யெகோவாவின் ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!!!! ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிஜ எதிரியை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக நாம் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ளத் தூண்டப்படுகிறோம், அல்லவா? அதோடு, உண்மைக் கடவுளான யெகோவாவின் பக்கம் இருப்பதிலும், சாத்தானுக்கும் மனித பிரச்சனைகளுக்கும் அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதிலும் நாம் சந்தோசப்படுகிறோம், அல்லவா? உலக மக்கள் சந்திக்கிற பல பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் சந்திக்கிற எதிர்ப்புக்கும் சாத்தான் தான் காரணம். நம்மைச் சோதிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ''சீமோனே, சீமோனே, இதோ!! கோதுமையை சலித்தெடுப்பது போல உங்கள் எல்லாரையும் சலித்தெடுக்க வேண்டும் எனச் சாத்தான் கேட்டு இருக்கிறான்'' என்று சொன்னார் (லுக் 22 :31 ). அதேபோல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு விதத்தில் சோதிக்கப்டடுகிறோம். பிசாசு, ''கர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்'' என பேதுரு சொன்னார். 1 பேதுரு 5:8.
-- Edited by Theneer Pookal on Thursday 27th of January 2011 03:54:18 PM
எவனொருவன் தன் சிலுவையை எடுக்க (அதாவது பாடுகளைச் சந்திக்க) முன்வருகிறானோ அவனே தமது சீஷனாக இருப்பான் என இயேசு கூறினார்.
மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
இயேசுவோடுகூட பாடுபடுவதால் கிடைக்கும் பாக்கியமென்ன?
“துன்பப்படுவார்கள்” என்பதற்குப் பதில் “துன்புறுத்தப்படுவார்கள்” என பதித்துள்ளீர்கள். இதனால் கருத்தில் பெரிய மாறுதல் ஒன்றும் இல்லைதான். ஆகிலும் வசனத்தை மேற்கோள் காட்டும்போது, வேதாகமத்தில் இருக்கிற பிரகாரம் அப்படியே காட்டுவதுதான் சிறந்தது.
http://www.theword.net என்ற இணைய தளத்திற்குச் சென்றால், Unicode Font-ல் தமிழ் வேதாகமத்தை install செய்வதற்கான Software-ஐயும் Add-on Module-ஐயும் Download செய்யலாம். அவற்றின் மூலம் தமிழ் வேதாகமத்தை உங்கள் கணினியில் install செய்துவிட்டால், அதிலுள்ள வேதவசனங்களை எடுத்து அப்படியே copy-paste செய்துகொள்ளலாம். இதன் மூலம் வேதவசனங்களை type செய்கிற சிரமத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து பதிவைத் தாருங்கள், தேவப்பணியைச் செய்யுங்கள்.
மிகவும் நன்றி திரு.அன்பு அவர்களே! எனக்கு தமிழில் எழுதுவதில் பல சிக்கல்கள் இருக்கு. இருந்தாலும் நீங்கள் கொடுத்த ஆலோசனைகளின் படி ///http://www.theword.net என்ற இணைய தளத்திற்குச் சென்றால், Unicode Font-ல் தமிழ் வேதாகமத்தை install செய்வதற்கான Software-ஐயும் Add-on Module-ஐயும் Download செய்யலாம். அவற்றின் மூலம் தமிழ் வேதாகமத்தை உங்கள் கணினியில் install செய்துவிட்டால், அதிலுள்ள வேதவசனங்களை எடுத்து அப்படியே copy-paste செய்துகொள்ளலாம். இதன் மூலம் வேதவசனங்களை type செய்கிற சிரமத்தைக் குறைத்துக்கொள்ளலாம்./// முயற்சித்தேன். நன்றாகவும் எனக்கு இது இலகுவாகவும் இருக்கிறது. நன்றி ... எனது அடுத்த பதிவுகளில் மீண்டும் சிந்திப்போம்.
''கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்''. சங்கீதம் 25 :4 ,5
யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கான தூண்டுதல் இல்லாமல், சபையில் நாம் ஏதோ பேருக்குப் பிரஸ்தாபியாக இருக்குறோம் என்றால் என்ன செய்வது? பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: ''உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காக கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்''. உண்மைதான், நாம் மனமுவந்து செயல்படும்படி, அதாவது விருப்பப்பட்டுச் செயல்படும் படி, கடவுளால் நம்மீது செல்வாக்கு செலுத்த முடியும். (பிலி. 2 :13 /4 :13 ) அப்படியானால், ''யேகோவாவே, உங்களுக்குப் பிரியமானபடி என்னைச் செயல்பட வையுங்கள்'' என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும், அல்லவா? இன்று வேதம் வாசிக்கும் போது நான் அறிந்துகொண்டபடி, பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீது அதைத் தான் செய்தார். தமக்குப் பிரியமான விதத்தில் நம்மைச் செயல்படவைக்கும் படி நாமும் யேகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நாம் யேகோவாவுகும் அவருடைய மகனுக்கும் விருப்பமான காரியங்களை செய்யும்போது அவர்கள் இருவரும் எந்தளவு சந்தோசப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்போமென்றால், நம் இருதயத்தில் நன்றிஉணர்வு பொங்கியெழும். (மத். 26 :6 -10 / லூக்கா. 21 :1 -4 ) யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்வதற்கான விருப்பத்தைச் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்க அந்த நன்றிஉணர்வு நம் உள்ளத்தைத் தூண்டலாம்.