மிகவும் சரியாக தான் எழுதியிருக்கிறார்!! கிறிஸ்து விரோதி என்பதை விட கிறிஸ்துவை போல் என்பது இன்னும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! கிறிஸ்து விரோதி என்றால் அனைவருக்கும் தெரிந்து விடும் அவன் அல்லது அது என்னவென்று, ஆனால் அவனை அல்லது அதை குறித்து வேதத்தில் வாசிப்போமென்றால்,
II தெசலோனிக்கேயர் 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
அவன் எதிர்த்து நிற்கிறது கிறிஸ்துவின் போதனைகளையும், ஆராதனைமுறமைகளையுமே!! அடுத்த வரி சொல்லுகிறது, அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் என்றால் அவனை எப்படி கிறிஸ்து விரோதி என்று எழுதுவது!! கிறிஸ்துவை போல் அல்லது கள்ள கிறிஸ்து என்றால் கூட சரியாக தான் இருக்கும்!! அந்தி என்பது மாலை என்கிற அர்த்தம் தான்!! ஆங்கிளத்தில் ''' என்பதை நம் தமிழ் வேதாகம மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே அந்தி என்று எழுதிவிட்டார்கள்!! சொன்னால் சில தமிழ் ஆர்வலர்களும் இந்த வேதத்தை மாத்திரமே கைகளில் வைத்து புரட்டிக்கொண்டிருக்கும் சிலர் இந்த மொழிப்பெயர்ப்பு வானத்திலிருந்து வந்து இறங்கியது என்று குதிப்பார்கள்!!
இது போன்ற அநேக தவறுகள் மொழிப்பெயர்ப்புகளில் இருந்தாலும் அதை மாற்றுவதாக இல்லை, கேட்டால் ஒரு புள்ளியாவது இதிலிருந்து மாற்ற கூடாது என்கிற சப்பை பாட்டு பாடுவார்கள்!! அப்பேற்பட்ட கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பே தனது அடுத்த பதிவில் இத்துனை தவறுகள் இருந்தது என்று திருத்திக்கொண்டார்கள், ஆனால் நம் தமிழ் வேதாகம் மாத்திரமே அதை அப்படியே அந்த தவறுகளுடன் தொடர்ந்து பதித்து வருகிறது!! இதை கைகளில் வைத்துக்கொண்டு சிலர் வேண்டாத வாக்குவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்!!
பல மொழிப்பெயர்ப்புகளை பார்க்கும் நாம் இதை புரிந்துக்கொள்ள முடியும், ஆனால் தமிழில் உள்ள பரிசுத்த வேதாகமம் மாத்திரம் (ஏனென்றால் தமிழ் இதை தவிர இருக்கும் எல்லா மொழிப்பெயர்ப்புகளும் தவறாம்) வைத்திருப்பவர்கள் அதை அதே அர்த்தத்தில் வாசித்து கள்ள உபதேசங்களை பறப்பி வருகிறார்கள்!!
Original Word: ἀντίχριστος, ου, ὁ Part of Speech: Noun, Masculine Transliteration: antichristos Phonetic Spelling: (an-tee'-khris-tos) Short Definition: antichrist Definition: antichrist, either one who puts himself in the place of, or the enemy (opponent) of the Messiah.
500antíxristos (from 473/antí, "opposite to, in place of" and 5547/Xristós, "Christ") – properly, opposite to Christ; someone acting in place of (against) Christ; "Antichrist."
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//கிறிஸ்து விரோதி என்பதை விட கிறிஸ்துவை போல் என்பது இன்னும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!//
சகோதரர் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது. ஆனால் ஒரு ஆளை “கிறிஸ்துவை போல்” எனச் சொல்ல முடியாதே. நான் யோசித்ததில் “போலி கிறிஸ்து” என்ற பட்டம் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
சகோ.பெரியேன்ஸ்:
//அவன் எதிர்த்து நிற்கிறது கிறிஸ்துவின் போதனைகளையும், ஆராதனைமுறமைகளையுமே!! //
சகோதரரே! தங்கள் கருத்தை சில உதாரனத்துடன் சொல்லலாமே.