//இப்போது சொல்லுங்கள்: பிதாவாகிய ஒரே தேவனுக்கு இருக்கிற 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார்?
நீங்கள் சொல்ல வேண்டிய பதில், 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார் என்பது மட்டுமே. கீழே காணப்படுகிறபிரகாரமான விளக்கங்கள் தேவையில்லை.//
ஒரு கம்ப்யூட்டர் இயங்க மின் தொடர்பு வேண்டும், நுட்பமான மின்னணு சுற்றுப்பாதை வேண்டும், அப்புறம் அதற்கேற்ற வன், மென் பொருட்கள் வேண்டும். இவை அனைத்தும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பது கணிணி துறை விற்பன்னர்களுக்கு மாத்திரம் தெரியும் அதிலும் இதன் முழுமையை யாராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்துகொள்ள முடியாது. ஆனால் என்ன இப்படி ஸ்விட்சை ஆன் செய்து ஆளாளுக்கு காலை வாரிக்கொண்டு வக்கணையாக வசை பாடிக்கொண்டிருக்கிறோம்.
வேதத்தில் தேவனாகிய கர்த்தர், குமாரனாகிய கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பெயர்களை நிச்சயமாகவே பார்க்கிறோம், இவர்களது செயல்பாடு பற்றிய சூட்சுமம் மனிதனால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது, மனிதன் உருவாக்கிய கம்ப்யூட்டரிலேயே அதன் வல்லுனர்களுக்கு தெரியாத பல சங்க்கதிகள் உள்ள போது, தேவன், கிறிஸ்துவானவர், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று ஆள்தத்துவமான நபர்களின் செயல்பாடுகளையும் எண்ணங்க்களையும் அறிந்து கொள்ள யத்தனிப்பது ஒரு எறும்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைப்பது போலாகும்.
உங்களுக்கு என்ன ஐயா பிரச்சனை, இயேசுவை வணங்க வேண்டாம், நீங்கள் வணங்க மாட்டீர்கள், சந்தோஷம், அப்படியே வைத்துக்கொள்ளுங்க்கள், மற்றவர்கள் இயேசுவை வணங்க்குகிறோம், இதனால் ஆனது ஆகிவிட்டு போகிறது. ஆத்தும ரட்சிப்புக்கு தேவை, நான் ஒரு பெரிய பாவி, என் இயேசு என் ஆத்துமாவை அழிவுக்கு அல்லாமல் மீட்டுக்கொண்ட ரட்சகர் இந்த இரண்டு உணர்வுகளும் போதும் ஒருவன் தேவனிடம் அண்டிவர.
பிதாவின் சித்தத்தை செய்வதையே அவர் எதிர்பார்க்கிறார். அவரது மீட்பின் திட்டமாகிய அவரது குமாரனின் ரத்தத்தால் கழுவப்படுதல் அதன்பின்னர் ஆவியின் கனிகளால் மற்றவருக்கு அவரது அன்பை காண்பித்தல், ஆவியின் வரங்க்களால் மற்றவர்களுக்கு சாட்சியாயிருத்தல். நித்திய ராஜ்யத்தை சுதந்தரிக்க இது போதாதா.
இல்லை நியாய தீர்ப்பின் நாளில் பிதாவாகிய தேவன், நீங்கள் எப்படி என் குமாரனாகிய கிறிஸ்துவை வணங்க்கப்போயிற்று என கழுத்தை பிடிப்பாரா? ஒரு மன்னன் அரியணையில் வீற்றிருக்கும் போது அவனது வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இளவரசனான தனது மகனை அவைக்கு வருபவன் வணங்கினானால் அவனுக்கு கோபம் வருமா? மனிதனுகே வராதபோது சகலத்தையும் தனது குமாரனின் அதிகாரத்துக்கு கீழ்ப்படுத்தினவருக்கு கோபம் வருமா?
நான் கொடுத்திருக்கும் பதிவில் அவர்களை எந்த விதத்தில் அனர்த்தம் படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சொல்ல வேண்டாமா? சில்சாமின் வளர்ப்பில் இருந்தால் அவரை போன்றே எழுத்தும் உங்களுக்கு உருவாகியிருக்கிறது போல்!! முதலில் கண்களில் உள்ள கருப்பு கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு, நான் எழுதியதை நிதானமாக வாசியுங்கள், உங்களுக்காக மீண்டும்,
//இப்படி தியாகிகள் பக்தர்கள் பரிசுத்தவான்கள் என்று வேதத்தை எழுதாதவர்களின் எழுத்தின் அக்கறை செலுத்துவதை காட்டிலும் (நீங்கள் விரும்பும் காவல் கோபுரம் உட்பட தான் நண்பரே) வேதத்தில் கிறிஸ்து இயேசுவை குறித்து பவுல் தெளிவாக சொன்னதும், அதை கிறிஸ்து இயேசு அங்கிகாரித்தை வாசித்தோமென்றாலே, இந்த 2000 ஆண்டுகளின் தியாகிகள் பக்தர்கள் வேதபுரட்டர்களாக இருந்தார்கள் என்று நிரூபனமாகிவிடும்!!//
அதை தொடர்ந்து மத் 16ம் அதிகாரத்தில் பேதுருவும் இயேசு கிறிஸ்துவும் பேசிக்கொண்டதையும் சொல்லியிருக்கிறேன்!! இப்படி இயேசு கிறிஸ்துவும் பேதுருவும் பேசிக்கொண்டதை வைத்து பார்த்தோமெனில், நீங்கள் சொல்லும் 2000 வருடங்கள் உல்ள பக்தர்கள் திரித்துவத்தை போதித்தவர்களென்றால், நிச்சயமாக வேத புரட்டர்களாக தான் இருந்திருக்க முடியும்!! உங்களுக்கு வேதத்தில் சொன்ன கிறிஸ்து இயேசு மற்றும் அவரின் அப்போஸ்தலர் மேல் அக்கறை இல்லாவிட்டால், நான் மாத்திரம் நீங்கள் சொல்லும் இந்த 2000 வருடங்கள் தியாகிகளுக்கு எந்த விதத்தில் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்!! மேலும் தாங்கள் சொல்லும் அந்த கிறிஸ்தவ பரிசுத்தவான்களை கொலை செயதவர்களே உங்களை போன்ற திரித்துவத்தை பேசும் கத்தோலிக்கர்கள் தான் என்பது தங்களுக்கு தெரியுமா!! எழுதும் முன் நிதானம் வேண்டும்!! சில்சாமின் புத்தியுடன் எழுத நினைக்காதீர்கள்!! வாதம் செய்யலாம், விவாதிக்கலாம், ஆனால் உங்கள் கூட்டனி தலைவனான சில்சாம் என் அப்பா அம்மாவை குறித்து எழுதியதை கண்டனம் பண்ண தெரியாத உங்களை எல்லாம் கிறிஸ்தவன் என்று சொல்லுவதற்கே நான் வெட்கப்படுகிறேன்!!
இயேசு கிறிஸ்து கர்த்தர் இல்லை என்று எங்காவது நான் மறுத்திருக்கிறேனா!! அல்லது அப்படி தான் எழுதியிருக்கிறேனா!! என் வாதம் எல்லாம், இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாது என்பதே!! பிலி 2:10,11 என்று காண்பிக்கிறீர்களே, அதை என்னவென்று புரிந்திருக்கிரீர்கள்!! தயவு செய்து எதிர்க்க வேண்டும் என்று எழுதாதீர்கள்!! நான் எந்த விதத்திலும் கிறிஸ்துவை கணவீனம் படுத்தவில்லை, அவரை பிதா இல்லை என்று தான் சொல்லுகிறேன், அதுவும் வேதத்தில் உள்ளப்படியே!! உங்கள் கூட்டனி தலைவன் சில்சாமின் புத்தியை முதலில் அறிந்துக்கொண்டு பிறகு அடுத்தவர்களுக்கு அறிவுறை வழங்கலாம்!!
இது வரை உங்களை நண்பர் என்றோ, திரு என்றோ தான் எழுதியிருக்கிறேன், தயவு செய்து சில்சாம் பாணியில் உங்கள் எழுத்துக்களை அமைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!! இப்படி எல்லாம் எழுதுவீர்கள், ஆனால் உங்கள் குருநாதர் சில்சாம் உடனே தன் சாத்தானின் தளத்தில், ஐய்யகோ, அப்பாவியான சகோதரர் ஜோஸப்ஸ்நேகாவை காட்டுமிறாண்டி தனமாக "கோவை வெறியன்ஸ்" தாக்கி விட்டார் என்று!! மண்ணிக்கனும் நான் உங்களை அப்பாவி என்று சொல்லவில்லை, சில்சாமின் வார்த்தைகளையே சொல்லி எழுதியிருப்பதால், என்னை குற்றம் சொல்லுவதற்கு முன், உங்கள் போதகர் சில்சாமிற்கு புத்தி சொல்லுங்கள்!!
வேதத்தில் உள்ள வார்த்தைகளான கிறிஸ்து, பெரேயா போன்ற வார்த்தைகளையே உச்சரிக்க தெரியாத உங்கள் போதகர் சில்சாமின் தரகுறைவான வார்த்தைகளுக்கு முதலில் கண்டனம் தெரிவியுங்கள், நீங்கள் அவர் எழுதியது கொச்சைத்தனமான வார்த்தைகள் என்று நினைத்தால்!! இல்லை என்றால் நீங்களும் அவரின் பேச்சிற்கு துனை போகிறீர்கள் என்றே நினைத்துகொள்கிறேன்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
தன்னை கொலை செய்தவர்களையே மன்னித்தவர் இயேசு, கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என போதிக்கிறது வேதம், பெரேயா பட்டணத்தில் உள்ளவர்களை போல வேதத்தை கற்றறியும் உங்களுக்கு இது புரியாமல் போனது ஏனோ?
கிறிஸ்து தன்னை கொலை செய்தவர்களை அழிக்க தூதர்களை அழைக்கவில்லை அந்த சிந்தனை உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் சில்சாமிற்கு கண்டனங்களை தேடிக்கொண்டிருக்கமாட்டீர்கள், ஒருவேளை நான் சில்சாமை கண்டனம் செய்தால் அதனால் உங்களுக்கு கிடைக்கப்போவது என்ன. அதிக பட்சமாக நான் நடு நிலையாளன் என நீங்கள் நினைப்பீர்கள். இப்போதும் கூட நான் தனி நபர் தாக்குதலை (அவரது குடும்பம் உட்பட) ஆங்கீகரிக்க வில்லை.
இப்படி கூட்டாளி, கத்தொலிக்கன் என கண்டதையும் எழுதுமுன் கொஞ்ச்சம் யோசியுங்க்கள், இல்லை நான் இப்படி பொதுமைப்படுத்தி தான் எழுதுவேன் என்றால் எழுதிவிட்டு போங்கள். அதனால் எனக்கு ஒன்றுமில்லை
நான் கிறிஸ்தவனா, இல்லை கிறிஸ்தவன் இல்லையா என்பதை தேவன் அறிவார், உங்களது சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை, சற்று நிதானித்து எழுதுங்கள், சில்சாமின் மேல் உள்ள கோபத்தை மற்றவர்கள் மேல் காட்டாதீர்கள், என்னையும் நீங்கள் எழுதும் தொனியில் எழுதும் எல்லைக்கு தள்ளிவிடாதீர்கள். உங்களது கருத்துக்கள் எனக்கு ஒத்துவராததால் உங்கள் எழுத்துக்களை எதிர்க்கிறேன். உமது கருத்துக்களுக்கு பின்னூட்டம் அளித்தாலே ஏன் சில்சாமுடன் முடிச்சு போடுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் எனக்கு பதிலளிக்க விரும்பினால் அந்த கருத்துக்கு மாத்திரம் பின்னூட்டம் அளியுங்கள்.
ஒரு வசனத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டதாக நான் கருதினால் 'அனர்த்தம்' என்ற வார்த்தையை ஏன் நான் பயன்படுத்தக்கூடாது? நீங்கள் மறுக்க விரும்பினால், எவ்வாறு நீங்கள் அனர்த்தப்படுத்தவில்லை என்பதை மாத்திரம் விளக்குங்க்கள்
josephsneha wrote: //தன்னை கொலை செய்தவர்களையே மன்னித்தவர் இயேசு, கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என போதிக்கிறது வேதம், பெரேயா பட்டணத்தில் உள்ளவர்களை போல வேதத்தை கற்றறியும் உங்களுக்கு இது புரியாமல் போனது ஏனோ? கிறிஸ்து தன்னை கொலை செய்தவர்களை அழிக்க தூதர்களை அழைக்கவில்லை அந்த சிந்தனை உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் சில்சாமிற்கு கண்டனங்களை தேடிக்கொண்டிருக்கமாட்டீர்கள், ஒருவேளை நான் சில்சாமை கண்டனம் செய்தால் அதனால் உங்களுக்கு கிடைக்கப்போவது என்ன.//
அன்பான ஜோசப்ஸ்னெகா அவர்களே!
நாங்கள் கிறிஸ்துவின் சிந்தை உள்ளவர்களா இல்லையா என்பதையெல்லாம் விவாதித்தால் இத்தளத்தின் நோக்கத்தைத் தாண்டி வெகுதூரம் செல்ல நேரிடும். உங்கள் பார்வையில் நாங்கள் கிறிஸ்துவின் சிந்தையில்லாதவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். உங்களிடம் கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறதா என்பதை உங்களது பின்வரும் 2 பதிவுகளைப் படித்து சுயப்பரிசோதனை செய்துவிட்டு, இங்கு எடுத்துக்கொண்ட விவாதத்தில் கவனம் வையுங்கள்.
josephsneha wrote: //ஒரு கம்ப்யூட்டர் இயங்க மின் தொடர்பு வேண்டும், நுட்பமான மின்னணு சுற்றுப்பாதை வேண்டும், அப்புறம் அதற்கேற்ற வன், மென் பொருட்கள் வேண்டும். இவை அனைத்தும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பது கணிணி துறை விற்பன்னர்களுக்கு மாத்திரம் தெரியும் அதிலும் இதன் முழுமையை யாராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்துகொள்ள முடியாது. ஆனால் என்ன இப்படி ஸ்விட்சை ஆன் செய்து ஆளாளுக்கு காலை வாரிக்கொண்டு வக்கணையாக வசை பாடிக்கொண்டிருக்கிறோம். வேதத்தில் தேவனாகிய கர்த்தர், குமாரனாகிய கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பெயர்களை நிச்சயமாகவே பார்க்கிறோம், இவர்களது செயல்பாடு பற்றிய சூட்சுமம் மனிதனால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது, மனிதன் உருவாக்கிய கம்ப்யூட்டரிலேயே அதன் வல்லுனர்களுக்கு தெரியாத பல சங்க்கதிகள் உள்ள போது, தேவன், கிறிஸ்துவானவர், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று ஆள்தத்துவமான நபர்களின் செயல்பாடுகளையும் எண்ணங்க்களையும் அறிந்து கொள்ள யத்தனிப்பது ஒரு எறும்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைப்பது போலாகும்.//
இம்மாதிரி கதைக்கு உதவாத உதாரணங்கள் எல்லாம் தேவையில்லை. தேவத்துவத்தை உங்களால் புரியமுடியவில்லையெனில், அதற்கு உதாரணமாக எறும்பு-கம்ப்யூட்டர் கதையைச் சொல்லி நீங்கள் திருப்திபட்டுக்கொள்ளுங்கள். உங்களது புரிந்துகொள்ளமுடியாமையை எங்கள் மீது திணிக்க முயலாதீர்கள். நாங்கள் நன்றாக திருப்தியாக புரிந்துகொண்டிருக்கிறோம். வேதத்தில் இல்லாத திரித்துவம் உங்களுக்கும் புரியவில்லை, உங்களால் பிறருக்கும் புரியவைக்க முடியவில்லை; அத்தனை குழப்பம் அதில்.
வேதத்தில் இல்லாத திரித்துவத்தை அறிய/புரிய நீங்கள் முயற்சித்தால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க முயலும் எறும்பின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்பதை உங்களது உதாரணத்தின் மூலம் நான் நன்கு அறிந்துகொண்டேன்.
josephsneha wrote: //உங்களுக்கு என்ன ஐயா பிரச்சனை, இயேசுவை வணங்க வேண்டாம், நீங்கள் வணங்க மாட்டீர்கள், சந்தோஷம், அப்படியே வைத்துக்கொள்ளுங்க்கள், மற்றவர்கள் இயேசுவை வணங்க்குகிறோம், இதனால் ஆனது ஆகிவிட்டு போகிறது. ஆத்தும ரட்சிப்புக்கு தேவை, நான் ஒரு பெரிய பாவி, என் இயேசு என் ஆத்துமாவை அழிவுக்கு அல்லாமல் மீட்டுக்கொண்ட ரட்சகர் இந்த இரண்டு உணர்வுகளும் போதும் ஒருவன் தேவனிடம் அண்டிவர.//
ஐயா நானாக உங்களை அழைத்து இயேசுவை வணங்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. கண் குருடாகிப்போன ஜனங்கள், இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு, இயேசுவை ஆராதிப்பதை மட்டும் முக்கியப்படுத்தி பரலோகம் சென்றுவிடலாம் என பகல் கனவு கொண்டிருப்பதால், இம்மாதிரி அறிவீன ஜனங்களுக்கு வேதத்தைப் போதிக்கும் பணியை தேவன் எனக்குத் தந்துள்ளார்; அப்பணியை நான் செய்துவருகிறேன், அவ்வளவே.
ஆராதனை என்பது தற்போது தேவையில்லை, இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிதல்தான் அவசியம் என எத்தனையோ முறை நான் சொல்லியுள்ளேன். அதேவேளையில், ஆராதனை என ஒன்றைச் செய்ய விரும்பினால், அதை ஒரே தேவனாகிய பிதாவுக்கு மட்டுமே செய்யவேண்டும் என இயேசு சொன்னதையும் சொல்லி வருகிறேன். இப்படிச் செய்வதில் உங்களுக்கு என்னய்யா பிரச்சனை? உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என இயேசுதானே சொல்லியுள்ளார்? எனது உபதேசத்தைக் கைக்கொள்ளும்படி போதியுங்கள் என்றும் இயேசு தானே சொல்லியுள்ளார்? அவர் சொன்னதைச் செய்வதில் உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
திரு ஜோஸப்ஸ்நேகா அவர்களின் பதிவு இப்பொழுது விவாத நோக்கம் கொண்டதாக இல்லை மாறாக ஏன் போதகர் சில்சாமை குற்றம் சொல்லுகிறீர்கள் என்கிற பாணியில் தான் இருக்கிறது!!
அப்பா அம்மா பற்றி தூஷித்து உலக வழக்கின்படி எழுதிய ஒரு மகா தரம் கெட்ட மனிதனிற்கு இது வரை, நீங்கள் இப்படி எழுதியது தவறு என்று எழுத தோன்றவில்லையே!! நீங்கள் கிறிஸ்தவரா இல்லையா என்பதற்கான சான்று நான் கொடுக்க வேண்டியதில்லை என்பது எனக்கு தெரியும், அது நீங்கள் எழுதும் எழுத்தே காண்பிக்கிறது!! ஒரு தலைபட்சமாக, சாதாரன மொழியில் நாங்கள் எழுதுவதற்கு இத்துனை கண்டனம் தெரிவிக்கும் உங்கள் தள நண்பர்கள், உங்கள் போதகர் சில்சாமின் ராட்சத வார்த்தைகளுக்கு ஒன்று சொல்லாதது அவருக்கு துனை போனதற்கு சமம் தான்!! இதற்காக தான் தாங்கள் கிறிஸ்தவரா என்று கேட்டேன்!!
//தன்னை கொலை செய்தவர்களையே மன்னித்தவர் இயேசு, கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என போதிக்கிறது வேதம், பெரேயா பட்டணத்தில் உள்ளவர்களை போல வேதத்தை கற்றறியும் உங்களுக்கு இது புரியாமல் போனது ஏனோ?//
வேதத்தை பெரேயா பட்டணத்தில் உள்ளவர்கள் போன்று கற்றுக்கொண்டிருப்பதால் தான் மனித போதனைகளை இவ்வுளவு கண்டித்து எழுதுகிறேன், கவணியுங்கள் மனித போதனைகளை, மனிதர்களை அல்ல, ஆனால் நீங்கள் துனை போகும், கண்டனம் தெரிவிக்க மறுக்கும் உங்கள் போதகரை போல் ஒருவரின் சந்ததியையோ, அப்பா அம்மா என்று ஒருவரின் குடும்பத்தையோ பொது மேடைகளில் எழுதுவதில்லை!! நீங்கள் ஒருதலை பட்சமாக யோசிப்பவர் அல்லர் என்றால், இது வரையில் ஒரு சிறு கண்டனமாவது உங்களிடம் வந்திருக்க வேண்டுமே!! இத்துனை பெரிய கினறு தெரியாமல், இருக்கும் சிறு சிறு ஓட்டைகளை துருவி எடுப்பது தான் நேர்மையான விவாதமா!?
இப்படி எழுதியிருக்கிறார் சில்சாம் என்று தாங்கள் அறிவீர்களா: //பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; //
இப்படி எழுதுவதும், கோட்பாடுகளை விமர்சித்து எழுதுவதையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் உங்கள் நீதியும் நேர்மையும் தொடர்ந்து கைபிடித்து வாருங்கள்!!
//யாருடைய புத்தியையும் அறிந்துகொண்டிருக்க எனக்கு அவசியமில்லை, இயேசு கிறிஸ்து பிதா அல்ல என்கிறீர்கள். சரி, நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்களும் சற்று நிதானமாக பதிலளியுங்கள்.//
இயேசு கிறிஸ்து பிதா அல்ல, மாறாக அவர் பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்று அநேக வசனங்கள் கொடுத்து சொல்லியாயிற்று!! இனி போதும்!! நான் புரிய மாட்டேன் என்று சொல்லுவது போல் தான் இருக்கிறது!! வசனத்தை கேட்டால், கம்ப்யூட்டர், மின்பொறுள், மின்சாரம் என்றெல்லாம், என் தேவனின் நிலையை தாழ்த்துகிறீர்கள்!! தேவனை உலக பொருட்களோடு ஒப்பீட்டு எழுதுகிறீர்கள்!! ஐய்யா, கம்பூட்டர் கண்டு பிடிக்கும் முன், வேறு உலக பொருட்களை வைத்து எழுதி வந்தார்கள், ஆனால் வசனத்தை கொண்டு தேவன் மூன்றாக அல்லது மூன்று ஆளத்துவங்களாக இருக்கிறார் என்பதை இது வரையில் ஒருவரும் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் வசனம் இருந்தால் தானே சொல்லுவதற்கு!! வசனம் இல்லாததினால் உலக பிரகாரமான பொருட்களில் தேவனை அடக்க பார்க்கிறீர்கள்!! என்ன நியாயம்!!
உங்களுக்கு எந்த பதிலை நான் நிதானமாக் எழுதவில்லை என்று சொல்லுங்கள்!! சில்சாமின் மேல் உள்ள கோபத்தை உங்களிடம் காட்ட வேண்டும் என்கிற அளவிற்கு நான் ஒன்றும் மதியீனன் அல்ல!! என் மேல் உள்ள கோபத்தை சில்சாம் போன்ற கள்ள போதகன் என் தாய் தந்தை மேலும் என் சந்ததியின் மேலும் காண்பித்து எழுதுவது எல்லாம் உங்கள் போன்ற நேர்மையாக எழுதுவோர் கண்களுக்கு ஏனோ மறைந்துவிட்டது!! ஆகவே தான் என்னை நிதானமாக பதில் எழுத சொல்லுகிறீர்கள்!! இந்த தளத்தில் எந்த பதிவில் உங்களை தனிப்பட்ட முறையில் விமரசனம் செய்து எழுதியிருக்கிறேன்?!!
//இப்போதும் கூட நான் தனி நபர் தாக்குதலை (அவரது குடும்பம் உட்பட) ஆங்கீகரிக்க வில்லை. இப்படி கூட்டாளி, கத்தொலிக்கன் என கண்டதையும் எழுதுமுன் கொஞ்ச்சம் யோசியுங்க்கள், இல்லை நான் இப்படி பொதுமைப்படுத்தி தான் எழுதுவேன் என்றால் எழுதிவிட்டு போங்கள். அதனால் எனக்கு ஒன்றுமில்லை//
இப்போதும் கூட சில்சாம் இப்படி எழுதக்கூடாது என்று உங்களால் சொல்ல முடியவில்லை!! உலகரீதியான நட்பு சில்சாம் தவறாக எழுதியிருக்கிறார் என்று சொல்ல உங்களுக்கு தடை செய்கிறது!! அவர் அப்படி எழுதியதும், நான் கூட்டாளி (என்றால் சிநேகிதன்), கத்தோலிக்கன் (கிறிஸ்துவத்தில் ஒரு உட்பிரிவு) என்று எழுதியதும், உங்களுக்கு ஒரே விதமாக பட்டிருப்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை!!
//என்னையும் நீங்கள் எழுதும் தொனியில் எழுதும் எல்லைக்கு தள்ளிவிடாதீர்கள். உங்களது கருத்துக்கள் எனக்கு ஒத்துவராததால் உங்கள் எழுத்துக்களை எதிர்க்கிறேன். உமது கருத்துக்களுக்கு பின்னூட்டம் அளித்தாலே ஏன் சில்சாமுடன் முடிச்சு போடுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் எனக்கு பதிலளிக்க விரும்பினால் அந்த கருத்துக்கு மாத்திரம் பின்னூட்டம் அளியுங்கள்.//
அப்படி நான் உங்களை என்ன எழுதிவிட்டேன் என்று தயவு கூர்ந்து காண்பித்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்!! நான் வேத வசனங்களை சுட்டி காண்பித்து எழுதுவது உங்களுக்கு ஒத்து வருவதில்லையா? என் எழுத்துக்களை எதிர்க்கிற நீங்கள் "அப்பா அம்மவை குறித்து" சில்சாம் எழுதிய எழுத்தை மாத்திரம் எதிர்க்காமல் இருப்பது எப்படி? உங்கள் வயது எனக்கு தெரியாது, ஆனாலும் அதிக உரிமை எடுத்து என்னை "உமது" என்று எழுதியதிலும் எனக்கு வருத்தம் கிடையாது!! சில்சாமின் மேல் உள்ள கோபத்தை உங்கள் மேல் காண்பிக்கவில்லை, மாறாக அவர் எழுதியது சரியா என்று மாத்திரம் கேட்க பிரயாசப்பட்டேன்!! வழக்கம் போல் உங்களிடம் அதற்கான நேரடியான பதில் கிடைக்கவில்லை!!
//ஒரு வசனத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டதாக நான் கருதினால் 'அனர்த்தம்' என்ற வார்த்தையை ஏன் நான் பயன்படுத்தக்கூடாது? நீங்கள் மறுக்க விரும்பினால், எவ்வாறு நீங்கள் அனர்த்தப்படுத்தவில்லை என்பதை மாத்திரம் விளக்குங்க்கள்//
நீங்கள் அனர்த்தம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்கு உங்களை ஒன்றும் சொல்லவில்லை, மாறாக, "நான் கொடுத்திருக்கும் பதிவில் அவர்களை எந்த விதத்தில் அனர்த்தம் படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சொல்ல வேண்டாமா? " என்று தான் கேட்டிருந்தேன்!! இப்போ சொல்லுங்க யார் நிதானம் இல்லாமல் எழுதுகிறார்கள் என்று!! நான் ஒன்றையும் மறுக்கவில்லை!! ஆனால் நீங்கள் வேஎதத்தை காட்டிலும் 2000 ஆண்டுகளாக இருந்த தியாகிகள், பக்தர்கள், இரத்தசாட்சிகள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டிலும், வேதத்தின் மேல் வைத்திருப்பது தான் அதிக நலம் என்கிற அறிவுறையை தருகிறேன்!! உங்களுக்கு இன்னோரு வசனம் சொல்லுகிறேன்,
கலா. 1:7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 10. இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
ஏத்துனை ஆயிரம் பரிசுத்தவான்கள் பகதர்கள் இரத்தசாட்சிகள் வந்தாலும் வேதத்தில் அப்போஸ்தலர்கள் கொடுத்த சுவிசேஷத்தை ஒருவன் புரட்டினால் அவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் சொன்னதை வைத்து தான் நான் அப்படி எழுதினேன்!! நான் எந்த மனுஷனையும் பிரியப்படுத்த இந்த காரியங்கலை எழுதவில்லை, எனக்கு ஏற்படும் நிந்தைகளை நீங்கள் அறிவீர்கள்!! உங்களுக்கு வசனத்தின் மேல் வாஞ்சை இருந்தால் வசனத்தை பாருங்கள், மனிதர்கள் தான் சரி என்றால் அதை செய்யுங்கள், ஆனால் கள்ள போதகர் சில்சாமை காட்டிலும் நான் எந்த விதத்திலும் நிதானம் இழந்து எழுதவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்!!
விவாதம் விவாதமாக இருந்தால், வசனத்துடன் இருந்தால் தாராளமாக விவாதிக்கலாம்!! என் தளத்தில் உறுப்பினர் ஆனாலும் இந்த தளத்தில் மாத்திரமே உங்களிடம் பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன்!! நான் மனிதர்களை எதிரிகளாக பார்ப்பவன் கிடையாது, கோட்பாடுகளுக்கு மாத்திரமே நான் எதிரி!! தவறான கோட்பாடுகள் அறியாமையினால் வருகிறது!! மனித போதனை வந்து கண்களை மூடிக்கொண்டு விட்டதால், நாங்கள் வசனத்தால் காண்பிக்கும் விஷயங்கள் உங்களுக்கு மாறுபாடானதாக தெரிகிறது!! உங்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பகையோ, காழ்ப்போ கிடையாது, நீங்கள் என் எழுத்தை தாராளமாக விமர்சிக்கலாம், ஆனால் தயவு செய்து என் கருத்து தப்பு என்று வசனத்தை கொண்டு காண்பியுங்கள்!!
தமிழ் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவனை "கர்த்தர்" என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்கள், ஆனால் பக்கது மாநிலமான கேரளா மற்றும் ஆந்திராவில், உள்ள மொழிகளில் யெகோவா என்றே எழுதியிருக்கிறார்கள்!! தமிழ் வேஎதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் பிதாவை கர்த்தர் என்றும் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று எழுதியது தானே குழப்பம்!! இந்த குழப்பம் வேண்டாம் என்று தான் நாங்கள் அதன் எபிரேய பதம் மற்றும் கிரேக்க பதங்களை கொடுத்தால் அதற்கும் உங்களுக்கு உடன்பாடில்லை!! பின்பு எப்படி தான் வேதத்தை ஆராய சொல்லுகிறீர்கள்!!
நன்றி!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இயேசுவை தொழத்தக்க தெய்வம் இல்லை என சொல்லி அவரது தெய்வீகத்தன்மையை நீங்கள் மறுப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏசாயா தீர்க்கன் இயேசுவுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே அவரது பிறப்பை தீர்க்கதரிசனமாக எழுதினார். "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா சமாதான பிரபு" என எழுதியுள்ளார், அவரது தெய்வீகத்தை உணர்ந்துகொள்ள இது போதாதா?
வல்லமையுள்ள தேவனாக அவருக்கு சகல அதிகாரங்களையும் அளித்தாரே. அவரை தொழத்தக்க தெய்வம் அல்ல என்கிறீர்கள், இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூன்று நிலைக்கும் வேதத்தில் வசனங்கள் இருக்கின்றன, அப்புறம் திரித்துவம் இல்லை என எதை வைத்து சொல்கிறீர்கள், இயேசுவின் ஞானஸ்னானத்தில் வானத்தில் இருந்து உண்டான குரல், மனுஷ குமாரன், புறா வடிவிலான ஆவியானவர் ஆகிய மூன்று நிலைகளையும் இஸ்ரவேலர் கண்டார்களே அப்போ அது இல்லை என ஆகிவிடுமா?
பெரியன்ஸ், உங்களை உமது என நான் அழைத்தது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். உங்களை விட நான் வயதில் சிறியவன் தான்.அதுபோக சில்சாம் உங்களை பற்றி எழுதியது கண்டிக்கத்தக்கது தான்
தாங்கள் சில்சாமில் எழுத்துக்கு கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி!!
சரி விஷயத்திற்கு வருகிறேன்,
நான் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னதில் ஒன்றையும் மறைக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்!! நான் சொல்லுவது எல்லாம், தயவு செய்து குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை, பிதாவின் நிலைக்கு உயர்த்த வேண்டாம் என்பதே!! கிறிஸ்து நிச்சயமாக தேவன் தான், இல்லை என்று சொல்லவில்லை, அவரின் தெய்வீகத்தையும் மறுக்கவில்லை, ஆனால் அவருக்கு இது எல்லாம் அவர் மாம்சத்தில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிய பிறகு பிதவினால் கொடுக்கப்பட்டது என்பதை வேதம் சொல்லுகிறபடியே விசுவாசிக்கிறேன்!!
கிறிஸ்துவிற்கு சகலத்தையும் கீழ்ப்படுத்தும் தேவன் கிறிஸ்துவிற்கு கீழ்ப்பட்டவரில்லை என்பது தான் இந்த வசனம் சொல்லுகிறது!! சகலத்தையும் அவருக்கு (கிறிஸ்துவிற்கு) கீழ்ப்படுத்தினவர் (பிதாவாகிய தேவன்) கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாயிருக்கிறது!! ஆனால் இந்த வெளியரங்மாயிருக்கும் செய்தி வசனத்தில் இருப்பதால் பிசாசானவன் கிறிஸ்தவர்களின் கண்களை குறுடாக்கி அவன் எப்படி தேவனின் நிலையை அடைய விரும்பினானோ,, அப்படியே கிறிஸ்துவையும் வைக்க சொல்லி ஒரு மனித போதனையை உறுவாக்கியிருக்கிறான்!! அதை கத்தோலிக்கம் என்கிற ஒரு மாபெரும் சபையின் மூலமாக நிறைவேற்றவும் செய்தான், அதை தான் வேதம் இப்படியாக சொல்லுகிறது,
2 தெச 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இது என்னமோ இனிமேல் நடக்க போகும் என்கிற ஒரு சம்பவம் என்று நினைக்க வேண்டாம் நண்பரே, இந்த வஞ்சகம் கத்தோலிக்க சபை மூலமாக உலக கிறிஸ்தவர்களுக்கு வந்து விட்டது!! பொய்யும் பொயிக்கு பிதாவாக இருக்கிற சாத்தான் செய்ததை உங்களுக்கு தெரியும்!! அவன் பிதாவின் நிலையை அடைய விரும்பினான்!! அவன் தள்ளப்பட்டதும், தேவனின் நிலையை தகர்க்க அவன் எடுத்துக்கொண்ட அடுத்த ஆயுதம், கிறிஸ்துவை பிதாவாக சித்தரித்து தேவனின் நிலையை தகர்க்க வைத்திருக்கிறான்!! ஆனால் தேவன் வசனங்களை கொடுத்து நம்மை எச்சரிக்கிறார்!!
28ம் வசனத்தின்படி, சகலமும் அவருக்கு (கிறிஸ்துவிற்கு) கீழ்ப்பட்டிருந்தாலும், தேவன் சகத்திலும் சகலமாக (The Only All Mighty God) இருப்பதற்காக குமாரனும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பார்!! கீழ்ப்பட்டிருப்பார் என்றவுடன் அவர் ஏதோ கைக்கட்டி சேவகனாகவோ, சில்சாம் சொல்லும்படி டபாலியாகவோ நிற்க போவதில்லை, மாறாக தேவனால் இந்த உலகத்தை ஆளுகை செய்ய நியாயத்தீர்ப்பு செய்ய வருவார்!! நாங்கள் கிறிஸ்துவை கிறிஸ்துவின் நிலையில் பார்க்கிறோம் அது பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு பிடிக்காது!! நாங்கள் போதிப்பது வித்தியாசமான போதனை அல்ல, மாறாக அப்போஸ்தலர்களின் போதனையை தான், வசனங்களை தான், அப்போஸ்தலர்கள் போதனைகள் (விசுவாசப்பிரமானம் முதற்கொனண்டு) கத்தோலிக்கர்கள் மாத்திவிட்டதால், அது தான் இப்பொழுது விசுவாசமாக மாறியதால், நாங்கள் போதிப்பது தங்களை போன்றோருக்கு வித்தியாசமாக தெரிகிறது, அவ்வளவே!!
லூக் 1:31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
இயேசு கிறிஸ்து பெரியவர் என்பதில் எந்த மறுப்பு இல்லை, ஆனாலும் அவர் தேவனின் குமாரனாக இருப்பார், பிதாவினால் தான் சகலமும் பெற்றுக்கொள்வார்!! ஒருவர் பெற்றுக்கொள்வார், மற்றோருவர் கொடுப்பார் என்றால் இருவரும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இதை தானே நான் சொல்லி வருகிறேன்!!
யோவான் 1:31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
இயேசு கிறிஸ்து யார் என்பது யோவானுக்கு தெரியாது, ஆகவே தேவனின் வல்லமை புறாவைப்போல இறங்கி கிறிஸ்துவின் மேல் தங்கியிருப்பதை வைத்து யோவான் கிறிஸ்துவை அடையாளம் கண்டுபிடித்தார்!!
அப். 2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
இங்கே தேவனின் அதே வல்லமை அக்கினிமயமான நாவுகளாக வந்ததை பார்க்கிறோம்!! ஆக புறா, அக்கினிமையமான நாவுகள் அனைத்தும் இப்படியாக தேவனின் வல்லமை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது!! இதையும் நான் மறுக்கவில்லை!! ஆனால் இதை வைத்து எப்படி திரியேக தேவன் என்றும், திரித்துவம் என்கிற கோட்ப்பாட்டை உருவாக்குவது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
நண்பரே, வேதத்தில் பிதாவை குறித்தும், இயேசு கிறிஸ்துவை குறித்தும் பரிசுத்த ஆவியை குறித்தும் வசனங்கள் இருக்கிறது, ஆனாலும் இவைகளால் தேவன் திரியேகமாக இருக்கிறார் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்!! இன்றைய திரித்துவ போதகர்களுக்கு தெரிந்தது பவுலுக்கு தெரியாததினால் தான் அவர் சபைகளுக்கு எழுதும் எந்த ஒரு மடலிலும் திரியேக தேவன் என்றும் எழுதவில்லை, பரிசுத்த ஆவியின் பெயரை சொல்லி வாழ்த்தவும் இல்லை!! வசனத்தை கவனியுங்கள்,
எபேசியர் 3:15 நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, (பிலி 2:10,11 நிறைவேறும் காலம் வருகிறது, ஆனால் சபைக்கு சொல்லப்பட்டது இந்த வசனத்தில் உள்ளபடி பிதாவை நோக்கியே முழங்கால்படியிட வேண்டும் என்பது)
கொலோசெயர் 2:2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
I தெசலோனிக்கேயர் 1:2 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
I தெசலோனிக்கேயர் 3:11 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
I தெசலோனிக்கேயர் 3:13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
I பேதுரு 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
I யோவான் 1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. (பவுல் மாத்திரம் அல்ல, யோவானும் இதை தான் வழியுறுத்துகிறார், பிதாவோடும், அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவோடும் மாத்திரமே ஐக்கியம் இருக்கிறது என்று, திரித்துவர்கள் சொல்லுவது போல் இன்னோரு தேவனான பரிசுத்த ஆவியாகிய தேவன் என்பதை குறித்து யோவனும் ஒன்றும் எழுதவில்லையே)
இப்படி வசனங்களை அடுக்கி கொண்டே போகலாம், ஆனால், திரித்துவர்கள் சொல்லுவது போல் இதில் ஒரு வசனமும் இல்லையே!! சொல்லுங்கள் நண்பரே, இனி வசனங்களை பின்பற்றுவதா, அல்லது மனித ஞானத்தை பின் பற்றுவதா!!
உங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோளும் அதுவே, அதாவது உணர்வு பூர்வமாகவோ, இத்துனை காலமாக இத்துனை பேர் இப்படி ஒரு விசுவாசத்தை கொண்டிருந்தார்களே, என்கிறபடியான விசுவாசம் இல்லாமல் வசனத்தின்படியான விசுவாசமே உண்மையான விசுவாசம் ஆகும்!! அந்த வசனத்தின்படி விசுவாசிப்பவர்களுக்காக கிறிஸ்து இயேசுவும் ஜெபிப்பதாக சொல்லியிருக்கிறார்,
யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
உலகத்தார் (கிறிஸ்தவர்கள் உட்பட தான்) தேவனையும், அவரின் குமாரனான கிறிஸ்துவையும் அறிந்துக்கொள்ளும் காலம் வருகிறது, நமக்கோ (சபைக்கு) அந்த வாய்ப்பு வசனங்களின் மூலமாக இப்பொழுதே வந்திருக்கிறது!! வேதத்தை கைகளில் ஏந்தி பெரேயா பட்டினத்தார் போல் மனோவாஞ்சையாக இருக்கலாமே, மனித ஞானத்தில் உருவான பல கோட்பாடுகள் இருக்கிறது அதை பின்பற்றுவதினால் என்ன பயன்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
josephsneha wrote: //.... திரித்துவம் இல்லை என்று கூறி பரிசுத்த ஆவியை மறுதலிக்கிறீர்கள், இயேசுவை தொழத்தக்க தெய்வம் அல்ல என சொல்லி அவரையும் முக்கியமற்றவராக கருதுகிறீர்கள், கடைசியில் முஸ்லீம்களுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என எண்ண தோன்றுகிறது.
"6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்."
இதில் 10,11 ம் வசனத்துக்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகத்தான் இருக்கும்.
தோமாவும் இயேசுவை என் ஆண்டவரே என் தேவனே என அழைத்தாரே, தொழத்தக்க தெய்வமாக அவரை கருதியதால் தானே?
உதாரணத்துக்கு அந்த காலத்தில் பல அரசவைகளில் அரசருக்கு அருகிலேயே இளவரசருக்கு அரியாசனம் இருக்கும். அப்போது அரசவைக்கு வருபவர்கள் தலை தாழ்த்தி அல்லது மண்டியிட்டு வணக்கம் தெரிவிப்பர். உங்கள் வாதப்படி பார்த்தால், அரசவையில் வணக்கம் வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் இளவரசரை பார்த்து, யோவ், நான் அரசரான உங்கப்பாவுக்குத் தான் வணக்கம் வச்சேன், உமக்கு இல்லை, பெரிசா ஒண்ணும் நீன் நினைச்சுக்கிட வேண்டாம் என சொல்வது போல் தான் உள்ளது.//
அன்பான சகோ.ஜோசப்ஸ்னேகா அவர்களே!
இத்தளத்திலும் சரி, பிற தளங்களிலும் சரி, நீங்கள் அதிகமாக பரியாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை; TCS-ன் ஒரு பதிவில் சில்சாமைப் பாராட்டும் போது, என் போன்றவர்களை மட்டந்தட்டி சில பரியாச வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அதை ஒரு பெரிய விஷயமாக நான் கருதவில்லை. நிற்க.
நீங்கள் கேட்டுக்கொண்டபடி, மேலே உள்ள உங்கள் பதிவுக்கு எனது பதிலைத் தருகிறேன்.
நீங்கள் எண்ணுவது போல முஸ்லீம்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்றே தற்போது வைத்துக் கொள்ளுங்கள். விவாதத்தின் முடிவில் இதைக் குறித்து பார்த்துக் கொள்ளலாம் (விவாதம் தடைபடாமல் சென்றால்).
இயேசுவை தோமா ஆண்டவரே, தேவனே என அழைத்ததாகச் சொல்லி, அதை வைத்து இயேசுவைத் தொழத்தக்கவர் என்கிறீர்கள்.
முதலில் ஆண்டவர் என்ற பதத்தைப் பார்ப்போம். தோமா இயேசுவை ஆண்டவனே என அழைத்ததைப்போல, பவுலையும் சீலாவையும் சிலர் “ஆண்டவன்மாரே” என அழைத்துள்ளனர்.
அப்போஸ்தலர் 16:29,30 ... பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
இந்த “வார்த்தை ஒற்றுமையை” மட்டும் சொல்லி நான் விவாதத்தை வைக்கவில்லை. தோமா இயேசுவைச் சொன்ன “ஆண்டவன்” என்ற வார்த்தைக்கும் பவுலையும் சீலாவையும் சிலர் சொன்ன “ஆண்டவன்மாரே” என்ற வார்த்தைக்கும் கிரேக்கில் kurios எனும் ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பவுலையும் சீலாவையும் ஆண்டவன்மாரே என அழைத்தவர்கள், “பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தனர்” என்றும் வசனம் சொல்கிறது. பவுல், சீலாவுக்கு முன்பாக விழுந்து ஆண்டவன்மாரே என அழைத்தவர்களை, பவுலோ சீலாவோ கண்டிக்கவுமில்லை.
இதனால் பவுலும் சீலாவும் தொழத்தக்கவர்கள் என்றாகிவிடுமா?
அடுத்து, தேவனே என தோமா இயேசுவை அழைத்ததைப் பார்ப்போம். இயேசுவை தேவன் என பல வசனங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் இயேசுவுக்கும் ஒரு தேவன் இருக்கிறார் என்றால் அது, பிதாவாகிய தேவன் மட்டுமே. பிதாவாகிய தேவனை “என் தேவனே” என இயேசு அழைத்ததை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். இதிலிருந்து நாம் அறியவருவது, இயேசுவானவர் நமக்குத் தேவனாக இருந்தாலும், இயேசுவுக்கும் நமக்கும் பொதுவான “ஒரே தேவன்” பிதாவாகிய தேவன் மட்டுமே. அவரை தேவாதி தேவன் என வேதாகமம் பல வசனங்களில் கூறுகிறது.
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. (யோசுவா 22:22; சங்கீதம் 136:2; தானியேல் 11:36 வசனங்களையும் படியுங்கள்)
அந்த தேவாதி தேவன் தான் “ஒரே தேவன் (unique God)” என அழைக்கப்படத்தக்கவர். பிதாவாகிய தேவனே அந்த ஒரே தேவன் எனப் பின்வரும் வசனத்தில் பவுல் கூறுகிறார்.
1 கொரி. 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
பிதாவாகிய இந்த ஒரே தேவனையே ஆராதிக்கும்படி மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிறார்.
//அந்த காலத்தில் பல அரசவைகளில் அரசருக்கு அருகிலேயே இளவரசருக்கு அரியாசனம் இருக்கும். அப்போது அரசவைக்கு வருபவர்கள் தலை தாழ்த்தி அல்லது மண்டியிட்டு வணக்கம் தெரிவிப்பர். உங்கள் வாதப்படி பார்த்தால், அரசவையில் வணக்கம் வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் இளவரசரை பார்த்து, யோவ், நான் அரசரான உங்கப்பாவுக்குத் தான் வணக்கம் வச்சேன், உமக்கு இல்லை, பெரிசா ஒண்ணும் நீன் நினைச்சுக்கிட வேண்டாம் என சொல்வது போல் தான் உள்ளது.//
இது போலத்தான் நானும் சொல்கிறேன் என்பது உங்களது கற்பனை, இதுபோல நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல நான் சொல்லக்கூடியவனாக இருந்தால், கூடவே இப்படியும் சொல்வேன்.
ராஜாவுக்குப் பின்னால் அவருக்குச் சாமரம் வீசும் பணிப்பெண்களைப் பார்த்து, “ஏய் பணிப்பெண்களா, நான் உங்கள் அரசருக்குத்தான் வணக்கம் வைச்சேன், உங்களுக்கு இல்லை, பெரிசா ஒண்ணும் நீங்கள் நினைச்சுக்கிட வேண்டாம்” என்றும் சொல்வேன்.
ஏன் சகோதரரே, இம்மாதிரி கதைக்கு உதவாத உதாரணங்களையெல்லாம் சொல்லி, விவாதத்தை வைக்கிறீர்கள்? வசனத்தைச் சொல்லி விவாதியுங்கள்.
இத்திரியில் திரித்துவம் என்றால் என்ன எனும் கேள்விக்கு ஜான் என்பவர் தந்த பதிலின் அடிப்படையில், நான் எனது விவாதத்தை வைத்திருந்தேன். அவ்விவாதத்தின் இறுதியில் நான் வைத்த கேள்விக்குப் பதிலளிக்க இயலாத ஜான், வேறு வழியில் குழப்பதை உண்டாக்கி விவாதத்தை முடக்கலாம் என்ற எண்ணத்தில், ஏடாகூடமான ஒரு கேள்வியை வைத்தார், அக்கேள்விக்கு நான் இதுவரை பதில் தரவில்லையென்றதும், அவர் ஏதோ வாதத்தில் வென்றுவிட்டதைப் போல, அவரும் அவரது கூட்டாளிகளும் ஆர்ப்பரிக்கின்றனர்.
ஒரு விவாதம் முடியும் முன்பே தீர்ப்பை வெளியிட்ட முந்திரிக்கொட்டை ஜானுடன் விவாதிக்க நான் விரும்பவில்லை என்பதை ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன். ஆகிலும் குழப்பவாதிகளின் ஏடாகூட கேள்விக்கு பதில் தரப்படாமலிருந்தால், பிற அன்பர்கள் அதினிமித்தம் குழம்பக்கூடுமென்பதால், ஜானின் கேள்விக்கு பதில் தரவேண்டும் என்றே நான் கருதியிருந்தேன். ஆகிலும் நேரமின்மை காரணமாக, பதில்தர சற்று தாமதமானது.
தள அன்பர்களுக்காக விடையளிக்கப்படாத ஜானின் கேள்விக்கு இப்பதிவில் பதில் தருகிறேன். அதற்கு முன் ஜானோடு நடந்த விவாதத்தையும் சற்று சுருக்கமாகத் தருகிறேன்.
ஜான்: திரித்துவம் என்றால் ஒரே தேவன் ஆனால் அவருக்கு முன்று "ஆள்தத்துவங்கள்" உண்டு.
நான்: இவ்வசனத்தை சற்று படியுங்கள் சகோ.ஜாண் அவர்களே!
1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
ஒரே தேவனுக்குள் மூன்று ஆள்த்தத்துவங்கள் என்கிறீர்கள். ஆனால் பிதா தான் ஒரே தேவன் என பவுல் சொல்கிறார். அதாவது, உங்கள் கூற்றுப்படி, 3 ஆள்த்தத்துவங்களும் அடங்கிய ஒரே தேவன் பிதாதான் என்றாகிறது. அவ்வாறெனில் ஒரே தேவனாகிய பிதாவுக்குள் அடங்கிய அந்த 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார்?
ஜான்: பிதாவுக்குள் 3 ஆள்தத்துவங்கள் உண்டு என்று நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா? நீங்களாக எதாவது கற்பனை பண்ணி கொண்டு கேள்விகேட்டால் நான் என்ன சொல்வது?
Laws of Logic (Law of Identity , Law of Non-Contradiction, Law of the excluded middle) பேசுகிற ஜான், Law of equation படி, If X has 3 personalities and if Y=X then Y also has 3 personalities என்பதை அறியாரா, அல்லது அறியாதவர்போல் நடிக்கிறாரா?
ஒரே தேவனுக்கு 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு எனச் சொல்லி, அதையடுத்து, அந்த ஒரே தேவன் பிதாதான் என நிரூபித்தால், (ஒரே தேவனாகிய அந்த) பிதாவுக்கு 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு என்பதை ஜான் அறியாரா, அல்லது அறியாதவர்போல் நடிக்கிறாரா?
பிதாவுக்குள் 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு என்று நான் எங்காவது சொன்னேனா என ஜான் கேட்கும் கேள்வியின்படி பார்த்தால், அவர் ஓர் அறியாமைக்காரராக இருக்கவேண்டும், அல்லது நடிகராக இருக்கவேண்டும்.
ஒரே தேவனுக்குள் 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு எனச் சொல்கிற ஜான், அந்த 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார் எனக் கேட்டால், பதில் சொல்ல மறுக்கிறார். ஆனால் அந்த 3 ஆள்த்தத்துவங்கள்: பிதா, குமாரன், பரிசுத்தஆவியே என்பது உலகறிந்த உண்மை. பிதாவே அந்த ஒரே தேவன் என (1 கொரி. 8:6-ன் மூலம்) நான் நிரூபித்துவிட்டதால், பிதாவாகிய ஒரே தேவனுக்குள் இருக்கும் 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார் எனும் எனது கேள்விக்கு, பிதா, குமாரன், பரிசுத்தஆவிஎன்ற பதிலைத்தான் ஜான் சொல்லவேண்டியதிருக்கும்.
அதாவது, பிதாவுக்குள் இருக்கும் 3 ஆள்த்தத்துவங்கள்: பிதா, குமாரன், பரிசுத்தஆவியே எனச் சொல்லவேண்டியதிருக்கும். இக்கூற்று Law of Logic-க்கு ஒத்துவராத ஒரு கூற்று என்பது ஜானுக்கு நான் சொல்லித் தெரியவில்லை.
எப்படியெனில், X=X+Y+Z என்பது எத்தனை முட்டாள்தனமானதோ அதேவிதமாகத்தான் பிதாவுக்குள் இருக்கும் 3 ஆள்த்தத்துவங்கள்: பிதா, குமாரன், பரிசுத்தஆவியேஎனும் கூற்றும் முட்டாள்தனமானதாக இருக்கும். எனவேதான் இம்மாதிரி முட்டாள்தனமான கூற்றைப் பகிரங்கமாகச் சொல்லமுடியாத ஜான், 1 கொரி. 8:6-ன்படி ஒரே கர்த்தர் இயேசுதானே, அவ்வாறெனில் பிதா கர்த்தர் இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, தனது வாதத்திலுள்ள ஓட்டையை அடைக்கப் பார்க்கிறார்.
ஒரே கர்த்தர் இயேசுதான் என்பதை நிச்சயமாக மறுக்கமுடியாது. அவ்வாறெனில் பிதா கர்த்தர் இல்லையா?
ஜானின் குற்றசாட்டு: //யாரும் அப்படி ஆர்ப்பரித்ததாக எனக்கு நினைவில்லை. உங்கள் சகோதரர் பெரியன்ஸ் அவர்கள் நான் ஓடிவிட்டதாக ஒரு பொய்யை பரப்பிக்கொண்டு இருந்தார் நான் உண்மையை விளக்கினேன் அதில் கூட நிங்கள் ஓடிவிட்டதாக சொல்லவில்லை.//
விட்டா, இதை கூட நான் தான் உங்களுக்காக எழுதினேன் ஏன்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போல்,
இதையும் நான் பொய்யாக எழுதினேன் என்று சொல்லுங்களே!!
பிதாவை குறித்தும் குமாரனை குறித்தும் அத்துனை வசனங்கள் கொடுத்தும், அதில் ஒன்றுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பது நான் பொய் பரப்புகிறேன் என்று சொல்லும் அநாகரீக குற்றச்சாட்டை நிரூபிக்கிறது!! இது ஒன்றும் பொய் அல்லவே, நீங்கள் இத்தளத்தில் ஒரு பதிவை கொடுத்து இதுவே கடைசி பதிவு என்பதால் நான் உண்மையை தான் எழுதினேன்!! இப்படி தானே ஒரு வாக்கியத்திலிருந்து அதில் என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளாமல் உங்கள் போதகத்தன்மையை வசனத்தில் காண்பிப்பது போல் காண்பித்து எழுதியிருக்கிறீர்கள்!!
ஆரோக்கியமாக உங்களை எந்த வித "சில்சாமின் வார்த்தைகளை பிரயோகிக்காமல்" விவாதித்துக்கொண்டு இருந்தோம்!! யாரின் தூண்டுதலின் பெயரில் திடீர் என்று குதித்து தப்பி விட்டீர்கள் என்பதும் தெரியும், பிறகு என்ன, நான் பொய் பரப்பி வருகிறேன் என்று சொன்னது மாத்திரம் என்ன உண்மையா?
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இவ்வசனத்தில் கர்த்தர் எனும் சொல்லுக்கு இணையான மூலபாஷை வார்த்தை kurios (NT:2962) என்பதாகும். இதன் அர்த்தம்:
kurios (koo'-ree-os); from kuros (supremacy); supreme in authority, i.e. (as noun) controller; by implication, Mr. (as a respectful title):
KJV - God, Lord, master, Sir.
இவ்வார்த்தை ஒரு பட்டப்பெயராக இருப்பதோடு, இதன் அர்த்தம், அதிகாரத்தில் முதன்மையானவர் என்பதாகவும் உள்ளது.
இதே kurios எனும் வார்த்தைதான், பின்வரும் வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (கிட்டத்தட்ட 751 வசனங்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது)
மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 16:16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
அப்போஸ்தலர் 16:29,30 ... பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
kurios எனும் கிரேக்க வார்த்தை, மத்தேயு 4:10 மற்றும் 1 கொரி. 8:6-ல் கர்த்தர் என்றும், அப். 16:16-ல் எஜமான் என்றும், அப். 16:30-ல் ஆண்டவன் என்றும் (நம் தமிழ் வேதாகமத்தில்) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழில் இப்படி பல்வேறு வார்த்தைகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், வசனத்துக்கு வசனம் அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. எனவே மேலே கண்ட 4 வசனங்களிலும், kurios எனும் வார்த்தையை மட்டும் மொழிபெயர்க்காமல் அப்படியே வைத்து அவ்வசனங்களை எழுதுவோம்.
மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய kurios-ஐப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே kurios-ம் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 16:16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் kurios-களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
அப்போஸ்தலர் 16:29,30 ... பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: kurios-மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
1 கொரி. 8:6-ல் “ஒரேயொரு kurios” தான் நமக்கிருப்பதாகச் சொல்கிற வேதாகமம், வேறு வசனங்களில் தேவனை ஒரு kurios-ஆகவும், குறிசொல்லும் பெண்ணுக்கு அவளால் ஆதாயம் பெற்ற ஒருவனை kurios-ஆகவும், சிறைச்சாலைக்காரனுக்கு பவுலையும் சீலாவையும் kurios-ஆகவும் சொன்னது ஏன்?
வேதாகமம் பொய் சொல்லுகிறதா? நிச்சயமாக இல்லை. நம் புரிந்துகொள்தலில் உண்டான தவறினால்தான், ஒரு வசனத்தில் “ஒரேயொரு kurios” என ஒருவரைச் சொன்னால், வேறு யாரையும் kurios எனச் சொல்லக்கூடாது என்றும், அப்படிச் சொன்னால் வேதாகமம் பொய் சொல்கிறது என்றும் நாம் கருதுகிறோம்.
ஒரு மனிதக்கு மாம்சப்பிரகாரமாக “ஒரேயொரு தகப்பன்” அல்லது “ஒரேயொரு பிதா” மட்டுமே இருக்கமுடியும் என்பதை நாம் அறிவோம். ஆகிலும் நம் தேவனையுங்கூட நமக்குப் பிதா என வேதாகமம் சொல்கிறது. பூமியில்கூட சிறிய தகப்பன், பெரிய தகப்பன், மதத்தலைவரான தகப்பன் எனப் பலரையும் பிதா என்ற ஸ்தானத்தில் வைத்து, அவர்களை பிதா எனச் சொல்லவும் செய்கிறோம். இப்படியெல்லாம் சொல்கிற போதிலும், மாம்சப்பிரகாரமான “ஒரே தகப்பன்” என்ற நிலையில் உள்ளவர் அதே நிலையில்தான் நிரந்தரமாக இருப்பார். நம் பரம பிதாவாகிய தேவன்கூட அந்த “ஒரே தகப்பனின்” இடத்தைப் பிடிக்கமாட்டார்.
இதே விதமாகத்தான் நம் பிதாவாகிய தேவன் மற்றும் எஜமானன் போன்ற பலரும் kurios-ஆக நமக்கு இருந்தாலும், இயேசுகிறிஸ்துவை ஒரு தனித்தன்மையான kurios-ஆக பவுல் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியரும் உண்டு, ஒவ்வொரு வகுப்புக்கும் தனி ஆசிரியரும் உண்டு. ஒரு குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களிடம் உங்கள் ஆசிரியர் யார் எனக் கேட்டால், அவர்கள் தங்கள் வகுப்புக்குரிய தனி ஆசிரியரின் பெயரைத்தான் சொல்வார்களேயொழிய, தங்கள் பள்ளித் தலைமையாசிரியர் பெயரைச் சொல்லமாட்டார்கள். இதனால் பள்ளித் தலைமை ஆசிரியரை, ஆசிரியர் அல்ல என்றும் சொல்லமுடியாது, அல்லது வகுப்பாசிரியரும் அவரும் ஒருவரே என்றும் சொல்லமுடியாது.
ஒரு பள்ளியில் அனேக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குள்ள வகுப்பாசிரியர் ஒருவராகத்தான் இருப்பார். அவரைத்தான் உங்களது ஒரே ஆசிரியர் (Exclusive Unique teacher) என மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் சொல்வார், மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்.
அதேவிதமாகத்தான் 1 கொரி. 8:6-ல் இயேசுவை நம் “ஒரே kurios” என பவுல் அறிமுகப்படுத்துகிறார். அதாவது தேவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய ஒரே மத்தியஸ்தரான kurios இயேசுகிறிஸ்து மட்டுமே என்ற அர்த்தத்தில் பவுல் அவ்வாறு கூறுகிறார். இதனால் தேவன் ஒரு kurios என்ற உண்மை மாறப்போவதுமில்லை, தேவனும் இயேசுவும் ஒருவராக ஆகிவிடப் போவதுமில்லை.
இத்தனைதான் விளக்கம் கொடுத்தாலும், கொக்குப் புத்தி உள்ள சிலருக்கு இவ்விளக்கம் மண்டையில் ஏறாது.
இத்திரியை துவக்கியதன் நோக்கம், திரித்துவத்தை அறிந்தவர்கள் தாங்கள் அறிந்ததை அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவே. ஆனால் திரித்துவவாதிகளில் பலர், திரித்துவம் என்பது ஓர் இரகசியம் என்றோ புரியாத புதிர் என்றோ தான் சொல்கின்றனரேயொழிய, இதுதான் திரித்துவம், இவைதான் திரித்துவக் கொள்கைகள், இவைதான் அவற்றிற்கான வசனஆதாரங்கள் எனச் சொல்வதில்லை.
திரித்துவத்தை விளக்க வந்த கொல்வின், ஜோசப்ஸ்னேகா, ஜான் என்பவர்களும் விளக்கம் கேட்ட நம்மிடமே கேள்விகளை கேட்டு குட்டையைக் குழப்பத்தான் செய்தனரேயன்றி, இதுதான் திரித்துவம்/திரித்துவக் கொள்கை என ஆணித்தரமாக சொல்ல முன்வரவில்லை.
இனி அவர்களைத் தவிர வேறு யாரேனும் திரித்துவத்தைக் குறித்த விளக்கத்தைத் தர விரும்பினால், அவர்கள் தங்கள் விளக்கத்தை இங்கு பதிக்கும்படி வேண்டுகிறேன். ஒருவேளை திரித்துவத்தை நம்பாதவர்களில் யாரேனும் திரித்துவக் கொள்கையைக் குறித்து அறிந்திருந்தால் அவர்களும் தாங்கள் அறிந்ததை இங்கு பதிக்கும்படி வேண்டுகிறேன்.
நீங்கள் சந்தடி சாக்கில் அடுத்தவர்ள் மீது குற்றம் சுமத்துகிறவர் என்று தான் எண்ணத்தோன்றுகிறது, நீர் எழுதிய பதிவைப்பார்த்து. உண்மையில் யார் குட்டையை குழப்புகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேதாகமத்தில் இல்லாத ரகசியங்களா? திரித்துவமும் அதில் ஒரு ரகசியம் தான். அறியாமைக்காரர், நடிகர், கொக்கு புத்தி உள்ளவர், இது எல்லாம் என்ன ஐயா? வசனத்தை வைத்து தான் வாதம் செய்ய வேண்டுமாக்கும் என சொல்லும் நீங்கள் இது போன்ற வார்த்தைகளை எதில் தேடிப்பிடித்தீர்கள்.
//ஏய் பணிப்பெண்களா, நான் உங்கள் அரசருக்குத்தான் வணக்கம் வைச்சேன், உங்களுக்கு இல்லை, பெரிசா ஒண்ணும் நீங்கள் நினைச்சுக்கிட வேண்டாம்//
திரித்துவம் பேசுவர்களுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமை கிடையாது, திரித்துவத்தை குறித்து தான்!!
ஒரு திரித்துவ கூட்டம் தேவன் திரியேக தேவன், அதாவது ஒரே தேவன் அவருக்குள் மூன்று ஆளத்துவங்கள் இருக்கிறது என்கிறார்கள்!!
இன்னோரு திரித்துவ கூட்டம், மூன்று நபர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் மூவரும் ஒரே சமயத்தில்ருந்து, ஒரே வல்லமையோடு, ஒரே தன்மையோடு இருப்பது திரியேகத்துவம் என்கிற கோட்பாடு!!
இந்த திரியேகமும் திரியேகத்துவம் எதுவுமே வேதத்தில் இல்லாத வார்த்தைகள், அர்த்தங்கள்!!
இவர்களுக்கு திரித்துவத்தை நிரூபிக்க கிடைத்திருக்கும் (ஆனால் நன்றாக வாசித்தோமென்றால் அங்கே இருவரை குறித்து மட்டுமே இருக்கும்) ஒரு சில வசனங்களை கொண்டு, வேதத்தில் இருக்கும் மற்ற அனைத்து வசனங்களையும் இவர்கள் கண்களுக்கு இருண்டு போய் இருக்கிற வசனங்கள்!! இவர்களை குறித்து ஏசாயா சொன்னது, இவர்களுக்கு கண்கள் இருந்தும் இவர்கள் காணதவர்களாக இருப்பவர்கள்!! கிறிஸ்து இயேசு சொல்லுகிறார், இவர்களுக்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரலோக ராஜியத்திற்கான ரகசியங்கள் புரியாது என்று!! ஆகவே தான் வேதத்தில் இல்லாத ஒரு புதிய இரகசியமான திரித்துவத்தை கொண்டாடி வருகிறார்கள்!! ஆனால் அதன் நிமித்திம் தேவனை தூஷித்தும் வருகிறார்கள் என்பது இவர்களுக்கு புரியவில்லை!! இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வசனங்கள்:
யோவான்: 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (இதை வைத்து திரித்துவம் என்று எப்படி வாதிடுகிறார்களோ!?)
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
1 யோவான்: 5: 7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; (ஆனால் இந்த வசனம் இவர்கள் வைத்து வாசிக்கும் பரிசுத்த வேதாகமத்தில் அடைப்புக் குறிக்குள் ஏன் போடப்பட்டிருக்கிறது என்பதற்கு இவர்களிடம் பதில் இல்லை)
அவ்வளவு தான், இதற்கு மேல் இவர்களிடம் வசனங்கள் இல்லை!! ஆனால் ஏறகுறைய அனைத்து வசனங்களும் பிதா என்கிற தேவனும் கிறிஸ்து என்கிற குமாரனை குறித்தே சொல்லியிருக்கிறது!! அது இவர்களுக்கு தெரிய வராது!! ஏனென்றால் திரித்துவம் என்பது வேதத்தில் உள்ள ஒரு இரகசியம் என்றும், அதை பவுலுக்கு கூட தேவன் சொல்லாமல் மறைத்து வைத்து 300 வருடங்களுக்கு பிறகு அந்த இரகசியம் வெளிப்பட்டிருப்பது ஆச்சரியம் அல்ல, ஏனென்றால் அவர்கள் பொய்யை விசுவசித்ததினால் கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்குள் அனுமதித்திருக்கிறார்!!
நமக்கோ தேவன் தன்னையும் தன் குமாரனையும் யார் என்று காண்பித்து இருக்கிறார், அவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை!! சரி அவர்களுக்கும் இதை குறித்து தெரிந்துக்கொள்ள நாட்கள் வருகிறது!!
இதில் கர்த்தர் என்பது யெகோவா தேவன் என்கிறது வேதம்!! இவர்கள் அதற்குள் அவசரப்பட்டு அதான் கர்த்தர் என்று போட்டிருக்கிறதே, அப்படி என்றால் ஒரே கர்த்தர் கிறிஸ்து என்று சொல்லி வசனத்தையே புரட்டி போடுவார்கள்!!
இப்போ அறியாமையில் இருக்கும் இவர்கள் தேவனின் ராஜியத்தில் யெகோவா தேவனை அறிகிற அறிவினால் நிறம்புவார்கள், அந்த அறிவை கொடுக்க போவது, கிறிஸ்துவும் அவரின் சபையும் தான் என்பது இவர்கள் தாங்கி கொள்ள முடியாத விஷயமாக இருக்கும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//போதாக்குறைக்கு திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை, ஏமாத்துறாய்ங்க, என்று கூப்பாடு போடுவது யார்? எதுவாயிருந்தாலும் கடைசியில பாத்துக்க தான போகிறோம்? "மூளை" என்ற வார்த்தை கூட பைபிளில் இல்லையாம்;அதுக்காக 'உன் தலைல மூளை இல்லே'னு சொன்னா ஒப்புக்குவியா? பைபிளில் இல்லாத மூளை உனக்கு இருப்பது உண்மையானால் பைபிளில் இல்லாத திரித்துவமும் உணர்வின்படி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளலாமே.?//
இவர்களின் லூசுத்தனம் இதில் வெளிப்படுகிறதே!! விவாதம் தேவனை குறித்து என்பதால், வேதத்தை தான் பார்ப்போம், சிலர் அவர்களுக்கு இல்லாத "மூளை"யை குறித்து ஏன் வேதத்தில் தேடுகிறார்கள் என்று தான் புரியவில்லை!!
//கிறித்தவ விசுவாசத்தில் மார்க்கபேதத்தைத் தோற்றுவிக்க (மேசியாவின்) எதிரிகள் பிரதானமாக எடுத்தாளும் உபதேசம் திரித்துவத்தைக் குறித்ததாகும்; திரித்துவம் என்பதை திருத்துவம் என்றும் அவர்களையறியாமல் குறிப்பிட்டதும் உண்டு; திரித்துவமோ திருத்துவமோ அதனை சர்ச்சைக்குரியதாக்குவோர் யாராக இருக்கமுடியும்? நிச்சயமாகவே சாத்தானின் ஆவியினால் நடத்தப்படுபவர்களே..!//
திரித்துவத்தை குறித்து இனி என்ன தான் எழுத இருக்கிறது என்பது இவரின் பிதற்றலில் தெரிகிறது!!!
//அவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறதில்லை;தாயைப் பழிப்பவனுக்கு இந்த சமுதாயத்தில் என்ன மரியாதை கொடுக்கப்படுமோ அதைவிட கீழான நிலையிலிருந்து தேவத்துவத்தைக் குறித்து இடைவிடாமல் தூஷிக்கும் இவர்களை இந்த தலைமுறையிலேயே அழித்து ஒழிக்கவேண்டும்; மலேரியா, போலியோ போன்ற நோய் உண்டாக்கும் கிருமிகளை எப்படி திட்டமிட்டு ஒழிக்கிறார்களோ அதுபோலவே இவர்களையும் நாம் ஒழித்தாக வேண்டும்; //
எங்கள் மேல் தேவனின் வல்லமையுள்ள கரம் இருக்கிறது, உன்னை போன்ற சாக்கடை பூச்சிகளுக்கு பயந்தவர்கள் யாராவது இருப்பார்கள், அவர்களிடம் உம்முடைய "உதாரை" விட்டு பாரும்!!
நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில் சேரக்கூடாத ஒளிதனில் மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும் பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்.//
இது போன்ற வரிகளை வேதமாக எடுத்துக்கொண்டு இவர்கள் பிதற்றலை என்னவென்று சொல்ல!! "ஒன்றான மெய் தேவன்" "" என்று வேதம் சொல்லியும் இந்த குருடர்களுக்கு சிலர் தடவி தடவி தந்தது தான் திரித்துவ தேவன் என்கிற ஒரு புதிய பதம்!!
//பாவிகள் என்று யாருமில்லை என்றால், நரகம் என்பது இல்லை;நரகம் என்பது என்றால் உங்கள் போதனைக்கும் அவசியமில்லை;தளத்தை மூடிவிட்டு வேறு வேலை பார்க்கப் போங்க ஸார்...நாங்க என்ன அநியாயம் செய்தாலும் எங்களுக்கும் கடைசியில பங்கு உண்டு தானே? பெறகு உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை?//
சாத்தானையோ அவன் தூதனையோ திருத்துவது எங்கள் நோக்கம் இல்லை ஸார்!! ஆனால் சாத்தானின் தூதர்களின் கைகளில் இருப்பவர்கள் கொஞ்சமாவது விழித்திருப்பார்களோ என்கிற அக்கறையில் தான் எழுதுகிறோம்!! நாங்கள் எழுதுவது உமக்கு வீண் என்று தெரிந்தால் ஏன் மெனக்கெட்டு நேரத்தை செலவு செய்து பதில் கொடுக்க வேண்டும்!! ஒவ்வாத உம் மாற்று மார்க்கத்தாரின் வேதத்தின் படி திரித்துவத்தை ஓத வேண்டியது தானே!!
//உனக்கும் எங்களுக்கும் போதனையில் எவ்வளவு வித்தியாசம் பார்த்தாயா..? நீ எதை வேண்டுமானாலும் எழுதி குவித்துக்கொள்;அதைக் குறித்து எமக்கு கவலையில்லை;ஆனால் எங்களைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்தினால் உனக்கு நல்லது;மற்றபடி நீ கூட்டம் நடத்தும் இடத்திலேயே வந்து உன் காதைப் பிடிச்சி திருகுவதற்கு ஆள் போட்டிருக்கிறோம்;எச்சரிக்கை..! //
இருக்காதா பின்னே!! உம்முடையது வேதத்துக்கு புறம்பான மனித போதனைகள், அதான் ஒரு பாட்டு எழுதி வைத்துக்கொண்டு அதினால் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர் என்று ஏற்கனவே பலமுறையில் எழுதியிருக்கிறேனே!! அதை தான் இப்படி பட்ட அரிவீனத்தனமான பாடல்களை எழுதி வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறீரே!! நான் எதை வேண்டுமென்றாலும் வேதத்திலிருந்து எழுதுவேன், அதை குறித்து உமக்கு கவலையில்லையென்றால், எதற்கய்யா இத்துனை பதிவுகளை தந்து உம் நேரத்தை வீனடிக்கிறாய்!! உம்மை குறித்து எழுதுவதையே நான் தான் நிறுத்தியிருந்தேனே, நீர் தான் ஆரம்பித்திருக்கிறீர்!! எனக்கு எது நல்லது என்ரு என் தேவன் பார்த்துக்கொள்வார்!! உமக்கு பிரஷர் ஏதாவது இருந்தால் மாத்திரை போட்டு வைய்யும்!! யப்பா ஒரு பூச்சியின் எச்சரிக்கைக்கு நாங்கள் பயந்து நடுங்கிட்டோம்!! போதுமா, சந்தோஷமா!! இந்த பாரும், இந்த எச்சரிக்கை, கையை நீட்டுவது போன்ற மட்டமான வேளையெல்லாம் எங்களிடத்தில் வேண்டாம் என்று உமக்கு சொல்ல விரும்புகிறேன்!! அவ்வுளவு தான்!!!!!
//பொய்யை விசுவாசிக்கும் வஞ்சகம் என்றாலே என்ன என்று தெரியாதா நீயா தேவன் என்பதற்கான பொருளை எங்களுக்குப் போதிப்பது? நேரத்தோட சாப்பிட்டு விட்டு போய், கவுந்தடிச்சு படுத்துகிட்டு யோசனை பண்ணு... ஏதாவது தெரிய வாய்ப்புண்டு; யெகோவா என்றால் இருக்கிறவராக இருக்கிறவர் என்று அர்த்தம்;அதற்கு மேல் கர்த்தருடைய நாமத்தில் தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை;//
பொந்துக்குள் பதுங்கியிருக்கிறவனுக்கு எல்லாமே இருட்டாக தான் இருக்கும்!! அப்படி தான் உம் நிலையும்!! வேதத்தை விட்டு விட்டு, யாரோ எழுதிய பாடல்கள் மூலமாக விசுவாசத்தை வளர்க்கிற உமக்கு தெரிந்துக்கொள்ளவோ புரிந்துக்கொள்ளவோ ஒன்றுமில்லை தான்!!
//யார் அறியாமையில் இருக்கிறோம்,யார் கைவிடப்படப் போகிறோம், என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளுவோம்;உங்கள் போதனையின்படி பாவிகள் என்று யாரும் இல்லை,எனவே நரகமும் பாதாளமும் இல்லை என்றால் ச்சும்மா சந்தோஷமாக லைஃப் என்ஜாய் பண்ணிகிட்டிருக்கலாமே ஏன் எங்களைவிட அதிகமாக டென்ஸன் ஆகறீங்க..? உங்களுக்கு என்ன கொள்ளை போகிறது?//
நாங்கள் எந்த டென்ஷனும் ஆக கிடையாது!! தேவன் எங்களுக்கு தந்திருக்கும் எல்லாவற்றிலும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டு தான் இருக்கிறோம்!! யாரும் கைவிடப்படப் போவதில்லை என்பதை உங்களுக்கு கிடைத்திருக்கும் பாடல் வரிகள் சொல்லாமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்!! தேவன் அன்பானவர் என்று நாங்கள் சொல்லுகிறோம், தேவனை ஒரு பழிவாங்கும் (மற்ற மார்க்காத்தார் போல்) தேவனாக சித்தரிப்பவர்கள் நீங்கள்!! கிறிஸ்து எல்லா ஜனங்களுக்கும் தான் இரட்சகர் என்கிறது வேதம், ஆனால் உங்கள் பாடல் வரிகள் அப்படி சொல்லவில்லை என்றால் அதற்கு நானா கிடைத்தேன்!!
என்னய்யா உங்களுக்கு எல்லாம் குழப்பம்!! தேவனின் கிருபையினால் கிறிஸ்து ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார் என்று சொல்லும் வரிகளை வாசித்தும் இருவரும் ஒருவரே என்று பிதற்றுவது சரியாகுமா!! தேவனின் கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணாத்தை ருசிப்பார்த்த இயேசு கிறிஸ்து, இருவரும் எப்படி அய்யா ஒருவராக இருக்க முடியும்!! "முடிசூட்டப்பட்டார்" என்றாலே முடிசூடியவர் முடிசூட்டப்பட்டவரை விட பெரியவராக தானே இருக்க முடியும்!! உங்களின் அடிப்படை விசுவாசமே, பாடல்களினால் வந்தது, உங்களை சொல்லி குற்றம் இல்லை, நீங்கள் வசனத்தை பின்பற்றாமல் இருக்கும்படியாகவே நியமிக்கப்பட்டவர்கள்!!
//வசனத்தைப் புரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, நைனா;தெய்வத்துவத்தை நாங்கள் கூறுபோடவில்லை; நீங்களே அவரைக் கூறுபோட்டு கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்;பிதாவாகிய தேவன் ஏதோ பெலவீனப்பட்டதைப் போலவும் கையாலாகாத அவர் இன்னொருவரை உருவாக்கி அவர்மூலம் உலகத்தை சிருஷ்டித்தது போலவும் கதைபண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்;//
கதையில்லா கண்ணா இது தான் நிஜம்!! ஒன்றான மெய் தேவனை "திரியேக தேவன்" திரித்துவ தேவன் என்று வீதி வீதியாக கூறு போட்டு விற்பவர்கள் தானே உங்கள் கூட்டத்தார்!! இப்படி கூறு போட்டது பத்தவில்லை என்று காணிக்கையை பெட்டிகளில் நிறப்பி வேறு செல்வார்கள்!! எங்கள் வேத பாடங்களோ கூட்டம் நடக்கும் இடத்திற்கு வர உமக்கு தகுதி கிடையாது, அப்படியே தப்பி தவறி வந்து விட்டாலும் வந்து பாரும், காணிக்கையா? அப்படீனா? என்று தான் கேட்போம்!! காசுக்கு அலையும் கூட்டமய்யா உங்கள் கூட்டம்!! அதுக்காகவே மாசம் ஒரு கூட்டம் கூட சலிக்காமல் போடுவீர்கள்!! எங்கள் ஊரில் உம்மை போல் ஒருவர், தனக்கு சரியாக பங்கு கிடைக்கவில்லை என்று தனியாக கூட்டம் போட்டு சம்பாதித்தார்!! உங்களுக்கு எல்லாம் இதை குறித்து பேசவே தகுதி கிடையாது!!
//வேற வழி...சில்சாம் இருக்கற வரைக்கும் உன் பப்பு வேவாது கண்ணா..!//
ஏன், சில்சாமுக்கு தொழில் மாறிடுச்சா!! அடுப்படியில் வேலை கிடைத்திருக்கிறதா!! சரி எல்லாம் ஒன்று தான்!!
//மற்றபடி நீ கூட்டம் நடத்தும் இடத்திலேயே வந்து உன் காதைப் பிடிச்சி திருகுவதற்கு ஆள் போட்டிருக்கிறோம்;எச்சரிக்கை..!//
ஆமா, ஆமா பிசாசுக்கு தான் அநேகர் இருக்கிறார்களே, ஆனா கண்ணா, நாங்கள் தேவனுக்கு பயந்து அவரின் செட்டையின் நிழலில் இருப்பவர்கள்!! நாங்கள் கூட்டம் நடத்த தடை செய்ய தான் உம் தூதர்கள் எத்துனை முயற்சி செய்தார்கள், துண்டு பிரசாரம், நேரடியான பிரசாரம், ஆனால் எதுவும் எடுப்படவில்லை, வந்த கூட்டம் சின்ன கூட்டமாக இருந்தாலும், வந்துக்கொண்டு தான் இருக்கிறது!! உம்முடைய தூதர்களின் துண்டு பிரசுரங்கள் எல்லாம் ஜனங்களின் காலடியில் மிதிப்பட்டதோடு சரி!! காது வேண்டுமென்றால் டாக்டரிடம் போக வேண்டியது தானே, எங்கள் காதை வைத்து என்ன செய்ய போகிறாய்!!
//அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க் கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். "(2.யோவான்.1:10,11)//
துர்கிரியையின் மொத்த உருவமாக நீர் இருந்துக்கொண்டு உமக்கு யாரைய்யா போட்டி!!
சகோ அன்பு அவர்களே, இந்த துன்மார்கனுக்கு பதில் தந்ததில் ஏதாவது தங்களுக்கு தவறாக பட்டது என்றால், உங்களுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள்!! நன்றி!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//இனி இயேசு மகா தேவனும் இல்லை என்று எதாவது சொல்றதயும் நாம் கேட்டுதொலைக்க வேண்டியது இருக்கும்//
இத்துனை நாள் உனக்கு மரியாதை கொடுத்துக்கொண்டு இருந்தேன், இனியும் அதற்கு தகுதி உனக்கு கிடையாது என்று நீயே நிரூபித்து விட்டாய்!! நாங் எல்லாம் ஏதோ நாய் மாதிரி என்று நினைத்து வார்த்தைகளை கோட்டுகிறாயே, நீயும் உன்னை வழி நடத்தும் உன் போதக கூட்டமும் எங்களுக்கு ஒரு புழுவை விட மோசமானவர்களாக தான் தெரிகிறீர்கள்!! உனக்கு சொல்ல முடியவில்லை என்றால் விட்டு விட வேண்டியது தானே!! ஏன்கிடைந்து முக்கிக்கிட்டு இருக்கனும்!!
நீ அதை தான் கேட்க போகிறாய், ஆனா இப்போது இல்லை, ஏனென்றால் இப்பொழுது உன் கண்கள் குருடாகி மட்டும் இல்லை, உண் காதுகள் செவிடாகி போய் இருக்கிறது!! உன் புத்தி மழுங்கி பழுதாகி போய் இருக்கிறது!! உனக்கு மனித போதனை மாத்திரமே தான் பின் பற்ற தெரியும்!! ஆங்கிள பைபிள் வாசிக்கிறவர்களுக்கு நீ சொல்லும் மகா தேவன் என்பது தெரியாது!! நீ ஒரு வேலை ஊழியம் என்கிற பெயரில் ஓசியில் ஊர் சுத்த வெளிநாடு பக்கம் போனாய் என்றால் (அது தான் உங்கள் கூட்டத்தர் எப்போ வெளிநாடு போகலாம் என்று அலையிதுங்களே) உனக்கும் உன் கூட்டத்தாரும் ஏதோ தமிழ் மொழி ஒன்றை தவிர ஒன்றும் பேசியதே கிடையாது பார்!! காதுக்கு சகிக்காத ஏதோ உருட்டல் மொழியெல்லாம் பேசி திரியும் உம் கூட்டத்தாருக்கு ஆங்கிளம் மாத்திரம் கசக்குதாம்!! உனக்கு வசனம் தெரியவேண்டுமென்றால் வசனத்தை பார், எந்த மொழி என்று உனக்கு என்ன கவலை!!
நீ என்னை திரும்ப திரும்ப யெகோவா சாட்சி என்று சொன்னா நான் உன்னை விக்கிரக ஆராதனைக்காரன் என்று தான் கூப்பிடுவேன்!! புற மார்க்காத்தான் என்று தான் கூப்பிடுவேன்!! உன் தகுதி அதுவே!! நீ விக்கிரக ஆராதனைக்காரன் தான் ஏனென்றால் விக்கிரக ஆராதனை சபையில் இருப்பவர்களுடன் உனக்கு கூட்டு இருக்கிறது!! நீ கிறிஸ்தவனே இல்லை, புற மார்க்காத்தான், ஆகவே தான் உனக்கு தேவன் யார் என்கிற அறிவு இல்லை!! நீ இல்லாமல் போய் விடுவாய் என்று நீயும் உன் கூட்டத்தாரும் சொல்லுவது போல் நாங்கள் யாரையும் மிரட்டுவது கிடையாது, ஏனென்றால் என் தேவன் அன்புள்ளவர் என்று எனக்கு தெரியும் உனக்கு தேவன் யார் என்றே தெரியாது, ஆகவே உனக்கு தேவனின் அன்பு என்னவென்று புரியாது!! ஆக இப்போ உனக்கு இயேசு யார் என்றும் தேவன் யார் என்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நீ கற்றுக்கொள்ளும் காலம் வருகிறது!! அதற்காவது காதை தீட்டி வைத்துக்கொள்!! தமிழில் மாத்திரம் சொன்னால் தான் தேரிந்துக்கொள்வேன் என்று அடம் பிடிக்காதே!!
//இயேசு "சர்வத்திற்கும் மேலான தேவன்" என்று எழுதப்பட்டு இருப்பது முரண்பாடாம் இவர் அதை ஆராயுராராம் என்ன ஒரு கொழுப்பு பாருங்களேன்! இதில் இருந்தே தெரியுது இதுங்க வேதத்தை வாசிக்கும் முன்னமே இயேசு மிகாவேல் என்று காமாலைக்கண்களுடன் வாசிப்பதால் எல்லாம் மஞ்சளா தெரியுது!//
நாங்கள் ஆராய்வதினால் தான் உன்னை போல் கலிசடை கோட்பாடுகளிலிருந்து தப்பித்து இருக்கிறோம்!! ஆராய்வதால் தான் இயேசு யார் என்று தெரிந்துக்கொண்டு நித்திய ஜீவனுக்கு தகுதியாக இருக்கிறோம்!! இயேசுவை நான் இயேசுவாக தான் பார்க்கிறேன், உன் குருட்டு கண்ணுக்கு தான் அவர் பிதா என்றும் பிதாவிற்கு மேலானவர் என்றும் தெரிகிறது!! அட குருட்டாட்டக்காரனே, பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்தார் என்று வசனம் சொல்லியும் லூசுத்தனமாக திரும்ப திரும்ப இயேசு தான் சர்வத்துக்கும் மேலான தேவன் என்று தவறான அர்த்தத்துடன் உள்ள வசனத்தை வெச்சு இல்லாததை நிரூபிக்க துனிகிறாயே!!
பிதா சர்வவல்லமை உள்ள தேவன் இயேசு கிறிஸ்து வல்லமை உள்ள தேவன்
இதை ஏசாயா சொல்லிவிட்டு அதன் பின் இன்னோரு இடத்தில் தேவனே வந்து, இல்லை இல்லை தெரியாமல் சொல்லிவிட்டேன், இயேசு கிறிஸ்து தான் சர்வத்துக்கும் மேலான தேவன் என்று சொல்லியிருப்பாரா!! ஆகவே தான் புத்தியும் மந்தமாகி போய்விட்டது உனக்கும் உன் கூட்டத்துக்கும் என்று சொல்லியிருந்தேன்!!
இனியும் உனக்கு நேர்மையாக விவாதம் செய்ய வேண்டுமென்றால் செய் அல்லது உன் சாக்கடை புத்தியை எடுத்துக்கொண்டு அந்த சாக்கடையில் கிட, உனக்கு புத்தி வரும் போது தெரிந்துக்கொள்வாய்!! இனியும் உனக்கு மதிப்பு கொடுத்தால் பிசாசை தலையில் தூக்கி ஆடுவதற்கு சமமாகிவிடும்!! உன வஞ்சகத்தை கேட்க்கிற ஒரு பெரிய கூட்டம் இருக்கும், அங்கே போய் உன் தமிழை சொல்லு, அப்போ உன் ஆங்கில புலமையை காண்பிக்க ஆங்கிலம் தேவைப்படும், அதையும் அவிழ்த்துவிடு!! இனியும் உன்னுடன் விவாதம் செய்வது செவிடன் காதில் சங்கு ஊதுவது போலும், குருடனுக்கு சூரியனை காண்பிப்பது போலும் இருக்கும்!! இனி உனக்கு உன் பானியில் பதிலடி தான்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17