பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்வது என்றால் என்ன?
கர்த்தருடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய சாத்தியம் உள்ளது. அந்தப் பாவம் மன்னிக்கப்படாது.
மத்தேயு 12 : "
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை".
கர்த்தரே நாம் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்திருக்கிறோமா இல்லையா ன்பதைப் திர்மானிப்பவர்; அப்படிச் செய்திருந்தால் தமது ஆவியே நம்மிடமிருந்து அவர் நீக்கியும் விடுவார்.
நாம் செய்த பாவத்தைக் குறித்து உள்ளப்பூர்வமாக மனம்வருந்தினால், பெரும்பாலும் நாம் உண்மையிலே மனம்திரும்பி இருக்கிறோம் என்பதை அது காண்பிக்கலாம். எனவே, ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை என்பதை அது காட்டும்.
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''
"பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேன் என்ற எண்ணம் என்னை ஆட்டிப் படித்துக் கொண்டே இருந்தது" என்று ஜெர்மனியில் இருக்கும் என் நண்பன் ஒருவன் என்னிடம் சொல்லி கவலைப்பட்டான. அவர், கடவுளுக்குச் சேவை வந்த போதிலும் அந்த எண்ணம் அவரை ஆட்டிப்படைத்தது. கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக ஒரு கிறிஸ்தவன் ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்ய சாத்தியம் உள்ளதா?
ஆம், கர்த்தருடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய சாத்தியம் உள்ளது. இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்; மத்தேயு 12 : "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை". அப்போஸ்தலன் பவுல் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்: எபிரெயர் 10 :26. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: " மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு" அப்படியானால்; படுமோசமான பாவத்தைச் செய்த ஒருவர், "மரணத்துக்கு ஏதுவான பாவத்தைப்" செய்திருக்கிறாரா இல்லையா என்று அவராகவே முடிவுசெய்து கொள்ளவேண்டுமா ?:::
தவறு செய்தவர்களுக்கு இறுதியான நியாயத்திர்ப்பை வழங்குபவர் கர்த்தரே. நாம் எல்லாருமே அவருக்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்கள்தான். என்றாலும் அவர் எப்போதும் நீதிதவரானவர்.
ரோமர் 14 : 12. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
நாம் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்து இருகிறோமா இல்லையா என்பதைத் திமாநிப்பவர் அவரே. அப்படிச் செய்து இருந்தால் தமது ஆவியே நம்மிடம் இருந்து அவர் நீக்கியும் விடுவார். மறுபட்சத்தில், நாம் செய்த பாவத்தைக் குறித்து உள்ளப்போர்வமாக மனம்வருந்தினால், அது நாம் உண்மைலேயே மனம் திரும்புகிறோம் என்பதைக் காட்டும். அப்படி என்றால், உண்மையான மனம்திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன? தொடரும்
__________________
''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''