நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


//பிறமத  தளங்களில் இருக்கும் ஒழுங்குகூட அங்கு இல்லை என்பதுபோல் எனக்கு தெரிகிறது. அங்கெல்லாம் இப்படி "பிசாசு" "ஓநாய்"  என்று தனி மனித தாக்குதல் நடத்தினால்  உடனே பயனர் பெயர் தடை செய்யப்படும்.//

தமிழ் ஹிந்து தளத்தில் மிஷனரிகளை விஷமத்தனமாக "மிஷ நரிகள்" என எழுதுவார்கள், அதுபோக அவர்களது கட்டுரைகளுக்கு நான் பலமுறை பின்னூட்டம் இட்டபோதும் அவர்கள் என் பதிவை 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கவிடுவதில்லை. மற்ற தளங்களில் சகிப்புத்தன்மையின் லட்சணம் இதுதான். தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பின்னூட்டங்களை இருக்கவாவது விடுகின்றனர் என்பதை யோசித்து பாருங்கள்.
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் திட்டுகிறார்களே என அங்கு பதமாக பேசிவிட்டு இங்கு பாய்வது மட்டும் சரியா?


__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நேர்மையை என்னிடமும் கேளுங்கள் திரு ஜோஸப்ஸ்நேகா அவர்களே!! நான் சில வருடங்கள் முன் அந்த தளத்தில் (பழைய வடிவத்தில் இருந்த போது) பதிவுகளை தந்துக்கொண்டு தான் இருந்தேன்!! எந்த ஒரு முன்னறிவுப்புமின்றி, நான் அந்த தளத்தில் புகுவதை தடை செய்து, நான் இரவும் பகலும் கஷ்டப்பட்டு எழுதியதை சற்றும் தயவு பார்க்காமல் நீக்கி விட்டார்கள்!! இவ்வுளவு தான் அந்த தளத்தின் பண்பு!! தன் அஞ்சல் மூலமாக தள நிர்வாகியிடம் என் பதிவுகளை மாத்திரம் என்னிடம் திரும்ப தாருங்கள் என்று கேட்டு பார்த்தேன், ஆனால் அது மரித்தவன் காதில் சங்கு ஊதினது போல் இருந்தது!! செவிடனாவது, அசைவை பார்த்து ஏதாவது புரிந்துக்கொள்வான், ஆனால் மரித்தவனுக்கு ஒன்றும் தெரியாது, அது போல் தான் தமிழ் கிறிஸ்தவ தளத்தினர் நடந்துக்கொண்ட விதம்!! இதையா பண்பு என்று சொல்லுகிறீர்கள்!!

ஆனாலும் தேவன் என்னை வழி நடத்தி, ஒரு விவாத மேடை அமைக்க கிருபை காட்டினார், என் கருத்துக்களையும் என் விசுவாசத்தையும் சுதந்திரமாக பதிவு செய்து வருகிறேன்!! தமிழ் கிறிஸ்தவ தளம் என்பது ஒரே வாத்தியத்தை மாறி மாறி ஊதுவோர் பங்குக்கொள்ளும் ஒரு தளம் என்றால் தவறாகாது!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

தமிழ் கிருத்துவ தளம் :

முதலில் இந்த தளத்தின் நோக்கமே தெளிவாக இல்லை. எல்லா தளங்களிலும் இருக்கும் "About us"  என்ற பகுதியோ அல்லது கிருத்துவ தளங்களில் இருக்கும் "எங்கள் விசுவாசம்" என்னும் பகுதியோ இடம் பெறவில்லை.

அனேகர் வந்து போக வேண்டும் என்பதற்காக எல்லா கிருத்துவ பிரிவுகளையும் அனுமதிக்கிற தளம் போல தமிழ் கிருத்துவ தளம் என பெயர் வைத்திருந்தாலும், கத்தோலிக விசுவாசத்தையோ அல்லது யோகாவா சாட்சிகள், ஏழாம் நாள்காரர்கள் போன்ற தங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களின் பதிவுகளை அனுமதிப்பதில்லை. அதை முதலிலேயே தளத்தை பற்றி சொல்லும் இடத்திலேயே சொல்லி விடாமல் அவர்கள் சில பதிவுகளை எழுதிய பின்பு விவாதம் என்ற பெயரில் இழுத்தடித்து விட்டு தங்களுக்கு தர்மசங்கடமான பதிவுகள் வந்தவுடன் நீக்கி விடுவார்கள்.

இந்த தளத்தில் உள்ள நிர்வாக குழுவினருக்கு என் கேள்விகள் :

உங்களை பொறுத்தவரை கிருஸ்துவன் என்பவன் யார்? அவனுடைய விசுவாசம் என்ன?


__________________


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink  
 

மின்னஞ்ச்சல்களில் தீர்க்கமுடியாத கருத்துவேறுபாடுகளை, அலைபேசியிலோ, தொலைபேசியிலோ தொடர்புகொண்டு சரி செய்திருக்கலாம், அதுவும் நீங்கள் எழுதிய பதிவுகளை அவ்விதம் கேட்டிருந்தால் (முக்கியமாக நீங்கள் கருதும் பட்சத்தில்) மறுப்பதற்கு முகாந்திரமே இருந்திருக்காதே. நான் ஏன் அதை அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்கவேண்டும் என கேட்காதீர்கள், இப்போது வேறு ஒரு தளத்தில் இதை குறித்து குறைபட்டுக்கொள்வதற்கு பதில் அப்போதே இதை குறித்து அவர்களிடம் பேசியிருக்கலாம்.



__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink  
 

தவறை தவறு என்று ஒப்புக்கொள்ள தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்!! மின்னஞ்சல் வழியாக கொடுக்க முடியாத ஒரு தீர்வை அவர்கள் தொலை/அலை பேசி வழியாக சொன்னால் செய்திருப்பார்கள் என்பது மீண்டும் ஒரு தலைப்பட்சமாக பேசும் கருத்தாகும்!!  அப்படி நீங்கள் சொல்லுவது போல், தொலைப்பேசி வழியாக கேட்க அவர்கள் எந்த தொலைபேசி எண்ணை கொடுத்திருந்தார்கள்!!

சர்வாதிகாரத்தனமான ஒரு செயலுக்கு நீங்கள் கண்மூடி தனமாக ஆதரவு தருகிரீர்கள்!! என் பட்சத்தின் உள்ள இழப்பீட்டிற்கு உங்களிடத்தில் இருந்து பதில் வராமல், அவர்கள் செய்த அநாகரீக செயலுக்கு ஆதரவு தெரிவித்து தான் எழுதியிருக்கிறீர்கள்!! ஒரு கருத்தை உருவாக்கி அதை எழுத ஒருவர் எத்துனை நேரம் செலவிடுகிறார் என்பது நீங்களும் பதிவுகளை தருபவராக இருப்பதால் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்!! அப்படி கஷ்டப்பட்டு எழுதிய பதிவுகளை சுலபாக நீக்குவது ஒரு பெரிய காரியம் இல்லை!! உங்களுக்கு கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், நீக்குவது உங்கள் சுதந்திரம், ஆனால் கொஞ்சமாவது நீதியுள்ளவர்களாக உங்கள் நிர்வாகிகள் இருந்திருந்தால், அதை எழுதியவர் கேட்டு கொண்டால் அதை திருப்பி தருவதில் தானே நியாயம்? இதை கேட்டால், நீங்கள் ஏன் மின்னஞ்சல் வழியாக கேட்டீர்கள், ஏன் தொலைபேசியில் கேட்கவில்லை என்கிற அடுத்த குற்றச்சாட்டு பாதிக்கப்பட்டவனுக்கே எழுப்புவதை தானே சர்வாதிகாரம் என்கிறேன்!!

//இப்போது வேறு ஒரு தளத்தில் இதை குறித்து குறைபட்டுக்கொள்வதற்கு பதில் அப்போதே இதை குறித்து அவர்களிடம் பேசியிருக்கலாம்.//

இது மனசாட்சியுடன் தான் சொல்லுகிறீர்களா திரு ஜோஸப்ஸ்நேகா அவர்களே!! உங்கள் தளத்தில் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் தூஷித்து எழுத உங்களுக்கு இருக்கும் அதே அதிகாரம் தான் என் தளத்தில் (வேறு யாரோ நடத்தும் தளம் அல்ல, அது நான் நிர்வகிக்கும் விவாத மேடை) பிற தளங்களின் சர்வாதிகாரத்தை சுட்டி காண்பிக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது!! இப்ப்ழொது தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நடக்கும் தரகுறைவான விவாதங்களை காட்டிலும் என் கருத்து ஒன்றும் மோசமானதாக இல்லை என்றே நினைக்கிறேன்!! ஒரே பல்லவியை பாடிக்கொண்டு இருப்பதால் அவர்களின் எழுத்துக்கள் நிலைத்திருக்கிறது!! பொது விவாதம் என்று வந்த பிறகு விவாதத்திற்கு பயந்து அதற்கு சப்பயான சில காரணங்களை சொல்லி பதிவுகளை நீக்குவது, அதை நீக்கியவரிடம் திருப்பி கொடுக்காதது (பல முறை கேட்டு கொண்ட பிறகும்) நிச்சயமாக ஒரு கிறிஸ்தவ தளத்திற்கு அழகில்லை, அதற்கு ஆதரவாக மனசாட்சி இல்லாமல் ஒரு தலைப்பட்சமாக தாங்கள் பேசுவது (எழுதியது) தங்களின் நிலையையுமே எடுத்து காண்பிக்கிறது!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

திரு. கோவை பெரியனஸ்
கட்டுரையை நீக்கினார்கள் என்று சொல்கிறீர்கள்
இவற்றுக்கு பதில் தாருங்கள்

உங்கள் கட்ரையை நேரடியாக தமிழ்கிறிஸ்தவ தளத்தில் வைத்தா type பண்ணினீர்கள்? அப்படியாக நேரடியான வசதி இன்னும் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் இல்லை. உங்கள் கணினியில் தட்டச்சு செய்திருந்தால் அதனை நீங்கள் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையதே! ( NHM iter, Keyman கொண்டு நேரடியாக தட்டச்சிடமுடியுமென்றாலும் இவையற்ற நிலையில் இயலாது)

நீங்கள் பதிவிடும் கட்டுரையை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையதேயன்றி தளத்தினுடையது அல்ல. அடிக்கடி தளம் செயல் இழப்பதும் உங்களுக்குத் தெரியததல்ல. அந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்குமே தாங்கள் தாங்கள் எழுதிய கட்ரைகளை மீளப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும்.
நிற்க,
உங்களைப் போன்ற மாற்றுக்கருத்துடையவர்கள் அங்கு பதிவிடும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்களுக்குத் தெரியவில்லையா?

இன்னும்
மின்னஞ்சல் மூலம் கேட்டதாக கூறியிருந்தீர்கள் இதன் உண்மைத் தன்மை பற்றி சம்பந்தப்பட்டவர் தவிர யாருக்குமே தெரியவராது. தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலே தளத்தினை மேம்படுத்த எமது ஆலோசனை பகுதி ஒன்று அங்காவது இதை பற்றி கூறியிருந்திருக்கலாமே. அப்போது எல்லோரும் அறியக்கூடியதாக இருந்திருக்கும் அல்லவா?









__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

SANDOSH wrote:

தமிழ் கிருத்துவ தளம் :

முதலில் இந்த தளத்தின் நோக்கமே தெளிவாக இல்லை. எல்லா தளங்களிலும் இருக்கும் "About us"  என்ற பகுதியோ அல்லது கிருத்துவ தளங்களில் இருக்கும் "எங்கள் விசுவாசம்" என்னும் பகுதியோ இடம் பெறவில்லை.

அனேகர் வந்து போக வேண்டும் என்பதற்காக எல்லா கிருத்துவ பிரிவுகளையும் அனுமதிக்கிற தளம் போல தமிழ் கிருத்துவ தளம் என பெயர் வைத்திருந்தாலும், கத்தோலிக விசுவாசத்தையோ அல்லது யோகாவா சாட்சிகள், ஏழாம் நாள்காரர்கள் போன்ற தங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களின் பதிவுகளை அனுமதிப்பதில்லை. அதை முதலிலேயே தளத்தை பற்றி சொல்லும் இடத்திலேயே சொல்லி விடாமல் அவர்கள் சில பதிவுகளை எழுதிய பின்பு விவாதம் என்ற பெயரில் இழுத்தடித்து விட்டு தங்களுக்கு தர்மசங்கடமான பதிவுகள் வந்தவுடன் நீக்கி விடுவார்கள்.

இந்த தளத்தில் உள்ள நிர்வாக குழுவினருக்கு என் கேள்விகள் :

உங்களை பொறுத்தவரை கிருஸ்துவன் என்பவன் யார்? அவனுடைய விசுவாசம் என்ன?



About US என்ற அம்சம் அனைத்து தளத்திலும் காணப்படுகின்றது என்று உங்களுக்கு யார்  சொன்னது? அவை இல்லாத தளங்களும் ஏராளம் உள்ளன. 

எங்கள் விசுவாசம் தேவனின் மேலும் வேதாகமத்தின் மீதுமே  உள்ளது. தனியாக போர்ட் ஒன்று எழுதி தொங்கிவிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை

எல்லா கிறிஸ்தவ பிரிவுகளையும் அனுமதிப்பது உண்மைதான். அதற்காக வேதத்திற்கு முரண்பாடான வேதபுரட்டுக்குழுக்களின் ஆக்கங்களை பிரசுரிக்கும்படி கேட்பது நல்லதல்ல.

சான்றாக கத்தோலிக்கர்களும் பங்குபெறலாம். அதற்காக மாதா வணக்கம், அந்தோனியார் பாமாலைகளை பிரசுரிக்க அனுமத்பபார்கள் என நினைப்பது கேலிக்கூத்தான விடயம்.

இன்னும் கத்தோலிக்கத் தளம் சென்று சிலைவணக்கம் செய்வது தவறு, மாதாவை வணங்காதீர்கள் என்று பதிவிட்டால் அவர்கள் பதிவினை என்ன செய்வரர்கள். உங்கள் தளத்தில் ஒரு கத்தேரலிக்கர் இப்படி செய்தால் நீங்கள் வேடிக்கை பார்ப்பீர்களா?


கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவை பிரதிபலிப்பவன்
அவனுடைய விசுவாசம் (மிக சுருக்கமாக) தேவனின் மீதும் அவரின் வார்த்தையாகிய பைபிளின் மீதுமே உள்ளது.

 



__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

திரு. கோவை பெரியனஸ்
கட்டுரையை நீக்கினார்கள் என்று சொல்கிறீர்கள்
இவற்றுக்கு பதில் தாருங்கள்

உங்கள் கட்ரையை நேரடியாக தமிழ்கிறிஸ்தவ தளத்தில் வைத்தா type பண்ணினீர்கள்? அப்படியாக நேரடியான வசதி இன்னும் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் இல்லை. உங்கள் கணினியில் தட்டச்சு செய்திருந்தால் அதனை நீங்கள் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையதே! ( NHM iter, Keyman கொண்டு நேரடியாக தட்டச்சிடமுடியுமென்றாலும் இவையற்ற நிலையில் இயலாது)

நீங்கள் பதிவிடும் கட்டுரையை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையதேயன்றி தளத்தினுடையது அல்ல. அடிக்கடி தளம் செயல் இழப்பதும் உங்களுக்குத் தெரியததல்ல. அந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்குமே தாங்கள் தாங்கள் எழுதிய கட்ரைகளை மீளப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும்.
நிற்க,
உங்களைப் போன்ற மாற்றுக்கருத்துடையவர்கள் அங்கு பதிவிடும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்களுக்குத் தெரியவில்லையா?

இன்னும்
மின்னஞ்சல் மூலம் கேட்டதாக கூறியிருந்தீர்கள் இதன் உண்மைத் தன்மை பற்றி சம்பந்தப்பட்டவர் தவிர யாருக்குமே தெரியவராது. தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலே தளத்தினை மேம்படுத்த எமது ஆலோசனை பகுதி ஒன்று அங்காவது இதை பற்றி கூறியிருந்திருக்கலாமே. அப்போது எல்லோரும் அறியக்கூடியதாக இருந்திருக்கும் அல்லவா?



__________________


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
Permalink  
 

josephsneha wrote:
தமிழ் ஹிந்து தளத்தில் மிஷனரிகளை விஷமத்தனமாக "மிஷ நரிகள்" என எழுதுவார்கள், அதுபோக அவர்களது கட்டுரைகளுக்கு நான் பலமுறை பின்னூட்டம் இட்டபோதும் அவர்கள் என் பதிவை 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கவிடுவதில்லை. மற்ற தளங்களில் சகிப்புத்தன்மையின் லட்சணம் இதுதான். தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பின்னூட்டங்களை இருக்கவாவது விடுகின்றனர் என்பதை யோசித்து பாருங்கள்.
 

ஆம் சகோதரரே! அவர்கள் கிறிஸ்த்துவையும் தேவ அன்பையும் ருசிக்காதவர்கள் அவர்கள் மிஷினரிகளை எப்படியோ அழைத்து விட்டு போகட்டும் அதை நாம் சந்தோஷமாகவே ஏற்க்க வேண்டும் ஏனெனில்  இயேசுவினிமித்தம் நாம் பரியாசம் பண்ணப்பட்டால் அதற்க்கான பலன் பரலோகத்தில் மிகுதி என்று வசனம் கூறுகிறது. 
 
ஆனால் "ஒரு கன்னத்தில் அடித்தல் மறுகன்னத்தை திருப்பி கொடு" என்று போதித்த ஆண்டவராகிய இயேசுவை உலகத்துக்கு எடுத்துசொல்லும் நாம்,
அதைவிட கேவலமாக சகமனிதனை  "பிசாசு" "ஓநாய்" "இரத்தத்தை கக்கி சாவாய்" "தலையில் இடிவிழும்" போன்ற வார்த்தைகளை  பிரயோகிப்பது சரியான செயலா?        



josephsneha wrote:

----------------------------------------------------------------------------------------
////தமிழ் கிறிஸ்தவ தளத்தில் திட்டுகிறார்களே என அங்கு பதமாக பேசிவிட்டு இங்கு பாய்வது மட்டும் சரியா?////

 

          ----------------------------------------------------------------------------------------

எல்லா தளங்களிலும் நான் பதமாகத்தான் எழுதுகிறேன். இங்கு "பாய்கிறேன்" என்று சொல்லும் அளவுக்கு அப்படி என்ன வார்த்தையை உபயோகித்துவிட்டேன் சகோதரரே இப்படி வீணாக பழி போடுகிறீர்கள்!

 
"பிரதளங்களில் இருக்கும் ஒழுங்கு அங்கு இல்லை" என்று நான் குறிப்பிட்டதற்கும் சரியான காரணம்  உண்டு.  "எழுதப்படும் பதிவுகளை நீக்கும்முன் சம்பந்தபட்டவருக்கு எதற்க்காக அப்பதிவு நீக்கப்படுகிறது"என்ற காரணத்தயாவது  ஒரு தனி மெயில் அனுப்புங்கள் அடுத்த முறை அதுபோன்ற பதிவுகளை தவிர்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது போன்று நோக்கில் எழுதி ஒரு பதிவிட்டேன். ஆனால் அந்த பதிவு உடனே  நீக்கப்பட்டதோடு அதற்காக எந்த பதிலும் வரவில்லை.  அதாவது  அதை அவர்கள் ஒரு பதிவாகவே எடுத்துகொள்ளவில்லை. ஆனால் பிற தளங்களில் அப்படி செய்யமாட்டார்கள் அட்லீஸ்ட் மனிதனை மனிதனாகவாவது  மதிப்பார்கள்.  
 


__________________


Member

Status: Offline
Posts: 18
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


சகோ. சுந்தர் நீங்கள் குறி்ப்பிடுவதிலும் சில உண்மைகள் இருக்கின்றன. பதிவுகள் எதற்காக நீக்கப்பட்டன என்ற காரணம் தெரிந்தால் இதுபோன்ற தவறுகளை நிச்சியம் தவிர்த்துக் கொள்ளலாம். சந்தர்ப்பம் வரும்போது தளநிர்வாகிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு போகிறேன். 

டீro, Sundar wrote:
ஆனால் "ஒரு கன்னத்தில் அடித்தல் மறுகன்னத்தை திருப்பி கொடு" என்று போதித்த ஆண்டவராகிய இயேசுவை உலகத்துக்கு எடுத்துசொல்லும் நாம்,
அதைவிட கேவலமாக சகமனிதனை  "பிசாசு" "ஓநாய்" "இரத்தத்தை கக்கி சாவாய்" "தலையில் இடிவிழும்" போன்ற வார்த்தைகளை  பிரயோகிப்பது சரியான செயலா?

கண்டிப்பாக இல்லை சகோதரரே!. நிச்சியமாக கண்டிக்கப்பட வேண்டியவை. ஒரு மெய்கிறிஸ்தவனின் வாயிலிருந்து அத்தகைய வார்த்தைகள் புறப்படாது. தாங்களும் அப்படியே! ஆயினும் உங்கள் அளவுககு மற்றவர்கள் இல்லை. ஆயினும் இத்தளத்திலேயே மகன் வயதில் உள்ளவரை பேதை, அறிவிலி என்பதும் மற்றவர்களை குறைகூறுவதும் எந்த விதத்தில் நியாயமாகும். மற்றவர்களுக்கு இவை தவறு என  போதிக்கும் சகோ. அன்பு மிகமோசமான வார்தைப்பிரயோகங்களை கண்டும் காணாமல் இருக்கிறீர்களே! மற்றவர்களை பரிசிக்கும் சகோ. அன்பு போன்றோர் ஏனைய தளங்களை எள்ளி நகையாடுவதும் கண்டிப்பதும் நகைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

இந்த வசனங்களையும் பாருங்கள்

பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்." (நீதிமொழிகள்.19:25)

"அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்." (தீத்து.1:11)







-- Edited by colvin on Friday 18th of February 2011 02:19:15 PM

__________________


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
RE: தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


திரு கொல்வின் அவர்களே,

உங்கள் பதிவில் இன்னும் ஒருபட்சம் தான் தெரிகிறது தவிர நீதி இல்லையே!! நான் தமிழ் கிறிஸ்தவ தளத்தை நேர்மையான தளம் என்று தான் நினைத்தேன், ஆனால் அவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை சொல்லுவதால், அவர்களின் குனாதிசயங்கள் தெரிய வருகிறது!! மாற்று கருத்து இருப்பதால் தான் விவாத மேடை என்றும், விவாதம் என்றும் இருக்கிறது!! ஒரே விஷயத்தை ஒரே மாதிரி சொல்லுவதற்கு எதற்கு விவாத மேடை?

என் பதிவுகளை பாதுக்காத்திருக்கவேண்டியது என் பொறுப்பு தான், ஆனால் நீக்குவதற்கு முன் நிர்வாகிகள் ஒரு முறை சொல்லிய பிறகு அதை நீக்கினால் நான் சேமித்து வைக்க சுலபமாக இருந்திருக்குமே!! இது ஒன்றும் இல்லை, அவர்களின் தன்மையை தான் வெளிப்படுத்துகிறது!! நிர்வாகிகள் என்கிற ஒரு கூட்டம் இருந்து ஒரே ராகத்தில் பாடுவோரை மதித்து, விவாதத்தில் அவர்களுக்கு ஒத்து போகாத கருத்துக்களை நீக்குவதும் சர்வாதிகாரம் இல்லாமல் வேறு என்ன‌?

சரி தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உள்ளவர்கள் அத்துனை நேர்மையானவர்கள் என்றால், நான் அனுப்பிய அஞ்சலுக்கு பதிலாவது கொடுத்திருக்கலாமே!! நான் அப்படி கேட்காமல் இப்பொழுது பொய் பேசுகிறேன் என்கிற அர்த்தத்தில் அமைந்த தங்களின் கேள்வி கண்டனத்துக்குரியது!! மேலும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது!! எனக்கு நேர்ந்ததை நான் அப்படியே எழுதுகிறேன்!! உங்கள் தமிழ் கிறிஸ்தவ தள நிர்வாகிகள் நேர்மையுள்ளவர்கள் என்றால் நான் இப்படி அவர்களிடம் கேட்டது உண்டா இல்லையா என்று அவர்களிடமும் கேட்கலாமே!! என் ஆதங்கத்தை அனைவருக்கும் ஏன் தெரிவிக்கனும், தள நிர்வாகிகள் நேர்மையானவர்கலாக இருப்பார்கள் என்கிற தப்பெண்ண‌ம் கொண்டதால் ஆலோசனை பகுதியில் எழுதவில்லை!! அப்படியே எழுதியிருந்தால் அதை மட்டும் விட்டு வைத்திருப்பார்களா அவர்கள்!! தயவு செய்து ஒரு தலை பட்சமாக பேசாதீர்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்!!

இது தான் என் பதில்!! தமிழ் கிறிஸ்தவ தளம் என்கிற ஒரு தளம் கிறிஸ்தவம் என்கிறதை சேர்த்துக்கொண்டதால் மாத்திரம் நேர்மையான தளம் என்று என்னுவது தவறு!! நிர்வாகிகளிடம் நேர்மை இல்லை!! என் எழுத்துக்களை திரும்ப தராவிட்டாலும், நான் எழுதிய அஞ்சலில் ஒன்றுக்காவது பதில் தந்திருந்தால் அவர்கள் நேர்மையானவர்கள் என்று ஒப்புக்கொண்டிருப்பேன்!!

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இது உண்மையே!!


__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தின் விதிகள் vs விதிமீறல்கள்
Permalink  
 


BRO. COLVIN wrote
///இத்தளத்திலேயே மகன் வயதில் உள்ளவரை பேதை, அறிவிலி என்பதும் மற்றவர்களை குறைகூறுவதும் எந்த விதத்தில் நியாயமாகும்.///
 
நியாயமில்லைதான், ஆகினும் தகப்பன்நிலையில் இருப்பவர் ஒருவேளை தன் மகனின் நன்மைக்காக மகனை "அறிவிலி" என்று திட்ட அனுமதியுண்டு. ஆனால் தகப்பன் நிலையில் இருப்பவர் என்று கருதும் ஒருவரை, மகன் நிலையில் இருக்கும் ஒருவர்  எத்தனையோ அநாகரீகமான வார்த்தையால் அபிஷேகிப்பது மட்டும்  நியாயமா? இன்னும் எத்தனயோ  தரம்கெட்ட வார்த்தைகளை உழியம் என்றபெயரில் எழுதிவரும் ஒருவரது ஊழியத்தை தாங்கள் //நீங்கள் செய்யும் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்// என்று சொல்லி ஆசீர்வதிப்பது நியாயமா?     
 
BRO. COLVIN wrote
////மற்றவர்களுக்கு இவை தவறு என  போதிக்கும் சகோ. அன்பு மிகமோசமான வார்தைப்பிரயோகங்களை கண்டும் காணாமல் இருக்கிறீர்களே!///
 
நான் காணாமல் இருக்கவில்லை சகோதரரே. எனது தளத்தில் ஆதற்கு தகுந்தால்போல் கட்டுரைகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை படித்த்த சகோ. அன்பு கூட சரி என்று சொல்லி ஆமோதித்திருக்கிறா (சுட்டி பார்க்கவும்  நம்மீதான "தேவனின் சித்தம்" என்ன?)
 
ஆகினும் தன்னுடைய எதிரி யார்? என்பதை ஆவிக்குரிய கண்களால் நோக்காமல் மாம்சத்துக்குரிய கண்களால் நோக்குவதால், இயேசுவின் வார்த்தையை கைக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை இருந்தும்கூட சாத்தானின்  வஞ்சகதந்திரத்தால் அவனை மாம்சத்தில் மேற்கொள்ள நினைத்து  தடுமாரிப்போகிறார். (அதற்க்கு ஜெபக்குறைவே காரணம் என்று நான் கருதுகிறேன். ஆகினும் இப்படி தரம் கெட்ட பரியாசவார்த்தை  கலாச்சாரத்தை ஆரம்பித்து  எல்லோரையும் சோதித்துகொண்டிருப்பது யாரென்று தங்களுக்கு தெரியுமே. திருப திரும்ப அடிக்கும் ஒருவரிட மிருந்து தற்காப்புக்காக தடுத்தல் போன்ற செயலையே இவர் செய்கிறார்  என்றே நான் கருதுகிறேன்    
 
"ஆவியால் மாம்சத்தின் கிரியை அழித்தால்தான் பிழைப்பீர்கள்" என்று வேதம் சொல்கிறது. மாம்ச முயற்ச்சியில் போராடி சாத்தானை நம்மால் வெற்றிகொள்ளவே முடியாது.    



-- Edited by SUNDAR on Tuesday 22nd of February 2011 05:37:22 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

sundar wrote:
//நான் காணாமல் இருக்கவில்லை சகோதரரே. எனது தளத்தில் ஆதற்கு தகுந்தால்போல் கட்டுரைகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை படித்தசகோ. அன்பு கூட சரி என்று சொல்லி ஆமோதித்திருக்கிறார் (சுட்டி பார்க்கவும்
நம்மீதான "தேவனின் சித்தம்" என்ன?)//

அன்பான சகோதரரே! மன்னிக்கவும்.

நம் மீதான தேவனின் சித்தம் என்ற திரியில் நான் பதித்த பதிவு, முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட வாழ்வில் உண்டான அனுபவத்தின் பாதிப்பேயொழிய,  இந்த “இடும்பு செய்வோர், மற்றும் இடறல் செய்வோருடன்” உண்டான அனுபவத்தின் பாதிப்பு அல்ல.

இவர்களுக்கு எதிராக நான் பயன்படுத்தின எந்தவொரு வார்த்தையினிமித்தமும் நான் வருத்தப்பட்டதுமில்லை, வருத்தப்படப்போவதுமில்லை. இவர்களின் நோக்கம் “எனக்கெதிராக செயல்படுவதுதான்” என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உண்மையில் இவர்கள் செயல்படுவது, “எனக்கெதிராக அல்ல, தேவனுக்கு எதிராகவே”. தாவீதின் பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

சங்கீதம் 139:19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
22 முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.
23 தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.


இவ்வசனங்கள் முழுவதையும் எனக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொண்டுதான் அவர்களைப் பகைத்து அருவருத்து பதிவுகளைத் தந்தேன்.

COLVIN wrote
//இத்தளத்திலேயே மகன் வயதில் உள்ளவரை பேதை, அறிவிலி என்பதும் மற்றவர்களை குறைகூறுவதும் எந்த விதத்தில் நியாயமாகும்.//

மகன் வயதிலுள்ளோரை மட்டுமல்ல, தகப்பன், தாத்தா வயதிலுள்ளோர்கூட தேவனுக்கு விரோதமாய் எழும்பினால், அவர்களை “பேதை, அறிவிலி” எனச் சொல்ல நான் தயங்க மாட்டேன். தேவனுக்கு விரோதமாய் எழும்புவனை “பேதை, அறிவிலி” எனச் சொல்லாமல், அவனோடு சமரசம் செய்து கொஞ்சிக்குலாவவா முடியும்?

COLVIN wrote
//மற்றவர்களுக்கு இவை தவறு என  போதிக்கும் சகோ. அன்பு மிகமோசமான வார்தைப்பிரயோகங்களை கண்டும் காணாமல் இருக்கிறீர்களே!//

இவர்கள் வேதவசனங்களை அறியாமல் தப்பான எண்ணங்களைக் கொண்டிருப்பதால்தான் (மாற்கு 12:24), “வேதபோதனைப்படி நடப்பது” என்றால் என்னவென்று அறியாமல், “தனிப்பட்ட வாழ்வையும், தேவஊழியத்தையும்” இணைத்து குழப்பிக் கொள்கின்றனர். குழப்பத்திலேயை வளர்ந்தவர்களுக்கு எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கும்.

இயேசுவின் போதனைகள் யாவும் நம் தனிப்பட்ட வாழ்வுக்குரியவைகளேயொழிய “தேவப்பணியின் வாழ்வுக்குரியதல்ல”.

பவுலின் பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

அப்போஸ்தலர் 13:9,10 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?  இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.

இவ்வசனத்தை பவுல் சொன்னபோது, அவர் பரிசுத்தஆவியில் நிறைந்திருந்ததாக வசனம் சொல்கிறது. உங்கள் சத்துருக்களை சபிக்காமல், ஆசீர்வதியுங்கள் என இயேசு சொன்ன போதனையைப் பின்பற்றின பவுல் ஏன் ஒருவனைக் குருடாகும்படி சபித்தார்? பவுல் சபித்தபடியே, அவன் குருடாகிப்போனது ஏன்?

நீதிக்குப் பகைஞனாகவும் கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுபவனாகவும் உள்ள ஒருவன், பவுலுக்கோ எனக்கோ தனிப்பட்ட விரோதி அல்ல; தேவனுக்கு விரோதி. இவர்களென்ன, இவர்களின் தாத்தாவுக்குத் தாத்தாவானாலும், அவர் தேவனுக்கு விரோதியாக இருந்தால், பவுலைப் போல் அவரைப் பகைக்க நான் தயங்கமாட்டேன்.

தேவனின் விரோதிகளை சபிப்பதற்கு அன்று பவுலுக்கு அதிகாரம் இருந்தது, எனவே அவர் சபித்தார், சபித்தபடியே நடக்கவும் செய்தது. பேதுரு மூலம் அனனியா-சப்பீராளுக்கு நேர்ந்ததையும் நீங்கள் அறிவீர்களல்லவா?

அப்போஸ்தலர் 5:3-9 பேதுரு அவனை நோக்கி: .... நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். .... பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.

தனக்கு விரோதமாக அல்ல, பரிசுத்தஆவிக்கு விரோதமாக பொய் சொன்ன அவர்களை சாகத்தக்கதாக பேதுரு சபித்தார். பேதுருவும் பவுலும் அப்போஸ்தலரென்பதால் இவ்விதமாக சபிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. நான் ஓர் அப்போஸ்தலனல்ல. எனவே “தேவனுக்கு விரோதியானவர்களை” சபிப்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தேவப்பணியைச் செய்த தாவீதைப் போல் அவர்களைப் பகைப்பதற்கும் அருவருப்பதற்கும் எனக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின்படியே நான் செய்கிறேன்.

இப்படிச் செய்வதற்கும், இயேசுவின் போதனைகளைப் போதிப்பதற்கும் சம்பந்தமில்லை.

எனது தனிப்பட்ட வாழ்வில், கிறிஸ்துவின் போதனையை நான் பின்பற்றுவதைத் தடுக்கும் வண்ணமாய் சமீபத்தில் எனக்குப் பல சோதனைகள் வந்தன. அப்போது
நம்மீதான "தேவனின் சித்தம்" என்ன? எனும் திரியில் நீங்கள் பதித்த பதிவின் மூலம் தேவன் என்னோடு பேசினார். அதைத்தான் அத்திரியில் நான் பதித்தேன்.

மற்றபடி, இத்தளத்தின் தலைப்பின் அடிப்படையில் என்னை ஒரு விஷஜந்து என ஒருவர் எப்போது கூறினாரோ, அப்போதே அவரை நான் முழுப்பகையாய் பகைக்கத் தொடங்கி விட்டேன்; அவ்வாறே அவரோடு சேர்ந்தோ சேராமலோ யாரெல்லாம் நான் செய்கிற தேவப்பணிக்கு இடறல் செய்கிறார்களோ, அவர்களையும் நான் முழுப்பகையாய் பகைக்கிறேன்.

அன்பான சகோதரரே! நீங்களும் தேவப்பணியைச் செய்கிறீர்கள், பெரியன்ஸ்-ம் தேவப்பணியைச் செய்கிறார், நானும் செய்கிறேன். நம்மிடையே கருத்து மோதல்கள் இல்லாமலா உள்ளன?

ஏன், சகோ.சந்தோஷின் ஒரு கட்டுரையை நான் பாராட்டி, அதை எனது பத்திரிகையில் போட்டதுமுண்டு; அதே வேளையில், அவரது ஒரு கட்டுரையில் வேதத்திற்கு எதிராகக் காணப்பட்ட அபத்தங்களை, சகோ.சந்தோஷின் அபத்தங்கள் என்ற தலைப்பில் ஒரு திரியைத் துவக்கி அதில் பதித்தமுண்டு. நான் அபத்தமென சொல்வது சரியல்ல என்பதை சந்தோஷ் தகுந்தவிதமாக நிரூபித்தால், உடனடியாக எனது பதிவுக்காக நான் மன்னிப்பு வேண்டி, அதை நீக்கத் தயாராயுள்ளேன்.

நம்மிடையே வரும் மோதல்களுக்குக் காரணமென்ன? வேதவசனங்களைப் புரிந்துகொள்வதில் நமக்குள் இருக்கும் வேறுபாடே.

இதெல்லாம் தேவப்பணியின் காரியத்தில் வரும் மோதல்களேயொழிய தனிப்பட்ட மோதல்கள் அல்ல. பேதுரு மாயம் பண்ணினதாக பவுல் சொன்னாரே, அது போலத்தான். ஆனால் நீங்களோ, பெரியன்ஸோ, சந்தோஷோ அல்லது நானோ ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இடும்பும் இடறல்களுமா செய்கிறோம்?
உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள், எனது கருத்தை நான் சொல்கிறேன், அவ்வளவே.

நம்மிடையே உள்ள மோதல்களில் வேகம் இருந்தாலும், கூடவே நிதானமும் இருக்கும். ஒருவேளை நீண்டகாலம் விவாதம் செய்கிறபோது மாம்சத்தில் வந்த சோர்வினிமித்தம் ஒருசில நேரங்களில் சற்று எல்லை மீறியிருக்கலாம். அப்படியே மீறினால்கூட விரைவில் நாம் சகஜநிலைக்குத் திரும்பிவிடுகிறோம் அல்லவா?

ஆனால் அவர்களோ அப்படியல்ல. என் தேவப்பணியை எப்படியாவது குலைத்தேயாக வேண்டுமென கங்கணம் கட்டி, கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வேதவசனத்தின்படி கருத்தை வைக்க இயலாத இவர்கள், இடும்பும் பரியாசமும் செய்து என் தேவப்பணியை ஒடுக்க நினைப்பதால்தான் இவர்களை நான் முழுப்பகையாய் பகைக்க வேண்டியதாகிறது. எனது நிலையைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard