சகோ. ஜோசப் அவர்கள் மிக நேர்த்தியான மிகப்பெரிய கட்டுரை ஒன்றை வடிவமைத்த தந்துள்ளார்கள் அதில் அனேக ஆவிக்குரிய விஷயங்கள் வெளிப்படுத்தபட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களது கருத்தின் அடிப்படை "இயேசுவே பிதாவாகிய தேவன்" என்ற ஒருத்துவ கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கருதுகிறேன். ஒருபுறம் இருந்து பார்த்தால் அவரது கருத்து சரியானது போல தெரிந்தாலும் நாம் வசனங்களின் இருபுறத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதே சிறந்தது.
தங்களின் கட்டுரையில் வசன அடிப்படையில் சகோ. அன்பு எழுப்பி யிருக்கும் கேள்விக்கு தங்கள் பதில் என்னவென்பதை அறிய ஆவல்.
நானும் ஒருத்துவமாகிய "தேவன் ஒருவரே" என்ற கொள்கை உடையவனும்
அதன் அடிப்படையிலேயே கருத்துக்களை தருகிவனாகவே இருப்பதால் என்னுடைய கருத்துக்களையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
அதாவது தேவனே அனைத்துக்கும் அடிப்படையும் ஆதாரமுமானவர் சகலத்திலும் சகலமுமானவர். அவரால் அனுப்பபட்ட கர்த்தராகிய இயேசுவும், "வேறொரு தேற்றவாளர்" என்று இயேசு குறிப்பிடும் பரிசுத்த ஆவியானவரும் தேவனால் அனுப்பபட்டவர்கள். எனவே நடக்கும் அனைத்துக்கும் அடிப்படை பிதாவாகிய தேவனே!
சுருங்க சொல்லின் "தேவன் தன் வார்த்தையை மாம்சமாக்கி அதனுள் தானே வந்து வாசம் செய்தார்" எனவே "தேவத்துவம் முழுவதுமே இயேசுவுக்குள் வாசமாய் இருந்தது" என்பது உண்மை! ஆகினும் தேவன் நினைத்தால் மாம்சத்தில் இருந்த இயேசுவை விட்டு பிரிந்து சென்றுவிட முடியும். சிலுவையின் இறுதி நேரத்தில் தேவன் இயேசுவை விட்டு பிரித்து சென்றுவிட்டார்.
மத்தேயு 27:46ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
எனவே பிதாவானவர் முற்றிலும் சுதந்திரமாக செயல்படும் தன்மை உடையவர். அவர் சகலத்திலும் சகலத்திலும் சகலமாக இருப்பவர் கிறிஸ்த்துவோ பிதாவுக்கு சதா காலங்களிலும் கீழ்படிந்து இருப்பவர்:
மேலும் தேவனின் வார்த்தையே மாம்சமாகி கிறிஸ்த்துவாக உலகுக்கு வந்திருந்தபோதும், தேவனும் இயேசுவும் தனிப்பட்ட ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கும் பல்வேறு வசனங்கள் வேதத்தில் உள்ளன.
உதாரணமாக ஆண்டவராகிய இயேசு பூமியில் இருந்த காலங்களில்
பிதாவாகிய தேவன் வானத்தில் இருந்து பலமுறை அவரை குறித்து
சாட்சி கொடுத்திருக்கிறார்.
மத்தேயு 3:17அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
லூக்கா 9:35அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
யோவான் 12:28பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
இவ்வாறு இயேசு பூமியில் மனுஷனாக திரிந்த காலங்களில் உன்னதத்தில் இருந்து உண்டான் சத்தம் பிதாவினுடயது. தாங்கள் சொல்வதுபோல் "இயேசுவே பிதா" என்றால் அந்த சத்தம் யாரால் உண்டானது என்று சற்று விளக்கவும்.
அடுத்து ஆண்டவராகிய இயேசுவை பாடுகளுக்குட்படுத்தினவரும் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பியவரும் "தேவனாகிய கர்த்தர்" என்று வேதம்
தெளிவாக சொல்கிறது. அது கர்த்தரின் சித்தம் என்றும், தேவனாகிய கர்த்தரின் அந்த சித்தத்துக்கே கெத்சமனே தோட்டத்தில் இயேசு தன்னை ஒப்புகொடுத்து ஜெபித்தார் என்பதை அறியமுடியும்.
ஏசாயா 53:10கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;
........... கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் தேவனே!
அப் 5:30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, அப் 2:32இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; அப்ர் 13:30தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
எத்தனையோ வசனங்கள் சொல்கின்றன "தேவனே இயேசுவை எழுப்பினார்" என்று பிறகு இருவரும் ஒருவர் என்பது எவ்வாறு சாத்தியம்?
சகோதரர்களே "தேவனும் இயேசுவும் வெவ்வேறு ஆள்தத்துவம் உள்ளவர்கள்" என்பதை தெரிவிக்கவே மேலேயுள்ள வசனங்களை திரட்டி எழுதியிருக்கிறேன். மற்றபடி என்னுடய அடிப்படை கருத்து "தேவன் தன்
வார்த்தையை மாம்சமாக்கி, அவரை தனி ஆள்தத்துவம் உள்ளவராக்கினார் அவரே ஆண்டவராகிய இயேசு என்பதே!
அது எப்படியெனில் "ஆதாம் உடம்பில் இருந்து ஒரே ஒரு எலும்பை எடுத்து ஏவாள் என்னும் தனி ஆள்தத்துவம்உள்ள ஒரு ஸ்திரியை தேவன் உருவாக்கினார். இருவரும் தனித்தனியாக இருந்தாலும் ஒரே மாம்சம் என்று வேதம் சொல்கிறது! அதேபோல், தேவனின் வார்த்தையே மாம்சமானது அவரே "இயேசு' என்னும் தனி ஆள்தத்துவம் உள்ள தேவன். இருவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்களாக இருந்தாலும் இருவரும் ஒருவரில் ஒருவரே" என்பதே எனது கருத்து!
ஆதாமின் எலும்பில் உருவாக்கப்பட்ட ஏவாளுக்கு ஆதாம் தலையாக இருக்கிறான் அதாவது "ஸ்திரிக்கு புருஷன் தலை" அதுபோல் கிறிஸ்த்துவுக்கு தேவனே தலை!
I கொரி 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
தலையும் சரீரமும் வேறுவேறாக இருக்கலாம் ஆனால் அங்கு முழுமை இருக்காது! அதேபோல் தலை என்னும் தேவன் இல்லாமல் சரீரமாகிய கிறிஸ்த்துவில் முழுமை இல்லை! அதே போல் சரீரமாகிய கிறிஸ்த்து
இல்லை எனில் தேவத்துவத்தில் முழுமை இல்லை!
-- Edited by SUNDAR on Friday 17th of June 2011 06:23:36 PM
நண்பர் கோவை பெரியன்ஸ் அவர்களையும், நண்பர் சுந்தர் அவர்களையும் வரவேற்கிறேன். உங்களுடைய தளங்களில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், எல்லா பதிவுகளையும் வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். (Office Lunch timeநேரத்தை பயன்படுத்தி, அந்த சமயத்தில் எல்லோரோடும் சேர்ந்து சாப்பிடாமல், தனியாக என்னுடைய கேபினில் சாப்பிடும் சமயத்தில் எல்லா தளங்களின் பதிவுகளையும் வாசித்துவிடுவேன்) எல்லோரோடும் பேசவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் வாஞ்சையுண்டு. ஆனால் பதிவிடுவதற்குதான் நேரமுமில்லை, வீட்டில் கம்ப்யூட்டரும் இல்லை. ஆகவே தவறாக எண்ணவேண்டாம்.
உபதேசம் என்று வரும்போது, நாம் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்களாக இருக்கின்றோம். முழுக்கு ஞானஸ்நானமா? தெளிப்பு ஞானஸ்நானமா? / வெள்ளை துணிகளை மாத்திரம் உடுத்தவேண்டுமா, இல்லையா / நகையை கழட்டலாமா, வேண்டாமா / அன்னியபாஷை தேவையா? தேவையில்லையா? / செழிப்பு உபதேசம் சரியா? தவறா? / சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உபத்திரகாலதிற்கு முன்பா? பின்பா? இது போன்ற அநேக உபதேசங்களில் எல்லோருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த சத்தியத்தில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இவை எதுவுமே நாம் இலவசமாக பெற்ற இரட்சிப்பை பாதிக்கப்போவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவிப்பது தவறானதாகும். ஆனால் அப்படி கருதும் ஒரு அரோக்கியமற்ற சூழ்நிலை கிறிஸ்தவ தமிழ் இணயதளங்களில் காண்பது வருத்தமளிக்கிறது.
நான் ஆரோக்கியமான விவாதத்தையே விருப்புகின்றேன். இதுவரையில் எந்த ஒரு விவாதத்திலும் அதிகமாக நான் ஈடுபட்டதில்லை. அந்த திறமையும் எனக்கு இல்லை. ஒவ்வொரு தளத்திலும் பதிவிடும் ஒவ்வொருவரும் விவாதிப்பதில் மிகுந்த திறமைசாலிகளாய் இருப்பதை கண்டு ஆச்சரியப்படுகின்றேன். ஒரு சில பொதுவான பதிவுகளில் ஒன்றிறெண்டு கருத்துக்களை மாத்திரம் சொல்லியிருக்கின்றேன். நான் விரும்புவதெல்லாம் ஒரு பார்வையாளனாக இருந்து அதிகபட்சம் சத்தியங்களை கற்றுக்கொள்வது மாத்திரமே. ஆனால் முதன் முதலாக ஒரு விவாததில் கலந்து கொண்டால்தான் என்ன? என்ற எண்ணம் தோன்றியிருகின்றது. காரணம் “இயேசு தொழுதுகொள்ளபடதக்கவரா?” என்கிற விஷயம் என்னை பொருத்தவரையில் வெறும் உபதேசம் அல்ல மாறாக சத்தியம். அச்சத்தியம் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாய் இருக்கின்றது. ஆனால் அந்த அஸ்திபாரத்தையே அதுவும் வேத வசனங்களை கொண்டே இடிக்கும் / ஆட்டுவிக்கும் முயற்சிகளில் சில கிறிஸ்தவ பிரிவுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இறங்கியிருப்பதை கண்டு மனம் வேதனைப்படுகின்றது. ஆகவேதான் தேவாவியானவரின் துணையுடன் ஒரு கட்டுரையை வேதவசனங்களின் அடிப்படையில் தயாரித்தேன். விவாதிப்பதற்காக அல்ல. ஆனால் இப்பொழுது அக்கட்டுரையிலிருந்து பலர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் இந்த முடிவு. மற்றுமொரு காரணம் அப்படி ஈடுபடும்போது அதிகமான நேரத்தை வேதத்தில் செலவிட வேண்டும் என்ற கட்டாயத்தை அது ஏற்படுத்துகின்றது. அதிகமான மொழிபெயர்ப்புகளை மற்றும் மூல பாஷைகளை referபண்ண வேண்டியதாயிருக்கும் (அன்பு அவர்களே, சந்தோஷம் தானே). ஆகவே அந்த விதத்தில் எனக்கு தனிப்பட்டவிதத்தில் மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகின்றேன். அதேசமயத்தில் வெறும் விவாதத்தின்மூலம் மற்றவர்களுக்கு சத்தியங்களை புரிய வைக்க் முடியாது என்றும் அறிந்திருக்கின்றேன். எழுதப்பட்ட வசனங்களின் விளக்கங்களை வாசிக்கும் நபர்களின் மனதை திறக்கும்படியாக பரிசுத்த ஆவியானவரையே சார்ந்து இருக்கின்றேன். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு தளத்தில் ஒரே சப்ஜெக்ட்டில் பதிவிடும்போது எல்லோருடைய கருத்துக்களும் சிதறி போகாமல் வாசிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
ஆகவே இப்பதிவை வாசிக்கும் மற்ற தளங்களை சேர்ந்த அன்பர்கள் ஒவ்வொருவருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறேன். சகோ.சுந்தர் அவர்களே, முதலில் சகோ.அன்பு / சகோ.பெரியன்ஸ் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு பின்பு உங்களுடைய கருத்துக்களுக்கு முடிந்த வரையில் சீக்கிரமாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.
”இன்னும் பல உதாரணங்களோடு ஜோசப்ராஜின் தவறுகள் எடுத்துரைக்கப்படும்”
தாராளமாக எடுத்துரையுங்கள். நானும் மனிதன்தானே, தவறே செய்ய முடியாத தேவன் அல்லவே. தவறு இருப்பின், வேத வசன ஆதாரத்தோடு நிரூபிக்கப்படுமானால் திருத்திக்கொள்ளவே விரும்புகிறேன்.
”முதல் வசனத்தின்படி, இயேசுவானவர் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ளவராய் இருக்கிறார். 2-ம் வசனத்தின்படி நியாயத்தீர்க்கிறவரை பிதாவாக நாம் தொழுதுகொள்கிறோம். இவ்விரு வசனங்களின் கருத்தை ஒருங்கிணைத்து, நியாயத்தீர்ப்பு செய்கிற இயேசுவையே பிதாவாகத் தொழுதுகொள்கிறோம் என்கிறார் ஜோசப்ராஜ். அவரது கருத்து அப்படியே இருக்கட்டும். ஆனால் அத்தோடு பின்வரும் வசனங்கள் கூறுவதையும் ஒருங்கிணைத்தால் என்னாகும்?
லூக்கா 22:30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்
இவ்வசனங்களின்படி பார்த்தால், இயேசுவின் சீஷர்களும் பரிசுத்தவான்களுமாகிய ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்பு செய்கிறவரே. எனவே 1 பேதுரு 1:17-ன் அடிப்படையிலான ஜோசப்ராஜின்வாதப்படி, நியாயந்தீர்க்கிறவர்களாகிய பரிசுத்தவான்கள் ஒவ்வொருவரையும் நாம் பிதாவாகத் தொழுதுகொள்கிறோம் எனக் கூறவேண்டியதாகும். இது ஒரு விபரீதமல்லவா? இந்த விபரீதத்தை ஜோசப்ராஜ் ஏற்றுக்கொள்வாரா?”
சகோ.அன்பு அவர்களே, 1 பேதுரு 1:17-இல் தெளிவாக நியாயந்தீர்க்கிறவரை என்று ஒருவரை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பகுதியை வாசிக்கும்போதே அந்த ஒருவர் யார் என்று வாசிக்கின்றவர்கள் சுலபமாக புரிந்துகொள்வார்கள்.
ஆங்கிலத்தில் வாசிப்பீர்கள் என்றால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
(1Pet 1:17[NET])
And if you address as Father the one who impartially judges according to each one’s work, live out the time of your temporary residence here in reverence.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசனங்களில் லூக்கா 22:30-ல், 12 சீஷர்கள், வெறும் 12 கோத்திரங்களை மாத்திரம் நியாயம் தீர்ப்பதை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எல்லோரையும் அல்ல.
அதுபோல் 1 கொரி.6:2 மற்றும் 3-ல், பரிசுத்தவான்கள் உலகத்தையும், தேவதூதர்களையும் நியாயம்தீர்ப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நியாயம்தீர்க்கிறபரிசுத்தவான்களே நியாயதீர்ப்புக்கு உட்பட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்று கீழ்காணும் வசனங்கள் சொல்லுகிறது.
(1Pet 4:17)
நியாயத்தீர்ப்பு தேவனுடையவீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே (யார் இவர்கள், தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்தவர்கள், பரிசுத்தவான்கள், சீஷர்களும் அதில் அடக்கம்) அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
உபதேசம் என்று வரும்போது, நாம் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்களாக இருக்கின்றோம். முழுக்கு ஞானஸ்நானமா? தெளிப்பு ஞானஸ்நானமா? / வெள்ளை துணிகளை மாத்திரம் உடுத்தவேண்டுமா, இல்லையா / நகையை கழட்டலாமா, வேண்டாமா / அன்னியபாஷை தேவையா? தேவையில்லையா? / செழிப்பு உபதேசம் சரியா? தவறா? / சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உபத்திரகாலதிற்கு முன்பா? பின்பா? இது போன்ற அநேக உபதேசங்களில் எல்லோருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த சத்தியத்தில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இவை எதுவுமே நாம் இலவசமாக பெற்ற இரட்சிப்பை பாதிக்கப்போவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவிப்பது தவறானதாகும். ஆனால் அப்படி கருதும் ஒரு அரோக்கியமற்ற சூழ்நிலை கிறிஸ்தவ தமிழ் இணயதளங்களில் காண்பது வருத்தமளிக்கிறது.
அன்புடன்,
ஜோசப்ராஜ்
தங்களின் தாழ்மையுடன் கூடிய பக்குவப்பட்ட பதிலுக்கு நன்றி சகோதரரே. தாங்கள் நிலைதான் என்னுடையதும் சரியான வார்த்தைகளுடன் தொடரும் விவாதம் ஒரு எல்கைவரை ஏற்றதே. அனால் எல்கையை மீறி வார்த்தைகள் போகும்போது அதை நிருத்திவிடுவதே சிறந்தது.
பொதுவாக இந்த திரியில் தலைப்பின் அடிப்படையில் பார்த்தால் நம் இருவருக்கும் இடையில் பெரிய கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
நான் தேவ ஆவியானவரையும் கிறிஸ்த்துவின் ஆவியானவரையும் தனித்தனியே என்னுடைய அனுபவத்தில் அறிந்திருப்பதால், இருவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை இங்கு விளக்கினேன். மற்றபடி "இயேசுவின் தேவத்துவம்" பற்றிய கருத்தில் நம்முள் பெரிய வேறுபாடு இல்லை என்றே நான் கருதுகிறேன்.
தேவத்துவத்தை பற்றிய முழுமையை அறிந்தவர்கள் எவருமில்லை! எனவே
கிறிஸ்த்தவத்தின் அடிப்படையை அசைக்கும் சிலகாரியஙகளை தவிர மற்ற காரியங்களை பற்றிய விவாதத்தை நாம் தவிர்ப்பது நலமே!
ஆகினும் நாம் அறிந்துகொண்டதுதான் முழுமையானது என்ற முடிவுக்கு வராமல், தொடர்ந்து வேதத்தை தியானித்து சரியான உண்மைகளை வெளிப்படுத்தும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிப்பதே தேவத்துவம் பற்றிய மேலும் பல உண்மைகளை அறிந்துகொள்ள வழிசெய்யும் என்பது எனது கருத்து!
எந்த ஒரு காரியத்திலுமே "தவறான நிலை" "சரியான நிலை" "மேன்மையான நிலை" என்ற மூன்று நிலைகள் உண்டு! அதில் மேன்மையானதை அடைய ஒவ்வொருவரும் முயற்ச்சிக்க வேண்டும் என்பதே எனது வாஞ்சை.
யோவான் 12:47,48 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரமுள்ள இயேசு: “நான் நியாயந்தீர்ப்பதில்லை, என் வசனம்தான் நியாயந்தீர்க்கும்” என்கிறார். அப்படியானால் 1 பேதுரு 1:17-ன்படி, நியாயந்தீர்க்கிறதான வசனத்தைத்தான்நாம் பிதாவாக தொழுதுகொள்கிறோமா?”
ஆம், அதிலென்ன சந்தேகம். நல்லதொரு வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.ஆனால் அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
(John 12:49)
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
(John 12:50)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
ஆக இயேசு பேசின வசனங்கள் பிதாவினுடையது. மேலும்
(John 1:1 [NET])
In the beginning was the Word, and the Word was with God, and the Word was fully God.
(John 8:16)
(இயேசு) நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின் (வசனத்தின்) படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
(John 14:10)
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
ஜோசப்ராஜ்: //இது போன்ற அநேக உபதேசங்களில் எல்லோருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த சத்தியத்தில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இவை எதுவுமே நாம் இலவசமாக பெற்ற இரட்சிப்பை பாதிக்கப்போவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவிப்பது தவறானதாகும். ஆனால் அப்படி கருதும் ஒரு அரோக்கியமற்ற சூழ்நிலை கிறிஸ்தவ தமிழ் இணயதளங்களில் காண்பது வருத்தமளிக்கிறது.//
உபதேசவேறுபாடுகளினால் சத்தியம் மாறுகிறதே!! உமது வசனமே சத்தியம் என்கிற போது, அவர் அவர் ஒவ்வொரு சத்தியத்தில் உறுதியாக இருப்பது எப்படி சரியாக படுகிறது!! சத்தியத்தில் மாறுபாடு இருந்தாலும் இரட்சிப்பு அனைவருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே!! ஏனென்றால் இரட்சிக்கப்பட்ட பிறகு சத்தியம் தெரியாதவர்கள் சத்தியத்தையும் நீதியையும் கற்றுத்தர கிறிஸ்து இயேசு தன் சபையோடு வருவாரே!!
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தேவன் எல்லாரையும் இரட்சித்து அதன் பின் சத்தியத்தை அறிகிற அறிவை தர சித்தமுள்ளவராக தான் இருக்கிறார்!!
மனிதர்களை எதிர்த்து என்ன செய்வது!! வசனத்தை அவமாக்குவோர் இருக்க தான் செய்வார்கள்!! வஞ்சகம் அநேகருக்குள் செயல்ப்படும்!! தேவன் யார் என்று தெரியாதவரையில் யாரை துதிக்கிறோம் என்கிற அறிவே இல்லாதவர்களாக தான் இருக்க முடியும்!! தேவன் மூன்றாக, மூன்று ஒருவராக என்கிற மாதிரியான வஞ்சகங்களினால் கிறிஸ்தவ மண்டலம் இன்று இருக்கிறது!! வஞ்சிக்கும் ஆவிகளுடன், துருபதேசங்களுக்கு விரோதமாக, மாறுபாடான சுவிசேஷத்திற்கு எதிராக தான் போராட்டமே தவிர, மனிதர்களை ஏதிர்ப்பதினால் என்ன பயன்!!
//காரணம் “இயேசு தொழுதுகொள்ளபடதக்கவரா?” என்கிற விஷயம் என்னை பொருத்தவரையில் வெறும் உபதேசம் அல்ல மாறாக சத்தியம். அச்சத்தியம் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாய் இருக்கின்றது. //
இந்த விசுவாச அறிக்கையின் மீது தான் கிறிஸ்து சபையை ஸ்தாபிக்கிறார்!! கிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்பதை பிதாவே பேதுருவிற்கு வெளிப்படுத்துகிறதாக வசனம் சொல்லுகிறது!!
மத்தேயு 16:17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
பார்த்தீர்களா, கிறிஸ்து தேவனின் குமாரன் என்கிறா அறிக்கை என்கிற அந்த அசைக்க முடியாத அந்த அஸ்திபார கல்லின் மேல் தான் தன் சபையை கட்டுவதாக கிறிஸ்து சொல்லுகிறார்!! நீங்கள் வேதம் வாசிப்பவர் தான், ஒரு வசனம், ஒரே ஒரு வசனம், கிறிஸ்துவை தொழுதுக்கொள்பவர் தான் கிறிஸ்தவர்கள், அல்லது நீங்கள் எழுதியது போல், கிறிஸ்துவை தொழுதுக்கொள்வது தான் கிறிஸ்துவத்தின் அடிப்படை சத்தியம் அல்லது அஸ்திபாரம் என்பதற்கு ஆதாரமான ஒரு வசனம் இருக்கிறதா!!??
கிறிஸ்தவம் என்பது பாரம்பரியத்தினாலோ, பாரம்பரிய பாடல்களினாலோ, அல்லது சபை விசுவாசப்பிரமானத்தினாலோ அல்ல, மாறாக சத்திய வசனங்களினால் மாத்திரமே!! அந்த வசனங்கள் எல்லாரும் புரிந்துக்கொள்ளும்படியாக ஒரு கதைப்புத்தகம் போல் கொடுக்கப்படாமல், இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று ஜோடியான வசனங்களை கொண்டது!!
ஏசாயா 28:10 கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
ஏசாயா 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
வேதத்தை வாசிக்கும் போது இனை வசனங்கள் (ஜோடி வசனம்) மற்றும் ஒத்த வாக்கிய வசனங்களையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
விவாதத்தில் கலந்துகொண்ட சகோ.பெரியன்ஸ் மற்றும் சுந்தருக்கும் பதில் விவாதத்தை வைத்த சகோ.ஜோசப்ராஜுக்கும் நன்றி.
பிதாவும் நியாயத்தீர்க்கிறவராய் இருக்கிறார், குமாரனும் நியாயத்தீர்க்கிறவராய் இருக்கிறார் என்ற ஒற்றுமையை வைத்து இருவரும் ஒருவரே எனும் முடிவுக்கு சகோ.ஜோசப்ராஜ் வந்ததால், அவரது முடிவு சரியல்ல என்பதைக் காட்டும்வண்ணமாய், பரிசுத்தவான்கள் மற்றும் இயேசுவின் சீஷர்களும் நியாயத்தீர்க்கிறவர்களாய் இருக்கின்றனர், இயேசுவின் வசனமும் நியாயந்தீர்ப்பதாய் இருக்கிறது என்பதற்கு ஆதாரமான வசனங்களைக் கொடுத்து, நியாயந்தீர்ப்பவர்கள் அனைவரும் “ஒருவரே” என்றாகிவிடமுடியுமா என நான் கேட்டிருந்தேன்.
எனது வாதத்திற்கு பதிலளித்த ஜோசப்ராஜ், இயேசுவின் 12 சீஷர்கள் 12 கோத்திரத்தாரை மட்டுமே நியாயந்தீர்ப்பவர்கள் என்கிறார். அவர் சொல்வது சரியே. எனவே அவர்களை பிதாவுடன் அல்லது இயேசுவுடன் இணைத்துப் பேசமுடியாதுதான்.
ஆனால் 1 கொரி. 6:2-ல் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்கள், உலகம் முழுவதையும் தேவதூதர்களையுங்கூட நியாயந்தீர்ப்பவர்களாக இருக்கின்றனர். அதாவது இயேசுவுக்கு பிதாவால் என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அதே அதிகாரம் பரிசுத்தவான்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிகாரத்தைக் கொடுக்கிற பிதாவும், அதிகாரத்தைப் பெற்ற இயேசுவும் இணையாகப் பேசப்படமுடியுமெனில், பிதாவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற இயேசுவும் அதே அதிகாரத்தைப் பெற்ற பரிசுத்தவான்களும் ஏன் இணையாகப் பேசப்படக்கூடாது?
பரிசுத்தவான்கள், தாங்களுங்கூட நியாயம் விசாரிக்கப்படுகிறவர்களாய் இருக்கின்றனர் என ஜோசப்ராஜ் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக, 1 பேதுரு 4:17; யாக்கோபு 5:9; 1 கொரி. 4:4 வசனங்களை அவர் காட்டியுள்ளார். அவர் சொல்வது சரியே. ஆனால் இயேசுவுங்கூட தேவனால் நியாயம் விசாரிக்கப்படும் நிலையில்தான் இருந்தார் என்பதையும் அவர் அறிய வேண்டும். இதற்கு ஆதாரமான பின்வரும் வசனத்தைப் படிப்போம்.
ஏசாயா 53:8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளவர் இயேசுவே என்பதை ஜோசப்ராஜ் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். ஒருவேளை மறுத்தால், பின்வரும் வசனங்களைப் படிப்பாராக.
எபிரெயர் 5:7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, 8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
இயேசுவின் பாடுகளின் மூலமே அவர் கீழ்ப்படிதலைக் கற்று, அதன் பின்னரே அவர் பூரணரானார் என வசனம் சொல்கிறது. இப்படியாக அவர் பூரணராகும்படி பாடுகளுக்குட்பட்டதைத்தான் “இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலிமிருந்து” எடுக்கப்பட்டார் என ஏசாயா 53:8 கூறுகிறது. எனவே இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இயேசுங்கூட தேவனால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டார் என வேதாகமம் கூறுகிறது. இதேவிதமாகத்தான், இயேசுவோடுகூட இவ்வுலகை நியாயந்தீர்க்கப்போகிற பரிசுத்தவான்களும், இவ்வுலகில் தேவனால் நியாயந்தீர்க்கப்படுகின்றனர்.
ஆனால் உயிர்தெழுதலுக்குப் பின் (அதாவது வெளி. 20:4,5 கூறுகிற முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பின்) பரிசுத்தவான்கள் நியாயத்தீர்ப்பு அடைவதில்லை. இவர்கள் கிறிஸ்துவோடுகூட 1000 வருஷம் அரசாளுவார்கள் என வெளி. 20:6 கூறுகிறது. இப்பரிசுத்தவான்களும் இயேசுவும், தாங்கள் தேவனால் நியாயத்தீர்ப்புக்குள்ளாகிற விஷயத்திலும், பிறரை அவர்கள் நியாயந்தீர்க்கும் விஷயத்திலும் ஒரே நிலையில்தான் உள்ளனர்.
இப்படி ஒரே நிலையில் இருப்பதால் இயேசுவும் அவர்களும் சமமாக முடியுமா, அல்லது “ஒருவராக” ஆக முடியுமா? நிச்சயம் முடியாது.
இதேபோல்தான் “நியாயந்தீர்க்கிறவர்” எனும் ஒரு தகுதியை வைத்து, இயேசுவும் பிதாவும் சமமாகவும் முடியாது, ஒருவராகவும் முடியாது.
உண்மையில் இயேசுவுக்கு நியாயந்தீர்க்கும் அதிகாரத்தைக் கொடுப்பது தேவனே. அதிகாரத்தைக் கொடுத்தவரும் (பிதா), அதிகாரத்தைப் பெற்றவரும் (குமாரன்) எப்படி சமமாக முடியும், ஒருவராக முடியும்?
எபிரெயர் 5:10-ன்படி இயேசு பிரதான ஆசாரியராக இருக்கிறார். வெளி. 20:6-ன்படி பரிசுத்தவான்கள் ஆசாரியர்களாக இருக்கின்றனர். அதாவது இயேசு பிரதான ஆசாரியர், பரிசுத்தவான்கள் ஆசாரியர்கள். “பிரதான” எனும் அடைமொழிதான் இயேசுவையும் பரிசுத்தவான்களையும் வித்தியாசப்படுத்துகிறது. அவ்வாறே நியாயத்தீர்ப்பு விஷயத்தில், இயேசு பிரதான நியாயாதிபதி, பரிசுத்தவான்கள் நியாயாதிபதிகள். “பிரதான” எனும் அடைமொழிதான் இயேசுவுக்கும் பரிசுத்தவான்களுக்கும் வித்தியாசம். ஆனால் பிதாவாகிய தேவனோ, தம்மில்தாமே நியாயந்தீர்க்கும் அதிகாரமுடையவர். அவர் தமது அதிகாரத்தை இயேசுவுக்கும் பரிசுத்தவான்களுக்கும் கொடுத்ததன் காரணமாகத்தான் அவர்கள் (இயேசுவும் பரிசுத்தவான்களும்) நியாயந்தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றனர். சகோ.பெரியன்ஸின் பின்வரும் பதிவையும் நினைவூட்டுகிறேன்.
//யோவான் 5:22 அன்றியும் ........... பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல், நியாயத்தீர்ப்புசெய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு (இயேசுவுக்கு) ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்கிற வசனமே ஒப்புக்கொடுத்தவர் என்றும் பெற்றுக்கொண்டவரும் என்று இரு வேறு நபர்களை காண்பிக்கிறதே!! அப்படி என்றால் குமாரனுக்கு ஒருவர் ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்றால் இருவரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்!!//
இப்படியிருக்க, “நியாயந்தீர்க்கிறவர்” என இயேசுவையும் பிதாவையும் வேதாகமம் கூறுவதை அடிப்படையாக வைத்து, இயேசுவும் பிதாவும் ஒருவரே எனக் கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது.
ஜோசப்ராஜ்: // ... கருத்து வேறுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவிப்பது தவறானதாகும். ஆனால் அப்படி கருதும் ஒரு ஆரோக்கியமற்ற சூழ்நிலை கிறிஸ்தவ தமிழ் இணயதளங்களில் காண்பது வருத்தமளிக்கிறது.//
தங்கள் ஆதங்கமும் வருத்தமும் நியாயமானதே. இத்தளத்தில் இதுவரை எப்படியிருந்தாலும், இனி வரும் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
நாம் எந்த அவசரமுமின்றி நிதானமாக விவாதிப்போம். தேவன்தாமே நம் விவாதங்கள் நமக்கும் பிறருக்கும் பயனாயிருக்கும்படி ஆசீர்வதிப்பாராக.
//”ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாஎனும் பட்டப்பெயர்கள் பிதாவுக்கும் இயேசுவுக்கும் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் ஒருவரே என்கிறார் ஜோசப்ராஜ்.
இவரது வாதப்படியே பார்த்தால்,ராஜாஎனும் பட்டப்பெயர் தாவீதுக்கும் சாலொமோனுக்கும் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் ஒருவரே என்றாகிவிடும்.”\\ ராஜாதி ராஜா என்றால் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா என்று அர்த்தம். அதாவது ராஜா என்பது பொதுவான பட்டம். அந்த பட்டத்தை எத்தனை பேர் வேண்டுமானாலும் பெற முடியும். ஏன் நாமும்கூட ராஜாவாக இருக்கிறோம் என்று வெளி.1:6 கூறுகிறது.
(Rev 1:6)
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக்கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
ஆக அந்த எல்லா ராஜாக்களுக்கும் மேலே ஒரு ராஜா இருக்கின்றார். அவர்தான் ராஜாதிராஜா என்று அழைக்கப்படுகின்றார். அப்படியென்றால் ராஜாக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால் ராஜாதிராஜாவாக ஒருவர்தான் இருக்கமுடியும். இரண்டு பேர் அல்ல. அதுபோலவே தேவாதி தேவன் (தேவர்களுக்கெல்லாம் தேவன்), கர்த்தாதி கர்த்தர் (கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தர்) என்ற பதமும் ஒருவரை மட்டும் குறிக்கும் பதங்களாகும்.
(1Cor 8:5)
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
(1Cor 8:6)
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
//”ஒரு பட்டப்பெயர் இருவருக்குக் கூறப்படுவதால், இருவரும் ஒருவராகிவிட மாட்டார்கள் என்பதை சகோ.ஜோசப்ராஜ் அறியவேண்டும்.”//
ஆக ராஜாதிராஜா, கர்த்தாதி கர்த்தர் என்று ஒருவரை மட்டுமே குறிக்கும் பட்டபெயர்கள் இருவருக்கு கூறப்படுவதால், அவ்விருவரும் ஒருவரே என்பதை இப்பொழுதாவது நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என் நம்புகிறேன்.
//”1 தீமோ. 6:15-ல்,அவரே(பிதாவே, அதாவது பிதா ஒருவரே)நித்தியானந்தமுள்ளஏகசக்கராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதிகர்த்தாவும்,எனக் கூறப்பட்டுள்ளதால், பிதா ஒருவர் மட்டுமேராஜாதிராஜாவும், கர்த்தாதிகர்த்தாவுமாகஇருக்கிறார் என முடிவெடுத்துள்ளார் ஜோசப்ராஜ். எனவேதான் இயேசுவையும்ராஜாதிராஜா, கர்த்தாதி கர்த்தாஎனப் பிறவசனங்கள் கூறுவதை வைத்து,பிதாவும் இயேசுவும் ஒருவரேஎனும் முடிவுக்கு வருகிறார். ஆனால் 1 தீமோ. 6:15-ல் காணப்படும் “அவரே” எனும் அடைமொழி வார்த்தை “ஏகசக்கராதிபதி” எனும் பட்டப்பெயருக்கு மட்டுமே பொருந்துமேயன்றி, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” எனும் பட்டப்பெயர்களுக்குப் பொருந்தாது. ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தால், இவ்வுண்மையை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
1 Tim 6:15 Which in his times he shall shew, who is the blessed and only Potentate, the King of kings, and Lord of lords. KJV
1 Tim 6:15 which God will bring about in his own time-God, the blessed and only Ruler, the King of kings and Lord of lords. NIV
இவ்விரு மொழிபெயர்ப்புகளிலும்,onlyஎனும் அடைமொழி வார்த்தை,Potentateமற்றும்Rulerஎனும் பட்டப்பெயர்களுக்கு மட்டுமே பொருந்தும்.”//
அப்படியென்றால் அடுத்த வசனத்தை குறித்து என்ன?
(1Tim 6:16) KJV
Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen.
உங்களுடைய வாதத்தின்படி only என்பது, immortality எனும் வார்த்தைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற வார்த்தைகளுக்கு பொருந்தாது. இது சரியான விளக்கமா?
என நான் எழுதினால், நால்வரும் ஒருவரே எனும் உண்மையை நான் ஒத்துக்கொண்டதாகக் கூறுவீர்களா?
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறைத் திருத்திவிட்டேன். நீங்கள் மேற்கோள் காட்டிய எனது வாசகத்தை பின்வருமாறு படிக்கும்படி வேண்டுகிறேன்.
//”பிதாவாகிய தேவனும்“ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக”இருக்கிறார்; குமாரனாகிய இயேசுவும்“ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக”இருக்கிறார். இருவரும்“ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக”இருப்பதால், இருவரும் ஒருவரே எனும் வாதம் தவறானதாகும்.”//
பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு, அர்தசஷ்டா, நேபுகாத்நேச்சார் எனும் இந்நால்வரும்“ராஜாதி ராஜாவாக”இருப்பதால், நால்வரும் ஒருவரே எனும் வாதம் எப்படி தவறானதோஅதுபோலவே, பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுவும்“ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக”இருப்பதால், இருவரும் ஒருவரே எனும் வாதமும் தவறானதாகும்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், “ராஜாதி ராஜா, மற்றும் கர்த்தாதி கர்த்தா” என்பதெல்லாம் பட்டப்பெயர்கள். ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக இருப்பவர் ராஜாதி ராஜா; கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராக இருப்பவர் கர்த்தாதி கர்த்தா. எனவேதான் அர்தசஷ்டாவும் “ராஜாதி ராஜா” எனப்படுகிறார்; நேபுகாத் நேச்சாரும் “ராஜாதி ராஜா” எனப்படுகிறார்.
பட்டப்பெயர் ஒற்றுமையை வைத்தெல்லாம் பிதாவும் இயேசுவும் ஒருவரே என நிரூபிக்க நீங்கள் முற்பட்டால், பிதாவும் அர்த்தசஷ்டாவும் ஒருவரே என்றும் சொல்ல வேண்டி வரும்; பிதாவும் நேபுகாத் நேச்சாரும் ஒருவரே என்றும் சொல்ல வேண்டி வரும். எனவே வேறு உருப்படியான வசனங்களை வைத்து “பிதாவும் இயேசுவும் ஒருவரே” என நிரூபிக்கப் பாருங்கள்.
//ஏதோ தவறுதலாக ஒரு வார்த்தை மாறிவிட்டது சகோதரரே! ஒத்துக்கொள்கிறேன். அதற்காக நான் உண்மையை ஒத்துக்கொண்டதாக நீங்கள் கூறுவது தவறு.
ஒருவேளை நான் தவறுதலாக பின்வருமாறு எழுதியிருந்தால், அதற்கும் இதேமாதிரிதான் சொல்வீர்களா?//
சகோ.அன்பு அவர்களே,
உங்களுடைய பதிவை வாசிக்கும்போதே புரிந்து கொண்டேன் அது ஒரு Typographical Errorஎன்று. நான் நகைச்சுவையை விரும்புகிறவன். ஆகவே சும்மா ஒரு ஜோக்காக இருக்கட்டுமே என்று நினைத்து எழுதினேன். ஆனால் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான், உங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று அறிந்து கொண்டேன். வருத்தப்படுகின்றேன். தயவு கூர்ந்து மன்னியுங்கள்.
//உங்களுடைய பதிவை வாசிக்கும்போதே புரிந்து கொண்டேன் அது ஒரு Typographical Errorஎன்று. நான் நகைச்சுவையை விரும்புகிறவன். ஆகவே சும்மா ஒரு ஜோக்காக இருக்கட்டுமே என்று நினைத்து எழுதினேன். ஆனால் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான், உங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று அறிந்து கொண்டேன். வருத்தப்படுகின்றேன். தயவு கூர்ந்து மன்னியுங்கள்.//
அன்பான சகோதரரே!
உங்கள் நகைச்சுவை வார்த்தைகளால் நான் புண்படவில்லை. உண்மையில் நான் தவறாக எழுதியதும், அத்தவறை உங்களுக்கு சாதகமான வாதமாக நீங்கள் மாற்றிக் கொண்டதும் ஒருவகையில் நன்மைக்கே. ஏனெனில், அவற்றால்தான் எனது வாதத்தை வலுப்படுத்தும்விதமாக “அர்தசஷ்டா மற்றும் நேபுகாத்நேச்சாரைக்” காட்டக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்து.
எனவே உங்கள் நகைச்சுவையான comment-க்காக நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை சகோதரரே!
joseph wrote: //அப்படியென்றால் அடுத்த வசனத்தை குறித்து என்ன?
(1Tim 6:16) KJV
Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen.
உங்களுடைய வாதத்தின்படி only என்பது, immortality எனும் வார்த்தைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற வார்த்தைகளுக்கு பொருந்தாது. இது சரியான விளக்கமா?//
ஆம், அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
சாவாமையுள்ள ஒருவராகிய தேவன்: “மனிதன் எட்டமுடியாத ஒளிக்குள் வாசம்பண்ணுகிறார், அவரை ஒரு மனிதனும் பார்க்கவில்லை, பார்க்கவும் முடியாது, அவருக்கு கனமும் நித்திய வல்லமையும் உண்டாவதாக” என வசனம் கூறுகிறது.
இங்கு “ஒருவர்” எனும் அடைமொழி சாவாமைக்கு மட்டுமே உரித்தாகும். அந்த ஒருவரைக் குறித்து 3 குறிப்புகள் வசனத்தின் பின்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
1. மனிதன் எட்டமுடியாத ஒளிக்குள் அவர் வாசம்பண்ணுகிறார் 2. அவரை ஒரு மனிதனும் பார்க்கவில்லை 3. அவரை ஒரு மனிதனும் பார்க்கவும் முடியாது
ஆனால் வேறொருவருக்கும் பொருந்தவில்லை என்பதே உண்மை. எப்படியெனில், தேவனைத் தவிர “வேறொருவருக்கு” அம்மூன்று குறிப்புகளும் ஒருவேளை பொருந்துவதாக இருந்தால், அந்த “வேறொருவர்” இயேசுவாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் இயேசுவோ மனிதன் எட்டமுடிந்த இடத்தில் வாசம்பண்ணினார், பல மனிதர்கள் அவரைப் பார்க்கவும் செய்தனர். எனவே இயேசுவுக்கு அந்த 3 குறிப்புகளும் பொருந்தாது.
எனவே அந்த 3 குறிப்புகளும் சாவாமையுள்ள தேவன் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்.
joseph wrote: //ஆக அந்த எல்லா ராஜாக்களுக்கும் மேலே ஒரு ராஜா இருக்கின்றார். அவர்தான் ராஜாதிராஜா என்று அழைக்கப்படுகின்றார். அப்படியென்றால் ராஜாக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால் ராஜாதிராஜாவாக ஒருவர்தான் இருக்கமுடியும். இரண்டு பேர் அல்ல.//
உங்களது இக்கூற்று பின்வரும் வசனங்கள் மூலம் தவறாகிப்போனதை அறிந்தீர்கள் அல்லவா?
//ஆக அந்த எல்லா ராஜாக்களுக்கும் மேலே ஒரு ராஜா இருக்கின்றார். அவர்தான் ராஜாதிராஜா என்று அழைக்கப்படுகின்றார். அப்படியென்றால் ராஜாக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால் ராஜாதிராஜாவாக ஒருவர்தான் இருக்கமுடியும். இரண்டு பேர் அல்ல.//
உங்களது இக்கூற்று பின்வரும் வசனங்கள் மூலம் தவறாகிப்போனதை அறிந்தீர்கள் அல்லவா?
இரண்டு நல்ல உதாரணங்களை காண்பித்துள்ளீர்கள். அதன்மூலம் என்னுடைய கூற்றிற்கு வலுசேர்த்திருக்கின்றீர்கள். அர்த்தசாஷ்டாவும், நேபுகாத்நேச்சாரும் என்ற இரண்டு பேர் ராஜாதிராஜாவாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் ஒரே சமயத்தில் அல்ல. அதாவது இரண்டு பேரும் வெவ்வேறு கால கட்டங்களில்,வெவ்வேறு சாம்ராஜ்யங்களில் . நான் கூறியதும் இதுதான். இப்பொழுது வாசித்துப்பாருங்கள்.
”அப்படியென்றால் ராஜாக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்க முடியும். ஆனால் ராஜாதிராஜாவாக ஒருவர்தான் இருக்கமுடியும். இரண்டு பேர் அல்ல”
அதாவது ராஜாதிராஜாவாக இரண்டு பேர் ஒரே சமயத்தில் ஆட்சி செய்யமுடியாது என்ற அர்தத்திலேயே கூறியிருக்கின்றேன். உங்கள் உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். அர்தசஷ்டா என்கிற ராஜாதிராஜா 127 நாடுகளை அரசாண்டான் என்று எஸ்தர் 1:1 சொல்லுகிறது.
(Esth 1:1)
இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
அப்படியென்றால் 127 நாடுகளிலும் ராஜாக்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் அர்தசஷ்டாவோ அந்த 127 ராஜாக்களுக்கும் மேலாய் ராஜாதிராஜாவாய் இருந்திருக்கின்றார். அவருடைய காலகட்டத்தில் வேறு யாரும் அர்தசஷ்டாவுக்கு இணையாய் ராஜாதிராஜாவாய் அழைக்கப்பட்டார்களா / இருந்திருக்கின்றார்களா என்பதை நிரூபிக்கும்படி வேண்டுகிறேன். அதுபோல பாபிலோன் சாம்ராஜியத்தை ஆண்ட ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் விஷயத்திலும்.
(அன்பு அவர்களே, பின்னிட்டேள் போங்க. உங்களுடைய இந்த விளக்கத்தை நான் மிகவும் ரசித்தேன்).
சரி உங்கள் வாதத்தின்படி இரண்டுபேரும் (பிதாவும், இயேசுவும்) சதாகாலங்களிலும் உயிரோடிருக்கின்றார்கள். இப்பொழுதும், எப்பொழுதும்.
அப்படியென்றால், நாம் மேற்கண்ட விளக்கங்களின்படி ராஜாதிராஜாவாக இரண்டுபேர் ஒரே சமயத்தில் இருந்ததில்லை. ஒருவர்தான் இருந்திருக்கின்றார். ஆனால் இங்கேயோ என்றென்றும் சதாகாலமும் ஒரே சமயத்தில் உயிரோடு இருக்கும் இருவர் (உங்கள் வாதத்தின்படி) ராஜாதிராஜா, கர்த்தாதி கர்த்தர் என அழைக்கப்படுகின்றார்கள். அப்படியென்றால் அவ்விருவரும் ஒருவரே என்றுதான் அர்த்தம்.
மேலும் கர்த்தாதி கர்த்தர் என்ற பதத்தை எடுத்துக்கொள்வோம். 1 திமோத்தேயு 6:15-இன் படி பிதாவும் கர்த்தாதி கர்த்தர் என்று அழைக்கப்படுகின்றார். வெளி.17:14 மற்றும் 19:16-இன் படி இயேசுவும் கர்த்தாதி கர்த்தர் என்று அழைக்கப்படுகின்றார். ஆனால் ஒரே ஒரு கர்த்தர்தான் இருக்கின்றார். அந்த ஒரே கர்த்தர் இயேசுவே எனவும் வேதம் கூறுகிறது.
(1Cor 8:6)
............ இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
(Eph 4:5)
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
joseph wrote: //அர்தசஷ்டா என்கிற ராஜாதிராஜா 127 நாடுகளை அரசாண்டான் என்று எஸ்தர் 1:1 சொல்லுகிறது.
(Esth 1:1) இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
அப்படியென்றால் 127 நாடுகளிலும் ராஜாக்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் அர்தசஷ்டாவோ அந்த 127 ராஜாக்களுக்கும் மேலாய் ராஜாதிராஜாவாய் இருந்திருக்கின்றார். அவருடைய காலகட்டத்தில் வேறு யாரும் அர்தசஷ்டாவுக்கு இணையாய் ராஜாதிராஜாவாய் அழைக்கப்பட்டார்களா / இருந்திருக்கின்றார்களா என்பதை நிரூபிக்கும்படி வேண்டுகிறேன்.//
அன்பான சகோதரரே!
எஸ்தர் 1:1-ல் கூறப்பட்டுள்ளவர் அர்தசஷ்டா அல்ல, அகாஸ்வேரு என்பவர்.
இனி, அர்தசஷ்டாவின் காலகட்டத்தில் வேறு யாரும் அவருக்கு இணையாய் ராஜாதிராஜாவாய் அழைக்கப்பட்டார்களா / இருந்திருக்கின்றார்களா எனும் உங்கள் கேள்விக்கான பதில்.
என்ன சகோதரரே! பிதாவாகிய தேவன் சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவர்தானே? அவர் சதாகாலங்களிலும் ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார் தானே? அவ்வாறெனில் அர்தசஷ்டாவின் காலத்தில் அர்தசஷ்டாவும் ராஜாதி ராஜாவாக இருந்துள்ளார், பிதாவாகிய தேவனும் ராஜாதி ராஜாவாக இருந்துள்ளார், அப்படித்தானே? எனவே உங்கள் வாதப்படி பார்த்தால், அர்தசஷ்டாவின் காலத்தில் அர்தசஷ்டாவும் பிதாவாகிய தேவனும் ஒருவரே, அப்படித்தானே? அவ்வாறே நேபுகாத் நேச்சாரின் காலத்தில் நேபுகாத் நேச்சாரும் பிதாவாகிய தேவனும் ஒருவரே, அப்படித்தானே?
ராஜாதி ராஜா எனும் பட்டப்பெயரைக் கொண்டுள்ளதன் அடிப்படையில், இயேசுவின் காலத்தில் இயேசுவும் பிதாவாகிய தேவனும் ஒருவரே எனக் கூறும் நீங்கள், மேற்கூறிய கூற்றுக்களையும் ஏற்கத்தான் வேண்டும். அவற்றை ஏற்கிறீர்களா இல்லையா என்பதை முதலில் கூறும்படி வேண்டுகிறேன்.