மூலபாஷை அறிந்த விரிவுரையாளர் ஒருவருடன் இவர் தொலைபேசி மூலம் தொடர்பு உண்டாக்கித் தருவாராம்; அவரிடம் மூலபாஷை பற்றி நான் கதைக்கவேண்டுமாம்; அதை அவர் இணைய தளத்தில் வெளியிடுவாராம்.
இதன்மூலம் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்பதுதான் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் மூலபாஷையை முற்றும் கற்றறிந்த நிபுணன் என ஒருபோதும் சொல்லவில்லை; ஆங்கிலத்தில்கூட நான் புலமைவாதியல்ல; இத்தனை ஏன், தமிழில்கூட நான் பெரிய அறிஞன் அல்ல.
எந்த மொழியாயினும் தேவன் எனக்குக் கொடுத்த வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவற்றை ஆராய்ந்து, எனது விளக்கங்களைத் தருகிறேன், அவ்வளவே. அவ்விளக்கங்கள் கொல்வினுக்குத் தவறாகத் தோன்றினால் அவர் எனது தவறை தாராளமாக எடுத்துரைக்கலாம்; அல்லது கொல்வின் சொல்கிற “விரிவுரையாளர்” எனது தவறை எடுத்துச் சொல்லலாம். ஒருவரது விளக்கங்கள் நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது அதை நிராகரித்து விடலாம். மாறாக, ஒருவருக்கொருவர் சவால் விடுவதற்கு என்ன இருக்கிறது? இவரது சவால், இவரது ஆணவத்தையே காட்டுகிறதேயன்றி, வேதத்தின் கருத்துக்களை ஒருவரோடொருவர் பரிமாறி கற்றுக்கொள்ளும் தாழ்மையைக் காட்டவில்லை.
சவால் என்றாலே அங்கு ஆணவம்தான் இருக்குமேயொழிய அடக்கம் இருக்காது. சவால் விடுவதென்பது சாத்தானின் குணம். அவன்தான் இயேசுவிடம் வந்து, “வேதவசனம் இப்படிச் சொல்கிறதே, அப்படிச் சொல்கிறதே” என்று சொல்லி சவால் விட்டு, அச்சவாலை ஏற்றுக்கொள்ளும்படி இயேசுவை நிர்ப்பந்தித்தான். ஆனால், இயேசுவோ சாத்தானின் சவாலை ஏற்றுக்கொள்ளாமல், வேதாகமம் இப்படியும் சொல்கிறதே எனச் சொல்லி சாத்தானின் வாயை அடைத்தார்.
என்னிடம் சவால் விடும் கொல்வினுக்கு நானும் வேதவசனத்தையே பதிலாகத் தருகிறேன்.
1 கொரிந்தியர் 8:1,2 அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
கொல்வின் சொல்கிற “விரிவுரையாளர்” மூலபாஷையில் என்னைவிட மேன்மையுள்ளவராக தாராளமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அதற்காக அவர் சொல்வதுதான் சரியாக இருக்கவேண்டும் என்ற அவசியமுமில்லை, அவர் சொல்வதை எல்லோரும் ஏற்கத்தான் வேண்டும் என்பதுமில்லை.
வேதாகமம் நம் தாய்மொழியில் கொடுக்கப்படவில்லை; எந்தவொரு ஆக்கமும் மொழிமாற்றம் செய்யப்படுகையில், அதன் மூலக்கருத்து சிதைவதற்கு நிறையவே வாய்ப்புண்டு. எனவே என்னால் இயன்றவரை மூலபாஷை அர்த்தங்களை ஆராய்ந்து தெளிவைப் பெற்று, அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். எனக்குத்தான் மூலபாஷை நன்கு தெரியும் என்ற எண்ணம் எனக்கு சற்றும் கிடையாது.
PC Study Bible எனும் Bible Software மூலம், மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தங்களை ஆங்கிலத்தில் அறிந்து, அதை தமிழுக்கு மொழியாக்கம் செய்து விளக்கம் தருகிறேன். அப்படி இதுவரை நான் தந்த விளக்கங்களில் ஏதேனும் தவறு உண்டு என கொல்வின் கூறுகிற “விரிவுரையாளர்” கருதினால், அதை தக்க ஆதாரத்துடன் தாராளமாக சுட்டிக்காட்டலாம். அவர் சொல்வது சரியாக எனக்குத் தோன்றினால், நிச்சயம் எனது தவறை ஒத்துக்கொண்டு அதை பகிரங்கமாக அறிக்கையிடுவேன்.
மற்றபடி, வேதாகமத்தைப் பொறுத்தவரை “சவால், சவடால்” இதையெல்லாம் நான் ஊக்குவிப்பதில்லை.
கொல்வினுக்கு ஒரு கேள்வி:
மூலபாஷை குறித்து சவால் விட்டு கதைக்குமளவு ஒரு விரிவுரையாளரை தன் கைவசம் வைத்துள்ள நீங்கள், இதுவரை நான் தந்துள்ள ஏராளமான மூலபாஷை விளக்கங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள தவறை உங்கள் “விரிவுரையாளர்” மூலம் எடுத்துக் காட்டலாமே! அதை விடுத்து, நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற போட்டி எதற்கு?
கொல்வினுக்கு மற்றுமொரு கேள்வி:
எனது மூலபாஷை விளக்கங்களை ஏற்பதுதானே உங்களுக்கு சிரமமாயுள்ளது? பின்வரும் வசனங்களுக்கு நான் மூலபாஷை பக்கமே செல்லவில்லை; தமிழ் வசனங்களின் கருத்தை வார்த்தைக்கு வார்த்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.
1 கொரிந்தியர் 8:6,7 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
எபிரெயர் 8:1-6 பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
இவ்வசனங்களுக்கு நீங்கள் தருகிற விளக்கமென்ன? குறிப்பாக எபிரேயர் ஆக்கியோன் கூறுகிற பிரதான ஆசாரியர் யார்? அவர் பரலோகத்தில் யாருக்கு ஊழியஞ்செய்கிறார்? அவர் செய்கிற ஆசாரிய ஊழியம் என்பது என்ன? அறிய மிகவும் ஆவலாயுள்ளேன்.
//இவர் ஒரு முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரின் பெயர் விபரங்களுடன் இந்த வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ளார் என எழுதலாமா? அதுவும் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடலாமா? இல்லை நி்ச்சியமாக அப்படி செய்ய முடியாது. கணக்கிலக்கத்தை வெளியிடவில்லை என சொல்வது சப்பை நியாயம். சகோ. அன்பு அவர்களே இதையாவது கண்டிக்க முன்வருவீர்களா? ஏனென்றால் நீ்ங்கள் ஒரு முன்னால் வங்கி ஊழியர் அல்லவா? ஏன் செய்யவில்லை.//
கொல்வின் அவர்களே!
ஒரு வங்கி ஊழியர், வங்கி வாடிக்கையாளரின் கணக்கு பற்றிய விபரங்களை வங்கி ஊழியர் என்ற வகையில் அறிந்து அதை வெளிப்படையாக அறிவித்தால்தான் அது வங்கி சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். மற்றபடி, ஏ என்பவர் தனிப்பட்ட முறையில் பி என்பவரிடம் தனது வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை தந்திருந்து, அதை ஒரு சந்தர்ப்பத்தில் பி என்பவர் வெளிப்படையாக அறிவித்தால் அது சட்டப்படி குற்றமாகாது. (ஏனெனில் அது ஏ-க்கும் பி-க்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனை)
ஆகிலும், ஏ-ன் விருப்பத்திற்கு மாறாக பி அவ்வாறு செய்திருந்தால், தார்மீக அடிப்படையில் பி என்பவர் ஏ-க்கு எதிராக தவறிழைத்தவராவார்.
சில்சாம்-பெரியன்ஸ் - ஐப் பொறுத்தவரை, தார்மீக அடிப்படையில் பெரியன்ஸிடம் நியாயம் பெறுகிற தகுதியை சில்சாம் இழந்துவிட்டார். ஏனெனில் ஏற்கனவே தார்மீக அடிப்படையில் மட்டுமின்றி சட்டப்படியுங்கூட பெரியன்ஸ்-க்கு எதிராக சில்சாம் குற்றமிழைத்துள்ளார்.
எனவே தார்மீக அடிப்படையில் (சில்சாமால் பாதிக்கப்பட்டவரான) பெரியன்ஸை கண்டிக்க எனக்கு உரிமையில்லை.
//தயவு செய்து மூலபாஷை விவாதத்திற்குரிய சம்மதத்தையாவது தெரிவிப்பீர்களா? விரைவில் இதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும். பலதடவை கேட்டுவிட்டேன். உங்களுக்கு மூலபாஷை தெரியும் அல்லவா? பின் ஏன் பின்டிக்கிறீர்கள்? இத்துடன் 10 தடவைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். முடியாது எனில் முடியாது என்ற சொல்லி விடுங்கள் பதில் தராது இருக்க வேண்டாம்.//
\\வரிக்கு வரி பெரியன்ஸ் அவர்களை வெறியன் என அழைத்துக்கொண்டும் அல்லது அம்மாதிரி அழைப்பவர்களுக்கு தாளம் போட்டுக்கொண்டும் இருக்கிற யௌவன ஜனம் தள உறுப்பினர்களில் எவருக்கும் சோல் சொல்யூஷனை தட்டிக்கேட்க உரிமையில்லை.\\
சகோ. பெரியன்ஸ் மட்டும் எப்படி எழுகிறார் என நினைக்கிறீர்கள். ஆரம்பத்தில் அவருக்கு எதிராக எதுவும் எழுதாத நிலையில் என்னையும் சகோ. ஜோனையும் வசைபாடியவர்தான் அவர். நீங்கள் அந்த நேரம் எங்கே போயிருந்தீர்கள். ஒழுங்க நெறி பற்றி கதைக்க உங்களுக்கு தகுதியில்லை. அதேபோல் எனக்கும் தகுதியில்லை. உங்கள் தளத்திலும் சகோ. ராஜ்குமார். சகோ. சில்சாமிற்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளை பாவித்துள்ளீர்கள். நானாவது பகிரங்க மன்னிப்பு கோரினேன். ஆனால் நீங்கள் ......?
சகோ. அன்பு எழுதியது
\\சோல் சொல்யூஷனின் வார்த்தைகளை நான் ஆதரிப்பதாக யாரும் கருதவேண்டாம். ஆனால் அவரைக் குற்றஞ்சாட்டுபவர்கள் தாங்கள் சாக்கடைக்குள் முங்கிக் கிடப்பதை அறியத் தவறியது ஏனோ என்பதுதான் எனது கேள்வி..\\
அப்போதும் சரி எப்போதும் சரி நீங்கள் உங்களை சார்ந்தவர்கள் யாரையும் எப்போதும் கண்டிப்பதில்லை. மாற்றுதள நண்பர்களையே கடிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கண்டிக்க வேண்டும் என நாங்கள் நினைப்பது பெரும் ம்டமை. சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே காட்டுகிறேன். உங்கள் நேர்மை மிக மெச்சத்தக்கது.
சகோ. அன்பு எழுதியது
\\ராஜ்குமாரை பேதையர் என நான் சொன்னதை சுட்டிக்காட்டும் கொல்வின், அவர் என்னை பிசாசு எனச் சொன்னதை வெளியரங்கமாக தட்டிக்கேட்க மாட்டாராம்; மின்னஞ்சல் மூலம் இரகசியமாக தட்டிக்கேட்பாராம்; அதில் நாம் திருப்திபடவேண்டுமாம்.\\
மகனை விட குறைந்த வயதில் இருக்கும் ஒருவரை தாரளமாக திட்டுவீர்கள் பேதையர் என்பீர்கள். அது உங்களுக்குத் தவறில்லை. பேதையர் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு பெண்கள் என்றும் பொருள் வரும். ஒரு ஆண்மகனை பார்த்து இந்த வார்த்தையை கூற உங்களுக்கு வெட்கமில்லையா? வெளியரங்கமாக நான் தட்டிக் கேட்டிருந்தால் நீங்கள் மற்றவர்களை தட்டிக் கேட்டிருப்பீர்களா? தெரியமால்தான் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஒரு பதிவையாவது சுட்டிக் காட்டுங்களேன்
சகோ. அன்பு எழுதியது
கொல்வின் வேண்டுமானால் வசந்தகுமாரின் ஆக்கங்களுக்கும் யெகோவா சாட்சியினர் ஆக்கங்களுக்கும் ரசிகராக இருக்கலாம், அவற்றை அவர் refer பண்ணலாம், copy பண்ணலாம். என்னைப் பொறுத்தவரை வேதபுத்தகம் ஒன்று மட்டுமே எனக்கு reference. சொல்வினுக்காக எந்த reference-ஐயும் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் எழுதியதி எந்தக் கருத்து வேதாகமற்கு வெளியேயுள்ளது என்பதை தனியே குறிப்பிட்டு கொல்வின் கேட்டால் அவருக்கு தகுந்த விளக்கம் தரப்படும். ஆனால் நான் நிச்சயமாகச் சொல்வேன், எனது கருத்துக்கள் யாவும் வேதபுத்தகத்திற்கு உள்ளே உள்ளதுதானேயொழிய அதற்கு வெளியே உள்ளது அல்ல.
மீண்டும் சொல்லுகிறேன். மூலபாஷை என்று வரும்போது கண்டிப்பாக குறிப்பிடப்பட வேணடும். மூலபாஷையின் அர்த்தம் போட்டா தமிழவேதாகமத்தை அச்சடித்துள்ளார்கள். நீங்கள் இதுதான் சரியான அர்த்தம் என்கிறீர்கள். நான் அதற்குரிய Reference கேட்பதில் என்ன தப்பு? தேவன் அனைத்தையும் அறிந்துள்ளார் ஆனால் எல்லாவற்றையும் அறிய முயற்சிப்பதில்லை என்ற பல இடங்களில் எழுதி வருகிறீர்கள் இதற்கு என்ன வசன ஆதாரம் வைத்துள்ளீர்கள். மற்றும் நான் சகோ. வசந்தகுமாரின் ஆக்கங்களை மட்டும் அல்ல இலங்கை வேதாகமகல்லூரி, சத்திய வசன வெளியீடுகள் அனைத்தையும் வாங்கிப் படிப்பவன். இந்தியாவிலிருந்து வெளிவரும் சகோ. ஸ்டேன்லி, சகாரியாபூணன் இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் ஆக்களை வாசிப்பவன். தயவு செய்து இருவர் மூவருடன் மட்டும் மட்டுப்படுத்தாதீர்கள். தனது தளத்தில் மற்றவற்றைய ஆக்கங்களையும் பதித்துள்ளேன். மற்றும் நான் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளின் அபிமானி என்பதும் உண்மைதான். நான் ஒருபோதும் இதை சொல்வதற்காக வெட்கப்படுவதில்லை. அவர்களின் நூல்கள், சஞசிகைளின் பாதிப்புகளே உங்கள் ஆக்கங்களில் தெரிகிறது. சிலவற்றை தவிர
உ-ம் தேவதூதனுக்கு கால் இல்லை
தேவன் அனைத்தையும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முயற்சிப்பதில்லை
சகோ. அன்பு எழுதியது
\\அபாண்டமாக என்னைக் களவாடியவர் எனக் குறிப்பிட்ட கொல்வினின் செயல் வியப்பிற்கிரியதல்ல. அவர் உட்கார்ந்திருக்கிற இடம் அப்படி; அந்த இடத்திலிருந்து பேசுபவர்களுக்கு தானாக அதன் குணம் ஒட்டிக்கொள்ளும்.\\
உங்கள் தளத்திற்கு வந்த எங்களை சில்சாமிற்கு முகாந்திரம் செய்வோர் இங்கு பதிவுகளை தரவேண்டாம் என முகத்தில் அறைந்தமாதிரி பதிவு போட்டுவி்ட்டு ஒன்றுமே தெரியாவதர் போல் கதைக்க வேண்டாம். உங்களை விட எனக்கு நண்பர் கோவைபெரியன்ஸ் உயர்ந்தவர் எனக்கு அப்படி அவர் வரவேண்டாம் என்ற எங்கும் சொல்லவில்லை.
களவாடியதை களவாடியது என்றுதான் சொல்ல முடியும். ரசல் எடுத்தாண்ட போதனைகள் என்ன என்பதையும் ஆதாரத்துடன் பதிந்தேன். இவர் மூலபாஷை தெரியாது நீதிமன்றத்தில் கண்டிக்ப்பட்டதையும் இன்றொரு தலைவரும் இதே குற்றத்திற்காக கண்டிக்கப்பட்டதையும் அறிய மாட்டீர்களா? அவர்களின் குணம்தான் உங்களுக்கு.
குறைந்தபட்சம் மூலபாஷை விடயத்திலாவது நேர்மையாக இருங்கள். அந்த மொழியில் உங்களுக்கு பாண்டித்தியம் இல்லை என ஒப்புக் கொண்டிர்கள் அல்லவா? அப்படியென்றால் பின்பற்றக்கூடிய நடைமுறை எதுவென தாங்கள் அறியாததா? இருந்தும் ஏன் அப்படி செய்தீர்கள்//
இவரது ஒவ்வொரு அறிவீனமான குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக பதில் சொல்ல எனக்கு நேரமுமில்லை, அவசியமுமில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால் ராஜ்குமாருக்குத் துணையாக இவரும் ஒரு பேதையராகிவிட்டார் என்று சொல்லலாம். பேதையர் என நான் சொன்னது, நீதிமொழிகள் 14:15,18 குறிப்பிடுகிற புத்தியீனன் என்ற அர்த்தத்தில் மட்டுமே. இதற்கு இணையாக மதியீனன், அறிவீனன் என்ற சொற்களையும் சொல்லலாம். ஆனால் பேதையரான கொல்வின் சொல்வது போன்று “பெண்கள்” என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. அந்த அர்த்தம் எனக்குத் தெரியவும் தெரியாது.
ஆகிலும், பெண்கள் என்ற அர்த்தத்தில் ராஜ்குமாரை “பேதையர்” என நான் சொன்னால்கூட அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் என்னை பிசாசு எனச் சொன்ன அவரை எந்தவொரு வார்த்தையாலும் வர்ணிக்க எனக்கு தார்மீக உரிமையுள்ளது.
So Mr.colvin, you shut up your idiotic mouth and keep quiet. It is none of your business to interfere between me and Rajkumar.
இனி, எனது வேதாகமக் கருத்து பற்றி மட்டும் விவாதிக்க விரும்பினால் விவாதிக்கவும். மற்ற எவரோடுள்ள எனது தனிப்பட்ட உறவு விமர்சனம் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவேண்டாம். அதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.