நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010
மோகன் சி.லாசரஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியுள்ளதா? [5 vote(s)]

ஆம்
20.0%
இல்லை
80.0%
திட்டமாகச் சொல்லமுடியவில்லை
0.0%
பதில் தர விருப்பமில்லை
0.0%


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010
Permalink  
 


இயேசு விடுவிக்கிறார் தளத்தின் ஒரு தொடுப்பில், ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010 என்ற தலைப்பில் சில தீர்க்கதரிசனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

//தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன். 2.நாளா. 7:14

தேசத்தை சுதந்தரியுங்கள்

2004ம் ஆண்டு ஒரு நாள் சகோதரர் (அதாவது மோகன் சி. லாசரஸ்) தேவ சமுகத்தில் ஜெபித்த பொழுது, “இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, ஆசீர்வாதத்திற்காக என் பிள்ளைகள் வடித்த கண்ணீர் என் சமுகத்தை எட்டியிருக்கிறது. நான் இந்த தேசத்தை ஆசீர்வதிக்கப்போகிறேன். இந்த ஆசீர்வாதம் முதலாவது தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பமாகும். எனவே தமிழ் நாட்டைக் குறித்து அதிக கவனம் செலுத்து” என்று தேவன் திருவுளம்பற்றினார்.

தேவகட்டைளக்கு கீழ்படிந்ததின் விளைவுதான் ஆசீர்வாதமான தமிழ் நாடு 2010 தரிசனம். இந்த தரிசனம் நிறைவேறும் பொழுது தமிழ்நாட்டில்

1. ஆவிக்குரிய ரீதியில் ஆச்சரியமான மாற்றங்களை காணப்போகிறோம். எங்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பெருகியிருப்பார்கள். சபைகள் வளர்ந்து பெருகும். ஆயிரம் ஆத்துமாக்கள் உள்ள சபைதான் சிறிய சபை என்றழைக்கப்படும்.
2. ஆளுகிறவர்கள், அதிகாரிகளின் சுபாவங்களில் வியத்தகு மாற்றங்களை காணப்போகிறோம். லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான நிர்வாகத்தை காணப்போகிறோம்.
3. பொருளாதார நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஆசீர்வாதமான முன்னேற்றம் ஏற்படும். எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கும்.//

2010-ம் வருடம் முடிவதற்கு 1 மாதமே உள்ள நிலையில், இத்தீர்க்கதரிசனங்களில் ஏதேனும் நிறைவேறியுள்ளனவா என்பதை தள அன்பர்கள் ஆராய்ந்தறிந்து கூறும்படி வேண்டுகிறேன்.

இவை நிறைவேறாமற் போனாலும், இவை பொய்த் தீர்க்கதரிசனம் என யாரும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இவை நிறைவேறுவதற்கான சில நிபந்தனைகளையும் மோகன் சி.லாசரஸ் அறிவித்துள்ளார். அவை:

//இப்படிப்பட்ட மாற்றங்கள் வரவேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய காரியங்களையும் ஆவியானவர் கட்டைளயிட்டார்.

1. தேசத்தை ஜெபத்தால் மூடுங்கள்
2. தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள்
3. தேசத்தை சுதந்தரியுங்கள்//

இப்படிச் சொல்லி, ஜெபயாத்திரை, வசன போஸ்டர்கள் அடிப்பது, ஜெபநடை மூலம் சுவிசேஷம் அறிவித்தல் போன்ற சில காரியங்களை கடந்த சில வருடங்களாக அவர் செய்து வருகிறார். அவற்றைக் குறித்து அவரே தந்துள்ள தகவல்கள்:

//தேவ கட்டைளையை நிறைவேற்றும்வண்ணம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 2005 பெப்ருவரி 16ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை 40 நாட்கள் ஆசீர்வாத ஜெபயாத்திரை (Blessing Prayer Journey) ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டு பேருந்துகளில் 70 ஜெபவீரர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டணங்கள், கிராமங்கள் தோறும் சென்று ஜெபித்தோம். இரவில் மாவட்டத் தலை நகரங்களில் எல்லாத் திருச்சபைகளைச் சேர்ந்த தேவப்பிள்ளைகளை கூட்டிச் சேர்த்து தமிழ்நாடு மற்றும் அந்த மாவட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக கண்ணீரோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. இதன் விளைவை உடனடியாக கண்கூடாக கண்டோம்.

அசுத்த ஆவிகளின் அரண்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டது

எத்தனையோ முறை கடல் சீற்றம் வந்தும் சுனாமி வராமல் நம் தேசம் பாதுகாக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகள் கண்டிராத அளவு தமிழ்நாடு முழுவதும் ஆசீர்வாதமான மழை பெய்தது, அணைகள் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது

ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆசீர்வாதமான திட்டங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டன.

இப்படி எத்தனையோ காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து 2006ம் ஆண்டு 31 நாட்களும் 2007ம் ஆண்டு 28 நாட்களும் ஆசீர்வாத ஜெப யாத்திரையை நிறைவேற்றினோம். இதன் விளைவாக தமிழ் நாடு, மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படகூடிய அளவில் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.

தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள் என்ற இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற இலட்சக்கணக்கான கைப்பிரதிகள் அச்சடித்து ஊழியம் செய்கிற தேவப்பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். மேலும் ஈஸ்டர் பண்டிகையை திருவசன பண்டிகையாக அனுசரித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் வசன போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான வசன டிஜிட்டல் போர்டுகள் தமிழகமெங்கும் வைக்கப்பட்டது.

தேசத்தை சுதந்தரியுங்கள் என்ற பிரதான கட்டளையை நிறைவேற்ற தமிழகமெங்கும் மாவட்டந்தோறும் இயேசுவின் சேனை உருவாக்கப்பட்டு ஜெபநடை செய்து சுவிசேஷம் அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இயேசுவின் சேனையாக பயிற்சி பெற்ற ஜெப வீரர்கள் தங்களுடைய மாவட்டங்களில் ஒவ்வொரு ஞாயிறும் கூட வர கெத்சமனே ஜெபமையம் உருவாக்கப்பட்டு ஜெபிக்கவும், ஊழியம் செய்யவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆத்துமாக்கள் திரள் திரளாக மனந்திரும்பி வரும்பொழுது, அவர்களை பராமரிக்கிற, சத்தியத்திற்குள் வழிநடத்துகிற பொறுப்பு திருச்சபையினுடையது. எனவே மாவட்டங்கள் தோறும் போதகர்களுக்கென்று சபை வளர்ச்சி போதகர்கள் கருத்தரங்கு நடத்தி அவர்களின் தரிசனத்தின் எல்லையை விரிவடையச் செய்து வருகிறோம். இவ்வூழியத்தில் மூத்த போதகர் பாஸ்டர் ரத்தினம்பால் அவர்கள் மிகவும் உறுதுணையாக உள்ளார்கள்.//

மேலே கூறப்பட்ட காரியங்களைச் செயல்படுத்துவதற்கு கணிசமான பணத்தை விசுவாசிகளிடம் வசூலிக்க அவர் தவறவில்லை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மோகன் சி.லாசரஸ் கூறியுள்ள தகவல்களின்படி தமிழகம் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவரது தகவல்கள் பொய்யா?

தள அன்பர்கள் தாங்கள் அறிந்ததைக் கூறும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

உபாகமம் 18:20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய நாமத்தில் ஒரு வார்த்தையை சொன்னால், அவர் சொல்வது நிறைவேறுகிறதா இல்லையா என்பதைப் பார்த்து, அவர் சொல்வது நிறைவேறவில்லையெனில் அவரைக் கொல்ல வேண்டும் எனும் கட்டளையை அன்றைய இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்துள்ளார்.

தேவனுடைய நாமத்தினால் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசியை தேவன் எவ்வளவாய் வெறுத்து புறம்பே தள்ளுகிறார் என்பதற்கு இது ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆனால் இன்றைய விசுவாசிகளான நாமோ ஒருவரது தீர்க்கதரிசனம் பொய்த் தீர்க்கதரிசனமா இல்லையா என்பதை அறிவதில் மிகவும் நிர்விசாரமாக இருக்கிறோம்.

இத்திரி துவங்கி சுமார் 6 மாதங்கள் ஆகிவிட்டன. இத்தளத்தினுள் எத்தனையோ பேர் வந்து செல்கின்றனர்; ஆனால் எவருமே தங்கள் கருத்தைப் பதிய முன்வரவில்லை. என்னைத் தவிர இருவர் மட்டும் தங்கள் வாக்கைப் பதிக்க முன்வந்துள்ளனர். அவர்களுங்கூட தங்கள் வாக்கிற்கு ஆதாரமான கருத்தை சொல்ல முன்வரவில்லை.

மோகன் சி.லாசரஸின் தீர்க்கதரிசனங்களை மீண்டுமாக நினைவூட்டுகிறேன். அவை நிறைவேறியுள்ளதா இல்லையா என்பது பற்றிய கருத்துக்களைப் பதியும்படி தள அன்பர்களை மீண்டும் வேண்டுகிறேன்.

2010-ம் வருடத்திற்குள் நிறைவேறும் என்று சொல்லி மோகன் சி.லாசரஸ் அறிவித்த தீர்க்கதரிசனங்கள்:

1. ஆவிக்குரிய ரீதியில் ஆச்சரியமான மாற்றங்களை காணப்போகிறோம். எங்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பெருகியிருப்பார்கள். சபைகள் வளர்ந்து பெருகும். ஆயிரம் ஆத்துமாக்கள் உள்ள சபைதான் சிறிய சபை என்றழைக்கப்படும்.
2. ஆளுகிறவர்கள், அதிகாரிகளின் சுபாவங்களில் வியத்தகு மாற்றங்களை காணப்போகிறோம். லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான நிர்வாகத்தை காணப்போகிறோம்.
3. பொருளாதார நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஆசீர்வாதமான முன்னேற்றம் ஏற்படும். எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கும்.

மோகன் சி.லாசரஸின் தீர்க்கதரிசனப்படி, இன்றைய ஒவ்வொரு சபையிலும் குறைந்தது 1000 பேர் இருக்கின்றனரா?

இன்றைய அரசாங்க நிர்வாகம் லஞ்சமற்றதாக, ஊழலற்றதாக, நீதி நேர்மையுள்ளதாக, தூய்மையானதாக உள்ளதா?

தமிழக மக்கள் யாவரும் பொருளாதாரத்தில் மேலோங்கியுள்ளனரா, வாழ்க்கை தரத்தில் மேம்பட்டுள்ளனரா, ஆசீர்வாதம் பெற்றுள்ளனரா?

சிந்தித்து பதில் தரும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

//1. ஆவிக்குரிய ரீதியில் ஆச்சரியமான மாற்றங்களை காணப்போகிறோம். எங்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பெருகியிருப்பார்கள். சபைகள் வளர்ந்து பெருகும். ஆயிரம் ஆத்துமாக்கள் உள்ள சபைதான் சிறிய சபை என்றழைக்கப்படும்.
2. ஆளுகிறவர்கள், அதிகாரிகளின் சுபாவங்களில் வியத்தகு மாற்றங்களை காணப்போகிறோம். லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான நிர்வாகத்தை காணப்போகிறோம்.
3. பொருளாதார நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஆசீர்வாதமான முன்னேற்றம் ஏற்படும். எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கும்.//

இவர்களை போன்ற கள்ள தீர்க்கதரிசிகள் இது போன்ற வசனங்களை (எந்நேரமும் வேதத்தை கைகளில் வைத்திருப்பது போன்று தோன்றினாலும்) வாசிப்பதே இல்லை போல்:

II தீமோத்தேயு 3: 1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,  4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

வேதம் இப்படி பட்ட ஒரு காலத்தை தான் வரும் காலம் என்கிறது, ஆனால் இந்த கள்ள தீர்க்கதரிசிகள் மாத்திரம் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று காரியங்கள் நிறைவேறும் என்கிறார்களோ!! ஆகவே தான் கிறிஸ்து இவர்களை குறித்து சொல்லும் போது,

மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

இவர்கள் சொல்லுவது நடந்ததா என்பதை இவர்களே பார்ப்பதில்லை, மக்களுக்கு (இவரின் விசுவாசிகளுக்கு) அதை குறித்து அக்கறை இல்லை!! ஹிப்னாட்டிஸம், மெஸ்மெரிஸம் போன்ற பல கலைகளால் ஜனங்களை கட்டி வைத்து இந்த நவீன தீர்க்கதரிசிகள் ஏமாற்றிக்கொண்டு, பெறுகிக்கொண்டு இருப்பதை அவர்களின் செயல்களால் நாம் அறிந்துக்கொள்ள முடியும்!!

சிலர் பூகம்பம் வரும், கடல் கொந்தலிக்கும், யுத்தம் நடக்கும் போன்ற வேதத்தில் சொல்லப்பட்டதை வைத்து இவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லியும் பிழைப்பு நடத்துவதையும் பார்க்க முடிகிறதே!! செய்திகளில் வரும் ஒரு கடல் கொந்தலிப்பை பார்த்தவுடன், போன வருஷம் அந்த சபையில் இதை நான் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தேன் என்றும் வேறு சொல்லுவார்கள்!!

இப்படிப்பட்டவர்கள் இப்படியே தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள்!! நாம் இவர்களை நிதானித்து இவர்களின் வேஷத்தை துவைத்து எடுப்போம்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

கருத்து தெரிவித்த சகோ.பெரியன்ஸ்-க்கு நன்றி!

மோகன் சி.லாசரஸின் “தரிசனப்படி”, 2010-ல் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு, “லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான” அரசாக இருந்துள்ளது. ஆனால் அந்தோ பரிதாபம்! அப்படிப்பட்ட நல்ல அரசு, 2011 தேர்தலில் தமிழக மக்களால் தூக்கியெறியப்பட்டுள்ளது.

மோகன் சி.லாசரஸின் “தரிசனப்படி”, லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான அரசாக இருந்த அந்த அரசை மக்கள் ஏன் தூக்கியெறிந்தனர்; அதை ஏன் தேவன் அனுமதித்தார்?

ஒருவேளை தற்போதைய அ.தி.மு.க. அரசு, முந்தைய அரசைவிட அதிக நீதி நேர்மையான, தூய்மையான அரசாக இருக்குமென மோகன் சி.லாசரஸ் பதில் சொல்வாரோ?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இதுவரை இந்த வாக்கெடுப்பில் 5 பேர் தங்கள் வாக்கைப் பதிந்துள்ளனர். இன்னமும் வாக்குப்பதியாதவர்கள் பின்வரும் தொடுப்புக்குச் சென்று ஆசீர்வாதமான தமிழ்நாடு எனும் பாடலை உன்னிப்பாகக் கேட்டு, அப்பாடலின்படி தமிழகத்தில் நடக்கிறதா என்பதைப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

http://www.youtube.com/watch?v=x5xKmVZDPBY



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard