அன்பு சகோதரரின் அன்பு அழைப்பின் பேரில் தள உறுப்பினராக இருக்கிறேன்.
நான் இந்த தளத்தில் எழுத தெரிந்துக்கொண்ட பெயர் "பெரேயன்ஸ்", ஏனென்றால், வேதத்தில் கொடுக்கப்பட்ட பெரெயா பட்டினத்தார், பவுல் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் வேதத்தை முதலில் ஆறாயந்து மனோவாஞ்சை உள்ளவர்களாக இருந்தார்கள். அப்படியே வேதத்தை ஒரே மொழிப்பெயர்ப்பில் படித்து பின் மற்றவர்களின் பிரசங்கம் கேட்டு திருப்தியாகாமல், தேவனின் பொக்கிஷ புத்தகமான வேதத்தை பல மொழிப்பெயர்ப்புகளில் படித்து "உமது வசனமே சத்தியம்" என்பதை உறுதியாக நம்புகிறேன். தேவன் நம்முடன் பேசும் மீடியா வேதம் ஒன்றே என்பதை விசுவசிக்கிறேன்.
நன்றி.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
சகோ.பெரேயன்ஸ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். kovaibereans மேடையில் உங்களுடனான விவாதங்களில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வேதகாமத்தின் பல பகுதிகளை ஆராய்ந்தறிய அவ்விவாதங்கள் உதவின.
பெரெயா பட்டினத்தார் வேதத்தை ஆராய்ந்து பார்த்ததினால் அதிக நற்குணசாலிகளாயிருந்ததைப்போல் (அப்போஸ்தலர் 17:11), இத்தளத்தில் வருகிற அனைவரும் வேதத்தை ஆராய்ந்துபார்த்து அதிக நற்குணசாலிகளாவதற்கேதுவாக நீங்கள் பங்காற்றுவீர்கள் என நம்புகிறேன்.