இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வமா எனும் கேள்விக்கு சகோ.ஜோசப் நீண்டதொரு கட்டுரை வடிவில் பதில் தந்துள்ளார். PDF File-ஆக அவர் தந்துள்ள அக்கட்டுரையை, பகுதி பகுதியாகப் பிரித்து, அவரது சார்பாக இங்கு நான் வெளியிடுகிறேன்.
இக்கட்டுரையின் கருத்து எனது கருத்தல்ல, அதை நான் முழுமையாக ஏற்கவுமில்லை. இக்கட்டுரையை முழுமையாக இங்கு பதித்தபின்னர் எனது கருத்தை/விமர்சனத்தை தெரிவிப்பேன்.
இக்கட்டுரை குறித்து கருத்து/விமர்சனம் தெரிவிக்க விரும்பும் பிற அன்பர்களும், இக்கட்டுரை முழுமையாக வெளியிடப்படும்வரை பொறுத்திருக்க வேண்டுகிறேன்.
ஒவ்வொரு தளத்தின் பதிவுகளையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். நேரமில்லாத காரணத்தால் என்னால் எழுதுவதற்கோ, கருத்து கூறுவதற்கோ முடியாமல் போகிறது.
உங்களைக் குறித்து எனக்கு நல்ல மதிப்பு உண்டு. ஒரு சில சந்தேகங்களுக்கு வேதவசனங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை. மிகவும் கண்ணியமான முறையில் வாதம் செய்கின்றீர்கள். மற்றவர்கள் டென்ஷன் ஆனாலும், உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கினாலும், நீங்களோ கோபத்தை வார்த்தையில் காட்டாமல் நிதானமாக வாதத்தை தொடர்ந்து நடத்தும் முறை எனக்கு பிடித்தமான ஒன்று. அனேக தலைப்புகளில் நீங்கள் கோவை பெரியன்ஸ் அவர்களோடு அருமையாக வாதிட்டிருக்கின்றீர்கள், விளக்கியிருக்கின்றீர்கள். வேதத்தைக் குறித்ததான உங்கள் அறிவு பாராட்டத்தக்கது.
என்ன!! ”கிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பு”, ”இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவமன்னிப்பு”, ”இயேசுவின் நாமத்தில் உள்ள வல்லமை” இதுபோன்ற சத்தியங்களைக் காட்டிலும் கர்த்தருடைய வார்த்தையின்படி நடப்பதுதான் முக்கியம் என்று மிகைப்படுத்தி கூறுவீர்கள். உண்மைதான் ஒருவன் இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லியும் கர்த்தருடைய வார்த்தையின்படி நடக்கவில்லையென்றால் எந்தவித பிரேயாஜனமுமில்லை. அதேசமயத்தில் இரட்சிக்கப்படாத ஒருவனால் கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ள முடியாதே. ஏனெனில் வேதம் சொல்லுகிறது இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் மரித்த நிலையில் இருக்கின்றார்கள். ஆகவே முதலாவது அவர்கள் உயிர்ப்பிக்கப்பட/இரட்சிக்கப்பட வேண்டும். பின்பு கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொள்ளுவதைப்பற்றி போதிக்க வேண்டும். எனேவதான் எல்லா நிருபங்களிலும் முதலாவது தேவனுடைய இரட்சிப்பின் மேன்மையைப் பற்றி சொல்லிவிட்டு பின்பு தேவனுடைய வார்த்தையின்படி நடப்பது குறித்து சொல்லப்பட்டிருப்பதைக் காண முடியும். மாட்டை வண்டிக்கு முன்னால்தான் கட்ட வேண்டும், பின்னால் கட்டக்கூடாது. மீறி பின்னால் கட்டினால் வாழ்க்கைப் பயணம் மிகவும் கஷ்டமான பயணமாகிவிடும். பெரும்பான்மையான சமயங்களில் நின்றுவிடும். அதுபோலத்தான் ஆவிக்குரிய வாழ்க்கையும். சரி போகட்டும். கர்த்தருடைய வார்த்தைதான் முக்கியம் என்பது ஒன்றும் தவறான போதனை அல்ல.
ஆனால் “இயேசு தொழுதுகொள்ளப்படத்தக்கவரா” என்ற சத்தியத்தில் நீங்கள் கோவை பெரியன்ஸ் அவர்களோடு சேர்ந்து இயேசு தொழுதுகொள்ளப்படத்தக்கவர் அல்ல என்றுவாதிப்பது ஆச்சரியமாக உள்ளது. எப்படி இந்த முக்கியமான சத்தியத்தில் தவறிப்போனீர்கள் என்று யோசித்தேபாது சில காரியங்கள் விளங்கினது. அதன் விளைவாகஎழுதப்பட்டதுதான் இந்த கட்டுரை. உண்மையில் சொல்லப்போனால் ஒரு சிலவரிகளில் பதில் அளிக்கலாம் என்று ஆரம்பித்து கடைசியில் பெரிய கட்டுரையாகஆனது.
திரித்துவத்தை குறித்ததான உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. மூன்று தனிப்பட்ட நபர்கள் என்ற விதத்தில் திரித்துவம் என்ற கோட்பாடு தவறுஎன்பது உண்மைதான். ”மூன்று தனித் தனி நபர்கள், ஆனால் மூவரும் சேர்ந்து ஒரேதேவனாக இருக்கின்றார்கள்”இதுவே திரித்துவ கொள்கை. அதன்படி அவர்களுடையவிசுவாசம் என்னவென்றால்:-
1) தேவன் ஓருவர், ஆனால் மூன்று தனித் தனி நபர்களாய் இருக்கின்றார்கள்.
2) பிதா, இயேசு இல்லை. இயேசு, பரிசுத்த ஆவி இல்லை. பரிசுத்த ஆவி, பிதா இல்லை.
3) அதே சமயத்தில் பிதாவும் தேவன், இயேசுவும் தேவன், பரிசுத்த ஆவியும் தேவன்.
4) இம்மூவரும் தொடக்கத்தில் இருந்தே உள்ளவர்கள்.
5) இம்மூவரும் சம வல்லமை உடையவர்கள்.
6) இம்மூவரும் நித்தியமானவர்கள் என்பதே.
மேலும் முக்கோண வடிவில் படமெல்லாம் வரைந்து காட்டுவார்கள். ஆனால் இக்கொள்கையானது வேதத்திற்கு முற்றிலும் எதிரானது.கத்தோலிக்க சபைமுதன்முதலாக இந்த தவறான கோட்பாட்டை (மற்ற அநேக தவறான உபதேசங்களோடு) கிறிஸ்தவத்தில் புகுத்தியது. அதைத் தொடர்ந்து இன்றைய பெந்தேகோஸ்தே வரையிலும் அதை (திரித்துவத்தை) விசுவாசிக்கின்றார்கள்.அதன் விளைவு என்னவென்றால் பாவத்தில் விழுந்துபோன மனிதனை மீட்கும்படி என்ன செய்யலாம் என்று பரேலாகத்தில் மூன்று பேரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) கலந்து ஆலோசித்தார்கள்என்றும் மற்றும் பரேலாகத்தில் மூன்று பேரும் தனித் தனி சிங்காசனங்களில் வீற்றிருப்பார்கள் போன்ற பல தவறான போதனைகள் / உபதேசங்கள் சபையில் நுழையக் காரணமாயிற்று. இது முழுக்க முழுக்க புறஜாதிகளின் பல தெய்வ கோட்பாடே அன்றி வேறல்ல.
மூன்று தனிப்பட்ட நபர்கள் என்ற விதத்தில் திரித்துவம் என்ற கோட்பாடு எப்படி தவறாக இருக்கிறேதா அதுபோலவே நீங்களும், கோவை பெரியன்ஸ் அவர்களும்மற்றவர்களும் விசுவாசிக்கின்ற “இருத்துவம்” என்ற கோட்பாடும் தவறே.
ஏனென்றால் பிதாவாகிய யேகோவா என்பவர் வேறு, குமாரனாகிய இயேசு என்பவர் வேறு என்று இருத்துவத்தை விசுவாசிக்கின்ற நீங்கள் கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாகக் காட்டி இரண்டு கடவுள்களை அறிமுகப்படுத்துகின்றீர்கள்.
1 கொரிந்தியர் 8:6 பிதாவாகியஒரேதேவன்நமக்குண்டு, அவராலேசகலமும்உண்டாயிருக்கிறது; அவருக்கென்றுநாமும்உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்துஎன்னும்ஒரேகர்த்தரும்நமக்குண்டு; அவர் ச்மூலமாய்ச்சகலமும்உண்டாயிருக்கிறது, அவர்மூலமாய்நாமும்உண்டாயிருக்கிறோம்.
இப்படிச் சொல்லி பிதாவும், இயேசுவும் இரண்டு தனித் தனி நபர்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதம் சொல்லுகிறது.அன்பு அவர்களுடைய தளத்தில்ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என்னைக்கண்டவன் பிதாவைக் கண்டான் என்றுஎல்லாருக்கும் தெரிந்த வசனங்களையே கூறிஅரைத்த மாவையே திரும்ப அரைக்க வேண்டாம் என்று. ஆகவே உங்களுக்காகபிதாவும் இயேசுவும் ஒருவரே என்று சொல்லும் புதிய வசனங்கள்:
ஆக மேற்கண்ட வேதவசனங்கள் எல்லாம் பிதாவும், இயேசுவும் ஒருவரே என்றும் இயேசுவைத் தான் பிதாவாக தொழுதுகொள்ளுகிறோம் என்றும் சாட்சி பகருகின்றன. இந்த வெளிப்பாடு இல்லாமல் பிதா வேறு, இயேசு வேறு என்று நீங்கள் தவறாக விசுவாசிப்பதுமல்லாமல், இரண்டு பேரையும் ஆராதிக்க வேண்டுமோ என்ற குழப்பம் வருமே என்று கருதி, யேகோவா மட்டுமே தொழுதுகொள்ளப்படத்தக்கவர், இயேசு தொழுதுகொள்ளப்படத்தக்கவர் அல்ல என்று வாதிடுகின்றீர்கள். அதற்காகவே மூலபாஷை ஆராய்ச்சியெல்லாம் செய்கின்றீர்கள். இது வேதத்திற்கு எதிரானது / முரணாணது.
வெளிப்படுத்துதல் 19:4இருபத்துநான்குமூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் (இயேசுவை) தொழுது கொண்டார்கள்.
மேற்கண்ட எல்லா வசனங்களையும் வாசிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும், தன்னிடம் மூலபாஷை அறிவு இல்லாவிட்டாலும், இருக்கின்ற மூளை அறிவைக்கொண்டு இவ்வசனங்கள் மூலம் (மறுபடியும் மூலமா) இயேசுகிறிஸ்து தொழுதுகொள்ளப்படத்தக்கவர் என்று அறிந்து கொள்வான். அது உங்கள் அனைவருக்கும் எப்படி புரியாமல் போனது என்று ஆச்சரியப்படுகின்றேன்.
மேலும் பரிசுத்த ஆவியை பொருட்படுத்துவதே இல்லை. ஆண்டவர் அன்புள்ளவர் என்ற ஒரு சத்தியத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதனால் எல்லோருக்கும்இரட்சிப்பு உண்டு, தண்டனை கிடையாது. ஆகவே நரகம் இல்லை,ஆத்துமா இல்லைஎன்றெல்லாம் வேதத்திற்கு முரணான போதனையை போதிக்கின்றார்கள்.
அதே சமயத்தில் ஆண்டவர் நீதியுள்ளவர் / கண்டிப்பானவர் / எரிச்சலுள்ள தேவன் / பட்சிக்கின்ற அக்கினி என்றும் வேதம் போதிக்கின்றது. அதையெல்லாம் அறிந்தும்அறியாததுபோல் இருக்கின்றார்கள். தேவன் அன்புள்ளவர் என்ற ஒரு சத்தியத்தைமட்டும் எடுத்துக்கொண்டு முழு வேதாகமத்தையும் அதற்கேற்ப வளைக்கப் பார்க்கின்றார்கள்.
இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உங்களுடைய மற்றும் கோவை பெரியன்ஸ் கருத்துக்களையெல்லாம் வாசிக்கும்போது, மீட்பின் அனுபவம் உங்களுக்கும்,கோவை பெரியன்ஸ் அவர்களுக்கும் சுத்தமாகக் கிடையாது என்று தெரியவருகிறது.
ஏனென்றால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருந்தால், பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் இருந்திருந்தால், கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உணர்வு இருந்திருந்தால், ஆவியானவர் உள்ளே வாசம் செய்திருப்பார். வேதத்தில் உள்ள மறைபொருள்களை வெளிப்படுத்தியிருப்பார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (அதாவது தேவனே நமக்குள் வாசம் செய்வது) இல்லாத காரணத்தால் எதற்கெடுத்தாலும் மூல பாஷையை ஆராய்கிறேன் என்கிறீர்கள். ஓன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இயேசு ஒருபோதும் மூலபாஷையின் மேல் சபையைக் கட்டுவேன் என்று சொல்லவில்லை. மாறாக வெளிப்பாடு என்கிற கல்லின் மேல் அதுவும் குறிப்பாக அப்போஸ்தலர்கள் மூலமாக, அவர் (இயேசு) யார் என்கிற வெளிப்பாட்டின் மீதாக சபையைக் கட்டுவேன் என்றுதான் வாக்கு பண்ணியிருக்கின்றார்.
மத்தேயு 16:13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
மற்ற சீஷர்கள் எல்லாம் பூமியில் இருந்த மாம்சமான நபர்களோடு இயேசுவை ஒப்பீடு (compare)செய்தபோது (மத்தேயு 16:14), பேதுரு மட்டும் இயேசுவை பரேலாகத்தில் உள்ள கிறிஸ்துவோடு (லோகோஸ்) எப்படி ஒப்பிட முடிந்தது (மத்தேயு 16:16)? பேதுரு எந்த மூலபாஷையை ஆராய்ந்து கண்டுபிடித்தார்? ஆனால் இயேசு அக்கேள்விக்கான விடையைக் கூறுகின்றார்.
மத்தேயு 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் (மூளை அறிவு (அ) மூலபாஷை அறிவு)இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 ....... இந்தக் கல்லின்மேல் (இயேசு யார் என்ற வெளிப்பாட்டின் மீது) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் (எந்த பிசாசும்) அதை (அந்த வெளிப்பாட்டை) மேற்கொள்வதில்லை
ஆகவேதான் இயேசு இவ்வாறாக சொல்லியிருக்க
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, ....
பேதுருவோ பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டைப் பெற்று இவ்வாறு கூறினார்.
அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
ஆண்டவராகிய இயேசு தாம் சொன்னபடியே அப்போஸ்தலர்கள் மூலமாக மேற்கண்ட வெளிப்பாட்டின் மீதாக தம்முடைய சபையினை பெந்தேகாஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் மூலம் தொடங்கி வைத்தார்.
எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
மற்ற அப்போஸ்தலர்களான பவுலும், சுவிசேஷகனான பிலிப்புவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததை அப்போஸ்தலர்நடபடிகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,...
அப்போஸ்தலர் 19:4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவுலும் பேதுருவும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்தபோதே பவுல் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்கொடுத்திருக்கின்றார். இதைக் குறித்து பவுல் கூறும்போது, தான் எந்த ஒரு மனிதனிடத்திலும் இதை கற்கவில்லை, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்லுகிறார்.
கலாத்தியர் 1:11 மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
ஆக இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில், மனிதனை மீட்கும்படிக்கு தேவன் மூன்று விதங்களில் செயல்படவேண்டியதாயிற்று. ஆனால் கல்வாரிசிலுவையின் மூலம் மீட்பை நிறைவேற்றின பிறகு பிதா, குமாரன், பரிசுத்தஆவியாக செயல்படுகின்ற அந்த ஒரே தேவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்றுநமக்கு இப்பொழுது வெளிப்படுத்தியிருக்கின்றார்.
எபேசியர் 1:9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
ஆக பிதாவாகிய தேவனை ஆராதிக்க வேண்டுமானாலும், துதிக்க வேண்டுமானாலும், போற்ற வேண்டுமானாலும், புகழ வேண்டுமானாலும் முக்கியமாக தொழுதுகொள்ள வேண்டுமானாலும் அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மூலமே சாத்தியம்.
1 கொரிந்தியர் 1:2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
கொலோசெயர் 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
மேலும் புதியஏற்பாடு முழுவதிலும் எங்கெல்லாம் பிதாவைக் குறித்து சொல்லப் பட்டிருக்கின்றதோ, அங்கெல்லாம் கர்த்தராகிய இயேசுவையும் அல்லதுஅவருடைய நாமத்தைக் குறித்தும் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கின்றது. பிதாவைக்குறித்து தனியாக சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் புதிய ஏற்பாட்டில் காணவேமுடியாது.
மேற்கண்ட புதிய ஏற்பாடு சத்தியங்களின் அடிப்படையில், ஒரு காரியத்தை இப்பொழுது சொல்லப்போகிறேன் (ஒருவேளை சிலர் ஏற்கனவேசொல்லியிருக்கக்கூடும். ஆனால் நான் கேட்டதில்லை / கேள்விப்பட்டதில்லை).
எபிரேயர் நிருபத்தின் ஆக்கியோன் எப்படி கிறிஸ்துவின் பலியின் மூலம் பழைய உடன்படிக்கை நிறுத்தப்பட்டு புதிய உடன்படிக்கை ஸ்தாபிக்கப்பட்டதைஆணித்தரமாக நிரூபிக்கின்றாரோ, அதுபோலவே, பழைய உடன்படிக்கையோடுசம்பந்தப்பட்ட யெகோவா என்ற நாமமானது புதிய ஏற்பாட்டில் கர்த்தராகியஇயேசுகிறிஸ்து என்று மாற்றப்பட்டது என்பதை மேற்சொன்ன வசனங்களின்அடிப்படையில் மாத்திரமல்ல கீழ்காணும் வசனங்களின் அடிப்படையிலும்ஆணித்தரமாக சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை (இயேசுவை) உயர்த்தி, 10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், 11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
ஆகவே புதிய ஏற்பாட்டில் இருந்து யெகோவா என்ற நாமத்தினால் அப்போஸ்தலர்களும், மற்ற விசுவாசிகளூம் பிதாவை தொழுதுகொண்டார்கள் என்று ஒரே ஒரு வசனத்தையாவது காண்பிக்கும்படி நான் யெகோவா சாட்சிகளுக்கும், வேதமாணவர்களுக்கும், கோவை பெரியன்ஸ் அவர்களுக்கும் பகிரங்கமாக சவால் விடுகின்றேன்.
ஓரு காரியம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். யெகோவா என்ற நாமத்தை பயன்படுத்தக்கூடிய உரிமை யூதர்களுக்கு மட்டுமே உண்டு. புறஜாதிகளுக்கு அந்த உரிமை கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் யூதர்கள் மட்டுமே உடன்படிக்கையின் மக்களாயிருந்தார்கள்.
உதாரணமாகக் கூற வேண்டுமெனில், இயேசு உலகத்தில் பிரேவசித்தபோது அவர் யூத குலத்தில் பிறந்தார். அவர் தாவீதின் வம்சத்தில் வந்தவர். யூத மக்களிடத்தில் மட்டும் ஊழியம் செய்தார். ஆகவே இயேசுவை தாவீதின் குமாரனே என்று அழைக்க யூதர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
அதேநேரத்தில் புறஜாதிகள் இயேசுவை ஆண்டவர் என்று அழைப்பதின் மூலமே அணுக முடியும். எனவேதான் அந்த கானானிய கிரேக்க ஸ்திரி தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டேபாது இயேசு மவுனமாக இருந்தார். பதிலே கூறவில்லை. மறுபடியும் அவள் ஆண்டவரே என்று அழைத்தபோது பதில் கூற ஆரம்பித்தார்.
மத்தேயு 15:22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23 அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். 25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். 26 (அப்பொழுது) அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
ஆனால் எரிகோ பட்டிணத்தை சேர்ந்த இரண்டு குருடர்கள் இயேசுவே, தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டேபாது, நடந்து சென்று கொண்டிருந்த இயேசு அந்த அழைப்புக்கு செவிசாய்த்து உடனே நின்று விட்டார். மாத்திரமல்ல, அவர்களின் விண்ணப்பத்தின்படியே கண்களுக்கு பார்வையை அளித்தார்.
31 அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். 32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். 34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
எனவே நீங்கள் யெகோவா என்ற நாமத்தில் எத்தனை முறை அழைத்தாலும் அல்லது தொழுதுகொண்டாலும் பிதா ஒருநாளும் உங்களுக்கு செவிசாய்க்க மாட்டார் என்பது நிச்சயம். நீங்கள் பதிலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. மேலும் நீங்கள் யூத மார்க்கத்திற்கு மாற வேண்டியதிருக்கும். விருத்தேசதனம் செய்யவேண்டியதிருக்கும். நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளவேண்டிதிருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை உங்களுடைய சக்திக்கு ஏற்றார்போல் மாட்டையோ, ஆட்டையோ அல்லது புறா குஞ்சையோ எடுத்துக்கொண்டு எருசேலம் உள்ள தேவாலயம் நோக்கி செல்லவேண்டும். ஒரிஜினல் யூதர்களுக்கே அந்த வாய்ப்பு இல்லை.
நாங்களோ இயேசுவின் மூலமாக, இயேசுவின் நாமத்தினால் பிதாவினை கிட்டிச் சேரும் பாக்கியத்தை பெற்றிருக்கின்றோம்.
எபேசியர் 2:18 அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் (யூதர்களும், புறஜாதிகளும்) ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசுவின்) மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
இந்த வசனதின்படி இன்றைக்கு யூதர்களும் இயேசுவின் மூலமாகவே பிதாவைக் கிட்டிச் சேரமுடியும்.
மேலும் பிதாவினுடைய நாமத்தில் வந்தவர் இயேசு மாத்திரமே.
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
யோவான் 16:25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம்வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக் குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். (இதைத்தான் பெந்தேகோஸ்தே நாளில் பேதுருவின் மூலம் வெளிப்படையாக அறிவித்தார்)
யோவான் 16:26 அந்தநாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
”இயேசுவே என் இரட்சகர், என் மீட்பர், என் மேய்ப்பர், என் ஆத்தும நேசர், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி, என் பாவ பரிகார பலி, எனக்காய் இரத்தம் சிந்தினவர், எனக்காய் மரித்தவர், எனக்காய் உயிரோடு எழுந்தவர், பிரதான ஆசாரியர், எனக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பவர், அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவரே என் பிதா, அவரே குமாரன், அவரே எனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர். அவரின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. எனக்கெல்லாமே அவர்தான்.”.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரின் இரத்தத்தால் கழுவப்பட்டு, மீட்க்கப்பட்டு, அவரே தேவன் (அவரும் தேவன் என்றுஅல்ல) என்று விசுவாசித்து, அவருடைய நாமத்தை துதித்து, தொழுதுகொண்டு, அவருடைய சத்தியங்களை முழுமையாக விசுவாசித்து, அவருடையவிருப்பங்கள்/வழிகளின்/வார்த்தையின்படி நடந்து கொள்பவர்கள் மாத்திரமேஅவருடைய சபையை/தொழுவத்தை சேர்ந்தவர்கள். அவர்கேள மணவாட்டி என்றுஅழைக்கப்படுகின்றார்கள். (அதாவது அப்போஸ்தலர் காலம் முதல் இன்றைய காலம்வரை மேற்கண்ட சத்தியத்தின்படி நடந்தவர்கள் / நடப்பவர்கள் மாத்திரமேமணவாட்டி ஆவர். அவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும், எந்த சபையில்(கத்தோலிக்கம்/மார்மோன்/யெகோவா சாட்சியினர் போன்ற இயேசுவை தெய்வமாகதொழுது கொள்ளாதவர்களை தவிர்த்து) வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.
நீங்களும், கோவை பெரேயன்ஸ் அவர்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மீட்பின் எல்லா நிலைகளையும் ஏற்றுக்கொண்டாலும், இயேசுகிறிஸ்துவை தேவனாக அங்கீகரிக்கவில்லையென்றால் நீங்கள் அவருடைய மந்தையின் ஆடுகள் அல்ல. மாறாக தொழுவத்திற்கு வெளியே நிற்பவர்கள்.
யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 8:24 … நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். குமாரன் என்றுதானே சொல்லப்பட்டிருக்கின்றது. தேவன் என்று இல்லையே. முதலாவது குமாரன் என்றால் என்ன என்று வேதத்திலிருந்து புரிந்து கொள்ளவேண்டும். குமாரன் என்றால் சரீரம் என்று அர்த்தம்.
லுக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் (மரியாளிடத்தில்) பிறக்கும் பரிசுத்தமுள்ளது (சரீரம்) தேவனுடைய குமாரன் என்னப்படும்.
ஆவி, மாம்சமாக (சரீரமாக) முடியாது. வார்த்தை மாம்சமானது (சரீரமானது). ஆனால் ஆவி, மாம்சத்திற்குள் (சரீரத்திற்குள்) வாசம் செய்யமுடியும்.
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
கொலோ. 1:15 அவர் (இயேசு) அதரிசனமான தேவனுடைய (பிதாவினுடைய) தற்சுரூபமும் (சரீரம்) ….
எபிரெயர் 1:3 இவர் (இயேசு) அவருடைய (பிதாவின்) மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து (சரீரமாயிருந்து), ….
இதைதான் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தில் காண்கிறோம்.
மத்தேயு 3:16,17 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவஆவி (மூன்றாம் நபர் அல்ல, பிதாவே) புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒருசத்தம் உண்டாகி: இவர் (இயேசு) என்னுடைய (பிதாவினுடைய) நேசகுமாரன் (சொந்த சரீரம்), இவரில் (இந்த சரீரத்தில் வாசம் செய்ய) பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
அப்போஸ்தலர் 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
தேவன் தான் ஆவியாயிருக்கிறாரே. பின்னை எப்படி அவருக்கு இரத்தம் உண்டாயிற்று. அதுவும் தம்முடைய சுயரத்தம் என்று கூறுகிறார். அப்படியென்றால்இயேசு ஆவியாயிருக்கின்ற பிதாவினுடைய சொந்த மாம்ச சரீரமாகத்தான்இருக்கமுடியும்.
எபிரெயர் 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்;
எபிரெயர் 2:14 ஆதலால், பிள்ளைகள் (நாம்) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (பிதாவும்) அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; …
ஆதியிலே தேவன் மனிதனை சிருஷ்டிக்கும்போது நம்மைப்போல் சிருஷ்டிப்போம் என்று சொல்லி ஆவி மற்றும் சரீரமுள்ள மனிதனாக சிருஷ்டித்த்தை 1ஆம் மற்றும்2ஆம் அதிகாரங்களில் பார்க்கமுடியும். அப்படியென்றால் தேவனும் ஆவியாயும்சரீரமாயும் இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் தேவனுக்கும்மனிதனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்னவெனில் ஆவியாகிய மனிதன்மண்ணினால் உருவாக்கப்பட்ட சரீரத்தில் வாசம் செய்தான். ஆவியாகிய தேவேனாவார்த்தை என்னும் லோகோஸுக்குள் அதாவது ஆவிக்குரிய சரீரத்தில் வாசம் செய்தார்.
(இந்த லோகோஸைக் குறித்த வெளிப்பாடு திரித்துவத்தை விசுவாசிப்பவர்களில் அநேகருக்கு இல்லை என்றாலும், கோவை பெரியன்ஸ் அவர்களுக்கு உண்டு. அவர்களுடைய தளத்தில் ஒரு திரியில் லோகோஸின் மூலமாகவே பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் எல்லோரும் பிதாவை தொழுதுகொண்டார்கள் என்று சரியாகக் கூறியிருந்தார். அத்திரியை சேவ் செய்ய மறந்துவிட்டேன். இப்பொழுது தேடி எடுக்கவும் நேரமில்லை).
இந்த ஆவிக்குரிய சரீரத்தின் (லோகோஸ்) மூலமாகத்தான் பாவம் பிரவேசிக்குமுன் தேவன் ஆதாமோடு நேரடியாக தொடர்புகொண்டார். பாவம் பிரவேசித்து தேவனோடுஉள்ள தொடர்பு அறுந்தபின் மோசேக்கு முகத்தை காட்டாமல் பின்பக்கத்தை மட்டும்காட்டினார்.
யாத்திராகமம் 33:17 அப்பொழுதுகர்த்தர்மோசேயைநோக்கி:...என்கண்களில்உனக்குக்கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார். 18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையைஎனக்குக்காண்பித்தருளும்என்றான்.
ஆவியும், சரீரமும் ஒன்றாக இணையும் போதுதான் ஒரு நபர் என்று ஆள்தத்துவமாக அழைக்க முடியும். (பாருங்கள் இரண்டு தன்மைகள் சேர்ந்து ஒரு நபர் என்றுஅழைக்கப்படுகிறது) இப்பொழுது அந்த நபருக்கு பெயர் எப்போது வைக்கப்படுகிறது.சரீரத்தில் வந்த பிறகே. உதாரணத்திற்கு என்னுடைய பெயர் ஜோசப். நான்ஆவியாகவும், சரீரமாகவும் இருக்கின்றேன் (குறிப்பாக சொல்லவேண்டுமானால்ஆவியாகிய நான், சரீரத்தில் வாசம் செய்கிறேன்). நான் சரீரத்தில் பிறந்த பிறகுஎன்னுடைய குழந்தை பருவத்தில்எனக்கு ஜோசப் என்ற பெயர் வைக்கப்பட்டது.
ஆகவே ஜோசப் என்ற பெயர் சரீரத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் அந்த பெயர் என்னுடைய சரீரத்தையும் ஆவியையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. ஆனால் நீங்கள் ஜோசப்பாகிய என்னை நினைக்கும்போதெல்லாம் என்னுடைய மாம்ச முகம் மட்டுமே உங்களுக்கு ஞாபகம் வருகிறது.
அல்லது ஜோசப் என்று என்னை கூப்பிடும்போது சரீரத்தில் நான் வந்து நிற்கின்றேன். நீங்கள் என் முகத்தைதான் பார்கின்றீர்கள். நீங்கள் ஒருவேளை சொல்லலாம்இல்லை நான் உன் ஆவியைத்தான் கூப்பிட்டேன். நான் அதைத்தான் பார்க்க வேண்டும்.எப்படி முடியும்? ஆவியை யாரும் பார்க்கமுடியாதே. பார்க்கும்படியாகத்தான் சரீரம்கொடுக்கப்பட்டிருக்கின்றது.
யோவான் 14:8 பிலிப்புஅவரைநோக்கி: ஆண்டவரே, பிதாவைஎங்களுக்குக்காண்பியும், அதுஎங்களுக்குப்போதும்என்றான். 9 அதற்குஇயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக்கண்டவன் பிதாவைக்கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
ஆனால் நான் மரித்த பிறகு (அதாவது ஆவி சரீரத்தை விட்டு போனபிறகு) என்னுடைய சடலத்தை பார்த்து யாரும் ஜோசப் என்று கூப்பிடுவதில்லை. மாறாக ஜோசப்பிற்கு என்ன ஆயிற்று என்று கேட்கும்போது, ஜோசப் மரித்து போய்விட்டார் அல்லது செத்து போய்விட்டார் என்று பதில் வரும், ஜோசப் எங்கே போய்விட்டார்? நான்தான் சரீரமாக படுத்திருக்கின்றேனே. நான் சரீரத்தில் இருந்தாலும் ஆவியில்லாத சரீரத்தை யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. பிணம் அல்லது சடலம் என்றே அழைப்பார்கள்
அதுபோலவே பழைய ஏற்பாட்டின் நாட்களில் வார்த்தை என்னும் லோகோஸுக்குள் வாசம் செய்து கர்த்தர் எனவும் கிறிஸ்து எனவும் அழைக்கப்பட்டு பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களோடு தொடர்பு கொண்ட பிதாவாகிய ஆவியாகிய தேவன், புதிய ஏற்பாட்டின் நாட்களில் மாம்சத்தில் வெளிப்பட்டேபாது இயேசு என்ற பெயரை கர்த்தர், கிறிஸ்து என்கிற பெயர்களோடு சேர்த்து அதிகாரபூர்வமாக சூட்டிக்கொண்டார்.
ஆகவேதான் பெத்லகேமிலே குழந்தையாய் பிறந்தபோது, இயேசு என்னும் நாமம் சூட்டப்படுவதற்கு முன்னமே கர்த்தராகிய கிறிஸ்து என்று அந்த குழந்தைஅழைக்கப்பட்டது.
ஆகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்கிற நாமம் அவர் பூமியில் நடமாடினபோது மாம்சமாகிய சரீரத்திற்கு மாத்திரமல்ல, அந்த சரீரத்தில் வாசம்செய்த ஆவியாகிய பிதாவுக்கும் சேர்த்தே சொந்தமானது.
இந்த சத்தியத்தை அறியாததே எல்லா குழப்பங்களுக்கும் (ஓருத்துவம், இருத்துவம், திரித்துவம்) காரணம். வெளிப்பாட்டின் மூலமே இச்சத்தியத்தை அறிய முடியும்.மூளை அறிவை கொண்டோ அல்லது மூலபாஷை ஆராய்ச்சியை கொண்டோஅறிந்து கொள்ள முடியாது. வேதவசனங்களைக் குறித்த வெளிப்பாடுகளை பெறவேண்டுமானால்மனிதர்களுடைய போதனைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுவேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு பரிசுத்த ஆவியானவரை மட்டுமேமுழுவதுமாக சார்ந்திருக்க வேண்டும்.
1 யோவான் 4:1பிரியமானவர்கேள, உலகத்தில்அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள்தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில்வந்தஇயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
அப்போஸ்தலர் 8:37 அதற்குப்பிலிப்பு: நீர் முழுஇருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுதுஅவன்:இயேசுகிறிஸ்துவைத்தேவனுடையகுமாரெனன்று விசுவாசிக்கிறேன்என்றுசொல்லி; 38 இரதத்தை நிறுத்தச் சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும்தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
ஆகவே புதிய ஏற்பாட்டில் எங்கெல்லாம் இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம்/அவையெல்லாம் இயேசு தேவனுடைய சரீரம் அதாவது மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்ற அர்தத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது இந்த கண்ணோட்டத்தில் வேதாகமத்தை வாசித்துப்பாருங்கள். எல்லாமே புரிய ஆரம்பிக்கும். முக்கியமாக யோவான் எழுதின சுவிஷேசம் மற்றும்யோவானின் நிருபங்கள் எல்லாம் ஜீவன்பெற்று உங்கள் கண்களுக்கு முன்பாகபிரட்தியச்சமாக வெளிப்பட ஆரம்பிக்கும்.
அப்போஸ்தலர்களின் மறைவுக்குப்பின் இவ்வளவு காலம் மறைக்கப்பட்டிருந்த அந்த மகத்தான சத்தியத்தை, தேவன் இந்த கடைசி காலங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இயேசு சொன்னது போல் பாதாளத்தின் வாசல்கள் அந்த வெளிப்பாட்டை மேற்கொள்ள முடியவில்லை.
அச்சத்தியத்தை விசுவாசிக்கும் சபையினர் ”ஒருத்துவக்காரர்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள். அந்தக் குறிப்பிட்ட சபையினர் விசுவாசிக்கும் “ஒருத்துவம்” என்ற கோட்பாடு ஓரு விதத்தில் சரியாக இருந்தாலும் அச்சபையினரின் தவறானபோக்கினால் ”ஒன்லி ஜீசஸ்” என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. அதாவதுஅவர்கள்இயேசுவை மாத்திரம் அங்கீகரிக்கின்றார்கள், பிதாவையும், பரிசுத்தஆவியையும் மறுதலிக்கின்றார்கள் என்று மற்றமெய்ன்லைன் சபையினர் தவறாகபுரிந்துகொண்டதினால். ஓருவிதத்தில் அவர்கள் நினைப்பதும் சரியே.
என்னவென்றால் ஒருத்துவக்காரர்களுக்கு ”இயேசு கிறிஸ்துவே” அந்த ஒரே தேவனாக இருக்கின்றார் என்ற சத்தியத்தை சரியாக அறிந்திருந்தாலும் மற்ற சத்தியங்கள் எதுவும் தெரியாது.மேலும் இயேசுகிறிஸ்து 100% தேவனாக இருக்கின்றார், அதே சமயத்தில் 100% மனிதனாக இருக்கின்றார் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.
1 தீமோ. 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.6எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மைஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்துஇயேசுஅவரே (அதாவது அந்த இரண்டும் அவரே, தேவனும், மத்தியஸ்தரும்); இதற்குரிய சாட்சி ஏற்றகாலங்களில் விளங்கிவருகிறது.
ஆனால், இவர்களும் (ஒருத்துவத்தை விசுவாசிப்பவர்கள்) பரிசுத்த ஆவியை விசுவாசித்தாலும், பரிசுத்த ஆவியின் வரங்களை / கிரியைகளை (குறிப்பாக அந்நிய பாஷைகள்/தீர்க்கதரிசனம்) இவைகளை விசுவாசிப்பதில்லை அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. சபையில் கட்டுப்பாடுகள் அதிகம். பெண்கள் முடிவெட்டக்கூடாது, நீளமாக வளர்க்க வேண்டும்(இந்தியாவில் பொதுவாக பெண்கள் யாரும் அப்படி செய்வதில்லை). சுடிதார் அணியக்கூடாது, ஏனென்றால் அது பேண்ட்டாம் (தமிழில் என்ன வார்த்தை என்று தெரியவில்லை). ஆண்கள் அணியும் உடுப்பாம் (என்ன கொடுமை சார் இது? என்னை கேட்டால் புடைவைய காட்டிலும் சுடிதார் எவ்வளவோ மேல் என்பேன்). இது போன்ற LegalismÐகள் ஏராளம். ஆத்துமாக்களைக் குறித்த பாரம் கிடையாது. ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர்களை மாத்திரம் இலக்குவைத்து செயல்படுவார்கள். அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பெதல்லாம் வேதத்தைவிட ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசிக்கு மாத்திரமே (அந்த தீர்க்கதரிசியின் மீது தவறில்லை, தேவன் அவருக்கு தந்த ஊழியத்தை சரியாகத்தான் நிறைவேற்றினார். ஆனால் கத்தோலிக்க சபை, எப்படி அப்போஸ்தலர்களை மத்தியஸ்தர்களாக மாற்றினதோ அதுபோலவே ஒருத்துவக்காரர்களும் இந்த தீர்க்கதரிசியை மத்தியஸ்தராக மாற்றி விட்டனர்).
வேதத்திலிருந்து பிரசங்கிப்பதற்குப் பதிலாக, புத்தக வடிவிலான அந்த தீர்க்கதரிசியின் பிரசங்கத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து பிரசங்கிப்பார்கள். புல்பீட்டில் அந்ததீர்க்கதரிசியின் படத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர்extreme end-ஆக சென்று அந்த தீர்க்கதரிசியின் நாமத்திலேயே ஞானஸ்நானம் கொடுக்கஆரம்பித்துவிட்டனர். ஆகவே தான் இவர்கள்Cult Group ஆக மாறிவிட்டனர் ஒருசிலரைத் தவிர. இவர்களுடைய தவறினாலும், 1970-80 ஆம் வருடங்களில்தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான ஊழியரின் பின்மாற்றத்தாலும், அந்த குறிப்பிட்டதீர்க்கதரிசியின் வேதஉபதேசங்கள் எல்லாம் கள்ள உபதேசங்கள் என்று தவறாகமுத்திரை குத்தப்பட்டு விட்டது. பிசாசானவன் மறுபடியும் தற்காலிகமாக வெற்றிபெற்றுவிட்டான்.
ஆகவே இச்சத்தியத்தை (கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்) விசுவாசித்து தொடர்ந்து வந்த தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊழியர்கள்அச்சத்தியத்தைக்குறித்து இன்றுவரையிலும் ஒன்றும் சொல்லமுடியாமல் போயிற்று.மற்றபடி அவர்கள் சுவிஷேச ஊழியத்தை மிகவும் சிறப்பாக செய்து முடித்துசென்றார்கள் (தேவன் இச்சத்தியத்தை விசுவாசித்த அவர்கள் மூலமாக செய்தஊழியங்கள் போன்று வேறு எந்த திரித்துவ ஊழியர் மூலமும் இன்றுவரைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
மனிதர்கள் மாறிப்போகலாம், தவறலாம், ஆனால் சத்தியம் ஒருநாளும் மாறாது, அழியாது. தேவன் திரும்பவும் அச்சத்தியத்தை யார் மூலமாவது கொண்டு வருவார். அதற்காக ஜெபித்துகொண்டிருக்கின்றேன். சாத்தானின் தலை மறுபடியும் நசுக்கப்படும். ஆமேன்.
சரி இந்த மூன்று கோட்பாடுகளும் தவறு என்றால் எதுதான் சரி என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? நம்முடைய வேதாகமம் அதற்கான விடையை அளிக்கின்றது. “தேவத்துவம்” என்பதே அந்த விடை. இதில் விசேஷம் என்னவென்றால் இந்ததேவத்துவம் என்பதற்குள்ஒருத்துவம், இருத்துவம் மற்றும் திரித்துவம் ஆகியமூன்றுமே அடங்கியிருக்கின்றது. (இது என்னடா புது உபதேசமா இருக்கு, ஒருக்ரூப்பாய்தான்யா கெளம்புறான்க, உட்கார்ந்து யோசிப்பாங்களோ?). கெரக்ட், ஆனாயோசிச்சது இல்ல, தியானித்தது.
இந்த தேவத்துவம் (Godhead)என்ற வார்த்தையை வேதத்தில் நாம் காணமுடியும்.
இந்த தேவத்துவத்தில் ”தேவன் என்கிற ஒரு நபர் மூன்று நிலைகளில் கிரியை செய்கிறதை” வேதம் முழுவதிலும் நாம் காண முடியும். அதாவது பழையஏற்பாட்டில் பிதாவாகவும், சுவிஷேசங்களில் குமாரனாகவும், நிருபங்களில் (நம்முடைய காலம்) பரிசுத்த ஆவியாகவும் கிரியை செய்கின்றார். எனவே இவ்விரண்டிற்கும் (திரித்துவம் மற்றும் தேவத்துவம்) வித்தியாசம் உண்டு.
(இதைக் குறித்து ஏற்கனவே தமிழ் கிறிஸ்தவ தளத்தில் ”திரித்துவம் என்றால் என்ன” என்ற திரியில் நானும் கலந்துகொண்டு எழுத ஆரம்பித்தேன். வழக்கம்போல சிலர்முதலில் எதிர்த்து எழுதினாலும் ஒரு சில எதிர் கேள்விகள் மற்றும் சிலவிளக்கங்களுக்குப் பிறகு ஒருவர் மாத்திரம் தன்னுடைய கடைசி பதிவில் “மூவரும்என்று சொல்லுவது தவறுதான்” என்று ஒப்புக்கொண்டார்.
என்ன காரணத்தினாலேயோ அந்த திரியை முழுவதுமாக நீக்கி விட்டார்கள். ஒருவேளை யாரும் சத்தியத்தை அறிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்? நீக்கியிருக்கலாம். சில மாதங்கள் கழித்து ஒன்றுமே நடவாததுபோல்/தெரியாததுபோல் மறுபடியும் அதே தலைப்பில், அதே ஆரம்ப பதிவோடு புதிதாக ஒரு திரியை தொடங்கினார்கள் (கெரக்டா வாட்ச் பண்றான்ய்யா). நானும் மறுபடியும் பழைய பதிவை பதிக்கலாமா என்று கூட யோசித்தேன். பின்பு நாமும் சில்லித்தனமாக பிஹேவ் பண்ணக்கூடாது என்று விட்டு விட்டேன்).
மத்தேயு 15:14 இயேசு சொன்னார், அவர்களைவிட்டுவிடுங்கள், அவர்கள்குருடருக்குவழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக்குருடன்வழிகாட்டினால்இருவரும்குழியிலே விழுவார்களேஎன்றார்.
மூன்று குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்து விவரித்த கதையை நினைவில் கொள்ளவும்.
ஒருவன் காலை மாத்திரம் தடவிப்பார்த்து அதுதான் யானை என்று நினைக்கின்றான். அதுபோலவே மற்றவன் வாலையும், இன்னொருவன் காதையும் தடவிப்பார்த்து, அவர்கள் எதைத் தடவிப்பார்த்து அறிந்தார்களோ அது மாத்திரமே யானை என்று நினைக்கின்றார்கள். ஆனால் யானைக்கு கால்கள், காது மற்றும் வால் ஆகிய மூன்றுமே உள்ளது. கண்கள் திறக்கப்பட்ட ஒருவன் மாத்திரமே அந்த மூன்றும் சேர்ந்த ஒரே முழு உருவமாக யானையைக் காணமுடியும்.
இப்பொழுது ஒரு சிறிய விதத்தில் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். முடிந்தால் தனிப்பட்ட ஜெபநேரத்தில், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வேத வசனங்களைதியானியுங்கள். ஆண்டவர் வெளிப்படுத்தக்கூடும்.
1) தேவன் என்கிற ஒரு நபர் (ஓருத்துவம்)பிதா (அவர் ஆவியாக இருக்கின்றார்) ஆகவே அவரை யாரும் காணமுடியாது. அநாதியானவர்
2) இருவித தன்மை உடையவராய் இருக்கின்றார் (இருத்துவம்) பிதா(ஆவி)+லோகோஸ் (வார்த்தை) ஜெனிப்பிக்கப்பட்டவர். அதாவது ஆவிக்குரிய சரீரம். தேவகுமாரன், இவர் கர்த்தர் என்றுஅழைக்கப்படுகின்றார். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் எல்லாம் பிதாவை கண்டது/ தொழுதுகொண்டது இந்த தேவகுமாரனாகிய கர்த்தர் மூலமே.
எபிரெயர் 2:14 ஆதலால், பிள்ளைகள்(நாம்) மாம்சத்தையும்இரத்தத்தையும்உடையவர்களாயிருக்க, அவரும் (பிதாவும்) அவர்களைப்போல மாம்சத்தையும்இரத்தத்தையும்உடையவரானார்;...
3) அந்தப்படி மீட்பின் நற்செய்தியை அறிவிக்கவும், மனிதர்களை தம்மோடு ஒப்புரவாக்கவும் பரிசுத்த ஆவியானவராக மூன்றாவது விதத்தில் இன்றைக்குகிரியை செய்து கொண்டிருக்கின்றார் (திரித்துவம்) (பரேலாகத்தில் பிதா(ஆவி)+இயேசு(மறுரூபமாக்கப்பட்ட சரீரம், பிரதான ஆசாரியராக பரிந்துபேசிக் கொண்டிருக்கின்றார்) (பூமியில்பரிசுத்த ஆவி - அப்படியென்றால் பிதாவே நமக்குள் வாசம் செய்வது).
இதைக் குறித்து சகோ.சுந்தர் அவர்களுடைய “இறைவன்” தளத்தில் ஒரு திரியில் மிகவும் அழகாக, எளிமையாக விளக்கியிருப்பார் (அந்த திரி எது என்று மறந்துவிட்டேன்).
(பிதாவாக) இந்த உலகை ஆளுகை செய்யவேண்டும்.பாவத்தில் விழுந்துபோன மனித குலத்தை மீட்கும்படி இரத்தம் சிந்தும்படியாகமனிதனாக (குமாரனாக) வேண்டும்.(பரிசுத்த ஆவியானவராக) மனிதனுக்குள் வாசம் செய்து மீட்பில் குறிப்பாகசொல்லப்போனால் கிறிஸ்துவுக்குள் வளரஉதவி செய்ய வேண்டும்.
இன்னும் வேறு விதமாகவும் சொல்லமுடியும். அதாவது வேதம் இவ்வாறாக சொல்லுகிறது.
எபேசியர் 4:6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும்உண்டு; அவர் (பிதா) எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
மீண்டும் வாசித்துப்பாருங்கள் ஒரே பிதா எல்லார்மேலும், எல்லாரோடும், எல்லாருக்குள்ளும் இருக்கின்றார் என்று கூறுகின்றது. மூன்று விதங்களில் கிரியை செய்தாலும் அவர் பிதா என்று தான் அழைக்கப்படுகின்றார்.
பாவத்தினால் தேவனோடுள்ள உறவு அற்றுப்போனபின்புபழைய ஏற்பாட்டில் - பிதாவாக (ஆவியில்) Ð எல்லோர்மேலும்;சுவிஷேசங்களில் - குமாரனாக (அதாவது மாம்ச சரீரத்தில்) Ð எல்லாரோடும்
மத்தேயு 1:23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரைனப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
1 யோவான் 1:1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
நிருபங்களில் (நம்முடைய காலம்) Ð பரிசுத்த ஆவியாக Ð நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றார்.
கொலோ. 1:27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
1 கொரி. 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ஆகவேதான் குமாரன் என்று சொல்லுகிற அதே வசனத்தில் நித்தியப்பிதா என்றும் மெய்யான தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
1 யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே (எவரே, இந்த இயேசுகிறிஸ்துவே) மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
சரி விஷயத்திற்கு வருவோம். ஆக இந்த மூன்று கோட்பாடுகளை விசுவாசிப்பவர்களில், திரித்துவத்தை விசுவாசிப்பவர்கள் (கத்தோலிக்கத்தை தவிர்த்து CSIபோன்ற மெயின்லைன் சபையினர் மற்றும் பெந்தேகாஸ்தேயினர்) ஒருவகையில்safer side-ல் இருக்கின்றார்கள். காரணம் மூன்று தனித்தனி நபர்கள்என்ற திரித்துவ உபதேசம் மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்ஞானஸ்நானம் என்ற இரண்டை மட்டும் தவிர்த்து மற்றபடி அடிப்படைஉபதேசங்களில் சரியாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் தேவனுடைய மூன்றுநிலையையும் விசுவாசிக்கின்றார்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைதெய்வமாக தொழுது கொள்கிறார்கள். இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களை குறித்தபாரம் அவர்களுக்கு உண்டு. ஜெபத்திலும் உபவாசத்திலும் உறுதியாய்தரித்திருப்பவர்கள் அவர்களே. நற்செய்தி மற்றும் மிஷினரி பணிகளில் தீவிரமாகஈடுபடுவர்கள் அவர்களே. முக்கியமாக ஜந்து விதமான ஊழியங்களின்(அப்போஸ்தலர்/தீர்க்கதரிசி/போதகர்/மேய்ப்பர்/சுவிசேஷகர்)நிறைவேறுதலையும் நீங்கள் திரித்துவத்தை விசுவாசிப்பவர்களிடத்தில் மட்டும் காணமுடியும்.
மேலும் இந்த ஒருத்துவம், இருத்துவம் மற்றும் திரித்துவம் எல்லாம் மீட்பின் உபதேசத்தை சேர்ந்தது அல்ல. மீட்பிற்கு அடிப்படையானது இயேசு தேவனுடையகுமாரன் (சரீரம்) என்று விசுவாசிப்பதும், அவரை சொந்த இரட்சகராகஏற்றுக்கொள்வதும், கல்வாரி சிலுவையின் பலியை அங்கீகரிப்பதுமே ஆகும்.
இயேசுவின் இரத்தால் கழுவப்பட்டவர்கள் மாத்திரமே மீட்க்கப்பட்டவர்கள். இந்த சத்தியத்தைக் குறித்த சரியான அறிவு அவர்களுக்கு மட்டுமே உண்டு. பரிசுத்த ஆவியானவரின் கனிகளும்? (பெரும்பான்மையானவர்களிடத்தில் இல்லையென்றாலும்), வரங்களும் (அநேகர் தவறான விதத்தில் உபேயாகப்படுத்தினாலும்) அவர்களிடத்தில் செயல்படுகிறது. தெய்வீக சுகமளித்தலில்
இன்றளவும் விசுவாசம் உடையவர்கள் அவர்கள் மாத்திரமே. இந்த காரணங்களுக்காகவே நான் ஒருத்துவத்தை விசுவாசித்தாலும், பெந்தேகோஸ்த்தே திரித்துவ சபையில் அங்கத்தினராக இருக்கின்றேன். திரித்துவத்தை விசுவாசிப்போர்களிடதில் மாத்திரம் நான் ஐக்கியம் கொண்டிருக்கின்றேன்.
என்ன!! அவர்கள் பரேலாகம் செல்கையில், இயேசுவே சர்வத்திலும் மேலான ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவன் என்று அப்பொழுது அறிந்து கொள்வார்கள்.
ரோமர் 9:5......; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் (இயேசு) என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
அவர்கள் தேடினாலும் பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் காணவே முடியாது.(நான் வேடிக்கையாக இவ்விதம் நினைத்து பார்ப்பது உண்டு, ஒருவேளை ஆண்டவர்இயேசு, பிலிப்புவை பார்த்து இப்படி சொல்லக்கூடும், பிலிப்புவே, உன்உறவினர்கள்/சொந்தக்காரர்கள் நிறைய பேர் வந்திருக்கின்றார்கள். உன்னுடைய கேள்விக்கு நான் என்ன பதிலை உனக்கு சொன்னேனோ அதே பதிலையே அவர்களுக்கு நீயே சொல்லிவிடு என்பதாக).
யோவான் 14:8 பிலிப்புஅவரைநோக்கி: ஆண்டவரே, பிதாவைஎங்களுக்குக்காண்பியும், அதுஎங்களுக்குப்போதும்என்றான். 9 அதற்குஇயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம்நான்உங்களுடனேகூடஇருந்தும்நீஎன்னைஅறியவில்லையா? என்னைக்கண்டவன்பிதாவைக்கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
ஆனால் திரித்துவத்தை விசுவாசிப்பவர்களுக்கும் ஒரு செக் பாய்ண்ட் உண்டு. அது அவர்களாக ஏற்படுத்திக்கொண்டாலொழிய மற்றபடி பிரச்சனை இல்லை. எடுத்துக்காடாக கூறவேண்டு மெனில், கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பிறகு யூதர்களுக்கு நேர்ந்த அனைத்து துன்பங்களுக்கும் காரணம் தேவன் கிடையாது, பிசாசும் கிடையாது (அவன் ஜனங்களை இயேசுவுக்கு எதிராக சிலுவையில் அறையும்படி தூண்டிவிட்டது உண்மையென்றாலும்). யூதர்கள் தாங்களாகவே தங்கள் தலைமேல் போட்டுக்கொண்ட சாபம் அது.
மத்தேயு 27:25 அதற்குஜனங்களெல்லாரும்: இவனுடையஇரத்தப்பழிஎங்கள் மேலும்எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
மேற்சொல்லப்பட்ட இந்த வார்த்தையின் நிமித்தம் இந்நாள் வரையில் யூதர்கள் எந்த அளவிற்கு துன்பப்பட்டார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதுபோலவே திரித்துவத்தை விசுவாசிப்பவர்கள், மூன்று பேர் என்றாலும் ஒரே தேவனைத் தான் விசுவாசிக்கின்றோம் என்று சொல்லிக்கொள்வார்கள்.அப்படியென்றால் வேதத்தின்படி அந்த ஒரே தேவனுடைய நாமமாகிய “கர்த்தராகியஇயேசு கிறிஸ்து” வின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கலாமா என்றுசொன்னால், இல்லை, இல்லை அது கள்ள உபதேசம் என்று கூறுவார்கள்.
இங்கேதான் திரித்துவத்தை விசுவாசிப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுடைய சுயரூபம் தெரியவரும். ஏனென்றால் அவர்கள் ஒரே தேவனை விசுவாசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் மூன்று தேவன்களைத்தான் விசுவாசிக்கின்றார்கள். அவர்கள் கோதுமை மணி அல்ல, வெறும் பதர் என்று அப்பொழுது தான் தெரியவரும். இவர்களைக் குறித்துதான் ஆண்டவர் சொன்னார்.
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும்கள்ளத்தீர்க்கதரிசிகளும்எழும்பி, கூடுமானால்தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும்அற்புதங்களையும் செய்வார்கள்.
ஆனால் சத்தியம் என்று வரும்போது மாட்டிக்கொள்வார்கள்.
2 தீமோ. 3:1 மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
8 யந்நேயும்யம்பிரேயும்மோசேக்குஎதிர்த்துநின்றதுபோலஇவர்களும்சத்தியத்துக்குஎதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள்துர்ப்புத்தியுள்ளமனுஷர்கள், விசுவாச விஷயத்தில்பரீட்சைக்கு நில்லாதவர்கள். 9 ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடையமதிகேடுஎல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும்வெளிப்படும்.
ஆகவே வேதம் சொல்லுகிறது
அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும்பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானதுஉங்களுக்கும், உங்கள்பிள்ளைகளுக்கும் (யூத ஜாதி),நம்முடையதேவனாகியகர்த்தர்வரவழைக்கும்தூரத்திலுள்ளயாவருக்கும் (புற ஜாதி)உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
மேற்கண்ட இந்த சத்தியத்தை அறியாத வரையில் மற்றும் அதற்கு எதிராக பேசாத வரையில் திரித்துவத்தை விசுவாசிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இச்சத்தியத்தை (கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்) கள்ள உபதேசம் என்று எதிராக பேசுவார்களேயானால் அவர்களுடைய மதிகேடு வெளிப்படும். மேலும் அவர்கள் நியாயதீர்ப்பின் நாளிலே வேதவசனத்திற்கு எதிராகப் பேசினதற்காக பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும்.
அவர்கள் இவ்வுலகில் தொடர்ந்து ஊழியம் செய்யக்கூடும், பரிசுத்த ஆவியின் வரங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து கிரியை செய்யக்கூடும். அநேகரை இரட்சிப்பின்அனுபவத்திலும் நடத்தக்கூடும். ஆனாலும் அந்நாளில் வேதவசனத்தை மறுதலித்தகுற்றத்திற்காக இயேசு அவர்களை அறியேன் என்று சொல்லுவார்.
மேற்கண்ட பரிசுத்த ஆவியின் வரங்களை செயல்படுத்துபவர்கள் யார்? அந்த வட்டத்துக்குள் இருப்பவர்கள் பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட விதத்தில் கரிஸ்மேட்டிக் ஊழியங்களை செய்பவர்கள் மாத்திரமே. தீர்க்கதரிசனங்கள் உரைப்பதும், பிசாசுகளை துரத்துவதும், அற்புதங்களை செய்வதும் தவறான ஊழியங்களா? இல்லை. அப்படியென்றால் தவறான அபிஷேகம் பெற்று ஊழியம் செய்தார்களா? இல்லை அவர்கள் பெற்றிருப்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகேம. ஊழியங்கள் செய்ததும் பரிசுத்த ஆவியின் வரங்களை கொண்டே. பின்னை ஏன் அவர்கள் தள்ளப்பட்டு போனார்கள்? காரணம் என்ன? மேற்கண்ட ஊழியங்கள் எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்தில் செய்தவர்கள், ஞானஸ்நானம் என்று வரும்போது கடைசி காலத்தில் தேவன் வெளிப்படுத்திய வேத சத்தியத்திற்கு (கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்) விரோதமாக கள்ள உபதேசம் என்று பேசின காரணத்தாலேயே.
ஓருவரிடத்தில் வரங்கள் செயல்படுவதால் ஆவியானவர் அவர்களோடு இருக்கிறார் என்று அர்த்தமல்ல. இங்கேதான் கிறிஸ்தவர்கள் தவறு செய்கிறார்கள். வரங்கள்என்பதுGIFTSஅதாவது கொடை அல்லது பரிசு என்று அழைக்கப்படுகிறது.உதாரணத்திற்கு நான் ஒரு பேனாவை உங்களுக்கு பரிசாக அளிக்கின்றேன் என்றுவைத்துக்கொள்வோம். அந்த பேனா இப்போழுது உங்களிடத்தில் இருக்கும். அந்தப்பேனாவை நீங்கள் எழுதுவதற்காக எப்பொழுதெல்லாம் பயன்படுத்துகிறீர்களோ,அப்பொழுதெல்லாம் அது எழுதும். ஆனால் அந்த பேனாவை பரிசாக அளித்த நான்உங்கள் கூடவே இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதுபோலவே வரங்கள் இருக்கும். ஆனால் ஆவியானவர் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் வரங்களை கொண்டே ஊழியம் செய்யமுடியும். கடைசிவரை அன்னிய பாஷை பேசிக்கொண்டே விசுவாசியாய் இருக்கமுடியும்.
அப்படியானால் பரிசுத்தஆவியானவர் ஒருவருக்குள் இருகின்றார் என்பதற்கு அத்தாட்சி என்ன?
1.அவர்கள் வேத வார்த்தைகளுக்கு / சத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மாறாக தெடர்ந்து வேதவசனங்களுக்கு எதிராக பேசும் தவறினை செய்வாரேயானால், பரிசுத்த ஆவியானவர் அவர்களை விட்டு விலகிவிடுவார் (ஆனாலும் வரங்களை அவர்களை விட்டு எடுக்கமாட்டார்).ஆகவேதான் அவர்களால் தொடர்ந்து ஊழியம் செய்யமுடிகிறது. ஆனால் நியாயதீர்ப்பின் நாளிலேதான் அவ்வூழியர்கள் தங்களுடைய தவறினை அறிந்து கொள்வார்கள்.
ஒரு சில ஞானவான்கள் இவ்வாறு கூறுவதுண்டு. அது பேதுருவால் யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம். ஏனென்றால் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகவே யூதர்களில் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வந்தபோது அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆனால் புறஜாதிகள் பிதா, குமாரன், பரிசுத்தஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதாக. ஆனால் வேதத்தை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வாசிப்பவர்கள் எவரும் கொர்னேலியு என்ற புறஜாதியானும் (மற்றும் கொரிந்து, எபேசு சபையை சேர்ந்தவர்கள்) இயேசுகிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதை வேதத்திலிருந்து ஈசியாக புரிந்து கொள்வர். மாத்திரமல்ல சமாரிய ஜனங்களும், பிலிப்புவின் மூலமாக கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதை அப்போஸ்தலர் நடபடிகள் 8-ஆம் அதிகாரத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
ஆக அன்று உலகில் இருந்த சகல ஜாதிகளும் (யூதர்கள், சமாரியர்கள் மற்றும் புறஜாதிகள்) கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்துள்ளனர்என்பதை வேதம் திட்டவட்டமாக போதிக்கின்றது. ஆண்டவர் இயேசுவின்கட்டளையும் நிறைவேறிற்று.
ஒரு சிலர், நாங்கள் இயேசுவின் வார்த்தைக்கு மாத்திரம் செவி கொடுப்போம். அப்போஸ்தலர் வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அப்போஸ்தலராக இருந்தாலும் அவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளை மாற்றக்கூடிய அதிகாரம் இல்லை என்றும் கூறுவார்கள் (நான் அதிகமாக நேசிக்கும், திரித்துவத்தை விசுவாசிக்கும் ஒரு குறிப்பிட்ட வேதபண்டிதர், மற்றும் சில ஊழியர்களும் இவ்வாறு கூறுவது வருத்தத்தை அளிக்கிறது. அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கின்றேன்). அப்படியென்றால் புதிய ஏற்பாட்டிலிருந்து நிருபங்களையெல்லாம் கிழித்து எறிந்து விட வேண்டியதாயிருக்குமே.மேலும் அப்படிச் செய்தால் என்னவாகும்
43 எல்லாருக்கும்பயமுண்டாயிற்று (இன்றைக்கு வசனத்தை குறித்த அந்த பயம் இல்லை). அப்போஸ்தலர்களாலேஅநேகஅற்புதங்களும்அடையாளங்களும்செய்யப்பட்டது. 47 தேவனைத்துதித்து, ஜனங்கெளல்லாரிடத்திலும்தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக்கர்த்தர்அநுதினமும்சபையிலேசேர்த்துக்கொண்டுவந்தார்.
எபிரெயர் 2:1 ஆகையால், நாம்கேட்டவைகளைவிட்டுவிலகாதபடிக்கு, அவைகளைமிகுந்தஜாக்கிரதையாய்கவனிக்க வேண்டும். 2 ஏனெனில், தேவதூதர்மூலமாய்ச்சொல்லப்பட்டவசனத்திற்குவிரோதமானஎந்தச்செய்கைக்கும்கீழ்ப்படியாமைக்கும்நீதியானதண்டனைவரத்தக்கதாகஅவர்களுடையவசனம்உறுதிப்படுத்தப்பட்டிருக்க, 3 முதலாவதுகர்த்தர்மூலமாய்அறிவிக்கப்பட்டு, பின்புஅவரிடத்தில்கேட்டவர்களாலே(அப்போஸ்தலர்கள்) நமக்குஉறுதியாக்கப்பட்டதும்,4அடையாளங்களினாலும்அற்புதங்களினாலும்பலவிதமானபலத்தசெய்கைகளினாலும், தம்முடையசித்தத்தின்படிபகிர்ந்துகொடுத்தபரிசுத்தஆவியின்வரங்களினாலும், தேவன்தாமேசாட்சி கொடுத்ததுமாயிருக்கிறஇவ்வளவுபெரிதானஇரட்சிப்பைக்குறித்துநாம்கவலையற்றிருப்போமானால்(அல்லது அப்போஸ்தலர் மூலமாக சொல்லப்பட்டவசனங்களை கள்ள உபதேசம் என்று சொல்லுவோமானால்) தண்டனைக்குஎப்படித்தப்பித்துக்கொள்ளுவோம்.
வேதவசனங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் எப்படி அவருடைய வார்த்தைக்கு விரோதமாக பேசுவார்? மேலும்
யோவான் 14:26 என்நாமத்தினாலேபிதாஅனுப்பப்போகிறபரிசுத்தஆவியாகியதேற்றரவாளனேஎல்லாவற்றையும்உங்களுக்குப்போதித்து, நான்உங்களுக்குச்சொன்னஎல்லாவற்றையும்உங்களுக்குநினைப்பூட்டுவார் என்று இயேசு சொன்னார்.
இயேசு சொன்னபடி ஏன் பரிசுத்த ஆவியானவர் பேதுருவுக்கு நினைப்பூட்டவில்லை? தேவன் என்னை மன்னிப்பாராக, பரிசுத்த ஆவியானவர் மறந்துவிட்டாரா? சரி விடுங்கள், அட்லீஸ்ட் மத்தேயுவாவது பேதுருவுக்கு நினைப்பூட்டியிருக்கலாமே? ஆனால் இருவருமே அப்படி செய்யவில்லையே.அப்படியென்றால் இயேசு சொன்ன பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம்தான்பேதுரு சொன்ன கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பது நிரூபணமாகிறது. கீழ்காணும்விளக்கத்தின் மூலம் இன்னும் எளிமையாகவும் புரிந்து கொள்ளமுடியும்.பிதாவின் நாமம்குமாரனின் நாமம்பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தர்இயேசுகிறிஸ்துஆக இயேசு என்ன செய்ய சொன்னாரோ அதைத்தான் பேதுரு செய்தார் என்று அறிய முடிகிறது. அதாவது எந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கசொன்னாரோ அந்த நாமத்தில் தான் பேதுரு ஞானஸ்நானம் கொடுத்திருக்கின்றார். பேதுரு மாத்திரம் அல்ல, மற்ற அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் மூலம் அறியமுடிகிறது.ஆகவே திரித்துவத்தை விசிவாசிப்பவர்களுக்கு நான் எச்சரிக்கையாக சொல்ல விரும்புவது என்னவெனில்
கடைசியாக, கத்தோலிக்க சபையின் மூலமாக மாற்றப்பட்ட அநேக சத்தியங்களை தேவன் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொருவர் மூலமாக வெளிப்படுத்தி வந்தார். (தேவத்துவத்தை திரித்துவமாக மாற்றியது, இயேசுவுக்கு பதிலாக மத்தியஸ்தர்களாக மேரி மாதாவையும், அப்போஸ்தலர்களையும் உள்ளே நுழைத்தது. விக்கிரங்களை ஏற்படுத்தியது, இயேசுவின் நாமத்தில் ஜெபம் ஏறெடுப்பதற்கு பதிலாக, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே வேண்டிகொள்கிறோம் என்று ஜெபிப்பது, முழுக்கு ஞானஸ்நானத்திற்கு பதிலாக தெளிப்பு ஞானஸ்நானம் முறையைகொண்டு வந்தது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்திற்கு பதிலாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தது, விசுவாச வாழ்க்கைக்கு பதிலாக சடங்காச்சாரங்களை கொண்டு வந்தது. திருப்பலி என்ற பெயரில் சடங்குகளை செய்வதற்கு பணம் வசூலிப்பது. பரலோகத்திற்கும், நரகத்திற்கும் இடையில் உத்தரிய ஸ்தலம் என்று புதிதாக நுழைத்தது (இவர்கள் திருப்பலி பூசை செய்து மரித்தவர்களை பரேலாகம் செல்ல தகுதி ஆக்குவார்களாம். அதற்கு பணம் கொடுக்க வேண்டும்). பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு பதிலாக குருக்களாட்சி முறையை கொண்டு வந்தது. வேத வசனங்களுக்கு பதிலாக கத்தோலிக்க திருச்சபையின் சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. பரேலாகம், பூமி, பாதாளம் இம்மூன்றிலும் அதிகாரம் உடையவர் என்று போப்பிற்கு கிரீடம் சூட்டி, காணப்பட்ட தெய்வமாக அவரை வணங்குவது (1984-ஆம் வருடத்தில் போப் ஜான்பால் சென்னைக்கு வந்தபோது, மெரீனா கடற்கரைக்கு குடுப்பமாக சென்று அவரை தரிசித்துவிட்டு வந்திருக்கின்றேன்) மரித்த பிறகு மனிதர்களை புனிதர்களாக்குவது இப்படி எத்தைனேயா சொல்லிக்கொண்டே போகலாம். ஏஏய்யப்பா... இப்பேவ கண்ண கட்டுதே). இந்த பொல்லாத பாபிலோனிய வேசி சபையிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தைமக்கு நான் தேவனுக்கு நன்றி உள்ளவனாயிருக்கின்றேன்.
கத்தோலிக்க சபையின் இருண்ட காலங்களிலிருந்து முதன்முதலாக மார்டின் லூத்தர் மூலம் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தைவெளிகொணர்ந்தார். அச்சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் புத்தியுள்ளகன்னிகையானார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் (கத்தோலிக்கர்கள்) புத்தியில்லாதகன்னிகையானார்கள்.
பின்பு வெஸ்லி மூலம் பரிசுத்தமும் தேவை என்ற சத்தியத்தை வெளிகொணர்ந்தார். விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்றசத்தியத்தோடு பரிசுத்தமாகுதல் என்றசத்தியத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் புத்தியுள்ள கன்னிகையானார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் (கத்தோலிக்கர்கள் + லூத்தரன்கள்) புத்தியில்லாதகன்னிகையானார்கள்.
சிலகாலம் கழித்து பாப்டிஸ்ட் சபையினர் மூலம் தெளிப்பு அல்ல முழுக்கு ஞானஸ்நானமே சரி என்ற சத்தியத்தை வெளிகொணர்ந்தார். மேற்கண்ட சத்தியங்களோடு முழுக்கு ஞானஸ்நானம் என்ற சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் புத்தியுள்ள கன்னிகையானார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் (கத்தோலிக்கர்கள் + லூத்தரன்கள் + மெத்தோடிஸ்டுகள்) புத்தியில்லாத கன்னிகையானார்கள்.
பின்னர் அநேக ஆண்டுகள் கழித்து பெந்தேகாஸ்தேயினர் மூலம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், வரங்கள், கனிகள், அற்புத சுகமளித்தல் போன்ற சத்தியங்களைவெளிகொணர்ந்தார். அச்சத்தியங்களை ஏற்றுக்கொண்டவர்கள் புத்தியுள்ளகன்னிகையானார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் (கத்தோலிக்கர்கள் + லூத்தரன்கள் + மெத்தோடிஸ்டுகள் + பாப்டிஸ்டுகள் + ஏராளமான மற்ற சபை பிரிவனரும்) புத்தியில்லாத கன்னிகையானார்கள்.
இப்படி படிப்படியாக ஒவ்வொரு சத்தியமாக ஒவ்வொரு காலங்களிலும் வெளிப்படுத்தி வந்த தேவன் இந்த கடைசி காலத்தில், கடைசி சத்தியமாகியகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பதையும் பரிசுத்தவேதாகமத்திலிருந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்நாட்களில் இம்மாபெரும்சத்தியத்தை ஏற்றுகொள்பவர்கள் மாத்திரமே புத்தியுள்ள கன்னிகையாவர்.விசுவாசியாமல் மறுதலிக்கும் மற்றவர்கள் புத்தியில்லாத கன்னிகை கூட்டத்தில்சேர்க்கப்பட்டு கைவிடப்படுவர்.
கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் உள்ள பிரச்சனை என்னவெனில்,கடந்த காலத்தில் தேவன் செய்த கிரியைகளை ஏற்றுக்கொள்கிறோம் / தேவனுக்கு நன்றி சொல்லுகிறோம்.எதிர்காலத்தில் தேவன் செய்யப்போகிற காரியங்களுக்காக விசுவாசத்தோடே எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றோம். ஆனால் நிகழ்காலத்தில் தேவன் செய்கிறவைகளை காணாமல் விட்டுவிடுகின்றோம்.
பழைய ஏற்பாட்டின் நாட்களில், எகிப்தில் அடிமைபட்டிருந்த ஜனங்களை தேவன் மோசேயின் மூலம் விடுவித்து வெளியே கொண்டு வந்தார். ஆனால் ஜனங்கள் செய்தது என்ன தெரியுமா? எந்த அளவிற்கு மோசேக்கு தொந்தரவு கொடுக்கமுடியுமோ அந்த அளவிற்கு அவனை விசுவாசியாமல் தொந்தரவு கொடுத்தனர். சில சமயங்களில் கல்லெறிந்து கொல்லவும் பார்த்தனர்.
யாத். 17:4 மோசேகர்த்தரைநோக்கிக்கூப்பிட்டு: இந்தஜனங்களுக்குநான்என்னசெய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப்பார்க்கிறார்களேஎன்றான்.
ஆனால் இயேசுவினுடைய நாட்களில் இந்த வணங்கா கழுத்துள்ள ஜனங்களுடைய வாரிசுகளான பரிசேயர்களோ மோசேயை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தேவனால்வல்லமையாக பயன்படுத்தப்பட்ட இயேசுவையோ வெறுத்தார்கள்.
யோவான் 8:59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
நம்முடைய இன்றைய காலகட்டத்திலும் அதுவே சம்பவிக்கின்றது. இன்றைக்கு உலகில் உள்ள அத்தனை ஊழியர்களும், விசுவாசிகளும், சபையின் மறுமலர்ச்சிக்காக தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட மார்ட்டின் லூத்தரையும், வெஸ்லியையும் இன்னும் அநேக ஊழியர்களையும் தேவனுடைய ஊழியர்கள் என்று ஏற்றுகொள்கிறார்கள். ஆனால் அந்த ஊழியர்களின் நாட்களில் பார்ப்போமானால், அன்றைக்கு இருந்த பெரும்பான்மையான கிறிஸ்துவர்களால் கள்ள ஊழியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். மாறாக ஒரு சிறிய கூட்டத்தாரே அவ்வூழியர்களை (அவர்கள் மூலம் சொல்லப்பட்ட சத்தியங்களை) பின்பற்றி வெளியே வந்தார்கள்.
சபையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் ஒரு மனிதனை எழுப்பி அவர்கள் மூலமாய் சபையில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தார். அந்தந்த காலகட்டத்தில் உள்ள பெரும்பான்மையோர் அச்சத்தியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வெகு சிலேர ஏற்றுக் கொண்டனர் (ஆகவேதான் கிறிஸ்தவத்தில் இத்தனை ஏராளமான சபை பிரிவுகள் இருக்கின்றது). இதுவே சபை சரித்திரம் சொல்லும் உண்மை. இந்த கடைசி காலத்திலும் தேவன் அதுபோல் ஒரு ஊழியைர கொண்டு சபையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். வழக்கம்போல் பெரும்பான்மையோர் அவரை கள்ள ஊழியர் என்று நிராகரித்தனர். சத்தியத்தை விசுவாசிக்கும் ஒரு சிறு கூட்ட மக்களே ஏற்றுக்கொண்டனர்.
இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகையில், நாம் காணும் தேவனுடைய சபையில் காணப்பட்ட எல்லா சத்தியங்களும் வெளிப்படுத்தப்பட்டு விட்டமையால்தேவனுடைய சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயுத்தமாக இருக்கின்றது. ஆகவேநாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம்.
மேற்கண்ட எல்லா சத்தியங்களையும் முழுமையாக விசுவாசிப்பவர்கேள மணவாட்டி ஆவர். ஓரே ஒரு சத்தியத்தை மட்டும் விட்டுவிட்டாலும் அவர்கள் புத்தியில்லாத கன்னிகையாய் கைவிடப்பட்டுபோவார். (ஞாபகம் கொள்ளுங்கள் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய ஒரே ஒரு வார்த்தையைத்தான் மீறினர். ஆனால் தண்டிக்கப்பட்டுபோயினர்)
ஆகவே சகோ.அன்பு, கோவை பெரியன்ஸ், யெகோவா சாட்சிகள், வேத மாணவர்கள் மற்றும் எனதருமை தமிழ் கிறிஸ்துவ தளத்தின் திருத்துவ சகோதரர்களே,இப்பொழுது நான் சொல்ல விரும்புகிற காரியம் என்னவெனில்,தேவஆவியானவர் உதவி இல்லாமல் இந்த மகிமையான காரியங்களை அறிந்து கொள்ள முடியாது.
நாம் சத்தியத்தை அறிந்து கொள்ளும்படி நமக்கு வாக்கு பண்ணப்பட்டிருப்பவர் அவரே
யோவான் 16:13 சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகலசத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
அப்படியெனில் அவர் மூன்றாவது நபரா? அல்லது மூன்றாவது தேவனா? கிடையாது. இயேசுவுக்குள் வாசம் செய்த பிதாவாகிய தேவனே இன்றைக்கு எனக்குள் பரிசுத்த ஆவியானவராக வாசம் செய்கிறார்.
ஆகவே பாவத்தினாலேயும், அக்கிரமத்தினாலேயும் மரித்தவர்களான நாம் முதலாவது கிறிஸ்து இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக மீட்பின் அனுபவத்திற்குள் கடந்து வரவேண்டும்.
ஒருவேளை நீங்கள் அனைவரும் இச்சத்தியங்களை ஒத்துக்கொள்ளாமல் அநேக வாதங்களை எடுத்து வைக்கக்கூடும். ஆனாலும் நான் வாதம் செய்ய எழுதவில்லை.உங்களுடைய மறுப்புகளுக்கு எதிராக வாதம் செய்யப்போவதுமில்லை. தேவன்ஒவ்வொருவருக்கும் சுயாதீனத்தை அளித்திருக்கின்றார். அதை நான் மதிக்கின்றேன்.நீங்கள் விரும்பும் சத்தியத்தை விசுவாசிக்க உங்களுக்கு உரிமை உண்டு.அவையெல்லாம் சரியா, தவறாஎன்று நியாயதீர்ப்பின் நாளிலே ஆண்டவர்வெளிப்படுத்துவார். ஆனால் அப்பொழுது காலம் கடந்துவிட்டிருக்கும். ஆனால் நாம்விசுவாசிப்பது சரியா, தவறா என்று இப்பொழுதே நாம் அறிந்துகொள்ளும்படி தேவன்ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கின்றார். அதுவே பரிசுத்த வேதாகமம்.
ஆகவே நீங்கள் விசுவாசிக்கும் சத்தியங்கள் எல்லாம் முழு வேதாகமத்தோடும் ஒத்துபோகிறதா என்று பரிசுத்த ஆவியின் துணையோடு ஒப்பிட்டு பாருங்கள். ஆண்டவர்வேத வசனங்களை குறித்த வெளிப்பாடுகளினால் உங்களை நிரப்புவார்.
கோவை பெரியன்ஸ், யெகோவா சாட்சிகள், வேத மாணவர்களைக் குறித்துயோசிக்கும் போதெல்லாம் இந்த வசனங்களே எனக்கு ஞாபகம் வருகின்றது.
இயேசு யார், எப்படிப்பட்டவர் என்பதை மூளை அறிவைக் கொண்டு கண்டுபிடித்துவிட்டதாக இயேசுவுக்கே விளக்க முற்பட்ட நிக்கொதேமுவை மேற்கொண்டு பேசவிடாமல் கட் பண்ணி முதலில் நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆண்டவர். பின்பு அவன் கேட்ட கிறுக்குதனமான (மன்னிக்கவும்) குழந்ததைனமான கேள்விகளுக்கு ”நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? என்று ஆச்சரியப்பட்டு போனார்.
நிக்கொதேமுவும், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று அறிந்திருந்தும், யூதர்களுக்கு பயந்ததினால்இயேசுவை இரகசியமாக விசுவாசித்தினரேயன்றி மேசியா என்றும் தேவனுடையகுமாரன் என்றும் பகிரங்கமாக அறிக்கை செய்யவில்லை / ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் அவர்கள் ஒருசமயத்தில் பகிரங்கமாக செயல்பட முன் வந்தபோது காலம் கடந்துவிட்டது. இயேசுவின் உயிரற்ற சடலத்தைதான் அவர்களால் பராமரிக்கமுடிந்தது / பரிமள தலைம் பூச முடிந்தது. ஆனால் லாசருவின் சகோதரி மரியாள்இயேசு உயிரோடு இருக்கும்போது பரிமளைதலம் பூசி இயேசுவினடத்தில் பாராட்டுபெற்றாள். அதுபோலவே இயேசுவின் 12 சீஷர்களும்அவர்களிடத்தில் அநேககுறைகள் இருந்தாலும் இயேசுவை மேசியா என்று விசுவாசித்ததினால்/ஏற்றுகொண்டதினால், அவர்கள் கடைசி நேரத்தில் இயேசுவை விட்டுஓடிப்போனாலும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை தரிசிக்கும் பாக்கியம் அவர்களுக்குகிடைத்தது.
மேலும் உங்கள் தளத்திற்கு வருகைபுரிபவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூறுகிற ஒரு காரியம். உங்கள் தளத்திற்கு வந்த பிறகுதான் நாங்கள் வேத அறிவை பெருக்கிக்கொண்டோம் என்று. மன்னிக்கவும் கிறிஸ்துவம் என்பது வேதஅறிவைப் பெருக்குதல் என்பதோடு சம்பந்தப்பட்டது அல்ல. மாறாக
தேவனோடு அப்பா, பிதாவே, தகப்பனே,Daddy என்று ஜக்கியம் கொள்ளுவேதாடு சம்பந்தப்பட்டது. அந்தஜக்கியத்தின் மூலமாகவே வேதவசனங்களை குறித்த வெளிப்பாடுகளையும்பெற்றுகொள்ள முடியும். ஆகவேதான் சங்கீதக்காரன் சொல்லுகிறான், கர்த்தர் நல்லவர்என்பதை ருசித்து பாருங்கள் என்பதாக. அதாவது ஒவ்வொருவரும் தனிப்பட்டவிதத்தில் ருசிக்க வேண்டும்.
ஆகவே முதலாவது மனம் திரும்புங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மறுபிறப்பின் அனுபவத்திற்குள் வாருங்கள். பின்புஊழியம் செய்யுங்கள். உங்கள் அனைவருடைய ஊழியங்களும் ஆண்டவர்இயேசுவுக்கு தேவை.பிசாசின் வஞ்சனைகளுக்கு இடம் கொடாதிருங்கள்.வேதவசனங்களுக்கு முதலிடம் கொடுப்போம்.
ஊழியர்கள் எவ்வளவு நல்லவர்கள் ஆனாலும், எவ்வளவு பெரிய ஊழியங்கள்செய்தாலும், அவர்கள் கிறிஸ்தவ உலகில் எல்லாராலும் பாராட்டப்பட்டாலும், அவர்களுடைய போதனைகளை வேதவசனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துஒத்துப்போனால் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிடில் அப்போதனைகளை ஒதுக்கித்தள்ளுவோம்.
அதேபோல் ஒரு ஊழியர் கள்ள தீர்க்கதரிசி என்று பெரும்பான்மையான ஊழியர்கள் / கிறிஸ்துவர்கள் விசுவாசித்தாலும் அந்த ஊழியர் சொல்லுகிற போதனை, வேதவசனங்களோடு / சத்தியத்தோடு ஒத்துப்போனால், அந்த போதனையைஏற்றுக்கொள்வோம். அந்த பெரும்பான்மையான ஊழியர்களின்(சொந்தபாஸ்டரானாலும் அல்லது ஆவிக்குரிய தகப்பனாக /தாயாக இருந்தாலும்)எண்ணங்களை / கருத்துக்களை மாத்திரம் தள்ளிவிடுவோம். அவர்களையோநேசிப்போம். அல்லேலூயா......
சகோ.ஜோசப்ராஜின் நீண்ட கட்டுரையை பல பாகங்களாகப் பிரித்துத் தந்துள்ளேன். அவரது கருத்துக்களை நான் முழுமையாக ஏற்காவிடினும், அவருங்கூட வசனங்களைச் சார்ந்தே தனது கருத்துக்களைக் கூறியுள்ளார் என்பதால அதை இங்கு வெளியிட்டுள்ளேன்.
அவரது கருத்துக்களை ஆய்வுசெய்து உங்கள் விமர்சனங்களைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன். நானும் எனது விமர்சனத்தை விரைவில் தெரிவிப்பேன்.
அன்பான சகோ.ஜோசப்ராஜ், வசனங்களைச் சார்ந்தே தனது கருத்துக்களைக் கூறியுள்ள போதிலும், தமிழ் வேதவசனங்களை அப்படியே அர்த்தம் எடுத்து வியாக்கியானம் செய்துள்ளதால், அவரது கருத்துக்கள் பல தவறாகிவிட்டன. இவர் சொல்வதுபோலவே நாமும் தமிழ் வேதவசனங்களின் கருத்தை அப்படியே எடுத்துக்கொண்டால், பல விபரீதங்களுக்கு அது வழிவகுக்கும். உதாரணமாக, நியாயத்தீர்ப்பு எனும் வார்த்தையின் கருத்தை எடுத்துக்கொள்வோம். பிதாவாகிய தேவனும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுடையவர், குமாரனாகிய இயேசுவும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுடையவர், எனவே இருவரும் ஒருவரே எனும் முடிவுக்கு ஜோசப்ராஜ் வருகிறார். அவரது கருத்துக்கு ஆதாரமான வசனங்கள்:
யோவான் 5:22 அன்றியும் ........... பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல், நியாயத்தீர்ப்புசெய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு (இயேசுவுக்கு) ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
1 பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், இங்கே பரேதசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
முதல் வசனத்தின்படி, இயேசுவானவர் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ளவராய் இருக்கிறார். 2-ம் வசனத்தின்படி நியாயத்தீர்க்கிறவரை பிதாவாக நாம் தொழுதுகொள்கிறோம். இவ்விரு வசனங்களின் கருத்தை ஒருங்கிணைத்து, நியாயத்தீர்ப்பு செய்கிற இயேசுவையே பிதாவாகத் தொழுதுகொள்கிறோம் என்கிறார் ஜோசப்ராஜ். அவரது கருத்து அப்படியே இருக்கட்டும். ஆனால் அத்தோடு பின்வரும் வசனங்கள் கூறுவதையும் ஒருங்கிணைத்தால் என்னாகும்?
லூக்கா 22:30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்
இவ்வசனங்களின்படி பார்த்தால், இயேசுவின் சீஷர்களும் பரிசுத்தவான்களுமாகிய ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்பு செய்கிறவரே. எனவே 1 பேதுரு 1:17-ன் அடிப்படையிலான ஜோசப்ராஜின் வாதப்படி, நியாயந்தீர்க்கிறவர்களாகிய பரிசுத்தவான்கள் ஒவ்வொருவரையும் நாம் பிதாவாகத் தொழுதுகொள்கிறோம் எனக் கூறவேண்டியதாகும். இது ஒரு விபரீதமல்லவா? இந்த விபரீதத்தை ஜோசப்ராஜ் ஏற்றுக்கொள்வாரா?
பின்வரும் வசனங்களையும் படிப்போம்.
யோவான் 12:47,48 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ள இயேசு: “நான் நியாயந்தீர்ப்பதில்லை, என் வசனம்தான் நியாயந்தீர்க்கும்” என்கிறார். அப்படியானால் 1 பேதுரு 1:17-ன்படி, நியாயந்தீர்க்கிறதான வசனத்தைத்தான் நாம் பிதாவாக தொழுதுகொள்கிறோமா?
இப்படித்தான் வசனங்களின் இயல்பான கருத்துக்களை (தேவைப்பட்டால் மூலபாஷை கருத்தையும் ஆராய்ந்து) அறியாமல் ஒரு முடிவுக்கு வந்தால், விபரீதமான கருத்துக்களையும் சந்திக்க நேரிடும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, ஜோசப்ராஜின் மிகப்பெரிய கட்டுரையின் பதத்திற்கு, மேலே சொன்ன ஓர் உதாரணம் பதம்.
மிகவும் சிரத்தைகொண்டு ஜோசப்ராஜ் கட்டுரை வனைந்துள்ளார். ஆனால் ஒரு தவறான கருத்தை முன்னதாகவே தீர்மானித்துவிட்டு கட்டுரையை எழுதியுள்ளதால், தனது தீர்மானமான முடிவுக்கு ஏற்ப வசனங்களை வளைத்துள்ளார். இன்னும் பல உதாரணங்களோடு ஜோசப்ராஜின் தவறுகள் எடுத்துரைக்கப்படும்.
19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும்எழுதப்பட்டிருந்தது.
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா எனும் பட்டப்பெயர்கள் பிதாவுக்கும் இயேசுவுக்கும் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் ஒருவரே என்கிறார் ஜோசப்ராஜ்.
இவரது வாதப்படியே பார்த்தால், ராஜா எனும் பட்டப்பெயர் தாவீதுக்கும் சாலொமோனுக்கும் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் ஒருவரே என்றாகிவிடும்.
ஒருமுறை தேசாதிபதியின் கேள்விக்கு இயேசு பதில் சொல்கையில், அவர் தம்மை யூதருடைய ராஜா எனக் கூறினார் (மத்தேயு 27:11). எனவே யூதருடைய ராஜாவான தாவீதும் இயேசுவும் ஒருவரே என்றாகிவிடுமா? இயேசு தம்மை வெறுமனே “யூதருடைய ராஜா” என்று மட்டும் சொன்னதால், அவர் மற்றவர்களுக்கு ராஜா இல்லையா? மற்றவர்களுக்கு ராஜா இல்லையெனில், அவர் எப்படி ராஜாதி ராஜாவாக இருக்கமுடியும்? ஜோசப்ராஜின் தவறான ஒரு கருத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பார்த்தால் இப்படித்தான் பல முரண்பாடுகள் தோன்றும்.
ஒரு பட்டப்பெயர் இருவருக்குக் கூறப்படுவதால், இருவரும் ஒருவராகிவிட மாட்டார்கள் என்பதை சகோ.ஜோசப்ராஜ் அறியவேண்டும்.
1 தீமோ. 6:15-ல், அவரே (பிதாவே, அதாவது பிதா ஒருவரே) நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதிகர்த்தாவும், எனக் கூறப்பட்டுள்ளதால், பிதா ஒருவர் மட்டுமே ராஜாதி ராஜாவும், கர்த்தாதிகர்த்தாவுமாக இருக்கிறார் என முடிவெடுத்துள்ளார் ஜோசப்ராஜ். எனவேதான் இயேசுவையும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா எனப் பிறவசனங்கள் கூறுவதை வைத்து, பிதாவும் இயேசுவும் ஒருவரே எனும் முடிவுக்கு வருகிறார். ஆனால் 1 தீமோ. 6:15-ல் காணப்படும் “அவரே” எனும் அடைமொழி வார்த்தை “ஏகசக்கராதிபதி” எனும் பட்டப்பெயருக்கு மட்டுமே பொருந்துமேயன்றி, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” எனும் பட்டப்பெயர்களுக்குப் பொருந்தாது. ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தால், இவ்வுண்மையை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
1 Tim 6:15 Which in his times he shall shew, who is the blessed and only Potentate, the King of kings, and Lord of lords. KJV
1 Tim 6:15 which God will bring about in his own time-God, the blessed and only Ruler, the King of kings and Lord of lords. NIV
இவ்விரு மொழிபெயர்ப்புகளிலும், only எனும் அடைமொழி வார்த்தை, Potentate மற்றும் Ruler எனும் பட்டப்பெயர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிதாவாகிய தேவனும் “ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக” இருக்கிறார்; குமாரனாகிய இயேசுவும் “ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக” இருக்கிறார். இருவரும் “ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக” இருப்பதால், இருவரும் ஒருவரே எனும் வாதம் தவறானதாகும்.
1 தீமோ. 6:15-ல் ஒருவராய் சாவாமையுள்ளவர் என பிதாவைக் குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ மரித்து உயிர்த்தெழுந்தவர். எனவே சாவாமையுள்ளவராகிய பிதாவும், மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவும் நிச்சயமாக ஒருவராய் இருக்க இயலாது.
-- Edited by anbu57 on Wednesday 22nd of June 2011 10:28:44 AM
யோவான் 5:22 அன்றியும் ........... பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல், நியாயத்தீர்ப்புசெய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு (இயேசுவுக்கு) ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்கிற வசனமே ஒப்புக்கொடுத்தவர் என்றும் பெற்றுக்கொண்டவரும் என்று இரு வேறு நபர்களை காண்பிக்கிறதே!! அப்படி என்றால் குமாரனுக்கு ஒருவர் ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்றால் இருவரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
இயேசு தொழப்படத்தக்கவர் என்பதற்கு ஆதாரமாக சகோ.ஜோசப்ராஜ் சில வசனங்களைத் தந்துள்ளார்; ஆனால் அவற்றில் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல. இதைச் சொல்வதற்கு பிற மொழிபெயர்ப்புகளையோ அல்லது மூலபாஷையையோ எடுக்கத்தான் வேண்டியதுள்ளது. ஆனால் ஜோசப்ராஜோ, தமிழ் வேதாகமம் சொல்வதை மட்டும்தான் ஏற்பேன், பிற மொழிபெயர்ப்புகளோ மூலபாஷையோ தேவையில்லை என்கிறார். எனவே நான் சொல்வதை அவர் ஏற்பாரா என்பது சந்தேகமே. ஆயினும் மற்ற அன்பர்களுக்காக, மூலபாஷை மற்றும் பிற மொழிபெயர்ப்புகளைக் கொண்டு ஜோசப்ராஜ் தந்துள்ள வசனங்களின் சரியான கருத்தை சொல்ல வேண்டியது அவசியமாயுள்ளது.
வெளிப்படுத்துதல் 1:17 ……………; அப்பொழுது அவர் (இயேசு) தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: ................;
18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
வெளிப்படுத்துதல் 4:9 மேலும், சிங்காசனத்தின்மேல்வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு (யாருக்கு இயேசுவுக்கு) அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு (இயேசுவுக்கு) முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் (இயேசுவை) தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களை சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:
வெளிப்படுத்துதல் 19:4 இருபத்துநான்குமூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் (இயேசுவை) தொழுது கொண்டார்கள்.
ரோமர் 10:12,13 மற்றும் 1 கொரி. 1:2 வசனங்களில் காணப்படும் தொழுதுகொள்தல் எனும் வார்த்தைக்கு இணையாக call on எனும் சொற்றொடர் ஆங்கில வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூலபாஷையில் காணப்படும் epikaleomai (ep-ee-kal-eh'-om-ahee) எனும் வார்த்தையின் அர்த்தம்: to entile; by implication, to invoke (for aid, worship, testimony, decision, etc.):
KJV - appeal (unto), call (on, upon), surname.
இத்தகவலை ஆராய்ந்து, ரோமர் 10:12,13 மற்றும் 1 கொரி. 1:2 வசனங்களில் “தொழுதுகொள்ளுதல்” எனும் வார்த்தையை பயன்படுத்தலாமா அல்லது “அழைத்தல்/வேண்டுதல்” எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா எனத் தீர்மானிக்கும்படி சகோ.ஜோசப்ராஜ் மற்றும் அன்பர்களை வேண்டுகிறேன்.
அடுத்து, வெளி. 1:17-க்கும் 4:9-க்கும் இடையே “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்” எனும் சொற்றொடரின் அடிப்படையில் ஒரு தொடர்பை உண்டாக்கி, வெளி. 4:9 குறிப்பிடுகிற “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்” இயேசுவே என முடிவு செய்து, இயேசுவை வணங்க வேண்டும் எனும் முடிவுக்கு ஜோசப்ராஜ் வந்துள்ளார்.
வெளி. 1:17 வசனத்திலுள்ள “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்” எனும் சொற்றொடர் இயேசுவையே குறிப்பிடுகிறது என்பதில் சந்தேகமில்லை. அதுபோலவே வெளி. 4:9-லுள்ள “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்” எனும் சொற்றொடர் பிதாவாகிய தேவனையே குறிப்பிடுகிறது என்பதையும் நாம் சந்தேகமின்றி புரிந்துகொள்ளலாம்.
வெளி. 1:10 கூறுகிற எக்காள சத்தம் நிச்சயமாக இயேசுவினுடையதே. அந்த எக்காள சத்தம் தான் வெளி. 2,3 அதிகாரங்களில் யோவானிடம் பேசினது. அதாவது இயேசுதான் வெளி. 2,3 அதிகாரங்களில் யோவானுடன் பேசினார். பின்னர் 4-ம் அதிகாரத்தில் அதே எக்காள சத்தம் (அதாவது இயேசுவானவர்) யோவானிடம் வேறொரு காட்சியைப் பார்க்கும்படி கூறினதாக 1-ம் வசனத்தில் பார்க்கிறோம்.
அந்த எக்காள சத்தம் காட்டின காட்சியைக் குறித்துதான் வெளி. 4:2-ம் வசனம் முதல் யோவான் விவரிக்கிறார். எனவே எக்காள சத்தத்திற்கும் (அதாவது எக்காள சத்தமுடைய இயேசுவுக்கும்) 2-ம் வசனத்தில் காட்டப்பட்ட காட்சிக்கும் சம்பந்தமில்லை. அதாவது 2-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளவரான ”சிங்காசனத்தில் வீற்றிருந்தவர்” இயேசு அல்ல. மாறாக, அவர் பிதாவாகிய தேவனாகத்தான் இருக்க வேண்டும். அவரை வணங்கி தொழுவதைத்தான் 10,11 வசனங்கள் கூறுகின்றன.
இயேசுவும் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவர்தான்”, பிதாவும் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவர்தான்”. இயேசுவானவர் மரித்து உயிர்த்தெழுந்து “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார்” (வெளி. 1:18); ஆனால் பிதாவாகிய தேவனோ மரிக்காமல் “சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார்”. இருவரும் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவர்களே” என்பதால் இருவரும் ஒருவரே எனும் முடிவுக்கு வருவது சரியல்ல.
வெளி. 19:4-ல் தேவனைத் தொழுது கொண்டார்கள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜோசப்ராஜோ, அவ்வசனத்தில் “தேவன்” எனும் வார்த்தை “இயேசுவையே” குறிப்பிடுவதாகக் காட்டும்வண்ணம் “இயேசுவை” எனும் வார்த்தையை அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளார். இது அவரது அறியாமையா, அல்லது அறிந்தே செய்கிற வேதப்புரட்டா என்பதை தேவனே அறிவார்.