நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம் செலுத்துவது பற்றி!


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
தசமபாகம் செலுத்துவது பற்றி!
Permalink  
 


சகோதரர் அவர்களே!
 
தசமபாகம் கொடுப்பதுபற்றி நமக்குள் சிறு கருத்து வேறுபாடு இருப்பது தங்களுக்கு தெரியும். தேவனின் வார்த்தைகள்படி சரியாக வாழவேண்டும் என்று விரும்பும் நான், அவ்விஷயத்தில் தேவனின் கட்டளைகள்படி நடக்க விரும்புகிறேன்.
 
தசம பாகம் பற்றிய எனது கருத்தை இந்த தொடுப்பில் பதிவிட்டிருக்கிறேன். 
 
 
அதை தாங்கள் சற்று வாசித்துவிட்டு அதை பற்றிய தங்கள் கருத்தை இங்கோ அல்லது எனது தளத்திலோ தெரிவித்தீர்களானால் அது சம்பந்தமாக நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம்.
 
நன்றி!
SUNDAR 


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே!

தசமபாகம் கொடுப்பதைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு தாங்கள் வர ஆசித்ததை வரவேற்கிறேன்.

தசமபாகம் என்பது, இஸ்ரவேலராகிய ஜனங்கள் எருசலேம் தேவாலயத்தில் படைக்கும்படி கட்டளையிடப்பட்ட பாகமாகும்.

அதாவது எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே தசமபாகம் படைக்கப்படவேண்டும்; இஸ்ரவேலருக்கான அக்கட்டளை வேறு எவரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது.

உபாகமம் 14:22,23 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

தேவனுடைய நாமம் விளங்கும்படி தேவன் தெரிந்துகொண்ட இடம் சாலொமோன் கட்டின எருசலேம் தேவாலயம் மட்டுமே. (எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதற்கு முன், சீலோவாவிலுள்ள ஆசரிப்புக் கூடாரம்தான் தேவன் தெரிந்துகொண்ட இடமாக விளங்கியது (யோசுவா 18:1).)

எனவே தசமபாகம் கொடுத்தேயாக வேண்டும் என நினைப்பவர்கள் ருசலேம் தேவாலயத்தில்தான்அதைப் படைக்கவேண்டும். அந்த தேவாலயத்தைத் தவிர வேறெந்த ஆலயமும் தேவனுடைய ஆலயம் அல்ல. மல்கியா 3:10-ல் என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது வானத்தின் பலகணியைத் திறந்து ஆசீர்வதிப்பேன் என்றே தேவன் கூறினார்.

எருசலேம் தேவாலயத்தைத் தவிர்த்த பிற ஆலயங்களை உங்கள் ஆலயம் என்றுதான் இயேசு கூறினாரேயொழிய தேவனுடைய ஆலயம் என்று கூறவில்லை. சுவிசேஷகர்களும், அவர்களுடைய ஆலயம் என்றுதான் அவற்றை அழைத்தனரேயன்றி, தேவனுடைய ஆலயம் என அழைக்கவில்லை.

மத்தேயு 4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, .....

மத்தேயு 10:17 அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.

மத்தேயு 23:34 சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;

இந்நாட்களில் ஆளாளுக்கு தெருவுக்குத் தெரு ஆலயத்தைக் கட்டிவைத்து, இது தேவனுடைய ஆலயம் எனச் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் அப்படிச் சொல்வது வேதத்திற்கு விரோதமானது. எருசலேம் தேவாலயம் மட்டுமே தேவனுடைய ஆலயம். அதைத் தவிர்த்த ஆலயங்களில், தசமபாகத்தைப் படைக்கும்படி கூறுவது வேதபோதனைக்கு மாறானது என்பது நிச்சயம்.

எருசலேம் தேவாலயத்திற்கு அடுத்தபடியாக, விசுவாசிகளே தேவனுடைய ஆலயமாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (1 கொரி. 3:16,17; 2 கொரி. 6:16).

தேவனுடைய ஆலயமாகிய விசுவாசிகளாகிய நம்மில் தேவன் வாசம்செய்யவேண்டுமெனில் நாம் என்ன செய்யவேண்டுமென பின்வரும் வசனத்தில் இயேசு கூறுகிறார்.

யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

இயேசுவின் வசனத்தைக் கைக்கொண்டாலே போதும், தேவனின் தசமபாகக் கட்டளையின் நோக்கம் தானாக அதில் நிறைவேறிவிடும்.

லூக்கா 11:42-ல் தசமபாகம் கொடுப்பதை விடாதிருக்க வேண்டும் என இயேசு கூறியதை ஒரு முக்கிய மேற்கோளாகக் காட்டுகிறீர்கள். ஆனால் இயேசு சொன்ன அந்த வசனம் இஸ்ரவேலரில் ஒரு பிரிவினரான வேதபாரகர் மற்றும் பரிசேயரிடமே என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இஸ்ரவேலரைப் பொறுத்தவரை, லூக்கா 11:42-ன்படி தசமபாகக் கட்டளை அவர்களை இன்றளவும் கட்டுப்படுத்தவே செய்யும்.

எனவே இன்றுங்கூட, லேவியர்களுக்கு பிற கோத்திரத்தார் தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் லேவியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுடைய ஆலயப்பணியை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும். மாறாக, ஆலயப்பணியைத் தவிர வேறு ஏதேனும் ஆதாயத்தொழிலை அவர்கள்  செய்தால், அவர்கள் தசமபாகம் பெறுவதற்கு உரிமைஇல்லாதவராகி விடுவார்.

சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்புண்டாக வேண்டும் எனக் கர்த்தர் கட்டளையிட்டுள்ளதாக 1 கொரி. 9:14-ல் பவுல் கூறியுள்ளதையும் ஒரு முக்கிய மேற்கோளாகக் காட்டியுள்ளீர்கள்.

இது ஒரு பொருத்தமான மேற்கோள்தான். ஆனால், இக்கருத்தைச் சொன்ன பவுல் இவ்வுரிமையைப் பயன்படுத்தாமல், தன் சொந்த உழைப்பினால் தன் பிழைப்புக்குரியதைத் தேடிக்கொண்டார்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? புதிய ஏற்பாட்டின் ஊழியர்கள் தங்கள் உழைப்பினால் தங்கள் பிழைப்புக்குரியதை தேடிக்கொள்ள தடையெதுவும் இல்லை என்பதே.

ஒருவேளை சுவிசேஷத்தினால்தான் தனது பிழைப்பு நடக்கவேண்டும் என ஓர் ஊழியர் நினைத்தால், அப்படி அவர் நினைப்பதற்கும் தடையெதுவுமில்லைதான். ஆனால் தன் பிழைப்புக்காக அவர் விசுவாசிகளிடம் கேட்டுப்பெற வேண்டும் என வேதாகமம் கூறவில்லை.

நம்மைப் பொறுத்தவரை, சுவிசேக்ஷத்தை அறிவிப்பவர்களுக்கு பிழைப்புண்டாகும்படி அவர்களுக்கு கொடுப்பது அவசியந்தானே என நீங்கள் கேட்கலாம். ஆம், அவசியம் என்றே சொல்லலாம்.

ஆனால், இதை ஒரு கட்டாயமாக வேதம் கூறவில்லை. மனப்பூர்வமாக் உற்சாகமாகக் கொடுப்பவர்கள் கொடுக்கலாம். அதாவது மெய்யாகவே சுவிசேஷத்தை அறிவிப்பவர்களுக்கு,
மனப்பூர்வமாய் உற்சாகமாகக் கொடுப்பவர்கள் கொடுக்கலாம். ஆனால் இது கொடுப்பவரின் உரிமையைச் சார்ந்ததாகும். யாரும் அவர்களைக் கட்டாயப் படுத்த முடியாது.

(பழைய ஏற்பாடு, தசமபாகம் கட்டாயம் கொடுக்கவேண்டும் எனக் கூறுவதைப் போல) சுவிசேஷ ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுத்தேயாக வேண்டும் என புதியஏற்பாடு கூறவில்லை.

சுவிசேஷத்தை அறிவப்பவர்களுக்கு பிழைப்புண்டாக வேண்டும் என்பது, அவர்களது ஜீவனத்திற்குரிய தேவையை மட்டுமே (உணவு உடை) குறிப்பிடுகிறது. இதற்கு மேலாக அவர்களின் வசதிவாழ்வு பெருகத்தக்கதாக கொடுக்க வேண்டும் என வேதாகமம் சொல்லவில்லை.

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மெய்யாகவே சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் யார் என்பதை அறிவதில் நாம் வெகுசிரத்தை கொள்ளவேண்டும். இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்து, தவறான நபர்களுக்குக் கொடுத்தால், அவர்களின் தவறுக்கு நாமும் உடந்தையாவோம். (2 யோவான் 1:11-ஐப் படித்துப் பார்க்கவும்)

இறுதியாக ஒன்று:

தேவனுடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வதுதான் தேவனின் போதனை.

மனுஷருடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வது மனுஷரின் போதனை.


மேலும் கேள்விகள் இருந்தால் தாராளமாகக் கேட்கலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க தசமபாகம் குறித்த எனது கருத்தைக் கூறிவிட்டேன். தங்களிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை. ஒருவேளை எனது கருத்தில் உங்களுக்குத் திருப்தி இல்லையோ என்னவோ?

தங்கள் பார்வைக்காக தசமபாகக் கட்டளை குறித்த மேலும் சில விளக்கங்களைத் தர விரும்புகிறேன்.

பழையஏற்பாட்டில் தேவன் தமது கட்டளைகள்/கற்பனைகள் யாவற்றையும் இஸ்ரவேலரிடம்தான் கூறினார். ஆனால் அவை எல்லாவற்றிலும் தசமபாகக் கட்டளை மட்டும் எவ்விதத்திலும் இஸ்ரவேலரைத் தவிர மற்றவர்களைக் கட்டுப்படுத்தாது என்பதை சில விளக்கங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

கொலை செய்யாதே, களவு செய்யாதே எனும் கற்பனைகளை எடுத்துக் கொள்வோம். இக்கற்பனைகளின்படி நடப்பதென்பது இஸ்ரவேலரல்லாத புறஜாதியினருக்கும் ஏற்றதாக இருக்கும் எனத் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் தசமபாகக் கட்டளையைப் பொறுத்தவரை, அது இஸ்ரவேலரல்லாத பிற ஜனங்களுக்கும் ஏற்றதாக இருக்குமெனச் சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது.

எப்படியெனில், இஸ்ரவேலரின் 12 கோத்திரத்தாரில் தசமபாகம் கொடுக்கக் கடமைப்பட்ட 11 கோத்திரத்தாரிடமிருந்து, ஒவ்வொரு கோத்திரத்திற்கும் 10-ல் 1 என்ற வீதத்தில் லேவியர்களுக்குக் கிடைக்கக்கூடிய மொத்த பங்கு 11/10 பங்காகும். ஆனால் தசமபாகம் கொடுத்த 11 கோத்திரத்தாருக்கு இருக்கக்கூடியதோ 9/10 பங்கு மட்டுமே. ஆக, தசமபாகம் கொடுத்த 11 கோத்திரத்தாரின் பங்கைவிட, தசமபெற்ற லேவி கோத்திரத்தாருக்கு ஏற்கனவே 2/10 பங்கு கூடுதலாகத்தான் இருக்கும். இந்நிலையில், உலகின் பிற தேசங்களில் உள்ளவர்களும், லேவி கோத்திரத்தாருக்கு தசமபாகம் கொடுக்க வேண்டுமெனக் கூறுவது ஏற்றதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது தசமபாகக் கட்டளை முழுவீச்சில் அமலில் இருந்த அந்நாட்களிலேயே, அக்கட்டளை முழுக்க முழுக்க இஸ்ரவேலருக்கு மட்டுமேயானதாகத்தான் இருந்திருக்குமேயொழிய, மற்றவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை உருவாகி 2000 ஆண்டுகள் ஆன இந்நாட்களில், இஸ்ரவேலரைத் தவிர்த்த புறஜாதி மக்களும் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறுவது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரரே!

தசமபாகம் குறித்து நான் எழுதின மேலும் சில விஷயங்களை, பின்வரும் தொடுப்புகளிலும் சென்று படிக்கும்படி வேண்டுகிறேன்.

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=6&topic=1923&Itemid=287

http://www.christian-perfection.com/2010/Oct10.pdf


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

சம்பந்தமில்லாமல் குறிக்கிடுவதற்கு மன்னிக்கனும்,

லேவி கோத்திரத்தாருக்கு நிலம் அல்லது பூமி தரப்படவில்லை, ஆகவே தான் அவர்களும் அவர்களின் குடும்பங்களும் சாப்பிடும்படியாக "தசமபாகம்" மற்ற கோத்திரத்தார் இந்த லேவி கோத்திரத்திற்கு தந்தார்கள், அது மாத்திரம் இல்லை, சகோ அன்பு அவர்களின் நீண்ட பதிவு மற்ற காரியங்களையும் சொல்லியிருக்கிறது. ஆனால் நான், தசமபாகம் கொடுப்பது சரியா தவறா என்கிற விவாதத்திற்கு வரவில்லை, இதை குறித்து ஒரு நிழல் மற்றும் நிறைவேறப்போகும் நிஜத்தை பதிவு செய்கிறேன். லேவி கோத்திரத்தார் ஆசாரியர் பணி செய்ய "முதற்பேரானவர்களின்" கூட்டமாக அழைக்கப்பட்ட ஒரு கூட்டம். இந்த லேவிய கோத்திரத்தார் "கிறிஸ்துவின் சரீரமாக இருக்கும் முதற்பேறானவர்களின்" நிழலாக இருக்கிறவர்கள், கிறிஸ்து சொல்லுகிறார், "எனது இராஜியம் இந்த பூமிக்குரியது இல்லை" என்று, அப்படியே கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆளுக்கை செய்யப்போகும் அவரின் சபைக்கும் இந்த பூமியில் வாசம் இல்லை, லேவியர்களுக்கு பூமி இல்லாதது போல்.

மேலும் கிறிஸ்துவிடமிருந்து தசமபாகம் வாங்குங்கள் போன்ற ஒரு நேரடியான‌ கட்டளை அவரின் சபைக்கு வேதம் சொல்லுவதில்லை. மூப்பர்கள், மேய்ப்பர்கள், காரியதரிசிகள் செய்வது ஒரு சேவையே தவிர கட்டனம் வாங்கி செய்யும் ஒரு வியாபாரம் அல்ல.

I பேதுரு 5: 2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரியன்ஸ் அவர்களே, தசமபாகக் கட்டளையிலும் நிழல், நிஜம் உண்டு என்கிறீர்கள், நல்லது.

உங்கள் விளக்கப்படி, கிறிஸ்துவின் சரீரமாகிய முதற்பேரானவர்கள்தான், நிழலான லேவியர்களின் நிஜம் என்றால், பின்வரும் நிழல்களின் நிஜங்கள் யார்? எது?

நிழல் எண் 1. தசமபாகம் கொடுக்கவேண்டிய பிற கோத்திரத்தார்

நிழல் எண் 2. தசமபாகமாகக் கொடுக்கப்பட வேண்டிய விளைச்சல்கள்


இவ்விவாதம் சகோ.சுந்தரின் கேள்விக்கு நேரடித் தொடர்பின்றி இருக்குமென்பதால் என் கேள்விக்கான பதில்களை இத்தளத்தின் வேறொரு திரியிலோ அல்லது தங்கள் தளத்தின் ஒரு திரியிலோ கூறும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

anbu57 wrote:

நிழல் எண் 1. தசமபாகம் கொடுக்கவேண்டிய பிற கோத்திரத்தார்


தசமபாகம் கொடுத்த பிற கோத்திரத்தார் இந்த பூமியை சுதந்தரிக்க போகும் மற்ற அனைத்து ஜனங்களையுமே குறிக்கும். இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து அவரின் சபை இந்த பூமியை முந்திய சீருக்கு கொண்டு வந்த பின் இந்த பூமியை சுதந்தரிக்கபோவது கர்த்தரால் மீட்கப்பட்ட அனைவருமே (ஏசா 35) மீதமான கோத்திரங்கள் இந்த பூமியில் உயிர்த்தெழுந்து தேவனை அறிந்துக்கவிருக்கும் ஜனங்கள் ஆவர்!!

அன்று கோத்திர‌த்தாருகு இருந்த‌ த‌ச‌ம‌பாக‌ம் தான் கிறிஸ்துவிற்குள் முழுவ‌துமாக‌ கொடுப்ப‌தாக‌ இருக்கும். ம‌ற்ற‌ப‌டி த‌ச‌ம‌பாக‌ம் ஒரு நிழ‌ல் என்றும் அத‌ற்கு உண்டான‌ நிஜ‌ம் வேத‌த்தில் இருப்ப‌தாக‌ என்னால் சொல்ல‌ முடிய‌வில்லை!

நிழ‌ல் லேவி கோத்திர‌த்தார் எகிப்த்தின் ச‌ங்கார‌த்தூத‌னின் கையிலிருந்து த‌ப்ப‌வைக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ற்பேறான‌வ‌ர் கூட்ட‌த்திற்கு ஒப்பான‌வ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் நிஜ‌ம் கிறிஸ்துவின் ச‌ரீர‌மாக‌ ம‌ரண‌‌த்திலிருந்து உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு கிறிஸ்துவுட‌ன் சேர்ந்து ஆளுகை செய்ய‌ப்போகும் முத‌ற்பேனாவ‌ர்க‌ளின் கூட்ட‌ம். இதை குறித்து பவுல் எழுதுகிறார்,

I கொரிந்தியர்15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.24. அதன்பின்பு முடிவு உண்டாகும்;

த‌ங்க‌ளின் இர‌ண்டாவ‌து கேள்வியில் 'விளைச்சல்கள்' என்ப‌தின் பொருளை புரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை! விள‌க்குவீர்க‌ளா!?

 



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

பழையஏற்பாட்டில் தேவன் தமது கட்டளைகள்/கற்பனைகள் யாவற்றையும் இஸ்ரவேலரிடம்தான் கூறினார். ஆனால் அவை எல்லாவற்றிலும் தசமபாகக் கட்டளை மட்டும் எவ்விதத்திலும் இஸ்ரவேலரைத் தவிர மற்றவர்களைக் கட்டுப்படுத்தாது என்பதை சில விளக்கங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன்.



சகோதரர் அன்பு  அவர்களே!

வேதவசனங்களை பற்றியசில அடிப்படை நம்பிக்கையிலேயே எனது நிலை வேறாக இருக்கிறது. எனவே இவ்விஷயத்தில் என்னால் தொடர்ந்து எழுதமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
 
ரோமர் 3:2  தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

அதாவது "வேதவாக்கியங்கள் எல்லாமே இஸ்ரவேலரிடம்  ஒப்படைக்கப்பட்டது" என்று வேதம் சொல்கிறது. இந்நிலையில் இயேசுவோ அல்லது தேவனாகியகர்த்தரோ சொல்லியிருக்கும்
அனேக வார்த்தைகள் அவர்களிடம் அவர்களை நோக்கி சொன்னதாகத்தான் இருக்கும். அதை  இவருக்கு சொன்னது அவருக்கு சொன்னது என்று பிரித்தால் நமக்கசொன்னது எது என்பது என்பதை அறிவது முடியாத ஒன்றே. அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு "இது எனக்கு இல்லை" என்று வசனங்களை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது      

 
பவுல் எழுதியது  அந்த குறிப்பிட்ட சபைகளுக்கு மட்டுமே என்றும், வெளிப்படுத்தின விசேஷம்மும் குறிப்பிட்ட அந்த சபைகளுக்கே என்ற நிலை வரலாம். 
 
என்னை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை தெரிந்தெடுத்து அதன் வழியாக  உலகத்துக்கு செய்தி சொல்லி உலகை மீட்பதே தேவனின் நோக்க்மேயற்றி   எந்த ஒரு கோத்திரத்தையும் தனியே தெரிந்துகொண்டு அவர்களுக்கு மட்டும் சில கட்டளைகளை மற்றவருக்கு சில கட்டளைகள் கொடுத்து பட்சபாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர் தேவனல்ல. அவர் எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் உலகத்தில்  உள்ள மொத்த மக்களின் நலனும் நிச்சயம் அடங்கியிருக்கும்! அவர் எங்கு ஒரு வார்த்தை சொன்னாலும் அது எல்லோர் மேலும் பலிக்கும் வல்லமை நிறைந்ததாகவே இருக்கும் என்றே கருதுகிறேன்.  
 
  
உலகில் உள்ள எவர் விசுவாசித்தாலும் அவருக்கு இரட்சிப்புபலிப்பது போல, உலகில் உள்ள எவர் தேவனின் கற்பனைகளின் படி நடந்தாலும் அவர் சொன்ன ஆசீர்வாதங்களும் பலிக்கும் என்றே நான் கருதுகிறேன்.  இவ்விஷயத்தில் தேவனின் வார்த்தைகளின் வல்லமையை இவருக்கு மட்டும்தான் என்று மட்டுபடுத்த நான் விரும்பவில்லை.
 
இரண்டாவது  தேவன் சொல்லிய வார்த்தைகளை மாற்ற தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று நம்புபவன் நான்.  அவ்விதத்தில் இயேசுவும் தேவனின் ஒருபகுதி என்று நம்புவதால் அவருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. மற்றபடி அவர்களை தவிர யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பது எனது முடிவான கருத்து.
 
இந்நிலையில் நியாயபிரமாணம் கொடுக்கப்படும் முன்னேயே அவரது சிநேகிதனான ஆபிரகாமல் கொடுக்கப்பட்டு பின்னர் தேவனால் நியாயபிரமாணத்தில் சேர்க்கப்பட்டு இயேசுவால்  "இதையும் விடாமல் இருக்கவேண்டும்" என்று உறுதி படுத்தப்பட்டு  வேறு எந்த இடத்திலும் "தசமபாகம் கொடுக்க வேண்டிய தேவைஇல்லை" என்று தீர்மானமாக சொல்லப்படாத ஒரு காரியத்தை அது முடிந்துவிட்டது என்று என்னால் ஏற்க்க முடியாது!        
 
மற்றபடி அதை யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதைபற்றி  வேண்டுமானால் விவாதிக்கலாம்!


-- Edited by SUNDAR on Thursday 14th of October 2010 12:26:06 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நிழல் எண் 1-க்கான நிஜம் எதுவென்பதை எளிதில் சொல்லிவிட்டீர்கள் சகோ.பெரியன்ஸ் அவர்களே! இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.

கர்த்தரால் மீட்கப்பட்டு இந்த பூமியைச் சுதந்தரிக்கப்போகிறவர்கள்தான் மீதமான கோத்திரத்தார் என்கிறீர்கள், நல்லது. ஆனால் இந்த மீதமான கோத்திரத்தார், முதற்பேரானவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தசமபாகம் எது?

தங்கள் நிலத்தின் விளைச்சல்களில் (தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றில்) தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பதுதான் தசமபாகக் கட்டளையின் பிரதான குறிப்பு (உபாகமம் 14:22). அந்த விளைச்சல்களைத்தான் நிழல் எண் 2 எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிழல் பொருளுக்கு ஒப்பான நிஜப்பொருள் எது என்பதுதான் எனது கேள்வி.

லேவியர்கள் போஷிக்கப்படும்படி பிற கோத்திரத்தார் தங்கள் விளைச்சல்களில் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பது நிழல். அவ்வாறெனில், இப்பூமியைச் சுதந்தரிக்கப்போகிற மீத கோத்திரத்தார், முதற்பேரானவர்கள் போஷிக்கப்படும்படி என்ன விளைச்சலில் தசமபாகம் கொடுப்பார்கள் என்பதுதான் என் கேள்வி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//வேதவசனங்களை பற்றியசில அடிப்படை நம்பிக்கையிலேயே எனது நிலை வேறாக இருக்கிறது. எனவே இவ்விஷயத்தில் என்னால் தொடர்ந்து எழுதமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.//

சகோதரரே! நான் உங்கள் நிலையில் இருந்துதான் எனது விவாதத்தை வைத்துள்ளேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.

இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகள் எல்லாமும் அனைவருக்கும் உரித்தானதே எனும் உங்கள் நிலைதான் எனது நிலை.

ஆனால் எல்லா கற்பனைகளிலும், தசமபாகக் கற்பனை மட்டும் எல்லோருக்குமுரியதாயிராமல், இஸ்ரவேலருக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளதல்லவா?

அதாவது, we can consider all commandments to be applicable to all people. But we cannot consider the tith commandment to all people, because the nature of tith commandment itself is totally exclusively for the the Isralites.

The levi tribe had no inherritance in Israel. So the other 11 tribes of Isreal were commanded to support levi by their productions.

Just imagin if all over the world support levi by the tith of their productions, what will happen. Definitely levi would have plenty.

Definitely, this is not God's expectation. God expected only the 11 tribes to support the Levi by their tiths, and not more than this.

So the tith commandment is not applicable to any others except Isralites, and it was meant only for the Isralites.


தசமபாகக் கட்டளை இஸ்ரவேலரைத் தவிர வேறு யாருக்கும் உரியதல்ல என்றிருக்கும்போது, தற்போது நாம் யாருக்கு எதை தசமபாகமாகக் கொடுக்கவேண்டுமென்பதை ஏன் யோசிக்க வேண்டும்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

சகோதரரே! நான் உங்கள் நிலையில் இருந்துதான் எனது விவாதத்தை வைத்துள்ளேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.
 
ஆனால் எல்லா கற்பனைகளிலும், தசமபாகக் கற்பனை மட்டும் எல்லோருக்குமுரியதாயிராமல், இஸ்ரவேலருக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளதல்லவா?

அதாவது, we can consider all commandments to be applicable to all people. But we cannot consider the tith commandment to all people, because the nature of tith commandment itself is totally exclusively for the the Isralites.

The levi tribe had no inherritance in Israel. So the other 11 tribes of Isreal were commanded to support levi by their productions.

Just imagin if all over the world support levi by the tith of their productions, what will happen. Definitely levi would have plenty.

Definitely, this is not God's expectation. God expected only the 11 tribes to support the Levi by their tiths, and not more than this.

So the tith commandment is not applicable to any others except Isralites, and it was meant only for the Isralites.


தசமபாகக் கட்டளை இஸ்ரவேலரைத் தவிர வேறு யாருக்கும் உரியதல்ல என்றிருக்கும்போது, தற்போது நாம் யாருக்கு எதை தசமபாகமாகக் கொடுக்கவேண்டுமென்பதை ஏன் யோசிக்க வேண்டும்?



 
புரிந்துதான் எழுதுகிறேன் சகோதரரே!
 
நீங்கள் இயேசு "பரிசேயரை பார்த்துதான் அவ்வார்த்தைகளை சொன்னார்" என்று எழுதியதாலேயே சில காரியங்களை எழுதினேன்.

மேலும்   

தசமபாகம் இஸ்ரவேலருக்கு மட்டுமே உரியது என்ற கருத்து ஏற்க்க முடியாத ஓன்று! 
 
இஸ்ரவேல் என்ற கோத்திரம் உருவாகும் முன்னமே ஆபிரஹாம் மேல்கிசெதேக்குக்கு தசமபாகம் கொடுத்திருக்கிறான். அந்தே மெல்கிசேதேக்கு தசமபாகத்தை என்ன பண்ணினார் என்பதற்கோ  அல்லது யாருக்கு அதை பங்கிட்டு கொடுத்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை
 
ஆதியாகமம் 14:20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

தசமபாக கட்டளை பிறக்கும்முன்னமே யாக்கோபு தேவனிடம் தசமபாகம் குறித்து பொருத்தனை பண்ணியிருக்கிறான். அப்பொழுது லேவி கோத்திரத்தார் என்று யாரும் கிடையாது. அதன் அடிப்படையில் பார்த்தால் அது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரித்தானது என்று எவ்வாறு ஏற்க்க முடியும்.
 
ஆதியாகமம் 14:18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு
 
மெல்கிசெதேக் தேவனுடய ஆசாரியர்கள்  என்று கூறப்படுகிறது அவன் ஆப்ரஹாமை ஆசீர்வதித்தான் எனவே ஆரஹாம் அவனுக்கு தசமபாகம் கொடுத்தான். அவ்வளவுதான். கர்த்தரின் நாமத்தில் ஒரு ஊழியர்  நம்மை ஆசீர்வதித்தால் அவருக்கு தசமபாகம் கொட்ப்பதில் தவறில்லை என்றே வேதம் போதிக்கிறது. அவர் கள்ளனா நல்லவனா என்ற ஆராய்ச்சி அதற்க்கு  அப்பாற்ப்பட்டது.    
 
அதுபோல் அன்றைய   தேவனுடய ஆசாரியர்கள் அதாவது தேவனுக்கு பணிவிடை செய்பவர்கள் இன்றைய தேவனுடய ஊழியர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள்.  அவர்கள் நமக்காக ஜெபிக்கும்போதோ அல்லது நம்மை ஆசீர்வதிக்கும்போதோ அவர்களுக்கு தசமபாகம் கொடுப்பதில் என்ன தவறு?
 
நீங்கள் அவர்களை தேவனின் ஊழியர்கள் என்று நம்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள். நம்பவில்லை என்பதற்கு நீங்கள் சொல்லும் எந்த காரணமும்  நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. அவ்வாறிருக்க நம்புகிறவர்களுக்கு ஏன் இடரலை ஏற்ப்படுத்துகிறீர்கள்? 
 


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//மெல்கிசெதேக் தேவனுடய ஆசாரியன் என்று கூறப்படுகிறது. அவன் ஆபிரஹாமை ஆசீர்வதித்தான், எனவே ஆபிரஹாம் அவனுக்கு தசமபாகம் கொடுத்தான். அவ்வளவுதான். கர்த்தரின் நாமத்தில் ஒரு ஊழியர்  நம்மை ஆசீர்வதித்தால் அவருக்கு தசமபாகம் கொடுப்பதில் தவறில்லை என்றே வேதம் போதிக்கிறது. அவர் கள்ளனா நல்லவனா என்ற ஆராய்ச்சி அதற்கு  அப்பாற்பட்டது.//

சகோதரரே! நீங்கள் யாருக்காவது தசமபாகம் கொடுக்க நினைத்தால் அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிடப்போவதில்லை. அதற்காக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சி போடுகிறீர்கள்?

மெல்கிசெதேக்கிற்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததை வைத்து, ஓர் ஊழியர் நம்மை ஆசீர்வதித்தால் அவருக்குத் தசமபாகம் கொடுப்பதில் தவறில்லை என வேதாகமம் போதிப்பதாக நீங்கள் சொல்வதைத்தான் கூறுகிறேன்.

ஓர் ஊழியர் நம்மை ஆசீர்வதித்தால் அவருக்கு தசமபாகம் கொடுக்கவேண்டுமென வேதாகமம் ஒருபோதும் போதிக்கவில்லை. ஆபிரகாமின் செயலை வைத்து, அதை வேதபோதனை என நீங்களாகச் சொல்லிக் கொள்கிறீர்கள்.

ஆபிரகாமின் செயல்கள் அனைத்தும் வேதபோதனையாகிவிடாது. அப்படிப் பார்த்தால், ஆபிரகாம் 3 மனைவிகளை உடையவராக இருந்தார்; எனவே 3 மனைவிகளை திருமணம் செய்வதில் தவறில்லை என வேதாகமம் போதிப்பதாகக் கூறுவீர்களா?

லேவி கோத்திரத்தாருக்கு தசமபாகம் கொடுக்கும்படி, ஏனைய இஸ்ரவேலரிடம் தேவன் கட்டளையிட்டார். தேவனின் அக்கட்டளையின் அடிப்படையில் நாம் தாராளமாக விவாதிப்போம். அதைவிடுத்து, ஆபிரகாம், யாக்கோபு போன்ற விசுவாசிகளின் செயல்களை வேதபோதனை எனச் சொல்லி விவாதித்தால், அவர்கள் செய்த ஒவ்வொரு செயலையும் வேதபோதனையாக ஏற்பீர்களாக என்றுதான் கேட்கவேண்டிவரும்.

ஆபிரகாம், யாக்கோபு போன்றோரின் தனிப்பட்ட செயல்களையெல்லாம் ஆதாரமாக வைத்து, நீங்கள் யாருக்காவது தசமபாகம் கொடுக்க விரும்பினால் தாரளமாகக் கொடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட செயல்களை வேதஆதாரமாகச் சொல்லி விவாதிக்காதீர்கள்.

sundar wrote:
//அவர்கள் நமக்காக ஜெபிக்கும்போதோ அல்லது நம்மை ஆசீர்வதிக்கும்போதோ அவர்களுக்கு தசமபாகம் கொடுப்பதில் என்ன தவறு?//

தசமபாகம் கொடுப்பது தவறா இல்லையா என்பதை நாம் விவாதிக்கவில்லை. புதியஏற்பாட்டு சபையாகிய கிறிஸ்துவின் சபைக்கு தசமபாகக் கற்பனை உண்டா இல்லையா என்பதைத்தான் நாம் விவாதிக்கிறோம்.

sundar wrote:
//நீங்கள் அவர்களை தேவனின் ஊழியர்கள் என்று நம்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள். நம்பவில்லை என்பதற்கு நீங்கள் சொல்லும் எந்த காரணமும்  நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. அவ்வாறிருக்க நம்புகிறவர்களுக்கு ஏன் இடறலை ஏற்ப்படுத்துகிறீர்கள்?//

நான் யாரை தேவனின் ஊழியன் என நம்புகிறேன் என்பதும் நம் விவாதமல்ல. இதுவரையிலான எனது விவாதத்தில், ஒரு இடத்திலும் இன்றைய தேவஊழியர்கள் நல்லவர்களா இல்லையா என்றோ நல்லவரானால் தசமபாகம் கொடுக்கலாம் என்றோ நான் கூறவில்லை. ஓர் ஊழியர் நூற்றுக்கு நூறு நல்லவராக இருந்தால்கூட அவருக்குத் தசமபாகம் கொடுக்கும்படி வேதாகமம் கூறவில்லை என்பதுதான் எனது வாதம்.

இன்றைய கிறிஸ்துவின் சபை தசமபாகம் கொடுக்கும்படி வேதாகமம் போதிக்கிறதா என்பதைப் பற்றிய இவ்விவாதத்தை துவக்கியதே நீங்கள்தான். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் விவாதிக்கையில், மற்றவர்களுக்கு நான் இடறலை ஏற்படுத்துவதாக நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? இது என்ன நியாயம் சகோதரரே?

கிறிஸ்துவின் சபையில் மூத்த உறுப்பினர்களான பேதுரு, யோவான், பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் அனைவரும் நல்ல ஊழியர்கள்தான். ஆனால் அவர்கள் தசமபாகம் கேட்டதாகவோ, அல்லது பிற விசுவாசிகள் அவர்களுக்குத் தசமபாகம் கொடுத்ததாகவோ வேதாகமம் சொல்கிறதா? அதற்கான வேதஆதாரத்தை உங்களால் தரமுடியுமா?

வேதாகம அப்போஸ்தர்களுக்குப் பிறகு வந்த கொடிதான ஓநாய்கள் (அப்போஸ்தலர் 20:29) உண்டாக்கிய பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்வதால், நீங்கள் அதற்கு ஆதரவாக விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி பாரம்பரிய வழக்கத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாமல், கிறிஸ்துவின் சபைக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகள் மற்றும் ஆதிச் சபையாரிடம் காணப்பட்ட வழக்கங்கள் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், தசமபாகம் கொடுக்கவேண்டியதில்லை என்ற முடிவுக்குத்தான் நீங்கள் வருவீர்கள். அதே வேளையில் தசமபாகம் மட்டுமல்ல, உங்கள் முழு உடைமைகளையும் உங்கள் சபைத்தலைவர்களின் பாதப்படியில் வைக்கவேண்டும் என்ற முடிவுக்கும் வருவீர்கள் (அப்போஸ்தலர் 2:44,45; 4:32-35).

உங்கள் சபைத்தலைவரை நீங்கள் ஆதரித்தேயாக வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஆதியாகம விசுவாசியான ஆபிரகாமின் மாதிரிப்படி தசமபாகம் மட்டும் கொடுத்துவிட்டு தப்பிக்காதீர்கள்; ஆதித் திருச்சபையாரின் மாதிரிப்படி உங்கள் முழு பாகத்தையும் உங்கள் சபைத்தலைவரின் பாதத்தில் வையுங்கள். இதைச் செய்ய நீங்கள் தயாராக இல்லையெனில், தசமபாகத்தைப் பற்றி பேசாதீர்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

உங்கள் தளத்தில் தசமபாகம் பற்றிய பதிவில் பல வேதவசனங்களை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். தசமபாக விஷயத்தில் நீங்கள் எனது கருத்தோடு ஒத்து வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் தசமபாகம் கொடுங்கள். ஆயினும், உங்கள் தளத்தில் நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள வசனங்களுக்கான எனது விளக்கத்தைக் கொடுப்பது எனது கடமையென நான் உணர்கிறேன். எனவே, தங்கள் பதிவிலுள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் எனது விளக்கத்தைத் தருகிறேன். இது உங்களுக்கு இல்லாவிட்டாலும், பிற அன்பர்களுக்குப் பயன் தரும் என நம்புகிறேன்.

வசனம் 1:
லூக்கா 11:42 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.

இவ்வசனத்தின் கூற்று முழுக்க முழுக்க பரிசேயரையே சாரும் என்பதை அதன் முதல் வார்த்தை தெளிவாகக் கூறுகிறது. எனவே கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பதற்கு ஆதாரமாக இவ்வசனத்தைக் கூற இயலாது.

வசனம் 2:
1 கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களின் பிழைப்பு சுவிசேஷத்தின் மூலம் நடக்கலாம்தான். ஆனால் “பிழைப்பு” எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்பதையறிய முந்தின வசனத்தையும் படிக்க வேண்டும்

1 கொரி. 9:13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

ஆசாரிய ஊழியஞ்செய்தவர்கள் தங்கள் புசிப்புக்கானவற்றை, தேவாலயத்திற்கிரியவைகளிலிருந்து பெற்றுக் கொண்டனர். எனவே 1 கொரி. 9:14-ல் “பிழைப்பு” எனும் வார்த்தை புசிப்புக்கானதை மட்டுமே குறிப்பிடுகிறது. இதற்கு மற்றொரு வசன ஆதாரமும் உண்டு. அவ்வசனத்தின் அடிப்படையில்தான் “கர்த்தரும் கட்டளையிட்டுள்ளாரே” எனப் பவுல் குறிப்பிடுகிறார். அந்த வசனம்:

லூக்கா 10:7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.

எனவே சுவிசேஷம் அறிவிப்பவர்களின் புசிப்புக்கானவைகள் சுவிசேஷத்தின் மூலம் கிடைக்கவேண்டும் என்பதே தேவநியமனமாய் இருக்கிறது. மற்றபடி, சுவிசேஷத்தை அறிவிப்பவர்களுக்கு தசமபாகத்தைக் கொடுக்கும்படி 1 கொரி. 9:14 கூறவில்லை.

இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 1 கொரி. 9:14-ஐக் கூறிய பவுல், சுவிசேஷத்தை அறிவிப்பவர்களுக்கு கர்த்தர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பிழைப்பை  நடத்தவில்லை. தனது பிழைப்புக்கானதை தானே உழைத்து சம்பாதித்ததாகப் பின்வரும் வசனங்களில் அவர் கூறுகிறார்.

1 தெச. 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

2 தெச. 3:7,8 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

பவுலைப் பின்பற்றுகிற மெய்யான ஊழியர்கள், வருத்தத்துடன் வேலை செய்துதான் தங்கள் பிழைப்புக்கானதை சம்பாதிக்கவேண்டும்.

வசனம் 3:

மத்தேயு 10:42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இவ்வசனத்தையும் தசமபாகம் கொடுக்கச் சொல்கிற பின்வரும் வசனங்களையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மல்கியா 3:8-10 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

தசமபாகம் கொடாதிருப்பது தேவனை வஞ்சிப்பதற்குச் சமம் என்றும், தசமபாகம் கொடாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் மிகக்கடுமையான வார்த்தைகளை இவ்வசனங்களில் தேவன் பிரயோகித்துள்ளார். ஆனால் அவ்வித கடுமையான வார்த்தைகளை இயேசு பிரயோகிக்காமல், மிக மென்மையாக, தமது சீஷர்களுக்கு குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுப்பவர்கள், அதற்கான பலனைப் பெறுவார்கள் என்று சொல்லி, தமது சீஷர்களுக்குத் தண்ணீர் மற்றும் ஆகாரம் கொடுப்பதை ஊக்குவிக்கிறார். தமது சீஷர்களுக்கு தண்ணீர்/ஆகாரம் கொடுத்தேயாக வேண்டும் என இயேசு கட்டாயப்படுத்தவில்லை. எனவே தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பதற்கு ஆதாரமாக இவ்வசனத்தைக் கூற இயலாது.

வசனம் 4:

2 கொரிந்தியர் 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

இவ்வசனம், தேவனுக்குக் கொடுப்பதைப் பற்றியோ தசமபாகம் கொடுப்பதைப் பற்றியோ கூறவில்லை. குறைவுள்ள ஏழை பரிசுத்தவான்களுக்கு தர்மசகாயம் செய்யவேண்டியதைப் பற்றி இவ்வசனம் கூறுகிறது (வசனம் 1, 9, 12-ஐப் படித்துப் பார்க்கவும்).

எனவே தசமபாகம் கொடுத்தல் மற்றும் காணிக்கை கொடுத்தலை வலியுறுத்துவதற்கு இவ்வசனத்தைப் பயன்படுத்த இயலாது.

இவை போக வேறு எந்த வசனமும் கிறிஸ்துவின் சபையார் தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும் என வலியுறுத்தவில்லை. எனவே, கிறிஸ்துவின் சபைக்கு தசமபாகம் என்பது நிச்சயமாக கட்டாயம் அல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

 
எனவே, கிறிஸ்துவின் சபைக்கு தசமபாகம் என்பது நிச்சயமாக கட்டாயம் அல்ல.



தாங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. இதே
பதிவை நீங்கள் முன்னமே வழங்கியிருந்தால் இவ்விவாதம்  வளர்ந்திருக்கவே செய்யாது!

"தசமபாகத்தை நாமே வைத்திருந்து ஏழைகளுக்கு கொடுக்கலாம்" என்றொரு பதிவில் நீங்கள் எழுதியிருந்த ஞாபகம். அதன் அடிப்படையிலேயே தசமபாகம் கொடுப்பதை பற்றி தெளிவுபெறலாம் என்றுவந்தேன். இப்பொழுது அப்படி எதுவும் கொடுக்கவேண்டிய தேவையேஇல்லை என்று சொல்கிறீர்கள். அதற்கான சரியான விளக்கமும் கொடுத்துள்ளீர்கள் புதியஏற்பாடு காலம்  என்று சொல்லி நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று போதிப்பவர்கள் எதற்கு தசமபாகத்தை மட்டும் பிடித்துகொண்டு இருக்கிறார்கள் எனபது எனக்கும் புரியாத புதிர்தான்.  .
 
ஆகினும் இதற்க்கு முந்தய பதிவை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.    
 
நீங்கள் கர்த்தர் "லேவியனுக்குதான் தசமபாகம் கொடுக்க வேண்டும்  என்று கர்த்தர் கட்டளை இட்டார்" என்று எழுதி யிருந்தீர்கள் அதற்க்கு   நான்  "இல்லை அதற்க்கு முன்னே தேவனின் நண்பன் என்று சொல்லப்படும் ஆபிரகாம் தசமபாம் கொடுத்தான்" என்று எழுதினேன். ஆனால் நீங்கள் அவன் மூன்று மனைவிகளை வைத்திருந்தான்   அதுபோல் வைக்க முடியுமா? என்று  ஏடாகூடமான   கேள்வியை எழுப்புகிறீர்கள். 
 
அதேபோல் இயேசு எந்த பலனையும் எதிர்பாக்காமல் பூமிக்கு வந்தார் என்று எழுதினால்  அவர்  செய்ததுபோல அதிசயங்களை நீங்கள்  செய்யமுடியுமா?  என்று கேள்வியை எழுப்புகிறீர்கள்  
 
இது ஒரு சரியான பதிலா என்பதை சற்று யோசியுங்கள்  
 
நான் சங்கீதத்தில் தாவீது  இவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று சொன்னால் அவன் அடுத்தவன் மனைவியோடு சயனித்தான் அதை நாம் செய்யமுடியுமா? என்று கேட்பீர்களா?  .      
 
அல்லது இயேசு பரிசேயரிடம் விவாதிக்கும் போது  "தாவீது பசியாய்  இருந்தபோது  தேவசமூகத்து அப்பத்தை புசித்தான்" என்று ஒரு பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சியை சுட்டிகாட்டி அவரது சீஷர்கள்  ஓய்வு நாளில் கதிர்களை கொய்து தின்னதை நியாய படுத்தியபோது, ஒரு வேளை அங்கு நீங்கள் இருந்திருந்தால் அதே தாவீது செய்த மற்ற  பாவங்களை சுடிகாட்டி என்னிடம் எழுப்பியதுபோல் இயேசுவை நோக்கி  கேள்வி கேட்பீர்களா?  
 
இவ்விதத்தில் உங்கள் நிலை எனக்கு புரியவில்லை!
        
உங்கள் பார்வைக்கு நலமானபடி நீங்கள்  செய்யுங்கள்! எனது பார்வைக்கு நலமானதை நான் செய்கிறேன்! கர்த்தர் தமது
பார்வைக்கு நலமானதை செய்யட்டும்!
  


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//"தசமபாகத்தை நாமே வைத்திருந்து ஏழைகளுக்கு கொடுக்கலாம்" என்றொரு பதிவில் நீங்கள் எழுதியிருந்த ஞாபகம்.//

ஆம், இக்கருத்தை ஒரு பதிவில் நான் கூறியுள்ளேன், இப்போதும் இதே கருத்தைக் கூறுகிறேன்.

தசமபாகத்தை ஆலயத்தில் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்றுதான் பலரும் போதிக்கின்றனர், அதையே வேதவாக்காக பலரும் நம்பி செயல்படுகின்றனர். இவ்விதமாக தசமபாகம் கொடுத்தேயாக வேண்டும் என்ற மனநிலையில் பலர் இருப்பதால், அவர்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் ஒரு பதிவில் மேற்கூறியபடி எழுதியிருந்தேன்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எருசலேம் ஆலயம் மட்டுமே தேவனுடைய ஆலயமாயிருந்தது; அங்குதான் இஸ்ரவேலர் தசமபாகத்தைப் படைத்தனர். ஆனால் புதிய ஏற்பாட்டின்படி நம்முடைய சரீரமே தேவனுடைய ஆலயமாக இருப்பதால், தசமபாகத்தை நாமே வைத்துக்கொண்டு, தசமபாகக் கட்டளையின் அடிப்படை நோக்கத்தின்படி, ஆகாரம் இல்லாதவர்களுக்கு அதைக் கொடுக்கலாம் எனக் கூறியிருந்தேன்.

கட்டாயம் தசமபாகம் கொடுத்தேயாகவேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்காகத்தான் இக்கருத்தைக் கூறியிருந்தேன். ஆயினும், உங்களுக்கு உண்டானதை விற்றுப் பிச்சையிடுங்கள் எனும் இயேசுவின் கற்பனைப்படி ஒருவர் நடந்தால், அதன்மூலம் அவர் தசமபாகக் கட்டளையை தானாகவே நிறைவேற்றிவிடுவார். இதைத்தான் இத்திரியின் முதல் பதிவில் பின்வருமாறு கூறியிருந்தேன்.

//எருசலேம் தேவாலயத்திற்கு அடுத்தபடியாக, விசுவாசிகளே தேவனுடைய ஆலயமாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (1 கொரி. 3:16,17; 2 கொரி. 6:16).

தேவனுடைய ஆலயமாகிய விசுவாசிகளாகிய நம்மில் தேவன் வாசம்செய்யவேண்டுமெனில் நாம் என்ன செய்யவேண்டுமென பின்வரும் வசனத்தில் இயேசு கூறுகிறார்.

யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

இயேசுவின் வசனத்தைக் கைக்கொண்டாலே போதும், தேவனின் தசமபாகக் கட்டளையின் நோக்கம் தானாக அதில் நிறைவேறிவிடும்.
//

இயேசுவின் வசனத்தை முழுமையாகக் கைக்கொள்ள முன்வருபவர்கள், தங்கள் முழு ஆஸ்தியையும் ஏழைகளுக்குக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள் என்பதால், அவர்களைப் பொறுத்தவரை தசமபாகம் எனும் அளவைவிட அதிகமாகவே ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

ஆனால், இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதில் தீவிரமாயிராமல், தசமபாகம் கொடுப்பதில் மட்டுந்தான் இந்நாட்களில் பலரும் தீவிரமாயிருப்பதால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் சரீரத்தையே தேவனுடைய ஆலயமாகப் பாவித்து, தசமபாகத்தைத் தாங்களே வைத்துக்கொண்டு, ஆகாரமில்லாத ஏழைகளுக்கு அதைக் கொடுக்கலாம் எனக் கூறியிருந்தேன்.

sundar wrote:
//"லேவியனுக்குதான் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்" என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதற்கு நான், "இல்லை, அதற்கு முன்னே தேவனின் நண்பன் என்று சொல்லப்படும் ஆபிரகாம் தசமபாம் கொடுத்தான்" என்று எழுதினேன். ஆனால் நீங்கள் அவன் மூன்று மனைவிகளை வைத்திருந்தான், அதுபோல் வைக்க முடியுமா? என்று  ஏடாகூடமான கேள்வியை எழுப்புகிறீர்கள்.//

“லேவியனுக்குத் தசமபாகம் கொடுக்கும்படி தேவன் கட்டளையிட்டார்” என்பதுதான் வேதாகமம் கூறுவது. ஆபிரகாமிடம் தசமபாகம் கொடுக்கும்படி யாரும் கட்டளையிட்டதாக வேதாகமம் கூறவில்லை. இதை உங்களால் மறுக்கமுடியுமா?

ஆபிரகாம் மெல்கிசெதேக்குக்கு தானாக முன்வந்து ஒரு முறை தசமபாகம் கொடுத்தார், அவ்வளவே. அதை வைத்து நாமும் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறமுடியாது என்பதே என் வாதம். ஆபிரகாமின் செயல்கள் யாவும் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் நடைமுறைகள். அவற்றை வைத்து, அவரது செயல்களில் எதையும் பொதுவிதியாக்கக் கூடாது என்பதே எனது கருத்து. அப்படி தனிப்பட்ட ஆபிரகாமின் செயல்களை பொதுவிதியாக்கினால், ஒருவர் 3 மனைவிகளை திருமணம் செய்வதும் பொதுவிதியாகிவிடும் என எழுதியிருந்தேன். இப்படி நான் எழுதியதை ஏடாகூடம் என்கிறீர்கள். உண்மையில் நான் எழுதியது ஏடாகூடமல்ல; ஒருவரது செயல்களை பொதுவிதியாக்குகிற உங்கள் கருத்துதான் ஏடாகூடங்களுக்குக் காரணமாகிறது.

sundar wrote:
//நான் சங்கீதத்தில் தாவீது இவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று சொன்னால், அவன் அடுத்தவன் மனைவியோடு சயனித்தான்; அதை நாம் செய்யமுடியுமா? என்று கேட்பீர்களா?//

சங்கீதத்தில் தாவீது சொன்னதை, பரிசுத்தஆவியால் சொல்லப்பட்டதாக மத்தேயு 22:43-ல் இயேசு கூறுகிறார். எனவே சங்கீதத்தில் தாவீது சொன்னதை வேதவாக்காக நாம் ஏற்கத்தான் வேண்டும்.

அதே தாவீது அடுத்தவன் மனைவியோடு சயனித்தது பரிசுத்தஆவியின் தூண்டுதலால் அல்ல. எனவே சங்கீதத்தில் தாவீது கூறியதும், அடுத்தவன் மனைவியுடன் அவர் சயனித்ததும் ஒன்றோடொன்று ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

அடுத்தவன் மனைவியோடு தாவீது சயனித்ததை மகாபாவம் எனத் தீர்த்து, அவரைத் தேவன் கடுமையாகத் தண்டித்ததாக வேதாகமம் கூறுகிறது. ஆனால் ஆபிரகாம் 3 மனைவிகளை வைத்திருந்ததை மகாபாவம் என தேவன் கூறியதாகவோ, அதற்காக அவரைத் தண்டித்ததாகவோ வேதாகமம் கூறவில்லை.

எனவே ஆபிரகாமின் 3 மனைவிமார் காரியத்தை நான் சொன்னால், தாவீது அடுத்தவன் மனைவியுடன் சயனித்ததை நீங்கள் சொல்வதுதான் ஏடாகூடமான வாதம்.

sundar wrote:
//இயேசு பரிசேயரிடம் விவாதிக்கும்போது "தாவீது பசியாய் இருந்தபோது தேவசமூகத்து அப்பத்தை புசித்தான்" என்று ஒரு பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சியை சுட்டிகாட்டி, அவரது சீஷர்கள்  ஓய்வுநாளில் கதிர்களை கொய்து தின்னதை நியாயப்படுத்தியபோது, ஒரு வேளை அங்கு நீங்கள் இருந்திருந்தால் அதே தாவீது செய்த மற்ற பாவங்களைச் சுட்டிக்காட்டி, என்னிடம் எழுப்பியதுபோல் இயேசுவை நோக்கி கேள்வி கேட்பீர்களா?//

ஒரு செயல் பாவம் என்றாகிவிட்டபின் அதைத் தாவீது செய்வதால், அது பாவமற்றதாகிவிடுவதில்லையே. தாவீது செய்தாலும் சரி, ஆபிரகாம் செய்தாலும் சரி, பாவம் பாவமே. அதை யாரும் நியாயப்படுத்தி கேள்வி எழுப்பமுடியாது. ஆனால் ஆபிரகாமின் செயலை “பாவம்” என வேதாகமம் வரையறுக்கவில்லை. ஆயினும் அவரது செயல் யாவரும் பின்பற்றக்கூடிய ஒரு நல் முன்மாதிரி அல்ல என்பதை நம்மால் புரியமுடிகிறது. எனவே தாவீதின் பாவங்களையும் ஆபிரகாமின் செயலையும் ஒப்பிடாதீர்கள்.

இஸ்ரவேலர் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற ராஜாவாக தாவீது விளங்கினார். அந்த தாவீது தேவசமூகத்து அப்பங்களை சாப்பிட்டதைக் குற்றமாகக் கருதாத பரிசேயர்கள், இயேசுவின் சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து சாப்பிட்ட உப்புச்சப்பில்லாத ஒரு செயலைக் குற்றமாக்கி கேள்வி கேட்டதால், தாவீதின் செயலை இயேசு மேற்கோளிட்டார். மற்றபடி, எல்லோரும் தாவீதைப் பின்பற்றி, தேவசமூகத்து அப்பங்களைச் சாப்பிட்டேயாக வேண்டும் எனும் கற்பனையை இயேசு உருவாக்கவில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

ஆபிரகாம் மெல்கிசெதேக்குக்கு தானாக முன்வந்து ஒரு முறை தசமபாகம் கொடுத்தார், அவ்வளவே. அதை வைத்து நாமும் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறமுடியாது என்பதே என் வாதம். 


சகோதரர் அவர்களே நான் இந்த விவாதம் குறித்து ஒரு முடிவுக்கு வர எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு தங்களின் சரியான பதில் வேண்டும்.

தசமபாகத்தை பற்றி யாருமே அறியாத வேளையில் ஆபிரஹாம்  தானாக முன்வந்து ஒருமுறை மேல்கிசெதேக்குக்கு என்ற தேவ ஊழியனுக்கு
தசமபாகம் கொடுத்ததை சரியான திட்டம் என்று ஏற்றுக்கொண்டு  பின்னாளில் கர்த்தர் அதை இஸ்ரவேலுக்கு நியாயபிரமாணத்தில் கட்டளையாக்கினாரா?  
 
அல்லது
 
கர்த்தரின் ஊழியர்களுக்கு மற்றவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்ற கர்த்தரின் இருதய நிலையை தேவனின் சிநேகிதனான ஆபிரகாம் முன் கூட்டியே அறிந்தததனால் மேல்கிசெதேக்குக்கு தசமபாகம் கொடுத்தானா?
 
இந்த கேள்விக்கு சில வரிகளில் பதில் தாருங்கள் போதும்!


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//சகோதரர் அவர்களே நான் இந்த விவாதம் குறித்து ஒரு முடிவுக்கு வர எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு தங்களின் சரியான பதில் வேண்டும்.//

சரி சகோதரரே!

//தசமபாகத்தை பற்றி யாருமே அறியாத வேளையில் ஆபிரஹாம்  தானாக முன்வந்து ஒருமுறை மெல்கிசெதேக்கு என்ற தேவஊழியனுக்கு
தசமபாகம் கொடுத்ததை சரியான திட்டம் என்று ஏற்றுக்கொண்டு  பின்னாளில் கர்த்தர் அதை இஸ்ரவேலுக்கு நியாயபிரமாணத்தில் கட்டளையாக்கினாரா?//


இக்கேள்விக்கு “இல்லை” என்ற பதிலை நிச்சயமாகக் கூறமுடியும். இதற்கு 2 காரணங்கள் உள்ளன.

1. மனிதனின் ஒரு செயலை சரியான திட்டமாக ஏற்று அதை கட்டளையாக தேவன் ஆக்கினாரெனில் அது தேவனின் ஒப்பில்லா ஞானத்தை மட்டுப்படுத்துவதாகிவிடும்.

2. தசமபாகக் கட்டளையை தேவன் கொடுத்ததற்கான காரணத்தை, அவரது கட்டளையிலேயே தெளிவாகக் கூறிவிட்டார்.

இஸ்ரவேலின் 12 கோத்திரத்தில் ஒரு கோத்திரத்தை தமக்கு சேவை செய்வதற்கென்றே exclusive-ஆக தேவன் தெரிந்துகொண்டார். அவர்கள் தமது ஆலயப்பணியை மட்டுமே செய்யவேண்டும்; தங்கள் ஜீவனத்துக்கான வேலைகளைக்கூடச் செய்யக்கூடாது என்பது தேவனின் நியமனமாக இருந்தது. எனவேதான் அவர்களுக்கு நிலபுலம் எதையும் கொடுக்கவேண்டாம் எனக் கூறிவிட்டார். நிலபுலம் இல்லாத அவர்களுக்கு ஜீவனத்திற்கானது வேண்டுமே! எனவேதான் மற்ற 11 கோத்திரத்தாரும் தங்கள் விளைச்சல் மூலம் அவர்களின் ஜீவனத்துக்கானவைகளைக் கொடுக்க வேண்டும் எனத் தேவன் கட்டளையிட்டார்.

அதிலும் ஒரு எல்லை இருக்கவேண்டுமல்லவா? எனவேதான் தசமபாகம் எனும் எல்லையளவை தேவன் நியமித்தார். இந்த அளவுகூட லேவியருக்கு அதிகம்தான். எப்படியெனில் தசமபாகம் பெறுகிற லேவியர் 11/10 பாகம் பெறுவார்கள், தசமபாகம் கொடுக்கிற மற்றவர்களுக்கோ 9/10 பாகம் மட்டுமே இருக்கும். இந்த வித்தியாசத்தைக்கூட தேவனின் தசமபாகக் கட்டளையின் மற்றொரு பகுதி சரி செய்துவிடுகிறது. எப்படியெனில் 3 வருடத்திற்கு ஒருமுறை, தசமபாகத்தை ஆலயத்தில் படைக்காமல், தங்கள் வீட்டின் முன்புறம் வைக்கவேண்டும் என தேவன் கட்டளையிட்டுள்ளார் (உபாகமம் 14:28). அந்த பாகம் வீட்டின் அருகிலுள்ள லேவியனுக்கு மட்டுமின்றி, ஆகாரத்திற்கு வழியில்லாத பரதேசி, திக்கற்றவன், விதவை எல்லோருக்குமானதாகும்.

இவ்விதிப்படி, ஒவ்வொரு 3 வருடங்களிலும் லேவியருக்குக் கிடைக்கும் பங்கு (2X(11/10)=) 22/10 ஆகும். ஆனால் பிற கோத்திரத்தாருக்குக் கிடைக்கும் பங்கு (3X(9/10)=) 27/10 ஆகும். ஆக, லேவியரைவிட பிற கோத்திரத்தாருக்கு ஒவ்வொரு 3 வருடத்திலும் (27/10 - 22/10=) 5/10 பங்கு அதாவது 1/2 பங்கு கூடுதலாக இருக்கும். அதாவது ஒரு வருடத்திற்கு (1/2/3=) 1/6 பங்கு கூடுதலாக இருக்கும். இந்த 1/6 பங்கை அவர்களின் மிருகஜீவன்களுக்காக தேவன் நியமித்திருக்கக்கூடும் என நான் கருதுகிறேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், தேவனின் தசமபாக நியமனத்தின் நோக்கம் என்பது முழுக்க முழுக்க ஆகாரமுள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே ஒரு சமநிலையை உண்டாக்கி அனைவரும் போஷிக்கப்படவேண்டும் என்பது மட்டுமேயன்றி வேறெதுவுமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

இப்போது சொல்லுங்கள், ஆபிரகாம் கொடுத்த தசமபாகத்திற்கும் தேவன் நியமித்த தசமபாகத்திற்கும் சற்றேனும் சம்பந்தமுள்ளதா என்று.

ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தது,
சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்குக்குத்தானேயொழிய, ஆகாரத்திற்கு வழியில்லாத மெல்கிசேதேக்குக்கு அல்ல. ஆபிரகாமின் தசமபாகத்தால்தான் ராஜாவாகிய மெல்கிசேதேக்கின் ஜீவனம் நடக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. ஆபிரகாம் தசமபாகம் கொடுப்பதற்கு முன்னும் சரி, பின்னும் சரி மெல்கிசேதேக்கின் ஜீவனத்திற்கு எந்தப்பிரச்சனையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் ஆசாரியனாக மட்டுமல்ல, சாலெமின் ராஜாவாகவும் இருந்தார்.

ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு ஒரேயொரு முறைதான் தசமபாகம் கொடுத்தார். ஆனால் தேவன் நியமித்த தசமபாகம் ஒரே தடவையில் நிறைவடைவதில்லை.

யுத்தத்தில் வென்று கொள்ளைப்பொருளுடன் ஆபிரகாம் வருகையில், மெல்கிசேதேக்கு அவரைச் சந்தித்தார், ஆசீர்வதித்தார். உடனே பதிலுக்கு தானும் ஏதேனும் கொடுக்கவேண்டுமென ஆபிரகாம் நினைத்திருப்பார். அப்போது அவர் கைவசம் இருந்தது கொள்ளைப்பொருள்தான். எனவே அதில் ஒரு பகுதியை கொடுக்க நினைத்து, தசமபாகம் எனும் அளவை அவராக நியமித்துக் கொண்டார். பின்னாளில் தேவன் தசமபாகக் கட்டளையை நியமிப்பார் என்றெல்லாம் ஆபிரகாம நினைத்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

//அல்லது

கர்த்தரின் ஊழியர்களுக்கு மற்றவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்ற கர்த்தரின் இருதய நிலையை தேவனின் சிநேகிதனான ஆபிரகாம் முன் கூட்டியே அறிந்தததனால் மெல்கிசெதேக்குக்கு தசமபாகம் கொடுத்தானா?//


இதற்கும் “இல்லை” என்ற பதிலைத்தான் சொல்லவேண்டும். மேலே நான் கூறியுள்ள 2-வது காரணத்திலேயே இதற்கான விளக்கம் உள்ளது. ஆபிரகாம் கொடுத்த தசமபாகத்திற்கும் தேவன் நியமித்த தசமபாகத்திற்கும் ஒரேயொரு ஒற்றுமை, “தசமபாகம்” எனும் வார்த்தை மட்டுமே. மற்றபடி, தசமபாகம் கொடுத்தவர், வாங்கியவர், தசமபாகமாகக் கொடுக்கப்பட்ட பொருள், தசமபாகம் கொடுக்கப்பட்ட காலம் இவையனைத்திலுமே ஒற்றுமையில்லை.

மெல்கிசேதேக்கு என்பவர் ஆசாரியன் எனப்பட்டாலும் அவர் சாலேமின் ராஜாவாகவும் இருந்தார். எனவே பின்னாளில் வரப்போகிற ராஜாவும் உத்தம பிரதான ஆசாராயிரருமான கிறிஸ்துவுக்கே அவர் முன்னடையாளமாக இருந்தாரேயொழிய,
இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கு அவர் முன்னடையாளமாயிருக்கவில்லை. இதை நன்கு புரிந்துகொள்ள எபிரெயர் 7:1-20-ஐ நிதானமாகப் படித்துப் பாருங்கள். தசமபாகம் வாங்க கட்டளை பெற்ற இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கும் மெல்கிசேதேக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஆபிரகாமைப் பொறுத்தவரை, மெல்கிசேதேக்கு என்பவர் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருக்கிறார் என்ற அடிப்படையில்தான் அவர்மீதுள்ள மரியாதையினிமித்தம் தசமபாகம் கொடுத்திருப்பார் என நான் கருதுகிறேன்.

சில வரிகளில் பதில் தாருங்கள் எனக் கேட்டிருந்தீர்கள். ஆனால் பல வரிகள் எழுதவேண்டியதாயிற்று, மன்னிக்கவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

ஆபிரகாம் கொடுத்த தசமபாகத்திற்கும் தேவன் நியமித்த தசமபாகத்திற்கும் ஒரேயொரு ஒற்றுமை, “தசமபாகம்” எனும் வார்த்தை மட்டுமே. மற்றபடி, தசமபாகம் கொடுத்தவர், வாங்கியவர், தசமபாகமாகக் கொடுக்கப்பட்ட பொருள், தசமபாகம் கொடுக்கப்பட்ட காலம் இவையனைத்திலுமே ஒற்றுமையில்லை.


சகோதரர் அவர்களே!

 
உங்கள் கண்ணுக்கு ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளதுபோல் தெரிகிறது ஆனால் எனது கண்ணுக்கு மேலும் சில ஒன்றுமைகள் இருப்பது தெரிகிறது அவைகள்!
 
தசமபாகம் கொடுத்த  ஆபிரகாம் தேவனால் தெரிந்துகோள்ளபட்டவன்  அதுபோல் இஸ்ரவேலரும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியினர்.
  
தசமபாகம் பெற்ற மெல்கிசேதேக்கு தேவனின் ஆசாரியன் அல்லது ஊழியனாக இருந்தால் அதுபோல் தேவன் கட்டளையிட்ட தசமபாகத்தை பெற்ற லேவியரும் தேவனுக்கு ஆசாரியன் அல்லது ஊழியனாக இருந்தான்
 
மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்த  ஆபிரகாமை ஆசீர்வதித்தான் அதுபோல் தசமபாகம் பெரும் லேவியரும் கொடுக்கும் ஜனங்களை ஆசீர்வதிக்கின்ற்றனர்.
 
தசமபாகத்தை ஆபிரகாம் செலுத்தியது எதோ தன்னிச்சயான செயல் அல்ல!தேவனால் தெரிந்துகோள்ளபட்ட்வர்கள் தேவழியங்களுக்காக 
தசமபாகத்தை கொடுக்க வேண்டும் என்பதும் அந்த ஊழியர்கள் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதும் தேவனின் திட்டமாக இருந்திருக்கிறது. தேவனின் இருதய நிலையை முன்கூட்டியே  அறிந்து ஆபிரஹாம் அவ்வாறு தசமபாகம் கொடுத்துள்ளான் என்பதே எனது கருத்து!

  


__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:

//உங்கள் கண்ணுக்கு ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளதுபோல் தெரிகிறது ஆனால் எனது கண்ணுக்கு மேலும் சில ஒன்றுமைகள் இருப்பது தெரிகிறது அவைகள்!

தசமபாகம் கொடுத்த  ஆபிரகாம் தேவனால் தெரிந்துகோள்ளபட்டவன்  அதுபோல் இஸ்ரவேலரும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியினர்.//


இதையெல்லாம் குறிப்பிடத்தக்க ஒரு ஒற்றுமையாக நான் கருதவில்லை. ஆபிரகாமின் விஷயத்தில் தசமபாகம் கொடுத்த ஆபிரகாம் மட்டுமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன். ஆனால் இஸ்ரவேலர் விஷயத்தில் தசமபாகம் கொடுத்தவர், வாங்கியவர் எனும் இரு பிரிவினரும் அடங்கிய இஸ்ரவேலர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தனர்.

இரு பிரிவினரும் சமநிலையில் சகோதரர்களாகவும் இருந்தனர். ஆனால் ஆபிரகாமும் மெல்கிசெதேக்கும் சமநிலையிலும் இல்லை, சகோதரராகவும் இல்லை.

//தசமபாகம் பெற்ற மெல்கிசேதேக்கு தேவனின் ஆசாரியன் அல்லது ஊழியனாக இருந்தான்; அதுபோல் தேவன் கட்டளையிட்ட தசமபாகத்தை பெற்ற லேவியரும் தேவனுக்கு ஆசாரியன் அல்லது ஊழியனாக இருந்தான்//

மெல்கிசெதேக்கு ஆசாரியனாக மட்டுமின்றி ராஜாவாகவும் இருந்தார்; ஆனால் லேவியரோ வெறுமனே ஆசாரியராக மட்டுமே இருந்தனர். ராஜாவாகிய மெல்கிசெதேக்கு சாலேம் தேசம் முழுவதும் சொந்தமானது; ஆனால் லேவியரோ தேசத்தில் எந்த சுதந்தபாகமும் இல்லாதிருந்தனர். இது எத்தனை பெரிய வித்தியாசம்? இதை ஏன் உணர மறுக்கிறீர்கள் என்பது புரியவில்லை.

anbu57 wrote:

//மெல்கிசேதேக்கு என்பவர் ஆசாரியன் எனப்பட்டாலும் அவர் சாலேமின் ராஜாவாகவும் இருந்தார். எனவே பின்னாளில் வரப்போகிற ராஜாவும் உத்தம பிரதான ஆசாராயிரருமான கிறிஸ்துவுக்கே அவர் முன்னடையாளமாக இருந்தாரேயொழிய, இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கு அவர் முன்னடையாளமாயிருக்கவில்லை. இதை நன்கு புரிந்துகொள்ள எபிரெயர் 7:1-20-ஐ நிதானமாகப் படித்துப் பாருங்கள். தசமபாகம் வாங்க கட்டளை பெற்ற இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கும் மெல்கிசேதேக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.//

எபிரெயர் 7-ஐ நிதானமாகப் படித்துப்பார்க்கும்படி கூறியிருந்தேன். அதை நீங்கள் படித்தீர்களா என்பது தெரியவில்லை. படித்திருந்தால், அது சம்பந்தமாக நீங்கள் எதுவும் சொல்லவில்லையே, ஏன்?

//மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்த ஆபிரகாமை ஆசீர்வதித்தான்; அதுபோல் தசமபாகம் பெரும் லேவியரும் கொடுக்கும் ஜனங்களை ஆசீர்வதிக்கின்ற்றனர்.//

மெல்கிசெதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்த
பின்னர்தான் ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததாக வசனம் சொல்கிறது (ஆதி. 14:19,20). ஆயினும் ஆபிரகாம் தசமபாகம் கொடுப்பார் என எதிர்பார்த்து மெல்கிசெதேக்கு அவரை ஆசீர்வாதிக்கவுமில்லை; மெல்கிசெதேக்கு தன்னை ஆசீர்வதித்தார் என்பதற்கு பிரதியுபகாரமாக ஆபிரகாம் அவருக்குத் தசமபாகம் கொடுக்கவுமில்லை.

தசமபாகம் பெற்ற லேவியர்கள், தசமபாகம் கொடுத்த ஜனங்களை எப்போது ஆசீர்வதித்தனர் என்பதை வசனமேற்கோளுடன் கூறும்படி வேண்டுகிறேன்.

ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததை முன்னுதாரணமாக்கி தற்போதய ஊழியர்களுக்குத் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறுகிற நீங்கள், ஆதித் திருசபையார் தங்கள் உடைமைகள் முழுவதையும் அப்போஸ்தலர் பாதபடியில் வைத்ததையும் அவற்றை அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டதையும் முன்னுதாராணமாகக் கொள்ள மறுப்பது ஏனோ? இதற்கான பதிலை நீங்கள் கண்டிப்பாகத் தரவேண்டும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

என்கிறார் பவுல்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரின் சீஷராக மாறுபவர்கள், பழைய காரியங்களிலிருந்து விடுதலைபெற்றவர்களாக இருக்கிறார்கள், எல்லாம் புதிதாயின!! பழைய கட்டளைகள், பழைய பலிகள், பழைய சடங்குகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை!! கிறிஸ்தவ போதகர்கள், ஆதாயம் தராத மற்ற பழைய காரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாலும் ஆதாயம் தரும் 'தசமபாக' கட்டளையிலிருந்து பிரிந்து வர முடியவில்லை!!

தங்களிடம் உள்ள அனைத்தையுமே அப்போஸ்தலர்களின் பாதங்களில் கொண்டு வந்தார்கள் என்று இருப்பதை இவர்கள் யாரும் போதிக்க மாட்டார்கள்!! ஏனென்றால் இதை போதித்தால் யாரும் சபைக்கு வர மாட்டார்கள்!! பத்தில் ஒரு பங்கு, கொடுப்பதற்கும் கேட்டு பெற்றுக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கிறது. உங்களிடத்தில் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டுவந்து ஆண்டவரின் (ஊழியரின்) பாதங்களில் கொட்டுங்கள் என்று சொன்னால் யார் தான் சபைகளில் இருப்பார்கள்!! ம‌ன‌சாட்சி உள்ள‌ ஒரு ஊழிய‌னாவ‌து இந்த‌ க‌ருத்தை ம‌றுக்க‌ட்டுமே!!

மேலும்,

மாற்கு 2:22 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

லூக்கா 5:37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்

புது சிருஷ்டியாக‌ மாறிய‌வ‌ர்க‌ள் இன்னும் ஏன் ப‌ழைய‌ துருத்திக‌ளுக்குள் இருக்க‌ விரும்புகிறார்க‌ள் என்ப‌து புரிய‌வில்லை!! ஒன்று இவ‌ர்க‌ள் மாற‌வில்லை, அல்ல‌து இவ‌ர்க‌ளின் போத‌னை த‌வ‌று!! "த‌ச‌ம‌பாக‌ம் க‌ட்ட‌ளை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு அல்லாத‌ க‌ட்ட‌ளை, போதிக்க‌ப்ப‌ட‌ அவசிய‌ம் இல்லாத‌ க‌ட்ட‌ளை, ஒய்ந்து போன‌ க‌ட்ட‌ளை"



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததை முன்னுதாரணமாக்கி தற்போதய ஊழியர்களுக்குத் தசமபாகம் கொடுக்கவேண்டும் எனக் கூறுகிற நீங்கள்,ஆதித் திருசபையார் தங்கள் உடைமைகள் முழுவதையும் அப்போஸ்தலர் பாதபடியில் வைத்ததையும் அவற்றை அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டதையும் முன்னுதாராணமாகக் கொள்ள மறுப்பது ஏனோ? இதற்கான பதிலை நீங்கள் கண்டிப்பாகத் தரவேண்டும்.



  
சகோதரரே  ஆபிரகாம்  கொடுத்தான்என்பதற்காக தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. தேவனின் இருதயத்தில் "தேவ ஊழியர்களுக்கு தசமபாகம் கொடுக்கபட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அறிந்த ஆபிரஹாம் அங்கு தானாக முன்வந்து தசமபாகம் கொடுத்தான். அதன் பின்னர் கர்த்தரால் அது நியாயபிரமாண  கட்டளையாக 
கொடுக்கப்பட்டது. பின்னர் அது ஆண்டவராகிய இயேசுவால் "இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டு விடாதிருக்கவேண்டுமே" என்று உறுதி செய்யபட்டிருக்கிறது.
 
நீங்கள் தசமபாகத்தை தவிர்ப்பதற்கு  வேவ்வேறு காரணங்களை சொன்னாலும். என்னை பொறுத்தவரை கர்த்தர் இட்ட தனது கட்டளையை மாற்றி  இயேசுவோ அல்லது
அப்போஸ்தலரோ கூட  "தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று எங்கும் நேரடியாக சொல்ல வில்லை எனவே நாமாக ஒரு முடிவுக்கு வந்து அதை மாற்றகூடாது என்று கருதி  நான் கட்டளைப்படி கொடுக்க விரும்புகிறேன். மற்றவர்கள் எதன் அடிப்படையில்
கொடுக்கிறார்களோ வாங்குகிறார்களோ  எனக்கு தெரியாது!   
      
ஆதி திருச்சபையார்  உடமைகளை எல்லாம் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தது  உண்மை ஆனால் அந்த செயல் பின்னால் எங்கும் அப்போஸ்த்தலர்களால்  கட்டளை ஆக்கப்படவில்லை  அவரவர் விருப்பத்தின் பெயரிலேயே அது செய்யப்பட்டது அங்கு எந்த கட்டாயமும் இல்லை. மேலும் ஆதி அப்போஸ்தலர்கள் அல்லது அவர்களுக்கு சிறிதேனும்
ஒப்பானவர்கள் கூட இப்பொழுது கிடையாது! எனவே இப்பொழுது ஆதி சபையில் நடந்ததுபோல்  எல்லாவற்றையும் விற்று கொண்டு ஒரு பெரிய ஊழியரின்  பாதத்தில் வைத்தால் அவர் அதை எல்லான் தனது பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டாக பங்குபோட்டு கொடுத்துவிடுவார்.


__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard