைப்பட்டவர்களே!

மான ரோஷத்துடன் சவால் விடுகிற எவரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

சவாலில் தோற்ற நீங்கள், தளத்தை மூடுவதும் மூடாததும் உங்கள் நேர்மைக்கு விடப்பட்ட ஒரு சவாலாகும். நான் ஏற்கனவே சொன்னபடி, “உங்கள் நாக்கு சுத்தமாயிருந்தால், சொன்னதைச் செய்யும் நேர்மை திறமிருந்தால்” தளத்தை மூடவும்.

//கூடிய விரைவில் இந்த தளம் மூடப்பட்டு இதே பெயரில் ஒரு புதிய தளம் ஆனால் இது போன்ற இலவசமானதாக இல்லாமல், எங்களின் உழைப்பினால் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!! சீக்கிரமே உங்களின் வஞ்சக பதிவுகளை அதில் வெளிப்படுத்துகிறேன்!! அது வரையில் காத்திருங்கள்!!//

ஓஹோ, இப்படி ஒரு திட்டம் இருந்ததால்தான் சோல்சொல்யூஷன் தைரியமாக சவால் விட்டாரா?

//மறுதலிக்க மாட்டேன் என்று சொன்ன பேதுரு மறுதலித்தான்!!//

தளத்தை மூடுவோம் எனச் சொன்னவர்கள், தற்போது மூட மறுக்கின்றனர்.

//சத்தியத்தை நசுக்க இதுவும் சாத்தானின் ஒரு முயற்சி (அதான் இந்த தளத்தை மூடுவதற்கு நீங்கள் கொடுத்த வக்கிரமான அறிக்கையை தான் சொல்லுகிறேன்)!!//

யானை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டு, மற்றவர்களைக் குற்றஞ்சாட்டுவது போலுள்ளது. நானா உங்களைச் சவால் விடச்சொன்னேன்? தோல்வியை ஒப்புக்கொண்டு தளத்தை மூடுவதை விட்டுவிட்டு ஏன் இந்த பிதற்றல்?

//தளத்தை மூட‌ சொல்லியும், துருபதேசக்காரர்களை விமர்சிக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவை மறுதலிக்கும் "கிறிஸ்தவர்களை" பார்க்க செய்தீர்கள்!! இனியும் உங்களுடன் விவாதம் என்கிற பெயரில் எழுதுவதே தேவதூஷனமாக ஆகும்!!//

என்னோடு நீங்கள் விவாதிக்க வேண்டும் என நான் தவமிருக்கவில்லை. நேர்மை திறமிருந்தால் தளத்தை மூடுகிற வழியைப் பாருங்கள். வெட்டிப் பேச்சு தேவையில்லை.

//உங்களுக்கு எங்களை குறித்து என்ன அவதூறு சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள், இந்த தளத்திற்கு இன்னோரு எதிரி வந்துவிட்டதாக நாங்கள் நினைத்துக்கொள்கிறோம்!!//

சகலமும் தேவசித்தம், எல்லோருக்கும் நித்திய ஜீவன்” எனும் உங்கள் அடிப்படைக் கொள்கைகளே தவறு எனச் சொல்லிவிட்டேன். இதைவிட அதிகமாக இனி உங்களை என்ன அவதூறு செய்யப்போகிறேன்?

//Good Bye Mr Anbu!! Kovai bereans do not have anything more to deal with you!! We remain closed for you or your posts!!//

This is not enough for me. If you are really committed to your friend's Challenges, then you should close your Forum.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

29-8-2011-ல் சோல்சொல்யூஷன்:

//சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?//

1-10-2011-ல் சோல்சொல்யூஷன்:

//நண்பர் ஜோசஃப் அவர்களே, "இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு செய்தால் நாங்கள் இந்தத் தளத்தையே மூடிவிடுகிறோம் என்று சொல்கிறோம்.//

2-10-2011-ல் அன்பு57:

//தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

உண்மையைச் சொல்ல ஏன் நடுங்க வேண்டும்?

சவாலில் சொன்னபடியே யாரையும் விமர்சிக்காமல், தளத்தை உடனடியாக மூடவும்.

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

சோல்சொல்யூஷன் சொன்னபடியே தனது தளத்தை மூடுவாரா?//

4-10-2011-ல் சோல்சொல்யூஷன்:

//தேவனாலும், கிறிஸ்துவாலும் கூடாதது என்னால் கூடும் என்ற அகந்தை உம் போன்றவர்களுக்கு இருக்கிறதா என்பதை அறிவதற்காகவே அவ்வண்ணம் பதித்தேன். நண்பர் ஜோசஃப் அவ்வாறு பதிவதற்கு தயங்குவார் என்பது எனக்குத்தெரியும். இம்மாதிரி பதிக்கச்சொல்லி அநேக நாட்களாகிவிட்டது, இப்போதுதான் அன்பு அவர்களுக்கு ஞானம் வந்ததா என்று தெரியவில்லை.

வேதத்தை ஆராய்ந்து தேவனால் எல்லாரையும் இரட்சிப்பது என்பது இயலாத காரியம் என்று ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். இனி உமக்கும் இத்தளத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உம்மைப் பொருத்தவரை இத்தளம் மூடியாகிவிட்டது.//

-----------------------------------------------------

நீதிமொழிகள் 6:16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, ...

நீதிமொழிகள் 1:32 பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

நீதிமொழிகள் 3:32 மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;

நீதிமொழிகள் 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

நீதிமொழிகள் 12:8 மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

நீதிமொழிகள் 10:32 துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

நீதிமொழிகள் 10:31 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

-----------------------------------------------------

எசேக்கியேல் 3:17 மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். 19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

"இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது."

எனும் இவ்விரு கூற்றுக்களையும் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவோ, நடுங்கவோ வேண்டியதில்லை. ஏனெனில், இவ்விரு கூற்றுகளும் உண்மையாயிருந்தாலும் பொய்யாயிருந்தாலும், அதினிமித்தம் எனது இரட்சிப்பு பாதிக்கப்படப்போவதில்லை. 


இந்த வரிகளை தாங்கள் பதிவிட்டதற்காக  நான் மிகவும் வருந்துகிறேன்!  இதுபோன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து!  

"எல்லோருக்கும் மீட்பு" "யார் என்ன செய்தாலும் அவர்களுக்கு இரட்சிப்பு" என்ற கொள்கையின் அடிபடையில் வாதிடும் சகோ. பெரியன்ஸ்  குழுவினரின் கருத்தில்அனேக மாறுபாடான  உபதேசம்  இருப்பது உண்மையே. அவர்களின் கருத்துக்கள் பலருக்கு இடரலை ஏற்ப்படுத்தலாம் என்பதும் உண்மையே.  அவர்களின் உபதேசத்த்க்கு எதிராக   தாங்கள் அனேக  வசனத்தின் அடிப்படையில் விளக்கியுள்ள தங்களின்  பதிலும் அருமை. ஏனெனில் வசனம் சொல்வதையே  தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்.  

ஆகினும் "தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியாது" என்ற தங்களின் கருத்து ஏற்புடையது அல்ல.

 மாற்கு 10:27  தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்
 
"தேவன் சகலத்தையும் செய்யவல்லவர்" "அவரால் எல்லாமே கூடும்" என்று வசனம் சொல்லும் பட்சத்தில் அவரால் செய்யமுடியாதது ஒன்றுமே இல்லை என்று பொருளாகிவிடுகிறது.  அதன் அடிப்படையில் 'தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியாது" என்ற தங்களின் வாதம் சரியானது என்று எடுத்து கொள்ள
முடியுமா சகோதரரே.  அது தேவனின் சர்வ வல்லமையை மட்டுபடுத்துவது போல உள்ளது.  ஏனெனில் தேவனுக்கு முடியாதது என்று ஒன்றும் இல்லை!
 
தேவனால் முடியாது என்பதற்கு தாங்கள் சுட்டியுள்ள எல்லா வசனத்தையும் "தேவனால் எல்லாம் கூடும்" என்ற ஒரே வசனம் மேற்க்கொண்டுவிடும் என்பதை தங்களுக்கு  தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தங்களின்  இரட்சிப்புக்கு எந்த பாதகமும் இல்லை என்பதற்காக தேவனின் சர்வவல்ல தன்மையை மட்டுபடுத்தலாமா?     
 
வசனத்தின் அடிப்படையிலான உங்கள் விசுவாசத்தின்படி,"தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் ஆனால் அவர் தன்னுடய வார்த்தைகளாகிய
நியமனங்களை மீறி எதுவும் செய்யமாட்டார்"  என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்:  மற்றபடி "தேவனால் இது முடியாது" என்று திட்டவட்டமாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்றே நான் கருதுறேன்.
 
அவரவர் கொண்டுள்ள  விசுவாசம் மற்றும் கிரியையின்  அடிப்படையில் அவரவருக்கு நியமிக்கபட்ட  கூலியை எதிர்பாப்பதில் தவறில்லை. எழுதப்பட்ட வசனத்தின் அடப்படையில் வேதம் சொல்லும் ஆக்கினையை எடுத்து  சொல்லத்தான் நமக்கு உரிமை இருக்கிறதேயன்றி,  வசனத்தின் அடிப்படையில் கூட  அடுத்தவருக்கு இப்படிதான் சம்பவிக்க வேண்டும் என்று தீர்மானிக்க நமக்கு எந்த உரிமையும்  இல்லை. ஏனெனில் தேவன் தயாளகுணமும்  மிகுந்த இரக்கமும் உள்ளவர் என்று வேதம் சொல்கிறது  அவருக்குண்டானவைகளை அவர் எப்படி வேண்டுமானாலும் கொடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது!
 
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
  
நாம் எழுதுவதும் விசுவாசிப்பதும் தேவன் எழுதிகொடுத்துள்ள வார்த்தைகள் அடிப்படயிலேயே ஆகினும்,  தேவன் தான் சொல்லிய வார்த்தைகளை பல நேரங்களில் மாற்றியிருக்கிறார் என்றும் அவ்வாறு மாற்றுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் நாம் வேதபுத்தகததில் பல இடங்களில் வாசிக்கிறோம். எனவே  துன்மார்க்கனுக்கு நியமித்த  தண்டனை அல்லது அவர்களது இரட்சிப்பு  பற்றிய விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராமல், சர்வவல்ல தேவனின் சித்தத்துக்கு ஒப்புகொடுத்து ஜெபிப்பதே சிறந்தது என்று கருதுகிறேன்.
 
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் " ஆனால் அதை செய்வதும் செய்திருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்!  இவ்விஷயத்தில்  அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அன்பான சகோ.சுந்தர் அவர்களின் பதிவுக்கு நன்றி!

எனது அறிக்கைகள் தேவனுடைய வல்லமையை குறைப்பதாக உங்களுக்குத் தோன்றுவதால், எனது அறிக்கைகளுக்காக வருந்துகிறீர்கள்.

இன்னும் பலரும் உங்களைப் போன்றே கருதலாம். உண்மையில் எனது அறிக்கைகள் தேவதூஷணம் அல்ல. உண்மைகள் ஒருபோதும் யாரையும் தூஷிப்பதாக இருக்கமுடியாது.

எனது அறிக்கைகள் குறித்து ஒரு விரிவான விளக்கம் தர ஏற்கனவே நினைத்திருந்தேன். நேரமில்லாததால் உடனடியாகத் தரமுடியவில்லை. தற்போது உங்களுக்காக மட்டுமின்றி தள அன்பர்கள் அனைவருக்காகவும் இவ்விளக்கத்தைத் தருகிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்:

கொடுத்த வாக்கை மீற உங்களால் முடியுமா?

இக்கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? நேர்மையான எந்த ஒருவனும் “என்னால் கொடுத்த வாக்கை மீறமுடியாது” என்றுதான் சொல்லுவான். இதன் அர்த்தமென்ன? கொடுத்த வாக்கை மீறக்கூடிய வல்லமை அவனுக்கு இல்லை என அர்த்தமாகுமா? உண்மையில் கொடுத்த வாக்கை மீறுவது அனைவருக்கும் எளிது. சோல்சொல்யூஷனும் பெரியன்ஸ்-ம் மிக எளிதாக கொடுத்த வாக்கை மீறினார்கள் அல்லவா?

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் கடினம். இவ்வுண்மையை நாம் அனைவரும் நன்கறிவோம். ஆகிலும் நல்ல நேர்மையான ஒருவனுக்கு “கொடுத்த வாக்கை மீறுவதுதான் மிகவும் கடினமாக இருக்கும்”. உங்கள் அனுபவத்தில்கூட இவ்வுண்மையை நீங்கள் நன்றாகவே அனுபவித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

சோல்சொல்யூஷன் மற்றும் பெரியன்ஸ் போன்ற நெறிகெட்டவர்களுக்கு, சொன்ன வாக்கை காற்றில் பறக்கவிட்டுவிட்டு மீறுவது மிகமிக எளிதாக இருக்கும். இம்மாதிரியானவர்களைக் குறித்து வேதாகமம் இப்படியாகச் சொல்கிறது.

நீதிமொழிகள் 25:14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.

வாக்களித்துவிட்டு அதைச் செய்யாதவன் வஞ்சகன். வாக்களித்தப்படி செய்வது கடினம்தான்; ஆனாலும் செய்யத்தான் வேண்டும். அப்படிச் செய்யாதவன் வஞ்சகன் என வேதாகமம் சொல்கிறது. நேர்மையான மனிதர்களுக்கு “வஞ்சகன்” எனும் பெயரை வாங்குவதுதான் மிகவும் கடினமானதாக இருக்கும். கடினம் எனச் சொல்வதைவிட அவர்களால் அது இயலாது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்களின் மனம் அந்த வஞ்சகத்திற்கு ஒருபோதும் சம்மதிக்காது. மனம் சம்மதிக்காத அச்செயலை அவர்களால் செய்ய முடியாது. எனவேதான் “கொடுத்த வாக்கை மீற என்னால் முடியாது” என நேர்மையாளர்கள் சொல்வார்கள்.

இதெல்லாம் சோல்சொல்யூஷன் மற்றும் பெரியன்ஸ் போன்ற நேர்மையற்றவர்கள் மண்டையில் சற்றும் ஏறாது. அவர்களுக்கு வாக்குக் கொடுப்பதும் அதை மீறுவதும் ஒரு விளையாட்டு போன்றது. இவர்களைக் குறித்து வேதாகமம் இப்படியாகவும் சொல்கிறது.

நீதிமொழிகள் 26:18 கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 19 அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.

சவாலில் தோற்றுவிட்டு, சவாலில் சொன்னபடி செய்ய மனமில்லாத சோல்சொல்யூஷனின் சமாளிப்பு பதில், இவ்வசனம் கூறுவதற்கு ஒத்ததாக இருப்பதைக் காணலாம்.

சோல்சொல்யூஷன்:

//தேவனாலும், கிறிஸ்துவாலும் கூடாதது என்னால் கூடும் என்ற அகந்தை உம் போன்றவர்களுக்கு இருக்கிறதா என்பதை அறிவதற்காகவே அவ்வண்ணம் பதித்தேன்.//

இவர்கள் தங்களைப் போலவே தேவனையும் பொம்மை விளையாட்டு விளையாடுபவராகக் கருதுகிறார்கள். உதாரணமாக, “ஆதாமிடம் கனியைப் புசிக்காதே, புசித்தால் சாகவே சாவாய்” எனச் சொல்வாராம். இப்படிச் சொல்லிவிட்டு, திரைமறைவில் சாத்தான் என்பவனை உருவாக்கி, அவனை ஆதாமிடம் அனுப்பி ஆதாம் கனியைப் புசிப்பதற்குத் தூண்டி, புசிக்க வைப்பாராம். பின்னர் தன் கட்டளையை மீறி கனியைப் புசித்தக் குற்றத்துக்காக ஆதாமை சபித்து, மரணத்தையும் கொடுப்பாராம். பின்னர், அய்யோ நாம் படைத்த மனிதனை நாமே கொன்றுவிட்டோமே என நினைத்து, மரணத்திலிருந்து அவனை விடுவிக்க, பாவநிவாரணபலி என்ற பெயரில் தமது குமாரனாகிய இயேசுவைப் பலியிடுவாராம். பின்னர், “இயேசுவின் பாவநிவாரணபலி, ஆதாமின் பாவத்தை மட்டுமல்ல, எல்லோரது பாவத்தையும் நீக்குமென்று” சொல்லி, யார் என்ன பாவம் செய்தாலும் அவர்களை மரணத்திற்கு தீர்க்காமல் எல்லோருக்கும் நித்திய ஜீவன் கொடுத்துவிடுவாராம்.

அது போகட்டும், உங்களிடம் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருகிறேன். கொடுத்த வாக்கை உங்களால் மீறமுடியுமா? முடியும் என்றால் நீங்கள் ஒரு நேர்மையற்றவராக இருக்க வேண்டும். முடியாது என்றால் நீங்கள் நேர்மையாளராக இருக்க வேண்டும்.

இங்கு “முடியும்” “முடியாது” எனும் பதில்கள், உங்கள் மாம்ச வல்லமையைச் சார்ந்ததல்ல. மாம்ச வல்லமையின்படி பார்த்தால், எல்லாருக்கும் கொடுத்த வாக்கை மீறும் வல்லமை நிச்சயமாக உண்டு. எனவே அப்படி ஒரு கேள்வியே அவசியமில்லை.

ஆனால் நம் கேள்வி மாம்ச வல்லமையைச் சார்ந்ததாக இராமல் மனதின் வல்லமையைச் சார்ந்ததாக உள்ளது. அதாவது கொடுத்த வாக்கை மீறும் சக்தி உங்கள் மனதுக்கு உள்ளதா இல்லையா என்பதே கேள்வி. இதன்படி பார்த்தால் நேர்மையான எவனுக்கும் கொடுத்த வாக்கை மீறுவதுதான் கடினமாகவும் இயலாததாகவும் இருக்கும். இனி, தேவனை/இயேசுவைக் குறித்த சோல்சொல்யூஷனின் கேள்விக்கு வருவோம். .....

தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

SUNDAR wrote:
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் " ஆனால் அதை செய்வதும் செய்திருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்!  இவ்விஷயத்தில்  அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!

 திரு.சுந்தர் அவர்களே,

இதைவிட குழப்பமான ஒரு கொள்கையை எந்த மதத்தவரும் வெளியிடவே முடியாது என்பது சத்தியம், சத்தியம், சத்தியம். நல்லா தான் சொல்லி கொடுக்கிறீர்கள்.

நான் கொஞ்சம் சொல்லட்டுமா, எங்க அம்மா விடுமுறை நாட்களில் நல்ல விருந்து செய்வாங்க, நாங்களோ விடுமுறை தானே என்று நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம், அம்மா சொல்லுவாங்க,"குளிச்சுட்டு வாங்கடா, சாப்பிடலாம்..." என்பதாக;நாங்கள் சொல்லுவோம், பசிக்குதம்மா, சாப்பிட்டுவிட்டு குளிக்கிறோம் என்பதாக,அம்மா சொல்லுவாங்க,"குளிச்சா தான் சாப்பாடு.." என்பதாக.

இப்போது சொல்லுங்க பெரியவங்களே, எங்கம்மா எங்களுக்கு விருந்து சமைக்க இயலாதவங்களா..?

தன் மெய்வருத்த கூலி தரும் என்பது போல மனிதனுடைய முயற்சியில்லாமல் இறையருளைப் பெறவே இயலாது; இறைச்சித்தம் எப்போதும் நமக்கு ஆதரவாகவே இருந்தாலும் மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் அது நடைபெறாமலும் போகிறது என்பதே உண்மை.

எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சோல்சொல்யூஷன் மற்றும் பெரியன்ஸ்-ன் சவாலான கேள்விகள்:

இயேசுகிறிஸ்துவினால் எல்லோரையும் இரட்சிக்க முடியவே முடியாது” எனக் கூற முடியுமா?

தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியவே முடியாது” எனக் கூற முடியுமா?

இக்கேள்விகளுக்கு “முடியாது” எனும் பதிலை நான் சொன்னதால், சகோ.சுந்தர் வருந்துகிறார்.

இப்போது இக்கேள்விகள் சம்பந்தமாக இயேசுகிறிஸ்து சொன்ன ஒரு வசனத்தைப் பார்ப்போம்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

இப்படி இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கையில், “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிற ஒருவன்” இயேசு சொன்னபடி அதை இழந்துபோகாமால், அதை இரட்சித்துக் கொண்டால் என்னாகும்? தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான் என இயேசு சொன்னது பொய்யாகிவிடுமல்லவா?

மேலும் இயேசு சொன்னதை நம்பி, இயேசுவினிமித்தமும் சுவிசேஷத்தினிமித்தமும் தன் ஜீவனை இழந்துபோன ஒருவன், மறுமையில் இயேசுவிடம்:

ஆண்டவரே! தன் ஜீவனை இரட்சிக்க விரும்புவன் அதை இழந்துபோவான் என சொன்னீரே? ஆனால் தங்கள் ஜீவனை இரட்சிக்க விரும்பியவர்கள், அதை இழந்துபோகாமால், எல்லோரும் ஜீவனோடு இருக்கிறார்களே! அப்படியானால் நீர் சொன்னது பொய்யா, அல்லது தெரியாமல் அப்படிச் சொல்லிவிட்டீரா?

எனக் கேட்டால் இயேசு என்ன பதில் சொல்வார்?

சோல்சொல்யூஷன் வீறாப்பாகச் சவால் விட்டுவிட்டு, இப்போது சமாளிப்பு பதில் சொல்வதுபோல், “சகோதரா! நான் சொன்னதை நம்பி ஒரு சிலராவது தங்கள் ஜீவனை இழக்க முன்வருவார்களா என தெரிந்து கொள்ளத்தான் அப்படிச் சொன்னேன், மற்றபடி ஒருவரும் தங்கள் ஜீவனை இழப்பதற்காக அப்படிச் சொல்லவில்லை” எனச் சொல்வாரா? நிச்சயம் மாட்டார்.

இயேசு சொன்ன வசனங்களின்படி அப்படியே நடந்துதான் ஆகவேண்டும். இப்படியிப்படி நடந்தால் இப்படியிப்படி நடக்கும் என இயேசு சொன்ன கூற்றுக்கள் அனைத்தும் இயேசுவின் மாறாத வாக்குகளாகும். சோல்சொல்யூஷன் போன்ற மனிதர்களைப் போல் இயேசுகிறிஸ்து தமது வாக்கை மாற்றமுடியாது.

அற்ப மனிதர்களாலேயே தங்களது வாக்கை மீற முடியாதபோது, தேவகுமாரனாகிய இயேசுவால் அவரது வாக்கை மீற முடியுமா? நிச்சயம் முடியாது. எனவேதான் “நான் சொன்ன வசனமே உங்களை நியாயந்தீர்க்கும்” என இயேசு சொன்னார் (யோவான் 12:48).

அற்ப மனிதர்கள் “நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி” என்றும் “நான் ஒரு தடவை ஒண்ணைச் சொல்லிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” என்றும் சொல்லும்போது, தேவகுமாரனாகிய இயேசுவின் வசனம் எத்தனை வலிமை நிறைந்ததாக இருக்கும்? அந்த வசனம் சொல்வதை அவரால் மாற்ற முடியுமா? நிச்சயமாக முடியாது.

எனவே மனிதர்களின் இரட்சிப்புக்கென சில நிபந்தனைகளை இயேசு சொல்லியிருக்கும்போது, அந்த நிபந்தனைகளை அவரால் மாற்ற முடியாது. அதாவது, இரட்சிப்புக்கான நிபந்தனைகளை ஒருவன் நிறைவேற்றாத பட்சத்தில், அவனை இயேசுவால்கூட இரட்சிக்க முடியாது, முடியவே முடியாது. சோல்சொல்யூஷனும் பெரியன்ஸ்-ம் ஏதோ தாங்கள்தான் தேவனையும் இயேசுவையும் மிகுந்த வல்லவர்களாகக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு, தங்களையும் உலக மக்கள் அனைவரையும் இயேசுவும் தேவனும் கட்டாயம் இரட்சித்துவிடுவார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக தாங்கள் வஞ்சிக்கப்படுவதோடு மற்றவர்களையும் வஞ்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என வசனம் சொன்னால் சொன்னதுதான். பிறரது தப்பிதங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார் என இயேசு சொன்னால் சொன்னதுதான்.

இயேசுவின் வசனத்துக்கு மாறாக, பிறரது தப்பிதங்களை மன்னியாதவனின் தப்பிதங்களை பிதா மன்னித்தால், அதுதான் இயேசுவுக்குப் பெரும் நிந்தையாகும். இயேசுவுக்கு நிந்தை உண்டாக பிதா ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டார், அது அவரால் முடியாது, முடியவே முடியாது.

எனவே இரக்கஞ்செய்யாதவனை, பிறரது தப்பிதங்களை மன்னிக்காதவனை தேவனோ இயேசுவோ இரட்சிப்பதென்பது முடியாது, முடியவே முடியாது.

இது அவர்களின் இயலாமையைக் காட்டவில்லை. சொன்ன சொல் தவறாத அவர்களது வாக்கின் நிறைவேறுதலைக் காட்டுகிறது.

தொடரும் ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தனது பதிவில் சுந்தர் குறிப்பிட்டுள்ள 3 முக்கிய வசனங்கள்:

1. மாற்கு 10:27  தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

2. யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

3. மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?

இவ்வசனங்களை நெறிகெட்டவர்களான சோல்சொல்யூஷனும் பெரியன்ஸ்ம் அடிக்கடி சுட்டிக்காட்டுவதுண்டு. இவ்வசனங்களின் கருத்தை சற்று ஆராய்வோம்.

முதல் வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு:

Mark 10:27 With man this is impossible, but not with God; all things are possible with God."      NIV

இதை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்போம்.

மனிதனுடன் இது இயலாதது, ஆனால் தேவனுடன் அல்ல. தேவனுடன் எல்லாம் இயலும்.

ஒரு சிறிய மாற்றத்தில் அர்த்தம் எவ்வளவாய் மாறுகிறதல்லவா? மனிதனோடு இணைந்து செயல்பட்டால் இதைச் செயல்படுத்த முடியாதுதான்; ஆனால் தேவனோடு இணைந்து செயல்பட்டால் எதையும் செயல்படுத்த முடியும் எனும் கருத்தைத்தான் இவ்வசனம் சொல்கிறது.

ஒருவேளை ஆங்கில மொழிபெயர்ப்பில் நம்பிக்கையில்லையென்றால், மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்ப்போம்.

para - anthropos - adunatos - alla - ou - para - theos - pas - gar - dunatos - para - ho - theos

para: near, ie beside; anthropos: human being; adunatos: unable, impossible; alla: other things, ie contarariwise (but); ou: the absolute negative, no or not; theos: a deity, especially the Supreme Divinity; pas: all, any, every, the whole; gar: assigning a reason (for); dunatos: powerful or capable, neuter possible; ho: the

இந்த அர்த்தங்களை மொத்தமாக இணைத்து படிப்போம்.

near (ie beside) human being unable (impossible), but not near (ie beside) the Supreme Divinity; all for capable near (ie beside) the Supreme Divinity. 

இவ்வசனம் மனிதனின் செயல்பாட்டையே குறிக்கிறதேயன்றி, தேவனின் செயல்பாட்டைக் குறிக்கவில்லை.

மனிதன் மனிதரோடு இணைந்து இதைச் (இரட்சிப்பை) செய்யமுடியாதுதான். ஆனால் தேவனோடு இணைந்தால் எல்லாவற்றையும் செய்யமுடியும் எனும் ஓர் அழகான கருத்தை இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார்.

யார் இரட்சிக்கப்படக்கூடும் எனும் கேள்விக்குத்தான் இயேசு இப்பதிலைக் கூறுகிறார்.

ஒருவன் மனிதரோடு இணைந்து மனிதர்களின் நடைமுறைகளின்படி (standard) வாழநினைத்தால் இவ்வுலகில் எதையும் இழக்க அவனால் இயலாது. ஆனால் அதே மனிதன் தேவனோடு இணைந்து தேவனின் நடைமுறைகளின்படி (standard) வாழ முற்பட்டால் தனது இவ்வுலக ஆஸ்தி முழுவதையும் மட்டுமின்றி தன்னுயிரையே இழக்க முடியும், இன்னும் வேறு எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதே இவ்வசனத்தின் விரிவான கருத்து.

தன் ஜீவனை இழப்பவன் அதை இரட்சித்துக் கொள்வான் எனும் வசனத்தின் கருத்தும், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு எனும் வசனத்தின் (பிலி. 4:13) கருத்தும் இவ்வசனத்தின் கருத்தோடு இசைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வசனம் சொல்லப்பட்ட சந்தர்ப்பம் நமக்கு மிகவும் பரிச்சயமானதுதான். நித்தியஜீவனைப் பெற விரும்பின ஓர் ஐசுவரிய வாலிபன், இயேசுவின் கட்டளைப்படி தனது ஆஸ்தியை இழக்க முன்வராததால் இரட்சிப்பை இழந்தவனாகச் சென்றதைப் பார்த்து கவலையுடன், யார் இரட்சிக்கப்படக்கூடும் என சீஷர்கள் கேட்டபோது இவ்வசனத்தை இயேசு கூறினார்.

மொழிபெயர்ப்பாளர்களின் தவறால் ஓர் அருமையான கருத்து எவ்வாறு சிதைந்துபோனது என்பதற்கு இவ்வசனம் ஓர் ஆதாரமாயுள்ளது.

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் என சங்கீதக்காரன் நம்பிக்கையோடு சொல்கிறார் (சங். 18:29). கடுகளவு விசுவாசமிருந்தால் மலையைக்கூட பெயர்க்கலாம் என இயேசு சொல்கிறார். கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு எனப் பவுல் கூறுகிரார். இப்படி வேதாகமம் முழுவதும் தேவனோடு இணைந்து வாழ்வதால் கிடைக்கும் மாபெரும் நம்பிக்கையை தெரிவிக்கிறது.

ஆனால் நெறிகெட்ட கோவைபெரியன்ஸ் அறிவிலிகளோ எப்போது பார்த்தாலும் மனிதர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வண்ணமான கருத்துக்களையே கூறிவருகின்றனர்.

மனிதன் தம்மோடு இணைந்து பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதே தேவ சித்தம். மனிதன் மூலமாகத்தான் தமது திட்டங்களையெல்லாம் செயல்படுத்த தேவன் விரும்புகிறார்.

ஆபிரகாம், நோவா, மோசே, தாவீது, யோசுவா, பவுல், பேதுரு போன்ற தமது பக்தர்கள் மூலம் தேவன் எத்தனை பெரிய காரியங்களைச் செய்தார் என்பதை நாம் அறிவோம். இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் விசுவாசமும் முக்கிய காரணமாகும். அந்த விசுவாசத்தை ஊக்குவிக்குமுகமாகத்தான் தேவனோடு இணைந்து மனிதனால் எதையும் செய்ய இயலும் என இயேசு கூறுகிறார்.

இதுதான் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட “தேவனாலே எல்லாம் கூடும்” எனும் வசனத்தின் விளக்கமாகும்.

இவ்வசனம் இல்லாவிட்டால், தேவனாலே எல்லாம் கூடும் என்பது பொய்யாகிவிடாது. தேவனால் எல்லாம் கூடும் என்பதற்கு ஆதாரமான வேறு வசனங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சுந்தர் குறிப்பிட்டுள்ள 2-ம் வசனமாகும். இதன் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஆர்யதாசன்:

//எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.//

நல்லதொரு உதாரணமும் பழமொழியும் கூறியுள்ளீர்கள் சகோதரரே!

ஆனால் “இலவு காத்த கிளி” (கிள்ளை அல்ல) என்பதே சரி என நினைக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

anbu57 wrote:

சகோ.ஆர்யதாசன்:

//எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.//

நல்லதொரு உதாரணமும் பழமொழியும் கூறியுள்ளீர்கள் சகோதரரே!

ஆனால் “இலவு காத்த கிளி” (கிள்ளை அல்ல) என்பதே சரி என நினைக்கிறேன்.


 கிளியை கிள்ளை என்றும் கூறுவதுண்டு என்று நினைக்கிறேன், தவறு எனில் திருத்திக்கொள்ளுகிறேன்,ஐயா.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் பதித்துள்ள 2-வது வசனம்:

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

தேவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும்; அவர் செய்கிற எதையும் யாராலும் தடை செய்யமுடியாது எனும் கருத்தை இவ்வசனம் கூறுகிறது.

இது தேவனின் நிகரற்ற வல்லமையைக் குறிப்பதாக உள்ளது.

ஆனால், தேவன் தமது வல்லமையை தேவையின்றி பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளக்க வல்லமையுள்ளவரான அவர், அதற்கென அவசியம் வந்தால்தான் அதைச் செய்வாரெயொழிய, அவசியமின்றி அதைச் செய்வதில்லை.

தேவன் தமது வல்லமையை அநீதியாகவும் பயன்படுத்துவதில்லை. இதற்கு உதாரணம்தான், எல்லோரையும் இரட்சிக்க அவரால் முடியாது என்பது. இதை நாம் புரிந்துகொள்ள ஏதுவாக பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

2 கொரி. 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

லௌகீக துக்கம் மரணத்தை உண்டாக்கும் என்றும், சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலை கொண்டிருக்கிறான் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. தேவ ஆவியினால் சொல்லப்பட்ட இவ்விரு கூற்றுகளும் தேவனின் நீதியான தீர்ப்பைக் கூறுவதாக உள்ளன. இத்தீர்ப்புகளுக்கு மாறாக, லௌகீக துக்கம் கொண்டோருக்கும் சகோதரனிடத்தில் அன்பு கூராதவனுக்கும் மரணத்தைக் கொடாமல், நித்திய ஜீவனை தேவன் கொடுத்தால் அது தேவனை அநீதியுள்ளவராக்கிவிடும். எனவே அநீதியான இச்செயல்களை தேவனால் நிச்சயம் செய்யமுடியாது. அப்படிச் செய்தால் அவர் நீதியுள்ள தேவன் இல்லை என்றாகிவிடும்.

எனவே தமது நீதியான தீர்ப்பின்படித்தான் ஒருவனுக்கு நித்திய ஜீவனையோ மரணத்தையோ தேவனால் கொடுக்க முடியுமேயன்றி, கோவைபெரியன்ஸ் இரட்டையர் சொல்வதுபோல், எல்லோருக்கும் நித்திய ஜீவனைக் கொடுத்துவிட முடியாது.

எனவே எதையும் செய்யக்கூடிய வல்லவரான தேவன், அவரது நீதிக்கு மாறாக தமது வல்லமையை துஷ்பிரயோகம் செய்து எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்பது சாத்தியமற்றது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard