நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வசனங்களும் அதன் குறிப்புகளும்


Member

Status: Offline
Posts: 5
Date:
வசனங்களும் அதன் குறிப்புகளும்
Permalink  
 


கிறிஸ்து இயேசுவுவின் சீடர்களாகத் தேவபக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள். 2 திமோத்தேயு 3 :12

யெகோவாவின் ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!!!!  ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிஜ எதிரியை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக நாம் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ளத் தூண்டப்படுகிறோம், அல்லவா? அதோடு, உண்மைக் கடவுளான யெகோவாவின் பக்கம் இருப்பதிலும், சாத்தானுக்கும் மனித பிரச்சனைகளுக்கும் அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதிலும் நாம் சந்தோசப்படுகிறோம், அல்லவா? உலக மக்கள் சந்திக்கிற பல பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் சந்திக்கிற எதிர்ப்புக்கும் சாத்தான் தான் காரணம். நம்மைச் சோதிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ''சீமோனே, சீமோனே, இதோ!! கோதுமையை சலித்தெடுப்பது போல உங்கள் எல்லாரையும் சலித்தெடுக்க வேண்டும் எனச் சாத்தான் கேட்டு இருக்கிறான்'' என்று சொன்னார் (லுக் 22 :31 ). அதேபோல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு விதத்தில் சோதிக்கப்டடுகிறோம். பிசாசு, ''கர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்'' என பேதுரு சொன்னார். 1 பேதுரு 5:8.


-- Edited by Theneer Pookal on Thursday 27th of January 2011 03:54:18 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.தேனீர் பூக்கள் அவர்களின் பதிவுக்கு நன்றி.

எவனொருவன் தன் சிலுவையை எடுக்க (அதாவது பாடுகளைச் சந்திக்க) முன்வருகிறானோ அவனே தமது சீஷனாக இருப்பான் என இயேசு கூறினார்.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இயேசுவோடுகூட பாடுபடுவதால் கிடைக்கும் பாக்கியமென்ன?

2 தீமோ. 2:12  அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;

ஆம், இம்மை வாழ்வில் கிறிஸ்துவோடு பாடுபடுபவர்கள், வெளி. 20:6 கூறுகிறபடி, கிறிஸ்துவோடுகூட 1000 வருட அரசாட்சியில் ஆளுகை செய்யும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.



சகோ.தேனீர் பூக்கள் அவர்களே, 2 தீமோ. 3:12 வசனத்திற்கு அருமையான விளக்கத்தைத் தந்துள்ளீர்கள். ஆனால் வசனத்தை சற்று மாறுதலாகப் பதித்துள்ளீர்கள்.

2 தீமோ. 3:12 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

“துன்பப்படுவார்கள்” என்பதற்குப் பதில் “துன்புறுத்தப்படுவார்கள்” என பதித்துள்ளீர்கள். இதனால் கருத்தில் பெரிய மாறுதல் ஒன்றும் இல்லைதான். ஆகிலும் வசனத்தை மேற்கோள் காட்டும்போது, வேதாகமத்தில் இருக்கிற பிரகாரம் அப்படியே காட்டுவதுதான் சிறந்தது.

http://www.theword.net என்ற இணைய தளத்திற்குச் சென்றால், Unicode Font-ல் தமிழ் வேதாகமத்தை install செய்வதற்கான Software-ஐயும் Add-on Module-ஐயும் Download செய்யலாம். அவற்றின் மூலம் தமிழ் வேதாகமத்தை உங்கள் கணினியில் install செய்துவிட்டால், அதிலுள்ள வேதவசனங்களை எடுத்து அப்படியே copy-paste செய்துகொள்ளலாம். இதன் மூலம் வேதவசனங்களை type செய்கிற சிரமத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பதிவைத் தாருங்கள், தேவப்பணியைச் செய்யுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

மிகவும் நன்றி திரு.அன்பு அவர்களே! எனக்கு தமிழில் எழுதுவதில் பல சிக்கல்கள் இருக்கு. இருந்தாலும் நீங்கள் கொடுத்த ஆலோசனைகளின் படி
///http://www.theword.net என்ற இணைய தளத்திற்குச் சென்றால், Unicode Font-ல் தமிழ் வேதாகமத்தை install செய்வதற்கான Software-ஐயும் Add-on Module-ஐயும் Download செய்யலாம். அவற்றின் மூலம் தமிழ் வேதாகமத்தை உங்கள் கணினியில் install செய்துவிட்டால், அதிலுள்ள வேதவசனங்களை எடுத்து அப்படியே copy-paste செய்துகொள்ளலாம். இதன் மூலம் வேதவசனங்களை type செய்கிற சிரமத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.///
முயற்சித்தேன். நன்றாகவும் எனக்கு இது இலகுவாகவும் இருக்கிறது. நன்றி ... எனது அடுத்த  பதிவுகளில் மீண்டும் சிந்திப்போம்.


__________________


Member

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

(2)  ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.- 1 பேதுரு. 5 :5

தெய்வீகக் கல்வியைப் பெற நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருக்கவேண்டும். ''யெகோவா ..... நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்''. எனச் சங்கீதக்காரனான தாவீது எழுதினார்.
(சங்கீதம். 25 :8 ,9 ) இயேசுவும் ஜெபத்தில் இவ்வாறு தெரிவித்தார்: ''பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது''.
(லூக்கா 10:21 ) யெகோவாவின் ஊழியர்களாகிய நாம், சொந்தத் திறமைனாலும் ஞானத்தினாலும்தான் சத்தியத்தைக் கண்டுபிடித்தோமா? இல்லவே இல்லை!!!  உண்மையில் நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது: இயேசு இவ்வாறு சொன்னார்: ''  என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'': (யோவான் 6 :44 ) 'சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்'. (ஆகா.2 :7 ) யெகோவா தமது மகனிடம் ஈர்த்திருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள், அல்லவா? எரேமியா 9:23 ,24)


__________________


Member

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

''கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்''.  சங்கீதம் 25 :4 ,5

யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கான தூண்டுதல் இல்லாமல், சபையில் நாம் ஏதோ பேருக்குப் பிரஸ்தாபியாக இருக்குறோம் என்றால் என்ன செய்வது? பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: ''உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காக கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்''. உண்மைதான், நாம் மனமுவந்து  செயல்படும்படி, அதாவது விருப்பப்பட்டுச் செயல்படும் படி, கடவுளால் நம்மீது செல்வாக்கு செலுத்த முடியும். (பிலி. 2 :13 /4 :13 ) அப்படியானால், ''யேகோவாவே, உங்களுக்குப் பிரியமானபடி என்னைச் செயல்பட வையுங்கள்'' என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும், அல்லவா? இன்று வேதம் வாசிக்கும் போது நான் அறிந்துகொண்டபடி, பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீது அதைத் தான் செய்தார். தமக்குப் பிரியமான விதத்தில் நம்மைச் செயல்படவைக்கும் படி நாமும் யேகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நாம் யேகோவாவுகும் அவருடைய மகனுக்கும் விருப்பமான காரியங்களை செய்யும்போது அவர்கள் இருவரும் எந்தளவு சந்தோசப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்போமென்றால், நம் இருதயத்தில் நன்றிஉணர்வு பொங்கியெழும். (மத். 26 :6 -10 / லூக்கா. 21 :1 -4 ) யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்வதற்கான விருப்பத்தைச் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்க அந்த நன்றிஉணர்வு நம் உள்ளத்தைத் தூண்டலாம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard