நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகமா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகமா?
Permalink  
 


இறைவன் தளத்தில் “தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகமா?” எனும் திரியில் சகோ.நேசன் எழுதியது:

//ஓரிரு  நாட்களுக்கு முன்பு "பரலோகமும் பாதாளமும்" என்ற ஒரு புத்தகத்தை படித்தேன்

 
அந்த புத்தகத்தில், சில ஆவிக்குரிய சகோதரர்கள் ஏழு பேர் சேர்ந்து  ஒரு குழுவாக ஜெபத்தில்  ஈடுபட்டிருந்த போது  ஆண்டவராகிய இயேசு அவர்களை தம்மோடு கூட  அழைத்துசென்று பாதாளம் மற்றும் நரகத்தை  காட்டி எல்லோரையும் எச்சரிக்கும்படி சொன்னாராம். வானத்திலும்  பூமியிலும்  சகல அதிகாரமும் உள்ள  இயேசுவால் அது நிச்சயம் முடியக்கூடிய காரியமே.
     
அந்த புத்தகத்தில் வேதனை மிகுந்த  பாதாளத்தை குறித்து அவர்கள் எழுதியிருக்கும் பல காரியங்கள் பலபேர் தரிசனத்தில்  பார்த்து அனுபவித்து/எழுதிய காரியங்களுக்கு ஒத்ததாக இருந்தது. அதாவது பூமியில் விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் பாவம் செய்தவர்கள் எல்லோருமே அவரவர் செய்த பாவங்களுக்குஏற்ப தண்டனை அனுபவித்து கொண்டே இருந்ததாகவும்  அவர்களை பிசாசுகள் போன்ற உருவங்கள் தண்டனைக்குள்  நடத்தியதாக வும் எழுதி யிருந்தார்கள்.   
 
அவர்கள் அங்கு பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு  இடத்தில் தசமபாக காணிக்கையை  ஒழுங்காக கொடுக்காத பலர் பாதாளத்தில்  கிடந்தது வேதனை  பட்டதாகவும், அவர்களைபற்றி ஒரு சகோதரர் இயேசு விடம் "தசம பாகம் கொடுக்காதவர்கள் எல்லாம் பரலோகம் போகமுடியாதா ஆண்டவரே" என்று  கேட்டபோது. அதற்க்கு இயேசு "தசமபாகம் சரியாக
கொடுக்காதகாரணத்தால் பூமியில் என்னுடய சுவிஷேச ஊழியம் அதிகமாக தடை படுகிறது" என்று சொன்னதோடு. இயேசு கீழ்கண்ட வசனத்தை கூறி தசமபாகம் கொடுப்பது அவசியம் என்றும் சொன்னாராம்.  
 
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)
 
அதாவது தசம பாகம் கொடுக்காதது தேவனை  வஞ்சிப்பதற்கு ஒப்பாகிறதாம்.   
 
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே. (லூக் 11:42) 
  
அவர்களின்  தரிசனத்தை சிலர் "இது ஒரு பொய்" என்று சொல்லலாம் ஆனால் தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று வேதம் எங்கும் சொல்லாத நிலையில் எனெக்கென்னவோ அது உண்மை என்றே படுகிறது.  இதுபோன்ற பொய்யை எழுதி எல்லோரை யும் நம்பவைக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. எனவே தசமபாகம் கொடுக்க கடமை பட்டவர்கள், வசனம் சொல்வது போல் அதை சரியாக கொடுத்து விடுவது நல்லது என்று கருதுகிறேன்.
 
இது குறித்த இறைவெளிபாடு உள்ளவர்கள் இங்கு தெரிவிக்கவும்.//


2 தீமோ. 4:3 அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

கட்டுக்கதைகளுக்கு சாய்ந்துபோகும் காலம் வரும் எனப் பவுல் சொன்னபடியே அக்காலம் தற்போது வந்துவிட்டது.

மரித்தவர்கள் பாதாளத்தில் தற்போது வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதும் கட்டுக்கதைதான்; அதிலும் தசமபாகம் செலுத்தாதவர்கள் பாதாளத்தில் தனியே ஓர் இடத்தில் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அபாரமான ஒரு கட்டுக்கதை. ஜனங்களை பயமுறுத்தி தசமபாகம் கொடுக்க வைப்பதற்காக யாரோ ஒருவர் இப்படியாக கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.

தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகத்தில் வேதனை என எந்தவொரு வசனமும் சொல்லவில்லை.

தசமபாகக் கட்டளை என்பது இஸ்ரவேலர்களுக்கான தனிப்பட்ட ஒரு கட்டளை. இதைக் குறித்து விரிவாக பின்வரும் திரியில் எழுதியுள்ளேன். இறைவன் தளத்தின் சார்பாக சகோ.சுந்தரும் தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.

தசமபாகம் செலுத்துவது பற்றி!

இத்தொடுப்பில் சென்று படித்தால், தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகம் எனும் கூற்று கடைந்தெடுக்கப்பட்டக் கட்டுக்கதை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இம்மாதிரி கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.நேசன்:

//இதுபோன்ற பொய்யை எழுதி எல்லோரை யும் நம்பவைக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. //

ஏன் அவசியமில்லை? இம்மாதிரி பொய்யை எழுதி தசமபாகத்தை வாங்கி அனுபவிக்க நினைப்பவர்களுக்கு இது அவசியந்தானே?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

வேதாகமத்துக்கு விரோதமான கட்டுக்கதைகளை வெளியிட்டு, அவற்றை நம்பி செயல்படும்படி அப்பாவி விசுவாசிகளைத் தூண்டுகிற சகோ.நேசன் அவர்களே! பின்வரும் வசனம் உங்களுக்காக:

ஏசாயா 31:2 அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard