நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?
Permalink  
 


சுந்தர் அவர்களே,

சற்று பொறுமையாக வசனங்களை ஆராய்ந்து பாருங்களேன்!!

1.    இயேசு கிறிஸ்து இல்லாமல் தேவன் பூரணமாக இல்லை என்பது அபத்தமான ஒரு கருத்தாகும்!!

சங். 90:2. பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

சர்வவல்லமையுள்ள தேவன் அநாதியான தேவனாக இருக்கிறவர்!! அவர் எல்லாம் தோன்றும் முன்னே இருக்கிறார்!! சர்வவல்லமையுள்ளவராக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்!? தேவனுக்கு உபயோகப்படுத்திய சொல் ஏல் (El). அதாவது சர்வவல்லமையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் எபிரேய வார்த்தை!! ஆக எதுவுமே தோன்றும் முன்னே தேவன் சர்வவல்லமையாகத்தான் இருந்திருக்கிறார்!!

சங். 93:2. உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

இந்த சங்கீதத்திலும் யெகோவா தேவனைக் குறித்தே சொல்லப்பட்டிருக்கிறது!! தேவ‌ன் பூர்வமுத‌ல் அநாதியாயிருக்கிறார்!! பூர்வ‌முத‌ல் என்ப‌தை தொட‌க்க‌மில்லா ஒரு ஆர‌ம்ப‌ம் என்று சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! கிறிஸ்துவோ ஒரு ஆர‌ம்ப‌ம் உடைய‌வ‌ராக‌ இருப்ப‌வ‌ர். ஆதியில் வார்த்தை!! அநாதியாக‌ இருந்த‌ தேவ‌ன் ச‌ர்வ‌வ‌ல்ல‌மையுள்ள‌வ‌ராக‌ இருந்தார்!! ஆக‌ கிறிஸ்து இல்லாம‌ல் அவ‌ர் முழுமை பெறுவ‌தில்லை என்ப‌து நிச்ச‌ய‌மாக‌ அப‌த்த‌மான‌ க‌ருத்தாகும்!!

2.    ஆதியில் வார்த்தை இருந்த‌து என்றால் அத‌ற்கு முன்பு யெகோவா தேவ‌னிட‌ம் வ‌ல்ல‌மை இல்லை என்று சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ளா!? மாம்ச‌த்தில் வ‌ந்த‌ பிற‌குதான் கிறிஸ்து வ‌ந்தார் என்று நினைக்கிறீர்க‌ளா? இல்லை, அநாதி தேவ‌ன் ச‌ர்வ‌வ‌ல்ல‌மை உள்ள‌வ‌ராக‌வே இருந்தார்!! அவ‌ரின் முத‌ல் சிருஷ்டிப்பு  வார்த்தை என்று மொழிப்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ லோகோஸ் ஆகும்!! இந்த‌ வார்த்தை தேவ‌ன் பேசிய‌ வார்த்தை இல்லை, மாறாக‌ தேவ‌ன் பேசிய‌தை வெளிப்ப‌டுத்தின‌ "வார்த்தை"!! தேவ‌ன் பொறியாள‌ர் என்றால் கிறிஸ்து கொத்த‌னார் (உவ‌மைக்காக‌ சொன்னேன்)!! தேவ‌ன் நினைப்ப‌தை கிறிஸ்து உருவாக்கிய‌வ‌ர்!! ப‌டைப்பின் ஆர‌ம்ப‌மும் ஆதியில்தான் தொட‌ங்கிய‌து; அதாவ‌து இயேசு கிறிஸ்து என்கிற‌ லோகோஸின் ப‌டைப்பிற்கு பின்பே!! ஆக‌வே தான் "ஏலோஹிம்" என்கிற‌ வார்த்தை அங்கே உப‌யோகிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! ஆனால் அந்த‌ ஏலோஹிம் என்கிற‌ வார்த்தை திரித்துவ‌த்தைத் தான் வ‌ள‌ர்த்த‌தே த‌விர‌, தேவ‌னை அறிகிற‌ அறிவை அல்ல‌!!

தாங்கள் சொல்லியப்படியே பிரதமரை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால், பிரதமர் எல்லா இடத்திற்கும் எல்லாரிடமும் பேச மாட்டார். பேச முடியாது அல்லது தெரியாது என்பதால் அல்ல; மாறாக அதுதான் தொடர்பின் வரைமுறை (Protocol). அதற்காகவே அவர் நியமித்த தூதர் இருப்பார்!! பிரதமர் சொல்லுவதை அல்லது அவரது எண்ணங்களை அவரே எடுத்துச் செல்வார்!! இதுதான் கிறிஸ்துவிற்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பாக இருந்தது!!

தேவன் அவரை ஜெனிப்பித்தார் என்பதால், தந்தை மகன் என்கிற உறவு முறை வந்தது!! ஆனால் அதற்கு முன்னே அவர் சிருஷ்டிக்கப்பட்டார்!!

மாம்சத்தில் வந்தவர் தேவன் பேசும் "வார்த்தை" என்கிற வல்லமை அல்ல, மாறாக தேவனின் தற்சொருபமாக அவரின் சிருஷ்ட்டிப்பான லோகோஸ் என்கிற வார்த்தைதான்!! தயவு செய்து வார்த்தை என்று மொழிப்பெயர்க்கப்பட்ட மூல பாஷையான லோகோஸை குறித்து எழுதியதை வாசித்து பாருங்கள்!! வேதம் சொல்லுவது, ஆதியில் "வார்த்தை" இருந்தது!! இதை தமிழில் வாசித்தோமென்றால் இருந்தது என்று சொல்லப்பட்டவுடன் அது ஏதோ பொருள் என்று ஆகிய மாதிரி எடுத்துக்கொண்டு, தேவன் பேசுவதைத்தான் "வார்த்தை" என்று நினத்து விட்டீர்கள் போல்!! ஆனால் ஆங்கிலத்தில் அதையே வாசித்தோமென்றால் "In the beginning was the word" அதன் அர்த்தம் வேறு மாதிரி இருக்கும்!! உங்கள் புரிந்துக்கொள்ளுதலின்படி பார்த்தோமென்றால் அநாதியான தேவனுக்கு பேசுவதற்கே ஒரு காலம் தேவைப்பட்டது போல்!! சர்வவல்லமையுள்ள தேவனை இப்படி விமர்சிப்பது நியாயமா??

மாறாக, அநாதி தேவன் ஒரு குறிப்பிட்ட காலம் சென்றபின் தன்னை வெளிப்படுத்தும்படியாக ஒருவரை சிருஷ்ட்டித்து அவருடன் தந்தை மகன் என்கிற உறவு முறை வைத்தார் என்றால் நம்புவதில் என்ன பிரச்சனை!! அந்த லோகோஸ் வந்தது தான் ஆதி (அதாவது ஒரு ஆரம்பம்), நிச்சயமாக அநாதியல்ல!! இந்த வார்த்தை வரும் முன் கூட தேவனிடம் அதே வல்லமை இருந்தது!! ஆனால் தன்னுடைய தற்சொருபமாகப் படைத்து அவரையே இந்த உலகத்திற்கு மாம்சத்தில் அனுப்பினார்!! இந்த பூமியில் மாம்சத்தில் வரும் முன், அவர் (கிறிஸ்து) தேவனுடன் இருந்தார்!!

யோவான் 17:5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.!!

சுந்தர் அவர்களே, இரண்டு விஷயங்கள்

1. மாம்சத்தில் வரும் முன்பே கிறிஸ்து, சர்வவல்லமையான தேவனிடத்தில் ஒரு வல்லமையுள்ள தேவனாக, தேவன் தந்த "மகிமையோடு" இருந்தார்!!

2. மாம்சத்தில் வந்தவர், அந்த வார்த்தையாக (லோகோஸாக) இருந்தவரே!!

மேலும் கிறிஸ்து மனுஷருக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருப்பவரே தவிர, தேவனை முழுமைப்படுத்துபவர் அல்ல!! இதற்கு ஒரு வேத ஆதாரமும் கிடையாது!! அவர் தேவனுடன் சேரவில்லை, மாறாக அவரின் வலது பக்கத்திலே வீற்றிருப்பவராக இருக்கிறார்!! தயவு செய்து வார்த்தையை "தேவன் பேசிய வல்லமை" என்று எண்ணாதீர்கள்!!

நீங்கள் சொல்லும் கருத்து "இருத்துவம்" என்கிற ஒரு புதிய கோட்பாட்டைத் துவக்கி வைக்கும்; அதோடு "பரிசுத்த ஆவியாகிய தேவன்" என்று சேர்த்துக்கொண்டால் "திரித்துவம்" ஆகி விடுகிறது!! இயேசு கிறிஸ்து பிதாவுடன் சேர்ந்தால் "ஒரே தேவன்" என்கிற கருத்து சரி என்று எப்படி சொல்லுகிறீர்கள்??


-- Edited by Bereans on Saturday 18th of December 2010 08:25:12 PM

__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அன்பான சகோ.பெரியன்ஸ், சகோ.சுந்தர், சகோ.எட்வின் மற்றும் தள அன்பர்களே!

தேவனுக்கு ஆராதனை அல்லது தொழுதல் என்பதில் நாம் அசட்டையாக இராமல் தேவசித்தப்படி (மட்டுமே) செய்யவேண்டும் என்பது மிகமிக முக்கியமானது. மோசே மூலம் தேவன் தந்த 10 கற்பனைகளில் முதல் கற்பனையே “எந்த தேவனை எப்படி ஆராதனை செய்யவேண்டும்” என்பது பற்றியதுதான்.

யாத்திராகமம் 20:2-5  உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

இந்நாட்களில் இயேசுவை ஆராதிக்கலாம் அல்லது தொழலாம் எனச் சொல்பவர்கள், இயேசுவுக்கு ஓர் உருவத்தையும் உண்டாக்கி அதைத் தங்கள் மனதில் பதித்து மற்றவர்கள் மனதிலும் பதித்து வைத்துள்ளனர்.

அவர்கள் இயேவை ஆராதிக்கையில் அல்லது தொழுகையில் “இயேசுவின் உருவத்தை நினைப்பதில்லை” என என்னதான் சொன்னாலும், நிச்சயம் அவர்கள் இருதயத்தில் இயேசுவின் உருவம் எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கும்.


ஓர் உருவத்தை உருவாக்கி ஆராதனை செய்வதும் ஓர் உருவத்தை இருதயத்தில் நினைத்து ஆராதனை செய்வதும் சமமான செயல்கள்தான். (ஸ்திரீயுடன் இருதயத்தில் விபசாரம் செய்தல் பற்றி இயேசு சொன்னாரல்லவா?)

எனவே இயேசுவை ஆராதித்தல் என்பது 10 கற்பனைகளின் முதல் கற்பனையை மீறுவதாகிவிடும். இக்கற்பனையை ஜனங்கள் மீறுவதற்கு தாமுங்கூட காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் “மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக்கொள்கிறதில்லை” என இயேசு declare செய்துள்ளார் (யோவான் 5:41). எந்தவொரு விண்ணப்பப் படிவத்திலும் declaration என்பது ஓரிரு வரிகளில் இருந்தாலும் அது மிகவும் வலுவான ஒன்றாகக் கருதப்படும். அதேவிதமாகத்தான் இயேசுவின் declaration-ம் மிகவும் வலுவானது.

என்னையன்றி வேறே தேவர்கள்” எனும் சொற்றொடர் “ஒரே தேவன் (unique God)” concept-ஐ தெளிவாகச் சொல்கிறது. “ஒரே தேவனாகிய” யெகோவாவைத் தவிர வேறு யார் “தேவன்” என அழைக்கப்பட்டாலும், அது “ஒரே தேவன்” concept-ஐ மாற்றிவிடாது. எனவேதான் இயேசுவைத் “தேவன்” என வேதாகமம் கூறினாலும் கூடவே “ஒரே தேவன்” concept-ம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் declaration மற்றும் “ஒரே தேவன்” concept ஆகிய இவையெல்லாம் வேதாகமத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள போதிலும், 10 கற்பனைகளின் முதல் கற்பனைக்கு விரோதமாக பலரும் “இயேசுவை ஆராதிக்கின்றனர்”. இச்செயலை நிச்சயம் தேவனின் சார்பாக இயேசு நியாயம் விசாரிப்பார். அப்படி நியாயம் விசாரிக்கையில் தமது declaration-நினைவூட்டி, “நான் தான் இப்படிச் சொல்லியுள்ளேனே, பின் ஏன் என்னை ஆராதிக்க நினைத்தாய்?” எனக் கேள்வியும் கேட்பார். அத்தோடு மத்தேயு 7:21-ஐயும் நினைவூட்டுவார்.

இவ்விஷயத்தில் சகோ.விஜய் “நான் தப்பே செய்வதாக இருந்தாலும் பரவாயில்லை, அது பற்றி நீ கவலைப்படவேண்டாம்” என்கிறார். இத்தளத்தில் எழுதப்படுபவை ஏதோ விஜய், சில்சாம் எனும் சிலருக்காக அல்ல. பவுல் சொன்ன “மந்தையைத் தப்பவிடாத ஓநாய்களால்” கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்காகத்தான் இத்தளம்.

இதன் அடிப்படையில்தான் இத்திரி துவக்கப்பட்டது. இதுவரையிலான விவாதத்தில் உற்சாகமாகப் பங்களித்த சகோ.பெரியன்ஸ், சகோ.சுந்தர் மற்றும் சகோ.எட்வின் மூலம் பல வேத சத்தியங்களை வெளிக்கொணர தேவன் கிருபை செய்தார். இத்திரியின் தலைப்பு சம்பந்தமான விஷயங்கள் எல்லாவற்றையும் கிட்டத்தட்ட பார்த்துவிட்டோம் என நினைக்கிறேன்.

தற்போது சகோ.சுந்தர் எழுப்பியுள்ள விஷயம், அதாவது தேவனுடைய வார்த்தைக்கும் இயேசுவுக்குமிடையேயான தொடர்பு பற்றிய விஷயம், என்னைப் பொறுத்தவரை இதுவரை நான் அதிகமாகச் சிந்தித்துப்பார்க்காத விஷயம். இவ்விஷயம் சம்பந்தமான வசனங்கள் அதிகமாக இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. எனவே இவ்விஷயத்தில் சற்று நிதானமாக என் கருத்தைப் பதிக்கிறேன். அதுவரை சகோ.பெரியன்ஸ், சகோ.சுந்தர், சகோ.எட்வின் மற்றும் தள அன்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்களாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்கள் தனது பதிவுகளில் 2 வசனங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவை:

சாயா 40:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாக காணும்.

வெளி 5 12 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.


இவ்விரு வசனங்களும் இயேசுவைப் பற்றிய வசனங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இயேசுவுக்கு நாம் மகிமையைச் செலுத்தவதை வேதாகமம் தடைசெய்யவில்லை. மகிமை என்றால் புகழ்ச்சி, கீர்த்தி என்றும் சொல்லலாம். இயேசு மட்டுமின்றி மனிதர்களில் பலருங்கூட பலராலும் புகழப்பட்டனர். ஒருவரிடம் காணப்படும் புகழ்ச்சிக்குரிய அம்சத்தின்/அம்சங்களின் அடிப்படையில் அவர் புகழப்படுவார். ஞானம் நிறைந்த சாலொமோன், அதன் காரணமாக சகல ஜாதிகளாலும் புகழப்பட்டார்.

1 ராஜா. 4:31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

சாலொமோனின் இக்கீர்த்தையைப் பற்றி பின்வரும் வசனத்தில் இயேசு குறிப்பிடுகிறார்.

மத்தேயு 6:29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனத்தில் சாலொமோனின் கீர்த்தி எனச் சொல்லாமல் சலொமோனின் மகிமை என இயேசு சொல்கிறார். எனவே கீர்த்தி, புகழ்ச்சி, மகிமை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அர்த்தங்களை உடையவைகளே.

இயேசுவின் கீர்த்தியின் காரணமாக அவர் புகழப்பட்டதாகப் பின்வரும் வசனம் கூறுகிறது.

லூக்கா 4:14,15 அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.

இவ்வசனத்தின் “புகழப்பட்டார்” எனும் வார்த்தைக்கும், பின்வரும் வசனத்தின் “மகிமைப்படுத்தினார்கள்” எனும் வார்த்தைக்கும் மூலபாஷையில் doxazo எனும் ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மத்தேயு 9:8 ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

எனவே புகழ்தல், மகிமைப்படுத்துதல் ஆகிய இரண்டுமே ஒரே அர்த்தமுடையவைதான். இயேசுவைப் புகழவோ மகிமைப்படுத்துவோ கூடாது என வேதாகமம் சொல்லவில்லை. ஆகிலும் புகழ், கீர்த்தி, மகிமை இவை யாவும் ஆளாளுக்கு வேறுபடக்கூடியவையாகும். பிதாவின் மகிமை வேறு, இயேசுவின் மகிமை வேறு, சாலொமொனின் மகிமை வேறு.

இயேசுவானவர் தமது 2-ம் வருகையின்போது பிதாவின் மகிமை பொருந்தினவராய் வரப்போவதாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.

மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

இயேசுவின் இக்கூற்றின்படி நிறைவேறப்போவதைத்தான் ஏசாயா 40:5 கூறுகிறது. அதாவது இயேசுவின் முதலாம் வருகையின் போதல்ல, அவரது 2-வது வருகையின்போதுதான் கர்த்தரின் மகிமை (அதாவது பிதாவின் மகிமை) இயேசுவின் மூலம் வெளியரங்கமாவதை மாம்சமான யாவரும் ஏகமாகக் காணுவார்கள்.

இயேசுவின் முதலாம் மகிமையின்போது கர்த்தரின் மகிமை அவரில் வெளியரங்கமானதை மாம்சமானவர்கள் கண்டிருந்தால், அவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். எனவே ஏசாயா 40:5-ன் தீர்க்கதரிசனம் இனிமேல்தான் நிறைவேறப்போவதாக உள்ளது.

அது நிறைவேறும் நாள்வரை பிதாவின் மகிமையும் இயேசுவின் மகிமையும் சமமானவைகளே எனக் கூறுவது உசிதமானதல்ல. எனவே தற்காலத்தில் பிதாவின் மகிமைக்கு நிகராக இயேசுவையும் மகிமைப்படுத்த நினைப்பது உசிதமானதல்ல.

மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக் கொள்கிறதில்லை என இயேசு கூறியுள்ளதால், அவரை மகிமைப்படுத்துவதற்கு, குறிப்பாக பிதாவின் மகிமைக்கு நிகராக அவரை மகிமைப்படுத்துவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.

பிதாவின் மகிமையோடு இயேசு வருகிற அந்தநாளில் நம்மில் பலருங்கூட தேவனின் மகிமையையும் கிறிஸ்துவின் மகிமையையும் அடையக்கூடும் எனப் பின்வரும் வசனங்கள் மூலம் அறிகிறோம்.

ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

2 தெச. 2:14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.


வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் அனைவரும் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்றுதான் பெரும்பாலும் கூறியுள்ளனரேயன்றி, இயேசுவுக்கு மகிமையுண்டாவதாக எனக் கூறியதாகத் தெரியவில்லை.

ரோமர் 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக.

1 கொரி. 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

2 கொரி. 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

எபேசியர் 3:20,21 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக.

பிலிப்பியர் 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

பிலிப்பியர் 4:20 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக.

1 தீமோ. 1:11 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.

1 பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.

யூதா 1:25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக.


இப்படியாகக் கூறியுள்ள வேதாகம அப்போஸ்தலரின் மாதிரியைப் பின்பற்றுவதுதான் உசிதமானது என நான் கருதுகிறேன்.

இன்னமும் “நான் இயேசுவையும் பிதாவையும் சமமாகத்தான் மகிமைப்படுத்துவேன்” என நம்மில் யாராவது கருதினால் அது பற்றி இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆயினும் ஆராதனை அல்லது தொழுதல் என்பது தேவன் ஒருவருக்கு மட்டுமே உரியது என்பதை அவர்கள் மறவாதிருப்பார்களாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

dino wrote:
//அதுவும் இயேசு தொழத்தக்க தேவன் என்று சொல்லி சொல்லி விசுவாசிகளை ஏமாற்றி சம்பாரிகிரானுவல்://

இவ்வரி 100-க்கு 100 உண்மையானது.

இன்றைய “போதகர்கள்” “பாஸ்டர்கள்” “குருக்கள்” பலருக்கு ஆராதனைக்குரிய தேவன் “பிதாவாகிய தேவன் மட்டுமே, குமாரனாகிய இயேசு அல்ல” எனும் உண்மை நன்றாகவே தெரியும்.

ஆனால் இயேசுவையே தெய்வமாகக்காட்டி அவரையே ஆராதனை செய்யும்படி சொல்லி வந்த மக்களிடம், இதுவரை தாங்கள் சொன்னதும் செய்ததும் தவறு எனச் சொல்வதற்கு அவர்களின் சுயகவுரவம் ஒத்துக்கொள்வதில்லை; இதைவிட முக்கியம் இயேசுவையே தெய்வமாக நம்பி ஆராதனை செய்து தங்களுக்கு காணிக்கை கொடுத்து வந்த மக்கள், உண்மையைச் சொன்னால் தங்கள் ஆலயத்திற்கு வரவும் மாட்டார்கள், காணிக்கை கொடுக்கவும் மாட்டார்கள் என்ற பயமும் அவர்களுக்கு இருப்பதால், உண்மையை ஒத்துக்கொள்ளாமலும், உண்மையைச் சொல்பவர்களிடம் தரங்கெட்ட விதமாய் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.

உருவத்தைப் பார்த்து வழிபட்டு பழகிப் போன ஜனங்களுக்கு, தெய்வம் மாறினாலும் தாங்கள் வழிபடப்போகிற புது தெய்வத்திற்கு ஓர் உருவம் வேண்டும் என்பதால்தான், கிறிஸ்தவர்களின் தெய்வம் இயேசு எனச் சொல்லி, அவரது உருவத்தையும் காட்டி ஜனங்களை ஏமாற்றி வருகின்றனர்.

இயேசுதான் மெய்யான தெய்வம் என்ற சுலோகத்தைச் சொல்லாமலும், இயேசு உங்கள் வியாதியைக் குணமாக்குவார், பிரச்சனைகளைத் தீர்ப்பார், ஐசுவரியத்தைத் தருவார், தேர்வில் வெற்றி தருவார் என்பது போன்ற செவித்தினவு வார்த்தைகளையும் சொல்லாமல், இவர்களின் மதமாற்ற முயற்சி பலிக்காது என்பதால்தான், வேதத்திற்கு விரோதமான தெய்வ வணக்கத்தைச் சொல்லி, வாக்குறுதிகளை அள்ளிவீசி தங்கள் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

எனவே டினோ சொன்ன கருத்து 100-க்கு 100 சரியே.

உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் எனும் பழமொழிக்கு ஏற்ப, மேலே சொன்ன உண்மைகளைப் படித்ததும் ஒரு சிலருக்கு உடம்பெரிச்சல் மிக அதிகமாகவே வரும். அந்த உடம்பெரிச்சலைத் தணிக்க, வழக்கம்போல் நம்மீது சாக்கடையை வீசவும் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தின காலம் மலையேறிவிட்டது. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல அவர்கள் என்ன வேண்டுமானாலும் குரைத்துவிட்டுப் போகட்டும். எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 36
Date:
Permalink  
 

நன்றி சகோதரர் அன்பு அவர்களே,  சில்சாமின் கூத்து அங்கு மட்டும் அல்ல, நான் வாழும் நாட்டில் கூட உண்டு.  தமிழ் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கி, அங்கு வரும் விசுவாசிகளுக்கு தேவன் அதை தரபோகிறார், இன்று உங்களை ஆசிர்வதிக்கப்  போகிறார், உங்கள் தரித்திரம் இன்றுடன் இல்லாது போகப்போகிறது போன்ற பொய்யான உபதேசங்களை சொல்லி சொல்லியே இங்கு எமது பகுதி தமிழ் மக்களை ஏமாற்றுகிறவர் பல பேர் உண்டு.  அங்கு இருக்கும் போதகர் என்று அழைக்கப்படுபவர்கள்  பல வருடங்களாக எந்த வேலைக்கும் போவது இல்லை.  ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பார்கள் ஒருவரும் எந்த வேலைக்கும் போனதாக நான் அறியேன். காரணம் நான் இருக்கும்  அதே  தெருவில் அவர்களும் இருகிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரிடமும் BMW , மெசிடிஸ் போன்ற EURO  மதிப்பில் லச்சதுக்கும் பெறுமதியானது. இருப்பதற்கு ஆளுக்கு ஒரு மாடி விடுகள்,  விடுமுறைகளை கழிக்க ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மற்றும் ஒரு சில நாடுகள் :::::::  இவ்வளவும் வேலைக்கு போகாமல் இவர்களுக்கு எங்கு இருந்து இந்தப் பணம் வருகிறது என்று யாராவது யோசித்து பார்ப்பது உண்டா?.  அந்த சபைக்கு போகும் விசுவாசிகளோ காணிக்கை கொடுத்து பிச்சகாரர் ஆகுகிறார்கள், காணிக்கை வாங்கும் போதகரோ உல்லாச வாழ்க்கை...  இவற்றை நாம் எடுத்து சொன்னால் நாங்கள் மேசியாவின் எதிரிகள் என்று எமக்கு ஒரு பெயர்.  இருந்தாலும் இயேசுவானவர் வரும் போது இவர்களின் அக்கிரமங்களுக்கு ஏற்றாத் போல தகுந்த பதில் கொடுப்பார் என்பது நிட்சயம்: நன்றி


__________________

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்'' 

«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard