வணக்கம் ''நித்திய ஜீவன்'' தள நிர்வாகிகளே மற்றும் தள அங்கத்தவர்களே!!!!!! உங்கள் அனைவருக்கும் மெய்யான தேவனாகிய ஜெகோவாவின் நாமத்தினாலும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் உங்களுக்கு அன்பையும், வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் என்னைப்பற்றிய சிறிய அறிமுகம்!!!! எனது பெயர் ராஜேந்தரம். நான் ஜெர்மனியில் வசிக்கிறேன். ஆரம்பத்தில் நான் ரோமன் கத்தோலிக்க சமயத்தில் இருந்து, தற்பொழுது சரியான சத்தியத்தை அறிந்த பிரகாரம் சரியான போதனைகள் அடங்கிய சபையில் இருக்கிறேன். நான் ''கோவை பெரியன்ஸ்'' என்ற தளத்தில் ஒரு அங்கத்தவர் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து, என் வேலை நேரங்கள் போக மிகுதி நேரம் முழுவதும் சத்தியத்தை அறியாத ஜனங்களிடம் நேரில் சென்று சத்தியத்தை அறிவிப்பதே என் தேவசித்தமாகக் கொண்டுள்ளேன். இதற்கு என் சகவிசுவாசிகள், என் அமைப்பைச் சேர்ந்த அனைவரும் தாராள உதவிகளை செய்கிறார்கள். யோவான் 17 :3 ''ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்'' என்ற வசனத்துக்கு அமைய அந்த அறிவைப் பெறவே சரியான உபதேசங்களைக் கொண்ட இரு தளங்களை தெரிவுசெய்து தேவனை அறியும் அறிவில் வளர முயற்சிக்கிறேன். நன்றி.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் ராஜேந்திரம் அவர்களை இத்தளத்தில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பான சகோதரரே! தங்களின் சில பதிவுகளை கோவை பெரியன்ஸ் தளத்தில் ஏற்கனவே படித்துள்ளேன். வேதாகமத்தின் மீதும் அதைத் தந்தவரான ஜெகோவா தேவன் மீதும் உங்களுக்குள்ள வைராக்கியத்தை உங்கள் பதிவுகள் மூலம் அறிந்து தேவனைத் துதித்தேன்.
தொடர்ந்து எல்லா தளங்களிலும் வேதாகம சத்தியத்தை எடுத்துரையுங்கள். தேவன் தாமே தங்கள் பணியை ஆசீர்வதிப்பாராக.