நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவா, நித்திய வாதையா, நித்திய ஜீவனா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவா, நித்திய வாதையா, நித்திய ஜீவனா?
Permalink  
 


துன்மார்க்கரின் முடிவு என்ன என்பதில் கிறிஸ்தவரிடையே ஒருமித்த கருத்து இல்லை. சிலர் துன்மார்க்கர் உட்பட அனைவருக்கும் நித்திய ஜீவனே என்கின்றனர்; சிலர் துன்மார்க்கருக்கு நித்திய வாதை (முடிவில்லா வாதை) என்கின்றனர்; வேறு சிலர் துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவு என்கின்றனர்.

இவற்றில் எது சரியானது? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

பிலிப்பியர் 3:18,19 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19 அவர்களுடைய முடிவு அழிவு (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: apoleia - ruin or loss (physical, spiritual or eternal)), அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

1 தெச. 5:3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: olethros - ruin, i.e. death, punishment) சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

2 தெச. 1:6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, 10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: olethros - ruin, i.e. death, punishment) தண்டனையை அடைவார்கள்.

2 பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: apoleia - ruin or loss (physical, spiritual or eternal)) நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

1 தீமோ. 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் (ஆங்கிலத்தில்: ruin, கிரேக்கில்: olethros - ruin, i.e. death, punishment) அழிவிலும் (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: apoleia - ruin or loss (physical, spiritual or eternal)) அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

2 பேதுரு 2:1  1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: apoleia - ruin or loss (physical, spiritual or eternal)) வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு (ஆங்கிலத்தில்: destruction, கிரேக்கில்: apoleia - ruin or loss (physical, spiritual or eternal)) உறங்காது.

அழிவு destruction எனும் வார்த்தைகளின் அர்த்தம் “ஒன்றுமில்லாமற் போதல்” என  நாமறிவோம். எனவே மேற்கூறிய வசனங்களின்படி பார்த்தால், துன்மார்க்கரின் முடிவு முழுமையான நிரந்தர அழிவே என அறிகிறோம்.

துன்மார்க்கருக்கு நித்திய ஜீவன் என்கிறதான ஒரு வசனமும் வேதாகமத்தில் இல்லை. துன்மார்க்கருக்கு நித்திய வாதை என்கிற வசனங்கள் வேதாகமத்தில் உள்ளதா? இதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்ப்போம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவா, நித்திய வாதையா, நித்திய ஜீவனா?
Permalink  
 


துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவு எனத் தெளிவாகக் கூறுகிற வேதாகமம், அவர்களுக்கு நித்திய வாதை என ஒரு வசனத்திலும் கூறவில்லை. ஆகிலும், நரகம் எனும் இடத்தில் துன்மார்க்கர் நித்திய நித்தியமாக வாதிக்கப்படுவார்கள் எனும் கருத்து பெரும்பாலான கிறிஸ்தவர் மத்தியில் காணப்படுகிறது. லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதால்தான் அம்மாதிரி கருத்து நிலவுகிறது. லாசரு-ஐசுவரியவான் கதையை உண்மையான நிகழ்வாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால் அது ஓர் உதாரணமே.

அவனவன் கிரியைக்குத்தக்க பலன் இயேசுவின் 2-ம் வருகையின்போதுதான் இருக்கும் என பல வசனங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கையில் (வெளி.22:12), இயேசுவின் வருகைக்கு முன்னதாகவே லாசருவும் ஐசுவரியவானும் பலனைப் பெறுவதாக நிச்சயம் இருக்க முடியாது.

இவ்வுலகில் மனிதர்களிடையே காணப்படும் ஏற்ற/இறக்கம், மறுமையில் சரிக்கட்டுப்படும் என்பதை விளக்கவும், இவ்வுலக ஐசுவரியவான்கள் தங்களைச் சுற்றியுள்ள பிறரைக் குறித்த கரிசனையின்றி தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால், மறுமையில் அவர்களின் கதி என்னாகும் என்பதை விளக்கவுமே லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தை இயேசு கூறினார்.

தரித்திரரைக் குறித்த கரிசனையின்றி வாழ்கிற ஐசுவரியவான்கள், லாசரு-ஐசுவரியவான் உவமானத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியவானைப் போல மறுமையில் வேதனையடைய நேரிடும் என்பது மெய்தான்; ஆனால் அந்த வேதனை நித்திய வேதனையாக இருக்கும் என எந்த வசனமும் சொல்லவில்லை.

நித்திய வேதனை எனும் கருத்துக்கு சற்று இசைவானதாக பின்வரும் காணப்படுகிறது.

வெளி. 14:9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, 10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.11 அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. 12 ... என்றான்.

வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்”, “எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது” எனும் வாசகங்களை தவறாகப் புரிந்துகொண்டு, “துன்மார்க்கருக்கு நித்திய வேதனை” எனும் கருத்தை பலரும் கூறுகின்றனர். ஆனால் இவ்வசனம் துன்மார்க்கரைக் குறித்து எதுவும் கூறவில்லை என்பதை முதலாவதாக நாம் அறியவேண்டும்.

அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் மிருகத்தை வணங்காதவர்கள் மற்றும் முத்திரையைத் தரிக்காதவர்களைக் குறித்தே இவ்வசனம் கூறுகிறது. அவர்களுக்கு “இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது” என ஒரு வாசகம் கூறுகிறது. ஆனால் நித்திய நித்தியமாக அவர்களுக்கு இளைப்பாறுதலிராது என வசனம் கூறவில்லை. அவர்கள் உயிரோடிருக்கிற காலம் வரைஇரவும் பகலும் அவர்களுக்கு இளைப்பாறுதல் இருக்காது” என்றே வசனம் கூறுகிறது.

அடுத்து, “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” எனும் வாசகத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வாசகம் “வாதையின் புகையைப்” பற்றி மட்டுமே கூறுகிறதேயொழிய “வாதையைப்” பற்றி கூறவில்லை. “வாதையின் புகை” என்பது நேரடியான அர்த்தமுடைய சொற்றொடர் அல்ல; இது ஓர் உவமானமான சொற்றொடர் மட்டுமே. “மிருகத்தை வணங்கினவர்கள் மற்றும் முத்திரையைத் தரித்தவர்களுக்கு” உண்டான வாதையைக் குறித்த நினைவுகள் அல்லது சுவடுகள் அல்லது அடையாளங்கள் சதாகாலங்களிலும் இருக்கும் என்பது போன்ற கருத்துக்கு உவமானமாகத்தான் “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வாசகத்தை வைத்து “துன்மார்க்கருக்கு நித்திய வேதனைஎனக் கூற இயலாது.

இறுதியாக, நித்திய வேதனை எனும் கருத்துக்கு இசைவாகத் தோன்றுகிற பின்வரும் வசனத்தைப் பார்ப்போம்.

வெளி. 20:10 அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

பிசாசு, மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோர்தான் “சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” என இவ்வசனம் கூறுகிறதேயொழிய “துன்மார்க்கர் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்எனக் கூறவில்லை. மிருகம் என்றால் என்ன, கள்ளத்தீர்க்கதரிசி என்பது தனிப்பட்ட ஒரு ஜீவனா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான், “அவர்கள் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” எனும் கூற்றுக்கான சரியான விளக்கத்தை நாம் அறிய முடியும்.

இப்போதைக்கு அவ்வசனம் துன்மார்க்கருக்கானதல்ல எனும் தகவல் நமக்குப் போதுமானது.

இனி நித்திய ஆக்கினை என்றால் என்னவெனப் பார்ப்போம்.

துன்மார்க்கருக்கு அழிவுதான் ஆக்கினை (அல்லது தண்டனை) என கடந்த பதிவில் தெளிவாகப் பார்த்தோம். அந்த அழிவு நித்தியமானது என்பதே “நித்திய ஆக்கினை” என்பதன் அர்த்தமாகும்.

ஆதாமின் பாவத்துக்கு ஆக்கினையாக நேரிட்ட முதலாம் மரணம் தற்காலிகமானது; ஏனெனில் ஆதாமுக்குள் மரித்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1 கொரி. 15:22).

ஆனால் அவரவர் சுயபாவத்துக்கு ஆக்கினையாக நேரிடுகிற இரண்டாம் மரணத்திலிருந்து ஒருவரும் உயிர்ப்பிக்கப்படுவதில்லை. அந்த மரணம் நிரந்தரமானது. இதைத்தான் “நித்திய ஆக்கினை” என மத்தேயு 25:46; மாற்கு 3:29 போன்ற வசனங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் “துன்மார்க்கருக்கு நித்திய வேதனை” என்பது வேதாகமத்தில் கூறப்படாத ஒன்றாகும். தேவன் தமது சித்தப்படி உருவாக்கின மனிதர்களின் அற்பகால பாவத்திற்காக அவர்களை நித்திய நித்தியமாக வாதிப்பதென்பது தேவனை அநீயுள்ளவராக மட்டுமல்ல, மிகவும் கொடூரராகவும் சித்தரிப்பதாக உள்ளது. இவ்வாறு தேவனை “அநீதியுள்ளவராக/கொடூரராக” சித்தரிப்பது ஒரு மாபெரும் தேவதூஷணமாகும். அம்மாதிரி தேவதூஷணம் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போமாக.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவா, நித்திய வாதையா, நித்திய ஜீவனா?
Permalink  
 


இறைவன் தளத்தில் சகோ.சுந்தர்:

//துன்மார்க்கனுக்கு வெறும் நித்திய அழிவு மட்டும்தான் முடிவு என்றால், இன்று உலகில் அநேகர் துணிந்து துன்மார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். எத்தனை கொலை செய்தாலும் எத்தனை கொள்ளை  அடித்தாலும்  எத்தனை பெண்களை கெடுத்து கண்ணை பிடுங்கி காலை ஒடித்து குற்றம் செய்யும் துன்மார்க்கனுக்கு எல்லாம் வெறும் நித்திய மரணம்தான் முடிவு என்றால் எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பரிப்போடு தீய செயல்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.//

துன்மார்க்கருக்கு நித்திய வாதை தண்டனையல்ல, நித்திய அழிவே தண்டனை என்பதைத்தான் கூறியுள்ளேன்.

நித்திய அழிவை அடைவதற்கு முன் அவர்கள் மரணவேதனையை அனுபவிக்கத்தான் வேண்டும். முதலாம் மரணத்திற்கு முன்னர் வேதனை அனுபவிப்பதுபோல, 2-ம் மரணத்திற்கு முன்னும் வேதனை அனுபவிக்கத்தான் வேண்டும். அவரவரின் துன்மார்க்க கிரியையின் அடிப்படையில் அந்த வேதனையை தேவன் தீர்மானிப்பார்.

//துன்மார்க்கனுக்கு வெறும் நித்திய அழிவு மட்டும்தான் முடிவு என்றால், இன்று உலகில் அநேகர் துணிந்து துன்மார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.//

துன்மார்க்கருக்கு நித்திய வேதனை என நம்புகிறவர்கள் எல்லாம், பயந்து வாலைச் சுருட்டிக்கொண்டா இருக்கிறார்கள்? அவர்களில் பலருங்கூட பல துணிகரமான அக்கிரமங்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

(கண் காணாத) தண்டனைக்குப் பயந்து பலரும் அக்கிரமங்களை விலக்கவுமில்லை, (கண் காணாத) பலனை எண்ணி பலரும் நற்கிரியைகளைச் செய்ய முன்வருவதுமில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard