மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
ஆம், தேவனுக்கு தம்முடையதை தமது இஷ்டப்படி செய்ய அதிகாரமுண்டுதான்; ஆனாலும் தமது நீதிக்கு விரோதமாக அவரால் ஒருபோதும் செய்யமுடியாது. அப்படிச் செய்தால் அவர் “தேவன்” எனும் தகுதியை இழந்துவிடுவார்.
நீதியைச் செய்கிறவன் அவர் (தேவன்) நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான் என 1 யோவான் 3:7 கூறுகிறது. தேவனைப் போல் நாமும் நீதியுள்ளவனாக இருக்கவேண்டும் என வசனம் சொல்கிறது. வசனம் இப்படிச் சொல்லியிருக்கையில், தேவன் அநீதியாக நடக்க முடியுமா? நிச்சயம் அவரால் முடியாது.
இவர்களுக்குத்தான் இரட்சிப்பு, இதைச் செய்பவர்களுக்குத்தான் நித்தியஜீவன், மற்றவர்களுக்கு இரட்சிப்பு இல்லை, மரணமே என ஒருபுறம் தேவன் சொல்லிவிட்டு, தமது வார்த்தைக்கு விரோதமாக, யார் எப்படி நடந்தாலும் எல்லோரையும் இரட்சிக்க அவரால் முடியுமா, எல்லோருக்கும் நித்தியஜீவனைக் கொடுக்க அவரால் முடியுமா?
ஒரு நீதியான தீர்ப்பை சொல்லிவிட்டு, அந்த நீதிக்கு விரோதமாக அவரே செயல்பட முடியுமா? நிச்சயமாக முடியாது. இதன் அடிப்படையில்தான் தேவனால்/இயேசுவால் எல்லோரையும் இரட்சிக்க முடியவே முடியாது என மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
சுந்தர் குறிப்பிட்டுள்ள வசனத்தை ஓர் உவமானத்தில் இயேசு கூறினார். அந்த உவமானம்:
மத்தேயு 20:1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
3 மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: 4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
6 பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். 15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
வீட்டெஜமானின் செயல் அநீதியானது என பலர் கருதுகின்றனர். காலை முதல் மாலை வரை வேலை செய்தவனுக்கும், பிந்தின மாலையில் சிறிது நேரம் வேலை செய்தவனுக்கும் சமமான கூலி கொடுப்பது அநீதியானது என நாம் நமது நீதியின்படி கருதுகிறோம். ஆனால் அது சரியல்ல. ஏனெனில் இங்கு வேலைசெய்யும் நேரத்துக்குத்தக்கதாக கூலி வழங்கப்படும் என வீட்டெஜமான் சொல்லவில்லை. தொடக்கத்தில் வேலை செய்யச் சென்றவர்களிடம் மட்டுமே கூலி பேசி, ஒரு பணம் தருவதாக எஜமான் கூறினான். மற்ற எவரிடமும் அவன் எவ்வளவு கூலி எனச் சொல்லவில்லை. மாறாக, நியாயமான கூலி தருவேன் என்று மட்டுமே சொன்னான்.
இறுதியில் எல்லோருக்கும் ஒரு பணம் கூலியாகக் கொடுத்தான். இதில் யாருக்கும் அநியாயம் நேர சற்றும் வாய்ப்பில்லை. தொடக்கத்தில் வந்தவர்களுக்கு அவர்களிடம் பேசினபடியே ஒரு பணம் கூலி கொடுக்கப்பட்டது. இதில் நிச்சயம் அநியாயம் கிடையாது.
மற்றவர்களுக்கு, குறைந்தபட்சமாக, அவர்கள் வேலைசெய்த நேரத்துக்குத் தக்கதாக 1 பணத்தை விகிதப்படி பிரித்துக்கொடுத்தால் நிச்சயம் அவர்களுக்கு அநியாயம் கிடையாது. விகிதப்படியான அளவைவிட குறைவாகக் கொடுத்தால்தான் அது அநியாயமாகும். ஆனால் எஜமான் அதற்கு சற்றும் இடங்கொடாமல், எல்லோருக்கும் 1 பணத்தையே கூலியாகக் கொடுத்தான். எனவே அவர்கள் எல்லோருக்கும் நியாயமான கூலியைவிட அதிக கூலிதான் கிடைத்தது.
வேலை செய்பவர்களுக்கு அவர்களது நியாயமான கூலியை விட அதிகமாகக் கொடுப்பதை அநியாயம் எனச் சொல்லக்கூடாது. எஜமானின் தயாளம் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே யாருக்கும் அநியாயமான கூலி வழங்கப்படவில்லை என்பது நிச்சயம்.
இதேவிதமாகத்தான் “தீமையை விட்டொழித்து நன்மையைச் செய்யுங்கள், உங்களுக்கு நித்திய ஜீவனைத் தருவேன்” என நம் எஜமானான தேவன் நம்மிடம் சொல்லியிருக்கையில், நம்மில் சிலர் நம் 20-வது வயதிலேயே மனந்திரும்பி தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கலாம், சிலர் 30-வது வயதில், சிலர் 40-வது வயதில், சிலர் 50-வது வயதில், இன்னும் சிலர் மரிக்குந்தருவாயில்கூட மனந்திரும்பி தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கலாம். இப்படி எந்த வயதில் மனந்திரும்பினாலும், தேவன் அவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவனையே கொடுப்பார்; அப்படி கொடுப்பதில் யாருக்கும் அநியாயம் கிடையாது என்பதைப் புரியவைக்கத்தான் அந்த உவமானத்தை இயேசு சொன்னார்.
ஆம், ஒருவன் தன் மரணத்திற்கு முன் எப்போது மனந்திரும்பினாலும் அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. ஆனால் மனந்திரும்பாதவர்களுக்கு நித்திய ஜீவன் கிடையாது. இயேசு சொன்ன உவமானத்தில், கூலி பெற்ற அனைவரும் வேலை செய்தவர்கள் மட்டுமே. வேலை செய்யாத யாரும் கூலி பெறவில்லை.
அதுபோலவே மனந்திரும்பி நன்மை எனும் கிரியையைச் செய்தால் மட்டுமே நித்திய ஜீவன்; மனந்திரும்பாமலும் நன்மை எனும் கிரியையைச் செய்யாமலும் இருப்பவர்களுக்கு நித்திய ஜீவன் கிடையாது. மத்தேயு 25:31-46 வசனங்களில் தேவனின் இந்த நியாயத்தீர்ப்பு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நன்மை எனும் கிரியை செய்யாமல் எவருக்கும் நித்திய ஜீவன் கிடையாது; எவரையும் தேவனால்/கிறிஸ்துவால் இரட்சிக்க முடியவே முடியாது.
ஆதியாகமம் 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
யாக்கோபு 4:17 ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
சகோதரர் அவர்களே கிரியின் அவசியத்தை அதிகமதிகமாக அறிந்தவன் நான். என்னுடய அனேக பதிவுகளில் கிரியின் அவசியத்தை குறித்து திரும்ப திரும்ப எழுதியிருக்கிறேன். இயேசுவின் வார்த்தைகளை அப்படியே கொண்டு வாழ முயற்ச்சிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல தேவனின் கற்பனைகள் மற்றும் நீதி நியாயங்களையும்கூட கைகொண்டு நடக்கவேண்டும் என்று அனேக வசன ஆதாரங்களுடன் பல கட்டுரைகளை நான் பதிவிட்டிருக்கிறேன்
ஆனால் என்னுடய கிரியயிநிமித்தம் நான் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்டுவதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும் என்றே கருதுகிறேன். என்னுடய கிரியை எல்லாமே
தேவனுடய பார்வைக்கு ஒன்றுமில்லை, வெறும் அழுக்கான கந்தைகள் போன்றதே என்னுடய நீதியும். கிரியை முக்கியமானதுதான் ஆனால் அந்த கிரியை வைத்துகொண்டு தேவனுக்கு முன்னால் மேன்மை பாராடுவது தவறு!
ரோமர் 4:2ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு;ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
தேவன் கழுதையை பேசவைத்து கிரியை செய்ய வைப்பார், கல்லை எடுத்து அதை ஆபிரகாமுக்கு
பிள்ளைகளாக்கி காரியங்களை நடப்பிப்பார் இந்நிலையில் மாம்சமான யாருமே தேவனுக்கு முன்னால் மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை
II கொரிந்தியர் 10:17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே
மேன்மைபாராட்டக்கடவன்.
கலாத்தியர் 6:14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
என்று வேதம் திரும்ப திரும்ப சொல்லும் பட்சத்தில், தவறான கருத்துடைய ஒருவருக்கு பதில் சொல்கிறோம் என்று நினைத்துகொண்டு இவ்வுலகில் எல்லா காரியங்களையும் நடப்பிக்கிற தேவனால் எல்லாம் கூடாது ஆனால் என்னுடய கிரியையினால் அது கூடிவிடும் என்று எழுதப்படும் வார்த்தைகள் நிச்சயம் சரியான கருத்துக்கள் அல்ல. அதை கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லும் கூட்டத்தாரும் அமோதிப்பது முறையல்ல! யாரையோ தாக்கவேண்டும் என்பதற்காக தேவனை மட்டுபடுத்துவது முறையல்ல!
SUNDAR wrote:
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் " ஆனால் அதை செய்வதும் செய்திருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்! இவ்விஷயத்தில் அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!
குழப்பம் என்னுடைய கருத்தில் இல்லை சகோதரரே நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில்தான் இருக்கிறது. நீங்கள் சொல்லியுள்ள உதாரணத்தின்படியே நான் வருகிறேன்.
aryadasan wrote:
////நான் கொஞ்சம் சொல்லட்டுமா, எங்க அம்மா விடுமுறை நாட்களில் நல்ல விருந்து செய்வாங்க, நாங்களோ விடுமுறை தானே என்று நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம், அம்மா சொல்லுவாங்க,"குளிச்சுட்டு வாங்கடா, சாப்பிடலாம்..." என்பதாக;நாங்கள் சொல்லுவோம், பசிக்குதம்மா, சாப்பிட்டுவிட்டு குளிக்கிறோம் என்பதாக,அம்மா சொல்லுவாங்க,"குளிச்சா தான் சாப்பாடு.." என்பதாக.
இப்போது சொல்லுங்க பெரியவங்களே, எங்கம்மா எங்களுக்கு விருந்து சமைக்க இயலாதவங்களா..?///
"குளித்துவிட்டு சாப்பிடு" என்று சொல்லும் உங்கள் தாயாருக்கு சமைக்க தெரியாது என்றோ அல்லது "குளிக்காத பிள்ளைகளுக்கு அந்த உணவை கொடுக்க முடியாது" என்றோ நாம் நிச்சயம் கூற முடியாது. அவர்களால் செய்ய முடியும், ஆனால் அவர்களின் சொல்லிய கட்டளையிநிமித்தம் அவர்கள் செய்வதற்கு மறுக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.
அதைதான் நானும் இங்கு சொல்ல வருகிறேன்!
இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக வாழ்ந்தால், இயேசு வழியேதான் இரட்சிப்பு என்பது தேவ நியமணம் அனால் தேவன் நினைத்தால் எல்லோரையும் இரட்சிக்க முடியும்! ஏனெனில் அந்த நியமணத்தை ஏற்ப்படுத்தியவரும் இயேசுவை பூமிக்கு அனுப்பியவரும் தேவனே! இங்கு தேவனால் முடியாது என்று ஒரு காரியத்தை சொல்வோமாகில் அவரை "சர்வ வல்லவர்" என்று வேதம் சொல்வது பொருந்தாது.
தேவனால் எல்லாம் கூடும் ஆனால் இயேசுவின் வழியாக வந்தால் மட்டுமே அவர் ஏற்றுக்கொள்வார் என்று வேண்டுமானால் சொல்லிகொள்ளலாம்.
aryadasan wrote:
///தன் மெய்வருத்த கூலி தரும் என்பது போல மனிதனுடைய முயற்சியில்லாமல் இறையருளைப் பெறவே இயலாது;///
மெய்வருத்த கூலிதரும் என்பது வள்ளுவர் வாக்கு. மெய் வருத்துவோருக்கு கூலி நிச்சயம் உண்டுன்பது உண்மையே. ஆனால கிறிஸ்த்தவத்தில் இயேசுவை விசுவாசித்தால் இரட்சிப்ப உண்டு என்பது வேத வாக்கு. அதற்க்கு மெய்வருத்த வேண்டிய அவசியம் இல்லை.
ரோமர் 10:9என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இங்கு மெய் என்ற உடம்பு அல்ல இருதய விசுவாசமே பிரதான இடம்பெறும்!
aryadasan wrote:
///இறைச்சித்தம் எப்போதும் நமக்கு ஆதரவாகவே இருந்தாலும் மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் அது நடைபெறாமலும் போகிறது என்பதே உண்மை.///
தேவன் தந்துள்ள எல்லா கட்டளைகளுக்கும் எல்லா நேரத்திலும் கீழ்படிந்து நடந்தவன் எவரும் இல்லை!
aryadasan wrote:
///எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.///
எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்பது தேவனின் சித்தமாயிருக்கிறது அவருடய சிந்தையே நாமும் கொண்டிருப்போம்/வாஞ்சிப்போம். அதற்க்கு மேல் என்ன நடக்க வேண்டும் என்பதை தேவன் பார்த்துகொள்வார். தேவனின் சித்தத்துக்கு விரோதமாக முடிவெடுக்க நாம் அவரைவிட பெரியவர்கள் அல்ல!
எனது பதிவுகளை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் கிரியையை மேன்மைபாராட்டி எங்காவது எழுதியுள்ளேனா? அப்படி இருந்தால் அப்பதிவை தனியே எடுத்துக் காட்டுங்கள்.
கிரியை இருந்தால்தான் நித்தியஜீவன் என வேதாகமம் சொல்வதை எடுத்துச் சொன்னால், கிரியையை மேன்மைபாராட்டுவதாக அர்த்தமாகுமா?
நித்திய ஜீவனைப் பெற கிரியை அவசியமா அவசியமில்லையா எனும் கேள்விக்கு ஒரு தெளிவான பதிலைச் சொல்ல நீங்கள் தயங்குகிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல, வேதாகமத்தை வியாக்கியானம் செய்கிற பலரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
இப்போது கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்: நித்திய ஜீவனைப் பெற கிரியை அவசியமா அவசியமில்லையா?
இக்கேள்விக்கு அவசியம் எனும் பதிலைச் சொன்னால், “கிரியை இல்லாமல் ஒருவரையும் இரட்சிக்க தேவனால் முடியாது” எனும் கூற்றை நீங்கள் ஒத்துக் கொண்டவராவீர்கள்.
அவசியமில்லை எனும் பதிலைச் சொன்னால், கோவை பெரியன்ஸ் தளத்தார் சொல்கிறதான “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” எனும் கூற்றை நீங்கள் ஒத்துக் கொண்டவராவீர்கள்.
நிதானமாக யோசித்து திட்டவட்டமான ஒரு பதிலைச் சொல்லுங்கள்.
திட்டமான ஒரு பதிலைச் சொல்லாமல் இப்படியும் அப்படியும் நீங்கள் சொல்வதைப் படிக்கும்போது, எனக்கு பின்வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
1 ராஜாக்கள் 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
எலியா ஜனங்களிடம் கேட்டதைப் போலவே நான் உங்களிடம் கேட்கிறேன்:
நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்திப் பேசுவீகள்; நித்திய ஜீவனைப் பெற கிரியை அவசியம் என்றால் அதை நேரடியாகச் சொல்லுங்கள்; நித்திய ஜீவனைப் பெற கிரியை அவசியமில்லை என்றால் கோவை பெரியன்ஸ் தளத்தாரைப் பின்பற்றி அதை நேரடியாகச் சொல்லுங்கள்.
எலியாவின் கேள்விக்கு அன்றைய ஜனங்கள் பதில் சொல்லமாலிருந்ததைப் போல, எனது கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கப்போகிறீர்களா, அல்லது பதில் சொல்லப் போகிறீர்களா? விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
//இவ்வுலகில் எல்லா காரியங்களையும் நடப்பிக்கிற தேவனால் எல்லாம் கூடாது, ஆனால் என்னுடய கிரியையினால் அது கூடிவிடும் என்று எழுதப்படும் வார்த்தைகள் நிச்சயம் சரியான கருத்துக்கள் அல்ல.//
சுந்தர் அவர்களே! பின்வரும் வசனத்தை நீங்கள் படித்துள்ளீர்களல்லவா?
ஏசாயா 59:1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
மனிதனை இரட்சிக்க முடியாத நிலையில் தேவன் இல்லைதான்; ஆனால் நம்மிடம் அக்கிரமங்கள் இருக்கும்வரை அவர் தமது முகத்தை நமக்கு மறைத்துக்கொள்ளத்தான் செய்வார், தமது கையை குறுக்கிக்கொள்ளத்தான் செய்வார். அந்நிலையில் இருந்துகொண்டு அவரால் நம்மை இரட்சிக்க முடியாது என்பதே உண்மை.
தேவனுக்கும் நமக்குமிடையேயான பிரிவினையைப் போக்கத்தான் இயேசு வந்தார்; அவரது தியாக பலியால் நமது அக்கிரமங்கள் நீக்கப்படுகின்றன எனச் சொல்கிறீர்களா?
அப்படியானால் நாம் அக்கிரமங்களை செய்துகொண்டே இருக்கலாம் என்றல்லவா அர்த்தமாகிறது? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
எபிரெயர் 6:4 ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
கூடாத எனும் வார்த்தைக்கு கிரேக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள adunatos எனும் வார்த்தைக்கு impossible என அர்த்தமாகும்.
நாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு நம் செவியை அடைத்துக்கொண்டால், நம்மை மனந்திரும்பச்செய்வது தேவனுக்குக் கூடாத காரியம் என எபிரெய ஆக்கியோன் கூறுகிறார். இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் தேவனுடைய வார்த்தைகளை உதாசீனம் செய்துவிட்டு நம் மனம்போல் நடந்துவந்தால், தேவனால் நம்மை இரட்சிக்க முடியாது, முடியவே முடியாது என்பது நிச்சயம்.
இவ்வுண்மையை நீங்கள் சொல்லத்தவறினால், வேத வசனத்துக்கு துரோகம் செய்கிறீர்கள் என அர்த்தம்.
//தேவனால் எல்லாம் கூடும்; ஆனால் இயேசுவின் வழியாக வந்தால் மட்டுமே அவர் ஏற்றுக்கொள்வார் என்று வேண்டுமானால் சொல்லிகொள்ளலாம்.//
உங்களது இக்கூற்றின் அர்த்தமென்ன? இயேசுவின் வழியாக வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வாரெனில், இயேசுவின் வழியாக வராதவர்களை என்ன செய்வார்? ஏற்றுக்கொள்ள மாட்டார் தானே?
இப்பொழுது சொல்லுங்கள்: இயேசுவின் வழியாக வராதவர்களை தேவனால் ஏற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா?
முடியாது என்றால், தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியாது எனும் எனது கூற்றை நீங்களும் ஒத்துக்கொண்டீர்கள் என அர்த்தம்.
முடியும் என்றால் தேவன் அதைச் செய்வாரா, மாட்டாரா?
செய்வார் என்றால், “இயேசுவின் வழியாக வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்” எனும் கூற்று பொய்யாகிவிடும்.
செய்ய மாட்டார் எனில் அதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கவும்.
//ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெறாத யாராக இருந்தாலும் மரித்தவுடன் பாதாளத்தில் இறங்குவார்கள்.//
//3. நரக பாதாளம் ... இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.//
//மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரகபாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.//
நரகபாதாளத்தில் பிசாசுகளினால் வாதிக்கப்படும் பாவிகளை அந்த வாதையிலிருந்து உடனடியாக விடுவிக்க தேவனால் முடியுமா, முடியாதா? எல்லா மனிதர்களையும் இரட்சிக்க முடிந்த தேவனால், நரக பாதாளத்தில் மனிதர்கள் பிசாசால் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இரவு பகலாக வாதிக்கப்படுவதிலிருந்து தப்புவிக்க முடியுமா, முடியாதா?
இக்கேள்விக்குக் கட்டாயம் பதில் சொல்லும்படி சுந்தரைக் கேட்டுக்கொள்கிறேன்.
//ரோமர் 10:9என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இங்கு மெய் என்ற உடம்பு அல்ல இருதய விசுவாசமே பிரதான இடம்பெறும்!//
நல்லது, இயேசுவை வாயினால் அறிக்கையிட்டு, இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான். அறிக்கை செய்யாதவன், விசுவாசியாதவன் இரட்சிக்கப்படுவானா? அவனை இரட்சிக்க தேவனால் முடியுமா, முடியாதா?
//எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்பது தேவனின் சித்தமாயிருக்கிறது அவருடய சிந்தையே நாமும் கொண்டிருப்போம்/வாஞ்சிப்போம். அதற்கு மேல் என்ன நடக்க வேண்டும் என்பதை தேவன் பார்த்துகொள்வார். தேவனின் சித்தத்துக்கு விரோதமாக முடிவெடுக்க நாம் அவரைவிட பெரியவர்கள் அல்ல!//
எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் எனும் தேவ சிந்தை உங்களிடம் தான் உள்ளது, என்னிடம் இல்லை எனக் கருதவேண்டாம். அந்த சிந்தை என்னிடம் இருப்பதால்தான், தேவ சித்தம் நிறைவேற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இவ்வளவாய் எடுத்துரைத்து வருகிறேன்.
எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்ற தேவ சித்தம் ஒருபுறமிருந்தாலும், இறுதியில் என்ன நடக்கும் என்ற முடிவையும் தேவன் ஏற்கனவே சொல்லிவிட்டார். அந்த முடிவை சற்று படியுங்கள்.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.
மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
இவைகளெல்லாம் தேவனால் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்கள். இத்தீர்மானங்களுக்கு மாறாக தேவன் செய்ய வாய்ப்புண்டு என யாராவது போதித்தால், அவர்கள் தேவ வார்த்தைகளை அவமாக்குகிறார்கள் என அர்த்தம். அந்த அவமாக்குதலைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். தேவனின் தீர்மானங்களை அவர் சொன்னபடியே அப்படியே அறிவிப்பதுதான் மெய்யான ஊழியனின் கடமை. யோவான் ஸ்நானகன் அப்படியே அறிவித்ததை பின்வரும் வசனங்களில் பாருங்கள்.
மத்தேயு 3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
ஆனால் இன்று நீங்களும் கோவைபெரியன்ஸ் தளத்தாரைப் போன்ற சிலரும், தேவனின் தீர்மானமான தீர்மானங்களுக்கு எதிராக, மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாவிட்டாலும் அவனை அவர் இரட்சித்துவிடுவார் என்பது போன்ற மாயத்தோற்றத்தைக் காட்டுகிறீர்கள்.
அக்கினியில் சுட்டெரிப்பார் என்றால் சுட்டெரிப்பார்தான். அதற்கு மாறாக தேவனால் செய்ய முடியாது, முடியவே முடியாது. அப்படிச் செய்தால் அவரது வசனங்களை அவரே பொய்யாக்குகிறார் என அர்த்தம்.
பொய் சொல்லவோ மனம் மாறவோ அவர் மனிதனலல்ல.
1 சாமுவேல் 15:29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல.
எனவே தேவனையும் அவரது தீர்மானங்களையும் குறித்துப் பேசும்போது நிதானமாகவும் உள்ளதை உள்ளபடியேயும் சொல்லும்படி வேண்டுகிறேன்.
தேவனின் சித்தத்துக்கு விரோதமாக முடிவெடுக்க நாம் அவரைவிட பெரியவர்கள் அல்ல என நீங்கள் சொல்லியிருந்தீர்கள். உங்கள் கூற்றையே சற்று மாற்றி நான் இப்படியாகச் சொல்லுகிறேன்.
தேவனின் தீர்மானத்துக்கு விரோதமாக முடிவெடுக்க நாம் அவரைவிட பெரியவர்கள் அல்ல.
//இயேசு எல்லா மனிதர்களுக்காகவும் மீட்கும் பலியானாலும் "அவரை விசுவாசிப்பவனுக்குத்தான் நித்ய ஜீவன் உண்டு" என்று வேதம் குறிப்பிடுகிறது. அவரின் கரத்தின்கீழ் வந்தவருக்காக மட்டும்தான் அவர் இறைவனிடம் பரிந்து பேசமுடியும். சாத்தானின் பிடியில் இருக்கும் ஒருவன் அவனாக மனம்திரும்பாத பட்சத்தில் அவனது விருப்பமில்லாத பட்சத்தில் இறைவனால் ஒன்றும் பண்ண முடியாது!//
சகோதரர் அவர்களேஒரு மனுஷனின் இரட்சிப்பு அவனது கிரியை மிக மிக அவசியம்என்ற கருத்தை குறித்து நான் இங்கு எந்த எதிர் கருத்தும் எழுத விரும்பவில்லை.
ஆனால் "மனுஷனால் கூடாதுதான் அது தேவனால் கூடும் அல்லது தேவனுடன் சேர்ந்தால் மனுஷனால் கூடும்" என்று வசனம் சொல்லும் போது "தேவனால் சிலது முடியவே முடியாது அனால் மனுஷனுடைய கிரியையினால் கூடும்" என்பது போன்று ஒரு கருத்தை தாங்கள் பதிவிட்டு வருகிறீர்கள்.
நான் உங்களை ஒரேஒரு கேள்வி கேட்கிறேன்: நீங்கள் செய்யும் ஒரு நன்மையான காரியம் உங்கள் சுய பெலத்தால் செய்கிறீர்களா அல்லது தேவன் உங்களுக்கு அதை செய்யும் அளவுக்கு வாய்ப்பை ஏற்ப்படுத்தியதால் செய்கிறீர்களா? உங்களை அந்த கிரியைகளை செய்யவைப்பவர் தேவனே என்பதே எனது கருத்து (மனுஷ
பெலத்தினாலோ பராக்கிரமத்தலோ அல்ல, தேவனின் ஆவியாலேயே எல்லாம் ஆகும்)
தாங்கள் உங்கள் சொந்த பெலத்தால்தான் கிரியை செய்கிறேன் அதில் தேவ ஆவியானவரின் தூண்டுதல் இல்லை என்று கருதுவீர்களானால் உங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
இல்லை தேவனின் தூண்டுதலின் பேரில் என்னுடய விருப்பமும் இணைத்து நன்மை செய்கிறேன் என்று கருதினால் அனைத்துக்கும் அடிப்படை காரணம் அல்லது அனைத்தையும் செய்பவர் தேவன் என்று ஆகிவிடுகிறது. அவர் மனுஷனுடன் சேர்ந்து எல்லாவற்றையும் செய்து முடித்தாலும் சரி அல்லது மனுஷன் தேவனுடன் சேர்ந்தது எல்லாம் கூடுமானாலும் சரி அங்கு "எல்லாம்" என்ற வார்த்தையில் எல்லோரின் இரட்சிப்பும் அடங்குகிறது. ஆனால் அதை
அவரவர் தகுதிக்கு ஏற்ப வழங்குவது தேவனின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிபடையில் நடக்கும்.
இங்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பது "இது தேவனால் முடியாது" என்று எதையும் சொல்லாதீர்கள் என்பதுதான். ஒரே ஒரு காரியம் அவரால் முடியாது என்றாலும் பின்னர் "சர்வ வல்லவர்" என்பதன் பொருள் என்ன?
நான் குறிப்பிட்ட பாதாளத்தில் அவதிப்படும் மனுஷர்களை தேவன் நினைத்தால் நிச்சயம் மீட்க முடியும். ஆனால் அவர் அதற்க்கான திட்டங்களை வகுத்து அந்த நாட்கள் நிறைவேரும்வரை காத்திருக்கிறார் அவ்வளவே! (அவரால் முடியாது என்று சொல்ல ஒன்றும் இல்லை). உடனடியாக அவர்களை மீட்க முடியுமா என்றாலும் முடியும்தான். ஆனால் அதன் பின்விளைவுகள் சற்று மோசமாக இருக்கும் அதனால் மனுஷனுக்குதான் இன்னும் அதிக வேதனை. அதனாலேயே அவர் காலம் நிறைவேறும்வரை பொறுமையாக இருக்கிறார். அவர் பொறுமை காப்பது எல்லாம் மனுஷனுக்காகவே மற்றபடி அவரால் முடியாமல் அல்ல!
ஒரு குழந்தையை பிடித்து வைத்துகொண்டு ஒருவன் பிளாக் மெயில் பண்ணும் போது துப்பாக்கியுடன் நிற்கும் நூறு போலிஸ்காரர்கள் பொறுமைகாப்பது இல்லையா? அது போன்றதுதான் தேவனால் முடியாது என்று சொல்லப்படும் நிலைகளும்
மேலும் ஒருகாரியத்தை நான் இங்கு தெரிவித்துகொள்கிறேன். துன்மார்க்கனுக்கு நித்திய அழிவு மட்டும் தான் தண்டனை என்றால் எல்லா துன்மார்க்கனும் முடிந்த அளவு துன்மாக்கமாக நடந்து வாழும் காலத்தில் எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு வாழ்ந்து மரித்து பின்னர் தேவனின் நியாயதீர்ப்பின் போது சுலபமாக அழிந்து போவார்கள். இன்று உலகத்தில் துன்மார்க்கமாக நடக்கும் அநேகர் அப்படி எண்ணத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதைசெய் இதை செய்யாதே என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதைவிட முடிந்த அளவு இன்பமாக வாழ்ந்துவிட்டு, சாவு வந்தால் செத்துபோக வேண்டியதுதான் என்பதுதான் பலரின் கருத்து!
நானும் கூட ஆண்டவரை அறியாத காலங்களில் அதிகமாக சிகரெட் பிடிப்பவன் யாராவது வந்து என்னிடம் கேன்சர் வரும் நீ சீக்கிரம் செத்துபோவாய் என்று சொன்னால் "இந்த உலகில் இருந்து என்னத்தை கண்டோம் சீக்கிரம் செத்துபோவதே நலம் என்று சொல்லும் நிலையிலேயே இருந்தேன்!
ஆனால் ஆண்டவரை அறிந்து உண்மையை உணர்ந்த பின்னரே அழிவு என்பது அவ்வளவு சுலபமானது அல்லஎன்றும் அவனவன் செய்த துன்மார்க்கத்துக்கு தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் ஒருவனாலும் அழிந்துபோகவும் முடியாது நித்தியத்திலும் பிரவேசிக்க முடியாது! என்பதை அறிந்து கொண்டேன்
"துன்மார்க்கனுக்கு அவன் கிரியைக்கு தக்க தண்டனை உண்டு" என்பதை யாரும் மறுக்க முடியாது! ஆனால் அந்த தண்டனை எப்படியிருக்கும்? அழிவு என்பது எதை குறிக்கும்? என்பதை குறித்து முடிவு சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை! அப்படியே உங்களுக்கு திட்டமாக தெரிந்தாலும் கூட ஒருபுறம் நீங்கள் ஜனங்களை எச்சரித்து விட்டு மறுபுறம் தேவனிடம் அவர்களின் மீட்புக்காக மன்றாடுவது அவசியம். இந்நிலையில் தேவனாலேயே அது முடியாது என்று தேவனின் வல்லமைக்குமேல் மனுஷனின் கிரியை உயர்த்துவது சரியல்ல!
இதற்க்கு மேலும் தேவனால் ஒரு காரியம் முடியாது என்று தாங்கள் கருதுவீர் களானால் அதில் நான் தலையிட விரும்பவில்லை. நாம் ஆரோக்கியமாக விவாதித்தாலும் நாம் சொல்லும் கருத்து என்னவென்பதை கண்டுகொள்ள
மனமில்லாமல் வக்கிரமான எண்ணங்களுடன் சிலர் காத்திருப்பதால் அதிக விவாதம் வேண்டாம் என்றே கருதுகிறேன். அவரவர் கருத்துக்களை அவரவர் தளத்தில் எழுதுவோம் கர்த்தர் தம்முடய பார்வைக்கு நலமானதை செய்யட்டும். என்னை பொறுத்தவரை நான் யாரையும் வசனத்தின் அடிப்படையில் கூட நியாயம் தீர்க்க விரும்பவில்லை.
கிறிஸ்த்தவம் என்பது விசுவாசத்தின் அடிப்படையிலான மார்க்கம்! ஒருவர் எப்படி விசுவாசிக்கிறாரோ அதன் அடிப்படயிலேயே அவருக்கு காரியங்கள் நடைபெறும். விசுவாசமற்ற இடங்களில் இயேசுவால் கிரியை செய்ய முடியவில்லை. யாருடைய விசுவாசத்திலும் நான் குறுக்கிடவிரும்பவில்லை. "விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்பதன் அடிப்படையில் எனது விசுவாசத்தின் அடிப்படையிலான காரியங்களே எனக்கு சம்பவிக்கும்.
என்னுடய வாதத்தின் அடிப்படை கருத்து என்னவெனில்: ஒரு ஆதாமின் மீறுதல் மற்றும் கீழ்படியாமையால் எல்லா மனுஷனையும் பாவியாக்கிபோனோம்
(இங்கு நம்முடைய கிரியை எதுவும் இல்லை) ஒரே ஒரு ஆபிரஹாமின் பலி மூலம் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கபட்டது (இங்கும் நம்முடய கீழ்படிதல் எதுவும் இல்லை) எவ்வளவோ துன்மார்க்கமாக நடந்து சிறை பட்டுப்போன இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரமங்களை எசேக்கியேல் சுமந்தான் என்று வேதம் சொல்கிறது. அதேபோல் ஒரு இயேசுவின் கீழ்படிதல் மற்றும் பலியால் எல்லோரும் இரட்சிப்பை பெற்றோம் (இங்கும் நம்முடய கிரியை எதுவும் இல்லை) அதேபோல் ஒரு ஒரு மனுஷனின் நீதியான கிரியை மற்றும் கீழ்படிதல் மூலம் எல்லா மனுஷனையும் மீட்க முடியும் என்பதே எனது விசுவாசம்.
இந்தியாவில் எத்தனை கோடி மனுஷர்கள் இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங் ஒரு கருத்தை சொல்லும்போது அது இந்தியாவின் கருத்து என்று ஆகிவிடுகிறது. அதேபோல் மொத்த மனுஷ வர்க்கமும் ஒரே ஒரு ஆளாகத்தான் REPRESENT பண்ணப்படும். ஏனெனில் ஒரேஒரு ஆவியில் இருந்து தான் எல்லோரும் வந்திருக்கிறோம். ஒருவன் சாத்தானை ஜெயம் கொண்டால் எல்லோருமே அவனை ஜெயம்கொண்ட மாதிரிதான்! மற்றபடி துன்மாக்கனுக்கு கொடுக்கப்பட வேண்டிய தணடனையை தேவன் பார்த்துகொள்வார்.
நீங்கள் "இரட்சிப்பை கண்டடைய மாட்டான்" என்று எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் துன்மார்கனுக்கு என்று கருதுகிறீர்கள். ஆனால் நான் அது எனக்கு என்றே எடுத்து கொண்டு காரியங்களை செய்ய விளைகிறேன் காரணம் சாத்தானை ஜெயிக்க முடியாதவரை நானும் ஒரு துன்மாக்கனே!
எனவே தேவனை அறிந்து கொண்ட ஒவ்வொருவரும் அவரவர் அதிக பிரயாசம் எடுத்து தேவனின் வார்த்தையை சரியாக கைகொண்டு வாழ்ந்து, இயேசுவால் தோற்க்கடிக்கபட்ட நிலையில் இருக்கும் சாத்தானின் அதிகாரத்தை முறியடித்து அவனை ஜெயம்கொள்வதர்க்கான கிரியைகளை செய்வோமாக.
(சாத்தானின் கிரியை இருக்கும்வரை துன்மார்க்கனும் கள்ள உபதேசக்கரனும் இருக்கும் அதை சிலர் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள் அதை யாராலும் ஒழிக்க முடியாது)
//சகோதரர் அவர்களேஒரு மனுஷனின் இரட்சிப்பு அவனது கிரியை மிக மிக அவசியம்என்ற கருத்தை குறித்து நான் இங்கு எந்த எதிர் கருத்தும் எழுத விரும்பவில்லை.//
ஒருவனின் இரட்சிப்புக்கு கிரியை அவசியம் என்கிறீர்கள்; இதற்கு அர்த்தமென்ன? கிரியை இல்லாதவனை தேவனால் இரட்சிக்க முடியாது என்பதுதானே? இதைச் சொல்ல ஏன் தயக்கம்? இதை நான் சொன்னால் ஏன் வருந்துகிறீர்கள்?
சுந்தர்:
//நான் உங்களை ஒரேஒரு கேள்வி கேட்கிறேன்: நீங்கள் செய்யும் ஒரு நன்மையான காரியம் உங்கள் சுய பெலத்தால் செய்கிறீர்களா அல்லது தேவன் உங்களுக்கு அதை செய்யும் அளவுக்கு வாய்ப்பை ஏற்ப்படுத்தியதால் செய்கிறீர்களா? உங்களை அந்த கிரியைகளை செய்யவைப்பவர் தேவனே என்பதே எனது கருத்து (மனுஷ பெலத்தினாலோ பராக்கிரமத்தலோ அல்ல, தேவனின் ஆவியாலேயே எல்லாம் ஆகும்)
தாங்கள் உங்கள் சொந்த பெலத்தால்தான் கிரியை செய்கிறேன் அதில் தேவ ஆவியானவரின் தூண்டுதல் இல்லை என்று கருதுவீர்களானால் உங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை.//
நீங்களும் நானும் கிரியை செய்வதைப் பற்றி இங்கு நாம் விவாதிக்கவில்லை. கிரியை செய்யாதவனை தேவனால் இரட்சிக்க முடியுமா முடியாதா என்பது பற்றித்தான் விவாதிக்கிறோம். இதற்கான பதிலை நேரடியாக தகுந்த வசன ஆதாரத்துடன் சொல்லுங்கள்.//
சுந்தர்:
//இங்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பது "இது தேவனால் முடியாது" என்று எதையும் சொல்லாதீர்கள் என்பதுதான்.//
இப்படிச் சொல்கிற நீங்கள், கோவைபெரியன்ஸ் தளத்தில் சொன்னதை எடுத்துக்காட்டியுள்ளேனே, அதற்கு உங்கள் பதில் என்ன?
கோவைபெரியன்ஸ் தளத்தில் சுந்தர்:
//இயேசு எல்லா மனிதர்களுக்காகவும் மீட்கும் பலியானாலும் "அவரை விசுவாசிப்பவனுக்குத்தான் நித்ய ஜீவன் உண்டு" என்று வேதம் குறிப்பிடுகிறது. அவரின் கரத்தின்கீழ் வந்தவருக்காக மட்டும்தான் அவர் இறைவனிடம் பரிந்து பேசமுடியும். சாத்தானின் பிடியில் இருக்கும் ஒருவன் அவனாக மனம்திரும்பாத பட்சத்தில் அவனது விருப்பமில்லாத பட்சத்தில் இறைவனால் ஒன்றும் பண்ண முடியாது!//
நீங்கள் சொன்னவிதமாகத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் நான் சொன்னதற்காக வருந்துகிறீர்கள்.
சுந்தர்:
//நான் குறிப்பிட்ட பாதாளத்தில் அவதிப்படும் மனுஷர்களை தேவன் நினைத்தால் நிச்சயம் மீட்க முடியும். ஆனால் அவர் அதற்கான திட்டங்களை வகுத்து அந்த நாட்கள் நிறைவேரும்வரை காத்திருக்கிறார் அவ்வளவே! (அவரால் முடியாது என்று சொல்ல ஒன்றும் இல்லை). உடனடியாக அவர்களை மீட்க முடியுமா என்றாலும் முடியும்தான். ஆனால் அதன் பின்விளைவுகள் சற்று மோசமாக இருக்கும் அதனால் மனுஷனுக்குதான் இன்னும் அதிக வேதனை. அதனாலேயே அவர் காலம் நிறைவேறும்வரை பொறுமையாக இருக்கிறார்.//
அதாவது மனுஷன் 6000 ஆண்டுகளாக சாத்தானால் வேதனைப்படுவதைப் பார்த்துக்கொண்டு, காலம் வரும்வரை தேவன் பொறுமையாக இருக்கிறார்.
6000 வருடத்திற்குப் பின்னர் செய்வதை உடனடியாகச் செய்ய முடியாதா? உடனடியாகச் செய்வதால் வருகிற பின்விளைவுகளை தேவனால் தடுக்க முடியாதா?
//மேலும் ஒருகாரியத்தை நான் இங்கு தெரிவித்துகொள்கிறேன். துன்மார்க்கனுக்கு நித்திய அழிவு மட்டும் தான் தண்டனை என்றால் எல்லா துன்மார்க்கனும் முடிந்த அளவு துன்மாக்கமாக நடந்து வாழும் காலத்தில் எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு வாழ்ந்து மரித்து பின்னர் தேவனின் நியாயதீர்ப்பின் போது சுலபமாக அழிந்து போவார்கள். இன்று உலகத்தில் துன்மார்க்கமாக நடக்கும் அநேகர் அப்படி எண்ணத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதைசெய் இதை செய்யாதே என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதைவிட முடிந்த அளவு இன்பமாக வாழ்ந்துவிட்டு, சாவு வந்தால் செத்துபோக வேண்டியதுதான் என்பதுதான் பலரின் கருத்து!//
மனிதனின் கருத்து என்ன, மனிதன் எப்படி வாழ்கிறான் என்பது கேள்வியல்ல. துன்மார்க்கனை தேவன் முழுமையாக அழிப்பாரா மாட்டாரா? இதுபற்றி வசனம் என்ன சொல்கிறது என்பதுதான் கேள்வி. துன்மார்க்கனின் அழிவு பற்றிய பின்வரும் வசனங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
மத்தேயு 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.
மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
மத்தேயு 3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
//இதற்கு மேலும் தேவனால் ஒரு காரியம் முடியாது என்று தாங்கள் கருதுவீர்களானால் அதில் நான் தலையிட விரும்பவில்லை.//
எனது கருத்துக்கு நீங்கள் பதில்சொல்ல வேண்டாம். வசனத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
//நாம் ஆரோக்கியமாக விவாதித்தாலும் நாம் சொல்லும் கருத்து என்னவென்பதை கண்டுகொள்ள மனமில்லாமல் வக்கிரமான எண்ணங்களுடன் சிலர் காத்திருப்பதால் அதிக விவாதம் வேண்டாம் என்றே கருதுகிறேன். //
மற்றவர்களின் விமர்சனத்தையெல்லாம் பொருட்படுத்தினால் நாம் எதையுமே உருப்படியாக விவாதிக்க இயலாது. வக்கிர புத்தி கொண்டவர்களுக்காக நாம் விவாதிக்க வில்லை.
//விசுவாசமற்ற இடங்களில் இயேசுவால் கிரியை செய்ய முடியவில்லை.//
இயேசுவால் முடியவில்லை என நீங்களே சொல்கிறீர்கள்.
//என்னுடய வாதத்தின் அடிப்படை கருத்து என்னவெனில்: ஒரு ஆதாமின் மீறுதல் மற்றும் கீழ்படியாமையால் எல்லா மனுஷனையும் பாவியாக்கிபோனோம்
(இங்கு நம்முடைய கிரியை எதுவும் இல்லை) ஒரே ஒரு ஆபிரஹாமின் பலி மூலம் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கபட்டது (இங்கும் நம்முடய கீழ்படிதல் எதுவும் இல்லை) எவ்வளவோ துன்மார்க்கமாக நடந்து சிறை பட்டுப்போன இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரமங்களை எசேக்கியேல் சுமந்தான் என்று வேதம் சொல்கிறது. அதேபோல் ஒரு இயேசுவின் கீழ்படிதல் மற்றும் பலியால் எல்லோரும் இரட்சிப்பை பெற்றோம் (இங்கும் நம்முடய கிரியை எதுவும் இல்லை) அதேபோல் ஒரு ஒரு மனுஷனின் நீதியான கிரியை மற்றும் கீழ்படிதல் மூலம் எல்லா மனுஷனையும் மீட்க முடியும் என்பதே எனது விசுவாசம். //
உங்கள் விசுவாசம் என்ன என்பது இங்கு கேள்வியல்ல. உங்கள் விசுவாசத்தின்படி யாரும் நியாயந்தீர்க்கப்படப்போவதில்லை. வசனத்தின்படித்தான் எல்லோரும் நியாயந்தீர்க்கப் படுவார்கள். வசனம் என்ன சொல்கிறது?
மத்தேயு 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.
மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
மத்தேயு 3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
இவ்வசனங்களுக்கு மாறாக தேவனால்/இயேசுவால் நியாயந்தீர்க்க முடியுமா முடியாதா என்பதை மட்டும் சொல்லுங்கள்.
/////உங்கள் விசுவாசம் என்ன என்பது இங்கு கேள்வியல்ல. உங்கள் விசுவாசத்தின்படி யாரும் நியாயந்தீர்க்கப்படப்போவதில்லை. வசனத்தின்படித்தான் எல்லோரும் நியாயந்தீர்க்கப் படுவார்கள். வசனம் என்ன சொல்கிறது?////
மன்னிக்கவும் சகோதரரே! உங்களுக்கு தேவையில்லாத எனது விசுவாசத்தின் அடிப்படையிலான பல காரியங்களை இங்கு பதிவிட்டுவிட்டேன்! ஆகினும் மாற்கு 9:23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும் என்றார். என்ற வசனத்தின் அடிப்படையிலேயே அவை கூடும் என்ற கருத்திலேயே நான் அக்காரியங்களை இங்கு பதிவிட்டேன். நீங்கள் அதை அவ்வளவுசுலபமாக நிராகரித்துவிட முடியாது
அனால் அது உங்களுக்க அவசியம் இல்லைதான். விட்டுவிடுவோம்.
இங்கு "தேவனால் எல்லாம் கூடுமா கூடாதா" அவர் சர்வவல்லவரா இல்லையா! என்பதை பற்றி மட்டும் விவாதிப்போம்!
anbu57 wrote:
கோவைபெரியன்ஸ் தளத்தில் சுந்தர்:
//இயேசு எல்லா மனிதர்களுக்காகவும் மீட்கும் பலியானாலும் "அவரை விசுவாசிப்பவனுக்குத்தான் நித்ய ஜீவன் உண்டு" என்று வேதம் குறிப்பிடுகிறது. அவரின் கரத்தின்கீழ் வந்தவருக்காக மட்டும்தான் அவர் இறைவனிடம் பரிந்து பேசமுடியும். சாத்தானின் பிடியில் இருக்கும் ஒருவன் அவனாக மனம்திரும்பாத பட்சத்தில் அவனது விருப்பமில்லாத பட்சத்தில் இறைவனால் ஒன்றும் பண்ண முடியாது!//
நீங்கள் சொன்னவிதமாகத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் நான் சொன்னதற்காக வருந்துகிறீர்கள்.
பொதுவாக "முடியாது" என்ற வார்த்தைக்கு இரண்டுவிதமான பொருள் இருக்கிறது - ஓன்று இயலாமையை குறிக்கும் இயலாது என்ற பொருள்கொள்ள முடியும் இன்னொன்று"இயலும் ஆனால் செய்ய முடியாது" என்ற பொருள். (உதாரணமாக நாம் நினைத்தால் தண்டவாளத்தில் கொண்டு தலையை வைக்க முடியும் அனால் சில காரியங்களினிமித்தம் அதை நம்மால் செய்ய முடியாது)
இதில் நான் குறிப்பிட்ட "முடியாது" என்பது இரண்டாம் வகையை சார்ந்தது. தேவனால் எல்லாம் கூடும் ஆனால் சில காரியங்களினிமித்தம் அதை உடனே செய்ய முடியாது என்பதே! நீங்களும் அதே கருத்தில் சொல்வீர்களானால் இங்கு விவாதம் இல்லை! மற்றபடி
துன்மார்க்கனின் அழிவு பற்றிய பின்வரும் வசனங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
மத்தேயு 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.
மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
மத்தேயு 3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
இவ்வசனங்களுக்கு மாறாக தேவனால்/இயேசுவால் நியாயந்தீர்க்க முடியுமா முடியாதா என்பதை மட்டும் சொல்லுங்கள்.
வேத வசனத்தை விளக்கும்போது அதற்க்கு தொடர்புடைய வசனங்களை ஆராயாமல் ஓரிரண்ட வசனங்களை எடுத்துகொண்டு இப்படி நடக்குமா நடக்காதா என்றெல்லாம் உடனடி பதில் சொல்வது சரியாக அமையாது!
இதேபோல் கீழ்கண்ட வசனங்களை சிலரை தவறாக பொருள்கொண்டு:
யோவான் 14:14என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
யோவான் 16:23 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
கேன்சர் உடனே நீங்கவேண்டும் என்றும் எனக்கு ஒருகோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுவிட்டு அது கிடைக்காத காரணத்தில் "வேத வார்த்தைகள் பொய்" என்று எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே தாங்கள் கேட்பதுபோல் எந்த வசனத்துக்கும் முடியும்/ முடியாது என்று ஓரிரு வார்த்தையில் யாரும் பதில் சொல்லிவிட முடியாது!
தாங்கள் சொல்வதுபோலவே அக்கினியில் அவித்தாலும் தண்டனை கொடுத்தாலும் அழித்தாலும் பின்னர் லூக்கா 3:5மாம்சமானயாவரும்தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்ற வசனத்தின் அடிப்படையில் சர்வ வல்ல தேவனால் இரட்சிக்க முடியாதா என்ன? அவர் சர்வ வல்லவர் அல்லவா?
//மாற்கு 9:23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும் என்றார். என்ற வசனத்தின் அடிப்படையிலேயே அவை கூடும் என்ற கருத்திலேயே நான் அக்காரியங்களை இங்கு பதிவிட்டேன். நீங்கள் அதை அவ்வளவு சுலபமாக நிராகரித்துவிட முடியாது.//
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருவன் ஒரு காரியத்தை தேவசித்தத்திற்கும் தேவநீதிக்கும் உட்பட்டு விசுவாசித்தால்தான் அது அவனுக்கு ஆகும் என்பதை அறியீர்களா (1 யோவான் 5:14)?
சுந்தர்:
//பொதுவாக "முடியாது" என்ற வார்த்தைக்கு இரண்டுவிதமான பொருள் இருக்கிறது - ஓன்று இயலாமையை குறிக்கும் இயலாது என்ற பொருள்கொள்ள முடியும். இன்னொன்று"இயலும் ஆனால் செய்ய முடியாது" என்ற பொருள். (உதாரணமாக நாம் நினைத்தால் தண்டவாளத்தில் கொண்டு தலையை வைக்க முடியும், ஆனால் சில காரியங்களினிமித்தம் அதை நம்மால் செய்ய முடியாது)//
இதே கருத்தில்தான் நான் ஆரம்பம் முதல் கூறிவருகிறேன். பொய் சொல்ல நம்மால் முடியும்தான்; ஆனால் நம் பொய் சொல்ல நம் மனம் இடங்கொடுக்காத பட்சத்தில், வெட்டிப் போட்டாலும் பொய் சொல்ல நம்மால் முடியாது. இதே ரீதியில்தான் தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என நான் சொல்கிறேன். எனது பதிவுகளை ஆரம்பம் முதல் மீண்டுமொருமுறை நிதானமாகப் படித்துப்பாருங்கள். குறிப்பாக பின்வரும் எனது பதிவைப் படித்துப் பாருங்கள்.
அன்பு57:
//இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என வசனம் சொன்னால் சொன்னதுதான். பிறரது தப்பிதங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார் என இயேசு சொன்னால் சொன்னதுதான்.
இயேசுவின் வசனத்துக்கு மாறாக, பிறரது தப்பிதங்களை மன்னியாதவனின் தப்பிதங்களை பிதா மன்னித்தால், அதுதான் இயேசுவுக்குப் பெரும் நிந்தையாகும். இயேசுவுக்கு நிந்தை உண்டாக பிதா ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டார், அது அவரால் முடியாது, முடியவே முடியாது.
எனவே இரக்கஞ்செய்யாதவனை, பிறரது தப்பிதங்களை மன்னிக்காதவனை தேவனோ இயேசுவோ இரட்சிப்பதென்பது முடியாது, முடியவே முடியாது.
இது அவர்களின் இயலாமையைக் காட்டவில்லை. சொன்ன சொல் தவறாத அவர்களது வாக்கின் நிறைவேறுதலைக் காட்டுகிறது.//
இப்போது புரிகிறதா சகோ.சுந்தர் அவர்களே?
என் வசனமே உங்களை நியாயந்தீர்க்கும் என இயேசு சொன்னதற்கு மாறாக நடப்பதற்கு தேவனால்/இயேசுவால் நிச்சயமாக முடியாது. இதன் அடிப்படையில்தான் எல்லோரையும் இரட்சிக்க தேவனால்/இயேசுவால் முடியாது எனக் கூறியிருந்தேன்.
என் வசனமே உங்களை நியாயந்தீர்க்கும் என இயேசு சொன்னதற்கு மாறாக நடப்பதற்கு தேவனால்/இயேசுவால் நிச்சயமாக முடியாது. இதன் அடிப்படையில்தான் எல்லோரையும் இரட்சிக்க தேவனால்/இயேசுவால் முடியாது எனக் கூறியிருந்தேன்.
தங்கள் கருத்து க்கு நன்றி சகோதரரே.
"எல்லோருக்கும் மீட்பு" என்ற கருத்து குறித்து மேலும் பதிவுகள் எதுவும் இடவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தபட்டபடியால் இந்த திரியில் தொடர்ந்து பதிவுகள் எதுவும் எழுதவில்லை. மன்னிக்கவும்!