நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு


Militant

Status: Offline
Posts: 830
Date:
இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு
Permalink  
 


இதே தலைப்பில் “கோவை பெரியன்ஸ்” தளத்தில் 6-7-2011-ல் ஒரு திரி துவக்கப்பட்டு ஒரு பதிவுடன் நிற்கிறது.

இப்பதிவுக்கு சுமார் 1 வருடத்திற்கு முன்னர் (22-5-2010-ல்) அதே கோவை பெரியன்ஸ் தளத்தில் “பாவத்தின் சம்பளம் மரணம்.” எனும் திரியில் இரண்டாம் மரணம் பற்றி பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

//விரும்பி செய்யும் பாவத்தின் தண்டனையை குறித்து நாம் இனி பார்க்கலாம். ஆதாமும் அவன் பின் சந்ததியாருக்கும் கிடைத்த தண்டனை இவ்வகையைச் சேர்ந்தது; பிறகு இயேசு கிறிஸ்து அந்த தண்டனைக்கு செலுத்திய மீட்ப்பின் பொருளினாலேயே அந்த பாவத்திற்கும் பிறகு செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க பெற்றது.

மன்னிப்பு பெறும் பாவம் என்றால், ஆதாம் செய்த பாவத்தின் நிமித்தம் பெலவீனத்தால் நாம் செய்யும் பாவம் ஆகும், இதற்காகவே கிறிஸ்து மீட்பின் பொருள் செலுத்திவிட்டார். அவை விரும்பிச் செய்வது அல்ல, மாறாக அறியாமையில் செய்வது, அல்லது மாம்சத்தின் பலவீனத்தில் செய்கிறது ஆகும். கிறிஸ்துவின் பலியின் நிமித்தம் நாம் மன்னிப்பு கேட்கும் போது அவை நமக்கு மன்னிக்கப்படும் என்று தேவன் வாக்கு செய்திருக்கிறார்.

மன்னிப்பு பெறாத பாவங்கள் என்றால், விரும்பியே செய்வதாகும். எப்படி விரும்பி செய்த முதல் பாவத்திற்கு மரணம் தண்டனையாக இருந்ததோ, அப்படியெ தேவனை பற்றி எல்லா அறிவையும் பெற்று விரும்பி செய்யும் பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. இதை இரண்டாம் மரணம் என்று வேதம் கூறுகிறது. முதல் தடவை செய்த பாவத்திற்கு கிறிஸ்து பலியானார், ஆனால் அப்பொழுது இந்த பாவத்திலிருந்து தப்பிக்கும் படி ஒன்றுமே இருக்காதே.
//

இப்பதிவில், “தேவனை அறியும் அறிவைப் பெற்று, விரும்பி பாவம் செய்பவர்களுக்கு இரண்டாம் மரணம் தண்டனை” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 6-7-2011-ல் துவக்கப்பட்ட “இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு” திரியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

//என் புரிந்துக்கொள்ளுதலின்படியே Systemsஇன் அழிவை தான் இரண்டாம் மரணம் என்று நம்பி வந்தேன், ஆனால் அதில் தவறு ஒன்றும் இல்லை, ஏனென்றால் இந்த Systems (பிசாசினால் கொண்டு வரப்பட்ட) எல்லாம் ஒழிந்துபோய்விடும் என்பது உண்மையே!! ஆனால் அதையும் தாண்டி இரண்டாம் மரணம் என்று வெளிப்படுத்தின விசேஷம் சொல்லியிருப்பதை எழுத்தின்படி எடுத்துக்கொண்ட‌ கிறிஸ்தவம், தேவனை ஒரு அரக்கனாக தான் சித்தரிக்கிறது!! முதல் மரணத்தில் "தற்காலீக நரகம்" அதன் பின் உயிர்த்தெழுதல், வெள்ளாடு, செம்மறியாடு என்று பிரித்து ஒரு கூட்டத்தை "இரண்டாம் மரணம்" என்கிற கொடிய இடத்தில் என்றென்றைக்கும் (அழிவே இல்லாமல்) போட்டு விடுவார் தேவன் என்கிற போதனை, தேவன் அன்புள்ளவர் என்று எப்படி சொல்ல முடியும்!!//

இரண்டாம் மரணம் என்பதில் தெளிவு பெற்றதால், அது வார்த்தையின்படியான மரணமல்ல, systems-அழிவுதான் அந்த மரணம் என இப்பதிவு கூறுகிறது. அதாவது சுமார் 1 வருடத்திற்குள்ளாக “இரண்டாம் மரணம்” பற்றிய தங்கள் புரிந்துகொள்தலை கோவைபெரியன்ஸ் தளம் மாற்றிக்கொண்டுள்ளது.

இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு” திரியைத் துவக்கி ஒரு பதிவு பதித்து, “அடுத்த பதிவு தொடரும்” என பெரியன்ஸ் அறிவித்துள்ளார். இதன்பின் சுமார் 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அடுத்த பதிவு வரவில்லை. ஒருவேளை தற்போது பெற்ற “தெளிவு” மீண்டும் கலங்கிவிட்டதா, அல்லது இன்னும் அதிகமான “தெளிவான தெளிவை” தேடிக்கொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்:

//உங்களுக்கு சில விஷயங்கள் தெளிவு பெற ஆண்டுகள் ஆயிற்று என்பதை மறந்து விட்டு எதையும் பதிவு செய்யாதீர்கள்!! இரண்டாம் மரணத்தை முதலில் நீங்கள் சொல்லுவது போலவே நானும் நம்பிக்கொண்டு இருந்தவன் தான்!! வேதத்தின் வெளிச்சத்தில் அது தவறு என்று இப்பொழுது உணர்ந்துகொண்டேன்!! முந்தைய பதிவை மாற்ற எனக்கு மனமில்லாமல் விட்டு விட்டேன்!! பழைய பதிவுகளை தோண்டி எடுக்கும் அவசியம் இல்லை!! கத்தோலிக்கனாக தானே பிறந்தீர்கள் என்று அப்போது உள்ளதைக்கூட கேட்டாலும் கேட்பீர்கள் போல்!!

என் தினசரி வங்கி வேலையை முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில் பதிவுகளைத் தருகிறேன்!! நான் முழு நேர ஊழியக்காரன் கிடையாது!! ஒருவேளை அப்படி ஒரு சூழல் தேவன் எனக்கு தந்தால் பார்க்கலாம்!! அது வரையில் எனக்கு நேரம் கிடைக்கும் போது எந்த விஷயம் எனக்கு தோன்றுகிறதோ அதை பதிவு செய்கிறேன்!! நான் எழுதுவதும் எழுதாமல் இருப்பதை எல்லாம் ஒரு பெரிய குற்றம் போல் எழுத தேவையில்லை என்று நினைக்கிறேன் அன்பு அவர்களே!!

கிறிஸ்துவின் வருகையின் வெளிச்சம் இன்னும் அதிகமான புரிந்துகொள்ளுதலைக் கொண்டுவரும் என்று நம்புகிறவன் நான்!! இன்னும் கல்லறைகளுக்காகவே சபைகளில் ஒட்டிக்கிடக்கும் பலரின் "தெளிவை" விட என் தெளிவு போதுமானது என்று நினைக்கிறேன்!! எனக்கு இப்படி பழசையெல்லாம் தோண்டி அடுத்தவனை எப்படி வீழ்த்தலாம் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது!! நீங்களும் அப்படி செய்யாமல் இருந்தால் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்!!//

எந்தவொரு விஷயமானாலும் நாளுக்கு நாள் அதில் தெளிவு பெறுவதிலும் கருத்துமாற்றம் உண்டாவதிலும் தவறேதுமில்லை. ஆனால் இம்மாதிரி பொதுதளங்களில் ஏற்கனவே பதித்த ஒரு விஷயம் தவறென பின்னொரு நாளில் அறிந்தால், அதை உடனடியாக எல்லோரும் அறியத்தக்கதாக அறிவிக்க வேண்டும். இதுதான் பொறுப்பான ஒரு தள நிர்வாகியின் கடமை. இக்கடமையில் தவறிவிட்டு, அதற்கு “நேரமின்மையையோ அல்லது வேறு காரணத்தையோ” சொல்லி சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.

இரண்டாம் மரணம் பற்றிய புரிந்துகொள்தல் மிகமிக முக்கியமானது. அதுபற்றி கருத்துமாற்றம் உண்டாகையில், அதைக் கண்டிப்பாக அனைவரும் அறியத்தக்கதாக அறிவித்திருக்கவேண்டும். ஆனால் பெரியன்ஸோ, “முந்தைய பதிவை மாற்ற மனமில்லாமல் விட்டுவிட்டதாக” மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்.

கருத்துமாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிடாதபட்சத்தில், அதைக் குறித்து விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு. அப்படி ஒருவர் விமர்சனம் செய்கையில், கருத்துமாற்றம் பற்றி அறிவிக்காதது தன் தவறுதான் என்று சொல்லி, தன் தவறை ஒத்துக்கொள்வதுதான் நாகரீகமேயன்றி, அதை விமர்சனம் செய்பவர் மீது வருத்தம் கொள்வது நாகரீகமல்ல.

சமீபத்தில்தான் ஒரு திரியில் பெரியன்ஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

//II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

வேத வசனங்களை சரியாக கையாளத்தெரிந்ததே "பகுத்துப்" போதிக்கிறதாகும்!!//

இப்படியெல்லாம் வசனத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்பவர், முன்னொரு காலத்தில் வசனத்தை சரியாகப் பகுத்தறியாமல் தவறான கருத்தை பரப்பியதை எத்தனை ஜாக்கிரதையாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்?

அதைச் செய்யாமல், அவரது கருத்துமாற்றத்தை எடுத்துக்காட்டின என்மீது கோபமோ வருத்தமோ கொள்வதில் என்ன நியாயம்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard