//மனித புகழ்ச்சியில் வாழ பிரியப்படும் இந்த பெந்தகோஸ்தே கூட்டத்தின் ஒரு அங்கம் தான் சில்சாமும்!! இந்த பகுதியில் இந்த பதிவு பொருந்துமா என்று தெரியவில்லை, ஆனால் தங்களின் முந்தய பதிவில் பாதி இப்படி இருந்ததினால் பகிர்ந்துக்கொண்டேன். மேடையா முக்கியம், விஷயம் தானே முக்கியம்!! //
பரவாயில்லை சகோதரரே! கேள்வியைக் கேட்டுவிட்டு கேள்வி பாணியில் பதிலையும் சொல்லிவிட்டீர்கள். ஆம், மேடை முக்கியமல்ல, விஷயம் தான் முக்கியம்.
sundar wrote: //மிகவும் அருமையான வார்த்தை சகோதரரே. அன்பின் மார்க்கத்தை சொல்லும் அன்னாரின் அன்பு கொப்பளிக்கும் பதிவுகளாகிய
மூல வியாதியிலேயே முக்கட்டும்... / குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும்/ இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/
என்பன போன்ற அவரது பதிவுகளை படித்து எனக்கு சில நாட்களாக மனதே சரியில்லை. //
சகோதரரே! இவரை எப்படி அன்பின் மார்க்கத்தைச் சொல்பவர் என்கிறீர்கள்? பின்வரும் அவரது வரிகளைப் படியுங்கள்.
//சம்பந்தமில்லாத ஒரு கட்டுரையில் தேவையில்லாத ஒரு விவாதத்தைத் துவக்கிவிட்டு பெரியவர் அன்பு தவிக்கிறார்; சகோ.விஜய் அவர்கள் கிறித்து சபையின் நிர்விசாரங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையில் இறையியல் கொள்கையை கொண்டு வந்து நுழைத்து மூக்குடைபட்டிருக்கிறார், //
இவர் தளம் நடத்துவது “அன்பின் மார்க்கத்தைச் சொல்ல” அல்ல; பிறரது மூக்கை உடைக்கவும், யார் மூக்கு உடைபட்டுள்ளது எனப் பார்த்து அதைச் சொல்லி நையாண்டி பண்ணவுந்தான் இவர் தளம் நடத்துவதாகத் தெரிகிறது.
இம்மாதிரி விவாத மேடைகளில், நாம் வேதாகமக் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, சத்தியத்தை அறிவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், இவரோ யாருடைய மூக்கை உடைக்கலாம் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய நையாண்டி பரியாசம் சாபம் ஆகியவற்றால் நாம் மனம் வெதும்பிப்போவோம் என இவர் கருதுகிறார். இவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
நீங்களுங்கூட அவரது வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.
இடறல்கள் எவனால் வருகிறதோ அவனுக்கு ஐயோ என இயேசு கூறினாலும், இடறல்கள் வருவது அவசியமே என்றும் கூறினார். எனவே “இம்மாதிரி இடறல்களை” அனுமதிப்பது தேவனே என அறிந்து, அவரது கரத்திற்குள் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்துவிடுவோம்.