நம் சபைகளிடையேயான பல பிரிவுகளுக்கான ஒரு முக்கிய காரணம், ஞானஸ்நானமாகும்.
குழந்தை ஞானஸ்நானம், பெரியோர் ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம், முழுக்கு ஞானஸ்நானம், தொட்டி நீரில் ஞானஸ்நானம், ஆற்று நீரில் ஞானஸ்நானம் எனும் பல ஞானஸ்நானங்களைச் சொல்லி, அதன் அடிப்படையில் சபைகள் பிரிந்து கிடக்கின்றன.
தங்கள் சபை ஞானஸ்நானமே சரியானது எனக் கூறுகிற சபைத்தலைவர்களும் சபையாரும் இயேசு தருகிற பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம் மற்றும் அக்கினி ஞானஸ்நானம் பற்றி யாரும் அதிகமாகக் கூறுவதில்லை.
தண்ணீர் ஞானஸ்நானம் பற்றி வேதாகமம் கூறுவது மெய்தான். ஆனால், அது இத்தனை பிரிவுகளுக்குக் காரணமாயிருப்பது சரிதானா என்பது பற்றிய தங்கள் கருத்துக்களை இங்கு பதியும்படி வேண்டுகிறேன்.
AISUORAP wrote: //No Physical activity can make one more spiritual//
சகோ.AISUORAP-ன் இக்கருத்து சரியானதுதான்.
ஆனாலும் வேதாகமத்தில் யோவன்ஸ்நானகன், பேதுரு, பவுல், பிலிப்பு போன்ற பலர் அந்த Physical activity-யை செயல்படுத்தியதாக வேதாகமம் கூறவே செய்கிறது. ஏராளமான விசுவாசிகள் அந்த Physical activity-க்கு தங்களை உட்படுத்தியதாகவும் வேதாகமம் கூறுகிறது. இயேசுவுங்கூட அந்த Physical activity-க்கு தம்மை உட்படுத்திக் கொள்ளவே செய்தார்.
அதன் அடிப்படையில்தான் தண்ணீர் ஞானஸ்நானம் நம் மத்தியில் பெரிதுபடுத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.
ஆவியிலே (நினைவுகளால்) சுத்தமாகாத ஒரு மனிதன் எத்துனை முறை முங்கி எழுந்தாலும் பிரயோஜனமற்றது. ஆகவே தான் யூதர்கள் "வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளாக" இருந்தார்கள்! கிறிஸ்துவின் சிந்தையோடு ஞானஸ்னானம் எடுப்பது தான் சரி. முங்கி எழுந்து வருவது ஒரு சடங்கே, ஆனால் அவசியம் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. ஆனால் அதற்கு முன் இருதயத்தில் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும்.
"ஒரே ஞானஸ்னானம்" என்று பவுல் வலியுறுத்துகிறார். ஆனால் இன்று சபைகளிள் ஞானஸ்னானம் எடுப்பது பரலோகம் செல்வதற்கான பாஸ்போர்ட் என்று போதிக்கிறார்கள், ஞானஸ்னானம் என்றால் என்னவென்றே தெரியாமல்.
1. ஒரு முறை முங்கி எழுந்தால் போதும் 2. மூன்று முறை முங்கி எழ வேண்டும், அது தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பேரால் உண்டான ஞானஸ்னானம். 3. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்னானம்
இவை எல்லாம் ஆவிக்குறிய சபைகள் என்று தங்களை சொல்லிக்கொண்டிருக்கும் சபைகள் கொடுக்கும் ஞானஸ்னான முறைகளே!! ஆனால் கேட்டால் ஒரே ஆவியில் நடத்தப்படுகிறார்கள் என்பது இவர்கள் வாதம்.
I பேதுரு 3:21. அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,
ஆங்கிளத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது,
1 Peter 3:21 "and this water symbolizes baptism that now saves you also—not the removal of dirt from the body but the pledge of a good conscience toward God."
ஆகவே இந்த ஞானஸ்நானம் அவசியமே.
மேலும், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் பொழுது தான் அவருக்கு வானங்கள் திறக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் எழுதினால் கிறிஸ்தவ சமுதாயம் சண்டைக்கு வந்து விடுவார்கள்
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
bereans wrote: //1 Peter 3:21 "and this water symbolizes baptism that now saves you also—not the removal of dirt from the body but the pledge of a good conscience toward God."
ஆகவே இந்த ஞானஸ்நானம் அவசியமே.//
வசனமெல்லாம் சரிதான் சகோதரரே!
ஆனால்,“வேதம் உலகத்துக்கு என்ற கோட்பாடு” எனும் திரியிலுள்ள உங்கள் விவாதத்தின்படி பார்த்தால், பேதுரு நிருபம் எழுதினது உங்களுக்கு அல்லவே!
இத்திரியில் ஏற்கனவே உங்களுக்கான ஒரு கேள்வி நிலுவையில் உள்ளது. இக்கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வதும் சொல்லாததும் உங்கள் விருப்பம். ஆனால், தண்ணீர் ஞானஸ்நானம் அவசியமே என மற்றொரு திரியில் நீங்கள் ஓங்கி அடித்து வாதிடுவதால், அந்த வாதத்தை இத்திரியில் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
bereans wrote: //ஞானஸ்நானம் எடுத்து இயேசு கிறிஸ்து தன் தாழ்மையை வெளிப்படுத்தினார் என்பது நிச்சயமாக வசனத்தில் இல்லை, வசனமும் அப்படி இல்லை,//
ஆம், சகோதரரே!
//வானம் திறக்கப்பட்டது என்றால் மேலான காரியங்கள் அவருக்கு விளங்கத் தொடங்கியது!!//
இப்படி மாத்திரம் வசனம் சொல்கிறதா சகோதரரே?
நீங்கள் ஒரு வசனத்திற்கு ஒரு விளக்கம் தருவதுபோல் நானும் ஒரு வசனத்திற்கு ஒரு விளக்கம் தருகிறேன். வேண்டுமானால் எனது விளக்கம் தவறு எனச் சொல்லுங்கள்; மாறாக, வசனத்தில் இல்லை எனச் சொல்லவேண்டாம். நான் என்ன வசனத்தில் இப்படியுள்ளது என்றா சொன்னேன்? எனது புரிந்துகொள்தலைச் சொன்னேன், அவ்வளவே.
“வானம் திறக்கப்பட்டது என்றால் மேலான காரியங்கள் அவருக்கு விளங்கத் தொடங்கியது” என விளக்கம் தருகிற சகோதரரே, பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
மத்தேயு 3:13-15 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
இயேசு (தண்ணீர்) ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், அவருக்கும் யோவானுக்கும் இடையிலேயான ஓர் உரையாடலை இவ்வசனங்களில் பார்க்கிறீர்கள். இவ்வுரையாடல் சொல்வதென்ன? இயேசுவைக் குறித்த மேலான காரியங்களை இயேசு மட்டுமல்ல, யோவானும் அறிந்திருந்தார் எனக் கூறுகிறதல்லவா?
இயேசுவைக் குறித்த மேலான காரியங்களை யோவான் அறிந்ததால்தானே, தன்னிடம் இயேசு ஞானஸ்நானம் பெறுவதை யோவான் தடுத்தார்? இயேசு பரிசுத்தஆவியினாலும் அக்கினியாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என முன்னமேயே சொன்ன யோவானுக்கு, இயேசுவைக் குறித்த பரம காரியங்கள் தெரியாதா? இயேசுவைக் குறித்த பரமகாரியங்கள் யோவானுக்குத் தெரிந்திருக்கையில், இயேசுவுக்கு அது தெரியாது என எப்படிச் சொல்லமுடியும்?
மேலான காரியங்களை அறிவதற்கு தண்ணீர் ஞானஸ்நானம் தேவையல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் தருகிறேன்.
அப்போஸ்தலர் 10:1-6 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி. அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
10:34-37 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.
10:38,43 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
10:44-48 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
கொர்நேலியு தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னமேயே மேலான காரியங்களை அறிந்து, அதன்படி செய்ததால், அவரது ஜெபங்கள் தேவசந்நிதியில் எட்டியது.
கொர்நேலியு தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னமேயே பரிசுத்தஆவியைப் பெற்றார். இதற்கெல்லாம் காரணமென்ன? ஏற்கனவே மேலான காரியங்களை கொர்நேலியு அறிந்திருந்ததுதான். பேதுருவின் பிரசங்கத்தில் மத்தேயு 28:20 சொல்கிறபடி இயேசுவின் கற்பனைகள் எதையும் அவர் உபதேசிக்கவில்லை (ஏனெனில் அதற்கு முன்னமேயே கொர்நேலியுவின் வாழ்க்கை இயேசுவின் கற்பனைகளின்படித்தான் இருந்தது. அதனால் தான், தேவன் தமது தூதர் மூலம் கொர்நேலியுவுடன் நேரடியாகப் பேசினார்).
தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னமேயே கொர்நேலியு எப்படி மேலான காரியங்களை அறிந்திருந்தார் என்பதைச் சொல்லுங்கள்.
கொர்நேலியுவைப் பொறுத்தவரை, தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னமேயே அவர் தேவனுக்கு முன்பாக நீதிமானாக, நீதியைச் செய்கிறவராக, தேவனுக்கு உகந்தவராக இருந்தார் (வசனம் 37). அதாவது மத்தேயு 6:33-ன்படி தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவராக இருந்தார். அதாவது மேலான காரியங்களை அறிந்தவராக இருந்தார்.
இப்படிப்பட்ட அவர் இயேசுவை அறியவேண்டும், இயேசுவின் சரீரமாகிய சபையில் சேர்க்கப்படவேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் பேதுருவிடம் அவர் அனுப்பப்பட்டார். பேதுருவும் உடனடியாக புறஜாதியினனான கொர்நேலியுவை சபையில் சேர்க்கவில்லை. பரிசுத்தஆவி பொழிந்தருளப்பட்டப் பின்னர்தான் கொர்நேலியு போன்ற புறஜாதியினரையும் சபையில் சேர்க்க தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்து, கொர்நேலியுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளையிட்டார். புறஜாதியினரையும் சபையில் சேர்க்கவேண்டும் என்பதை பேதுரு அறிந்துகொள்ள ஏதுவாக, ஏற்கனவே அவருக்கு ஒரு தரிசனத்தையும் தேவன் கொடுத்திருந்தார் (10:9-16).
தண்ணீர் ஞானஸ்நானம் என்பது அன்றைய காலகட்டத்தில் கிறிஸ்துவின் சபையில் இணைவதற்கான ஒரு நடைமுறையாக (Procudure) இருந்தது. தண்ணீர் ஞானஸ்நானம் பெறுதல் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை அல்ல.
ஒருவனைச் சபையில் எப்படிச் சேர்க்கவேண்டும் எனபதற்கான ஒரு ஒழுங்கு அல்லது நடைமுறையாகத்தான் ஞானஸ்நானம் கொடுத்தல் பற்றி மத்தேயு 28:19-ல் இயேசு கூறினார். அன்றைய சபை மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக இருந்தது. ஒருவேளை விசுவாசிகளில் சிலர் தேவனுக்கு உகந்தவர்களாக இல்லாதிருந்திருக்கலாம் (அனனியா சப்பீராள் போல்). ஆனால் மேய்ப்பவர்கள் யாவரும் மெய்யாகவே கிறிஸ்துவின் சபையைக் கட்டுகிறவர்களாகத்தான் இருந்தனர். அன்றைய சபையில் தேவன் நேரடியாக விசுவாசிகளைச் சேர்த்தார் (அப். 2:47).
இன்றுள்ள எந்த சபை கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்பீர்கள்? உங்களைக் கேட்டால், நீங்கள் சார்ந்துள்ள சபையைச் சொல்வீர்கள், மற்றொருவரைக் கேட்டால், அவர் சார்ந்துள்ள சபையைச் சொல்வார். இன்றைய ஏராளமான சபைகளில் எதுதான் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக இருக்கமுடியும்? சொல்லப்போனால் எதுவும் இருக்கமுடியாது.
ஒரு சபை மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக இருந்தால், அந்த சபையிலுள்ளவர்கள் ஆதிச்சபையார் செய்ததுபோல் சகலத்தையும் பொதுவாக அனுபவிக்க வேண்டும் (இது ஒரு சிறு மாதிரி மட்டுமே, இன்னும் பல விஷயங்கள் உண்டு). அப்படி ஒரு சபை இருந்தால் சொல்லுங்கள், அந்த சபை மேய்ப்பரிடம் ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி பேசலாம்.
தண்ணீர் ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் சேர்ந்ததற்கான ஒரு வெளிப்புற அடையாளம் மட்டுமே. அதைப் பெறுவது தவறு என நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் ஞானஸ்நானம் எடுக்கும்படி போதிப்பவர்கள், அன்றைய அப்போஸ்தலரைப் போல், மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை மேய்க்கும் மேய்ப்பராக இருக்கவேண்டும். அப்படி இல்லாத ஒருவருக்கு, தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றிப் பேச அருகதை கிடையாது.
ஞானஸ்நானம் எடுத்த இயேசுவிற்கு மாத்திரமே "மேலான காரியங்கள்" பொருந்தும்!! அவர் ஒருவருக்கே வானம் திறக்கப்பட்டது என்கிறது வசனம்!! ஆகவே ஞானஸ்நானம் எடுக்கும் மற்றவர்கள் தன் எஜமானன் இயேசு கிறிஸ்து செய்ததை பின் பற்றுகிறார்கள்!! ஆகவே கொர்நேலியு மேலான காரியங்கள் தெரிந்ததால் தான் அவர் ஜெபங்கள் கேட்கப்பட்டது, பரிசுத்த ஆவி கிடைத்தது என்று சொல்லுவதில் தர்க்கம் இல்லை!!
இயேசு கிறிஸ்து ஒருவரே ஒரு நோக்கத்துடன், தேவனின் மேலான சித்தத்தை நிறைவேற்ற வந்தார், அதை நோக்கியே அவர் நடத்தப்பட்டார்!! ஞானஸ்நானம் எடுத்த கைய்யோடு அவர் 40 நாட்கள் வனாந்தரத்தில் "பரிசுத்த ஆவியால்" நடத்தப்பட்டார் என்றும் இருக்கிறது, அதை அவர் செய்ய சொல்லவில்லையே!!
ஆனால் உலகமெங்கும் எல்லா ஜாதிகளையும் சீஷர்களாக்கி "ஞானஸ்நானம்" கொடுக்க சொன்னார்!! அவர்களின் சீஷர்கலை அதை "கைக்கொள்ள" சொன்னார்!!
கிறிஸ்துவின் சரீரமான சபைக்கு இப்பொழுது தேர்வு தான் நடக்கிறது, ஆகவே அன்று அப்போஸ்தலர்கள் காலத்தில் ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்துவின் சபையில் (கிறிஸ்துவின் சரீரமான சபையலல) சேர்ந்தவர்கள் அனைவரும் "கிறிஸ்துவின் சரீரமான சபையாக இருந்தார்கள் என்பதே தவறு தான்!! இந்த சபை இந்த பூமிக்குறியது அல்ல, மாறாக அவரோடு கூட ஆட்சி செய்யப்போகும் ஒரு கூட்டம்!!
ஞானஸ்நானம் எடுக்க சொல்லி கற்பனை (கட்டளை) இல்லை என்று சொல்லாதீர்கள் இல்லாவிட்டால் மத் 28 20 தப்பாகிவிடும்!!
இன்னும் பதிவேன்!!.........................
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//வானம் திறக்கப்பட்டது என்றால் மேலான காரியங்கள் அவருக்கு விளங்க தொடங்கியது!! மாம்சத்தின் வந்த இயேசு கிறிஸ்து தான் வந்த நோக்கம், தேவ சித்தம் நிறைவேற்றவே என்பதை தன்னை முழுவதுமாக அர்பனித்த பிறகே (ஞானஸ்நானம் எடுத்த பிறகே)!!//
//ஞானஸ்நானம் எடுத்த இயேசுவிற்கு மாத்திரமே "மேலான காரியங்கள்" பொருந்தும்!! அவர் ஒருவருக்கே வானம் திறக்கப்பட்டது என்கிறது வசனம்!!//
இயேசுவுக்கும் மாத்திரமே "மேலான காரியங்கள்" பொருந்துமெனில், ஏன் இவ்விஷயத்தில் இயேசுவையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு, பின்வருமாறு எழுதினீர்கள்?
//இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற இயேசு கிறிஸ்துவிற்கு 30 வருடங்கள் தேவைப்பட்டது ஆனால் இன்று ஊழியக்காரர்களின் வாரிசுகள் முதலாம் வகுப்பு வந்தவுடன் மேடையேறி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்புகிறார்களே!!//
ஞானஸ்நானம் எடுத்தால்தான் “மேலான காரியங்கள்” விளங்கும் என்பதுபோல முதலில் சொல்லிவிட்டு, இப்போது இயேசுவுக்கு மட்டுமே “மேலான காரியங்கள்” பொருந்தும் என்கிறீர்கள். இவ்விஷயம் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். இதுவரை நீங்கள் எழுதியதிலிருந்து பார்த்தால், நாம் ஞானஸ்நானம் எடுக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்கும், இயேசு ஞானஸ்நானம் எடுத்தபின்னர்தான் அவருக்கு “மேலான காரியங்கள்” விளங்கத் தொடங்கின என்ற கூற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்றே தெரிகிறது. எனவே அதைக் குறித்து நாம் விவாதிப்பதில் பயனில்லை.
bereans wrote: //ஞானஸ்நானம் எடுக்கும் மற்றவர்கள் தன் எஜமானன் இயேசு கிறிஸ்து செய்ததை பின் பற்றுகிறார்கள்!!//
இயேசு செய்ததை தாராளமாகப் பின்பற்றுங்கள். இன்னும் இயேசு எவ்வளவோ செய்தார்; மலையின்மேல் ஏறி இரா முழுவதும் ஜெபித்தார், கடலில் நடந்தார், அற்புதம் செய்தார்; அவற்றையெல்லாம் தாராளமாகப் பின்பற்ற முயலுங்கள். ஆனால் இயேசு செய்த அனைத்தையும் நாம் செய்யத்தான் வேண்டுமென வேதாகமம் கூறவில்லை என்பதை அறியுங்கள்.
நமக்கு (தண்ணீர்) ஞானஸ்நானம் கட்டாயமா என்பதுதான் கேள்வி; தண்ணீர் ஞானஸ்நானம் பெறாதவன் “மறுபடியும் பிறவாதவனாகக்” கருதப்படுவானா என்பதுதான் கேள்வி. இக்கேள்விக்கு முன்னமேயே நீங்கள் அழகாகப் பதில் சொல்லியுள்ளீர்கள். ஆனாலும் தண்ணீர் இருக்கிற இடங்களில் இருப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கட்டாயம் என்பதாகவும் ஒரு வரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே தந்த பதில்:
//தண்ணீர் ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளமே!! உண்மையான ஞானஸ்நானம் இருதயத்தில் எடுப்பதே!!
ரோம 12:1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
இப்படி தன்னை ஒரு ஜீவப்பலியாக கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து தன்னை இல்லை என்றும் எல்லாம் கிறிஸ்துவே என்று முதலாவது இருதயத்தில் விசுவசிப்பதே "ஞானஸ்நானம்"!!
தண்ணீரே இல்லாத இடத்தில் ஒருவன் எப்படி முங்கி ஞானஸ்நானம் எடுக்க முடியும்!! இப்படி பட்ட இடங்களும் பூமியில் நிச்சயமாக இருக்குமே!! ஆக முங்கி எழும்புவது ஒரு அடையாளமே, வசதி இருந்தால் செய்வோம்!! ஆனால் ஒருவன் இருதயத்தில் மாறாமல் எத்துனை முறை முங்கி எழுந்தாலும் அதினால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை!! முங்கி எழும்புவது தான் ஞானஸ்நானம் என்றால் ஒவ்வொரு சபையிலும் இந்த முங்கி எழும்பும் சடங்கும் மாறுகிறதே!! இதில் கூட தான் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள்!!//
இருதயத்தில் எடுப்பதே “உண்மையான” ஞானஸ்நானம் என அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த உண்மையான ஞானஸ்நானம்தான் “கட்டாயம்” வேண்டும் என நான் கூறுகிறேன். இயேசுவின் போதனைகளைக் கைக்கொள்ளும்படி உபதேசிப்பதன் மூலம், அந்த “உண்மையான” ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படித்தான் மத்தேயு 28:19,20-ல் இயேசு கட்டளையிட்டுள்ளார்.
தண்ணீர் இல்லாத இடங்களில் அடையாள ஞானஸ்நானம் பெற இயலாது என நீங்களே சொல்லிவிட்டீர்கள். எனவே சாத்தியமில்லாத ஒன்றைச் செய்துதான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்றாகிவிடுகிறது. இதைத்தான் ஆரம்பத்திலிருந்து நான் சொல்லிவருகிறேன். அடையாள தண்ணீர் ஞானஸ்நானம் கட்டாயமில்லை என்றுதான் ஆரம்பத்திலிருந்து நான் கூறிவருகிறேன். நீங்களோ, “தண்ணீர் இல்லாவிட்டால் கட்டாயமில்லை, ஆனால் தண்ணீர் இருந்தால் கட்டாயமே” என்கிறீர்கள். உங்களது இப்புரிந்துகொள்தல் எனக்கு வினோதமாயுள்ளது.
அடையாள ஞானஸ்நானத்தை அந்நாட்களில் பவுலும் மற்றவர்களும் கொடுத்ததால்தான், “நான் பவுலைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்” என்கிற பிரிவினைகள் அந்நாட்களில் வந்தன. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
1 கொரிந்தியர் 1:11-17 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன். ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
அதிகமான பேருக்கு தான் ஞானஸ்நானம் கொடாததினிமித்தம் தேவனை ஸ்தோத்தரிப்பதாகப் பவுல் கூறுகிறாரே! பிரிவினைக்குக் காரணமான அந்த ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து தன்னை அனுப்பவில்லை எனப் பவுல் கூறுகிறாரே!! இப்போதுகூட மத்தேயு 28:19,20-ன் கருத்து உங்களுக்குப் புரியவில்லையா?
அவ்வசனங்களில் இயேசு சொன்னபடி, அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி உபதேசம் செய்வதன் மூலம் “உண்மையான ஞானஸ்நானத்தைக்” கொடுக்கவேண்டுமென்பதுதான் இயேசுவின் கட்டளை. அதன்படி உண்மையான ஞானஸ்நானத்தைக் கொடுத்திருந்தால், அன்று சபையில் பிரிவினைகள் வந்திருக்காது. ஆனால் “அடையாளமான தண்ணீர் ஞானஸ்நானத்தை” ஆளாளுக்குக் கொடுத்து அதை முக்கியமானதொன்றாகக் கருதக்கூடிய வகையில் நடந்ததால், “பவுலைச் சேர்ந்தவன், அப்பொல்லோவைச் சேர்ந்தவன், கேபாவைச் சேர்ந்தவன், கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” எனும் பிரிவினைகள் உண்டாயிற்று. உண்மையில், ஞானஸ்நானம் கொடுத்தவர்கள் அதை முக்கியமாகக் கருதி கொடுக்கவில்லை; ஆனால் ஞானஸ்நானம் பெற்றவர்கள்தான் அதை முக்கியமாகக் கருதி தங்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்கினார்கள்.
இப்பிரிவினைகளுக்குக் காரணம் “அடையாள தண்ணீர் ஞானஸ்நானமே” எனப் பவுல் உணர்ந்ததால், அந்த ஞானஸ்நானத்தைக் கொடுக்க கிறிஸ்து தன்னை அனுப்பவில்லை என்று சொல்லி, (அடையாள தண்ணீர்) ஞானஸ்நானம் முக்கியமல்ல என்றார். இதை ஆரம்பத்திலேயே அவர் கூறியிருந்தால், ஒருவேளை பிரிவினைகள் வந்திருக்காது.
பழையஏற்பாட்டுக் காலத்தில், விருத்தசேதனம் பெறுவதென்பது கட்டாயமான கட்டளையாகக் கொடுக்கப்பட்டது (ஆதியாகமம் 17:10). ஆகிலும் அடையாளமான அச்செயலைக் காட்டிலும் உண்மையான விருத்தசேதனமாகிய இருதயத்தின் விருத்தசேதனமே முக்கியம் என்பதை பழையஏற்பாட்டுக் காலத்திலேயே தேவன் சொல்லிவிட்டார்.
உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
உபாகமம் 30:6-8 உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி, இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார். நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
இதே பவுல் இன்று இருந்திருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
“அடையாள தண்ணீர் ஞானஸ்நானத்திலும் ஒன்றுமில்லை, ஞானஸ்நானமில்லாததிலும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்”.
ஞானஸ்நானத்தால் அன்று சபையில் உண்டான பிரிவினையைக் காட்டிலும் அதிகமான பிரிவினைகள் நம் மத்தியில் உள்ளன. அன்று விசுவாசிகள்தான், “நான் பவுலைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்” என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் இன்றோ, சபைத் தலைவர்களே, “நாங்கள் கொடுப்பதுதான் சரியான ஞானஸ்நானம், எங்கள் போதனைதான் சரியான போதனை” என்று சொல்லி அவர்களே பிரிவினைகளை உண்டாக்கி வருகின்றனர்.
தண்ணீர் ஞானஸ்நானம் அவசியம் எனச் சொல்கிற சகோ.பெரியன்ஸ் அவர்களே!
அதை யாரிடம் எடுக்கவேண்டும், எந்த முறையில் (procedure) எடுக்கவேண்டும் என்பதை வசன ஆதாரத்துடன் கூறமுடியுமா?
//இதே பவுல் இன்று இருந்திருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
“அடையாள தண்ணீர் ஞானஸ்நானத்திலும் ஒன்றுமில்லை, ஞானஸ்நானமில்லாததிலும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்”.//
ஏன் நீங்கள் மத் 28:20ஐ வாசித்து பதில் தரவே இல்லை!! அங்கு தான் சீஷர்கள் "கைக்கொள்ளும்படி" அதற்கு முந்தய வசனத்தில் ஞானஸ்நான போதனை இருக்கிறதே!!
நான் சொல்லுவதை தாங்கள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை.
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த நோக்கத்தில் வேறு யாரும் வரவில்லை!! ஆகவே அவர் வந்து செய்ததையெல்லாம் நாம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை அது நம்மால் முடியாது!! "இப்படி எல்லா நீதியும் நிறைவேற" நம் இருதயத்தின் அர்ப்பனிப்பை வெளிப்படுத்தவே "ஞானஸ்நானம்" என்கிற இந்த சடங்கு!! "தண்ணீர் இருக்கும் போது ஏன்ன தடை" என்று வேதத்திலிருந்து இரு வசனங்கள் சுட்டி கான்பித்தேன், அதையும் உதாசீனப்படுத்திவிட்டீர்கள்!! ஆக தண்ணீர் இருக்கும் போது நம் அற்பனிப்பின் இந்த வெளிப்புற அடையாளத்தை செய்வதில் என்ன தவறு என்றே சொல்லுகிறேன்!! வேதத்தில் இத்துனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள், என்று இருக்கிறதே, அது எல்லாம் தேவையில்லாமல் தான் எடுத்தார்களா!!
பவுல் ஞானஸ்நானம் எடுத்தார் என்று எழுதினால், பாவுல் அதிகமாக ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்று வசனம் எடுத்து எழுதுகிறீர்கள்! அதற்கு தான் பவுல் காரணம் சொல்லுகிறாரே, அவர் சுவிசேஷம் சொல்லவே அனுப்பபட்டார் என்று!! அவர் அதிகமாக ஞானஸ்நானம் கொடுக்காததை குறித்து தேவனை ஸ்தோத்தரிப்பதாக எழுதுகிறார், ஏனென்றால், அவர் ஞானஸ்நானம் கொடுத்த காரணத்தை காட்டி அவரை பின் தொடருவார்கள் என்கிற அர்த்தத்தில் தானே அன்றி, நீங்கள் நினைப்பது போல், ஞானஸ்நானம் அவரக்கு பிடிக்கவில்லை என்பதால் அல்ல!! ஞானஸ்நானம் பிரிவினைக்கொண்டு வராது (இன்றைய சபைகளின் கூத்துக்களை வைத்து ஞானஸ்நானத்தை வெறுக்கிறீர்கள் என்பது புரிகிறது)!!
1 கொரிந்தியர் 1:11-17பகுதியில் ஞானஸ்நானத்தினால் பிரிவினை உண்டாயிருந்தது என்று எழுதியிருக்கிறதா!!
//தண்ணீர் ஞானஸ்நானம் அவசியம் எனச் சொல்கிற சகோ.பெரியன்ஸ் அவர்களே! அதை யாரிடம் எடுக்கவேண்டும், எந்த முறையில் (procedure) எடுக்கவேண்டும் என்பதை வசன ஆதாரத்துடன் கூறமுடியுமா?//
1. தண்ணீர் ஞானஸ்நானம் அவசியம் என்று சொல்லுவது வேதத்தில் மத். 28:19,20 வசனங்களை வைத்து தான் சொல்லுகிறேனே தவிர, என் சொந்த விருப்பமோ, எனக்கு தேவன் வெளிப்படுத்தினார் என்பதாலோ அல்ல. (ஆனால் நீங்கள் 28:19ஐ மாத்திரம் வைத்துக்கொண்டு கொடுக்க சொன்னார், எடுக்க சொல்லவில்லை என்று சொல்லுகிறீர்கள், பல முறை தங்களிடம் 20ஐயும் வாசிக்க சொல்லி பதில் தர சொல்லியிருந்தும் தரவில்லை)!!
2. இதற்கென்று ஒன்று எழுதப்பட்ட முறைகள் () ஒன்றும் இல்லை!! நான் மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட எந்த பிரிவினையையும் சேராதாவன்!! ஒரு வேளை சபைகளில் இதற்கென்று புத்தகங்கள் இருக்கும், ஞானஸ்நானம் கொடுப்பது எப்படி, எடுப்பது எப்படி என்று!!
தண்ணீர் இருந்தால் (முங்கி எழும்பும் அளவிற்கு) தன் அர்பனிப்பின் அடையாளமாக, அதாவது இது முதல், நான் என்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறேன், அதற்கு அடையாளமாக, என் பழைய சிந்தைக்கு நான் மரித்தவன் என்று இந்த தண்ணீருக்குள் முங்கி (செத்து விட்டேன்) கிறிஸ்து சொல்லிக்கொடுத்த ஒரு ஜீவியத்தை வாழ தண்ணீரிலிருந்து எழும்புவது (கிறிஸ்துவினால் பிழைக்கிறேன்)!!
ரோம் 6:3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
ஞானஸ்நானம் கொடுங்கள் என தமது சீஷர்களுக்கு இயேசு கட்டளையிட்டுள்ள போதிலும், “ஞானஸ்நானம் கொடுப்பதற்கு கிறிஸ்து என்னை அனுப்பவில்லை” எனப் பவுல் கூறினார்.
அதேவேளையில், ஞானஸ்நானம் எடுக்கும்படி எங்கும் இயேசு சொல்லாதபோதிலும் பவுல் ஞானஸ்நானம் எடுத்தார்.
“ஞானஸ்நானம் கொடுங்கள்” என இயேசு கட்டளையிட்டுள்ள போதிலும் ஞானஸ்நானம் கொடுப்பதை முக்கியப்படுத்தாத பவுல், ஞானஸ்நானம் எடுக்கும்படி இயேசு கட்டளையிடாத போதிலும் ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து நாம் அறிவதென்ன?
“ஞானஸ்நானம் கொடுங்கள்” என இயேசு சொன்னதை பவுல் ஒரு கட்டளையாகக் கருதவில்லை என்பதே.
ஞானஸ்நானம் கொடுப்பதைவிட, ஜனங்களை இயேசுவின் சீஷராக்குவதுதான் முக்கிய பணி என்பதை பவுல் அறிந்திருந்தார். ஒருவன் எப்போது மனதார இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க தன்னை ஒப்புக்கொடுக்கிறானோ அப்போதே அவன் இயேசுவின் சீஷனாகும் நிலைக்கு வந்துவிடுகிறான். தனது நிலையை உலகத்திற்கு அறிவிப்பதற்கு ஞானஸ்நானம் ஒரு கருவியாகிறது, அவ்வளவே.
எனவேதான் ஞானஸ்நானம் எடுத்த பவுல், ஞானஸ்நானம் கொடுப்பதில் தீவிரமாயிராமல், இயேசுவின் கற்பனைகளைப் போதிப்பதன் மூலம் அவரது சீஷர்களை உருவாக்குவதில் தீவிரமாயிருந்தார்.
ஞானஸ்நானம் எடுத்த பவுல், விருத்தசேதனமும் பெற்றிருந்தார். யூதர்களினிமித்தம் தீமோத்தேயுவையும் விருத்தசேதனம் எடுக்கச் செய்தார் (அப். 16:3). ஆகிலும் விருத்தசேதனமில்லாமையால் ஒன்றுமில்லை என்றார்.
பழையஏற்பாட்டுக் காலத்தில் விருத்தசேதனம் எப்படி உடன்படிக்கையின் அடையாளமிருந்ததோ அதேபிரகாரமாக புதியஏற்பாட்டுக் காலத்தில் ஞானஸ்நானம் அடையாளமானது.
அடையாள விருத்தசேதனதமும் அடையள ஞானஸ்நானமும் சமமானவைதான்.
ஞானஸ்நானம் கொடுங்கள் என்ற கட்டளையைச் சொல்லி ஞானஸ்நானம் எடுப்பது அவசியம் என்கிற நீங்கள், ஞானஸ்நானம் கொடுங்கள் என்ற கட்டளையின் நேரடி அர்த்தப்படி யாருக்காவது ஞானஸ்நானம் கொடுத்துள்ளீர்களா, அல்லது யாருக்காவது இயேசுவின் கற்பனைகளைப் போதித்து இயேசுவின் சீஷராக்கியுள்ளீர்களா?
ஞானஸ்நானம் என்பது அர்பணிப்பின் வெளிப்புற அடையாளமே!! எப்படி விருத்தசேதனம் அவர்கள் தேவனின் ஜனங்கள் என்பதில் வெளிப்புற அடையாளமோ, அப்படியே ஞானஸ்நானம் இருதயத்தில் உள்ள தங்களின் அர்பனிப்பின் வெளிப்புற அடையாளம்!! விருத்தசேதனம் அடையாளமாக இருந்தாலும், அதை செய்யாத எந்த யூதனும் இருந்திருக்க மாட்டார், அப்படியே ஞானஸ்நானமும்!!
பவுல் இருந்த காலத்தில் எத்துனை பேர் ஞானஸ்நானத்திற்கு அர்பனித்தார்களோ தெரியாது!! ஆகவே அவர் அப்படி சொல்லியிருக்கலாமே!! இலாட்டி தான் வெளிப்படையாகவே அவர் ஞானஸ்நானம் அவசியமே இல்லை!! கிறிஸ்து கொடுக்க தான் சொன்னார் எடுக்க சொல்லவில்லை என்று இன்று நீங்கள் சொல்லுவது போல் சொல்லியிருக்கலாமே!! பவுல் சுவிசேஷத்தின் நிமித்தம் பாடு படவேண்டும் என்றும், அவர் மூலமாக பல நிருபங்கள் மக்களுக்கு சேர வேண்டும் என்பதை தான் தேவன் விரும்பினாரோ!! இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதம் சொல்லுகிரதே!!
கொடுங்கள் என்றால் எடுப்பவர்கள் இருந்தால் தானே கொடுக்க முடியும்!! கொடுக்க சொன்னார் ஆனால் எடுக்க சொல்லவில்லை என்பது ஏதோ வாதத்திற்காக சொல்லுவது போல் இருக்கிறது!! ஆனாலும் நீங்கள் மத் 28:20ஐ குறித்து பதில் தராமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!! "கைக்கொள்ள" என்றால் என்ன!! அப்படி சொல்லியும் பவுல் தாங்கள் எழுதியது போல் பவுல் அதை ஒரு கட்டளையாக கருதவில்லை என்பது தவறு!!
//ஞானஸ்நானம் எடுத்த பவுல், விருத்தசேதனமும் பெற்றிருந்தார். யூதர்களினிமித்தம் தீமோத்தேயுவையும் விருத்தசேதனம் எடுக்கச் செய்தார் (அப். 16:3). ஆகிலும் விருத்தசேதனமில்லாமையால் ஒன்றுமில்லை என்றார்.//
அவர் ஒரு யூதனாக இருந்த போது நிச்சயமாகவே விருத்தசேதனத்திற்கு வக்காலத்து வாங்கியிருப்பார்!! புதிய சிருஷ்ட்டியான பிறகு அதன் அவசியம் இல்லை என்பதால் விருத்தசேதனமில்லமையால் ஒன்றுமில்லை என்பது மாத்திரம் இல்லை விருத்தசேதனத்தினாலும் ஒன்றுமில்லை என்றார்!! தீமோத்தேயுவை ஏன் விருத்தசேதனம் எடுக்க செய்தார் என்பதை பிறகு பதிவு செய்கிறேன்!!
நானே முழுமையாக ஒரு சீஷன் என்று சொல்ல முடியாது, ஆகவே நான் இன்னோரு சீஷனை நேரடியாக உருவாக்கவில்லை!! மேலும் என் நான் தந்திருக்கும் போதனைகளை நீங்களே அறிவீர்கள்!! இதை கேட்டு ஒரு சிறிய கூட்டத்தில் வந்து சேர்வதை காட்டிலும், தப்பிதமாக கோட்பாடுகள் நிறைந்த கூட்டம் சேரும் சபையில் தான் அநேகர் போக விரும்புவார்கள்!! இது வரை ஞானஸ்நானம் கொடுக்க வாய்ப்புவரவில்லை, ஒரு வேளை வந்தால் நிச்சயம் கொடுப்பேன்!! ஞானஸ்நானம் கொடுக்க பெரிய வேதாகம கல்லூரியில் படித்து "பெரிய பாஸ்டர்" அல்லது "தேவ மனுஷர்" என்கிற மாதிரியான பட்டங்கள் தேவையில்லை!! இருதயத்தின் அர்ப்பனிப்பை வெளிப்புறமாக அறிக்கை செய்வதின் அடையாளமே "ஞானஸ்நானம்"!!
ஆனாலும் ஒருவன் இருதயத்தில் அந்த அர்ப்பனிப்பை செய்யாமல் எத்துனை முறை முங்கி எழுந்தாலும் அர்த்தமற்றது என்பதையும் பதிவு செய்கிறேன்!! நம் தேவன் யார் என்ரு கூட தெரியாமல் இன்று சபைகளில் ஜெபங்கல் ஏறெடுக்கப்படுவது போல் தான்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இவ்வசனம் பற்றி பலமுறை சொல்லிவிட்டேன், இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. நீங்களும் நானும் எத்தனை முறை அதைப் பற்றி பேசினாலும், ஞானஸ்நானம் கொடுப்பதைப் பற்றிய கட்டளையை, ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றிய கட்டளையாக மாற்ற முடியாது.
ஞானஸ்நானம் கொடுப்பதை ஒரு “கட்டளையாக” இயேசு சொன்னார் என்றுகூட சொல்லமுடியாது. அதை ஒரு “வழிமுறையாகச்” சொன்னார் என்றுதான் சொல்லமுடியும். சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்பது மட்டுமே கட்டளை. ஆங்கில மொழிபெயர்ப்பில் இதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
Matthew 28:19,20 Therefore go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, and teaching them to obey everything I have commanded you.
“go and make disciples” என்பதுதான் கட்டளைப் பகுதி. எப்படி சீஷராக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறையைத்தான் அடுத்த பகுதியில் இயேசு கூறுகிறார். அந்த வழிமுறையில் “teaching them to obey everything I have commanded you”, அதாவது “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் போதித்து” எனும் வழிமுறைதான் முக்கியமானது. ஏனெனில் ஒருவன் இயேசுவின் சீஷனாக இருப்பதற்கான தகுதி, அவரது உபதேசத்தின்படி நடப்பதுதான். பின்வரும் வசனத்தில் இயேசு இதை தெளிவாகக் கூறியுள்ளார்.
யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
ஞானஸ்நானம் எடுங்கள் என இயேசு ஒருபோதும் உபதேசிக்கவில்லை. இயேசு என்னவெல்லாம் உபதேசித்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அவரது உபதேசத்தை நீங்கள் நன்கறிவீர்கள். மத்தேயு 28:19,20-ல் “ஞானஸ்நானம் கொடுத்து” என அல்லது “baptizing them” என இயேசு சொல்வது நிச்சயமாக ஓர் உபதேசம் அல்ல. ஒருவனை சீஷனாக்கி கிறிஸ்துவின் சபையில் இணைப்பதற்கான ஒரு வழிமுறைதான் “ஞானஸ்நானம் கொடுத்தலாகும்”.
மெய்யாகவே ஒருவன் இயேசுவின் சீஷனாக விரும்பினால், அவன் இயேசுவின் உபதேசங்களின்படி நடப்பதற்குத்தான் மும்முரமாக முயலவேண்டுமேயொழிய, சபையில் இணைவதற்கான ஒரு வழிமுறையைச் செயல்படுத்த மும்முரப்படவேண்டியதில்லை.
ஞானஸ்நானம் எனும் சடங்கை முக்கியப்படுத்துகிற எத்தனையோ பேரில் ஒருவராக நீங்களும் இருப்பது என்னை மெய்யாகவே மிகவும் சங்கடப்படுத்துகிறது. கிறிஸ்துவின் போதனைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட இக்காலத்தில், கிறிஸ்துவின் சபை எனச் சொல்லிக்கொள்ள ஒரு சபையும் இல்லை.
கிறிஸ்துவின் சபையில் இணைவதற்குத்தான் ஞானஸ்நானம் எனும் வழிமுறை வேண்டும். ஆனால் இங்கு கிறிஸ்துவின் சபையை நாம் காணமுடியவில்லையே!
பாஸ்டர்கள் எனப்படுவோரின் வண்டவாளங்களை சில்சாமின் தளத்தில் ஏலம் விட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தீர்களல்லவா? இவர்களை ஆளாளுக்கு விமர்சனம் செய்பவர்களுக்கு, இன்னமும் “பாஸ்டர், போதகர், அப்போஸ்தலர்” என்ற அடைமொழியை தூக்கியெறிய மனதில்லையே!
ஒருபுறம் அவர்களை “பாஸ்டர், போதகர், அப்போஸ்தலர்” எனக் கூறிக்கொண்டு மறுபுறம் அவர்கள் “அப்படிச் செய்கின்றனர், இப்படிச் செய்கின்றனர்” என்றும் விமர்சிக்கின்றனர். கேட்டால், இவர்களும் 1 கொரி. 12:28 கூறுகிறபடி, தேவன் ஏற்படுத்தின “பாஸ்டர், போதகர், அப்போஸ்தலர் தான்” என சற்றும் நா கூசாமல் கூறுகின்றனர்.
ஓர் அப்போஸ்தலரை அடக்கம் செய்வதற்கும் இறுதி ஊர்வலம் கொண்டு செல்வதற்கும் விசேஷ சவப்பெட்டியையும் வாகனத்தையும் எங்கிருந்தோ கொண்டு வருகிறாராம் அவரது மகனாகிய பாஸ்டர்/போதகர். இது ஒன்றே போதாதா அவரது ஆடம்பரத்திற்குச் சாட்சி? இதன் பின்னரும் அவரை ஒரு போதகர்/பாஸ்டர் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படாத அத்தனைபேரும் கிறிஸ்துவை அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
தன் தகப்பனுக்கு ஆடம்பர சவப்பெட்டியையும் வாகனத்தையும் எங்கிருந்தோ வருவிக்கிற மகன், தகப்பன் மரிப்பதற்குமுன்னும் ஆடம்பரமாகத்தானே இருந்திருப்பார்? அந்த ஆடம்பரத்தை தட்டிக் கேட்காத தகப்பன் “ஓர் அப்போஸ்தலராம்”. “தன் சொந்த பிள்ளையை நல்லொழுக்கமுள்ளவனாக இருக்கப் பண்ணாதவர்” (1 தீமோ. 3:4) எப்படி ஓர் அப்போஸ்தலராக இருக்கமுடியும்?
இதையெல்லாம் சொன்னால், தன்னைப் “போதகர்” எனப் பிறர் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் சில்சாமுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். “இயேசுதான் யெகோவாகிய ஆராதனைக்குரியவராகிய தேவன் என ஒத்துக்கொள்ளாத நீ எப்படி எங்களை விமர்சிக்கலாம்” என்று சொல்லி ஒரு குழாயடிச் சண்டையைத் துவக்கிவிடுவார்; கண்ட கண்ட அநாகரீகமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார். கேட்டால், “நான் தான் இயேசுவின் புகழையும் திரித்துவத்தையும் பரப்புகிற ‘கொள்கை பரப்புச் செயலாளர்’, எனது கொள்கைகளைக் காப்பாற்ற அநாகரீகமாக நடப்பதில் எனக்குக் கவலை இல்லை, இயேசுவின் போதனையெல்லாம் எனக்கு முக்கியமில்லை, அவரை எல்லாரும் ஆராதிக்க வேண்டும், இதற்கு எதிராகப் பேசுவோரைத் தாக்க வேண்டும், இதுதான் எனது தலையாய கடமை” என்பார்.
இப்படிப்பட்ட போதகர்களும் அப்போஸ்தலர்களும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்படும் காலத்தில், இயேசுவின் போதனைகளை முக்கியப்படுத்துபவர்கள் நிச்சயம் நிராகரிக்கத்தான் படுவார்கள். ஆனாலும் எனக்கொரு சிறிய ஆதங்கம், “வசனங்களை எவ்வளவாய் ஆராய்கிற நீங்களுங்கூட, வசனங்களை மட்டுமே பிரதானப்படுத்துகிற நீங்களுங்கூட தற்கால சடங்காச்சார போதகர்களுக்கு நிகராக ஞானஸ்நானத்தை முக்கியப்படுத்துகிறீர்களே” என்பதுதான்.
ஞானஸ்நானம் எடுக்கவே கூடாது என்கிற பார்வையில் என் எழுத்துக்களை பார்க்கிறீர்கள்!!
1. ஞானஸ்நானம் தேவையே இல்லை என்றால் ஏன் கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும், ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்!!
2. அப்போஸ்தலர்கள் நடபடிகளில் ஏன் பல இடத்தில் ஞானஸ்நானத்தை வழியுறுத்த வேண்டும்!!
3. "எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும்" என்றால் என்ன?
இன்று தாங்கள் செய்யும் அனைத்துமே கிறிஸ்துவின் நேரடியான கட்டளைகள் மட்டுமா? எடுத்துக்காட்டாக, ஞாயிறு தோறும் காலை ஆராதனைக்குச் செல்வது கூட கிறிஸ்துவின் கட்டளைதானா?
ஞானஸ்நானம் என்பது மனதில் செய்துகொள்ளும் அர்ப்பணிப்பிற்கு வெளிப்புற அடையாளம். An outward expression of an inner consecration.
இப்பவும் சொல்லுகிறேன், மனதளவில் அர்ப்பணம் இல்லாவிட்டால் எத்தனை முறை முங்கினாலும் அர்த்தமற்ற சம்பிரதாயமாகத்தான் அது இருக்கும்; ஏனென்றால் முங்கி எழுவது ஒருவனை பரலோகம் கூட்டிச் செல்லும் பாஸ்போர்ட்டோ விஸாவோ கிடையாது. முங்குவது, பழைய சுபாவங்களை கிறிஸ்துவின் மரணத்துடன் களைந்து அவருடன் மரிக்கிறேன் என்றும், எழும்புவது என்பது புதிய சிருஷ்டியாக இனி அனைத்திலும் உம்மைப் பின்பற்றுவேன் என்பதற்கு ஒரு அடையாளமே தவிர, மனதில் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை!!
நீங்கள் ஏன் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் கொடுக்கும் ஞானஸ்நான உபதேசங்களுக்கும் என் எழுத்துக்களுக்கும் முடிச்சு போட்டு பார்க்க்கிறீர்கள்!! அவர்களுக்கு அது தொழில், நான் சொல்லுவது கீழ்ப்படிதல்!! அவர்கள் எத்தனை பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் என்பது கணக்கு, பாஸ்டர்கள் ஐக்கியத்தில் அதை பெருமை பாராட்டி பேச நடத்தும் ஒரு சம்பிரதாயம்; ஆனால் நான் எழுதுவது அர்ப்பணிப்பின் ஓர் அடையாளம்!! ஒருவனால் எடுக்கவே முடியாத சூழல், தண்ணீரே இல்லை, அல்லது தண்ணீரில் இறங்க முடியாத ஒரு சூழ்நிலை, என்ன செய்ய முடியும்? தேவன் இருதயத்தின் அர்ப்பனிப்பை பார்க்கிறார்!! ஞானஸ்நானம் எடுப்பதினால் ஒருவன் கிறிஸ்தவனாக ஆவது இல்லை, மாறாக ஒருவன் சீஷனாக மாறி தான் ஞானஸ்நானம் எடுக்க (நீங்கள் சுட்டி காண்பிப்பது போல், ஞானஸ்நானம் கொடுக்க) சொல்லப்பட்டிருக்கிறது!!
இன்று பெந்தேகோஸ்தே சபைகளில் ஒரே ஞானஸ்நானம் ஒரே ஆவி ஒரே வேதம் ஒரே கிறிஸ்து என்று சொன்னாலும், ஒரு பாஸ்டர் தன் "ஆட்டை" இன்னோரு சபைக்கு போய் வா என்று சொல்லவே முடியாது, சொல்லவே மாட்டார்கள்!! ஏனென்றால் மற்ற சபைகளில் இந்த "ஆடு" குழம்பிப்போய்விடுமாம்!! என்ன ஒரு மோசடியான விஷயம்!! அப்படியே ஒருவன் சபை மாறி போனாலும் அந்த சபையில் மீண்டும் புதிதாக சேர ஞானஸ்நானம் எடுக்க சொல்லுவார்கள்!! இது அல்ல ஞானஸ்நானம்!! தாங்கள் எழுதியது போல் "கிறிஸ்துவின் சபை"யில் சேரவும் அல்ல ஞானஸ்நானம்!! தாங்களும் அப்படியே எழுத்தை எழுத்தாகவே எடுத்துக்கொண்டீர்களே!! உண்மையான சபை என்றால் அது
சில்சாம் தானும் போதகராக இருக்கும் நினைப்பில் தான் மற்ற பல ஊழியர்களை போல், அவர்களை விட ஒரு படி மேல் தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார். தேவனுக்கு சீஷன் தான் தேவையே தவிர வெறியன் அல்ல!! God Needs a Disciple and Not a Fanatic.
தனக்கு பிடித்தவர்கள் அவருக்கு அப்போஸ்தலர், போதகர் ரெவெரெண்ட், ஆனால் பிடிக்காதவர்கள் இரத்த வியாதி வந்து சாவார்களாம். இவரையெல்லாம் கிறிஸ்தவர் என்று எப்படி தான் சொல்லிக்கொள்கிறாரோ!! இன்று இயேசு கிறிஸ்து யார் என்பதை எல்லா மதத்தினரும் அறிவார்கள், ஆனால் அவர் உண்மையிலே யார் என்பதை கிறிஸ்தவர்கள் (சத்தியத்தை தெரிந்திருப்பவர்கள், ஞானஸ்நானம் எடுத்தவர்கள் அனைவரும் கிடையாது, சில்சாம் உட்பட) மாத்திரமே அரிந்திருக்க முடியும்!! ஏனென்றால் சத்தியத்தை விரும்புகிறவர்கள் வசனத்தை பார்ப்பார்கள், பாரம்பரியங்களையோ, துதிப்பாடல்களிலோ தங்களின் விசுவாசத்தை வளர்க்க மாட்டார்கள்!1
வேதத்தில் 12 பேர் தான் அப்போஸ்க்தலர்கள் என்று தெளிவாக இருந்தாலும், அப்போஸ்தல ஐக்கிய சபையை துவங்கியவரும் ஒரு அப்போஸ்தலர் என்று எழுதும் போதே அவரின் வேத அறிவு வெளிப்படுகிறது!! கிறிஸ்து ஒருவரே சபையின் அஸ்திவாரம் நாம் எல்லாம் அதன் மேல் இசைவாக கட்டப்படும் கற்கள் என்று வேதம் சொல்லியும், ஆளாலுக்கு ஒரு கட்டிடத்தை கட்டிக்கொண்டு சபை நிறுவனர் என்றால் இவர்கள் எல்லாம் என்ன கிறிஸ்துவை சார்ந்த கூட்டமா!! அந்த சபையின் நிறுவனர் சர்க்கரை நோய்க்கு பாதி மாத்திரை எடுத்துக்கொண்டு இருந்தாராம் ஆனால் அதை நம்பி இல்லையாம்!! ஒருவரை புகழ்வதற்கு இது எல்லாம் ஒரு விஷயமா!! ஏன் அப்படி என்றால் அவருக்கு கிறிஸ்துவின் மேலும் அப்படியே பாதி நம்பிக்கை தான் இருந்ததா!! மருந்து எடுக்க கூடாது என்று எல்லாம் இந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் போலியான வைராக்கியம் கிறிஸ்துவை சோதிப்பது போலவே இருக்கிறது. கண்ணாடி மட்டும் மாட்டிக்கொள்ளாம் (அப்போ தானே பணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்) மருந்து பாதி எடுத்துக்கொள்ளலாம் (ஏன் பாதியை எடுக்கனும்!!) சுத்தமாகவே எடுக்க கூடாது அல்லவா, என்ன கொடுமை அன்பரே இது!!
வேதத்திற்கு பிறகு, அப்போஸ்தலர்கள் வரிசை என்று கத்தோலிக்க சபை ஆரம்பித்து வைத்ததை இன்றைய பெந்தகோஸ்தே ஊழியர்கள் தவறாமல் பின் பற்றுகிறார்கள்!! இவர்கள் பார்வையில் சபை ஆரம்பித்தால் அவர் ஒரு அப்போஸ்தலர்!! ஐயா அப்போஸ்தலர் யார் என்று வேதம் சொல்லுகிறதை இந்த வசன குருடர்கள் பார்ப்பதே கிடையாது!! மனித புகழ்ச்சியில் வாழ பிரியப்படும் இந்த பெந்தகோஸ்தே கூட்டத்தின் ஒரு அங்கம் தான் சில்சாமும்!! இந்த பகுதியில் இந்த பதிவு பொருந்துமா என்று தெரியவில்லை, ஆனால் தங்களின் முந்தய பதிவில் பாதி இப்படி இருந்ததினால் பகிர்ந்துக்கொண்டேன். மேடையா முக்கியம், விஷயம் தானே முக்கியம்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
சில்சாம் தானும் போதகராக இருக்கும் நினைப்பில் தான் மற்ற பல ஊழியர்களை போல், அவர்களை விட ஒரு படி மேல் தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார். தேவனுக்கு சீஷன் தான் தேவையே தவிர வெறியன் அல்ல!! God Needs a Disciple and Not a Fanatic.
தனக்கு பிடித்தவர்கள் அவருக்கு அப்போஸ்தலர், போதகர் ரெவெரெண்ட், ஆனால் பிடிக்காதவர்கள் இரத்த வியாதி வந்து சாவார்களாம். இவரையெல்லாம் கிறிஸ்தவர் என்று எப்படி தான் சொல்லிக்கொள்கிறாரோ!!
மிகவும் அருமையான வார்த்தை சகோதரரே. அன்பின் மார்க்கத்தை சொல்லும் அன்னாரின் அன்பு கொப்பளிக்கும் பதிவுகளாகிய
மூல வியாதியிலேயே முக்கட்டும்... / குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும்/ இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/
என்பன போன்ற அவரது பதிவுகளை படித்து எனக்கு சில நாட்களாக மனதே சரியில்லை. நானும் கிறிஸ்த்தவத்தில் சில மோசமான மோசடி பேர்வழிகளை பார்த்திருக்கிறேன் அனால் கிரிஸ்த்தவத்துக்குள் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இப்பொழுதுதான் முதல்முறையாக அறிந்து கொண்டேன்.
அன்னாரின் எதிர்பார்ப்பு!
///நான் உங்களைக் குறித்து சொன்ன ஒவ்வொரு சாப வார்த்தையும் விரைவில் பலிக்கும் நாள் வருகிறது; அப்போது நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்////
சாபங்களை பதிவிட்டதோடு அது நிறைவேறுவதற்கு வேறு காத்துகொண்டு இருக்கிறார். அவர் சாபம் ஆணடவரால் அரணான வெண்கல அலங்கம் ஆக்கியுள்ள நம்மிடம் மோதி பலிக்காமல், திரும்பி அவருக்கே அது நிறைவேறிவிடாமல் இருப்பதற்காக ஆண்டவரிடம் ஜெபித்து வருகிறேன். நீங்கள் அந்த சகோதரருக்காக ஜெபியுங்கள்.