//வசனத்தை ஒழுங்காக படித்து பிறகு குற்றம் சுமத்தலாம்!! தேவன் நீங்கள் பேசிய வார்த்தைகளுக்கு கணக்கொப்புவிக்க சொல்லுகிறார் என்று வசனத்தில் இல்லாததை எழுதி வேதத்தை புரட்டாதீர்கள்!!//
மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்வசனத்தை நான் ஒழுங்காகப் படிக்கவில்லை என பெரியன்ஸ் சொல்கிறார். அவர் இப்படி சொன்னதினிமித்தம் “ஒழுங்காக” மூலபாஷை வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களையும் படித்துப் பார்த்தேன். நான் படித்த மூலபாஷை வார்த்தைகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்:
pas - all, any, every, the whole; rhema - by implication a matter or topic; argos - inactive, unemployed, lazy, useless; hos - who, which, what, that; laleo - to talk ie utter words; anthropos - a human being; apodidomi - to give away; autos - from the particle au [perhaps akin to the base of NT:109 through the idea of a baffling wind] (backward); the reflexive pronounself, used (alone or in the comparative NT:1438) of the third person and (with the proper personal pronoun) of the other persons: logos - something said, by implication a topic, also reasoning or motive; by extention, a computation; specifically the Divine expression (ie Christ); en - in, at, upon, by etc; hemera - day; krisis - decision, a tribunal, justice.
இவற்றில் சர்ச்சைக்குரிய வார்த்தையான logos எனும் வார்த்தைக்கு கணக்கொப்புவித்தல் எனும் அர்த்தம் கிடையாது என்கிறார் பெரியன்ஸ். ஆனால் மேலேயுள்ள அர்த்தத்தில் reasoning அதாவது காரணம், motive அதாவது நோக்கம், computation அதாவது கணக்கிடுதல் எனும் அர்த்தங்களும் அடங்கியுள்ளதைக் காணலாம்.
அதாவது மனுஷர் பேசும் பிரயோஜனமற்ற மோசமான வார்த்தைகளுக்கு காரணம் சொல்லவேண்டும், அல்லது அவற்றிற்கான நோக்கத்தைச் சொல்லவேண்டும், அவற்றுக்கு கணக்கு காட்டவேண்டும் என அர்த்தங்களைத் தரலாம் என அறிகிறோம்.
இதில் பெரியன்ஸ்-க்கு உடன்பாடு இல்லையெனில், அவர் நேரடியாக வசனத்தை மொழிபெயர்த்துத் தரலாம்.