நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர்கள் புறஜாதிகளிடம் எதைப் போதித்தனர்? கிருபையையா, கிரியையா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
அப்போஸ்தலர்கள் புறஜாதிகளிடம் எதைப் போதித்தனர்? கிருபையையா, கிரியையா?
Permalink  
 


இத்தொடுப்பில் நான் எழுதின கட்டுரை:

//கிறிஸ்து கிரியைகளை பற்றி யூதர்களிடம் போதித்தார், ஆனால் அவரின் அப்போஸ்தலர்களோ கிருபையை பற்றி புறஜாதியினடத்தில் போதித்தார்கள்!!//

இப்படி ஒரு கருத்தை Bro Ignatious Elango ஒரு திரியில் கூறியுள்ளார். இவர் சொல்வதைப் பார்த்தால் கிறிஸ்துவின் போதனைக்கும் அப்போஸ்தலரின் போதனைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அப்படி வித்தியாசமாகப் போதிக்கும்படி அப்போஸ்தலரிடம் இயேசு கூறவுமில்லை, அப்போஸ்தலர்கள் வித்தியாசமாகப் போதிக்கவுமில்லை.

கிறிஸ்து தங்களிடம் எதைப் போதிக்கும்படி கட்டளையிட்டாரோ, அதையேதான் அப்போஸ்தலர்கள் போதித்தனர். அப்போஸ்தலர்கள் எதைப் போதிக்கவேண்டும் என பின்வரும் வசனங்களில் கிறிஸ்து தெளிவாகக் கட்டளையிட்டுள்ளார்.

மத்தேயு 28:19 நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.

லூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

இயேசுவின் இக்கட்டளைகளில் பின்வரும் 2 குறிப்புகளை நாம் பார்க்கிறோம்.

1. சகல ஜாதிகளிடமும், சகல தேசத்தாரிடமும் சென்று பிரசங்கிக்க வேண்டும்.

2. தமது கட்டளைகளைக் கைக்கொள்தல், மனந்திரும்புதல், பாவமன்னிப்பு ஆகியவற்றை அவர்களிடம் போதிக்க வேண்டும்.

பாவமன்னிப்பு என்பது தேவகிருபையைக் குறிக்கிறது. இக்கிருபையை மட்டும் போதித்தால் போதும் என இயேசு சொல்லவில்லை. மனந்திரும்புதல், தமது கட்டளைகளைக் கைக்கொள்தல் ஆகியவற்றையும் போதிக்கவேண்டும் என்றே இயேசு கூறினார்.

யூதர் புறஜாதியார் என்ற வித்தியாசமின்றி அனைவரிடமும் இவ்வாறு போதிக்கவேண்டும் என்றே இயேசு கூறினார். Bro Ignatiuos சொல்வதுபோல், புறஜாதியாரிடம் கிருபையை மட்டும் போதித்தால் போதுமென இயேசு ஒருபோதும் சொல்லவில்லை.

அப்போஸ்தலரிடம் இயேசு என்ன கட்டளையிட்டாரோ, அதையேதான் அப்போஸ்தலரும் போதித்தனர்

இயேசுவின் கட்டளைப்படியே பாவமன்னிப்பு எனும் கிருபையை அறிவித்த அப்போஸ்தலர்கள், அத்தோடு நில்லாமல் இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளும்படியும் போதித்துள்ளனர். குறிப்பாக பொல்லாங்கு செய்பவர்களுக்கான ஆக்கினையையும் நன்மை செய்பவர்களுக்கான நற்பலனையும் மிகத்திட்டமாகவும் தெளிவாகவும் அவர்கள் போதித்துள்ளனர். இதற்கு ஆதாரமான சில வசனங்கள்:

ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

யாருக்கு நித்தியஜீவன் யாருக்கு ஆக்கினை என்பதில் யூதன் கிரேக்கன் என்ற வித்தியாசமே கிடையாது என்பதைத் திட்டவட்டமாக பவுல் கூறியுள்ளார்.

ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

எல்லோருக்கும் கிருபையினால் இரட்சிப்பு எனச் சொன்ன அதே பவுல்தான், மாம்சத்தின்படி பிழைப்பவர்களுக்கு சாவு என்றும் சொல்கிறார். இதற்குக் காரணமென்ன? கிருபையாய் இரட்சிப்பைப் பெற்ற ஒருவன், மாம்சத்தின்படி நடந்தால் அவன் பெற்ற கிருபையை இழக்க நேரிடும் என்பதே!

ரோமர் 13:13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

1 கொரி. 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

கிருபையாய் இரட்சிப்பைப் பெற்றவர்களிடம், தேவனுடைய ராஜ்யத்திற்கேற்ற கனி இல்லையெனில், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கஇயலாது எனத் திட்டவட்டமாகப் பவுல் சொல்கிறார்.

1 கொரி. 15:2  நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

பவுல் பிரசங்கித்தத்தை கைக்கொண்டால்தான் இரட்சிப்பாம்; இல்லாவிடில், விசுவாசம் வீணாகிப்போகுமாம்!!

2 கொரி. 5:10 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

கிரியையைக் குறித்து மேன்மை பாராட்டவேண்டாம் எனச் சொன்ன அதே பவுல்தான் கிரியைக்குத் தக்கதான பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

கலா. 5:14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிருபையால் இரட்சிப்பைப் பெற்றவர்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தால், அழிவைத்தான் பலனாகப் பெறுவார்கள்.

19  மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிருபையாய் இரட்சிப்பைப் பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துவிட முடியாது. அவனது மாம்சத்தின் கிரியைகள் யாவும் ஒழிக்கப்படவும்வேண்டும்.

22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலா. 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

கிருபையாய் ஒருவன் இரட்சிப்பைப் பெற்றபோதிலும், நன்மைசெய்தால்தான் நித்தியஜீவனை அறுக்கமுடியும் எனப் திட்டவட்டமாகப் பவுல் கூறுகிறார்.

எபே. 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

கிருபையினால் எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் நித்தியஜீவன் என்று சொல்லி வீண்வார்த்தைகளினால் யாரும் நம்மை மோசம்போக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.

பிலிப்பியர் 3:17 சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். 18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

பூமிக்கடுத்தவைகளைச் சிந்திப்போருக்கு அழிவாம்!! கிருபையைப் பற்றி பேசின அதே பவுல்தான் சொல்கிறார்! ஜாக்கிரதை!!

கொலோசெயர் 3:5 விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

தேவகிருபையைக் குறித்து பேசின அதே பவுல்தான் தேவகோபாக்கினையைப் பற்றியும் பேசுகிறார். ஆம், தேவனிடம் கிருபையும் உண்டு, கோபாக்கினையும் உண்டு.

1 தெச. 4:3 நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.

தேவன் தமது கிருபையினால் எல்லோருக்கும் இரட்சிப்பைக் கொடுத்தாலும், அவர் தமது நீதியை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. ஆம், பரிசுத்தமில்லாதவர்களிடம் தேவன் நிச்சயமாக தமது நீதியைச் சரிக்கட்டுவார்.

2 தெச. 1:5  நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. 6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, 10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

எல்லோருக்கும் கிருபையினால் இரட்சிப்பு உண்டுதான்; ஆகிலும் தேவனுடைய ராஜ்யத்திற்கு பாத்திரராக நடவாதவர்களுக்கு நித்திய அழிவாகிய தண்டனையும் உண்டு.

2 தெச. 2:11 சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

எல்லோருக்கும் கிருபையினால் இரட்சிப்பு உண்டுதான்; ஆகிலும் அநீதியில் பிரியப்படுவோருக்கு ஆக்கினையும் உண்டு.

1 பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

யூதன் கிரேக்கன் என்ற பட்சபாதமே தேவனிடம் கிடையாது. யாராயிருந்தாலும் அவரவர் கிரியைகளின்படிதான் நியாயத்தீர்ப்பு. எனவே கிருபை கிருபை எனச் சொல்லிக்கொண்டிராமல், தேவனிடம் பயத்துடன் நடந்துகொள்வோம்.

2 பேதுரு 2:1 உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

வேதப்புரட்டு பண்ணுபவர்களுக்கும் சரி, அதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கும் சரி, நிச்சயமாக அழிவு உண்டு என பேதுரு திட்டவட்டமாகச் சொல்கிறார்.

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

சகோதரனிடத்தில் அன்புகூருதல் எனும் கிரியை இல்லாதவன் மரணத்தில்தான் நிற்பான், அவனுக்கு நித்தியஜீவன் கிடையாது என அப்போஸ்தலர் யோவானுங்கூட சொல்கிறார்.

1 கொரி. 1:18  சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

எல்லோருக்கும் கிருபை உண்டு என்றபோதிலும், அவர்களில் “கெட்டுப்போகிறவர்கள், இரட்சிக்கப்படுகிறவர்கள்” எனும் 2 பிரிவும் உண்டும் என்பதை மறவாதிருப்போமாக.

ரோமர் 1:16 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

யூதன் கிரேக்கன் யாராக இருந்தாலும் விசுவாசம் உள்ளவனுக்குத்தான் இரட்சிப்பு. கிரியை இல்லாவிடில், அந்த விசுவாசம் செத்ததாகத்தான் இருக்கும்.

 கிரியை எத்தனை அவசியம் என்பதற்கு ஆதாரமான பல வசனங்களை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நிருபங்களில் நேரடியாகப் படித்து, கிருபையை மட்டுமல்ல, கிரியைகளைக் குறித்தும் அப்போஸ்தலர்கள் அதிகமாகப் போதித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்வோமாக.

இப்பதிவுக்கான விமர்சனங்கள் அடுத்து வரும் பதிவுகளில் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: அப்போஸ்தலர்கள் புறஜாதிகளிடம் எதைப் போதித்தனர்? கிருபையையா, கிரியையா?
Permalink  
 


  • Ignatius ElangoHold it, I will have to take time to reply this post of yours!! You have written oxymoron statements here. I will expose it in the evening!!

 

  • Jeba Yesudhasappadiyanal judas iscariot-kku yen kirubai seyalpadamal poiyittu

 

  • Ignatius Elango‎//appadiyanal judas iscariot-kku yen kirubai seyalpadamal poiyittu// கிருபை என்றால் என்னவென்று தெரியுமா?? யூதாஸ் இஸ்காரியோத்துக்கு கிருபை செய்ப்படாமல் போனதை வசனத்துடன் காட்ட முடியுமா??

 

  • Ignatius Elangoஎபிரெயர் 13:9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது;

    I பேதுரு 1:13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

 

  • Ignatius Elango‎//கிருபையினால் எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் நித்தியஜீவன் என்று சொல்லி வீண்வார்த்தைகளினால் யாரும் நம்மை மோசம்போக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.//

    கிருபையை வீண் வார்த்தை என்று சொல்லும் முதல் கிறிஸ்தவரை பார்க்கிறேன்!! தொடரட்டும் உங்கள் கிரியைகள்!! இதை தான் கிரியை என்கிறீகளா?? தேவனின் கிருபையை மட்டுப்படுத்தி மனிதனின் கிரியையின் மேல் அத்துனை பெருமித்தமா உங்களுக்கு??

 

  • Ignatius Elango‎//எல்லோருக்கும் கிருபையினால் இரட்சிப்பு எனச் சொன்ன அதே பவுல்தான், மாம்சத்தின்படி பிழைப்பவர்களுக்கு சாவு என்றும் சொல்கிறார். இதற்குக் காரணமென்ன? கிருபையாய் இரட்சிப்பைப் பெற்ற ஒருவன், மாம்சத்தின்படி நடந்தால் அவன் பெற்ற கிருபையை இழக்க நேரிடும் என்பதே!/

    மரணம் என்றால் என்னவென்று தெரிந்து பேசுங்கள்!! சாவு யாருக்கு கிடையாது!! இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்தே அன்றி உயிருடன் இருக்கும் போது என்ன இரட்சிப்பு??

 

  • Ignatius Elangoலூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

    இதில் என்ன கிரியை கண்டீர்கள்?? பாவமன்னிப்பு என்பதே கிருபை தான் என்பது தெரியாதா??

 

  • Ignatius Elangoஅப்போஸ்தலரிகளில் பவுலை தவிர, மற்ற அப்போஸ்தலர்கள் பெரும்பாலுமே யூதர்களிடம் தான் பிரசங்கித்தார்கள்!! கிறிஸ்துவின் வருகையை சொல்லி, அவர்கள் தீர்க்கதரிசிகளை புறகனித்து, கிறிஸ்துவை தள்ளியதை நினைவுப்படுத்தி மனந்திரும்ப போதித்தார்கள்!!

 

  • Ignatius Elangoரோமர் 4:5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

    இதையும் சொல்லியவர் பவுல் தான் என்பதை கிரியை மட்டும் நம்புவோர் நினைவில் கொள்ளட்டும்!!

 

  • Ignatius Elango
    I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

    கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

    ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

    ரோமர் 3:28 ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

    ரோமர் 4:2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.

    ரோமர் 4:6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு;

    ரோமர் 9:32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

    கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

    கலாத்தியர் 2:16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

    கலாத்தியர் 3:2 ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

    கலாத்தியர் 3:5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

    எபேசியர் 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

    எபேசியர் 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

    ஆக, கிரியை செய்வது ஏதோ நம் முயற்சி என்று நினைக்க வேண்டாம்!! அது கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய செய்கையாகயிருக்கிறது!! அப்படி கிரியை செய்யும்ப்படி அவர் முன்னதாக ஆயத்தம் செய்திருக்கிறார்!! யாருக்கு செய்யவில்லையோ, அவர்கள் கிரியை செய்யாமல் விசுவாசத்தினால் நீதியை பெறுவார்கள்!!

    கிரியைகளினால் நீதிமானாகிறோம் என்பது தான் வீண் போதனையாக தெரிகிறது!!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    ‎//எபிரெயர் 13:9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது;//

    இப்படிச் சொன்னவர் இப்படியும் சொல்லியுள்ளாரே!!

    எபிரெயர் 12:9 நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் “பிழைக்கத்தக்கதாக” ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

    10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு” நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

    11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது “நீதியாகிய சமாதான பலனைத் தரும்”.

    தேவனின் சிட்சையின்போது அடங்கி நடந்தால்தான் “பிழைக்கமுடியும், தேவனுடைய பரிசுத்தத்தில் பங்கடைய முடியும், நீதியாகிய சமாதான பலனைப் பெறமுடியும்.

    எபிரெயர் 12:13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.

    14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

    15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

    பாதங்களுக்கு வழியைச் செவ்வைப்படுத்தவேண்டுமாம், யாவரோடும் சமாதானமாயிருக்கவேண்டுமாம், பரிசுத்தமாயிருக்க நாடவேண்டுமாம; அப்போதுதான் தேவனின் கிருபையை இழந்துபோகமாட்டோமாம்.

 

  • Gnana Piragasam
    ‎//I பேதுரு 1:13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.//

    கிருபையின்மேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது; தொடர்ந்து வரும் வசனங்களையும் படியுங்கள்.

    1 பேதுரு 1:14 நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

    17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

    இச்சைகளின்படி நடக்கக்கூடாதாம், பரிசுத்தராயிருக்க வேண்டுமாம், கிரியைகளின்படிதான் தேவன் நியாயத்தீர்ப்பார் என்பதால் தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டுமாம்.

 

  • Gnana Piragasam
    ‎//கிருபையை வீண் வார்த்தை என்று சொல்லும் முதல் கிறிஸ்தவரை பார்க்கிறேன்!!//

    எழுதியதை அரைகுறையாகப் படிக்காமல் முழுமையாகப் படியுங்கள். கிருபையினால் எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் நித்தியஜீவன் என நீங்கள் சொல்வதுதான் வீண்வார்த்தை எனக்கூறியுள்ளேன்.

    கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள் எனும் வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்வதில் அர்த்தமில்லை. கிருபையை ஒருவன் இழக்கக்கூடும், இரட்சிப்பையும் இழக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமான எத்தனையோ வசனங்களைச் சொல்லிவிட்டேன்.

    //கிருபையை வீண் வார்த்தை என்று சொல்லும் முதல் கிறிஸ்தவரை பார்க்கிறேன்!!//

    நான் முதல்கிறிஸ்தவராக இருந்தால் என்ன, முன்னூறாம் கிறிஸ்தவராக இருந்தால் என்ன? தேவையற்ற சிந்தனையில் ஈடுபடாமல் எழுதியதை முழுமையாகப் படித்து, சொல்லும் கருத்தை கிரகித்து, பதில் வாதத்தை வையுங்கள்.

 

  • Gnana Piragasam‎//மரணம் என்றால் என்னவென்று தெரிந்து பேசுங்கள்!! சாவு யாருக்கு கிடையாது!! இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்தே அன்றி உயிருடன் இருக்கும் போது என்ன இரட்சிப்பு??//

    சாவு எல்லோருக்கும் உண்டுதான். ஆனால் சிலரை சாவீர்கள் என்றும் வேறு சிலரை பிழைப்பீர்கள் என்றும் பவுல் சொல்கிறார். இங்கு பவுல் சொல்கிற “சாவு” எது, “பிழைப்பு” எது?

    எல்லோருக்கும் சாவு என்றால், சிலரைப் “பிழைப்பீர்கள்” என ஏன் பவுல் சொல்லவேண்டும்?

 

  • Gnana Piragasam
    ‎//லூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

    இதில் என்ன கிரியை கண்டீர்கள்?? பாவமன்னிப்பு என்பதே கிருபை தான் என்பது தெரியாதா??//

    அரைகுறையாக வசனத்தைப் படித்தால் இப்படித்தான் அர்த்தமற்ற கேள்விகள் வரும். மனந்திரும்புதல் எனும் வார்த்தை உங்கள் கண்களுக்குப் படவில்லையோ?

    மனந்திரும்புதல் என்றால் என்ன? வசனங்களை முழுமையாகப் படியுங்கள்.

    லூக்கா 3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; 9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

    10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

    12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

    14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

    அநியாயஞ்செய்யாமல், பிறனுக்கு இடுக்கண் செய்யாமல், சுயநலத்தையே நோக்காமல், பிறனிடம் அன்புகூர்ந்து, பிறன் நலன் நோக்குவதுதான் மனந்திரும்புதல்.

    //பாவமன்னிப்பு என்பதே கிருபை தான் என்பது தெரியாதா??//

    இதைத்தான் நானும் சொல்லியுள்ளேனே!! நான் எழுதினதை முழுமையாகப் படித்தபின் வாதத்தை வையுங்கள்.

    **பாவமன்னிப்பு என்பது தேவகிருபையைக் குறிக்கிறது. இக்கிருபையை மட்டும் போதித்தால் போதும் என இயேசு சொல்லவில்லை. மனந்திரும்புதல், தமது கட்டளைகளைக் கைக்கொள்தல் ஆகியவற்றையும் போதிக்கவேண்டும் என்றே இயேசு கூறினார்.**

 

  • Gnana Piragasam
    ‎//ரோமர் 4:5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

    இதையும் சொல்லியவர் பவுல் தான் என்பதை கிரியை மட்டும் நம்புவோர் நினைவில் கொள்ளட்டும்!!//

    வசனம் நன்றாக நினைவில் உள்ளது. விரைவில் எல்லா வசனங்களுக்கும் விளக்கம் வரும்.

    கிரியை மட்டும் நம்புவோர் யார் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள்.

    கிரியை இல்லாதவனுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்படும் என வசனம் சொல்வதை அப்படியே ஏற்கிறேன். ஆனால் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்றும் வசனம் சொல்கிறதே!!

    மற்றுமொரு கேள்வி. விசுவாசம் இல்லாதவனுக்கு எது நீதியாக எண்ணப்படும்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    ‎//அப்போஸ்தலரிகளில் பவுலை தவிர, மற்ற அப்போஸ்தலர்கள் பெரும்பாலுமே யூதர்களிடம் தான் பிரசங்கித்தார்கள்!! கிறிஸ்துவின் வருகையை சொல்லி, அவர்கள் தீர்க்கதரிசிகளை புறகனித்து, கிறிஸ்துவை தள்ளியதை நினைவுப்படுத்தி மனந்திரும்ப போதித்தார்கள்!!//

    //கிறிஸ்து கிரியைகளை பற்றி யூதர்களிடம் போதித்தார், ஆனால் அவரின் அப்போஸ்தலர்களோ கிருபையை பற்றி புறஜாதியினடத்தில் போதித்தார்கள்!!//

    இவ்விரு கூற்றுக்களையும் சொன்னவர் ஒரே நபர்தான். ஆம், Bro Ignatius Elango தான்.

 

  • Gnana Piragasamஎனது note-ல் இன்னும் நிறைய வசனங்களைக் காட்டியுள்ளேன்; அவை அத்தனைக்கும் பதில் சொல்லுங்கள், Bro Ignatius Elango.

 

  • Ignatius Elangoநான் மட்டும் ஏதோ என் சொந்த வார்த்தைகளை எழுதியது போல் இருக்குதா??


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard