யெகோவா தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே எனும் பாரம்பரியக் கோட்பாட்டுக்குள் மூழ்கிக்கிடக்கும் திரித்துவவாதிகளில் ஒருவரான ஜாண் எட்வர்ட் என்பவர், காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எனும் பழமொழிப்படியே, தேவன்/கர்த்தர்/யெகோவா எனும் வார்த்தைகள் அடங்கின எந்தவொரு வசனத்தைப் பார்த்தாலும், இது யெகோவையும் குறிக்கிறது, இயேசுவையும் குறிக்கிறது, எனவே யெகோவாவும் இயேசுவும் ஒருவரே எனக் கூறிவிடுவார்.
அவரது இம்மாதிரி பல உளறல்களில் ஒன்றுதான் சகரியா 12:10-ஐக் காட்டி யெகோவாவும் இயேசுவும் ஒருவரே எனச் சொல்வதாகும். பாரம்பரியக் கட்டுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் இவருக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. இவருக்கு நாம் சொல்லக்கூடிய ஒரே ஆலோசனை “பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும்” என்பதே (சகரியா 2:7,8).
ஜாணைப் போன்ற சில குழப்பவாதிகள், மொழிபெயர்ப்பு தவறுகளால் கருத்து சிதைந்துபோன வசனங்களை ஆங்காங்கே தூவிவிட்டு, சாத்தானின் பணியை நிறைவேற்றி வருவதால், இதன் மூலம் விசுவாசிகள் வஞ்சிக்கப்படாதபடிக்கு, ஜாண் போன்றவர்கள் தூவிச் செல்லும் குழப்பங்களுக்கு பதில் சொல்வது அவசியமாயுள்ளது.
ஜாண் குறிப்பிடும் சகரியா 12:10-க்கான விளக்கம் “பூரண சற்குணராகுங்கள்” பத்திரிகையின் அக்டோபர் 2008 இதழில் கூறப்பட்டு, அது “Become Perfect" எனும் இணைய தளத்தில் பதியப்பட்டு, அதற்கான தொடுப்பு “கோவை பெரியன்ஸ்” தளத்தில் கொடுக்கப்பட்டுமுள்ளது. இதையெல்லாம் ஏற்கனவே படித்தவர்தான் “உளறல் நாயகன்” ஜாண் அவர்கள். ஆனாலும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி உளறிக்கொண்டிருக்கிறார் அவர்.
சாத்தானின் வாயாக இருந்து அவர் தூவிச் செல்லும் விஷத்தால் விசுவாசிகள் வஞ்சிக்கப்படாதபடிக்கு, சகரியா 12:10-க்கான விளக்கம் அடங்கிய தொடுப்பு இங்கு தரப்படுகிறது. கூடிய விரைவில் அதன் சாராம்சம் இங்கு நேரடியாகப் பதிக்கப்படும்.
சகரியா 12:10 ... அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
இவ்வசனத்தை தீர்க்கதரிசி மூலமாக தேவனாகிய கர்த்தரே கூறுகிறார். ஆனால் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசன வாசகங்கள் யாவும் இயேசுவுக்கே பொருத்தமாயுள்ளன. ஆதாரம்:
வெளி. 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
இவ்வசனங்களை சகரியா 12:10-உடன் இணைத்துப் பார்க்கையில், யெகோவா தேவனே இயேசுவாக இப்பூமியில் அவதரித்தார் என்றும் யெகோவா தேவனும் இயேசுவும் ஒருவரே என்றும் நாம் கருத நேரிடுகிறது. ஆனால் இப்படி நாம் கருதுவது, இயேசுவை தேவனுடைய குமாரன் என நேரடியாகச் சொல்கிற பல வசனங்களுக்கு (மத்தேயு 14:33; 16:16; 17:5; 26:63,64; 27:54; மாற்கு 1:1; லூக்கா 1:32-35; யோவான் 1:34,39; 3:18; 5:18-26; 9:35; 10:36; 11:4; 17:2; 20:31; ரோமர் 1:9; 1 யோவான் 1:3; 3:8) முரணாக இருக்கிறது.
இம்மாதிரி முரண்பாடுகளை வேதாகமத்தில் காண்கையில், முரண்பாட்டிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைய முற்படுவதே சரி. ஆனால் நாமோ முரண்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம், அல்லது முரண்பாடான 2 கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றின் அடிப்படையில் குழப்பமான ஒரு கோட்பாட்டை உருவாக்கிவிடுகிறோம்,
இப்படித்தான் சகரியா 12:10-ன் சரியான கருத்தை அறியாமல், அவ்வசனத்தின் அடிப்படையில் யெகோவா தேவனும் இயேசுவும் ஒருவரே எனும் வினோதமான கருத்தைச் சொல்லி, நாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி வருகிறோம். இதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கையில், சகரியா 12:10-ன் மொழிபெயர்ப்பில் பிழை இருப்பதை அறியமுடிகிறது.
அப்பிழையை அறிந்துகொள்ள, தமிழ் வேதாகமத்துக்கு அடுத்தபடியாக நாம் அதிகமாகப் பயன்படுத்துகிற KJV ஆங்கில வேதாகமத்தில் அதன் மொழிபெயர்ப்பை முதலாவதாகப் பார்ப்போம்,
Zech 12:10 ... they shall look upon me whom they have pierced, and they shall mourn for him, as one mourneth for his only son, and shall be in bitterness for him, as one that is in bitterness for his firstborn.
தமிழ் வேதாகமத்தில் “என்னை, எனக்காக” என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைகள், KJV-ல் “me, him" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த ஒரு வித்தியாசமே போதும், இவ்வசனத்தின் மொழிபெயர்ப்பில் குளறுபடி உள்ளது என்பதற்கு. இதேவிதமான பொழிபெயர்ப்பு NIV, ASV வேதாகமங்களிலும் காணப்படுகிறது.
இத்தோடு குளறுபடி நிற்கவில்லை; வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில், வசனம் முழுவதுமே “him" என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக Living Bible மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்,
They will look on him they pierced, and mourn for him as for an only son, and grieve bitterly for him as for an oldestchild who died.
இதேவிதமான மொழிபெயர்ப்பு, Revised Standard, New Jerusalem with Apocrypha, New American with Apocrypah வேதாகமங்களிலும் காணப்படுகிறது.
இப்படி 3 விதமான மொழிபெயர்ப்புகள் இருக்கையில், எந்த மொழிபெயர்ப்பை reliable ஆக நாம் எடுக்க முடியும்?
எந்த மொழிபெயர்ப்பு பிற வசனங்களுடன் முரண்படாமல் இருக்கிறதோ அதைத்தான் ஓரளவு reliable- ஆக எடுக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், Living Bible மொழிபெயர்ப்பைத்தான் reliable ஆக எடுக்க முடியும். அதன் தமிழாக்கம்:
சகரியா 12:10 அவர்கள் தாங்கள் குத்தின அவரை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல அவருக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல அவருக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
இம்மொழிபெயர்ப்பு, வெளி. 1:7 மற்றும் யோவான் 19:37 வசனங்களுடன் முரண்படாமல் கருத்திசைவுடன் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, “அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது” எனும் யோவான் 19:37-ன் வாசகத்திற்கு மிகவும் பொருத்தமாக, “தாங்கள் குத்தின அவரை நோக்கிப்பார்த்து” எனும் வாசகம் உள்ளது.
எனவே சகரியா 12:10-ஐப் பொறுத்தவரை Living Bible வேதாகமத்தின் மொழிபெயர்ப்பே சரியானது என எடுத்துக்கொள்ளலாம்.