விவாதங்கள் என்றாலே, இரு தரப்பானவைகளாக தான் இருக்க முடியும். கருத்து வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும். யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துவதோ, கேலி செய்வதோ அத்துனை இநிமையாக இருக்காது என்று என்னுகிறேன்.
ஒரு வேளை கருத்து வேறுப்பாடுகள் இருந்தால் நிர்வாகி(கள்)யின் முடிவு ஏற்கப்படும். மற்றவர்கள் மூலமாக influence ஆகாத முடிவாக இருந்தால் நலமானதாக இருக்கும். பல தளங்களின் பட்ட அனுபவத்தினால் இதை எழுத நேரிட்டது. நான் வசன ஆதாரத்துடன் எழுத அது நிர்வாகி அல்லது அவரின் நண்பர்களுக்கு பிடிக்காமல் போக, வசனத்தினால் பதில் தர முடியாமல் போக, கடைசியில் என் பதிவுகள் அனைத்தையும் அவர்களுக்கு இடறல்(!!) உண்டாகாதப்படி எடுத்துவிட நேர்ந்தது.
அந்த விதத்தில் எந்த அளவிற்கு கருத்து சுதந்திரம் இங்கு தரப்படும் என்று தயவு செய்து எழுதுங்கள்.
நன்றி.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
என் இருதயத்தில் பதிந்த கருத்துகளின் தாக்கம் என்னிடத்தில் இருக்கும் குணம் உள்ளவனாக இருந்திருந்தால் இன்று வரை கத்தோலிக்க சபையிலேயே இருந்திருப்பேன். சத்தியத்தை தேடி என் பயணம் நீண்ட நாட்களாக இருக்கிறது, இன்னும் நடந்துக்கொண்டு தானிருக்கிறேன். 1964க்கும் முன் வரையில் கூட வேத ஆராய்ச்சியாளர்கள் இருந்திருப்பார்கள், ஆனால் கும்ரான் குகையில் கிடைத்த கையெழுத்து பிரதிகளின் பயனை அவர்கள் அனுபவிக்கவில்லையே.
நான் நம்புவது தேவனின் ஒவ்வொரு எழுத்தை மாத்திரமே. தேவன் குழப்பத்தின் தேவன் அல்ல என்பதை அறிவேன், ஆகவே தான் குழப்பம் இல்லாத சத்தியத்தை நோக்கி நடந்துக்கொண்டிருக்கிறேன்.