நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்து சுதந்திரம்


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
கருத்து சுதந்திரம்
Permalink  
 


தள நிர்வாகி அவர்களே,

    விவாதங்கள் என்றாலே, இரு தரப்பானவைகளாக தான் இருக்க முடியும். கருத்து வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும். யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துவதோ, கேலி செய்வதோ அத்துனை இநிமையாக இருக்காது என்று என்னுகிறேன்.

  ஒரு வேளை கருத்து வேறுப்பாடுகள் இருந்தால் நிர்வாகி(கள்)யின் முடிவு ஏற்கப்படும். மற்றவர்கள் மூலமாக influence ஆகாத முடிவாக இருந்தால் நலமான‌தாக இருக்கும். பல தளங்களின் பட்ட அனுபவத்தினால் இதை எழுத நேரிட்டது. நான் வசன ஆதாரத்துடன் எழுத அது நிர்வாகி அல்லது அவரின் நண்பர்களுக்கு பிடிக்காமல் போக, வசனத்தினால் பதில் தர முடியாமல் போக, கடைசியில் என் பதிவுகள் அனைத்தையும் அவர்களுக்கு இடறல்(!!) உண்டாகாதப்படி எடுத்துவிட நேர்ந்தது.

  அந்த விதத்தில் எந்த அளவிற்கு கருத்து சுதந்திரம் இங்கு தரப்படும் என்று தயவு செய்து எழுதுங்கள்.

நன்றி.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Bro.bereans, I request you to follow the link:

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=33710189

Moderator


-- Edited by anbu57 on Wednesday 27th of January 2010 08:57:07 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

என் இருதயத்தில் பதிந்த கருத்துகளின் தாக்கம் என்னிடத்தில் இருக்கும் குணம் உள்ளவனாக இருந்திருந்தால் இன்று வரை கத்தோலிக்க சபையிலேயே இருந்திருப்பேன். சத்தியத்தை தேடி என் பயணம் நீண்ட நாட்களாக இருக்கிறது, இன்னும் நடந்துக்கொண்டு தானிருக்கிறேன். 1964க்கும் முன் வரையில் கூட வேத ஆராய்ச்சியாளர்கள் இருந்திருப்பார்கள், ஆனால் கும்ரான் குகையில் கிடைத்த கையெழுத்து பிரதிகளின் பயனை அவர்கள் அனுபவிக்கவில்லையே.

நான் ந‌ம்புவ‌து தேவ‌னின் ஒவ்வொரு எழுத்தை மாத்திர‌மே. தேவ‌ன் குழ‌ப்ப‌த்தின் தேவ‌ன் அல்ல‌ என்ப‌தை அறிவேன், ஆக‌வே தான் குழ‌ப்ப‌ம் இல்லாத‌ ச‌த்திய‌த்தை நோக்கி ந‌ட‌ந்துக்கொண்டிருக்கிறேன்.

தாங்க‌ள் என் கேள்விக்கு ப‌தில் த‌ந்த‌மைக்கு ந‌ன்றி. த‌ங்க‌ள் த‌ள‌த்தின் எதிர்ப்பார்ப்பை நிச்ச‌ய‌மாக‌ நிறைவேற‌ ஒத்த‌ழைப்பு த‌ருவேன்.

ந‌ன்றி!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தள நிர்வாகத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, ஒத்துழைப்பு தருவதாக நல்கிய சகோ.பெரேயன்ஸ் அவர்களுக்கு நன்றி.

சத்தியத்தைத் தேடும் உங்கள் பயணம், பற்பல அனுபவங்களுக்குள் சென்று, இலக்கை அடைய வாழ்த்துக்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard