நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
Permalink  
 


இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

 சாவைப் பற்றி மக்கள் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்,  அவற்றிற்கு வெவ்வேறு மதங்கள் எப்படிப் பதிலளிகின்றன?
இவற்றுக்கு விடை காண்பதற்கு   முன் வேதத்தில் இருக்கும் சில அடிப்படை கேள்விகளை சிறிதாக பார்ப்போம்.
  1. சாகும்போது நமக்கு என்ன நடக்கின்றது? 
  2. நாம் ஏன் சாகிறோம்? 
  3. சாவைப் பற்றிய உண்மையேத் தெரிந்துகொள்வது ஆறுதல் அளிக்குமா?    

எனது அடுத்த பதிவில் இது தொடர்பான குறிப்புகள் தொடரும் _::::.....

இந்த தளத்தில் கருத்துக்களை பதிய அனுமதி கொடுக்க சகோதரர் அன்பு அவர்களை வேண்டுகிறேன். நன்றி



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நீண்ட நாட்களுக்குப் பின் பதிவைத் தந்துள்ள சகோ.டினோவை வரவேற்கிறேன்.

நல்லதொரு தலைப்பில் நீங்கள் தரவிருக்கும் கருத்துக்களை அறிய ஆவலாயுள்ளேன். அனுமதியெல்லாம் கேட்கவேண்டியதில்லை சகோதரரே!

உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி பதியுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுடைய மனத்தைக் குடைந்துகொண்டு இருக்கும்  மிக முக்கியமான கேள்விகளே மேலே உள்ளவை!!!!  நாம் யாராக இருந்தாலும் சரி,  எங்கு வாழ்ந்தாலும் சரி இவற்றுக்கான பதிலை தெரிந்து கொள்ளவே விரும்புகிறோம்.

இயேசுக் கிறிஸ்துவின்  மீட்கும் பொருள்  நித்திய ஜீவனுக்கான வாய்ப்பை எப்படி  திறந்து வைத்தது என்பதை இந்த தளத்தில் வாசித்து அறிந்துகொண்டோம்.  அதற்கு அமைய ஜனங்கள் இனி 'மரணமில்லாமல்'   வாழப்போகும் ஒரு காலத்தைப் பற்றி பைபல் முன்னரிவிப்பத்தையும் வெளிப்படுத்தல் 21:4  நமக்கு காண்பிக்கின்றது. ஆனால், அந்தக் காலம் வரும்வரை நாம் எல்லோரும் இறந்துகொண்டே தான் இருப்போம்.  'உயிரோடு இருப்பவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள்'  என்று ஞானியான சாலமன் ராஜா சொன்னார்.   எவ்வளவு காலம் முடிமோ அவ்வளவு காலம் வாழவே நாம் முயலுகிறோம். இருப்பினும், சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி தான் தொடர்ந்து நம் மனதில் எழுகின்றது.

நமக்கு பிரியமானவர்கள் யாராவது சாகும்போது; நாம் துக்கித்து அழுகிறோம். அவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்? வேதனைப் பட்டுக்கொண்டு இருகிறார்களா? நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்களா?  அவர்களுக்கு நாம் உதவ முடியுமா? மறுபடியும் நாம் அவர்களை பார்ப்போமா? போன்ற கேள்விகள் அச்சமயத்தில் நாம் ஒருவேளை கேட்கலாம்.   இந்தக் கேள்விகளுக்கு உலக மதங்கள் வெவ்வேறு விதமாக பதில்களை அளிக்கின்றன. நீங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தால் பரலோகத்துக்கு போவீர்கள் என்றும்; மோசமான வாழ்க்கை வாழ்ந்தால் நரகத்தில் வதைக்கப்படுவீர்கள் என்றும் சில மதங்கள் கற்பிக்கின்றன.  இறந்தவர்கள் தங்கள் மூதாதையருடன் இருப்பதற்காக ஓர் ஆவி உலகுக்கு போகிறார்கள் என்று இன்னும் சில மதங்கள் நம்புகின்றனர். வேறு சில மதங்களோ, இறந்தவர்கள் நியாயத்தீர்ப்பு  செய்யப்படுவதக்காக கீழ் உலகத்துக்குச் செல்கிறார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள் என்றும் கற்பிக்கின்றனர்.

உடல் செத்த பிறகு நமக்குள் இருக்கிற ஏதோவொன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற பொதுவான கருத்துதான் இந்த எல்லா மதப் போதனைகளிலும் உள்ளது.  செத்த பிறகும் கூட பார்க்கும் திறன்,  கேட்கும் திறன்,  சிந்திக்கும் திறன் ஆகியவற்றோடு நாம் ஏதோவொரு விதத்தில் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறோம் என கிட்டத்தட்ட எல்லா பண்டைய மதங்களும் கற்பிக்கின்றன. இன்றுள்ள பெரும்பாலான மதங்களும் அவ்வாறே சொல்கின்றன. ஆனால், அது எப்படி முடியும்? மூளை செயல்பட்டால் தான் பார்க்கவும் கேட்கவும் சிந்திக்கவும் முடியும்.  சாகும்போது மூளை செயலற்றுப் போகிறது. நம்முடைய நினைவுகளும், உணர்சிகளும் புலன்களும் ஏதோவொரு மர்மமான முறையில் தனித்து இயங்குவது இல்லை. மூளை செயலற்றுப் போன பிறகு அவற்றால் தொடர்ந்து இயங்க முடியாது.

தொடரும் .....

(Text formatting work done by anbu57)



-- Edited by anbu57 on Monday 28th of November 2011 05:29:47 PM



__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

சாகும்போது உண்மையிலே  என்ன நடக்கின்றது? 

சாகும்போது என்ன நடக்கின்றது என்பது மூலையேப் படைத்தவரான கர்த்தருக்கு நன்றாகே தெரியும், அது அவருக்கு மர்மமான விஷயமே அல்ல. இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர் தம்முடைய வார்த்தையான பைபளில் விளக்குகிறார். அந்த தெளிவான் விளக்கம் இதுதான்:  ஒரு நபர் சாகும் போது, அவர் இல்லாமல் போய்விடுகிறார். வாழ்வுக்கு நேரெதிரானது சாவு. செத்தவர்களால் பார்க்க முடியாது.  கேட்க முடியாது,  சிந்திக்க முடியாது. உடல் செத்த பிறகு நம்முடைய எந்தவொரு பாகமும் தொடர்ந்து உயிர் வாழ்வது கிடையாது.  சாகாத ஆத்துமாவோ ஆவியோ நமக்குள் இல்லை.
 
"உயிரோடு இருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்கள் என்பதைக் குறிப்பிட்ட பிறகு, 'மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்'  என்று சாலமோன் எழுதினார். அதுமட்டும் அல்ல, அந்த முக்கிய உண்மையின் பேரில் கூடுதலான தகவல்களையும் அளித்தார்.  அதாவது செத்துப் போனவர்களால் சிநேகிக்கவோ பகைக்கவோ முடியாது என்றும், "பிரேதக் குழியிலே செய்கையும் வித்தையும் அறிவும் ஜானமும் இல்லை" என்றும் கூறினார். (பிரசங்கி 9:5 6, 10 )  அதே போல்; ஒருவர் சாகும் போது அவருடைய யோசனைகள் அழிந்துபோம் என்று சங்கீதம் 146 :4  சொல்கிறது.  நாம் தொடர்ந்து உயிர் வாழ்வதில்லை. நாம் அனுபவிக்கிற இந்த வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தியின் சுடரைப் போன்றது. அந்த சுடர் அணைக்கப் படும்போது, அது எங்கேயும் பிரிந்து போவதில்லை. அது வெறுமனே இல்லாமல் போகின்றது. அவ்வளவு தான்.
அடுத்து சாவைப் பற்றி இயேசு என்ன சொன்னார் மற்றும் சாவை எதற்கு ஒப்பிட்டுப் பேசினார் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம் ... தொடரும் ..


__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 



Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

இறந்தவர்களுடைய நிலையைப் பற்றி இயேசு கிறிஸ்து பேசினார். இறந்துபோன தம்முடைய நண்பரான லாசருவைக் குறித்து தம் சீசர்களிடம் பேசிய போது, "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்து இருக்கிறான்" என்று அவர் குறிப்பிட்டார்.  லாசரு ஏதோவொரு வியாதியில் இருந்து குணமடைவதற்கு ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பற்றிதான் இயேசு சொல்கிறார் என அந்தச் சீஷர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு, "லாசரு மரித்துப் போனான்" என பிறகு இயேசுவே அதற்கு விளக்கம் அளித்தார். (யோவான் 11:11-14)

சாவை நித்திரைக்கும் ஓய்வுக்கும் இயேசு ஒப்பிட்டுப் பேசியதை கவனித்தீர்களா? ஆம், லாசரு பரலோகத்துக்கும் போகவில்லை, எரிநரகத்துக்கும் போகவில்லை. தேவதூதர்களையோ மூதாதரையோ சந்திக்கவும் செல்லவில்லை.  இன்னொரு மனிதனாக மறுபிறவியும் எடுக்கவில்லை. கனவுகளே வராத ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல அவர் மரணத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வேறு சில வசனங்களும் சாவைத் தூக்கத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றன. உதாரணத்துக்கு, சீஷனாகிய ஸ்தெவான் கல்லெறிந்து கொல்லப்பட்டபோது, அவர் "நித்திரையடைந்தார்" என்று பைபல் சொல்கிறது. (அப் 7:60) அதேபோல அப்போஸ்தலன் பவுலும், தன் நாளில் மரித்த சிலரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் "நித்திரையடைந்தார்" என்று எழுதினார்: (1 கொரிந்தியர் 15:6)

மனிதர்கள் சாகவேண்டும் என்பது கடவுளுடைய  நோக்கமாக  இருந்ததா? இல்லவே இல்லை!!! பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகவே மனிதர்களை அவர் படைத்தார். இந்தத் தளத்தில் நாம் ஏற்கனவே எழுதிய விஷயங்களின்படி, அந்த முதல் மனிதத் தம்பதியை மகிழ்ச்சி நிறைந்த ஒரு பரதிஸில் குடிவைத்தார். பூரண ஆரோக்கியத்தைக் கொடுத்து அவர்களை ஆசிர்வதித்தார். அவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும்மென்று கர்த்தர் விளக்கினார். அன்பான எந்த பெற்றோராவது, தங்களுடைய பிள்ளைகள் வயதாகி சாக வேண்டுமென்று விரும்புவார்களா?  நிச்சயமாகவே விரும்ப மாட்டார்கள்!!!  கர்த்தர் தமது பிள்ளைகளை நேசித்தார்.  பூமியில் அவர்கள் முடிவில்லா ஆனந்தத்தை அனுபவித்து மகிழ வேண்டுமென்று அவர் விரும்பினார். "நித்திய கால நினைவை மனிதர்களின் உள்ளத்திலே வைத்தார்"  என்று பைபல் சொல்கிறது. (பிரசங்கி 3:11)  ஆம்; கடவுள் நம்மைப் படைக்கும்போதே நித்தியமாக வாழவேண்டுமென்று ஆசையே நமக்குள் வைத்திருந்தார். அந்த ஆசையே நிறைவேற்றுவதற்கான வழிகளையும் திறந்து விட்டு இருந்தார்.

தொடரும் ...

(Text formatting and correction done by anbu57)



-- Edited by anbu57 on Thursday 1st of December 2011 05:15:24 PM

__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard