விசுவாசிகளாகிய நாம், மெய்யான ஊழியர்களை அடையாளங்காண்பதில் அதிக சிரத்தை எடுக்காமல் ஏனோதானோ என்று இருக்கிறோம். இதுதான் பொய்யான ஊழியர்கள் பெருகுவதற்கு முக்கிய காரணம்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என மத்தேயு 7:16-ல் இயேசு சொன்னார். ‘இயேசு இப்படிச் சொல்லியுள்ளாரே, அவர் சொல்கிறபடி அவர்களின் கனிகளால் அவர்களை அறிவோமே’ என்றெல்லாம் நாம் நினைப்பதில்லை.
இத்திரியில் மெய்யான ஊழியர்களை எவ்வாறு அடையாளங்காண்பது என்பதற்கான சில குறிப்புகளைப் பார்ப்போம்.
ஊழியத்திற்காக விசுவாசிகளிடம் காணிக்கை கேட்பது சரிதானா, இதை வேதாகமம் ஆதரிக்கிறதா அல்லது ஊக்குவிக்கிறதா, வேதாகம ஊழியர்கள் காணிக்கை கேட்டார்களா என்றெல்லாம் நாம் கொஞ்சமும் சிந்திப்பதில்லை.
ஊழியர்கள் என்றால் நாம் புதிய ஏற்பாட்டு ஊழியர்களை மட்டும் எடுத்தாலே போதும். (பழைய ஏற்பாட்டு ஊழியர்களும் விசுவாசிகளிடம் காணிக்கை கேட்கவில்லை என்பதோடு, தானாக முன்வந்து கொடுக்கப்பட்ட காணிக்கையைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கவே செய்தனர் - 2 ராஜாக்கள் 5:16)
புதிய ஏற்பாட்டு ஊழியர்களில் முதலாவதாக நிற்பவர், இயேசு கிறிஸ்து.
இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை பலரும் தங்கள் கணிக்கையால் ஆதரித்தது மெய்தான் (லூக்கா 8:3). ஆனால் இயேசு அவராக யாரிடமும் காணிக்கை கேட்கவில்லை.
சில வீடுகளுக்குச் சென்று இயேசு போஜனம் பண்ணியதாக சில வசனங்கள் கூறுகின்றன (மத்தேயு 26:6,7; மாற்கு 2:15; லூக்கா 7:36; 11:37; 14:1; யோவான் 2:2)
தமது சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பிய இயேசு, பின்வருமாறு கூறினார்.
மத்தேயு 10:11 வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
இயேசு இவ்வாறு சொன்னதன் அடிப்படையில்தான் பவுல் பின்வருமாறு கூறினார்.
ஆம், வேலையாள் தன் ஆகாரத்திற்கு பாத்திரனாயிருக்கிறான் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. எனவே பாத்திரமான யாதொருவரிடமும் போஜனம்பண்ணும் உரிமையை ஊழியர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேலாக காணிக்கை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை கொடுக்கப்படவில்லை. இயேசுவோ அப்போஸ்தலரோ காணிக்கை கேட்கவுமில்லை.
எனவே ஊழியத்திற்கு காணிக்கை கேளாதிருத்தல் என்பது மெய்யான ஊழியர்களின் ஒரு முக்கியமான அடையாளமாகும்.
கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியஞ்செய்பவனே தேவஊழியன். ஒரு மனிதன் யாருக்கு ஊழியஞ்செய்கிறானோ அவனைப் பிரியப்படுத்துவதுதான் நியாயம். எனவே தேவனுக்கு ஊழியஞ்செய்பவன் தேவனைத்தான் பிரியப்படுத்த வேண்டுமேயொழிய, வேறு எவரையும் பிரியப்படுத்தக் கூடாது.
ஒருவன் தேவனுக்கு ஊழியஞ்செய்வதாகச் சொல்லிக் கொண்டு, சாத்தானைப் பிரியப்படுத்திக்கொண்டிருந்தால் அவன் சாத்தானுக்கு ஊழியஞ்செய்பவனாகிவிடுவான்; அல்லது மனுஷரைப் பிரியப்படுத்திக்கொண்டிருந்தால் மனுஷருக்கு ஊழியஞ்செய்பவனாகிவிடுவான்.
பவுலின் பின்வரும் வசனத்தைப் படிப்போம்.
கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
மெய்யான தேவஊழியனின் ஒவ்வொரு போதனையும் தேவனை/கிறிஸ்துவை மட்டுமே பிரியப்படுத்துவதாக இருக்கவேண்டும்.
இந்நாட்களில் பல தேவஊழியர்கள், குழந்தைகள் ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசீர்வாத திட்டம், வியாபார ஆசீர்வாத திட்டம், வியாபார ஆசீர்வாத உபவாசக் கூட்டம் என்பது போன்ற பெயர்களில் திட்டங்களையும் கூட்டங்களையும் நடத்துகின்றனர். பின்வரும் தொடுப்புகளுக்குச் சென்றுபார்த்தால் அவற்றைக் குறித்த முழுவிபரங்களையும் காணலாம்.
இயேசு விடுவிக்கிறார் இணைய தளத்தின் ஒரு தொடுப்பில்,
உங்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறோம் Partners care 24 hours care
எனும் கவர்ச்சியான தலைப்பில் தங்கள் பங்காளர்களுக்கு தாங்கள் 24 மணி நேரமும் சேவை செய்யக் காத்திருப்பதை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
தேவனுக்கு சேவை செய்கிற தேவஊழியர் என தன்னைச் சொல்லிக் கொள்ளும் மோகன் சி.லாசரஸ், மனுஷருக்கு சேவை செய்ய, அதுவும் 24 மணி நேரமும் சேவை செய்யக் காத்திருப்பதாக மிகவும் துணிகரமாக தேவனுக்கெதிரான ஓர் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட விளம்பரங்கள் மனுஷரையே பிரியப்படுத்தும் என்பது கண்கூடு.
மனுஷருக்குத் தேவையான உதவிகளை, வேதாகமம் போதிக்கிற விதத்தில் செய்வது அவசியம்தான். ஆனால் வேதாகம போதனைக்கு அப்பாற்பட்டு, மனிதருக்கு சேவை செய்பவர்கள் மனுஷரின் ஊழியர்களேயன்றி, தேவனின் ஊழியர்கள் அல்ல.
மனுஷரைப் பிரியப்படுத்தாமல் தேவனை மட்டுமே பிரியப்படுத்துபவன்தான் மெய்யாகவே தேவஊழியன்.
தன்னைத் தேவஊழியன் எனச் சொல்பவரின் போதனைகள் யாவும் தேவனைப் பிரியப்படுத்துவதாக இருக்கின்றனவா என்பதை வேதவசனங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்து பார்த்தால் அவர் மனுஷரின் ஊழியனா, அல்லது தேவனின் ஊழியனா என்பதை நிச்சயமாக நாம் அறியமுடியும். அவ்விதமாக ஆய்வு செய்து அறிந்தபின்னரே, ஒருவரை தேவஊழியனாக நாம் ஏற்கவேண்டும்.
// தேவனுக்கு சேவை செய்கிற தேவஊழியர் என தன்னைச் சொல்லிக் கொள்ளும் மோகன் சி.லாசரஸ், மனுஷருக்கு சேவை செய்ய, அதுவும் 24 மணி நேரமும் சேவை செய்யக் காத்திருப்பதாக மிகவும் துணிகரமாக தேவனுக்கெதிரான ஓர் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட விளம்பரங்கள் மனுஷரையே பிரியப்படுத்தும் என்பது கண்கூடு. //
ஐயா, "மக்கள் சேவையே, மகேசன் சேவை " என்பார்களே அந்த வட்டத்திலும் இது ஏற்கப்படாதா என்பதை அறிய விரும்புகிறேன்.
மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் கூற்று மனிதர்களின் கூற்றாகும்.
வேதாகமமும் மனிதர்களுக்கென சில சேவைகளைச் செய்யும்படி கூறியுள்ளதுதான். ஆனால் அது மோகன் சி.லாசரஸ் செய்கிறதான சேவையைப் போன்றதல்ல.
மத்தேயு 25:34-36 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள செயல்களைப் போன்ற சேவைகளைத்தான் மனிதர்களுக்குச் செய்யும்படி வேதாகமம் போதித்துள்ளது. இம்மாதிரி சேவைகளைச் செய்வதுதான், இயேசுவுக்குச் சேவை செய்வதற்குச் சமமாகும். இதன் அடிப்படையில்தான் மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் கூற்று சொல்லப்பட்டிருக்கக்கூடும்.
மோகன் சி.லாசரஸ் அறிவித்துள்ள பங்காளர் திட்டத்தைப் போன்ற திட்டங்களைப் போட்டு, அதில் சேருகிறவர்களின் உலக ஆசீர்வாதங்களுக்காக 24 மணி நேரமும் சேவை செய்ய வேண்டுமென வேதாகமம் போதிக்கவில்லை. இம்மாதிரி சேவைகளுக்கு நிகரான அல்லது இணையான போதனைகள் வேதாகமத்தில் கூறப்படவில்லை.
மெய்யான தேவஊழியனின் பிரதான சேவை: வேதாகமம் சொல்கிற போதனைகளை எடுத்துரைப்பதுதான். ஆனால் மோகன் சி.லாசரஸோ வேதாகமம் சொல்லாத சேவைகளில் 24 மணி நேரத்தையும் செலவிடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனவேதான் அவரது செயலை தேவனுக்கெதிரான துணிகர செயல் என நான் கூறியிருந்தேன்.
ஏமாறுபவர்களும், தேவனை காட்டிலும் மனுஷர்களை (அதான், ஊழியர்கள் என்று தங்களை விளம்பரப் படுத்திக்கொள்வோரை) நம்புவோர் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள்! இது போன்ற பங்காளர் திட்டங்கள், 24 மணி நேர ஜெப கோபுரங்களும், திறப்பின் வாசல்களும், பெருகிக்கொண்டு தான் இருக்கும்!! வேத வார்த்தைகளை விட்டு விட்டு, வேதத்தை கைகளில் தாங்குவோரை மாத்திரம் நம்பிக்கொண்டு இருந்தால் இது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
முழுநேர ஊழியம் என்றால் என்ன, ஐயா? அரசாங்கத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சை அமைப்புகளும் காவல்துறையும் எந்நேரமும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் தானே?
பரலோக அரசுக்குக்காக மக்களிடையே பணியாற்றும் ஊழியர்களும் அதுபோலவே ஆயத்தமாக இருப்பதில் என்ன தவறு என்பது புரியவில்லையே?
உதாரணமாக தற்கொலை எண்ணங்களும் சில கொலைவெறி சண்டைகளும் நள்ளிரவிலேயே தோன்றுகிறது அல்லவா, அந்நேரத்தில் மன அமைதி பெற யாரை உடனே அணுகமுடியும்?
தேவனைக் காட்டிலும் மனுஷர்களை நம்புவதோடு மட்டுமல்ல, அவர்களை கண்மூடித்தனமாகவும் நம்புகின்றனர்.
வேதாகமம் சொல்வதற்கு மாறாகச் சொன்னால்கூட அவர்கள் சொல்வதுதான் வேதம் என நம்புகின்றனர்.
உதாரணமாக: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள், இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள் என்றெல்லாம் லூக்கா 6:20,21-ல் இயேசு கூறியிருக்க, இன்றைய ஊழியர்கள் ஐசுவரியவான்களையும் திருப்தியாயிருப்பவர்களையும் உலகவசதிகளால் சந்தோஷமாயிருப்பவர்களையும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி இயேசுவின் கூற்றை பொய்யாக்கி வருகின்றனர்.
இவர்களை நம்புகிற ஜனங்களும்: தேவன் என்னை ஆசீர்வதித்ததால் எனக்கு வீடு கிடைத்தது, அயல்நாட்டில் வேலை கிடைத்தது, வியாபாரம் பெருகியது என்று சாட்சி சொல்லி, இயேசுவின் கூற்றைப் பொய்யாக்குகின்றனர்.
எது மெய்யான ஆசீர்வாதம், எது வேதாகமம் கூறுகிற மெய்யான பாக்கியம் என்பதை ஜனங்கள் அறியவிடாதபடி, அவர்களின் கண்களை இன்றைய ஊழியர்கள் குருடாக்கி வைத்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
உதாரணமாக தற்கொலை எண்ணங்களும் சில கொலைவெறி சண்டைகளும் நள்ளிரவிலேயே தோன்றுகிறது அல்லவா, அந்நேரத்தில் மன அமைதி பெற யாரை உடனே அணுகமுடியும்?
வியாதி உள்ளவன் நிச்சயமாகவே மருத்துவனை தேட வேண்டும்!! தற்கொலை என்னம் உள்ளவன் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடினாலே போதும். அதிலிருந்து மீண்ட பிறகு வேத வசனங்களை சார்ந்து இருப்பது நலம். மனவியாதி உள்ளவர் தொலைப்பேசி எடுத்து 24 மணி நேர ஜெப ஊழியர்கள் என்று ஜெப கோபுரத்தில் உட்கார்ந்து இருப்பவரை நம்புவதை காட்டிலும் அந்த நேரத்தில் ஒரு மனநல மருத்துவரை நாடுவதே சிறந்ததாக இருக்கும். தேவன் தானே மருத்துவர்களையும் அனுமதித்திருக்கிறார்!!
பிரபலமான ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்கு (அவர்களை மிகவும் நம்பிக்கொண்டு இருந்த காலத்தில்) நான் கடிதம் எழுதி, இப்படி நான் கோழிப்பன்னை வைக்க வேண்டும் என்று இருக்கிறேன், அதற்கு தேவனிடம் கேட்டு எனக்கு சொல்லுங்களே என்று!? அந்த பிரபலமான (இப்பொழுது அவர் உயிருடன் இல்லை) ஊழியர் எனக்கு எழுதிய கடிதம், அன்புள்ள சகோதரரே, தாங்கள் எவ்வுளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள், தங்கள் இடத்தில் உள்ள சீதோஷன நிலை எப்படி, தண்ணீர் எப்படி" என்று என்னிடமே கேட்கிறார்!! ஒரு வேலை ஒரு பிஸ்னஸ் கன்ஸல்டன்ஸி ()யிடம் கேட்டிருந்தால் இப்பொழுது நான் ஒரு கோழிப்பண்ணையின் அதிபதியாக இருந்திருப்பேன்!! இது தான் ஊழியரிடம் கேட்ட தேவ ஆலோசனைக்கு அவர் தந்த பதில்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
anbu57 wrote:மெய்யான தேவஊழியனின் பிரதான சேவை: வேதாகமம் சொல்கிற போதனைகளை எடுத்துரைப்பதுதான். ஆனால் மோகன் சி.லாசரஸோ வேதாகமம் சொல்லாத சேவைகளில் 24 மணி நேரத்தையும் செலவிடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனவேதான் அவரது செயலை தேவனுக்கெதிரான துணிகர செயல் என நான் கூறியிருந்தேன்.
சகோ. அன்பு அவர்களே இயேசுவோ பவுலோ பூமியில்வாழ்ந்த காலங்களில் யாருக்கும் பிச்சை போட்டதாகவோ அல்லது மாம்சத்துக்கு தேவையான பண உதவிகளை செய்து கொண்டு திரிந்ததாகவோ வார்த்தைகள் இருப்பதுபோல் தெரியவில்லை. எனினும் வேறுநன்மைகளை செய்துகொண்டு சுற்றி திரிந்ததொடு முக்கியமாக இருவருமே போதனைக்ளைதான் ஜனங்களுக்கு உணவாக வழங்கியிருக்கிறார்கள்.
இந்நிலயில் அவைகள் தங்களை பின்பற்ற சொல்லி யிருப்பதால் அதேபோல் போதனைகளோடு மக்களுக்கு இயேசுவை அறிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
இயேசு ஒருபுறம் நற்காரியங்களை செய்யசொன்னாலும் இன்னொருபுறம் சுவிசேஷம் சொல்லி ஜனங்களை சீஷராக்கி போதிக்கவும் சொல்லியிருக்கிறார் அல்லவா?
தரித்திருப்பதுதனே நல்லது. அவர் அவ்வகை ஊழியத்தைதான் செய்கிறார்
எல்லோரும் எல்லா காரியங்களையும் செய்யமுடியாது அவரவர் அவரவர் தகுதிக்கு ஏற்ப இயன்ற காரியங்களை செய்து வருகின்றனர் மோகன் C லாசரஸ் ஏழைகளுக்கு உதவுகிறாரா இல்லையா என்பது நமக்கு தெரியாது, அதைப் பற்றி அவர் வெளியில் பேசாமல் இருக்கலாம். தான தர்மங்கள் என்பது எல்லோரும் செய்வதுதான் அதை மேடை போட்டு பேசுவது பயனற்று போகும் என்றுகருதி அப்படிப்பட்ட பலிகளை அவர் பொதுவில் சொல்லாமல் மறைத்திருக்கலாம். எனவே தெரியாத காரியங்களை குறிப்பிட்டு அவர் அவ்வாறு செய்யவில்லை என்று உறுதியாக நம்மால் கூற முடியாது.
அடுத்து:
I தீமோத்தேயு 2:1நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
என்ற பவுலின் பிரதான அறிவுரைப்படிதான் அவர்கள் எந்த
மனுஷனுக்ககவும் எந்த நேரத்திலும் ஜெபிக்க காத்திருக்கின்றனர். இதில் எந்த தவறும் இருப்பதுபோல் தெரியவில்லை சகோதரரே.
மனம்திரும்பும் ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாகும் என்று வேதம் சொல்கிறது அவ்வறு இருக்கையில் ஏதாவது ஒரு வழியில் 24 மணி நேரமும் பிறருக்காக ஊக்கமாக ஜெபித்து ஒரே ஒரு பாவியை இரட்சிப்புக்குள் வழி நடத்தினாலும் அது மேன்மையான ஒன்றே என்றே நான் கருதுகிறேன்
நாம் நமது வாழ்வில் கற்பனைகளை கைகொண்டு சில காரியங்களை சரியாக செயகிறதால் அதே காரியத்தின் இன்னொரு பகுதியை செய்துகொண்டிருக்கும் வேறு ஊழியர்களை அற்பமாக எண்ணுவது தவறு என்பது எனது கருத்து.
sundar wrote: //சகோ. அன்பு அவர்களே இயேசுவோ பவுலோ பூமியில்வாழ்ந்த காலங்களில் யாருக்கும் பிச்சை போட்டதாகவோ அல்லது மாம்சத்துக்கு தேவையான பண உதவிகளை செய்துகொண்டு திரிந்ததாகவோ வார்த்தைகள் இருப்பதுபோல் தெரியவில்லை. எனினும் வேறுநன்மைகளை செய்துகொண்டு சுற்றி திரிந்ததோடு, முக்கியமாக இருவருமே போதனைகளைத்தான் ஜனங்களுக்கு உணவாக வழங்கியிருக்கிறார்கள்.//
சகோ.சுந்தர் அவர்களே! நான் ஆர்யதாசனுக்கு எழுதினதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதால், இவ்வாறு எழுதியுள்ளீர்கள்.
மோகன் சி.லாசரஸை பிச்சை கொடுக்கும்படியும் பண உதவி செய்யும்படியும் நான் கூறவில்லை. அவரே தனது தேவைகளுக்காக பிறரிடம் கேட்டுக்கொண்டிருக்கையில், அவரால் எப்படி பிறருக்குப் பிச்சையிட முடியும்? முதலில் அவர் தனது தேவைகளுக்காக பவுலைப் போல் உழைத்தபின்னர், அவர் பிறருக்குப் பிச்சையிடுவதைப் பற்றி பார்க்கலாம்.
பவுல், இயேசுவைப் போல போதனையெனும் உணவை மோகன் சி.லாசரஸ் வழங்கவேண்டுமென்றுதான் நானும் கூறியுள்ளேன். எனது பதிவின் ஒரு பகுதியை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.
anbu57 wrote: //மெய்யான தேவஊழியனின் பிரதான சேவை: வேதாகமம் சொல்கிற போதனைகளை எடுத்துரைப்பதுதான்.//
இந்த சேவைக்கு அப்பாற்பட்டு மோகன் சி.லாசரஸ் செய்கிற 24 மணி நேர சேவை, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற வட்டத்தில் வராதா என ஆர்யதாசன் கேட்டதால்தான், வேதாகம் கூறுகிற மக்கள் சேவை எதுவென்பதை மத்தேயு 25:34-36 வசனங்கள் மூலம் எடுத்துரைத்தேன். மற்றபடி, மோகன் சி.லாசரஸைப் பொறுத்தவரை, வேதபோதனைகளை ஒழுங்காகக் கொடுத்தாலே போதும்தான்.
ஆனால் இதையும் அவர் ஒழுங்காகச் செய்யாமல், ஜனங்களின் உலகத் தேவைகளுக்காக ஜெபிப்பதற்காகவும் மற்றும் பல சேவைகளைச் செய்வதற்காகவும் 24 மணி நேரமும் காத்திருப்பதாகக் விளம்பரம் செய்துள்ளதால்தான், அது வேதபோதனைக்கு எதிரான துணிகர செயல் எனக் கூறியிருந்தேன்.
sundar wrote: //I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
என்ற பவுலின் பிரதான அறிவுரைப்படிதான் அவர்கள் எந்த மனுஷனுக்காகவும் எந்த நேரத்திலும் ஜெபிக்க காத்திருக்கின்றனர். இதில் எந்த தவறும் இருப்பதுபோல் தெரியவில்லை சகோதரரே.//
சகோ.சுந்தர் அவர்களே! 1 தீமோ. 2:1-ஐக் கவனமாகப் படியுங்கள். எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்றுதான் பவுல் சொல்கிறார். பவுலுங்கூட இரவும் பகலும் எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணியதாகக் கூறுகிறார். பவுலைப் பொறுத்தவரை அவர் இரவும் பகலும் ஜெபம் பண்ணியதோடு வேறு பல காரியங்களையும் செய்தார். பின்வரும் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 3:10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.
1 தெசலோனிக்கேயர் 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
அப்போஸ்தலர் 20:29-31 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
விசுவாசிகளுக்காக இரவும் பகலும் பவுல் ஜெபித்தார். ஆனால் எதற்காக ஜெபித்தார்? விசுவாசிகளின் விசுவாசக் குறைவுகள் நிறைவாகவே ஜெபித்தார். ஆனால் மோகன் சி.லாசரஸ் போன்றவர்கள் விசுவாசிகளின் உலகத்தேவைகள் நிறைவாவதற்காக இரவும் பகலும் ஜெபிக்கின்றனர்.
விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்த பவுல், கூடவே தனது தேவைகளுக்காக இரவும் பகலும் வேலை செய்யவும் செய்தார். அத்தோடு இரவும் பகலும் விசுவாசிகளுக்குப் புத்திசொல்லிக் கொண்டும் வந்தார். இப்படிப்பட்ட பவுல் எங்கே? விசுவாசிகளின் உலகத்தேவைகளுக்காக ஜெபித்து, பின்னர் விசுவாசிகள் பெற்ற உலகநன்மைகளில் ஒரு பகுதியை காணிக்கையென்ற பெயரில் வாங்கிக்கொண்டு, இக்காரியங்களை சாட்சி என்ற பெயரில் விளம்பரப்படுத்தி, மற்றவர்களையும் தங்களிடம் ஜெபித்து ஆசீர்வாதம் பெற அழைக்கிற மோகன் சி.லாசரஸ் எங்கே?
பவுல் ஜெபிக்கச் சொன்னது எல்லா மனுஷருக்காகவும். ஆனால் மோகன் சி.லாசரஸோ தெரிவு செய்யப்பட்ட சிலருக்காக (அதாவது தனது ஊழிய பங்காளர்களுக்காக) மட்டுமே 24 மணி நேர சேவை செய்ய ஆயத்தமாயிருப்பதாகக் கூறுகிறார். அவரது சேவை என்பது ஜெபம் மட்டுமல்ல. வேறு பலவும் உண்டு. அவற்றைச் சற்று படியுங்கள்.
//Jesus Redeems - Partners Care சேவை விதிமுறைகள்
Jesus Redeems உங்களை வரவேற்கிறது!
* நீங்கள் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் பங்காளர்களாக இருக்கிறீர்கள். தாங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அவற்றை உடனுக்குடன் சரி செய்து கொள்ளவே இந்த Partners Care செயல்படுகிறது.
* தாங்கள் எங்களுக்கு ஜெப விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு எங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்போது தங்களுக்கு தகவல் பெற்றுக் கொள்ள, பணம் அனுப்பிவிட்டு கிடைத்ததா என்பதை அறிந்து கொள்ள.. மற்ற எந்தவிதமான கேள்விகளுக்கும் தங்களுக்கு பதில் உடன் தர நாங்கள் காத்திருக்கின்றோம்.
* இணையத்தளம் வழியே தாங்கள் எங்களுடைய Products பெற்றுக் கொள்ள விரும்பும் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்.
தங்களுக்கு நாங்கள் துரிதமாக உதவிட:
* சரியான தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
* தங்களுடைய இமெயில் முகவரியை கட்டாயம் குறிப்பிடுங்கள்.
* தாங்கள் பங்களார் எண் இருப்பின் குறிப்பிடவும்.
* தங்களுடைய தொலைபேசி எண் அல்லது மொபைல் எண் குறிப்பிடுங்கள்.
* நன்கொடை அனுப்பியிருப்பின் முழு விபரங்களை சரியாக எங்களுக்கு தெரிந்தெடுத்து தாருங்கள்.
பவுல் எவரிடமாவது உங்களுக்கு என்னென்ன தேவை எனத் தனித்தனியே கேட்டு, ஜெபக்குறிப்புகளைப் பெற்று அவற்றிற்காக ஜெபித்தாரா? நிச்சயமாக இல்லை. பொதுப்படையாக எல்லா மனுஷருக்காகவும் அவர் ஜெபித்தார். அதுவும் எல்லா மனுஷர்களின் பொதுவான தேவையான விசுவாசத்திற்காகவே அவர் ஜெபித்தார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகத் தேவைகளைக் கேட்டு அவற்றிற்காக அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, இவ்வுலகத் தேவைகளைப் பொறுத்தவரை “உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருக்கக் கடவோம்” எனும் பொதுவான உபதேசத்தையே அவர் கூறினார் (1 தீமோ. 6:8).
மேலே உள்ள விதிமுறைகளில் இந்த ஒரு விதிமுறையை சற்று கவனமாகப் படியுங்கள் சகோதரரே!
//தாங்கள் எங்களுக்கு ஜெப விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு எங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்போது தங்களுக்கு தகவல் பெற்றுக் கொள்ள, பணம் அனுப்பிவிட்டு கிடைத்ததா என்பதை அறிந்து கொள்ள.. மற்ற எந்தவிதமான கேள்விகளுக்கும் தங்களுக்கு பதில் உடன் தர நாங்கள் காத்திருக்கின்றோம்.//
ஒரு வியாபார நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை, மேற்கூறிய வாசகங்கள் நினைவுபடுத்துகிறதா?
ஜெப விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு உடனடி தகவல் தருவது ஒரு சேவையாம். இதுவா வேதாகமம் கூறுகிற சேவை?
ஜெபவிண்ணம் அனுப்பியவர் பதிலுக்காக ஏன் காத்திருக்க வேணடும்? மோகன் சி.லாசரஸ் ஜெபவிண்ணப்பத்தை வைத்து ஜெபித்து, தேவனிடம் பதில் பெற்றுச் சொல்வதைக் கேட்பதற்காகவா? அவ்வாறெனில் மோகன் சி.லாசரஸ் என்ன தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரா? தேவனுக்கும் மனுஷருக்கும் ஒரே மத்தியஸ்தர் இயேசு மட்டுந்தானே?
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணப் பரிமாற்றம் எவ்வளவாய் நடக்கிறது என்பதற்கு, மேற்கூறிய விதிமுறையே சிறந்த சாட்சியாக உள்ளது. இப்படிப்பட்ட பண பரிமாற்றங்கள் பவுலின் ஊழியத்தில் இருந்ததா அல்லது வேறெந்த வேதாகம ஊழியர்களின் ஊழியத்தில் இருந்ததா? சிந்தியுங்கள் சகோதரரே!
மோகன் சி.லாசரஸ் போன்றவர்கள் என்ன செய்தாலும் அதற்கு ஒரு வேதவசனத்தைச் சொல்லி அவர்களின் செயலை நியாயப்படுத்துகிற பலர் இருப்பதால்தான், அவரைப் போன்றவர்கள் தைரியமாக தங்கள் துணிகரங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
சீஷன் என்றாலே அனைத்தையும் விட்டு விட்டு இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தவர்கள் என்கிறது வேதம். சீஷனுக்கே அப்படி என்றால் ஒரு ஊழியன் (வேலைக்காரன்) எப்படி இருக்க வேண்டும்? இன்று இருக்கும் இந்த படோப "ஊழியர்கள்" போலவா! எத்துனை விதமான ஊழிய சேவைகள்? ஆனால் ஒன்றும் வேதத்தின் படி இல்லை. எல்லா சேவைகளுக்கும் பணம் ஒன்றே பிரதானம்!! ஒரு வியாபார நிறுவனத்திற்கு உண்டான "கஸ்டமர் கேர்" இந்த ஊழிய நிறுவனங்களிலும் இருப்பது இவர்கள் செய்வதும் வியாபாரம் தான், அங்கு கஸ்டமர் என்பது இந்த "ஊழியர்களால்" செல்லமாக அழைக்கப்படும் "சாதாரண விசுவாசிகள்" தான்!!
சகோ அன்பு இது போன்ற ஒரு விவாதத்தை வைத்து சிறந்த "ஊழியம்" செய்கிறார்!! ஆனால் இந்த "கள்ள ஊழியர்களின் தீவிர விசிறிகளுக்கு" இது எல்லாம் தெரிய வராது. ஒரு முறை ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில், "இயேசு அழைக்கிறார்" ஊழியத்திற்கு விரோதமாக பேசுபவரை ஒரு "ஊழியர்" சரமாரியாக சபிப்பதைக்கூட நான் பார்த்து இருக்கிறேன்! இவர்கள் "ஊழியர்களா" அல்லது அந்த ஊழிய நிறுவனங்களுக்கு இருக்கும் "ரவுடி கும்பலா"!!!
சிலர் சத்தம் போட்டு சம்பாதிக்கிறார்கள், சிலர் சாந்தமாக சம்பாதிக்கிறார்கள், ஆனால் மொத்தத்தில் ஒருவரும் வேதத்தை போதிப்பதில்லை என்பது மாத்திரம் நிச்சயம். வசனங்களை மனனம் செய்து ஒப்பித்து விடுவது போதனையாகாது.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
aryadasan wrote: //முழுநேர ஊழியம் என்றால் என்ன, ஐயா? அரசாங்கத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சை அமைப்புகளும் காவல்துறையும் எந்நேரமும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் தானே?//
ஓர் ஊழியர் முழுநேர ஊழியம் செய்கிறாரா, அல்லது பகுதி நேர ஊழியம் செய்கிறார என்பது முக்கியமல்ல. அவர் செய்கிற ஊழியம் வேதவசனத்தின் அடிப்படையில் உள்ளதா என்பதே முக்கியம். தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவினர் ஆகியோர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைத்தான் எந்நேரமும் விழிப்புடன் செய்யவேண்டுமேயொழிய தங்களுக்குச் சம்பந்தமில்லாததும் தங்களுக்குச் சொல்லப்படாததுமான பணியைச் செய்யக்கூடாது.
அவ்வாறே ஓர் ஊழியர் முழுநேர ஊழியராக இருந்தாலும் சரி, பகுதி நேர ஊழியராக இருந்தாலும் சரி, அவருக்கு வேதாகமம் பணித்துள்ள பணிகளைத்தான் அவர் செய்யவேண்டுமேயொழிய தன் சுயஇஷ்டப்படி மக்களுக்கு சேவை செய்யக்கூடாது.
இயேசுவின் கட்டளை:
மத்தேயு 28:19 நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்தல் மற்றும் சகல ஜாதிகளுக்கும் கிறிஸ்துவின் உபதேசத்தை உபதேசித்து அவர்களை சீஷராக்குதல் ஆகியவைதான் ஊழியர்களின் பிரதான பணி.
ஆனால் இன்றைய ஊழியர்களுக்கு, தங்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிற விசுவாசிகளைக் கவனிப்பதுதான் மாபெரும் பணியாக உள்ளது. மோகன் சி.லாசரஸ் போன்ற பிரபல ஊழியர்களிடம் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான விசுவாசிகள் தொடர்பு கொள்கின்றனர். அந்த விசுவாசிகள் ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட ஊழியர்களால் நிச்சயமாக இயலாது. எனவே தங்களுக்கு உதவியாக சிலரைப் பணியிலமர்த்தியும், கணினியில் தானாகவே பதில் தரக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களோடு தொடர்பு கொள்ளும் விசுவாசிகளுக்கு உடனுக்குடன் பதில் தருகின்றனர்.
அம்மாதிரி செயல்களில் ஒன்றுதான் Partner Care எனும் சேவை. சகோ.பெரியன்ஸ் சொன்னதுபோல், இச்சேவையானது பல வியாபார நிறுவனங்களின் Customer Care சேவையைப் போன்றதுதான்.
இம்மாத (அக்டோபர் 2010) இயேசு விடுவிக்கிறார் பத்திரிகையில்,
உங்கள் பிள்ளைகளை இயேசுவின் கண்மணிகள் ஜெபத்திட்டத்தில் சேர்த்து விட்டீர்களா?
என்ற தலைப்பில் ஓர் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதிலுள்ள சில வரிகளைத் தருகிறேன், படித்துப் பாருங்கள்.
//உங்கள் குழந்தைகளை இயேசு நேசிக்கிறார், அவர்களை அதிகமாய் ஆசீர்வதிக்க விரும்புகிறார்! காரணம், சாத்தான் தனக்குக் கொஞ்சகாலமே இருக்கிறது என்பதை அறிந்து, சிறு பிள்ளைகளுக்கு விரோதமான பல தீமைகளைச் செய்யப் போராடிக்கொண்டிருக்கிறான்.//
இதைத் தொடர்ந்து, சாத்தான் குழந்தைகளை கருவிலேயே அழிக்க முயல்கிறான் என்றும் வியாதிகளாலும் பொல்லாத சிந்தனைகளினாலும் பாவப் பழக்கங்களாலும் அவர்களை வேதனைப்படுத்த முயல்கிறான் என்றும் எழுதிவிட்டு, பின்னர் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
//சாத்தானின் இம்மாதிரி தீய கிரியைகளிலிருந்து உங்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, ஞானத்தில் வளர்ந்து, நன்கு படித்து, ஆண்டவருக்குச் சாட்சியாக, அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றுதான் “இயேசுவின் கண்மணிகள்” ஜெபத் திட்டத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்//
இவ்விளம்பரத்தைப் படிக்கையில் என் மனதினுள் சில கேள்விகள் எழுந்தன.
குழந்தைகளை நேசித்து அவர்களை சாத்தானிடமிருந்து காப்பாற்ற தற்போது விரும்புகிற இயேசு, இந்த 2000 ஆண்டுகளாக அதை ஏன் நினைக்கவில்லை? ஒருவேளை இந்த 2000 ஆண்டுகளாக குழந்தைகள் கருவில் அழிக்கப்படவில்லையா, அல்லது வியாதிக்குள்ளாகவில்லையா, அல்லது பொல்லாத சிந்தனைகளுக்குள்ளாகவில்லையா, அல்லது பாவப் பழக்கங்களுக்காளாகவில்லையா?
இயேசு பிறந்த காலத்திலேயே ஏராளமான பிள்ளைகள் ஏரோதுவினால் கொல்லப்பட்டார்களே, அந்த பிள்ளைகள் மீதெல்லாம் இயேசுவுக்கு அன்பில்லையா? ஒருவேளை இயேசு அப்போது குழந்தையாய் இருந்ததால், சாத்தானோடு அவரால் போராட முடியவில்லையா?
இந்த 2000 ஆண்டுகளில் எத்தனையோ குழந்தைகள் வியாதியாலும் பசியாலும் அழிந்துள்ளனரே, அவர்களைக் காக்கும்படி, இந்த 2000 ஆண்டுகளில் “கண்மணிகள் திட்டம்” இயேசுவுக்கு உதயமாகவில்லையா? அல்லது இயேசுவின் “கண்மணிகள் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தக்கூடிய மோகன் சி.லாசரஸைப் போன்ற ஊழியர்கள் யாரும் இதுவரை எழும்பவில்லையா?
சரி, போகட்டும். எப்படியோ “கண்மணிகள் திட்டத்தை” மோகன் சி.லாசரஸிடம் இயேசு சொல்லிவிட்டார், நல்லது.
ஆனால் இப்போதுகூட இத்திட்டத்தில் சேருகிற குழந்தைகளை மட்டுந்தானே சாத்தானிடமிருந்து இயேசு காப்பாற்றுவார்? மற்ற குழந்தைகளின் கதி என்னாகும்?
எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்கும்படி பவுல் கூறினார். ஆனால் மோகன் சி.லாசரஸோ, “கண்மணிகள் திட்டத்தில்” சேரும் குழந்தைகளுக்காக மட்டுந்தான் ஜெபிக்கும்படி இயேசு கட்டளையிட்டுள்ளதாக கூறுகிறார். இப்படிச் சொல்லி அவர் இயேசுவை பட்சபாதமுள்ளவராக ஆக்குகிறார். இதைவிட அதிக தூஷணத்தை யாராவது இயேசுவுக்குக் கொடுக்கமுடியுமா?
மற்றொரு கேள்வியும் எழுகிறது.
இயேசு விடுவிக்கிறார் நிறுவனத்தின் இத்திட்டத்தை கேள்விப்படாத குழந்தைகளின் கதி என்னாகும்? என்னதான் இந்நிறுவனத்தார் விளம்பரப்படுத்தினாலும், உலகிலுள்ள அனைத்து தேசங்களுக்கும் அனைத்து பெற்றோருக்கும் இவ்விளம்பரம் சென்றடையுமா? பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளைச் சென்றடையுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழும்புகின்றன.
ஒரு சந்தோஷமான விஷயம். இத்திட்டத்தில் சேர கட்டணம் கிடையாதாம், முற்றிலும் இலவசமாம். ஆனால், தினகரன் மற்றும் பால் தினகரனிடம் இதேவிதமான திட்டத்தை அறிவித்து, அவர்களை மட்டும் கட்டணம் வாங்கி சேர்க்கச் சொன்ன இயேசு, மோகன் சி.லாசரஸிடம் கட்டணம் வாங்காமால் சேர்க்கச் சொன்னதற்கான காரணம் என்னவோ?
(ஒருவேளை “திட்டத்தைச்” சொன்ன இயேசு, அதில் சேருவதற்கு கட்டணம் வசூலிப்பதும் வசூலியாதிருப்பதும் சம்பந்தப்பட்ட ஊழியரின் விருப்பம் எனக் கூறியிருப்பாரோ?)
சகோ.ஆர்யதாசன் அவர்களே!
இப்பொழுது சொல்லுங்கள், இவர்களின் சேவை வேதாகமம் சொல்வதற்கு உட்பட்டதுதானா என்று.
சகோ.சுந்தர் அவர்களே!
இப்பொழுது சொல்லுங்கள், எல்லா மனுஷருக்காவும் ஜெபிக்கும்படி பவுல் சொன்னது, மோகன் சி.லாசரஸின் ஜெபத்திற்குப் பொருந்துமா என்று.
sundar wrote: //1 தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
என்ற பவுலின் பிரதான அறிவுரைப்படிதான் அவர்கள் எந்தமனுஷனுக்ககவும் எந்த நேரத்திலும் ஜெபிக்க காத்திருக்கின்றனர். இதில் எந்த தவறும் இருப்பதுபோல் தெரியவில்லை சகோதரரே.//
சகோ.சுந்தர் அவர்களே!
தங்கள் கேள்விக்கு ஏற்கனவே நான் பதில் தந்துள்ளேன். அத்தோடு, சில்சாமின் தளத்தில் அவர் பதிந்துள்ள ஒரு பதிவையும் படித்துப் பாருங்கள்.
சொமாலியா போன்ற நாடுகளில் அன்றாடம் மரித்துக்கொண்டு இருக்கும் குழந்தைகள் பாவம் எப்படி தான் "கண்மணிகள்" திட்டத்தில் சேர்ந்து இவர்களின் ஜெபங்களால் பிழைக்குமோ!! இன்னும் எத்துனை காலம் தான் இவர்களின் ஏமாற்று வேலை தொடரும் என்று பார்ப்போம்!! கிறிஸ்து வருகிறார் என்று முதலில் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள் இந்த ஊழிய போர்வை என்கிற அரியாமையில் இருக்கும் "ஊழியர்களின்" கூட்டமே!! இவர்களின் விசிறிகள் இவர்களிடமிருந்தே தன் சுவிசேஷ பணியை தொடரலாமே!!
இவர்களின் தரிசனத்தை இவர்கள் தைரியமாக சொல்லி அதை அமல் படுத்துவது தான் துனிச்சலான விஷயமாக இருக்கிறது. பவுல் குருடாகி போனதும் அனனியா என்கிற சீஷனிடம் பவுலின் தெரிந்துக்கொள்ளுதலை குறித்தும், அதற்கு முன்பு பவுலிடம் தரிசனமானவர் அவரை குறுடாக்கினார். அதாவது சம்பந்தப்பட்ட இருவரிடமுமே தேவனின் தரிசனம் இருந்தது (அப். 8). இதே மாதிரி, கொர்நேலியுவிற்கு பேதுருவிற்கும் ஒரே மாதிரியான தரிசனத்தின் மூலம் பேசி விட்டு தான் சந்திக்க வைக்கிறார் (அப். 10). ஆனால் இன்று இருக்கும் ஊழியர்களின் சமபந்தப்பட்ட இருவருக்கு தரிசனம் கிடையாது. ஊழியருக்கு தரிசனம் கிடைக்கிறது, ஆனால் சம்பந்தப்பட்ட மற்ற "கண்மணிகளோ" "பங்காளர்களோ" இவர்களுக்கு இதை குறித்து தேவன் வந்து சொல்லுவதாக பேச்சே இல்லையே!! அப்படி என்றால் இந்த ஊழியர்களிடம் இப்படி பட்ட திட்டங்களை தருவது வேதத்தின் தேவனா அல்லது இப்பிரபஞ்சத்தின் தேவனா!?
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
மெய்யான ஊழியரின் அடையாளங்கள் எனும் இத்திரியில், தற்போதைய பொய்யான ஊழியர்களின் செயல்கள் அதிகமாக இடம்பெற்றுவிட்டன. இதுவும் ஒரு வகையில் சரிதான். எப்படியெனில், இப்பொய்யான ஊழியர்களின் வேதத்திற்கு புறம்பான செயல்களின் அடிப்படையில், மெய்யான ஊழியர்களை நாம் அடையாளம் காணலாமே!
மோகன் சி.லாசரஸ், தினகரன் குழுவினர் ஆகியோருக்கு அடுத்தபடியாக, இயேசு வருகிறார் நிர்வாகியான பால்ராஜ் மோசஸும் ஒரு “திட்டத்தை” அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்குப் பெயர் “இயேசு வருகிறார் குடும்ப ஆசீர்வாத பாதுகாப்புத் திட்டம்”.
இயேசு வருகிறார் நிர்வாகியான காலஞ்சென்ற ஜாண் ரபீந்தரனாத் மீது ஒரு காலத்தில் எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அப்போது அவரது கூட்டங்களில் சுமார் 100 பேர்தான் இருப்பார்கள். பாவத்தைக் குறித்து மிகவும் கடிந்து பேசும் அவர், தோற்றத்தில் மிக எளிமையாக இருப்பார். ஊழியம் வளர வளர இவரும் தோட்டங்களை ஆங்காங்கே உண்டாக்கி அசையா சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார். 2001 வரை அவர் மீது நல்லபிப்பிராயம் வைத்திருந்த நான் கொஞ்சங்கொஞ்சாமாக அதை இழந்தேன். ஆனால் அவரது மரணம் வரை அவர் யாரிடமும் நேரடியாகக் காணிக்கை கேட்டதாகவோ அல்லது “திட்டங்களை” அறிவித்ததாகவோ எனக்குத் தெரியவில்லை.
அவரது மரணத்திற்கு முன்னதாகவே, தனது வளர்ப்பு மகன் மோசஸ், தன்னோடு வெகுகாலமாக இருந்து தனக்கு உதவி செய்த செல்லத்தங்கம் எனும் (உடன்பிறவா) சகோதரி மற்றும் சிலருக்கு தனது சொத்துக்களைப் பிரித்து, உயிலாக எழுதி வைத்து, அதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தார். ஊழிய காணிக்கையால் உருவான சொத்து எப்படி தனிப்பட்டவர்களுக்கு உரிமையாக்கப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம், போகட்டும்.
ஜாண் ரபீந்தரனாத் காலம் வரை “திட்டங்கள்” எதுவும் அறிவிக்கப்படாத அவரது நிறுவனத்தில் அவரது வாரிசான பால்ராஜ் மோசஸ் காலத்தில் “குடும்ப ஆசீர்வாத பாதுகாப்புத் திட்டம்” அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் குறித்த விபரங்கள் மற்றும் விமர்சனங்கள் அடுத்த பதிவில் ...
இத்திட்டத்தை முற்றிலும் இலவசமாக ஆண்டவருடைய திட்டத்தின்படி ஆரம்பித்துள்ளாராம்.
இப்படியெல்லாம் சொல்லி, இத்திட்டத்தில் சேர்ந்து ஆசீர்வாதம் பெற்ற ஒருவருடைய சாட்சியையும் வெளியிட்டுள்ளார்.
சிலுவை ராஜன் எனும் அந்த நபர் தனக்கும் தன் மகனுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் இயேசு வருகிறார் தோட்டத்துடன் போன் மூலம் தொடர்பு கொண்டாராம். உடனே ஆபத்திலிருந்து கர்த்தர் பாதுகாத்தாராம்.
அவரைப் போலவே இத்திட்டத்தில் சேருவோரை, கர்த்தர் எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாப்பாராம்.
ஆபத்துக்காலத்தில் நாம் என்ன செய்யவேண்டுமென வேதாகமம் சொல்கிறது, எப்போது கர்த்தர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என வேதாகமம் சொல்கிறது? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் 121:1,7 எனக்கு ஒத்தாசை வரும், பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். ... கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.
ஆபத்துக்காலத்தில் தம்மை நோக்கிக் கூப்பிடும்படி கர்த்தர் சொல்கிறார்; ஆனால் பால்ராஜ் மோசஸோ கர்த்தரை நோக்கியல்ல, தன்னை நோக்கி கூப்பிட்டால் போதும் என்கிறார்.
கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, கர்த்தரால் விடுவிக்கப்பட்டவன், கர்த்தரையே மகிமைப்படுத்துவான். இதைத்தான் வசனமும் சொல்கிறது. ஆனால் பால்ராஜ் மோசஸை நோக்கிக் கூப்பிட்ட சிலுவை ராஜன், பால்ராஜ் மோசஸைத்தான் மகிமைப்படுத்துகிறார்.
பர்வதங்களுக்கு நேராகக் கண்களை ஏறெடுத்த தனக்கு ஒத்தாசை வந்ததைச் சொல்லி, கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என சங்கீதக்காரன் கூறுகிறார். அதாவது பர்வதங்களுக்கு நேராகக் கண்களை ஏறெடுத்தால், பர்வதங்களிலுள்ள கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என சங்கீதக்காரன் சொல்கிறார். ஆனால் பால்ராஜ் மோசஸோ தனது ஆசீர்வாத திட்டத்தில் இணைந்து தன்னை நோக்கி கண்களை ஏறெடுத்தால், கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்கிறார்.
அவ்வாறெனில் சங்கீதக்காரன் அன்று சொன்னது தற்போது பொய்யாகிவிட்டதா? வேதாகம வாக்குத்தத்தங்களைப் பொய்யாக்கி, புது வாக்குத்தத்தங்களைத் தரும் பணியில்தான் பால்ராஜ் மோசஸைப் போன்ற ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவனை நோக்கி ஜனங்களை இழுக்காமல், தங்களை நோக்கி ஜனங்களை அவர்கள் இழுத்து வருகின்றனர். அவர்களின் செயல் பின்வரும் தீர்க்கதரிசன வசனங்களின் நிறைவேறுதலாக இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.
அப்போஸ்தலர் 20:29,30 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
வேதாகமம் சொல்வதற்கு மாறுபாடானதைப் போதித்து, எப்படியெல்லாம் இன்றைய ஊழியர்கள் விசுவாசிகளைத் தங்களிடம் இழுக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் இன்றைய ஆசீர்வாத திட்டங்கள் பெரும் ஆதாரமாக விளங்குகின்றன.
மத். 24:24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்
கள்ளத்தீர்க்கதரிசிகள் என்றால் நமக்கு தெரிந்ததே, யார் கள்ளக்கிறிஸ்துக்கள். கிறிஸ்து என்றால் "அபிஷேகம் பண்ண்ப்பட்டவர்" (The annointed one) என்று அர்த்தம். இந்த கள்ள கிறிஸ்துக்கள் கேட்பதும் சொல்லுவதும் அதையே!! இந்த இடத்தில், என் இடத்தில், என் கர்சிப்பில், என் பர்ஸில், என் உடைகளில் "அபிஷேகம் இருக்கிறது"! உங்களுக்கும் அந்த அபிஷேகம் வேண்டுமா? தொடர்பு கொள்க ......... ஊழியம்!! அநேகர் கேட்பதும் உண்டு, பிரதர் உங்களுக்கு அபிஷேகம் கிடைத்து விட்டதா? "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" ஒருவரே, அவர் கிறிஸ்து. நமக்குள் தேவனுடைய ஆவி இருப்பதால் நாம் கிறிஸ்து பெற்ற அதே அபிஷேகத்தை பெறவில்லை!! ஏனென்றால், அபிஷெகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவானவர் நன்மையே செய்து சுற்றி திரிந்தார் என்கிறது வேதம். ஆனால் நன்மை நம்மிடத்தில் இல்லை என்கிறது நம்மைக் குறித்து வேதம். இப்படி என்னிடம் அபிஷேகம் இருக்கிறது, உங்கள் அபிஷேகம் என்னை தள்ளுகிறது போன்ற வார்த்தைகளை பேசுபவர்கள்தான் கள்ளக்கிறிஸ்துக்கள்!! மத் 24:24ல் சொல்லப்பட்டபடியே, இப்படிப்பட்ட கள்ளக்தீர்க்கதரிசிகளுக்கும், கள்ளக்கிறிஸ்துக்களும் தான் இன்று மவுசு ஜாஸ்தியாக இருக்கிறது. இவர்கள் மூலமாக அநேகர் அதுவும் தெரிந்துகொள்ளப்படவர்கள் கூட வஞ்சிக்கப்படும்படியாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்!!
ஒவ்வொரு ஊழிய நிறுவனமும் தங்களின் ஜெபத்தினால் உண்டான "அற்புதங்களை" "அடையாளங்களையே" சொல்லுவது இந்த வசனத்தை நிறைவேற்றுகிறது!! அவர்கள் வெளியிடும் பத்திரிக்கைகளில் இந்த அற்புத அடையாளங்களை "சாட்சிகளாக" பார்க்க முடியும். "நீங்கள் எனக்கு சாட்சியாக இருங்கள்" என்று கிறிஸ்து சொன்னதை இவர்கள் ஊழியம்/ஜெபம் மூலம் கிடைக்கும் அற்புதங்களை சொல்லுவதுதான் சாட்சியாக இருப்பது என்று இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளக்கிறிஸ்துக்களும், கிறிஸ்தவர்கள் என்கிற விசுவாசிகளும் நினைத்து இருக்கிறார்கள் போல்!!
ஆனால் இவை எல்லாம் நடக்காமல் போனால்தான் தவறு!! இது நடந்துகொண்டு இருப்பது வசனம் சத்தியம் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறது. வேறு என்ன சாட்சி வேண்டும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
aryadasan wrote: //தற்கொலை எண்ணங்களும் சில கொலைவெறி சண்டைகளும் நள்ளிரவிலேயே தோன்றுகிறது அல்லவா, அந்நேரத்தில் மன அமைதி பெற யாரை உடனே அணுகமுடியும்?//
கொலைவெறி சண்டை எண்ணங்கள் தோன்றுவோர் மனஅமைதி பெறுவதற்கு, ஊழியர்களை அணுகவேண்டும்; இப்படிப்பட்டவர்களை எதிர்பார்த்து ஊழியர்கள் 24 மணி நேரமும் காத்திருக்க வேண்டும் என்கிறார் சகோ.ஆர்யதாசன். ஆனால், இம்மாதிரி எண்ணமுடையோரை (மெய்யான) தேவஊழியரான யாக்கோபு எப்படி வசைபாடுகிறார் என்பதை சற்று படித்துப்பார்ப்போம்.
யாக்கோபு 4:1-4 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; சண்டையும் யுத்தமும் பண்ணுகிற நீங்கள், தேவனிடம் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணினாலும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
கொலைவெறி சண்டைகளுக்கு அடிப்படை காரணம் உலகசிநேகம்தான். உலக சிநேகமுள்ளவன் தேவனுக்குப் பகைஞனாயிருக்கிறான் என்று கூறும் யாக்கோபு, உலகசிநேகமுள்ளவர்களை விபசாரர் எனச் சொல்லி வசைபாடவும் செய்கிறார். ஆனால் ஆர்யதாசனோ, அப்படிப்பட்டவர்களுக்கு மனஅமைதி உண்டாகும்படி ஊழியக்காரர்கள் தாலாட்டு பாடவேண்டும் என்றும், அதற்காக எந்நேரமும் தயாராக இருக்கவேண்டுமென்றும் கூறுகிறார். விசுவாசிகளின் இம்மாதிரி எண்ணங்கள்தான் இன்றைய ஊழியர்களை வேதத்துக்குப் புறம்பாக துணிகரமாக செயல்படவைக்கின்றன்.
தற்கொலை எண்ணம் பற்றியும் ஆர்யதாசன் கூறியுள்ளார். தற்கொலையும் ஒரு கொலைதான்; அதுவும் ஒரு பாவம்தான். இவ்வுலகில் உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என பவுல் கூறியபடி (1 தீமோ. 6:8) வாழ்ந்தால், நம் மனதில் தற்கொலை எண்ணம் வருமா? எனவே பவுலின் இவ்வசனத்தை அழுத்தமாகப் போதித்தாலே போதுமானது. ஆனால் போதிக்கிற போதகர்களுக்கே “போதுமென்ற” எண்ணம் இருப்பதில்லையே. பிறகு எப்படி அவர்கள் மற்றவர்களுக்கு போதிப்பார்கள்?
ஒருவேளை ஓயாத/தீராத பிரச்சனைகளால் மனமடிவாகி தற்கொலை செய்ய யாரேனும் நினைத்தால், சகோ.பெரியன்ஸ் சொன்னபிரகாரம் மனநல மருத்துவரை அவர்கள் அணுகுவதுதான் சிறந்த பயனைத் தருமேயொழிய ஊழியர்கள் மூலம் அவ்வளவாய் பயன் கிடைக்காது.
இன்றைய ஊழியர்கள், விசுவாசிகளின் நலனுக்காக 24 மணி நேரமும் காத்திருப்பதாகச் சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க சுயநலமே. தங்களை அணுகுகிற 10 பேரில் ஓரிருவருக்கு “குருவி உட்கார பனம்பழம் விழுந்ததைப்போல்” ஏதேனும் நன்மை நடந்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் தாரளமாகக் காணிக்கை தருவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நன்கறிவார்கள். மாத்திரமல்ல, தங்களை அணுகுகிறவர்களுக்கு எதிர்பார்த்த நன்மை கிடைக்காவிட்டால்கூட, ஊழியரைத் தாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது தருவார்கள் என்பதையும் அவ்வூழியர்கள் அறிவார்கள். இந்த எதிர்பார்ப்பில்தான் 24 மணி நேரமும் காத்திருப்பதாக அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உண்மையில் 24 மணி நேரமும் காத்திருப்பது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்ல; அவரது பிறபணிகளுக்கு நடுவில் அவரால் அதைச் செய்யவும் முடியாது. தனது சார்பாக அவர் சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தியுள்ள பணியாளர்தான் 24 மணி நேரமும் விசுவாசிகளுக்காகக் காத்திருந்து ஆகவேண்டியதைச் செய்வார்.
பல மாதங்களுக்கு முன்னர், இயேசு அழைக்கிறார் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில், குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால், சகோ.டிஜிஎஸ்-ன் குரலில் ஜெபம் ஏறெடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஜனங்களை எத்தனை பைத்தியக்காரர்களாக இவர்கள் ஆக்குகின்றனர் என்பது புரிகிறதா?
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிஜிஎஸ்-ன் (ஜெபக்) குரலை, தானியங்கி தொலைபேசி மூலம் இயங்கச் செய்வது இக்கால நவீன விஞ்ஞானத்தில் சாத்தியமாயுள்ளது. இதைப் பயன்படுத்தி, ஜனங்களிடம், டிஜிஎஸ்-ன் குரலில் ஜெபம் வேண்டுமா, இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள் என விளம்பரம் செய்கின்றனர்.
அவர்கள் இவ்வாறு விளம்பரம் செய்தது, டிஜிஎஸ்-ன் மறைவுக்கு முன்னரா பின்னரா என்பது தெரியவில்லை. எப்படியாயினும், இம்மாதிரி செயல்கள் ஏமாற்றுத்தனத்தின் உச்சக்கட்டமே.
சகோ.ஆர்யதாசன் அவர்களே! இன்னமும் இம்மாதிரி ஊழியர்களின் அறிவிப்புகளை/விளம்பரங்களை நல்நோக்கமுடையதாகத்தான் கருதுகிறீர்களா? கண்டிப்பாக பதில் கூறவும்.