நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறிஸ்து தேவதூதராக இருந்தவரா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசுகிறிஸ்து தேவதூதராக இருந்தவரா?
Permalink  
 


பிதா, குமாரன், பரிசுத்தஆவி எனும் 3 சமமான தேவர்களில் ஒருவராக இயேசுவைப் பாவிப்போருக்கு, இயேசுகிறிஸ்து தேவதூதரா எனும் கேள்வி மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகிலும் இக்கேள்வி எழும்புவதற்குத் தூண்டுதலாக பின்வரும் வேதவசனங்கள் இருப்பதால், இக்கேள்வியைக் கேட்கத்தான் வேண்டியதுள்ளது.

யாத்திராகமம் 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

யாத்திராகமம் 14:19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

யாத்திராகமம் 23:20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

யாத்திராகமம் 23:23 என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

யாத்திராகமம் 32:34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.

யாத்திராகமம் 33:2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.

இவ்வசனங்களின் அடிப்படையில், இயேசுவும் தேவதூதர்களில் ஒருவராக ஏன் இருக்கக்கூடாது என இறைவன் தளத்தின் ஒரு திரியில் சகோ.பெரியன்ஸ் கேட்டுள்ளார். அவரது கேள்விக்குப் பதிலென்ன? தள அன்பர்கள் தங்கள் கருத்தைக் கூறும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்து இப்பொழுது ஒரு தேவ தூதர் என்கிற ஸ்தானத்தில் இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை!! மாம்சத்தில் இயேசுவாக வரும் முன் இருந்த நிலையை மாத்திரமே நான் தேவதூதர், அல்லது "என் தூதனானவர்" அல்லது "பிரதான தூதன்", அல்லது "தூதனானவர்" என்று சொல்லுகிறேன்!! விழுந்து போவதற்கு முன்பு எப்படி லூசிஃபர் என்கிற தேவ தூதன் இருந்தானோ, அதைவிட மேலான ஸ்தானமான பிதாவின் நேரடியான சிருஷ்டிப்பான கிறிஸ்து தேவனின் "தூதனானவர்"ஆக இருந்தார் என்று மாத்திரம் சொல்லுகிறேன்!! ஆகவே தான் அவருக்கு மாத்திரம், லோகோஸ் என்கிற ஒரு பதமும் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது!!

நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனங்களில் யார் அந்த தூதனானவர், அல்லது என் தூதன் எனப்படுபவர்!?? கிறிஸ்து தான் இருந்த நிலையிலிருந்து மாம்சத்தில் இயேசுவாக பிறந்து தேவன் தனக்கு நியமித்ததை செய்து முடித்து, இப்பொழுதோ இரட்சகராகவும், நமக்கு (கிறிஸ்தவர்களுக்கு) பரிந்துறையாளராகவும் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்!!

நான் தேவ தூதனாக இருந்தார் என்பது அவர் மாம்சத்தில் இயேசுவாக வருவதற்கு முன் உள்ள நிலையை மாத்திரமே என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்!! இதில் கோபம் கொள்வதற்கோ, அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்!! மற்றபடி அவர் மாம்சத்தில் வரும் முன் என்னவாக இருந்தார் என்று வேதம் வேறு ஏதாவது சொல்லுகிறது என்றால் பதிவில் எழுதுங்கள்!!

லூசிஃபர் என்கிறவன் கொண்டு வந்த மரணத்திலிருந்து இரட்சிக்கும்படியே கிறிஸ்து என்கிற மிக்கேல் (தேவனின் தற்சொருபமானவர்) இரட்சகராக இந்த பூமிக்கு அனுப்பட்டார்!! அவர் சுயமாக வராமல் தேவனின் சித்தம் செய்யவே வந்தார் என்கிறது வேதம்!! அவர் தூதனாக இருந்தார் அதுவும் "என் தூதன்" அல்லது "தூதனானவராக" இருந்தார் என்பதில் என்ன அதிர்ச்சி!??

இப்பொழுதும் அவர் தூதனாக இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை!! இருந்த ஒரு நிலையிலிருந்து தற்போது உயர்த்தப்பட்ட நிலையில், பிதாவின் வலது பாரிசத்தின் வீற்றிருக்கிறார் என்பதில் எந்த தவறும் இல்லையே!! தொடக்க முதல் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று நினைப்பவர்களுக்கு சத்தியம் எல்லாமே கசப்பாக தான் இருக்கும், அவர்கள் எதையுமே ஏற்ற மனமில்லாதவர்களாக தான் இருப்பார்கள்!!

இயேசு கிறிஸ்து தேவதூதரா? என்கிற தலைப்பிற்கு பதில் இயேசு கிறிஸ்து தேவதூதராக இருந்தவரா? என்பது தான் பொருத்தமாக இருக்கும்!! தலைப்பை படித்துவிட்டு, இப்பொழுதும் இயேசு கிறிஸ்து தேவதூதர் தான் என்று யாருக்கும் இடறல் வேண்டாமே!!



-- Edited by Bereans on Wednesday 19th of January 2011 04:35:26 AM

-- Edited by Bereans on Wednesday 19th of January 2011 05:24:31 PM

__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரியன்ஸ்-ன் கருத்தின் அடிப்படையில்தான் இத்திரி துவக்கப்பட்டது. அவர் “இயேசு மாம்சத்தில் வருவதற்கு முன்தான் தேவதூதராக இருந்தார்” என்றும் “தற்போது அந்நிலையில் இல்லை” என்றும் சொல்கிறார்.

எனவே அவரது ஆலோசனைப்படி “இயேசு தேவதூதராக இருந்தவரா” என திரியின் தலைப்பு மாற்றப்படுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

நன்றி அன்பு அவர்களே!!

என் வேண்டுகோள் ஏற்றுக்கொண்டு சரியான தலைப்பை கொடுத்ததிற்காக நன்றி!!

என் வாதம் நிறைவேறிற்று, வேறு யாரும் பதிவுகளை தந்தால் தொடர்ந்து விவாதிக்கலாம்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு தேவதூதராக இருந்தார் என்பதற்கு ஆதாரமாக பல வசனங்களைத் தந்துள்ளீர்கள். அவ்வசனங்களில் “தூதன்” எனச் சொல்லப்பட்டிருப்பவர் “இயேசுதான்” எனத் திட்டமாகச் சொல்லலாம்தான். ஆனால் அவ்வசனங்களில் அவர் “தூதன்” என ஏன் சொல்லப்பட்டார்? “தூதன்” எனச் சொல்லப்பட்டதால் அவர் “தூதனாகத்தான்” இருக்கவேண்டுமா? அல்லது அதைவிட மேலான நிலையிலும் இருக்கமுடியுமா? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

சங்கீதம் 45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.


இவ்வசனங்களில் “ஆண்டவரே” என அழைப்பதும், “தேவனே” என அழைப்பதும் இயேசுவையே என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். தாவீது “ஆண்டவரே” என அழைப்பதென்பது சாதாரண மனிதரை அழைக்கிற ஓர் அழைப்புக்கு ஒப்பானதல்ல, அதைக் காட்டிலும் மேன்மையானது என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

“தேவனே” எனும் அழைப்பையும் மேன்மையான ஓர் அழைப்பாகவே நான் கருதுகிறேன். இவற்றின்படி பார்த்தால், இயேசுவும் ஒரு “தூதன்” நிலையில்தான் இருந்தார் எனச் சொல்லமுடியுமா?

தூதர்களின் பணியை இயேசு செய்ததால், யாத். 3:2 போன்ற வசனங்களில் அவரைத் “தூதன்” எனக் கூறியிருக்கலாம். ஆனால் அதற்காக அவர் “தூதன்” நிலையில்தான் இருந்தார் எனக் கூறமுடியுமா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

அன்புள்ள அன்பு அவர்களே,

தாங்கள் குறிப்பிட்ட இரண்டு வசனங்களுமே தாவீது தீர்க்கதரிசினமாக சொன்ன வார்த்தைகளே. சங். 110:1ஐ பவுலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

1 கொரி 15:25. எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. 26. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். 27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே;

இப்படி பிதாவாகிய தேவன் எல்லா சத்துருக்களையும் இயேசுவின் பாதத்திற்கு கீழ்ப்படுத்துவார். அதைத்தான் சங் 110:1ம் சொலுகிறது!! இது கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் நிறைவேறினது இல்லை, மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவிடம் இது நிறைவேறவில்லை; இது நிறைவேறும் காலம் முடிவின் போது தான் என்பது 1 கொரி 15ல் தெளிவாக இருக்கிறது!!

மேலும் சங். 45:7ல் தேவன் என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை "ஏலோஹிம்" என்று இருக்கிறது, ஏலோஹிம் என்பதன் அர்த்தம் தாங்கள் அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன்!!

கிறிஸ்து தூதனாக இருந்தார் என்று பல வசனங்கள் சொல்லியிருக்கிறது, ஆனால் அவர் மற்ற தூதர்களை போல் இல்லாமல், தேவனின் குமாரன் எனப்பட்டவராக இருந்தவர், தேவனின் நேரடியான சிருஷ்டிப்பானவராக இருந்தவர்!! மற்றவை எல்லாம் (லூசிஃபர் உட்பட) கிறிஸ்துவே சிருஷ்ட்டித்தார் என்பது தான் வேதம் நமக்கு போதிக்கிறது!!

தூதனுக்கு எபிரேய வார்த்தையான மலாக் (mal'ak) என்பதும், என் தூதனானவர் என்பதற்கு மலாக்கி (Mal`akiy) என்றே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! இயேசு கிறிஸ்து தூதனாக இருந்தவர் என்றவுடன், ஏன் அதை தப்பாக என்ன வேண்டும்!! அவர் இப்பொழுது இருக்கும் நிலையை நான் அப்படி சொல்லவில்லையே!! மேலும் தூதன் என்பவன் அதுவும் தேவனின் "என் தூததானவர்" என்பதிலும் நிச்சயமாக நிலைகள் வேறுபாடு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!! தூதன் என்பதை ஏன் கேவலமாக பார்க்கவேண்டும்? தூதன் என்பவன் தேவனின் செய்தியை எடுத்து வரும் நபர் தானே!! கிறிஸ்து வெறும் செய்தியை எடுத்து வருபவராக மாத்திரம் அல்லாமல், தேவனின் சார்பாக அவரின் குமாரனாக இருந்து, லோகோஸாக இருந்தார்!! தேவன் மனிதர்களிடம் பேசவும், சொல்லவும், செய்யவும்  இருப்பதை அவரின் தூதனானவராக இருந்த கிறிஸ்து (இயேசு என்று நான் சொல்லவில்லை, ஏனென்றால் இயேசு என்கிற பெயர் அவர் மாம்சத்தில் வந்த பிறகு வந்த பெயர்) சொன்னார் செய்தார்!! அவரே அக்கினிஸ்தம்பமாகவும், மேக ஸ்தம்பமாகவும் வந்தார்!! நிச்சயமாக "சாதாரண" தூதர்களைவிட கிறிஸ்து விசேஷித்த நிலையில் தான் இருந்தார்!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

தங்களின் பதிவை மறுப்பதற்கில்லை. ஆகிலும் யாத்திராகம புத்தகத்தின் சில வசனங்களை நீங்கள் இறைவன் தளத்தில் பதித்ததைப் படிக்கையில் இயேசுவும் “சாதாரண” தூதர்களில் ஒருவராக இருந்தவரா எனும் கேள்வி உண்டானதால்தான் இத்திரியை நான் துவக்கினேன்.

தற்போது உங்கள் பதிவின் மூலம் இயேசு “சாதாரண” தூதரில் ஒருவராக இருக்கவில்லை என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.

bereans wrote:
//தூதன் என்பவன் தேவனின் செய்தியை எடுத்து வரும் நபர் தானே!! கிறிஸ்து வெறும் செய்தியை எடுத்து வருபவராக மாத்திரம் அல்லாமல், தேவனின் சார்பாக அவரின் குமாரனாக இருந்து, லோகோஸாக இருந்தார்!! தேவன் மனிதர்களிடம் பேசவும், சொல்லவும், செய்யவும்  இருப்பதை அவரின் தூதனானவராக இருந்த கிறிஸ்து (இயேசு என்று நான் சொல்லவில்லை, ஏனென்றால் இயேசு என்கிற பெயர் அவர் மாம்சத்தில் வந்த பிறகு வந்த பெயர்) சொன்னார் செய்தார்!! அவரே அக்கினிஸ்தம்பமாகவும், மேக ஸ்தம்பமாகவும் வந்தார்!! நிச்சயமாக "சாதாரண" தூதர்களைவிட கிறிஸ்து விசேஷித்த நிலையில் தான் இருந்தார்!!//

கிறிஸ்து தேவதூதராக இருந்தார் என்பதோடு, இப்பூமியில் மனிதனாகவும் இருந்தார். ஆகிலும் அவர் “சாதாரண” தேவதூதருமல்ல, “சாதாரண” மனிதருமல்ல. ஏனெனில் அவர் விசேஷித்த விதமாக “தேவனின் வார்த்தையாகவும்” “தேவனின் குமாரனாகவும்” நேற்றும் இன்றும் என்றும் இருக்கிறார்.

bereans wrote:
//தூதன் என்பதை ஏன் கேவலமாக பார்க்கவேண்டும்?//

தூதன் என்பதை கேவலமாகப் பார்க்கவில்லை சகோதரரே! தூதன் மட்டுமின்றி மனிதனும் கேவலமானவன் அல்ல. கிறிஸ்துவின் position என்ன? அவரும் சாதாரண தூதன் என்ற நிலையில்தான் இருந்தாரா? அல்லது அதற்கும் மேலான நிலையில் இருந்தாரா? என்பதில் தெளிவு பெறவேண்டும் என்பதே என் எண்ணம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யௌவன ஜனம் தளத்தின் ஒரு திரியில் திரு.கொல்வின் என்பவரும் திரு.இஎல்ஓஐ4யூ என்பவரும் பின்வருமாறு எழுதியுள்ளனர்.

colvin wrote:
//பைபிள் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் பலஉள்ளது. சிலவற்றை விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்க வேண்டும். எல்லாவற்றையும் ஆராய்ச்சி, விஞ்ஞான முடிவுகளின் பிரகாரம்தான் ஏற்பேன் என்றால் உங்கள் அறிவு அவ்வளவுதான். தேவனைப் பற்றி முழுமையாக உங்கள் அறிவால் கிரகிக்க முடியுமா? அவ்வாறு இல்லையெனில் தேவனை நீங்கள் வழிபடுவதும் அர்த்தமற்றதே!(உங்கள் வாதத்தின்படி)

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)

வசனம் தெளிவானது தானே!

திரித்துவம் மனித கண்டுபிடிப்பு அல்ல. 3 நபர்கள் ஒரே தேவன். நாம் இச்சத்தியத்தை மானுடமொழிகளில் விளக்குவதற்கு திரித்துவம் என்ற பதத்தை பாவிக்கிறோம். வேதாகமத்தில் திரித்துவம் என்ற பதம் இல்லை என்பது உண்மையாயினும் திரித்துவ சத்தியத்தை மறைக்க முடியாது. இயேசுவைப் பற்றி படிக்கும்போது அவர் ஒரு சாதாரண நபராகவோ அன்றேல் ஒரு தேவதூதராவோ இருக்க வாய்பில்லை என்பது விளங்கும்.

எல்லாம் சரி இயேசு யார் ? பரித்த ஆவி யார் என்பதை இன்னும் வெளிப்படையாக  சொல்லாமல், இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்களே? அது ஏன் சகோதரரே!. உங்களுக்குதான் மூலமொழி பரிட்சயம் அதிகமாயிற்றே!/
/

eloi4u wrote:
//colvin wrote:
//எல்லாம் சரி இயேசு யார் ? பரித்த ஆவி யார் என்பதை இன்னும் வெளிப்படையாக  சொல்லாமல், இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்களே? அது ஏன் சகோதரரே!.//

அதுதானே ஏன் இது பற்றி அந்த அன்பு57 வாய்திறக்க மறுக்கிறது. கொஞ்சம் சொல்லச் சொல்லுங்களேன். இறைவன் தளத்தில் அது நம்முடைய நாதரைப்பற்றி ஏதேதோ சொல்ல வந்த கடைசியில் பாதியிலேயே ஓடிவிட்டது.

அது சொல்ல வந்ததை மாணவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் வேறொன்று அவரை மிகாவேல் தூதன் என்று சொல்லலாமா என்று கேட்டு பாசாங்கு செய்தது அப்புறம் இவைகளுக்கு ஏதோ பயம் உண்டாகி இப்போது திரித்துவம் திரித்துவம் என்று திரித்து திரித்து உளரிக்கொண்டிருக்கின்றன‌...//


இவ்விருவரும் “இயேசு யார், பரிசுத்த ஆவி யார்” என்பதற்கான எனது பதிலை அறிய மிகுந்த ஆவலுள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குப் பதில் தரும் முன்னால், திரு.இஎல்ஓஐ4யூ என்பவர் வேறு யாருமல்ல, தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பல பதிவுகளைத் தந்துள்ளவரும் கிறிஸ்தவ திரட்டியை உருவாக்கியவருமான திரு.ராஜ்குமார் என்பவரே என்பதை தள அன்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

இவர் என்னை அது, இது என அழைப்பதால் இவர் ஏதோ கிறிஸ்துவை அறியாத ஜனங்களில் ஒருவரோ என யாரும் நினைத்துவிட வேண்டாம். இவர் கிறிஸ்துவை அறிந்தவர்தான், ஆனால் அறியவேண்டிய பிரகாரமாக அறியாமல் அறைகுறையாக அறிந்தவர். அதனால்தான் கிறிஸ்துவை இவர் “தேவகுமாரன்” என்றும் சொல்லுவார், “தேவன்” என்றும் சொல்லுவார், பிதாவாகிய தேவனை தொழுங்கள் எனச் சொல்வதை நயவஞ்சகம் என்பார், “தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்று சொன்ன கிறிஸ்துவை ஆராதனை செய்யவேண்டும் என்றும் இவர் சொல்வார். இதுதான் இவர் கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கொடுக்கிற மரியாதை.

இதுமட்டுமல்ல, “கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்” என கிறிஸ்துவே நேரடியாகச் சொல்லியுள்ள போதிலும், தனது அபிமான வேதவழிகாட்டியான அற்புதம் என்பவரையும் இவர் “போதகர்” எனச் சொல்லியுள்ளார். இதுவும் இவர் கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கொடுக்கிற மரியாதைக்கு ஓர் உதாரணமாயுள்ளது.

திரு.அற்புதத்தைப் “போதகர்” என இவர் சொன்னதன் மூலம், அற்புதத்தை கிறிஸ்துவின் level-க்கு உயர்த்துகிறாரா, அல்லது கிறிஸ்துவை அற்புதத்தின் level-க்கு தாழ்த்துகிறார, அல்லது அற்புதமும் கிறிஸ்துவும் “ஒருவரே” எனச் சொல்கிறாரா என்பதை “ஒரே போதகரான” கிறிஸ்துவே அறிவார்.

ஒருபுறம் கிறிஸ்துவை ஆராதனை செய்யவேண்டும் எனச் சொல்லிக்கொண்டு மறுபுறம் கிறிஸ்துவின் வார்த்தையை உதாசீனப்படுத்துகிற இவர், கிறிஸ்துவின் தாழ்மை உபதேசத்தை உதாசீனப்படுத்தி, சகமனிதனான என்னை அது, இது எனச் சொல்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. தேவகுமாரனான இயேசுவின் முகத்திலேயே உமிழ்ந்து கன்னத்தில் அடித்த மனிதக்கூட்டத்தில் ஒருவரான இவர் என்னை அது இது எனச் சொல்லி நிந்திப்பதால் எனக்கு இழப்பு எதுவுமில்லை என்பதோடு, மத்தேயு 5:11-ன்படி எனக்கு ஒரு பாக்கியத்தைத்தான் இவர் தந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

தொடரும் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யௌவன தளத்தின் ஒரு திரியில் திரு.கொல்வின் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரே நாளில் நான் பதில் தராததால் என்னை பரிகாசம் பண்ணுகிற திரு.இஎல்ஓஐ4யூ, “கிறிஸ்து நேசன்” தளத்தில், திரு.தங்கராஜ் என்பவர் கொல்வினிடம் கேட்ட ஒரு கேள்விக்கு 40 நாட்களாகியும் கொல்வின் பதில் தரவில்லை என்பதை அறிவாரா?

திரு.தங்கராஜின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் 40 நாட்களாக ஒளிந்து கொண்டிருக்கும் கொல்வினைப் போல ஒளிந்துகொள்ளும் அவசியம் எனக்கில்லை.

அதே வேளையில், எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு தளத்தில் கொல்வின் கேட்ட கேள்விக்கு உடனடியாக நான் பதில் தராததால் என்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதற்கு, இஎல்ஓஐ4யூ எனும் ராஜ்குமாருக்கு தார்மீக அடிப்படையில் உரிமையுமில்லை.

இதையெல்லாம் புரியக்கூடிய அறிவு அவருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், தனது அபிமான வழிகாட்டியான திரு.அற்புதத்தை “போதகர்” என அழைத்ததன்மூலம் “ஒரே போதகரான” இயேசுவுக்குச் சமமாக அற்புதத்தை உயர்த்தக்கூடிய அறிவு படைத்தவரல்லவா அவர்?

என்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும் கொல்வினும் ராஜ்குமாரும், ஒரு கட்டத்தில் எனக்குப் பதில் சொல்ல முடியாத நிலை வந்தால், கிறிஸ்து நேசன் தளத்தில் தங்கராஜோடு வாதாடின கொல்வின், ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் ஒளிந்துகொண்டதைப் போல் ஒளிந்து கொள்வார்களா அல்லது நேர்மையுடன் நிற்பார்களா எனும் கேள்வி ஒருபுறம் உள்ளது. ஆயினும், கொல்வினின் கேள்விக்குப் பதில் சொல்ல எனக்குச் சற்றும் தயக்கமில்லை.  

தொடரும் ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இயேசு யார் எனும் கொல்வினின் கேள்விக்கு எனது பதில்.

முன் குறிப்பு: எனது பதில் எனத் தனியாக எதுவுமில்லை; வேதாகமம் சொல்கிற பதில்தான் எனது பதிலுமாகும்.

இயேசு யார்?

1. தேவனுடைய ஒரேபேறான குமாரன். ஆதார வசனங்கள்:

மத்தேயு 3:17 வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.


2. தேவனுடைய வார்த்தை. ஆதார வசனங்கள்:

வெளி. 19:11 அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

யோவான் 1:1,14 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.


3. ஒரு தேவன் (a God). ஆகிலும் தேவாதி தேவனாகிய யெகோவா தேவனுக்கு நிகரானவர் அல்ல. ஆதார வசனங்கள்:

யோவான் 1:1,14 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

சங்கீதம் 45:6,7 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்;


இயேசு மட்டுமின்றி, பிற மனிதர்களில் பலருங்கூட “தேவர்கள்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

யோவான் 10:35,36 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?


மோசேயானவன் பார்வோனுக்குத் தேவனாக இருந்தார் (யாத். 7:1); சாத்தானாவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான் (2 கொரி. 4:4).

4. ஒரு மனுஷன். ஆதார வசனங்கள்:

1 தீமோ. 2:6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

ரோமர் 5:15 ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

(இப்பூமியில் மனுஷகுமாரனாக வந்த கிறிஸ்து, தற்போது தேவனின் வலது பாரிசத்தில் இருக்கிறார் - அப்போஸ்தலர் 7:56: ரோமர் 8:34: எபேசியர் 1:21; கொலோசெயர் 3:1; எபிரெயர் 1:3; 1 பேதுரு 3:22; வெளி. 5:7)

5. தேவனுக்கும் மனுஷருக்கும் ஒரே மத்தியஸ்தர். ஆதார வசனங்கள்:

1 தீமோ. 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

எபிரெயர் 9:15 முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.


6. தேவனுடைய சபைக்கு தலை. ஆதார வசனங்கள்:

எபேசியர் 1:22,23 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

எபேசியர் 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.

கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்;


7. தமது சீஷருக்குச் சகோதரர். ஆதார வசனம்:

யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

தொடரும் ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

8. தேவசித்தத்தைச் செய்பவனுக்கு சகோதரன் மட்டுமின்றி மகனாகவும் இருக்கிறார். ஆதார வசனம்:

மாற்கு 3:34,35 தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே! தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

9. அவர் ஒருவரே குரு. ஆதார வசனம்:

மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

இத்தனை தெளிவான ஒரு வசனம் இருந்தும் குருவானவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிற பலர் இன்று உண்டு. இவர்களெல்லாம் அனேகமாக திரித்துவத்தை நம்புகிறவர்களே! திரித்துவத்தை நம்புவோர் எவ்வளவாய் வசனத்திற்கு எதிர்த்து நிற்கின்றனர் என்பதற்கு சாட்சியாக இது ஒன்றே போதும்.

10. இன்றைய பிரதான ஆசாரியனும் மகா பிரதான ஆசாரியனும் அவரே. ஆதார வசனங்கள்:

எபிரெயர் 3:1 பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

எபிரெயர் 4:14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

எபிரெயர் 8:2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

இவ்வசனங்கள் கூறுகிற அர்த்தங்களை திரித்துவவாதிகள் யாருமே புரிந்துகொள்ளவில்லை.

முதாவது நாம் அறியவேண்டியது: கிறிஸ்துவை அப்போஸ்தலரென்றும் பிரதான ஆசாரியரென்றும் நாம் அறிக்கை பண்ணவேண்டும் என்பதை. அதாவது தேவனுக்குப் பணி செய்கிற அப்போஸ்தலரென்றும், தேவனுக்கு ஆசாரிய ஊழியம் செய்கிற பிரதான ஆசாரியர் என்றும் கிறிஸ்துவை நாம் அறிக்கை செய்யவேண்டும் என வசனம் கூறுகிறது. பிரதான ஆசாரியனின் முக்கியமான ஆசாரிய ஊழியம், தேவனுக்கு ஆராதனை செய்வதாகும்.

அந்த ஆராதனையை பரலோகத்தின் பரிசுத்த ஸ்தலத்திலும் மெய்யான கூடாரத்திலும் கிறிஸ்து செய்துவருகிறார். ஆனால், திரித்துவவாதிகளோ தேவனுக்கு ஊழியஞ்செய்து ஆராதனை செய்துவருகிற அந்த கிறிஸ்துவையே தேவனாக்கி அவரை ஆராதனை செய்துவருகின்றனர். இது எத்தனை பெரிய அறிவீனமான செயல்?


தொடரும் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தொடர்ந்து "இயேசு யார்” எனும் கேள்விக்கான பதிலைப் பார்க்குமுன், இத்திரியின் ஒரு பதிவு சம்பந்தமாக யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகி தந்த விமர்சனமும் அதற்கான என் பதிலும் ...

சில்சாமின் விமர்சனம்:
//நம்முடைய தளத்தில் புதிதாக இணைந்துள்ள நண்பர் இராஜ்குமார் அவர்களை கேலி செய்வது போல,

//யௌவன ஜனம் தளத்தின் ஒரு திரியில் திரு.கொல்வின் என்பவரும் திரு.இஎல்ஓஐ4யூ என்பவரும் பின்வருமாறு எழுதியுள்ளனர்.//

என்று பெரியவர் அன்பு குறிப்பிடுகிறார்; அவருக்கு ஏற்கனவே மூலம் பற்றி நன்கு தெரியும் என்பதால் மூலத்தைக் குறித்து நாம் அவருக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை; "ஏலோயி" என்பது வேதத்தில் ஆண்டவர் தம்முடைய சிலுவையிலறையப்பட்ட நிலையில் துயரத்துடன் கூப்பிட்டுச் சொன்ன வார்த்தையாகும்; அதனை வேண்டுமென்றே திரித்து ஏதோ நான்கு எழுத்தைப் போலக் குறிப்பிட்டதில் அவருடைய மதியீனம் விளங்குகிறது.

"இஎல்ஓஐ4யூ" என்றால் "உனக்காக ஒரு தேவன்" என்று பொருள் படும் என்பது எனது சிற்றறிவுக்கே புலப்படுகிறது; ஏலோயி எனும் அரமேய வார்த்தைக்கு தேவன் என்பது பொருளாம்.//


வேதவசனங்களின் கருத்தை அறியும்வண்ணம் மூலபாஷையை நான் ஆராய்வதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் தனிப்பட்ட ஒரு நபர் வைத்திருக்கும் புனைப்பெயரின் அர்த்தம் என்னவென அறிவதற்காக வேதாகமத்தின் மூலபாஷையை ஆராயும் வழக்கம் எனக்கில்லை. இதை “மதியீனம்” என சில்சாம் குறிப்பிட்டால்கூட அந்த “மதியீனம்” எனக்கு எப்போதும் இருக்கட்டும் என்றே நான் விரும்புகிறேன்.

ஏனெனில், ஒருவேளை நான் “மதியீனம்” இல்லாதவனாக, ராஜ்குமாரின் புனைப்பெயரான eloi4u என்பதை அதன் உச்சரிப்பின்படி “ஏலோயி4யூ” எனக் குறிப்பிட்டிருந்தால், ராஜ்குமாரை “உனக்காக ஒரு தேவன்” என நான் குறிப்பிடுபவனாகியிருப்பேன். நல்லவேளையாக இப்படி ஒரு அபத்தமான செயலை நான் செய்யாதபடிக்கு தேவன் என்னைத் தடுத்துவிடுத்தார். சில்சாம் கூறுகிறபடி எனது “மதியீனத்தைக்” கொண்டே, ஒரு அபத்தத்தை நான் செய்யாதபடி தேவன் என்னைத் தடுத்துவிட்டார்.

ராஜ்குமார் எனும் மனிதன் தன்னை “உனக்காக ஒரு தேவன்” எனக் காட்டத்தக்கதான ஒரு புனைப்பெயரை வைத்துள்ளதை சில்சாமும் அவரைப் போன்ற அறிவீனர்களும் ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள்தான் ஏற்கனவே தேவனுக்கு நிகராக அவரது குமாரானான இயேசுவை வைத்தவர்களாயிற்றே! அதன் தொடர்ச்சியாக ராஜ்குமாரையும் அவ்வாறு வைப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்?

ஒரே தேவனுக்கு நிகராக இயேசுவையும் வைப்பார்கள், ராஜ்குமாரையும் வைப்பார்கள்; ஒரே போதகரான இயேசுவுக்கு நிகராக ஏராளமான மனிதர்களையும் வைத்துக்கொள்வார்கள்; ஒரே குருவான இயேசுவுக்கு நிகராகவும் ஏராளமான மனிதர்களை வைத்துக்கொள்வார்கள். அபத்தத்தில் ஊறிப்போன அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயங்களே.

ஆனால் “சாதுஜி”யின் காலில் விழுவது சம்பந்தமான விஷயத்தில் மட்டும் சில்சாமுக்கு வேகம் வருவதுதான் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை புகழின் உச்சியில் ஆடம்பரத்தின் உச்சியில் உள்ளவர்கள் மேல் சில்சாமுக்கு உண்டாகும் பொறாமையின் காரணமாக அத்தனை வேகம் வருகிறதோ என்னவோ?

தேவனுக்கடுத்த விஷயத்தில் வைராக்கியம் வந்தால் எல்லா விஷயத்திலும் அது வரவேண்டும். ராஜ்குமார் தன்னை “உனக்காக ஒரு தேவன்” எனச் சொன்னால் அதை வரவேற்பேன், ஆனால் “சாதுஜி” தன் காலில் விழும்படிச் சொன்னால் பொங்கி எழுவேன் என்றால், அதை “சாதுஜி” மீதுள்ள காழ்ப்புணர்ச்சி அல்லது பொறாமையின் விளைவே என்றுதான் எடுக்க நேரிடும்.

நல்லவேளை,
eloi4u என்பதன் அர்த்தம் “உனக்காக ஒரு தேவன்” என்பதை சில்சாம் எடுத்துக் காட்டிவிட்டார். இல்லாவிடில், என்னையறிமால் அதை “ஏலோயி4யூ” என ஒருவேளை நான் குறிப்பிட நேரிடலாம்.

இனி, மறந்துங்கூட eloi4u என்பதை “ஏலோயி4யூ” என நான் குறிப்பிடமாட்டேன்; மாறாக, இல்ஓஐ4யூ என்றே குறிப்பிடுவேன்.

மற்றவர்களை மூலவியாதியில் “முக்குபவர்கள்” என பரிகசித்த சில்சாம் அவர்களே! நீங்களுங்கூட அதே மூலவியாதியில் “முக்கி”, eloi4u என்பதற்கான அர்த்தம் “உனக்காக ஒரு தேவன்” எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.

ஆனால் நாங்கள் “முக்குவதற்கும்” நீங்கள் “முக்குவதற்கும்” ஒரு சிறு வித்தியாசம். நாங்கள் வேதவசனங்களின் சரியான கருத்தை அறிவதற்காக மட்டுமே முக்குகிறோம்; ஆனால் நீங்களோ தனிப்பட்ட மனிதரின் பட்டப்பெயருக்கான அர்த்தத்தை அறிவதற்காகவே முக்குகிறீர்கள். தொடர்ந்து இப்படியே முக்கி பல “அரும்பெரும்” அர்த்தங்களைக் கண்டுபிடித்து வெளியிடுங்கள், நன்றி.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தேவன் என்கிற பெயரில் யார் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தேவன் என்றாலே அவர் பிதாவாகிய தேவன் தான் என்று முத்திரை குத்துபவர்கள் இவர்கள்!!இந்த பிரபஞ்சத்தின் தேவனை கூட அதே நிலையில் தான் வைத்திருக்கிறார்கள்!! ஏனென்றால் அவனும் தேவன் தானே!! ஆகவே தான் சுலபமாக அவனின் எல்லா கோட்பாடுகளை தக்க வைக்க முடிகிறது!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

திரு.ராஜ்குமாரின் புனைப்பெயர் விஷயத்தில் பிரச்சனையைக் கிளப்பிய சில்சாம், தற்போது நான்தான் பிரச்சனையைக் கிளப்பியதைப் போல் சொல்கிறார்.

தற்போது ராஜ்குமார் தனது புனைப்பெயருக்கு கொடுத்த விளக்கத்தின்படி பார்த்தால் eloi என்பது ஒரு abbreviation என விளங்குகிறது. இதன்படி பார்த்தால்
eloi என்பதை தமிழில் எழுதும்போது இஎல்ஓஐ என்றுதான் குறிப்பிட முடியும். எனவே ராஜ்குமார் எந்த அர்த்தத்தில் eloi-ஐ பயன்படுத்துகிறார் என்பதை அறியாத நான், தமிழில் அதை இஎல்ஓஐ எனக் குறிப்பிட்டதில் எந்தத் தவறுமில்லை என்பதை நடுநிலையாளர்கள் புரிந்துகொள்வார்கள்.

ஒருவர் எந்தக் காரணத்திற்காக ஒரு புனைப்பெயரை வைத்துள்ளார் என ஆராய்ந்தறிய வேண்டிய அவசியம் எனக்குமில்லை, சில்சாமுக்குமில்லை, வேறு எவருக்குமில்லை. இப்படியிருக்க, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல், பிரச்சனை இல்லாத ஒரு காரியத்தில், தன் அதிமேதாவித்தனத்தையும் அதிகப் பிரசங்கித்தனத்தையும் காட்டும் வண்ணம், eloi என்பதன் அர்த்தம் “உனக்காக ஒரு தேவன்” என்பதல்லவா, நீ எப்படி அதை இஎல்ஓஐ என எழுதலாம் என்று சொல்லி வம்புக்கு இழுத்தது சில்சாம்தான்.

நான் எனது தரப்பின் நியாயமான விளக்கத்தைக் கொடுத்ததோடு, ராஜ்குமாரின் புனைப்பெயரை சில்சாம் கூறுகிற அர்த்தத்தின்படி ஏற்பவர்கள் அறிவீனர்கள் என்றும் கூறியிருந்தேன். எனது வார்த்தைகளில் ராஜ்குமாரை நான் சற்றும் விமர்சிக்கவில்லை.

ஆனால் தற்போது elio எனும் abbreviation-க்கு ராஜ்குமார் தந்துள்ள விளக்கத்தின்படி பார்த்தால், ராஜ்குமாரும் விமர்சனத்திற்குரியவராகிவிட்டார்.

eloi என்பது Everlastin
g Light Of Israel for you‍ என்பதம் சுருக்கமாம். அதாவது eloi என்பதன் அர்த்தம் “உனக்(குள்)காக இஸ்ரவேலின் நித்திய வெளிச்சம்” என்பதாம். இஸ்ரவேலின் நித்திய வெளிச்சம் இயேசுவே என்பதற்கான தக்க ஆதாரத்தையும் ராஜ்குமார் வைத்துள்ளார்.

இப்படியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டு, அந்த நித்திய வெளிச்சம் தானே எனக் காட்டும் வண்ணம் eloi4u எனும் புனைப்பெயரை தனக்கு வைத்துள்ளார் ராஜ்குமார். அதாவது “உனக்கான நித்திய வெளிச்சமாகிய இயேசு நானே” என தன்னைத்தானே மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சொல்வதும் கடும் கண்டனத்திற்குரியதே. இதை உணர்கிற அறிவு ராஜ்குமாருக்கோ சில்சாமுக்கோ இல்லாவிடினும் நான் சொல்ல வேண்டியதை சொல்வது எனது கடமை.

வழக்கம் போல் கடிந்துகொள்கிறவன் மேல் ராஜ்குமாரும் சில்சாமும் பாயத்தான் செய்வார்கள். ஆனால் நானும் அதை வழக்கம்போல் எனது பாக்கியமாகவே கருதிக் கொள்வேன்.

ராஜ்குமாரின் புனைப்பெயரில் இப்படி ஒரு அபத்தமான அர்த்தம் பொதிந்துள்ளதை ராஜ்குமாரைக் கொண்டே வெளிக்கொணரத் தூண்டின சில்சாமுக்கு எனது நன்றிகள்.

அபத்தமான அர்த்தம் என்றதும், இஸ்ரவேலின் நித்திய வெளிச்சம் இயேசுவே என்பதை அபத்தம் என நான் சொல்வதாகக் கருதவேண்டாம்; “அந்த இயேசு நானே” எனப் பொருள்படும்படி ராஜ்குமார் தனது புனைப்பெயராக eloi4u என வைத்துள்ளதைத்தான் அபத்தம் என்கிறேன்.

சில்சாமின் சில காமெடிகள் அல்லது அபாண்டங்கள்:
//நண்பர் இராஜ்குமார் அவர்களின் பயனர் பெயருக்கான (Eloi4u) காரணம் எனக்குத் தெரியாது; ஆனாலும் எனது சொந்த புரிதலின் அடிப்படையில் அன்பு அவர்களின் தவறான கருத்துக்கு விளக்கங் கொடுத்தேன்;//

ராஜ்குமாரின் புனைப்பெயர் பற்றி நான் கருத்து எதுவும் சொல்லாதிருக்கையில், அதிகப்பிரசங்கித்தனமாக (தவறான) விளக்கத்தைக் கொடுத்தது சில்சாம்தான். ஆனால் நான் தவறான கருத்தைச் சொன்னது போலவும் அதற்கு பதிலாகத்தான் தான் விளக்கம் கொடுத்ததுபோலவும் சில்சாம் கூறுகிறார்.

சில்சாம்:
//என்னைப் பொறுத்தவரையில் குறைந்த அறிவுள்ளவனும் சக நண்பர்களால் அறிவீனனாகவும் சித்தரிக்கப்படும் அடியேன் மேற்கண்ட வசனத்திலுள்ள வார்த்தையான Eloi, என்பதன் அடிப்படையில் திரு.இராஜ்குமார் தனது பயனர் பெயரை (Eloi) அமைத்துள்ளார் என்று எண்ணியது தவறோ சரியோ அதுபோன்று ஒரு ஊழிய ஸ்தாபனத்தின் பெயர் அமைவதால் அந்த பெயருக்குரியவரே தன்னை தேவனாக்கினார் என்று பெரியவர் அன்பு குறிப்பிடுவது எப்படி சரியாகும்?//

அட சின்னவர் சில்சாமே! eloi4u என்பதற்கான அர்த்தம் “உனக்காக ஒரு தேவன்” என்று சொன்னது நீங்கள்தானே? நீங்கள் அப்படி ஒரு அர்த்தத்தைச் சொன்னபின்தானே அதன் தொடர்ச்சியாக நானும் விமர்சனம் செய்தேன்? ஏதோ நானாக முன்வந்து ராஜ்குமாரின் புனைப்பெயருக்கு அர்த்தம் சொல்லி விமர்சனமும் செய்ததாகக் கூறியுள்ளீர்களே, உங்களுக்கு சற்றேனும் மனச்சாட்சி இல்லையா?

சகோ.சுந்தர் ஒரு விஷயத்தில் உங்களை நேரடியாகக் குற்றச்சாட்டியபோது, சுந்தர் சொன்னபிரகாரம் நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கை என் உள்மனதில் அதிகமாகவே இருந்தது. ஆனால் தற்போது என் நம்பிக்கை முழுவதுமாகக் குலைந்துபோனது.

சுந்தர் சொன்னபிரகாரம் நீங்கள் செய்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது என
தற்போது நிச்சயமாக நான் நம்புகிறேன்.


ராஜ்குமார் பெயருக்கான விளக்கம் எனும் இந்த அற்ப காரியத்தில்கூட, தைரியமாக உங்கள் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், கோழைத்தனமாக அடுத்தவர் மீது ஏனய்யா பழியைப் போடுகிறீர்கள்?

சில்சாம்:
//ஒன்றுமில்லாத ஒரு காரியத்தில் கூட தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டத்துடிப்பவர்கள் தான் தேவ இராஜ்யத்தை கட்டப்போகிறார்களாம்..!//

ஆரம்பத்தில் ஒன்றுமில்லாத காரியமாகத் தோன்றின காரியத்தில் தனது மேதாவிலாசத்தைக் காட்டியது சில்சாம்தான். ஆனால் தற்போது ராஜ்குமார் தந்த விளக்கத்தின்படி பார்த்தால், இது ஒரு ஒன்றுமில்லாத விஷயமல்ல, கண்டனத்திற்குரிய விஷயம்தான் என்றாகிவிட்டது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

anbu57 wrote:

சகோ.சுந்தர் ஒரு விஷயத்தில் உங்களை நேரடியாகக் குற்றச்சாட்டியபோது, சுந்தர் சொன்னபிரகாரம் நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கை என் உள்மனதில் அதிகமாகவே இருந்தது. ஆனால் தற்போது என் நம்பிக்கை முழுவதுமாகக் குலைந்துபோனது.



சகோ. அன்பு அவர்களே தாங்கள் சில  கிறிஸ்தவ நபர்களைப்பற்றி தவறாக கணக்கு போட்டுவிட்டீர்கள் என்றே நான்  கருதுகிறேன்.  சில "பாஸ்டர்கள்" எனப்படுபவர்கள்  தன்னை  பெரியவனாக காட்டிகொள்ள, எதையும் செய்ய துணிந்தவர்கள், யாரையும் கழுத்தைப் பிடித்து தள்ளத் தயங்காதவர். எந்த ஒரு காரியத்துக்கும் மன்னிப்பு கேட்க விரும்பாத உத்தமர்கள் காரணம், 
அவர்கள் தவறே செய்வது இல்லை. தவறாகப் பேசுவதோ எழுதிவிடுவதோ இல்லை, அப்படியே தவறு செய்தலும்  தங்களைத் தாழ்த்தி மன்னிப்பு கேட்பதை அவமானமாகக் கருதுகிறவர்கள்.  இப்படி பலரைப்பற்றி நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் பப்ளிக்காக அதைப்பற்றி எழுத விரும்புவது இல்லை. 

அவரவர்களின் வார்த்தைகளில் இருந்தே அவர்களை அறிய முடியும்.

லூக்கா 6:45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்

இந்த விஷேமானவர்களோ  இயேசுவுக்கே  பாடம் எடுக்கத் துணிந்தவர்கள்! "என் வார்த்தையைக் கைகொள்" என்று நீர் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது! எங்களால்  உம்மை கும்பிட மட்டும்தான் முடியும், ஏனெனில் அது மிகவும் சுலபம், அதற்காக எங்களுக்கு நீர் பரலோகத்தை தரவேண்டும். மற்றபடி எங்களால் அன்பு, இரக்கம், கருணை, நேர்மை, உண்மை, தாழ்மை இப்படியெல்லாம் நடக்க முடியாது" என்று சொல்லத் துணிந்தவர்கள். இவர்கள் யாருடைய சந்ததி என்பது எல்லோருக்குமே புரியும்!

"சிலர் வேதத்தை தப்பு தப்பாக வியாக்கீனம் செகிறார்கள்" என்று அக்கலாய்க்கும்  இவர்கள் வேதத்தின் அடிப்படையில் இருந்து அனைத்தையும் அறிந்துவிட்டபடியால், அடுத்தவர்கள் வியாக்கீனம் செய்த உடன் இவர்களின் வாத்தியார் புத்தியில் தவறு என்று தெரிந்துவிடும்.

இன்னும்கூட ஒரு காரியத்தை நான் சொல்லவேண்டும்,"ஒருவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் சரி, அடுத்தவர்களை எவ்வளவு கேவலமாக சபிப்பவனானாலும் சரி,  தனது கருத்துக்கு சற்று ஒத்து போய்விட்டால் அவரோடு ஐக்கியம்  வைத்துகொள்ள தயாராக இருக்கும் அன்பர்கள் பற்றி என்னவென்று சொல்வது?

இனம் இனத்தோடுதானே   சேரும்?

நாம் இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை!

 



-- Edited by SUNDAR on Wednesday 2nd of February 2011 01:41:08 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//சகோ. அன்பு அவர்களே தாங்கள் சில கிறிஸ்தவ நபர்களைப் பற்றி தவறாக கணக்கு போட்டுவிட்டீர்கள் என்றே நான்  கருதுகிறேன்.//

இருக்கலாம் சகோதரரே! ஆனால் முகத்தை மட்டுமே பார்க்கமுடிந்த நாம், அந்த முகத்தைக்கூட பார்க்காமல், ஒருவரது உள்ளத்தை அறிவது கடினம்தானே?

sundar wrote:
//சில "பாஸ்டர்கள்" எனப்படுபவர்கள்  தன்னை  பெரியவனாக காட்டிகொள்ள, எதையும் செய்ய துணிந்தவர்கள், யாரையும் கழுத்தைப் பிடித்து தள்ளத் தயங்காதவர். எந்த ஒரு காரியத்துக்கும் மன்னிப்பு கேட்க விரும்பாத உத்தமர்கள் காரணம்,
அவர்கள் தவறே செய்வது இல்லை. தவறாகப் பேசுவதோ எழுதிவிடுவதோ இல்லை, அப்படியே தவறு செய்தாலும், தங்களைத் தாழ்த்தி மன்னிப்பு கேட்பதை அவமானமாகக் கருதுகிறவர்கள்.  இப்படி பலரைப்பற்றி நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் பப்ளிக்காக அதைப்பற்றி எழுத விரும்புவது இல்லை.//


நீங்கள் சொல்வது சரியே சகோதரரே! ஆகிலும், தனிப்பட்ட ஒருவர் தவறானவரா இல்லையா எனும் முடிவை எடுக்கும் முன்னர் நாம் மிகவும் நிதானிப்பது அவசியந்தானே?

sundar wrote:
//நாம் இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை! //

உங்களைப் போன்ற சிலரின் வார்த்தைகள், தவறான ஒரு சிலரோடு உண்டாகும் அனுபவத்தின் பாதிப்பை சரிக்கட்டுவதாக நான் உணர்கிறேன். உங்கள் மூலம் இவ்வித சரிக்கட்டுதலைத் தந்த தேவனைத் துதிக்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இயேசு யார் எனும் கொல்வினின் கேள்விக்கான பதில் தொடர்கிறது.

இதுவரை இக்கேள்விக்கு 10 பதில்களைப் பார்த்தோம். இனி,

11. இயேசு ஒரு தேவதூதர்

இப்படிச் சொல்வதால் இயேசுவின் மதிப்பை நான் குறைப்பிடுவதாக யாரும் கருதவேண்டாம். இவ்வுலகில் இயேசு மனிதனாக வந்ததை ஏற்றுக்கொள்ளும் நாம், இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின்னர்கூட அவரை “மனுஷன்” என பவுல் சொல்வதை (1 தீமோ. 2:6; ரோமர் 5:15) ஏற்றுக்கொள்ளும் நாம், இயேசுவை கன்மலை என பவுல் சொல்வதை (1 கொரி. 10:4) ஏற்றுக்கொள்ளும் நாம், அவர் ஒரு தேவதூதராகவும் இருந்தார் என்பதை ஏற்பதற்கு ஏன் தயங்குகிறோம் என்பது தெரியவில்லை.

மேலும், வேதவசனம் அவரைத் தேவதூதர் எனச் சொல்லியிருக்கையில், நம் சுயஅறிவின்படி இயேசு தேவதூதரல்ல எனச் சொல்வதற்கு நாம் யார்? நமக்கு அந்த அதிகாரத்தைத் தந்தது யார்?

எபிரெயர் 1:6-ன் அடிப்படையில், “இயேசு ஒரு தேவதூதரல்ல என்பது தெளிவாகிறது” என “இறைவன்” தளத்தின் ஒரு திரியில் நானுங்கூட எழுதியிருந்தேன்.

அவ்வசனத்தில் “தேவதூதரைக் குறித்து” எனும் சொற்றொடர் தேவதூதர் கூட்டம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சொல்வதாக இருந்ததாலும், இயேசுவைக் குறித்து “முதற்பேறானவர்” எனச் சொல்லி, அவரை தேவதூதர் கூட்டத்திலிருந்து வேறுபட்டவராகக் காட்டியதாலும், நான் அவ்வாறு கூறியிருந்தேன்.

ஆகிலும் இயேசுவையும் ஒரு தேவதூதராகப் பாவித்து சில வசனங்கள் கூறுவதை சகோ.பெரியன்ஸ் எடுத்துக்காட்டினபோது அதையும் ஏற்கத்தான் வேண்டியதிருந்தது. வசனங்களை மறுக்க நமக்கு உரிமையில்லை.

தேவகுமாரனான இயேசு மனுஷனாக வந்தார், மனுஷனாக வாழ்ந்தார், மனுஷனாக மரித்தார் என வசனம் சொல்லும்போது அதை எப்படி ஏற்கிறோமோ அவ்வாறே, தேவதூதர் எனப் பொதுவாகக் கூறப்படுகிற கூட்டத்தில் ஒருவராக அவர் இல்லாவிடினும், அவர் ஒரு தேவதூதராகவும் இருந்தார் என வசனம் சொல்வதை ஏற்கத்தான் வேண்டும்.

எனவே இத்திரியின் ஒரு பதிவில் நான் கூறியபடி, இயேசு ஒரு தேவதூதருமாவார் என்பது சரியே.

இயேசு யார் எனும் கேள்வியை எழுப்பிய கொல்வினின் முக்கிய எதிர்பார்ப்பு, மிகாவேல் தூதன்தான் இயேசு என நான் சொல்வேனா என்பதே. இது சம்பந்தமான எனது கருத்தை தற்போது சொல்கிறேன்.

மிகாவேல் தூதனைக் குறித்து வேதாகமத்தின் 5 வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் 3 வசனங்களிலும் புதியஏற்பாட்டின் 2 வசனங்களிலும் மட்டுமே மிகாவேல் பற்றி கூறப்பட்டுள்ளது.

அவ்வசனங்கள் மூலம் மிகாவேல் யார், அவர்தான் இயேசுவா என்பதைப் பார்ப்போம்.

முதலாவது நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், பழையைஏற்பாட்டில் மிகாவேல் என்பவர் ஒரு “தூதன்” எனச் சொல்லப்படாமல் “பிரதான அதிபதி” என்றே சொல்லப்பட்டுள்ளார். “பிரதான அதிபதி” எனும் வார்த்தைகளுக்கு இணையான மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தம் chief ruler என்றுள்ளது. ஆங்கில வேதாகமங்கள் chief prince எனச் சொல்கின்றன. அதாவது மிகாவேல் என்பவர் பிரதான அரசர் அல்லது அதிபதியாக பழைய ஏற்பாட்டில் காட்டப்பட்டுள்ளார்.

இயேசுவும் பிரதான அரசர் அல்லது அதிபதியாக பல வசனங்களில் காட்டப்பட்டுள்ளார். எனவே மிகாவேலும் இயேசுவும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லவேண்டும். இனி, மிகாவேல் பற்றி வேதாகமம் கூறுகிற ஒவ்வொரு வசனத்தையும் தனித்தனியே பார்ப்போம்.

தொடர்கிறது ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

1. தானியேல் 10:13

பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்;


தானியேலின் ஒரு தரிசனத்தின்போது, அவரிடம் ஒரு தேவதூதன் இவ்வார்த்தைகளைக் கூறினான். இத்தரிசனத்தின் துவக்கத்தில் சணல் வஸ்திரம் தரித்த ஒருவரை தானியேல் பார்த்ததாகக் கூறுகிறார். அவரைக் குறித்த தானியேலின் வர்ணனை:

தானியேல் 10:5 என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். 6 அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

இதே வர்ணனைக்கு ஒப்பாக பின்வரும் வசனங்களிலும் ஒரு வர்ணனை காணப்படுகிறது.

வெளி. 1:10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்
12 அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். 14 அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; 15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. 16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
கேட்டேன். 11 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

வெளிப்படுத்துதலின் வசனங்கள் இயேசுவையே குறிப்பிடுகின்றன என்பது தெளிவாக உள்ளது. இவ்வசனங்களின் வர்ணனையோடு தானியேல் 10:5,6 வசனங்களின் வர்ணனையை ஒப்பிட்டுப் பார்த்தால், தானியேலின் வர்ணைக்குரியவரும் இயேசுவே என்பது தெளிவாகிறது.

தானியேலின் தரிசனத்தின் துவக்கத்தில் அவர் இயேசுவைப் பார்த்து அவரது சத்தத்தையும் கேட்டதாகச் சொல்கிறார் (வசனம் 9). அதன்பின்னர்தான் ஒரு தேவதூதன் தானியேலைத் தொட்டு தூக்கி அவரோடு பேசினான். அப்போதுதான் மிகாவேலைக் குறித்து அந்த தூதன் தானியேலிடம் கூறினான். அதைத்தான் 13-ம் வசனத்தில் பார்க்கிறோம்.

இவ்வசனத்தில் மிகாவேலை பிரதான அதிபதிகளில் ஒருவர் என தேவதூதன் சொல்வதாகப் பார்க்கிறோம். ஆனால் அவ்வார்த்தைகளுக்கான மூலபாஷை இணை வார்த்தைகளின் அர்த்தங்களின்படி பார்த்தால், பிரதான அதிபதிகளில் ஒருவர் என்றில்லாமல், பிரதான அதிபதியோடு ஐக்கியமானவர் என்றே இருக்கவேண்டும் என அறிகிறோம்.

மேலும், மிகாவேல் எனும் வார்த்தைக்கு அர்த்தம்: who (is) like God(?) என்பதாகும். அதாவது தேவனைப் போன்றவர் என அர்த்தமாகும்.

இயேசுவானவர் தேவனைப் போன்றவராக வேதாகமத்தில் காட்டப்படுகிறார் என்பது நாம் அறிந்ததே. இயேசுவைப் போலவே, மிகாவேலும் தேவனைப் போன்றவராக இருப்பதாக, அவரது பெயரின் அர்த்தம் கூறுகிறது. எனவே இவர் ஒரு சாதாரண தேவதூதரல்ல, மிக உயர்ந்த ஸ்தானத்திலுள்ள ஒரு பிரதான அதிபதி என அறிகிறோம். இனி, மிகாவேல் பற்றின அடுத்த வசனத்தைப் பார்ப்போம்.

2. தானியேல் 10:21

சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.


13-ல் வசனத்தில் பிரதான அதிபதியோடு ஐக்கியமானவர் எனச் சொன்ன தேவதூதன், 21-ம் வசனத்தில் பிரதான அதிபதி என்றே சொல்கிறான்.

இவ்வசனத்திலும் மிகாவேலை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துதான் தேவதூதன் சொல்கிறான். பெர்சிய ராஜா தேவதூதனுக்கு எதிர்த்து நின்றபோது (வசனம் 13), தேவதூதனுக்கு உதவியாக நின்ற மிகாவேலைத்தவிர வேறு யாரும் ராஜாக்களுக்கு விரோதமாக பலங்கொள்கிறதில்லை என தேவதூதன் கூறுகிறான்.

சங்கீதம் 2:2-ல் கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரான இயேசுவுக்கு விரோதமாய் பூமியின் ராஜாக்கள் எழும்பிநிற்பதாக கூறப்பட்டுள்ளது.

(பூமியின்) 10 ராஜாக்கள் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவோடு யுத்தம் பண்ணுவார்கள் என வெளி. 17:14 கூறுகிறது.

இந்த ராஜாக்களுக்கு விரோதமாக இயேசுவானவர் பலங்கொள்வார் என்பது நிச்சயம். ஆனால், தானியேல் 10:21-ல், மிகாவேலைத் தவிர வேறு யாரும் ராஜாக்களுக்கு விரோதமாகப் பலங்கொள்கிறதில்லை என தேவதூதன் கூறுகிறான். எனவே இவ்வசனமும் மிகாவேலை இயேசுவுக்கு நிகராக அல்லது இணையாகத்தான் காட்டுகிறது.

3. தானியேல் 12:1,2

உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

இவ்வசனங்களில் மிகாவேல் பற்றி சொல்லப்பட்டுள்ள காரியங்கள் யாவும் இயேசுவுக்கும் பொருத்தமானதாகவைகளே. பின்வரும் வசனங்கள் மூலம் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஏசாயா 11:1,4 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். .. நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

யோவேல் 2:1,2 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.

மத்தேயு 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார்.
41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.
46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

யோவான் 5:27-29 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; 29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.


மிகாவேல் பற்றிய பழையஏற்பாட்டின் 3 வசனங்களிலும், மிகாவேலின் செயல்கள் யாவும் இயேசுவின் செயல்களுக்கு அப்படியே ஒத்ததாக உள்ளன. மேலும் தானியேல் 10:21-ன்படி, அம்மாதிரி நபர் ஒரேயொருவர்தான் இருக்கமுடியும் என்றும் அறிகிறோம். எனவே மிகாவேலும் இயேசுவும் ஒருவராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த பதிவில், புதியஏற்பாடில் மிகாவேல் பற்றி கூறப்பட்டுள்ள 2 வசனங்களைப் பார்ப்போம்

தொடர்கிறது ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Facebook-ல் பங்களித்தல் மற்றும் வேறுசில பணிகள் காரணமாக நீண்ட நாட்களாக இத்திரியில் பதிவைத் தரவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

புதியஏற்பாட்டில் மிகாவேல் குறித்த 2 வசனங்கள்:

யூதா 1:9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.

வெளி. 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்;

மிகாவேல் எனும் வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தையின் அர்த்தம்:

NT:3413 Michael (mikh-ah-ale'); of Hebrew origin [OT:4317]; Michael, an archangel:

இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அர்த்தம்:

OT:4317 Miyka'el (me-kaw-ale'); from OT:4310 and (the prefix derivative from) OT:3588 and OT:410; who (is) like God?; Mikael, the name of an archangel and of nine Israelites:

இவற்றிலிருந்து நாம் அறிவது, பழையஏற்பாட்டிலும் சரி, புதியஏற்பாட்டிலும் சரி, மிகாவேல் எனும் வார்த்தையின் அர்த்தம் தேவனைப் போன்றவர் என்பதே.

இயேசுவின் 2-ம் வருகையின்போது அவர் பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என பின்வரும் வசனம் கூறுகிறது.

1 தெச. 4:16 கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்;

இந்த பிரதான தூதன் என்பவன், மிகாவேலைத் தவிர வேறு எவருமல்ல. எனவே மிகாவேலின் சத்தத்தோடு இயேசு வருவார் என்றும் சொல்லலாம். இதன் அடிப்படையில் பார்த்தால்கூட இயேசுவும் மிகாவேலும் ஒருவராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

யூதா 1:9 மற்றும் வெளி. 12:7-ல் கூறப்பட்டுள்ள மிகாவேலின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவை சாதாரண ஒரு தூதனின் நடவடிக்கையாகத் தோன்றவில்லை. ஆக மொத்தத்தில், பழையஏற்பாட்டிலும் புதியஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ள மிகாவேலின் நடிவடிக்கைகள், மிகாவேல் என்றால் தேவனைப் போன்றவர் என்ற அர்த்தம், மிகாவேலின் சத்தத்தோடு தமது 2-ம் வருகையில் இயேசு வருவார் எனும் கூற்று ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, மிகாவேலும் இயேசுவும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

ஆனாலும் இதுகுறித்து வேதாகமம் நேரடியாக எதுவும் சொல்லாததால், இவ்விஷயத்தில் நாம் திட்டவட்டமாக எதுவும் சொல்லாதிருப்பதே உசிதமானது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard