நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்/அநீதிகள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்/அநீதிகள்
Permalink Closed


இயேசுவுக்கு ஓர் உருவத்தையும் கொடுத்து, அவரை ஆராதனையும் செய்பவர்கள் அனைவரும் தேவன் தந்த 10 கற்பனைகளின் முதல் கற்பனைக்கு எதிராகச் செயல்படுபவர்கள். அக்கற்பனை சொல்வதை சற்று படியுங்கள் சிந்தனையாளர்களே!

யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும்
நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

எந்த சொரூபத்தையோ விக்கிரகத்தையோ உண்டாக்க வேண்டாம் எனத் தேவன் கட்டளையிட்டிருக்க, துணிகரமாக இயேசுவின்/மாதாவின்/இன்னும் பல மனிதரின் சொரூபங்களையும் விக்கிரகங்களையும் கத்தோலிக்கர்கள் உண்டாக்கி வைத்தனர்; அவர்களில் பலர் அந்த சொரூபங்களையும் விக்கிரகங்களையும் ஆராதிக்கவும் செய்தனர்.

அந்த கத்தோலிக்கரின் வழிவந்தோரில் பலர், சற்று தெளிவுபெற்று மாதாவுக்கும்/மனிதருக்கும் சொரூபத்தை/விக்கிரகத்தை உண்டாக்குவதை விட்டுவிட்டு, இயேசுவுக்கு மட்டும் சொரூபத்தை/விக்கிரகத்தை உண்டாக்கி அதை ஆராதனை செய்தனர், இன்றளவும் செய்தும் வருகின்றனர்.

இயேசுவின் சொரூபத்தையும்/விக்கிரகத்தையும் உண்டாக்கும் இவர்கள்: இயேசுவை நாங்கள் விக்கிரகமாக வைத்து ஆராதனை செய்யவில்லை என்றும், இயேசு வெறும் விக்கிரகம் அல்ல, அவர் ஜீவனுள்ள தேவன் என்றும் வீராப்பாகச் சொல்லிக்கொள்வார்கள்.

இவர்கள் என்னதான் சொன்னாலும், யாத்திராகமம் 20:4-க்கு எதிராக “பூமியில் உண்டாயிருந்த இயேசு எனும் மனுஷனுக்கு ஒப்பான சொரூபத்தை/விக்கிரகத்தை உண்டாக்குவதை” இவர்களால் மறுக்க இயலாது.

உதாரணமாக யௌவன ஜனம் தளத்தின் இணைய பக்கங்கள் ஒவ்வொன்றிலும் “இயேசுவுக்கு ஒப்பான ஓர் உருவப்படம்” இடம் பெற்றிருப்பதை யாவரும் அறிவார்கள். இத்தளத்தின் நிர்வாகியைப் போலவே திருத்துவவாதிகளில் பலரும் தங்கள் ஆலயங்களிலோ(?), ஊழிய ஸ்தலங்களிலோ, அலுவலகங்களிலோ, வீடுகளிலோ இயேசுவுக்கு ஒப்பான உருவத்தை உண்டாக்கி வைத்துள்ளனர்.

அந்த இயேசுவை இவர்கள் ஆராதனை செய்யும்போது, அந்த இயேசுவுக்கு ஒப்பான உருவம் இவர்களின் மனக்கண்களில் நிச்சயம் வரத்தான் செய்யும். எனவே இவர்கள் இயேசுவுக்கு ஒப்பான ஒரு விக்கிரகத்தையே ஆராதனை செய்கின்றனர் என உறுதியாகக் கூறமுடியும்.

இவ்விதமாக இயேசுவை விக்கிரகமாக்கி ஆராதனை செய்கிற இவர்கள் அனைவரும் விக்கிரகாராதனைக்காரர்களே!

இவர்கள் அனைவரையும் அறிவீனர்கள் எனச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏனெனில் வேதவசனம் இப்படிச் சொல்கிறது:

ஏசாயா 1:3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது.

அன்றைய மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் எப்படி தேவனை அறியாமலும் உணர்வில்லாமலும் மாட்டையும் கழுதையையும்விடக் கேவலமானவர்களாக இருந்தார்களோ, அதேவிதமாக இன்று தங்களை ஆவிக்குரிய இஸ்ரவேலர் எனச் சொல்லிக்கொண்டு, தேவனை அறியாமலும் உணர்வில்லாமலும், இயேசுவுக்கு ஒப்பான விக்கிரத்தை உண்டாக்கி இயேசுவை ஆராதனை செய்கிற அனைவரும் மாட்டையும் கழுதையையும்விடக் கேவலமானவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட இவர்களை அறிவீனர்கள் எனச் சொல்வதில் தவறேதும் கிடையாது.

இந்த அறிவீனர்களில் ஒருவரான சில்சாம் என்பவர், இந்த இணைய தள மேடை உட்பட பல இணைய தள மேடைகளின் பதிவுகளை விமர்சிக்கையில், தன்னை மிகவும் தரந்தாழ்த்தி மதியீனமாகச் செயல்படுகிறார். அவரது மதியீனங்களை இத்தளத்திற்கு வருபவர்களும் அறிந்துகொள்ள ஏதுவாக, அவரது மதியீனமான பதிவுகள் தெரிவு செய்யப்பட்டு இத்திரியில் பதிக்கப்படும். (எச்சரிக்கை: இங்கு பதிவுசெய்யப்படாத அவரது பதிவுகள் யாவும் மதியீனமானவைகள் அல்ல என யாரும் எண்ணிவிடவேண்டாம்)

மூடனாகிய சில்சாம் தன் பார்வைக்கு ஞானியாயிராதபடிக்கு அவரது மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடுப்பதை வேதாகமம் ஆதரிப்பதால் (நீதிமொழிகள் 26:5), தள ஒழுங்கிலிருந்து சற்று விதிவிலக்கு கொடுத்து, இத்திரியில் (மட்டும்) சில்சாமின் மதியீனங்களுக்கு (மட்டும்) அவரது மதியீனத்தின்படி
சற்று பதிலளிக்க இங்கு அனுமதியளிக்கப்படுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


ஒரு சிறிய விளக்கம்

முந்தின பதிவில், பூமியில் உண்டாயிருந்த இயேசு எனும் மனுஷனுக்கு ஒப்பான சொரூபத்தை/விக்கிரகத்தை உண்டாக்குவதை ...” என நான் எழுதினதை வைத்து, இயேசுவை பூமியில் உண்டான ஒரு மனுஷனாக மட்டும் நான் நினைப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்.

இயேசுவானவர் ஆதிமுதல் தேவகுமாரனாக இருந்தவர் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஆகிலும் இப்பூமிக்கு இயேசு எனும் பெயரில் அவர் வந்தபோது மனுஷனாக உண்டானார் என்பதால் அவ்விதமாகக் கூறியிருந்தேன்.

இயேசுவுக்கு ஒப்பான உருவத்தை உண்டாக்கி மகிழ்பவர்கள் அனைவரும் அவரது மனுஷ ரூபத்தையே இன்றளவும் நினைவுபடுத்தி வருகின்றனர் என்பதை அவர்கள் அறிவார்களாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


18-02-2011-ல் சில்சாம் பதித்த பதிவு:

யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Printer Friendly


"ஓடறவன கண்டா துரத்துபவனுக்கு இளப்பம்" என்பார்கள்;அதாவது பிரச்சினைக்கு அஞ்சி ஒதுங்கிச் செல்லுபவனை அவன் பயந்து செல்லுவதாக நினைத்துக்கொண்டு ஊர் எல்லை வரை துரத்திச் செல்லுவான், ஊர்க்காரன்;ஆனால் அவனை ஊர் எல்லை வரைக்கும் தந்திரமாக வரவழைக்க ஓடிக்கொண்டிருப்பவன் திரும்பிக் கொண்டால் நிலைமை விபரீத‌மாகும்;உண்மையான‌ பழமொழி வேறாக இருந்தாலும் நாகரீகத்துக்காகவும் பொருள் விளக்கவும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்; அசல் பழமொழி என்ன என்பது அறிந்தவருக்கு மட்டும் அறியப்பட்டால் போதும்.

அதுபோலவே எனது அன்புக்குரிய நண்பர்களான கொல்வின் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோர் அநித்திய சீவலின் தளத்தில் எதையோ எழுதி ஏதோ நியாயத்தை நிலைநாட்ட சென்ற அவர்கள் நாகரீகமில்லாத அந்த எபேசு பட்டணத்தின் மிருகங்களால் கடித்து குதறப்படுவதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை;அவர்களை அந்த தளத்தில் பார்த்ததும் உடனே நானும் அங்கே உறுப்பினராக இணைந்து களமாட துடித்தேன்; ஆனாலும் உணர்ச்சிவயப்படக்கூடாது என்று என்னை அமைதிபடுத்திக்கொண்டு காத்திருந்தேன்.அதற்கேற்ப அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டனர்;நான் அங்கே இணைந்திருந்தால் நிச்சயமாகவே என்னை அவமானப்படுத்தியிருப்பார்கள்;பெரியவர் அன்பு, தன்னுடைய தளத்தின் விருந்தினர்கள் முன்வைக்கும் மாற்று கருத்துக்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்களை வெளியேறச் சொல்லுவதைப் போல  எழுதுகிறார்;இவர்களுடைய புனிதமான தளத்தில் நரகத்தைக் குறித்து எழுதினால் அவர்களுடைய தளம் மாசுபட்டு விடுமாம்;இதே கோபம் தான் கோவை வெறியன்ஸுக்கும் என்மீது ஏற்பட்டது;இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்;மாற்று கருத்தை எதிர்கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் மற்றவர்களை எப்படி குற்றஞ்சாட்டலாம்?

இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் சுள்ளிகளான இரஸலின் சிஷ்யர்களுக்கே இவ்வளவு வைராக்கியம் இருக்குமானால் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த மார்க்கத்தமைந்த எங்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கவேண்டும்;இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.

நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.

எதிரியை தடுமாறச் செய்து வீழ்த்துவது ஒன்றே குறிகோளானால் எந்த வேடத்தையும் ஒருவன் போடுவான் என்பதற்கு பெரியவர் அன்பு அவர்களே நல்ல உதாரணம்;அவருக்கு வசனம் வேண்டுமாம்; மாணவனாம்;மாணவன் எதிர்த்து கேள்வியே கேட்கவே கூடாதே?

வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?

நாங்களெல்லாம் பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதற்காக வேதத்தை மறுதலிப்பதாக மிக எளிதாக சொல்லிவிடலாம்;ஆனால் நீங்கள் வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறமுடியுமா?

நீங்கள் இங்கே தமிழில் வாதிடும் ஒவ்வொரு பொருளும் அதன் தர்க்கிக்கும் முறை உட்பட ஏற்கனவே ஆங்கிலத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கே உங்க ஆட்கள் ஆங்கிலத்தில் பிதற்றுவதையே இங்கே தமிழில் சொம்படிக்கிறீர்கள் என்பது இரண்டையும் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்;என்னைப் போல வேலையற்றவன் தான் இந்த குப்பைகளையெல்லாம் படித்து மனசைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால் வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு அந்த பயிற்சி இல்லை;எனவே உங்கள் முன்பாக நில்லாமல் விலகி ஓடுகிறார்கள்;ஏனெனில் 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது அவர்களுக்குத் தெரியும்.

இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?

நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.

நீங்கள் அந்த போதகத்தை யாரிடத்திலிருந்து பெற்றீர்களோ அவர்களைக் குறித்து எதையும் கூறாமல் சொந்தமாகக் கண்டுபிடித்தது போல செயல்படுவது ஒரு மாபெரும் கருத்து மோசடியாகும்;உங்கள் கொள்கைகளும் உபதேசங்களும் உண்மையோ பொய்யோ அதை இன்னாரிடத்திலிருந்து பெற்றீர்கள் என்பதை சொல்லாமல் மறைப்பதே முதல் குற்றமாகும்;அடுத்து அந்த உபதேசத்தைப் பரப்ப சத்திய வேதத்தைத் திரித்து போதிப்பது அடுத்த மோசடியாகும்;ஏனெனில் இங்கே விநியோகிக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே அது உங்களுடையதாகிவிடாது அல்லவா? ஏனெனில் உங்கள் கூட்டத்தினர் உயர்த்தி பிடிக்கும் உன்னத நாமமான யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இல்லை;நீங்கள் மொழியை வைத்து, அவர் தான் இவர் என்று சொன்னால் நாங்களும் இவர் தான் அவர் என்று சொல்லமுடியுமே?

நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா அல்லது நானே படித்து தேறிவிட்டதாகக்கூறி இஸ்லாமியருக்கு எதிராக கலகம் செய்யமுடியுமா? அதுபோலவே இஸ்லாமியரும் இன்றைக்கு கிறித்தவர்களைவிட அதிகமாக வேதத்தை வாசிக்கிறார்கள்;எதற்கு? அதிலிருந்து குறை கண்டுபிடிக்க‌..! உங்களுக்கும் அவர்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?

பரிசுத்த வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்காக சல்லிக்காசும் செலவிடாத நீங்கள் அதில் மொழி பெயர்ப்பு குறைகளைச் சொல்லுவதற்கும் அதிலிருந்து வசனங்களை எடுத்து வியாக்கியானம் செய்வதற்கும் எந்த உரிமையும் இல்லை;ஏனெனில் அது இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் தியாகத்துடன் பிரயாசப்பட்டு கொடுத்ததாகும்.இயேசு தெய்வமாகத் தொழப்படாவிட்டால் புதிய ஏற்பாடே இல்லை;புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் கிறித்தவனே இல்லை;"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.

மந்தைக்கும் உட்படாமல் வேலியையும் தகர்த்துபோட்டு ஓநாய் மனிதர்களாக மாறிப்போன உங்களை வீழ்த்துவதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறோம்; தாவீதைப் போல வீறுகொண்டு எழுந்து உங்கள் வாயில் சிக்கியிருக்கும் ஆடுகளை உயிருடன் மீட்போம்.

ஒன்றான மெய்த் தேவனைக் குறித்த அறிவே இல்லாத உங்களுக்கு அவருடைய நேசக் குமாரனைக் குறித்து என்ன தெரியும்? அல்லது அவரால் அனுப்பப்பட்ட ஆவியானவரைக் குறித்து என்ன தெரியும்? முதலில் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவதை இழிவுசெய்து எழுதுவதை நிறுத்திவிட்டு பிறகு திரித்துவத்தைக் குறித்து கேளுங்கள் சொல்லுகிறோம்.

கடந்த 2000 வருடமாகப் பிரசங்கிக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;இரட்சிக்கப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;நியாயந்தீர்க்கப்போகும் ஒரே நாமம் இயேசுவின் நாமமே;எங்களுக்கு யாவே என்பவரைக் குறித்தோ யெகோவா எனும் நாமத்தைக் குறித்தோ ஒன்றும் தெரியாது;அவருடைய குமாரனாக சொல்லிக்கொண்டு வந்தவரே அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்;அப்படியானால் அவரை வணங்கட்டுமா என்று இவரிடம் கேட்டோம்;என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்றார்;பிதாவிடம் கேட்டோம்,குமாரனை வணங்கலாமா, என்று.அவரும் குமாரன் வழியாகவே நான் மகிமையடைவேன் என்று சொல்லிவிட்டதால் வேத வசனமும் பரிசுத்தவான்களும் அதனை ஆமோதிப்பதால் இயேசுவையே தெய்வமாகத் தொழுது துதிசெய்து வருகிறோம்;இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் போகும் பாதையைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்;ஆம்,அவரைக் குறித்து அறியாததால் நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்று இயேசு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்;அவர் ஆள்தத்துவமாக இருப்பதாலேயே நிரப்புகிறார்,சாட்சி கொடுக்கிறார்,பேசுகிறார் என்பதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி எக்காளத்தை உங்கள் அபிமான தூதனாகிய மிகாவேல் ஊதும் போது மேகத்தின் மீது இராஜாதி இராஜாவாக மேசியா வரும்போது அவரோடு நாங்களும் வரும்போது உங்கள் கூட்டத்தின் தலைவன் இரஸ்ஸலுடன் நீங்களெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள்;ஏனெனில் நீங்கள் மரிக்காமலிருந்தாலும் சரி, மரித்துப்போனாலும் சரி உங்களுக்கு அதில் பங்கில்லை;ஏனெனில் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களின் வரிசையில் மேசியாவின் எதிரிகளான உங்களுக்கு இடமில்லை;"ஐயய்யோ பிரதான தூதனே இயேசு என்று நினைத்தோமே, "பிரதான தூதா,  பிரதான தூதா" என்று நீங்கள் கதற அவனோ கைகட்டி வாய்பொத்தி உங்களைப் பார்த்து சிரிக்க அந்த காட்சியைப் பார்க்க கண் கோடி வேண்டுமய்யா? அவரைக் குத்தினவர்கள் வரிசையில் உங்கள் பெயர் எழுதப்படும்; ஒரு நாளில் அவரைக் குத்தினவர்களும் குத்திக்கொண்டிருப்பவர்களுமான உங்கள் கண்களெல்லாம் அவருடைய இராஜமேன்மையைப் பார்த்து புலம்பும் என்பது நிச்சயம். இப்போதே அவருடைய திருப்பாதத்தை முத்தஞ்செய்தால் ஒருவேளை மீட்கப்படுவீர்கள்;ஆனாலும் நிலைமை ரொம்ப மோசமாகவே இருக்கிறது; பாதாளம் உங்களுக்கு நேராக வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது; இன்னொரு பக்கம் ஏணியும் அதோ வைக்கப்பட்டிருக்கிறது;எப்படி வசதி..? ஏன்யா நீ என்ன லூசா, பாதாளம் என்றாலும் சிரிக்கிறாய்,ஏணி என்றாலும் சிரிக்கிறாய்? உனக்கு ரெண்டும் வேண்டாமா,எக்கேடும் கெட்டுப்போ..!

இரத்தசாட்சிகளெல்லாம் இயேசுவின் நாமத்துக்காகவே மரித்தார்கள்; யெகோவா நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டியவர்களே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்;உங்களிடம் வீண்பேச்சு எதற்கு என்றே இத்தனை காலம் கிறித்துவின் சபையார் அமைதியாக இருந்தார்கள்;இனி காலம் செல்லாது;உன்னை அடித்தால் தான் இன்னொரு முட்டாள் எச்சரிக்கப்படுவான் என்றே இணையத்திலிருந்து உங்க ஆட்களின் கணையத்துக்கு குண்டு வைக்கிறோம்; யேகோவா தேவனுக்கே ஆயிரம் நாமங்கள்;அதில் எதில் எதைச் சொல்லி அவரை ஆராதிப்பீர்களோ? பழைய ஏற்பாடு முழுவதும் யெகோவா எனும் ஒரே நாமத்தினால் மாத்திரமே தேவன் தொழப்பட்டாரா என்று இரஸ்ஸலின் மூத்திரத்தைக் குடித்த முட்டாள்களைக் கேட்க விரும்புகிறேன்; யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவன் மாத்திரமா உலகத்தைப் படைத்தார்? உங்கள் கூற்றுப்படி அவரால் சிருஷ்டிக்கப்பட்டஇயேசுவே உலகத்தைப் படைத்தார் எனில் இயேசுவானவரே யெகோவா என்று சொல்லுங்கள்,வேண்டுமானால் யோசிக்கிறோம்..!

"எகிப்தில் தெண்டனிட்டு பணியுங்கள்" என்று பார்வோன் கட்டளையிட்ட போது அனைத்து மக்களும் இராஜாவான பார்வோனை விட்டு விட்டு யோசேப்பை பணியவில்லையா? முட்டாள்களே சந்தடி சாக்கில் சர்வ வல்ல தேவனை அவருடைய திருக்குமரன் நிமித்தமான விவாதத்தில் புறக்கணித்து தூஷிக்கும் பாவத்துக்குள்ளாக்க பிசாசு உங்களை ஏவுகிறான் என்பது மட்டும் புரிகிறது;இனி உங்களுடைய இறையியல் விளக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை;உங்களுக்கு எந்த வசனத்தையும் தரப்போவதில்லை;எங்கள் ஊரில் மாட்டுக்கு வாழைப் பழத்தோலையும் கழுநீரையும் எச்சில் இலைகளையும் மட்டுமே போடுவோம்;உங்களுக்கு இதுபோதும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

கடந்த பதிவில் பதியப்பட்ட சில்சாமின் பதிவில் காணப்படும் மதியீனங்கள்:

//கொல்வின் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோர் அநித்திய சீவலின் தளத்தில் எதையோ எழுதி ஏதோ நியாயத்தை நிலைநாட்ட சென்ற அவர்கள் நாகரீகமில்லாத அந்த எபேசு பட்டணத்தின் மிருகங்களால் கடித்து குதறப்படுவதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை;//

சில்சாமின் இந்த மதியீனத்தைக் குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. கொல்வின் மற்றும் ஜோசப்ஸ்னேகாவுக்கு நான் எழுதினவற்றை தீர்க்கமாகப் படித்துப்பார்ப்பவர்கள் சில்சாமின் மதியீனத்தைப் புரிந்துகொள்வார்கள்.

//
இவர்களுடைய புனிதமான தளத்தில் நரகத்தைக் குறித்து எழுதினால் அவர்களுடைய தளம் மாசுபட்டு விடுமாம்;//

இப்படி இவர் மதியீனமாக எழுதும்படி தூண்டின எனது பதிவு:

//
இத்தளத்தின் நோக்கம், இத்தளத்திற்கு வருவோரை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவதே. இத்தளத்தின் நோக்கத்திற்கு பங்கம் உண்டாக்குவதைப் போல், “இதைச் செய்தால் நான் நரகம் போனாலும் கவலையில்லை” என்கிறீர்கள். இத்தளத்தின் நோக்கத்திற்கு பங்கம் உண்டாக்குகிற அம்மாதிரி வாசகத்தை இனிமேல் பதிக்க வேண்டாமென வேண்டுகிறேன்.//

இப்படி நான் எழுதினதை,
எனது புனிதமான தளத்தில் நரகத்தைக் குறித்து எழுதினால் என்னுடைய தளம் மாசுபட்டு விடும்” என நான் எழுதினதாக திரித்துக் கூறினால், அப்படிக் கூறுபவர், ஒன்று கடைந்தெடுத்த மடையனாக இருக்கவேண்டும், அல்லது தான் எதை எழுதினாலும் ஏற்றுக் கொள்ளும் மடையர்களாக பிறரைக் கருதுபவனாக இருக்கவேண்டும்.

//
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் சுள்ளிகளான இரஸலின் சிஷ்யர்களுக்கே இவ்வளவு வைராக்கியம் இருக்குமானால் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த மார்க்கத்தமைந்த எங்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கவேண்டும்;//

இரஸல் என்பவர் யார்? அவரது சிஷ்யர் யார்? எனும் எதையுமே அறியாத என்னை இரஸலின் சிஷ்யர் எனச் சொல்கிற இந்த மதியீனத்தை என்னவென்று சொல்ல? டி.ஜி.எஸ்-க்கு சிஷ்யராக இருந்து பழகின இவருக்கு, காமாலைக்காரனுக்கு கண்டதெல்லம் மஞ்சள் என்பதுபோல், எவனைப் பார்த்தாலும் இவனும் தன்னைப் போல “ஒரு மனுஷனுக்கு” சீஷனாக இருப்பானோ என எண்ணுகிறார். எந்த மனுஷனையும் நான் போதகராகக் கூட கருதவில்லை; கிறிஸ்து ஒருவரே எனக்குப் போதகர். அப்படியிருக்க இரஸல் என்பவரை நான் குருவாக மதித்து, அவருக்கு சிஷ்யனாக இருப்பேனா?

ஒருபுறம் கிறிஸ்துவை ஆராதனை செய்வதாகக் கூறுகிற இவர்கள்: “மறுபுறம் கிறிஸ்துவின் வசனத்தை காலின் கீழ்போட்டு மிதித்து அவமதித்து, கண்டவனையும் போதகர்/பாஸ்டர்/குருவானவர்/பேராயர் எனச் சொல்வார்கள்; அவர்களைத் தலையில் தூக்கிவைத்து பேயாட்டமும் ஆடுவார்கள். அது மட்டுமல்ல, தங்களை போதகர்/
பாஸ்டர்/குருவானவர்/பேராயர் என அறிவீனமான ஜனங்கள் சொல்வதை உளமாறக் கேட்டு மகிழ்ந்து பூரிப்பும் அடைவார்கள்.”

ஆனால் கிறிஸ்துவையும் அவரது வசனத்தையும் மெய்யாய் மதித்து கனம்பண்ணுகிற எனக்கு, கிறிஸ்து ஒருவரே போதகர்; அவர் ஒருவருக்கே நான் சீஷன்.

//
நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.//

என்னவொரு மதியீனம்? கொல்வினையும் ஜோசப்ஸ்னேகாவையும் நானா அழைத்தேன்? நானா அவர்களைப் பிடித்துவைத்திருக்கிறேன்? சில்சாம் சொன்னதில் ஒரு விஷயம் மட்டும் கடைந்தெடுத்த உண்மை. ஆம், கொல்வினும் ஜோசப்ஸ்னேகாவும் அப்பாவிகள்தான். அதாவது சுயமாக சிந்திக்காமல் பாரம்பரியப் போதனைக்குள் சிக்கிக்கொண்ட அப்பாவிகள்தான். தனது கட்சிக்காரர்களான கொல்வினையும் ஜோசப்ஸ்னேகாவையும் அப்பாவிகள் என்று சொல்லி, மறைமுகமாக அவர்களையும் மதியீனராக்கும் கலை இந்த சில்சாமுக்கு கைவந்த கலையாகும்.

சில்சாமின் மதியீனங்கள் தொடரும் ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Permalink Closed

சில்லிசாமி என்கிற பிசாசின் தூதனின் ஊளைச்சத்தத்திற்கு என் பதில்!! "கிறித்துவை" தெய்வமாக தொழும் இவர் ஒரு புதிய மார்க்கத்தின் தலைவர்!! இவரின் எழுத்துக்கள் இவர் யார் சார்பாக பேசுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது!! பிசாசை ச்சீ தூர போ சாத்தானே என்று சொல்லுவதால் கிறிஸ்தவன் எந்த விதத்திலும் தவறாகமாட்டான்!! பிசாசை பிசாசு என்றும் அவனின் தூதனை பிசாசின் தூதன் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்!! இந்த பிசாசின் தூதனுக்கு இந்த தள நிர்வாகியும் தக்க பதிலைத் தந்து அவனின் ஊளைச்சத்தத்திற்கு பதில் தரும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!! கெர்சிக்கும் சிங்கத்திற்கு கிறிஸ்து என்கிற நாமத்தின் ஒரு சாட்டையே (வசனம்) போதும்!! கொஞ்ச நாள் எலி பொந்துக்குள் இருந்துவிட்டு, வேறு எங்கும் தீனி கிடைக்கவில்லை என்று நம்மை சீண்டியிருக்கிறது, தன்னை புலி என்று நினைத்துக்கொண்டு!!

வசனம் தெரியாதவர்கள் எப்படித்தான் தன்னை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ!! என் பதிவும் சற்று கார சாரமாக இருப்பதால் அதை இங்கே பதியாமல் என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்!!


__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


சில்சாமின் மதியீனங்கள் தொடர்கின்றன:

//வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?//

அய்யா மதியீன சில்சாமே! என்னைப் பொறுத்தவரை இரஸல் என்பவரின் பெயரில் சற்று அறிமுகம் உண்டு; அவரது கருத்துக்களிலும் சற்று அறிமுகம் உண்டு. ஆனால் அவரைப் பற்றிய விபரம், மற்றும் அவரது கருத்துக்கள் எதையும் நான் முழுமையாக அறியவுமில்லை; அறிந்ததை மனதில் வைத்து அசை போடவுமில்லை; அவரை மட்டுமின்றி எவரையும் எனது ஆசானாக நான் வைக்கவுமில்லை.

இவ்வளவாய் இரஸலைப் பற்றித் துருவித் துருவிக் கேட்கிற நீங்கள், நிச்சயமாக இரஸலையும் அவரது கருத்தையும் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள்; நானும் அறிந்துகொள்கிறேன்.

எவரைப் பற்றியும் எவரது கருத்துக்களைப் பற்றியும் அறிவதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நானென்ன அவர்களையா முக்கியப்படுத்தி அவர்களை என ஆசானாக வைக்கப் போகிறேன்?

நீங்களே ஒரு கருத்தைச் சொன்னாலும் அதை வேதவசனத்தைக் கொண்டு ஆராய்ந்து, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்.

இரஸல், இரஸல் எனக் கூப்பாடு போடுகிறீர்களே! அந்த இரஸலைப் பற்றி அறிவதும் அவரது கொள்கைகளை அறிவதும் என்ன மாபெரும் குற்றமா? நான் அவரையும் அவரது கொள்கைகளையும் அறிந்திருந்தால் அதை ஒத்துக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏனெனில், யார் என்ன சொன்னாலும், அதை வேதத்தின் வெளிச்சத்தில் வைத்து பார்த்துதானே நான் ஏற்கப்போகிறேன்?

மீண்டும் மீண்டும் தனி மனிதனை உயர்வாக தூக்கி வைத்து உங்கள் மதியீனத்தைக் கொட்டாதீர்கள்.

//
நீங்கள் இங்கே தமிழில் வாதிடும் ஒவ்வொரு பொருளும் அதன் தர்க்கிக்கும் முறை உட்பட ஏற்கனவே ஆங்கிலத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கே உங்க ஆட்கள் ஆங்கிலத்தில் பிதற்றுவதையே இங்கே தமிழில் சொம்படிக்கிறீர்கள் என்பது இரண்டையும் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்;//

இதெல்லாம் சில்சாமின் மதியீனமான கற்பனைக்கு ஓர் உதாரணம் எனச் சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

சில்சாமின் மதியீனங்கள் தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

சில்சாமின் மதியீனமான ஒரு பதிவுக்கு பதில் கொடுத்து முடிப்பதற்குமுன் அடுத்த மதியீனமான பதிலை அவர் கொட்டிவிட்டார்.

18-02-2011-ல் அவர் கொட்டின அடுத்த மதியீனமான பதிவு:


இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்
Printer Friendly


மாற்றுக் கருத்துக்களை சுதந்தரமாக தெரிவிக்கவே இணையதளத்தின் வலைப்பூக்களையும் வலைதளங்களையும் பயன்படுத்துகிறோம்;அதில் நாம் பதிக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் பின்னணியில் இன்னொரு கருத்து நிச்சயமாகவே இருக்கும்;அதன் பாதிப்பு நம்முடைய எழுத்துக்களில் எதிரொலிப்பது தவிர்க்க இயலாததாகும்;ஆனாலும் மற்றொருவருடைய கருத்தின் பாதிப்பில் மட்டுமல்லாது மற்றவருடைய கருத்தையே மேற்கோள் காட்டி எழுதும்போது அவசியம் அவரவருடைய கருத்து இடம்பெற்றுள்ள தொடுப்பை கொடுக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான நாகரீகமாகும்;ஆனால் கீழ்த்தரமான இழிவான நோக்கத்துடன் எழுதுவோர் இந்த நாகரீகத்தைக் கடைபிடிப்பதில்லை.

யௌவன ஜனம் தளத்தைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலிருந்தே இந்த தவறை செய்யாத வண்ணமாக‌ நாம் செயல்பட்டு வருகிறோம்;அப்படி ஏதாவது ஒரு குறிப்பு நம்முடைய தளத்தில் இடம்பெற்றிருந்தால் அது எதிரிகளின் பதிவாக இருந்தாலும் தயவுசெய்து வாசக அன்பர்கள் எடுத்துக்காட்டவும்.

எந்தவொரு படைப்பாளியும் தனது எதிரிக்கு புகழ்சேர்க்க விரும்பமாட்டான்; நாமோ எதிரிகளுக்கு இதுவரை தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்துவிட்டோம்;ஆனால் அவர்களுக்கு இந்த நாகரீகத்தைக் கடைபிடிக்கத் தெரியவில்லை என்பது ஒன்றும் அதிசயமில்லை தான்;ஏனெனில் அவர்களெல்லாம் பூரண சற்குணர்கள் அல்லவா? அவர்களுடைய இரகம் எப்படியோ, வகை எதுவோ அதன்படியே செயல்பட்டு வருகின்றனர்;ஆனாலும் சட்ட நடைமுறைகள் என்று வரும்போது இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகும்;காப்பிரைட் சட்டப்படி எனது எழுத்துக்கள் காப்புரிமை பெற்றிருக்குமானால் எனது எழுத்துக்களை எனது உரிமையில்லாமல் எடுத்துப் பதிக்கும் அவர்கள் அதற்கு நஷ்டஈடாக அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும்;இதிலிருந்து தப்பவேண்டுமானால் குறைந்தபட்சம் நாம் யாருடைய படைப்பை எடுத்தாளுகிறோமோ அல்லது மேற்கோள் காட்டி எழுதுகிறோமோ அதற்குரிய தொடுப்பைத் தருவது அவசியம் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்ளுகிறேன்;மற்றபடி எனது எழுத்துக்களைக் குறித்து முன்வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்;ஒருவருடைய மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதுபோல பேசுவதும் எழுதுவதும்கூட இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும் என்பதை சிலர் அறியவேண்டும்.

நேற்றிரவு பலமணிநேரம் எனது பொன்னான நேரத்தை செலவழித்து பதித்த ஒரு கட்டுரையின் நோக்கத்தை சிதைப்பது போல நம்முடைய கருத்துக்களை திரித்து வெளியிட்டிருக்கும் பெரியவர் அன்பு அவர்கள் நம்முடைய தளத்தில் இடம்பெற்றுள்ள இந்த குறிப்பிட்ட பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிகள் முழுவதையும் பதித்து அதற்கு பதில் எழுதியிருக்கிறார்;நம்முடைய எழுத்துக்களை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது குறித்து அதிக மகிழ்ச்சி;ஆனால் நீங்கள் அந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ள யௌவன ஜனம் தளத்தின் தொடுப்பைத் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்;இது பொதுவான நாகரீகமாகும்;இதையும் நீங்கள் விவாதமாக்கினால் நான் இந்த விஷயத்தில் உங்களோடு மோதப்போவதில்லை;நான் விட்டுகொடுப்பேன் ஆனால் எனக்கு நீங்கள் செய்யும் துரோகத்தின் விளைவின் பலனை நீங்கள் வேறொரு திசையிலிருந்து பெறுவீர்கள்;அதுவே சர்வ வல்ல தேவனின் வழிமுறையாகும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


சில்சாமின் மதியீனங்கள் தொடர்கின்றன:
//மற்றொருவருடைய கருத்தின் பாதிப்பில் மட்டுமல்லாது மற்றவருடைய கருத்தையே மேற்கோள் காட்டி எழுதும்போது அவசியம் அவரவருடைய கருத்து இடம்பெற்றுள்ள தொடுப்பை கொடுக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான நாகரீகமாகும்;ஆனால் கீழ்த்தரமான இழிவான நோக்கத்துடன் எழுதுவோர் இந்த நாகரீகத்தைக் கடைபிடிப்பதில்லை.//

//
எந்தவொரு படைப்பாளியும் தனது எதிரிக்கு புகழ்சேர்க்க விரும்பமாட்டான்; நாமோ எதிரிகளுக்கு இதுவரை தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்துவிட்டோம்;ஆனால் அவர்களுக்கு இந்த நாகரீகத்தைக் கடைபிடிக்கத் தெரியவில்லை என்பது ஒன்றும் அதிசயமில்லை தான்;//

ஒருவரது உச்சகட்ட மதியீனம், அவரை எவ்வளவாய் பொய் சொல்லவும் உளறவும் வைக்கிறது என்பதற்கு சில்சாமின் இப்பதிவு ஓர் ஆதாரம்.

இத்தளத்திற்கு வருகிற அனைவரும் (ஏன், சில்சாமும் கூடத்தான்) அறிவார்கள், பிறதளங்களின் பதிவுகளை இங்கு பதிக்கையில் அத்தளங்களின் தொடுப்புகளையும் நான் கூடவே பதிக்கிறேன் என்பதை.

நான் இவ்வாறு பதிப்பதன் நோக்கம்: ஏதோ அவர்களின் கருத்தை நான் திருடியாதாக ஆகிவிடக்கூடாது என்பதற்கோ, அல்லது அவர்களின் copyright உரிமையை நான் மீறிவிட்டதாக ஆகிவிடக்கூடாது என்பதற்கோ அல்ல. நான் இங்கு அதிகமாகப் பதிகிற சில்சாமின் பதிவுகளை  நான் திருட்டுத்தனமாகப் பதியக்கூடிய அளவுக்கு உசத்தியானது அல்ல. அவரது மதியீனமான பதிவுகளைத்தான் இத்திரியிலும் இத்தளத்தின் வேறுபல திரிகளிலும் நான் பதிந்துள்ளேன்.

இந்த மதியீனமான பதிவுகளை அனைவரும் அறியவேண்டும் என்பதே என் நோக்கம். அப்படியிருக்க, அதை யாரும் பார்த்துவிடக்கூடாது, அவருக்கு விளம்பரம் கிடைத்துவிடக்கூடாது என நான் நினைப்பேனா?

எத்தனையோ பதிவிகளில் தொடுப்பைத் தந்த நான், இத்திரியில் பதிக்கப்பட்ட அவரது பதிவுக்கு தொடுப்பு தர மறந்துவிட்டேன், அவ்வளவே. ஆனால் இந்த சில்சாமோ, ஏதோ நமக்கு நாகரீகம் இல்லாததால்தான் இவரது பதிவுக்குத் தொடுப்பு கொடுக்க மறுத்துள்ளோம் என்பதுபோல ஒரு மதியீனமான சி்ந்தையைக் கொண்டுள்ளார்.

அவரது ஆசைப்படியே இத்திரியில் நான் பதித்துள்ள அவரது 2 பதிவுகளுக்கும் தொடுப்பு கொடுத்துவிட்டேன்.

//எந்தவொரு படைப்பாளியும் தனது எதிரிக்கு புகழ்சேர்க்க விரும்பமாட்டான்; நாமோ எதிரிகளுக்கு இதுவரை தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கொடுத்துவிட்டோம்;ஆனால் அவர்களுக்கு இந்த நாகரீகத்தைக் கடைபிடிக்கத் தெரியவில்லை என்பது ஒன்றும் அதிசயமில்லை தான்;//

சில்சாம் இப்படிச் சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது? பிற தளத்தின் பதிவுகளை மேற்கோள் காட்டி, அவற்றின் தொடுப்புகளையும் கொடுப்பதென்பது, அத்தளத்தினருக்கு புகழ் சேர்ப்பதாக இருக்கும் என சில்சாம் கருதுகிறார் என்பதையே!

நான் சில்சாமின் பதிவுக்கு தொடுப்பு தராததால் அவருக்கு புகழ் சேரும் வாய்ப்பு தவறிவிட்டது என்பதே சில்சாமின் ஆதங்கம். இதற்காகத்தான் அவரது பதிவுகளில் தொடுப்பு கொடுக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். அதாவது எதிரிகள் தனது பதிவுகளை மட்டந்தட்டி மேற்கோள் காட்டினாலும் பரவாயில்லை, ஆனால் அதன் மூலம் தனக்குப் புகழும் விளம்பரமும் கிடைக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. இப்படி ஒரு மதியீனனை எங்காவது பார்க்கமுடியுமா?

அய்யா சில்சாம்! எனக்கும் உங்கள் மதியீனங்கள் விளம்பரமாக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ஏனோ மறதியாக தங்களது ஒரு பதிவுக்கான தொடுப்பைக் கொடுக்கத் தவறிவிட்டேன். தயவுசெய்து மன்னிக்கவும். இனி தவறாமல் தொடுப்பு கொடுத்துவிடுவேன், அஞ்ச வேண்டாம்.

சில்சாமின் பின்வரும் பதிவுகளைப் பாருங்கள். அவர் எந்த அளவு மட்டமான சி்ந்தையுடையவர் என்பதற்கு அவை ஆதாரமாக விளங்குகின்றன.

//
என் தயவில் தங்கள் பிழைப்பு ஓடுவதால் நான் ஒதுங்கிப் போனாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்கும் கீழ்த்தரமான போக்கை கோவை பெரியன்ஸ், அன்பு, சுந்தர் போன்ற (மேசியாவின்) எதிரிகள் கைவிட்டு சத்தியத்தை அறியும் அறிவைப் பெற முயற்சிப்பது அவர்களுடைய எதிர்காலத்துக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் நல்லது.//

//சட்ட நடைமுறைகள் என்று வரும்போது இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகும்;காப்பிரைட் சட்டப்படி எனது எழுத்துக்கள் காப்புரிமை பெற்றிருக்குமானால் எனது எழுத்துக்களை எனது உரிமையில்லாமல் எடுத்துப் பதிக்கும் அவர்கள் அதற்கு நஷ்டஈடாக அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும்;இதிலிருந்து தப்பவேண்டுமானால் குறைந்தபட்சம் நாம் யாருடைய படைப்பை எடுத்தாளுகிறோமோ அல்லது மேற்கோள் காட்டி எழுதுகிறோமோ அதற்குரிய தொடுப்பைத் தருவது அவசியம் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்ளுகிறேன்;//

புகழ், பிழைப்பு, காப்பிரைட் போன்றவற்றை யார் நினைப்பார்கள்? உலகத்தாராகிய மனிதர்கள்தான் அவற்றில் மிகவும் கவனமாய் இருப்பார்கள். தங்களால் மற்றவர்களுக்கு பிழைப்பு புகழ் கிடைத்துவிடக்கூடாது, தங்களது பதிப்புகளுக்கு காப்பிரைட் எடுத்து தங்கள் பதிப்பைக் கொண்டு பிறர் ஆதாயம் செய்வதை சட்டப்படி தடுக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பது முழுக்க முழுக்க உலகத்தார்தான்.

ஏதோ தொடுப்பு தர வேண்டும், காப்பிரைட், நஷ்டஈடு என்றெல்லாம் துள்ளுகிறாரே சில்சாம், இவரைப் போலவா அன்றைய வேதாகம புத்தக ஆக்கியோன்கள் நினைத்திருந்தார்கள்? தங்களது எழுத்துக்களை யாரும் எப்படியும் பயன்படுத்தலாம், வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் (பிலி. 1:18) என்றே அவர்கள் நினைத்தனர்.

இந்த அற்பத்தனமான சில்சாமின் மனதில்தான் பிழைப்பு, புகழ், காப்பிரைட், நஷ்டஈடு என்பதுபோன்ற அற்ப சிந்தைகள் எழுகின்றன. இவரைச் சொல்லிக் குற்றமில்லை; இவர் ஆசானாகக் கருதி துதிபாடும் டிஜிஎஸ் எப்படி பிழைப்பையும் புகழையும் எண்ணினாரோ அதே எண்ணம்தான் அவரது சிஷ்யரான சில்சாமுக்கும் இருக்கும்.

அய்யா சில்சாம் அவர்களே! உங்கள் தயவில் எனது பிழைப்பு ஓடவேண்டியதில்லை. அதைவிட அவமானம் எனக்கு வேறெதுவும் இருக்கமுடியாது.

தேவதயவால் என் பிழைப்பு மிக திருப்தியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்பொருட்டு உங்களைப் போன்ற அற்பர்களின் தயவு எனக்கு கிஞ்சித்தும் தேவையில்லை. எனது பதிவுகளை உங்கள் தளத்தில் பதிக்கும்போது நீங்கள் அதற்கு எனது தளத்தின் தொடுப்பைத் தரவேண்டியதில்லை. தாராளமாக தொடுப்பு இல்லாமலேயே பதிக்கலாம். உங்களது எந்த செயலால் எனக்கும் சுந்தர் மற்றும் கோவை பெரியன்ஸ்க்கும் பிழைப்பு புகழ் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அச்செயல்களை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.

என்னைப் போலவே சுந்தரும் கோவை பெரியன்ஸ்-ம் உங்களால் பிழைப்பும் புகழும் கிடைப்பதை அருவருப்பாக நினைப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன். எனவே அவர்கள் சார்பாக அவர்களைக் கேட்காமலேயே நான் சொல்லுகிறேன்; உடனடியாக எங்களுக்கு புகழ் பிழைப்பு தரும் அனைத்து செயல்களையும் நிறுத்திவிடுங்கள்.

உங்கள் பிழைப்புக்காகவும் புகழுக்காகவும் எல்லாவற்றையும் செய்துவிட்டு, எங்களுக்குப் புகழும் பிழைப்பும் கிடைப்பதாகச் சொல்லும் உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? தேவபயம் என்பது உங்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாதா?

இத்தனை சொன்னபிறகும் எனது பதிவுகளை உங்கள் தளத்தில் வெளியிடத்தான் செய்வீர்கள் என்றால், ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

நான் காப்பிரைட், நஷ்டஈடு என்றெல்லாம் போவேனோ என சற்றும் அஞ்சவேண்டாம். தைரியமாக எந்தத் தொடுப்பும் இல்லாமல் பதிக்கலாம். எனது எழுத்துக்கள் எதுவும் எனது சொந்த போதனையல்ல. நானே வேதாகமத்திலிருந்து காப்பியடித்துதான் விஷயங்களைக் கூறுகிறேன். இப்படிப்பட்ட எனக்கு காப்பிரைட் தேவையில்லை.

சொந்தமாக போதிக்கிற உங்களுக்குத்தான் காப்பிரைட் எல்லாம் தேவை. அந்த ஆசையை மனதில் வைத்து புழுங்காதீர்கள். விரைவில் உங்கள் பதிவுகளுக்கு காப்பிரைட் எடுத்து, உங்களது மேலான பதிவுகளால் நானும் என் போன்றவர்களும் பிழைப்பும் புகழும் தேடிவிடாதபடி தடை செய்துவிடுங்கள்.

அய்யா சில்சாம்! இன்னும் பேசுங்கள். உங்கள் ஆத்திரங்களையெல்லாம் கொட்டுங்கள். அதன்மூலம் உங்கள் அடிமனதிலுள்ள ஆசைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளியரங்கமாகட்டும். அதன் பின்னராவது உங்களுக்குத் தாளம்போடுவோருக்கு புத்தி வருகிறதா எனப் பார்ப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


////ஒருபுறம் கிறிஸ்துவை ஆராதனை செய்வதாகக் கூறுகிற இவர்கள்: “மறுபுறம் கிறிஸ்துவின் வசனத்தை காலின் கீழ்போட்டு மிதித்து அவமதித்து, கண்டவனையும் போதகர்/பாஸ்டர்/குருவானவர்/பேராயர் எனச் சொல்வார்கள்; அவர்களைத் தலையில் தூக்கிவைத்து பேயாட்டமும் ஆடுவார்கள். அது மட்டுமல்ல, தங்களை போதகர்/பாஸ்டர்/குருவானவர்/பேராயர் என அறிவீனமான ஜனங்கள் சொல்வதை உளமாறக் கேட்டு மகிழ்ந்து பூரிப்பும் அடைவார்கள்.”////

நீங்கள் எந்த விதமான சபைக்கு போகிறீர்கள் என தெரியாது, போதகர்களிலும் ஊழியக்காரர்களிலும் சிலர் உண்மைத்தன்மையில்லாமல் ஊழியம் செய்வது மெய்தான், ஆனால் அதே சமயத்தில் உண்மையாய் ஊழியம் செய்யும் பல ஊழியக்காரர்கள், போதகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், உங்களது இந்த மோசமான விமர்சனம் ஊழியம் செய்யும் பலரை கொச்சைபடுத்துவதாக இருக்கிறது.அன்றைக்கு வெள்ளைக்கார மிஷனரிகள் நெல்லை சீமையில் வந்து ஊழியம் செய்திருக்காவிடில் நீங்களும் நெல்லையப்பருக்கு மணியடித்துக்கொண்டு தான் இருந்திருப்பீர்கள்.
கண்டவனும் பாஸ்டராகவோ, ஊழியக்காரனாகவோ தேவனுடைய பார்வையில் ஆகிவிட முடியாது, உள்மனதை ஆராய்கிறவர் கர்த்தர். எனவே உங்களது இந்த விமர்சனம் கண்டிக்கத்தக்கதே.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink Closed

ரிங்கல் தௌபே, சீகன்பால்கு, கானன் கேமரர், நாசரேத்து தந்தை மர்காஷியஸ், ராக்லாந்து, பிஷப் கால்டுவெல், நியூபிகின் போன்ற பலரும் வேதத்தையும், கிறிஸ்துவை அறிவித்ததாலேயே இன்றைக்கு நீங்கள் வேதத்தை ஆராய்ந்து இவ்வளவு பேசுகிறீர்கள். இவர்கள் கண்டவர்கள் தான்.... என்ன செய்ய. இவர்களையும், இவர்கள் போன்ற தியாக அர்ப்பணிப்பு உள்ள தற்கால போதகர்களையும் மதிப்பது தவறு அல்ல என்பது எனது கருத்து.

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

josephsneka wrote:
//
////ஒருபுறம் கிறிஸ்துவை ஆராதனை செய்வதாகக் கூறுகிற இவர்கள்: “மறுபுறம் கிறிஸ்துவின் வசனத்தை காலின் கீழ்போட்டு மிதித்து அவமதித்து, கண்டவனையும் போதகர்/பாஸ்டர்/குருவானவர்/பேராயர் எனச் சொல்வார்கள்; அவர்களைத் தலையில் தூக்கிவைத்து பேயாட்டமும் ஆடுவார்கள். அது மட்டுமல்ல, தங்களை போதகர்/
பாஸ்டர்/குருவானவர்/பேராயர் என அறிவீனமான ஜனங்கள் சொல்வதை உளமாறக் கேட்டு மகிழ்ந்து பூரிப்பும் அடைவார்கள்.”////

நீங்கள் எந்த விதமான சபைக்கு போகிறீர்கள் என தெரியாது, போதகர்களிலும் ஊழியக்காரர்களிலும் சிலர் உண்மைத்தன்மையில்லாமல் ஊழியம் செய்வது மெய்தான், ஆனால் அதே சமயத்தில் உண்மையாய் ஊழியம் செய்யும் பல ஊழியக்காரர்கள், போதகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், உங்களது இந்த மோசமான விமர்சனம் ஊழியம் செய்யும் பலரை கொச்சைபடுத்துவதாக இருக்கிறது.அன்றைக்கு வெள்ளைக்கார மிஷனரிகள் நெல்லை சீமையில் வந்து ஊழியம் செய்திருக்காவிடில் நீங்களும் நெல்லையப்பருக்கு மணியடித்துக்கொண்டு தான் இருந்திருப்பீர்கள்.
கண்டவனும் பாஸ்டராகவோ, ஊழியக்காரனாகவோ தேவனுடைய பார்வையில் ஆகிவிட முடியாது, உள்மனதை ஆராய்கிறவர் கர்த்தர். எனவே உங்களது இந்த விமர்சனம் கண்டிக்கத்தக்கதே.
//

எனது பதிவை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை சகோதரரே!

நான் ஊழியக்காரர்களைக் குறித்து எதுவும் எழுதவில்லை.

கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார் என கிறிஸ்துவே சொல்லியிருந்துங்கூட, அவரது அந்த வசனத்தைக் காலின் கீழ் போட்டு மிதித்துவிட்டு, கண்டவனையும் போதகர்/பாஸ்டர்/குருவானவர்/பேராயர் என அழைப்பவர்களையும் அவ்வாறு அழைக்கப்படுபவர்களையும்தான் நான் விமர்சனம் செய்துள்ளேன்.

அவ்வாறு அழைக்கப்படுபவர்கள் “மிகுந்த தியாகம் செய்த மிஷனரிகளாக” இருந்தாலும் அவர்களும் விமர்சனத்திற்குரியவர்களே. உண்மையில் அவர்கள்தான் அம்மாதிரி வேதத்திற்குப் புறம்பான செயல்களுக்கு வழிகாட்டிகள். அவர்களிலும்கூட பட்டப்பெயர் எனும் புகழுக்கு ஆசைப்பட்டவர்கள் உண்டு.

அவர்கள் மெய்யாகவே கிறிஸ்துவின் வசனத்தை மதித்திருந்தால், இந்த வசனங்கள் அவர்களை மனதை உறுத்தியிருக்கவேண்டும்.

மத்தேயு 23:8-10 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். Mal 1:6; 10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

இந்த வசனங்களால் உறுத்தப்படாமல், தங்களை போதகர், குரு, பிதா என பிறர் அழைப்பதை விரும்பி ஏற்றுக்கொள்வோரும், பிறரை அவ்வாறு அழைப்போரும் நிச்சயமாகக் கண்டிக்கப்படவேண்டியவர்களே.

கிறிஸ்துவின் சபையானது பேதுரு எனும் சீஷனாகிய கல்லின் மீதுதான் கட்டப்பட்டது (மத்தேயு 16:18). ஆனால் அந்தப் பேதுருவுங்கூட தவறுசெய்தபோது அதை பவுல் எனும் மெய்யான ஊழியர் கண்டிக்கவே செய்தார் (கலாத்தியர் 2:11-14).

எனவே மிஷனரியா அவரா இவரா என்ற வித்தியாசம் எனக்குக் கிடையாது. யார் வசனத்துக்குப் புறம்பாக நடந்தாலும் அதைக் கண்டித்து உணர்த்தவே செய்வேன். இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. ஏனெனில் நீங்களெல்லாம் “அப்பாவிகள்”. இதை நான் சொல்லவில்லை, உங்கள் அபிமான சகோதரர் சில்சாம்தான் சொல்கிறார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 18
Date:
Permalink Closed

சகோ. அன்பு அவர்களே

நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன (Matt 12:35-36)


அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.(Eph 5:4)


இந்த வசனங்களெல்லாம் தங்களுக்குத் தெரியாதா? மகன் வயதில் உள்ள ஒருவரை பேதை என்பதும் சிலரை மதியீனன், அறிவிலி என்பதும் வேதத்தின்படி தவறு என தங்களுக்குத் தெரியாதா?

வயதில் மூத்தவரான நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா?


அதைவிடுத்து பரிகாசமான வார்த்தைகளை பேசுவதும், மற்றவர்களை கிண்டலடிப்பதும் கர்த்தருக்கு பிரியமானவை என்று எபபடி நிறைக்கிறீர்கள்.








__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

josephsneha wrote:
//அன்றைக்கு வெள்ளைக்கார மிஷனரிகள் நெல்லை சீமையில் வந்து ஊழியம் செய்திருக்காவிடில் நீங்களும் நெல்லையப்பருக்கு மணியடித்துக்கொண்டு தான் இருந்திருப்பீர்கள்.//

இருக்கலாம் சகோதரரே! அதே வேளையில் என் மனச்சாட்சிப்படி சொல்கிறேன்; கல்லையும் மரத்தையும் கடவுளாகக் கருதி வழிபடும் ஒருவனாக நான் நிச்சயம் இருந்திருக்க மாட்டேன் என்றே நான் நம்புகிறேன். ஆகிலும் என்மீதான தேவசித்தம் எதுவோ அதன்படியே நான் இருந்திருப்பேன்.

நெல்லையப்பவருக்கு மணி அடிப்பவர்களெல்லாம் உங்களுக்கு மட்டமானவர்களாகத் தெரிகிறார்களா? ஏதோ நீங்கள் மட்டும்தான் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பீர்கள், மற்றவர்களெல்லாம் நரகத்தில் அமிழ்ந்து போவார்கள் என நினைக்காதீர்கள்.

இன்றும் அன்றும் இயேசுவையறியாதவர்களும், அறிய வாய்ப்பைப் பெறாதவர்களுமான புறஜாதியினர் என்ன ஆவார்கள் என வேதம் சொல்வதை சற்று கேளுங்கள், சகோதரரே!

ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.


இதெல்லாம் இப்போது உங்களுக்கு விளங்காது; “அப்பாவிகளான” உங்களுக்கு பவுல் சொன்ன பிரகாரம் நியாயத்தீர்ப்பு நாளில்தான் விளங்கும்.

ஏதோ இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்டதால் உங்களை மேட்டிமையாகவும் மற்றவர்களை அற்பமாகவும் கருதாதீர்கள். ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்ற வசனத்தையெல்லாம் நீங்கள் அறியவில்லை போலும் (மத்தேயு 21:31).

josephsneha wrote:
//ரிங்கல் தௌபே, சீகன்பால்கு, கானன் கேமரர், நாசரேத்து தந்தை மர்காஷியஸ், ராக்லாந்து, பிஷப் கால்டுவெல், நியூபிகின் போன்ற பலரும் வேதத்தையும், கிறிஸ்துவை அறிவித்ததாலேயே இன்றைக்கு நீங்கள் வேதத்தை ஆராய்ந்து இவ்வளவு பேசுகிறீர்கள். இவர்கள் கண்டவர்கள் தான்.... என்ன செய்ய. இவர்களையும், இவர்கள் போன்ற தியாக அர்ப்பணிப்பு உள்ள தற்கால போதகர்களையும் மதிப்பது தவறு அல்ல என்பது எனது கருத்து.//

மாயையான எந்த மனிதனையும் உயரே தூக்கவேண்டியதில்லை. அவரவர் அவரவருக்கு தேவன் வகுத்த திட்டத்தின்படி பணி செய்திருப்பார்கள். இதில் யாரும் மேன்மை பாரட்ட வழியில்லை. நாமும் யாரையும் உயர்த்தவேண்டியதில்லை. அதற்காக யாரையும் மதிக்கவேண்டாம் என நான் கூறவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஊழியர்களை நான் நேரில் பார்த்ததில்லை. அவர்களைக் குறித்த புத்தகங்கள் மூலமாக மட்டுமே அவர்களை நான் அறிவேன். இன்றுங்கூட நம் மத்தியில் பெரும்பாலான மனிதர்களால் போற்றப்படுகிற பலர் உண்டு. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள்தான் எனக் கூறமுடியுமா? நிச்சயம் முடியாது.

இன்று நன் கண்முன்னே காண்கிற ஊழியர்களில் பலரது குறைபாடுகளை உங்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் விமர்சிக்கத்தான் செய்கிறீர்கள். ஆனால் அவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிற விசுவாசிகள் அனேகர் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

அதுபோலத்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள அன்றைய மிஷனரிகளும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கோ எனக்கோ திட்டமாகத் தெரியாது. இந்நிலையில் அவர்களை நான் போற்றவும் மாட்டேன், தூற்றவும் மாட்டேன். நான் சொன்ன பிரகாரம், அவர்களில் யாரும் போதகர்/பாஸ்டர்/குரு/பிதா என அழைக்கப்பட்டிருந்தால், அல்லது பிறரை அழைத்திருந்தால் அவர்களும் கண்டிக்கப்படவேண்டியவர்களே.

இன்று நான் கிறிஸ்துவை அறிய அவர்கள் கருவிகளாக இருந்தனர் என்பதற்காக, வேதத்துக்குப் புறம்பான அவர்களின் செயல்களையெல்லாம் நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

//நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன (Matt 12:35-36)

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.(Eph 5:4)

இந்த வசனங்களெல்லாம் தங்களுக்குத் தெரியாதா? மகன் வயதில் உள்ள ஒருவரை பேதை என்பதும் சிலரை மதியீனன், அறிவிலி என்பதும் வேதத்தின்படி தவறு என தங்களுக்குத் தெரியாதா?

வயதில் மூத்தவரான நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா?//


அன்பான சகோதரரே!

தங்களின் வார்த்தைகளை நான் மதிக்கிறேன். யாரையும் பரியாசம் செய்யவேண்டும், நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. ஆனாலும் தேவவசனத்தை அவமாக்குகிற சிலர் மதியீனமாக செயல்பட்டு பரியாசமும் புண்படுத்துவதுமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, நான் தேவப்பணியை செய்வதற்கு இடறல் உண்டாக்கும்போது, வசனத்தின் மீதுள்ள வைராக்கியத்தின் காரணமாக, அவர்களின் பாணியை நானும் பின்பற்ற வேண்டியதாகிறது. இப்படிச் செய்யும்போது நானும் அவர்களைப் போல் மூடனாக உங்களுக்குக் காணப்படுவேன் என்பதில் சந்தேகமில்லை (நீதிமொழிகள் 26:4). ஆகிலும் என் செய்வது? அவர்கள் தங்கள் பார்வையில் ஞானியாகாதபடிக்கு (நீதி. 26:5) சில வேளைகளில் நானும் மூடனாகக் காணப்படத்தான் வேண்டியதுள்ளது.

பேதை, அறிவிலி எனும் வார்த்தைகளை நான் பயன்படுத்தின முகாந்தரத்தை சற்று நிதானித்துப்பாருங்கள் சகோதரரே! அந்தந்த சூழ்நிலைகளில் அது அவசியமானதாகத்தான் இருந்திருக்கும். இப்படி அழைப்பது வேதாகமத்தின்படி தவறாக எனக்குத் தோன்றவில்லை. தகுந்த முகாந்தரமின்றி யாரையாவது அப்படி நான் சொல்லியிருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்.

1 ராஜாக்கள் 18:27-ஐப் படித்துப் பாருங்கள். தேவன் மீதுள்ள வைராக்கியத்தால், பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா பரியாசம் செய்தார். அதேவிதமான பரியாசத்தைத்தான் நானும் செய்கிறேன். ஆகிலும் தற்போது நீங்கள் சுட்டிக்காட்டுவதால், எனது எழுத்துக்களை நான் ஆய்வு செய்து பார்க்கிறேன். நீங்களும், நான் பரியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தின பதிவை மேற்கோள் காட்டி தெரிவித்தால் என்னை நான் திருத்தவும் உதவும், எனது நியாயத்தை நான் எடுத்துரைக்கவும் உதவும்.

இறுதியாக, சில்சாம் பற்றி ஒரேயொரு விஷயம்.

அவரது தளத்தின் ஒரு பதிவை என் தளத்தில் பதித்து, தொடுப்பைத் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை கீழ்த்தரமாக எழுதியுள்ளார் என்பதை நீங்கள் படித்தீர்கள் அல்லவா? இதேபோல்தான் தேவையின்றி பல விஷயத்திலும் கீழ்த்தரமாக எழுதி, இடறல் செய்கிறார். எனவேதான் அவரது பாணியில் நானும் சற்று சொல்லவேண்டியதாகிறது.

அவரது பதிவுக்கு தொடுப்பைக் கொடுக்கவேண்டுமெனில், “தொடுப்பைக் கொடுங்கள்” என ஒரு வரியில் சொல்ல வேண்டியதுதானே? அதைவிடுத்து என்னென்னவோ எழுதி அவர் level-க்கு என்னையும் எழுத வைத்துவிட்டார். மற்றபடி, என் இயல்புப்படி நான் இப்படியெல்லாம் எழுதுபவனல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink Closed

நெல்லையப்பருக்கு மணியடிப்பவர்களை நான் மட்டமாக நினைக்கவில்லை, சொல்லப்போனால் புறஜாதியினரில் தான் எனக்கு உயிர் நண்பர்கள் அதிகம். ஆனால் அவர்களுக்காவது கிறிஸ்திவை பற்றிய சில அடிப்படைகள் தெரியும் (உபயம்: மாஸ் மீடியா, துண்டு பிரதிகள், கூட்டங்கள், இன்ன பிற‌...ஏன் கிறிஸ்தவர்கள் மூலமாக கூட தான்) ஆனால் வெள்ளைக்கார மிஷனரிகள் பலர் வந்திருக்காவிடில் சுவிஷேஷமே நமக்கு தெரிந்திருக்காது
இதை உறுதியாக கூறும் பொருட்டே அவ்வாறு சொல்லவேண்டியதாயிருந்தது, அதை வைத்து நீங்களாக ஒரு கற்பனைக்கு வந்து, புறஜாதியாரை அற்பமாக எண்ணுவதாக கூறுகிறீர்கள், இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink Closed

சில்சாம் எங்களை அப்பாவி என்றார், அதற்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள், அதற்காக ஒவ்வொரு முறையும் அப்பாவிகள் என பகடி செய்து கொண்டிருக்காதீர்கள், அதை நான் விரும்பவில்லை...

__________________


Veteran Member

Status: Offline
Posts: 66
Date:
சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


சகோ. அன்பு அவர்களே தாங்கள் தலைப்பில் யாரை  குறிப்பிட்டு எழுதுகிறீர்களோ அவரை பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன். அவர் மற்ற எல்லா சகோதரர்களும் அவருடைய  கருத்துக்குள் இழுத்திருந்தாலும் தங்கள் பதிவுகளை குறித்த  கருத்துக்களுக்கு மட்டும் பதில் கொடுப்பதே சிறந்தது. சகோ. ஜோசப்சிநேகா அவர்களின் பதிவின் அடிப்படையில் இதை சொல்கிறேன்
 
"நான் எப்படி வேண்டுமானாலும் எல்லோரையும் தரக் குறைவாக விமர்சிப்பேன்" என்ற அகங்கார போக்கில் விமர்சித்து, முதல் முதலில் இப்படியொரு தரக்குறைவான விவாதத்க்கு தூபம்போட்டவரை,  "அவர் எப்படிப்பட்டவர்" என்பதை அவருடைய பதிவுகளை படித்து ஆராயாமல், "நமது கருத்துக்கு ஒத்தவர்" என்ற காரணத்துக்காக அவருக்கு துணைபோவது "துன்மார்க்கனுக்கு துணை போகுதல்" ஆகிவிடும்  என்பதை கருத்தில்கொள்ளும்படி
மற்ற சகோதரர்களை கேட்டுகொள்கிறேன்
.


-- Edited by SUNDAR on Friday 18th of February 2011 12:23:32 PM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்
Permalink Closed


josephsneha:
//நெல்லையப்பருக்கு மணியடிப்பவர்களை நான் மட்டமாக நினைக்கவில்லை, சொல்லப்போனால் புறஜாதியினரில் தான் எனக்கு உயிர் நண்பர்கள் அதிகம். ஆனால் அவர்களுக்காவது கிறிஸ்திவை பற்றிய சில அடிப்படைகள் தெரியும் (உபயம்: மாஸ் மீடியா, துண்டு பிரதிகள், கூட்டங்கள், இன்ன பிற‌...ஏன் கிறிஸ்தவர்கள் மூலமாக கூட தான்) ஆனால் வெள்ளைக்கார மிஷனரிகள் பலர் வந்திருக்காவிடில் சுவிஷேஷமே நமக்கு தெரிந்திருக்காது
இதை உறுதியாக கூறும் பொருட்டே அவ்வாறு சொல்லவேண்டியதாயிருந்தது, அதை வைத்து நீங்களாக ஒரு கற்பனைக்கு வந்து, புறஜாதியாரை அற்பமாக எண்ணுவதாக கூறுகிறீர்கள், இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.//

நான் சில்சாமின் மதியீனங்களை எடுத்துரைத்தபோது தேவையில்லாமல் மிஷனரிகளைக் குறித்து நீங்கள் சொல்லி, அவர்கள் இல்லாவிடில் நான் நெல்லையப்பருக்கு மணி அடித்துக் கொண்டிருப்பேன் என பரியாசம் கலந்து எழுதினது நீங்கள்தான்.

மிஷனரிகள் இல்லாவிடில் நான் நெல்லையப்பருக்கு மணியடித்துக்கொண்டுதான் இருப்பேன் என உங்களால் திட்டமாகச் சொல்லமுடியுமா? இன்று இயேசுவையறியாத அனைவரும் நெல்லையப்பருக்கு மணி அடித்துக்கொண்டா இருக்கிறார்கள்? உண்மையில் உங்கள் கூற்று தவறானது.

மிஷனரிகள் இல்லாவிடில் நீங்கள் இயேசுவை அறிந்திருக்கமாட்டீர்கள் என நளினமாகச் சொல்வதை விட்டுவிட்டு, பரியாசம் கலந்த தொனியில் எழுதினால், எனது பதில் அப்படித்தான் இருக்கும். நீங்கள் அளக்கிறபிரகாரமாகத்தான் உங்களுக்கு அளக்கப்படும்.

முதலில் நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள், நானும் பதில் விமர்சனங்களை எடுத்துவிடுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink Closed

josephsneha wrote:
//சில்சாம் எங்களை அப்பாவி என்றார், அதற்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள், அதற்காக ஒவ்வொரு முறையும் அப்பாவிகள் என பகடி செய்து கொண்டிருக்காதீர்கள், அதை நான் விரும்பவில்லை...//

உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன் சகோதரரே!

சில்சாமினிமித்தம் உங்களை மீண்டும் மீண்டும் அப்படி அழைத்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன். ஆகிலும், அப்படி எழுதின சில்சாம் உங்களுக்குத் தெரியாத யாரோ அல்ல; எனவே அவரையும் நீங்கள் சற்று கடிந்து கொண்டிருந்தால் உங்கள் நேர்மையை நான் புரிந்துகொண்டிருப்பேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 33
Date:
Permalink Closed

புறஜாதியினரை நான் அற்பமாக எண்ணுவதாக நீங்கள்  எழுதியதில் பரியாசம் எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் சில்சாம் அவர்களின் பதிவு சம்பந்தமாக எழுதியதில் "அப்பாவிகள்" என மறுபடியும் மறுபடியுமாக ஏளனம் செய்ததை தான் நான் விரும்பவில்லை என்றேன்

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard