நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவை பெரியன்ஸ் தளத்தில் “உறுப்பினர்களின் வாக்கெடுப்பு”


Militant

Status: Offline
Posts: 830
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தில் “உறுப்பினர்களின் வாக்கெடுப்பு”
Permalink  
 


 

  
Post InfoTOPIC: உறுப்பினர்களின் வாக்கெடுப்பு!!

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1709
Date: 22:51:13 Oct 11, 2011
உறுப்பினர்களின் வாக்கெடுப்பு!!
 


பிரியமான நண்பர்களே,

இந்த தளம் அனுதினமும் சுமார் 150 முதல் 250 வரை பார்வையிடப்படுகிறது!! இதில் பலர் இந்த தளத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள், பலர் பார்வையாளர்களாக இருக்கிறீர்கள்!! சுமார் 130 உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலரை தவிர பங்கேற்பவர்கள் யாரும் இல்லை!! இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எனக்கு உதவும் படியாக கேட்டுக்கொள்கிறேன், என்னவென்றால், இந்த தளத்தை பார்வையிடவோ, அல்லது பதிவுகளை தரவோ விருப்பம் இல்லை என்றால், தயவு செய்து ஒரே ஒரு பதிவின் மூலம் தங்களின் நிலைகளை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்!!

பாத்திரம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதில் பெறுமை கிடையாது, பயன்படுத்துவதற்கு உபயோகமாக இருக்க வேண்டும்!! அப்படியே இந்த தளத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்ல, பங்களிப்பே அழகை சேர்க்கும்!! விரும்பாதவர்கள் தயவு செய்து ஒரே ஒரு பதிவின் மூலம் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்!!

உறுப்பினராக நீடிக்கிறேன்

அல்லது

நீக்கிவிடுங்கள்

உறுப்பினர்கள் இதற்கு பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்!! இந்த திரி 2 வாரங்கள் வரையில் திறந்திருக்கும், அதன் பின் மூடப்படும்!! விருப்பத்தை பதிவு செய்யாதவர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!

தங்களின் ஒத்துழைப்பிற்கு காத்திருக்கும்,

பெரேயன்ஸ்
மாடரேட்டர்
கோவைபெரேயன்ஸ் குழு!!

Nb:அக்டோபர் 25 வரை இந்த திரியில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன், அதன் பிறகு பங்களிப்பு தரும் உறுப்பினர்கள் மாத்திரமே இதில் நீடித்திருப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
 
 
 
 

கோவை பெரியன்ஸ் தளத்தில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் தாங்கள் சொன்னபடி நடக்காமல் பேச்சு மாறக்கூடியவர்கள் என்பதை ஏற்கனவே ஓர் அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளதால், இவ்வறிப்பு சம்பந்தமாக எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதை காணத்தக்கதாக அவர்களின் அறிவிப்பை இங்கு வெளியிட்டுள்ளேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
RE: கோவை பெரியன்ஸ் தளத்தில் “உறுப்பினர்களின் வாக்கெடுப்பு”
Permalink  
 


ஐயா, தளத்தையே மூடிவிடுவதாக சவால் விட்டவர்கள் தொடர்ந்து தளத்தை நடத்துவதற்கான முஸ்திபுகளில் இறங்குகிறார்களே, சாதாரண கிராமத்து மனிதன் கூட தான் கொடுத்த வாக்கை மானத்தைக் காட்டிலும் உயர்வாக நினைப்பானே, இவர்களை நம்பி கடவுள் எப்படி வெளிப்பாடுகளைக் கொடுக்கிறார்? இவர்கள் மூலம் சொல்லப்படும் செய்திகளை எப்படி நம்புவது? இவர்களிடம் நட்பும் இல்லை நேர்மையும் இல்லை,சாதாரண மனிதர்களைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்தவம் ரொம்ப ஆபத்தான மதமாக இருக்கிறதா அல்லது அதை பின்பற்றுவோர் ஆபத்தானவர்களா என்று யோசிக்கிறேன்.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஆர்யதாசன்:

//ஐயா, தளத்தையே மூடிவிடுவதாக சவால் விட்டவர்கள் தொடர்ந்து தளத்தை நடத்துவதற்கான முஸ்திபுகளில் இறங்குகிறார்களே,...//

நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல தங்கள் வாயாலேயே தங்களது நேர்மையின்மையை பறைசாற்றும் சந்தர்ப்பத்தை அவர்களாகவே உண்டாக்கிக் கொண்டார்கள்.

சவாலில் சொன்னபடி தற்போது இவர்கள் நடவாவிட்டாலும், எதிர்காலத்தில் இது போன்ற ஆணவமான வெட்டிச் சவால் விடமாட்டார்கள் என நம்புகிறேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

இவர்கள் “நல்ல மாடா” அல்லது “சுரணையற்ற மாடா” என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆர்யதாசன்:

//இவர்களிடம் நட்பும் இல்லை நேர்மையும் இல்லை,சாதாரண மனிதர்களைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்தவம் ரொம்ப ஆபத்தான மதமாக இருக்கிறதா அல்லது அதை பின்பற்றுவோர் ஆபத்தானவர்களா என்று யோசிக்கிறேன்.//

இவர்கள் அடிக்கடி ஒரு வேதபகுதியைக் காட்டி, வசனம் இப்படிச் சொல்லியிருக்கையில், “நீங்கள் ஏன் வீணாக சுவிசேஷம் அறிவிக்கிறீர்கள்” எனச் சொல்வதுண்டு. அவர்கள் காட்டுகிற வேதபகுதி:

2 தீமோ. 3:1 மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

இவ்வசனங்கள் கிறிஸ்தவர்/கிறிஸ்தவரல்லாதோர் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து” எனச் சொல்வதால், கிறிஸ்தவர்களுக்கே இவை அதிகமாகப் பொருந்தும்.

குறிப்பாக தங்களைக் கிறிஸ்தவர் எனச் சொல்லிக்கொள்ளும் கோவைபெரியன்ஸ் இரட்டையர்களுக்கும் இவை பொருந்தும்.

கிறிஸ்தவமும் ஆபத்தானது இல்லை, அதைப் பின்பற்றுவோரும் ஆபத்தானவர்கள் இல்லை. ஆனால் இடுக்கமான வாசலைக் கண்டுபிடித்து, அதன் வழியாகப் பிரவேசிப்பவர்கள் சிலர் மட்டுமே எனத் தீர்க்கதரிசனமாக கிறிஸ்து அறிவித்தபடியே தற்போது நடக்கிறது (மத்தேயு 7:14). எனவே இதில் ஆச்சரியப்படவோ யோசிக்கவோ எதுவுமில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
கோவை பெரியன்ஸ் தளத்தில் “உறுப்பினர்களின் வாக்கெடுப்பு”
Permalink  
 


 
RAAJ என்ற பெயரில் சில நாட்கள் கோவை பெறேயன்ஸ் தளத்தில் பல பதிவுகளை தந்திருந்த நான்.அவர்களின் வார்த்தை பிரயோகம்  சரியில்லாத காரணத்தால் சிலநாட்கள்  பதிவிடுவதை நிறுத்தியிருந்தேன். பின்னர்  ஒரு முக்கிய விவாதத்தில் ஒரு பதிவை கொடுத்தபோது  "இந்த பன்றிகள் ஏன் இங்கு வந்து மூக்கை நுழைத்து வாங்கிகட்டி கொள்கிறது" என்பது  போன்ற ஒரு பதிவை சகோ. சோல் அவைகள் எழுதியிருந்தார்கள். எனவே  திரும்பவும் அங்கேபோய் மூக்கை நுழைப்பதும் தேவையில்லாமல் வாங்கிகட்டி  கொள்வதும் அவகளுக்கு இடைஞ்சலாக இருக்கவும் விரும்பவில்லை. எனவே நான் விலகி கொள்ளவே விரும்புகிறேன்.
 
சகோ. இளங்கோ அவர்களுக்கு என்னை பற்றி தெரியும். என்னை மன்னிப்பாராக.
  


-- Edited by SUNDAR on Saturday 15th of October 2011 07:29:21 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard