நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாமின் கூற்றுப்படி, கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாமின் கூற்றுப்படி, கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்
Permalink  
 


சில்சாம் என்பவர், யெளவன தளத்தின் ஒரு திரியில் பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தார்.

//வேதத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டதை இல்லையென்று சொல்பவன்;
வேதத்தில் நேரடியாகச் சொல்லப்படாததை இருக்கிறதென்று சொல்பவன்


-ஆகிய இவ்விருவருமே கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.//


இக்கருத்து முழுக்க முழுக்க சில்சாமின் சொந்தக் கருத்தாகும். ஏனெனில் யாரெல்லாம் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் எனும் கேள்விக்குப் பதிலாக வேதாகமத்தில் காணப்படும் எந்தவொரு வசனத்திலும், சில்சாம் கூறுகிற இவ்விரு பிரிவினர்களும் இடம்பெறவில்லை. ஆக, வேதம் நேரடியாகச் சொல்லாததைத்தான் சில்சாம் கூறியுள்ளார். ஆக, அவரது கூற்றின்படி அவருங்கூட கர்த்தருக்கு அருவருப்பானவரே.

இதே சில்சாம் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில், “கிறிஸ்துவை தெய்வமாகத் தொழுபவர்களே கிறிஸ்தவர்கள்” எனும் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சில்சாமின் இந்தக் கருத்தாவது வேதத்தில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்த்தால், இக்கருத்தும் வேதத்தில் நேரடியாகக் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது கருத்து தொடர்பாக வேதாகமத்தில் ஒரேயொரு வசனம் மட்டும் இடம்பெற்றுள்ளது. அது:

அப்போஸ்தலர் 11:26 முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

அதாவது, இயேசுவின் சீஷர்களே கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டதாக வேதவசனம் கூறுகிறது. இயேசுவின் சீஷன் என்பவன் யார்? வேதாகமம் கூறுவதென்ன?

லூக்கா 9:23 ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.

வேதம் சொல்கிறதான மேற்கூறிய செயல்களைச் செய்வதன் மூலம் இயேசுவின் சீஷனாகி, கிறிஸ்தவன் என அழைக்கப்படுவது மிகக் கடினம் என சில்சாம் கருதியதாலோ என்னவோ, இயேசுவை தெய்வமாகத் தொழுது கொள்பவனே கிறிஸ்தவன் என்று சொல்லி, மிக எளிதாக கிறிஸ்தவர்கள் பிரிவில் தன்னைச் சேர்த்துக் கொண்டார்.

ஆம், இயேசுவை தெய்வமாகத் தொழுது கொள்தல் என்பது மிக எளிதான காரியம். இவ்வுலகில் பலரும் யாரையெல்லாமோ தெய்வமாகத் தொழுகையில், இயேசுவைத் தெய்வமாகத் தொழுதல் என்பது கடினமல்ல, நிச்சயம் எளிதானதே. அந்த எளிதான காரியத்தைச் செய்யும்படி வேதாகமம் நேரடியாகச் சொல்லியிருக்கிறதா எனத் தேடிப் பார்த்தால், நான் அறிந்தவரை அப்படி ஒரு செயலைச் செய்யும்படி வேதத்தின் எந்த வசனமும் கூறியதாகத் தெரியவில்லை.

இப்படியாக, பல செயல்கள் மூலம் சில்சாம் மீண்டும் மீண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவராகிக் கொண்டிருக்கிறார் (அவரது சொந்தக் கூற்றின்படி).

வேதத்திற்கு எதிரான சில்சாமின் பல கருத்துக்களை வரவேற்று வாழ்த்துகின்ற பலருங்கூட, சில்சாமின் கூற்றுப்படி கர்த்தருக்கு அருவருப்பானவர்களாக இருக்கின்றனர். அவர்களைக் குறித்த விபரங்கள் இத்திரியில் தொடர்ந்து வெளியிடப்படும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நிர்வாக உறுப்பினர்களில் அற்புதம் என்பவரும் ஒருவர். இவர் சில்சாமின் பல கருத்துக்களை ஆதரிப்பவர். சில்சாமின் ஆரோக்கியமற்ற போங்கை இவர் அவ்வப்போது அன்பாகக் கடிந்துகொண்டாலும், சில்சாமை விலக்கவேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நான் பதிந்த சில பதிவுகளினிமித்தம் என்னை விலக்க வேண்டும் அல்லது என்னை விட்டு விலக வேண்டும் என அற்புதம் கூறியிருந்தார். என்னை அவர் விலக்க எண்ணியதற்கு ஒரே காரணம்: அவரும் சில்சாமும் மற்றும் பலரும் நம்புகிற திரித்துவக் கொள்கைக்கு எதிராக நான் எழுதியதே.

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் இயேசுவை ஆராதிக்கலாமா என்ற தலைப்பில் ஒரு திரி இருந்தது. அத்திரியில், மத்தேயு 4:10-ல் இயேசு சொன்னதன் அடிப்படையில், பிதாவாகிய தேவன் ஒருவரே ஆராதனைக்குரியவர் என நான் எழுதியிருந்தேன். எனது பதிவில் முழுக்க முழுக்க வசனங்களையே மேற்கோள் காட்டி விரிவான விளக்கங்கள் கொடுத்திருந்தேன். எனது வசன மேற்கோள்கள் மற்றும் விளக்கங்களுக்கு பதிலளிக்க இயலாமற்போன அற்புதத்தால், தனது பாரம்பரிய நம்பிக்கையையும் விட்டுக்கொடுக்க மனதில்லை.

விளைவு? எனது பதிவுகள் அடங்கிய அத்திரி முழுமையாக தளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. அத்திரி மட்டுமல்ல, வசன ஆதாரங்களுடனான எனது பதிவுகள் அடங்கிய பல திரிகள் நீக்கப்பட்டு விட்டன.

11-9-10-ல், கொல்வின் என்பவர் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில், ‘நித்திய ஜீவன்’ தளத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி, அதற்கான தொடுப்பையும் கொடுத்திருந்தார். இதைப் பொறுக்காத அற்புதம், நித்திய ஜீவன் தளக் கூட்டத்தார் வித்தியாசமான போதனையை உபதேசிக்கும் கூட்டத்தார் என்று சொல்லி, நித்திய தள தொடுப்பை ஏன் கொடுத்தீர்கள் எனக் கொல்வினைக் கடிந்து கொண்டார். அதற்கு பதில் தந்த கொல்வின், அற்புதத்தின் கூற்றிற்கு ஆமாம் போட்டார்.

அபாண்டமான சொல்லை ஏற்காதே என வேதவசனம் கூறுவதால், அற்புதம் மற்றும் கொல்வின் இருவரிடமும், நித்திய ஜீவன் தளத்தில் வேதவசனத்திற்கு மாறான வித்தியாசமான போதனையாகக் காணப்படும் ஒரு பகுதியை எடுத்துக் காட்டும்படி 19-9-10-ல் வேண்டினேன். இன்றுவரை அதற்குப் பதில் இல்லை.

ஆரோக்கியமான உபதேசத்தால் புத்தி சொல்லி, எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணத்தக்கதாக, உண்மையான வசனத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் என தீத்து 1:9-ல் பவுல் கூறுகிறார். ஆனால் அற்புதத்தைப் போன்றவர்கள் அவ்வாறு கண்டனம் பண்ணத்தக்கதாக வசனத்தைப் பற்றிக்கொள்ளாதிருப்பதால், எனது கேள்விகளுக்கு நேருக்கு நேராக பதிலளிக்க இயலாதவர்களாக இருக்கின்றனர்.

சில்சாமின் பல கருத்துக்களோடு ஒத்துப்போகிற அற்புதம், இத்திரியின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள சில்சாமின் கூற்றின்படி எப்படி கர்த்தருக்கு அருவருப்பானவராகிறார் என்பதை இனி பார்ப்போம்.

கடந்த 20-9-10-ல் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில், அமைதி நேர நண்பன் எனும் தனது புத்தகத்தைப் படிக்கும்படி திரு.அற்புதம் வேண்டியிருந்தார். அவரது அந்த புத்தகத்தைப் படித்துப் பார்க்கையில், அப்புத்தகத்தின் தொகுப்பாசிரியரான திரு.அற்புதத்தின் பெயர் பாஸ்டர்.அற்புதராஜ் (அதாவது போதகர் அற்புதராஜ்) எனப் போடப்பட்டிருந்தது.

மத்தேயு 23:8-ல் கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார் என இயேசு கூறுகிறார். ஆனால் அற்புதத்தைப் போன்ற பலர், இந்நாட்களில் தங்களைப் போதகர் எனச் சொல்லிக் கொண்டு தங்களைக் கிறிஸ்துவுக்குச் சமமாக்கிக் கொள்கின்றனர்.

பிதாவுக்குச் சமமாயிராத கிறிஸ்துவை எப்படி பிதாவுக்குச் சமமானவராக இவர்கள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதுபோலவே கிறிஸ்துவுக்குச் சமமாயிராத இவர்கள் தங்களைப் போதகர் எனச் சொல்வதன் மூலம் கிறிஸ்துவுக்குச் சமமாக்கிக் கொள்கின்றனர்.

கிறிஸ்து ஒருவரையே வேதாகமம் போதகராகக் கூறுகிறது. ஆனால் திரு.அற்புதமோ (கிறிஸ்துவுக்குச் சமமாக) தன்னையும் போதகர் எனக் கூறிக் கொள்கிறார். எனவே சில்சாமின் கூற்றுப்படி திரு.அற்புதமும் கர்த்தருக்கு அருவருப்பானவரே.

இவரைப் போலவே தங்களைப் பாஸ்டர் என்றும், ரெவரெண்ட் என்றும், பிஷப் என்றும், குருவானவர் என்றும் கூறிக் கொள்கிற அனைவரும் சில்சாமின் கூற்றுப்படி கர்த்தருக்கு அருவருப்பானவர்களே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

வேதாகம வசனப்படி சரியாக பேசும் தங்களையும் மாறுபட்ட உபதேசம் என்கிறார்கள். காரணம் உங்கள் வாதங்களுக்கு தகுந்த வசனஆதாரத்தை அவர்களால் கொடுக்க முடியவில்லை. எனவே வேதத்தில் இல்லாத ஆனால் தாங்கள் நம்பும் சில காரியங்களை அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே உண்மை என்று தீர்மானிக்கிறார்கள்.
 
அதே நேரத்தில் அனைத்தையும் அனுபவங்கள் மற்றும் தரிசனத்தின் அடிப்படையிலேயே வசனத்தை தேடி எழுதும் என்னையும் ஏற்ப்பதற்க்கு பலருக்குமனமில்லை CULTS என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ஏனென்றால் வசனத்தின்படி சொல்வதை மட்டும்தான்  ஏற்க்கமுடியும் என்று காரணம் சொல்கிறார்கள்  
 
வார்த்தைகளை போதிக்கும் இவர்கள் வார்த்தைகள்படி வாழவிளைவது இல்லை
 
எதன் அடிப்படியில் என்ன எழுதுவது என்பதே குழப்பம்தான்.


-- Edited by SUNDAR on Thursday 7th of October 2010 05:42:10 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சில்சாமின் கூற்றுப்படி, கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்
Permalink  
 


அன்பான சகோதரரே,

எனது தளத்தில் பதிவிட்டு என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.

நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் குழம்பத் தேவையில்லை. எனது பத்திரிகையின் முகப்பில் பின்வரும் வசனத்தை நிரந்தரமாக போட்டுள்ளேன்.

எசேக்கியேல் 2:7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

எனவே தேவன் வேதாகமத்தின் மூலம் எழுதி வைத்துள்ள அவரது வார்த்தைகளை, யார் கேட்டாலும் கேளாவிட்டாலும், தொடர்ந்து எழுதி வருகிறேன். இவ்விஷயத்தில் நான் சற்றும் குழப்பமோ சோர்வோ அடைவதில்லை.

நீங்களுங்கூட தேவன் உங்களிடம் நேரடியாகச் சில காரியங்களைக் கூறியுள்ளதாக திட்டமாக நம்பினால், அவற்றை சற்றும் குழப்பமின்றி தயக்கமின்றி பதியுங்கள். உங்களுக்குக் கூறப்பட்ட தேவனின் வார்த்தைகளை நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். இது உங்கள்மேல் விழுந்த கடமையாகும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard