இத்தலைப்பில் கோவை பெரியன்ஸ் தளத்தில் ஒரு திரி துவக்கப்பட்டு, பதிவுகள் பதியப்பட்டுள்ளன. அவற்றை இத்தள அன்பர்களும் படித்து பயனடையும்படி அவை இங்கு பதியப்படுகின்றன.
31-5-2011-ல் soulsolution பதித்த முதல் பதிவு:
//தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவின் ஊழியம் ஒரு பிரதான ஆசாரியனின் ஊழியத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ள வேத வசனங்கள் ஏராளம். வேதம் மீண்டும் மீண்டும் அவரை ஒரு பிரதான ஆசாரியராகக் கூறினாலும் நம்மவர்கள் அவரை பிதாவாகிய தேவனாக கற்பிக்கிறார்கள். அவருக்கு அவரே பிரதான ஆசாரியரா? இயேசு தன்னை சகோதரன் என்றும் பல முறை கூறியிருக்கிறார், சிநேகிதன் என்றும் கூறியிருக்கிறார்.
"எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தம் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதனிமித்தம் அவர்களைச் சகோதரர்களென்று சொல்ல வெட்கப்படாமல்: சபைநடுவில் உம்மைத்துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயில்ருப்பேன் என்றும்; இதோ நானும் தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்..... அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியிருந்தது." எபி2:11 முதல் 17.
இதில் யார் யாரைத் துதித்துப்பாடுகிறார்கள், யார் யார்மேல் நம்பிக்கை வைக்கிறார்? தமது மரணத்தினாலே பிசாசை அழிக்கிறார்(?)14. பிரதான ஆசாரியர் என்றால் என்ன அர்த்தம். நாம் தேவனைத்தொழுதுகொள்வதா, பிரதான ஆசாரியரைத் தொழுதுகொள்வதா? அவரே பூசாரி அவரே சாமி என்ற கதையாக்குகிறார்கள் கிறிஸ்தவர்கள்.
"இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும்(போச்சுடா), பிரதான ஆசாரியருமாயிருக்கிற(இன்னும்) கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தது போல, இவரும்தம்மை ஏற்படுத்தினவருக்கு(?) உண்மையுள்ளவராயிருக்கிறார்.எபிரேயர்3:1 முதல்..
"வானங்களின் வழியாய்ப் பரலோகத்ற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் ந்மக்கு இருக்கிறபடியால்... எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். 4:14,14
"அந்த்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும் நீர் மெல்கிசெதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்(?) என்று சொல்லியிருக்கிறார். அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்து தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம்(?) கேட்கப்பட்டு... எபி5:5 ,7
"மெல்கிசெதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.5:10
"நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசெதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிரார் 6:20
"...இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலும் இருப்பாரென்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.//
31-5-2011-ல் soulsolution பதித்த 2-வது பதிவு:
//"அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும் நீர் மெல்கிசெதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்(?) என்று சொல்லியிருக்கிறார். அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்து தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம்(?) கேட்கப்பட்டு... எபி5:5 ,7
"மெல்கிசெதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.5:10
"நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசெதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிரார் 6:20
"...இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலும் இருப்பாரென்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்
"மேற்சொன்னவைகளின் முக்கியமான பொருள் என்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நம்க்குண்டு... ....அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார் 8:1,2,6.
இயேசுகிறிஸ்து தேவனுக்கு ஊழியஞ்செய்கிற நித்திய பிரதான ஆசாரியராகத்தான் இருக்கிறார் என்று வேதத்தில் ஆயிரம் வசனங்கள் இருந்தாலும் இந்தக் கண்மூடிக் கிறிஸ்தவம் அவரை பிதாவுக்கு நிகராக, ஏன் பிதாவாகவே உயர்த்தி, இயேசுகிறிஸ்துவின் போதனைகளுகே விரோதமாக செயல்படுவதால்தான் 'மகா வேசி' என்று பேரெடுக்கிறார்கள் போலும்.