நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?
Permalink  
 


மத்தேயு 23:8-10 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

நாம் போதகரென்றோ குருவென்றோ அழைக்கப்படக்கூடாது என்றும் பிதாவென யாரையும் அழைக்கக்கூடாது என்றும் இவ்வசனங்களில் இயேசு கூறுகிறார். ஆனால் இயேசுவின் பல வசனங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைப் போலவே, இவ்வசனங்களும் இன்றைய கிறிஸ்தவ சமூகத்தால் உதாசீனப்படுத்தப்படுகின்றன.

எனவேதான் போதகர், பாஸ்டர், குருவானவர், தந்தை (பிதா) என்ற பெயரில் இந்நாட்களில் பலரும் அழைக்கப்படுகின்றனர். இதைக் குறித்து நாம் கண்டித்துச் சொன்னால், வேறு பல வசனங்களைக் காட்டி, தங்கள் செயலை சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

சட்டத்துக்கு விரோதமாகக் குற்றஞ்செய்கிற சிலர், சட்டத்தின்பிடியிலிருந்து தப்புவதற்கு, சட்டத்தில் தங்களுக்கு சாதகமான குறிப்பு எங்கேனும் கிடைக்காதா எனத் தேடுவார்கள். (இம்மாதிரி சாதகமான குறிப்பை, சட்டத்திலுள்ள ஓட்டை அல்லது loop-hole என்பார்கள்.) அதுபோலத்தான், மத்தேயு 23:8-10 வசனங்களுக்குக் கீழ்ப்படிய மனமில்லாத சிலர், வேறு சில வசனங்களைத் தேடிக்கண்டுபிடித்து, அவற்றைச் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த முயல்கின்றனர். ஆனால் சட்டத்தில் இருப்பதைப் போன்ற loop-holes வேதாகமத்தில் கிடையாது என்பதை அவர்கள் அறியார்கள்.

அவர்களின் அறியாமையின் மூலம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளதும், அவர்களுக்குச் சாதகமாகத் தோன்றுகிறதுமான சில வசனங்கள்:

அப்போஸ்தலர் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

கொரிந்தியர் 12:28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.


இவ்வசனங்களின்படி, கிறிஸ்துவின் சபையில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என யாவரும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மத்தேயு 23:8-10 வசனங்களில் இயேசு சொல்கிற கட்டளை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கூறப்பட்டதாகும்.

அதைப் புரிந்துகொள்ள ஏதுவாக, அவ்வசனங்களுக்கு முந்தின 2 வசனங்களையும் படிப்போம்.

மத்தேயு 23:6,7 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் தங்களை கனமுள்ளவர்களாகக் கருதிய வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் மனநிலையைக் குறித்து சொல்லிவிட்டு, அதன் தொடர்ச்சியாக, தமது சீஷர்களிடம் அப்படிப்பட்ட மனநில்லை சற்றும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், 8-10 வசனங்களில் சில கட்டளைகளை இயேசு கூறியுள்ளார்.

அக்கட்டளைகளில் இயேசு சொல்வது: யாரும் தங்களை மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமானவர்களாக உயர்த்தி, தங்களின் முக்கியத்துவத்தைக் காட்டும்படியான “பட்டப் பெயர்களை” தங்களுக்குச் சூட்டிக்கொண்டு, அந்தப் “பட்டப் பெயர்களால்” அழைக்கப்பட வேண்டாம், (யாருக்கும் “பட்டப் பெயர்” சூட்டி அழைக்கவும் வேண்டாம்) என்பதே.

8-ம் வசனத்தில் இயேசு சொல்கிற “ரபீ” எனும் வார்த்தை, rhabbi என்கிற மூலபாஷை வார்த்தையேயாகும். இதன் அர்த்தம்: my master, ie Rabbi, as an official title of honor.

அதாவது பிற மனிதருக்கு வழிகாட்டி நடத்திச் செல்கிற உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் பட்டப்பெயர்தான் “ரபீ” என்பதாகும். இந்த “ரபீ” எனும் மூலபாஷை வார்த்தைக்கு யோவான் 1:38-ல் மூலபாஷையிலேயே ஓர் அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அர்த்தம் “didaskalos” என்பதாகும். இதனை தமிழில் “போதகர்” என மொழிபெயர்த்துள்ளனர்.

“didaskalos” எனும் மூலபாஷை வார்த்தையின் அர்த்தம்: an instructor என்பதாகும். இதனை தமிழில் “அறிவுறுத்துபவர்” என மொழிபெயர்க்கலாம். இவ்விபரங்களை மனதில் வைத்துக்கொண்டு, மத்தேயு 23:10-ல் இயேசு சொன்ன “குரு” எனும் வார்த்தையின் மூலபாஷை விளக்கத்தைப் பார்ப்போம்.

”குரு” எனும் வார்த்தைக்கு மூலபாஷையில் “kathegetes” எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்: a guide, i.e. (figuratively) a teacher என்பதாகும். இதனை தமிழில் “வழிகாட்டி” அல்லது “போதகர்” என மொழிபெயர்க்கலாம்.

மத்தேயு 23:8,10 வசனங்களில் இயேசு சொல்கிற சரியான கருத்தைப் புரிந்துகொள்வதற்கு, 9-ம் வசனத்தின் கருத்து நமக்கு மிகவும் துணைசெய்கிறது.

இவ்வசனத்தில் “பூமியில் ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்” என இயேசு கூறுகிறார். “பிதா” என்ற வார்த்தையின் மூலபாஷை வார்த்தை “pater” என்பதாகும். இதன் அர்த்தம்: a "father" என்பதாகும். இதனை தமிழில் “தகப்பன்” அல்லது “பிதா” என மொழிபெயர்க்கலாம்.

உலகப்பிரகாரமாக, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு “தகப்பன் (அல்லது பிதா)” உண்டு. அவரை “தகப்பன் (அல்லது பிதா)” என்றுதான் நாம் அழைத்தாக வேண்டும். ஆனால் இயேசுவோ “பூமியில் ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்” என்கிறார். அவ்வாறெனில், நம் உலகப்பிரகாரமான தகப்பனை “பிதா” என அழைக்கக்கூடாது என்கிறாரா? நிச்சயமாக இல்லை. “பிதா” என்கிற பட்டப்பெயரில் யாரையும் அழைக்கவேண்டாம் என்பதே 9-ம் வசனத்தில் இயேசு கூறுகிற கட்டளை. அதாவது 9-ம் வசனத்தில் “பிதா” எனும் வார்த்தையை ஒரு பட்டப்பெயராகத்தான் இயேசு பயன்படுத்தியுள்ளார்.

இதேவிதமாகத்தான் 8,10 வசனங்களிலும், “ரபீ, வழிகாட்டி அல்லது போதகர்” எனும் வார்த்தைகளை பட்டப்பெயர்களாகத்தான் இயேசு பயன்படுத்தியுள்ளார். “ரபீ” எனும் வார்த்தைக்கு “an official title of honor” எனும் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தற்போது நினைவுபடுத்தி, மத்தேயு 23:8-10 வசனங்களின் மொத்தக் கருத்தைப் பார்ப்போம்.

“ரபீ” என்ற மரியாதைக்குரிய பட்டப்பெயரில் அழைக்கப்படவேண்டாம் என 8-ம் வசனத்தில் கூறியதைப் போலவே, “பிதா” எனும் மரியாதைக்குரிய பட்டப்பெயரில் எவரையும் அழைக்கவேண்டாம் என 9-ம் வசனத்தில் இயேசு கூறுகிறார். இதேவிதமாகத்தான் 10-ம் வசனத்திலும் “வழிகாட்டி” அல்லது “போதகர்” எனும் பட்டப்பெயரில் அழைக்கப்படவேண்டாம் எனக் கூறுகிறார்.

மொத்தத்தில், பிறரைக் காட்டிலும் உயர்வானவராகக் காட்டக்கூடிய பட்டப்பெயர்களில் நீங்கள் யாரையும் அழைக்கவேண்டாம், யாராலும் அழைக்கப்படவும் வேண்டாம் என்பதே மத்தேயு 23:8-10 வசனங்களில் இயேசு கூறுகிற கட்டளையாகும்.

இவ்வசனங்கள்: பட்டப்பெயர் சூட்டி
பிறரை அழைத்தல் மற்றும் பட்டப்பெயரால் அழைக்கப்படுதல் என்ற கோணத்தில் கூறப்பட்டுள்ளன.

அதாவது ஒருவர் பிறருக்கு வழிகாட்டுபவராக அல்லது போதிக்கிறவராக இருக்கலாம்; ஆனால் அதற்காக அவருக்கு “வழிகாட்டி, போதகர்” என்பது போன்ற பட்டப்பெயரைச் சூட்டி அவ்விதமாக அவரை அழைத்து பிறரைக் காட்டிலும் அவரை மேலானவராக உயர்த்த வேண்டாம்; அவ்வாறு உயர்த்தப்பட விரும்பவும் வேண்டாம் என்பதே இயேசுவின் கட்டளை.

இந்தப் புரிந்துகொள்தலுடன், அப்போஸ்தலர் 13:1; 1 கொரிந்தியர் 12:28; எபேசியர் 4:13 ஆகிய வசனங்களின் கருத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?
Permalink  
 


பிறரைக் காட்டிலும் மேலானவர்களாக நம்மைக் காட்டக்கூடிய ”ரபீ, வழிகாட்டி, போதகர்” எனும் பட்டப்பெயர்களில் நாம் அழைக்கப்படவும் வேண்டாம், “பிதா” என்கிற பட்டப்பெயரில் யாரையும் அழைக்கவும் வேண்டாம் என்பதே மத்தேயு 23:8-10 வசனங்களில் இயேசு கூறியுள்ள கட்டளைகளின் சாராம்சம்.

இவ்வசனங்களில் இயேசு பயன்படுத்தியுள்ள பதங்களுக்கு அர்த்தமாக ”ரபீ, வழிகாட்டி, போதகர்” எனும் வார்த்தைகளை நாம் குறிப்பிட்டுள்ளதால், “மேய்ப்பர், ஆயர்” எனும் பட்டப்பெயர்களால் நாம் அழைக்கப்படலாம் எனக் கருதக்கூடாது. “மேய்ப்பர், ஆயர்” எனும் பதங்களும் மூலபாஷையில் இயேசு பயன்படுத்தியுள்ள பதங்களுக்கு ஒருவகையில் நிகரானவைதான். எனவே கிறிஸ்துவின் பணியை ஏதோ ஒருவகையில் செய்கிற நாம், அது சம்பந்தமான எந்த பட்டப்பெயரிலும் அழைக்கப்படாதிருப்பதுதான், இயேசுவின் வசனங்களுக்கு நாம் கொடுக்கிற தகுதியான கனம் ஆகும்.

ஆனால் இந்நாட்களில் நம் மத்தியில் நாம் காண்பதென்ன? ஆதியில் ரோமன் கத்தோலிக்க சபைத் தலைவர்கள், “ஆயர், பேராயர், தந்தை, பங்குத் தந்தை, Father, Pope” எனும் பட்டங்களைத் தங்களுக்குச் சூட்டிக்கொண்டு அவற்றால் அழைக்கப்பட்டனர்.

பின்னர் வந்த புராட்டஸ்டண்ட் சபைத் தலைவர்களும், “குரு, பேராயர், பிஷப்” எனும் பட்டங்களைத் தங்களுக்குச் சூட்டிக்கொண்டு அவற்றால் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்த பெந்தேகோஸ்தே சபைத்தலைவர்கள் ஆரம்பத்தில் தங்களை சகோதரர்களாகவே பாவித்து வந்தாலும், நாளாவட்டத்தில் அவர்களும் “போதகர், Pastor” எனும் பட்டங்களைத் தங்களுக்குச் சூட்டி அவற்றால் அழைக்கப்பட்டனர், தற்போது “பேராயர் அல்லது பிஷப்” என அழைக்கப்படும் நிலைவரை அவர்களும் வந்துவிட்டனர்.

ஆக, இந்நாட்களில் “Pastor மற்றும் போதகர்” எனப்படுவோர் திரள் திரளாகக் காணப்படுகின்றனர். அவர்களைவிட சற்று குறைவாக “பிஷப்” எனப்படுவோர் காணப்படுகின்றனர். இந்த அவலநிலையை எடுத்துச் சொல்லி கண்டித்தால், இன்றைய “சில பாஸ்டர்களும் போதகர்களும் விசுவாசிகளும்” சில வசனங்களைக் காட்டி, தாங்கள் அவ்வாறு அழைக்கப்படுவதையும் அழைப்பதையும் நியாயப்படுத்துகின்றனர். அவர்கள் காட்டுகிற வசனங்கள்:

அப்போஸ்தலர் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

1 கொரிந்தியர் 12:28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

இவ்வசனங்கள் கூறுகிறபடி, “கிறிஸ்துவின் சபையில்” அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என யாவரும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் அப்போஸ்தலரின் நடபடிகள் காலத்தில் மட்டுந்தான் இருந்தனரா, அல்லது இன்றும் இருக்கின்றார்களா எனும் கேள்வி ஒருபுறம் இருக்கிறது.

இந்நாட்களில் ஒருவேளை “மேய்ப்பர்களும் போதகர்களும்” இருப்பதாக வைத்துக்கொண்டாலும், மத்தேயு 23:8-10-க்கு விரோதமாக “பாஸ்டர், போதகர், மேய்ப்பர், ஆயர்” என அவர்கள் அழைக்கப்படலாமா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

அப்போஸ்தலர் 13:1-ல் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, “அவர்கள் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தனர்” என அப்புத்தக ஆக்கியோன் கூறுகிறார். இவ்வரிகளை சற்று உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், அவரது நோக்கம்: “அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களாக, போதிக்கிறவர்களாக இருந்தனர்” என்பதைச் சொல்வதேயொழிய, “அவர்கள் தீர்க்கதரிசி, போதகர் எனும் பட்டங்களை உடையவர்களாக இருந்தனர்” எனச் சொல்வதற்கல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட சிலரது ஊழியப் பணியைச் சொல்வதுதான் புத்தக ஆக்கியோனின் நோக்கமேயன்றி, குறிப்பிட்ட பட்டப்பெயர்களை உடையவர்கள் அந்நாட்களில் இருந்தனர் எனச் சொல்வது அவரது நோக்கமல்ல.

மத்தேயு 28:19,20-ல் தமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி உபதேசியுங்கள் என இயேசு சொல்வதால், போதிக்கிறவர்கள் அல்லது போதகர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் “போதகர்” எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படக்கூடாது என்பதே மத்தேயு 23:8-10-ல் இயேசுவின் கட்டளை.

1 கொரிந்தியர் 12:28 மற்றும் எபேசியர் 4:13-ஐ எடுத்துக் கொள்வோம்.

தேவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைப் பிரித்துக் கொடுத்துள்ளார், எனவே யாரும் யாரையும்விட மேலானவர்கள் அல்ல என்பதைத்தான் இவ்வசனங்கள் மூலம் பவுல் கூறுகிறார். சபை என ஒன்று இருந்தால் அதன் அங்கத்தினரை “மேய்க்கிற அல்லது வழிநடத்துகிற” சிலர் இருக்கத்தான் செய்வார்கள், வேறு சிலர் மத்தேயு 28:19,20-ன் படி இயேசுவின் போதனைகளை போதிக்கிறவர்களாகவும் இருப்பார்கள், வேறு சிலர் மத்தேயு 24:14-ன்படி சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இதினிமித்தம், மற்றவர்கள்
தங்களை “மேய்ப்பர், சுவிசேஷகர், போதகர்” என அழைக்கவேண்டும் என அவர்கள் விரும்புவது சரியல்ல. ஏனெனில் யார் எந்தப் பணியைச் செய்தாலும் அதினால் அவர்களுக்கு எந்த மேன்மையும் இல்லை, மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல. ஆனானப்பட்ட பவுல் சொல்வதைச் சற்று படிப்போம்.

1 கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.

கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக.


இயேசுவின் சிலுவையைக் குறித்து (அதாவது பாடுகளைக் குறித்து) மட்டுமே மேன்மைபாராட்டுவதாகப் பவுல் கூறுகிறார். ஆனால் நம் சபைகளில் ஆளாளுக்குத் தங்களை “போதகர், பாஸ்டர், மேய்ப்பர், ஆயர், குரு, பேராயர், தந்தை” எனச் சொல்லி, அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்பி ஏற்கின்றனர்.

இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் ஏராளமானவர்கள், பெர்க்மான்ஸ் என்பவரை “தந்தை பெர்க்மான்ஸ்” என அழைக்கின்றனர். அந்த அழைப்பை அவரும் சந்தோஷத்துடன் ஏற்கிறார். இதுதான் இன்றைய கிறிஸ்தவ சமுதாயம் மத்தேயு 23:9-ல் இயேசு சொன்ன கட்டளைக்குத் தருகிற கனம்.

நம் மத்தியிலுள்ள சிலரை “மேய்ப்பர், சுவிசேஷகர், போதகர்” என அழைக்கவேண்டும் என்பதற்காக 1 கொரிந்தியர் 12:28 மற்றும் எபேசியர் 4:13 வசனங்களை பவுல் கூறவில்லை. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கம் வகிப்பவர்களின் ஒவ்வொரு பணியைக் குறிப்பிடத்தான் அவ்வசனங்களை பவுல் கூறினார்.

அப்போஸ்தலர் நடபடியை கூர்ந்து படித்துப் பார்த்தால், அதில் யாரும் யாரையும் “மேய்ப்பர், சுவிசேஷகர், போதகர்” என அழைத்ததாகக் காண முடியாது. அவர்கள் ஒருவரையொருவர் “சகோதரரே” என்றுதான் அழைத்தனர் (அப்போஸ்தலர் 1:16; 13:15; 15:23).

எனவே ஒருவருக்கொருவர் சகோதரராய் இருக்கிற நாம், நம்மில் சிலரை போதகர்/குரு/பிதா என அழையாமலும், நாம் அவ்வாறு அழைக்கப்படாமலும் இருந்து, மத்தேயு 23:8-10 வசனங்களைக் கனப்படுத்துவோம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?
Permalink  
 


anbu57 wrote:

பிறரைக் காட்டிலும் மேலானவர்களாக நம்மைக் காட்டக்கூடிய ”ரபீ, வழிகாட்டி, போதகர்” எனும் பட்டப்பெயர்களில் நாம் அழைக்கப்படவும் வேண்டாம், “பிதா” என்கிற பட்டப்பெயரில் யாரையும் அழைக்கவும் வேண்டாம் என்பதே மத்தேயு 23:8-10 வசனங்களில் இயேசு கூறியுள்ள கட்டளைகளின் சாராம்சம்.


தாங்கள் கருத்து  முற்றிலும் உண்மையிருக்கிறது!
எனக்கு தெரிந்து ஒரு சாதாரண மனிதர் சிறிதுநாள் ஓர் ஊழியரிடம் சப். பாஸ்டராக ஊழியம் செய்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து இவர் தனியாக சபை ஆரம்பித்தார். சபைக்கு மொத்தம் பத்து பதினைத்து விசுவாசிகள்தான் வருவார்கள். ஆனால் அவருக்கோ தன்னை எல்லோரும் பாஸ்டர் என்று கூப்பிடவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதை அறியமுடிந்தது.
அதாவது பரவாயில்லை.

அவருடைய மனைவியை "எல்லோரும் பாஸ்டரம்மா"
என்றுதான் கூப்பிடவேண்டும், இல்லையேல் அவர்கள் 
சரியாக பேச மாட்டார்கள். மேலும் பாஸ்டர் பிரசங்கத்தின்போது
அடிக்கடி அவர்மனைவியை பாஸ்டரம்மா என்றுசொல்லி அவர்களுக்கு கனத்தை உண்டாக்குவார்.
இதையெல்லாம் பார்க்கும்போது மனிதனுக்கு இந்த பட்டங்களின் மேல்தான் எவ்வளவு ஆசை என எண்ணத் தோன்றும்.
எந்தப் பாவமும் முதன் முதல் செய்யும்போது கொஞ்சம் உறுத்துதலாக இருக்கும். ஆனால் நாள் ஆக ஆக அது சகஜமாகி, பின்னர் அது அவசியத் தேவை போல ஆகிவிடும்! அதேபோல் முதன்முதலில் ஒருவர் "பாஸ்டர்" என்று அழைக்கப்படும்போது சற்று பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாள் ஆக ஆக தன்னை எல்லோரும் பாஸ்டர் என்று அழைக்க வேண்டும் என்றும் அப்படி அழைக்காதவர்கள்மேல் எரிச்சல் வருவதும் அவர்களிடம் பேச்சை குறைப்பதும் நிச்சயம் நடக்கும்.
எனவே இயேசுவின் போதனைபடி   துவக்கத்திலேயே பாஸ்டர் என்று அழைப்பதையும் அழைக்கப்படுவதையும் தனக்கு கிடைக்கும் பட்டத்தையும்  ஒதுக்கினால் நிச்சயம் மேன்மை உண்டு! இல்லையேல் பெருமை என்ற பாவம் நம்மை ஆட்கொள்ளகூடும்.


-- Edited by SUNDAR on Wednesday 1st of December 2010 08:03:23 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?
Permalink  
 


sundar wrote:
//எனக்கு தெரிந்து ஒரு சாதாரண மனிதர் சிறிதுநாள் ஒரு ஊழியரிடம் சப். பாஸ்டராக ஊழியம் செய்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து இவர் தனியாக சபை ஆரம்பித்தார். சபைக்கு மொத்தம் பத்து பதினைத்து விசுவாசிகள்தான் வருவார்கள். ஆனால் அவருக்கோ தன்னை எல்லோரும் பாஸ்டர் என்று கூப்பிடவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதை அறியமுடிந்தது.//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, இன்றைய ஏராளமான பாஸ்டர்கள் மற்றும் போதகர்களின் மனநிலைக்கு ஓர் உதாரணமாக சகோ.சுந்தர் கூறியுள்ள பாஸ்டர் விளங்குகிறார்.

இவ்வுலகில் 2 விதமான மனிதர்கள் உண்டு. ஒரு பிரிவினர், நான் “எலிக்குத் தலையாக இருப்பதைவிட, புலிக்கு வாலாக இருப்பதைத்தான் விரும்புகிறேன்” என்பார்கள். அதாவது சிறிய குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பதைவிட, பெரிய குழுவின் கடைநிலையில் இருப்பதையே விரும்புவதாகச் சொல்வார்கள்.

மற்றொரு பிரிவினரோ, “நான் புலிக்கு வாலாக இருப்பதைவிட, எலிக்குத் தலையாக இருப்பதையே விரும்புகிறேன்” என்பார்கள். அதாவது, பெரிய குழுவின் கடைநிலையில் இருப்பதைவிட, சிறிய குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பதையே விரும்புவதாகச் சொல்வார்கள்.

இந்த 2-வது பிரிவினரைப் போலத்தான் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பலரும் இருக்கின்றனர். கேட்டால், 1 கொரி. 12:28 மற்றும் எபேசியர் 4:13 வசனங்களைச் சுட்டிக்காட்டி, “என்னையும் தேவன் போதக ஊழியத்திற்கு அழைத்துள்ளார், மேய்ப்பன் ஊழியத்திற்கு அழைத்துள்ளார்” என்று சொல்லி, தங்களுக்குத் தாங்களே, பாஸ்டர், ரெவரெண்ட், பிஷப் எனும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டு, தேவ அழைப்பின்படியே தாங்கள் ஊழியம் செய்வதாகச் சொல்கின்றனர்.

1 கொரி. 12:28 மற்றும் எபேசியர் 4:13 வசனங்களைச் சுட்டிக்காட்டும் இவர்கள், மத்தேயு 23:8-10-ல் இயேசு சொல்லியதை சற்றும் சட்டைசெய்வதில்லை.

எனது வசனத்திற்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப்பார்ப்பேன் என ஏசாயா 66:2-ல் தேவன் கூறுகிறார். ஆனால் இன்றைய பட்டப்பெயர் விரும்பிகளுக்கு வசனங்களைக் குறித்த நடுக்கம் சிறிதும் கிடையாது. தங்கள் செயலுக்கு ஆதரவான வசனம் எங்காவது இருக்கிறதா என்பதைத்தான் இவர்கள் தேடுவார்களேயொழிய, வசனத்துக்கு மீறி நாம் நடந்துவிடக்கூடாதே என சற்றும் நினைப்பதில்லை.

அதனால்தான் மத்தேயு 23:8-10 வசனங்களில் இயேசு அத்தனை தெளிவாகக் கூறியுள்ளபோதிலும், 1 கொரி. 12:28 மற்றும் எபேசியர் 4:13 போன்ற வசனங்களைச் சுட்டிக்காட்டி, இயேசுவின் வார்த்தைகளை மீறத் துணிகின்றனர்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
போதகர்/குரு/பிதா என அழைக்கலாமா/அழைக்கப்படலாமா?
Permalink  
 


chillsam wrote in Tamil Christians
//எல்லாவற்றுக்கும் மூல பாஷையிலிருந்து பொருளை எடுத்து போதிக்கும் அன்பு அவர்கள் இந்த குறிப்பிட்ட வார்த்தையின் மூலபாஷை அர்த்தத்தை ஆராயாத காரணம் என்னவோ?

போதகர் எனும் வார்த்தை எபிரேய மொழியில் H7227 rab என்றும் கிரேக்க மொழியில் G4461 hrab-bee' என்றும் குறிப்பிடப்படுகிறது; அதன் தமிழ் சொல்லானது இரண்டுக்கும் பொதுவாக இருக்கிறது; அதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

மூலபாஷையின் படி rhabbi எனும் சொல்லுக்கு எஜமானர் என்றும் G2519 kath-ayg-ay-tace' நடத்திச் செல்பவர் என்றும் சொல்லலாம்; இதுவே மத்தேயு.23:8 ல் ஆண்டவர் கட்டளையிட்டது; உதாரணத்துக்கு ஊழியக்காரர்கள் யாரையாவது ஆண்டவரே என்றால் பாவமாகும்; தமிழ் சொல்லர்த்தப்படி ஐயா என்று அநேகரை விளிக்கிறோம்; அதுவும் பாவமே; ஆனாலும் நம் உணர்வில் அப்படிப்பட்ட எண்ணமில்லாததால் பாவமாகக் கருதப்படாது என்று அறியலாம்.

ஆனால் அப்போஸ்தலர்.13:1 மற்றும் 1.கொரிந்தியர்.12:28,29 ஆகிய வேத வசனங்களில் மூலபாஷையான கிரேக்கத்தில் G1320 didaskalos எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது; இது முற்றிலும் வேறு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது; இதன் அடிப்படையிலேயே போதகர் அல்லது மேய்ப்பர் என்று வழங்கப்படுகிறது; இதற்கு instructor என்றும் தமிழில் பயிற்சியாளர் என்றும் ஓரளவு பொருளை மாற்றி கூறலாம்; இதன்படி போதிப்பவர் என்ற அர்த்தத்தில் போதகர் என்றாலும் தவறில்லை;

அதாவது G1320 இன் படி didaskalos என்றும் G1321 didaskō என்றும் வழங்கப்படுகிறது; இதன்படி கற்று - கற்பிப்பவர் என்றும் கூறலாம்; ஏனெனில் 1.யோவான்.2:27 இல் ஆவியானவரே போதிக்கிறவர் என்ற வசனத்திலும் இதே சொற்கள் காணப்படுகிறது; இதனால், "பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். " என்று நம்முடைய ஆண்டவர் சொன்னதும் (மத்தேயு.10:20) நிரூபணமாகிறது.//

chillsam wrote in Youwana Janam
//நாலு எழுத்து படிச்சிட்டு அதான் "ABCD" ஆட்டம் போடற இவங்களுக்கே இவ்வளவு "இது" இருந்தால் இது எதுவுமே இல்லாதவர்களிடம் சத்தியத்தைக் கற்ற நமக்கு எவ்வளவு இருக்கவேண்டும்..?!

எதுக்கெடுத்தாலும் "மொழிபெயர்ப்பு கோளாறு " என கொக்கரிக்கும் மதியீனத்தையே சொல்கிறேன்;//



அதாவது எதுக்கெடுத்தாலும் மொழிபெயர்ப்பு கோளாறு என மதியீனமாகக் கொக்கரியாமல், நமக்குப் பாதகமான வசனங்களில் மட்டும் (உ-ம்: பாஸ்டர் என நாம் அழைக்கப்படுவதற்கு பாதகமான வசனங்களில்) அடக்கமாக மொழி பெயர்ப்பைச் சொல்லி தப்பிப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் புத்திசாலி சில்சாம்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard