//ஆச்சர்யமா தான் இருக்கிறது!!?? எப்படி தான் ஜெபம், உபவாசம் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் என்கிற ஆச்சரியம்!! வேதம் ஜெபத்தை குறித்து தெளிவாக எழுதியிருந்தும் இப்படி கூட்டம் போட்டும் கூச்சல் போட்டு, முற்சந்திகளிலும், வீதிகளிலும் நிற்பது தான் ஜெபம் என்கிறார்களே, ஆச்சரியம் தான்!! தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!! //
பெரியன்ஸ் இத்தனை ஆச்சரியப்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நாம் பேசுவது சிந்திப்பது எதுவுமே நம் கையில் இல்லை, எல்லாமே தேவசித்தம்தான் என்கிறார் பெரியன்ஸ். அப்படியானால் நாம் ஜெபிப்பது மட்டும் நம் கையிலா உள்ளது? நம் சுயசிந்தனைப்படியா ஜெபிக்கிறோம்?
நாம் பேசவேண்டியதை அருளுகிற தேவன் தானே நாம் ஜெபிக்கவேண்டியதையும் அருளுகிறார்? பின்னர் அதை எப்படி தேவசித்தப்படியான ஜெபம், மனித சித்தப்படியான ஜெபம் என பெரியன்ஸ் பிரித்துப் பார்க்கிறார்?
ஆதாம் தேவகட்டளையை மீறுவது முதல் நாம் செய்கிற அத்தனை அட்டூழியங்களும் தேவசித்தமே என்கிறார் பெரியன்ஸ். ஆதாரம்:
இது நடக்கும் என்கிறது வேதம், இது தேவ சித்தம்!! இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவது தேவ சித்தம்!!//
மேலேயுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அட்டூழியங்கள் அனைத்தும் தேவசித்தமே என பெரியன்ஸ் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால் பெரியன்ஸ் மட்டும் தேவசித்தப்படி அட்டூழியங்கள் செய்யமாட்டாராம். அவர் அட்டூழியங்கள் செய்பவரை விட்டு விலகுவாராம், அதுவும் தேவசித்தம்தானாம்.
என்ன தலைசுற்றுகிறதா? உங்கள் தலைசுற்றுவதும் தேவசித்தம்தான். உங்கள் தலைசுற்றுக்கு என்ன நிவாரணம் என யோசித்து கலங்க வேண்டாம். நாம் என்ன பேசவேண்டும் என்பதை சுடச் சுட அருளுகிற தேவன், நம் தலை சுற்றுக்கான நிவாரணத்தையும் சுடச் சுட அருளுவார்.
இப்படி நான் எழுதுவதால் வேதவசனத்தை நான் பரியாசம் செய்வதாக யாரும் கருதவேண்டாம். வேதவசனத்தை பெரியன்ஸ் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவைத்தான் கூறியுள்ளேன்.
வேதவசனம் சொல்வது:
மத்தேயு 10:19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
கிறிஸ்துவினிமித்தம் அவரது சீஷர்கள் உபத்திரவத்திற்குள்ளாகி, அதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகையில், சீஷர்கள் என்ன பேசுவது எனக் கலங்க வேண்டாம் என சீஷர்களை ஆறுதல் படுத்தி, பின்வரும் வாக்குத்தத்தங்களையும் இயேசு சொன்னார்.
மத்தேயு 10:18 அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
பிதாவின் ஆவியானவர் சீஷர்களுக்குள் இருந்து, அவரே பேசுவார் எனும் இந்த வாக்குத்தத்தம் சீஷர்களுக்கு மட்டுமே உரியதாகும்.
ஆனால் பெரியன்ஸோ எல்லோருக்குள்ளும் இருந்து, பிதாவின் ஆவியானவர்தான் பேசுகிறார் என அபத்தமாகப் புரிந்துகொண்டுள்ளார். அவரது புரிந்துகொள்தலின்படி பார்த்தால், ஒவ்வொரு மனுஷரும் பேசுகிற தூஷணமான வார்த்தைகள் எல்லாவற்றையும் பிதாவின் ஆவியானவர்தான் அவர்களுக்குள் இருந்து பேசுகிறார் என்றாகிறது. இது எத்தனை அபத்தமானது?
எல்லாமே தேவசித்தம் எனும் பெரியன்ஸின் கோட்பாட்டின்படி பார்த்தால், மனிதர்களின் கொலை வெறியாட்டங்கள், இச்சை வெறியாட்டங்கள் அத்தனையும் தேவசித்தமே என்றாகிறது. அதாவது வன்முறையாளர்களின் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் தேவனே கொடுத்து, அவர்கள் வன்முறைகளை செயல்படுத்துவதற்கான ஞானத்தையும் கொடுத்தது போலாகிறது. நான் ஏதோ அதீதமாகச் சொல்வதாக யாரும் கருதவேண்டாம்.
2 தீமோ. 3:1-5 வசனங்களை பெரியன்ஸ் புரிந்துகொண்டதை மீண்டும் படித்துப்பார்த்தால், பெரியன்ஸ்-ன் கோட்பாடு பற்றிய எனது விளக்கம் சற்றும் அதீதமானதல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
பெரியன்ஸ்:
//வேதத்தின் தேவன் தன்னையும் தன் சித்தத்தையும் வேதத்தில் எழுதியிருக்கிறார்!!
//உங்க கூட்டம் எப்படி ஜெபித்தாலும் அது தேவ சித்ததிற்கு விரோதமானதே!! ஏனென்றால், உங்கள் ஜெபங்கள் இப்படி தானே இருக்கும்,
மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.//
நடப்பது எல்லாம் தேவசித்தமே, தேவசித்தம் மட்டுந்தான் என்பது கோவைபெரியன்ஸின் இரட்டை நண்பர்களின் அசைக்கமுடியாத (?) நம்பிக்கை. பின்னர் எப்படி தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாம் ஜெபிக்க முடியும்?
மத்தேயு 6:5-7-ல் இயேசு சொல்கிற ஆலோசனைப்படி ஜெபித்தாலும் அது தேவசித்தம் தான்; அந்த ஆலோசனைக்கு மாறாக ஜெபித்தாலும் அது தேவசித்தம் தான். ஏனெனில் நடப்பது எல்லாம் தேவசித்தமே என்பது பெரியன்ஸின் கோட்பாடு/நம்பிக்கை.
ஒருபுறம் “நடப்பது எல்லாம் தேவசித்தமே” எனச் சொல்லிவிட்டு, இப்போது தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாம் ஜெபிப்பதாக பெரியன்ஸ் கூறுகிறார்.
ஒருவேளை வழக்கம்போல் பெரியன்ஸ் தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளாரோ?
அதாவது இரண்டாம் மரண கோட்பாட்டை எப்படி மாற்றிக்கொண்டாரோ அதேவிதமாக “எல்லாம் தேவசித்தமே” கோட்பாட்டையும் மாற்றிக்கொண்டாரோ?
நண்பர் பெரியன்ஸ் அவர்கள் “அனுமதி” எனும் வார்த்தைக்கும் “சித்தம்” எனும் வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் போட்டு குழப்புவதாகத் தெரிகிறது. ஒரு விஷயத்தில் சித்தம் இல்லாமல்கூட அதை அனுமதிக்கலாம் என்பதை பெரியன்ஸ் அறியவில்லை போலும்.
மகன் கணினி பொறியாளராக சித்தப்படுகிறான், தகப்பனோ மகன் மருத்துவராக சித்தப்படுகிறார். ஆனாலும் மகனின் சித்தப்படியே அவன் கணினி பொறியாளராக தகப்பன் அனுமதிக்கிறார். அதாவது தகப்பனுக்கு சித்தம் இல்லாவிட்டாலும் மகனின் சித்தப்படி நடக்க தகப்பன் அனுமதிக்கிறார். தகப்பன் இப்படி அனுமதிப்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். 1. வேறு வழியின்றி அனுமதிப்பது, 2. மகன் மீதுள்ள அன்பினால் மகனின் சித்தத்தை அனுமதிப்பது போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.
தேவசித்தம், மனித சித்தம் பற்றி எழுதி வரும் பெரியன்ஸ், “நடப்பது எல்லாமே தேவசித்தமே, மனித சித்தம் எதுவுமே நடப்பதில்லை” என்கிறார். கூடவே இப்படியும் சொல்கிறார்.
//உங்க கூட்டம் எப்படி ஜெபித்தாலும் அது தேவ சித்ததிற்கு விரோதமானதே!!//
எல்லாமே தேவசித்தப்படி நடக்கும்போது, தேவசித்தத்திற்கு விரோதமாக சில்சாமின் கூட்டம் எப்படி ஜெபிக்கமுடியும்? இக்கேள்விக்கு பெரியன்ஸ் சரியான பதிலைச் சொல்வதில்லை. மாறாக, “இப்படிச் செய்ய அனுமதிக்கிறார்” எனும் குழப்படியான பதிலைத் தருகிறார்.
மனிதர்கள் இப்படித்தான் ஜெபிக்கவேண்டும் என்பது தேவசித்தமாக இருக்கையில், அந்த சித்தத்திற்கு விரோதமாக சில்சாமின் கூட்டம் ஜெபித்தால், “நடப்பது எல்லாமே தேவசித்தம்” எனும் பெரியன்ஸ்-ன் கோட்பாடு பொய்யாகிப் போகிறதே! இதற்கு பெரியன்ஸ்-ன் பதில் என்ன?
பெரியன்ஸ்:
//சவுலை கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக அனுமதித்ததும் தேவனே, அவனை பவுலாக மாற்றியாவரும் அவரே//
சவுல் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக செயல்பட தேவன் அனுமத்தித்தாரா, அல்லது அது அவரது சித்தமா?
சவுல் தேவனுக்கு விரோதமாக செயல்பட்டது தேவசித்தமே எனில், தேவசித்தப்படி செயல்பட்ட சவுலைப் பார்த்து இயேசு ஏன் இப்படி கேட்டார்?
அப்போஸ்தலர் 9:4 அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
இயேசுவை துன்பப்படுத்தியது சவுல் அல்லவே! சவுல் தன் சுயசித்தத்தால் அப்படி செய்யவில்லையே! (பெரியன்ஸ்-ன் “எல்லாமே தேவசித்தம்” கோட்பாட்டின்படி). தேவசித்தப்படித்தானே சவுல் இயேசுவை துன்பப்படுத்தினார்? அப்படிப்பட்ட அவரிடம் “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என இயேசு ஏன் கேட்டார்? தேவசித்தப்படிதான் சவுல் தன்னை துன்பப்படுத்தினான் என்பது இயேசுவுக்கு தெரியவில்லையா?
சவுல் இயேசுவை துன்பப்படுத்தியது தேவசித்தமே எனில், இயேசு சவுலிடம் இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
“சவுலே, சவுலே, நீ இதுவரை என்னை தேவசித்தப்படியே துன்பப்படுத்தி வந்தாய்; இனிமேல் உன் விஷயத்தில் தேவசித்தம் மாறிவிட்டது. ஆம், இனி எனக்காக நீ துன்பப்படப்போகிறாய்; இதுதான் இனி உன் விஷயத்தில் தேவசித்தம்” என்றல்லவா இயேசு சொல்லியிருக்க வேண்டும்?
பெரியன்ஸ்:
//அன்பு அவர்கள் இத்துனை கேவலமாக புரிந்துக்கொள்வார் என்பதை பார்த்தால் சற்று கவலையாகத் தான் இருக்கிறது!!//
பெரியன்ஸ் இப்படி கவலைப்படுவது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. “எனது கேவலமான புரிந்துகொள்தலும்” தேவசித்தமே என பெரியன்ஸே ஒப்புக்கொண்டுள்ளார்.
//அன்பு அவர்கள் இத்துனை கேவலமாக புரிந்துக்கொள்வார் என்பதை பார்த்தால் சற்று கவலையாகத் தான் இருக்கிறது!! ஆனாலும் நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை, அவர் இப்படி இருப்பதே தேவ சித்தம்!!//
எனது செயல் தேவசித்தப்படியே இருக்கையில், அதற்காக ஏன் பெரியன்ஸ் கவலைப்படுகிறார்? ஒருவேளை தேவசித்தம் இவ்வளவு கேவலமாக என்னை நடக்க வைத்துவிட்டது எனக் கவலைப்படுகிறாரா?
//நீங்கள் இது வரையில் உங்களின் எந்த நம்பிக்கையிலும் மாறவில்லை என்று சொல்லத் தயாரா!! அல்லது நீங்கள் மாற்றம் அடைந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறீகளா!!//
எனது நம்பிக்கைகளில் நான் மாறியுள்ளேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எந்த விஷயத்தில் நான் மாறினேனோ, அதைக் குறித்து மற்றவர்களுக்கு நான் போதித்திருந்தால், அல்லது இதுதான் உண்மை என மற்றவர்களுக்கு அறிவித்திருந்தால், அவ்விஷயத்தில் எனது நம்பிக்கை மாறியவுடன் அதை பகிரங்கமாக அறிவித்திருப்பேன். அப்படி நான் அறிவிக்காத எனது “நம்பிக்கை மாற்றம்” ஏதேனும் இருந்தால் அதை பெரியன்ஸ் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.
நம்பிக்கை மாற்றம் தவறல்ல; ஆனால் அதை பகிரங்கமாக அறிவிக்காததுதான் தவறு.
//நீங்கள் அந்த யோனாவை போல் தான் அவரின் அன்பை புரிந்தவராக இருக்கிறீர்கள், ஆனால் நாங்கள் கர்த்தர் யோனாவிற்கு சொன்ன அன்பை புரிந்திருக்கிறோம்!! உங்களை பொறுத்தவரையில் தேவன் நீடிய சாந்தமும் தயவும் அன்பும் நிறைந்தவர் தான், ஆனாலும் அழிப்பார்!!//
ஆம், அழிப்பார்தான். ஆதாரம்:
ஆதியாகமம் 7:4 இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன்.
21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. 22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. 23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின;
ஆதியாகமம் 19:24 அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, 25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
நோவா கால மக்களையும் சோதோம் மக்களையும் அழித்த தேவன், நினிவே மக்களை ஏன் காப்பாற்றினார்? அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினார்கள்.
பிலிப்பியர் 3:18,19 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
1 தெச. 5:3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
மாற்கு 3:29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
பெரியன்ஸ் கவலைப்படுவதைப் பார்த்தால் எனக்கும் கவலையாக உள்ளது. ஆனால் இதுவும் தேவசித்தம்தான்.
நான் கவலைப்படுவதைப் பார்த்து பெரியன்ஸ் கவலைப்படுவாரா சந்தோஷப்படுவாரா என்பது தெரியவில்லை. ஆகிலும், அவர் கவலைப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான், சந்தோஷப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான்.
இப்படியே நாங்கள் இருவரும் மாறி மாறி கவலைப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான், சந்தோஷப்பட்டால் அதுவும் தேவசித்தம்தான்.
எல்லோருக்கும் நித்திய ஜீவன் எனச் சொல்லும் பெரியன்ஸ், அதற்கு ஆதாரமாக காட்டும் வசனம்:
1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
இவ்வசனம் தேவனின் சித்தம் அல்லது விருப்பம் என்னவென்பதைத்தான் சொல்கிறதேயொழிய, அவரது சித்தப்படியே அல்லது விருப்பப்படியே எல்லாரும் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள் எனும் உத்தரவாதத்தைத் தரவில்லை.
கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில், பாவிகளும் இருப்பார்கள், துன்மார்க்கரும் இருப்பார்கள், பாவிகள் சபிக்கப்படவும் செய்வார்கள் என்பதை ஆதார வசனங்களுடன் எத்தனையோ தரம் சொல்லியாகிவிட்டது. நம் நினைவூட்டுதலுக்காக மீண்டும் அந்த ஆதார வசனங்கள்:
ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
ஒரு பிரிவினரான ஜனங்களைப் பார்த்து சபிக்கப்பட்டவர்களே எனச் சொல்லி, பிசாசுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட இடத்திற்கு இயேசு அனுப்புவார் என்பதற்கான ஆதார வசனத்தையும் சொல்லியாகிவிட்டது. நம் நினைவூட்டுதலுக்காக மீண்டும் அவ்வசனங்கள்:
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; 43 அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
இவ்வளவாய் சொன்னபிறகும், தேவனின் சித்தம் அல்லது விருப்பம் என்ன என்பது பற்றிய வசனமான 1 தீமோ. 2:3-ஐ மீண்டும் மீண்டும் சொல்லி, எல்லோருக்கும் நித்திய ஜீவன் என நம்பிக்கொண்டும், அதை மற்றவர்களுக்கு அறிவித்துக்கொண்டுமிருக்கிற பெரியன்ஸ்-க்கு எல்லோருக்கும் நித்திய ஜீவன் கிடையாது என்பதற்கு ஆதாரமான பல வசனங்களை மீண்டும் எடுத்துக்காட்டியாகிவிட்டது. ஆனாலும், கீறல் விழுந்த இசைத்தட்டுபோல சொல்லிக்கொண்டிருக்கும் பெரியன்ஸ், எல்லோருக்கும் நித்திய ஜீவன் கிடையாது என்பதற்கு ஆதாரமான வசனங்களைக் குறித்து எதுவும் சொல்ல மறுக்கிறார். நம் நினைவூட்டுதலுக்காக மீண்டும் அவ்வசனங்கள்:
பிலிப்பியர் 3:18,19 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
1 தெச. 5:3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
மாற்கு 3:29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
//வெளிப்படுத்தல் புத்தகத்தில் ஒரே காரியங்கள் மீண்டும் மீண்டும் வேறு வேறு சங்கேத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது முடிந்தவுடன் அடுத்தது நடக்கும் என்பதல்ல.
உதாரணத்துக்கு,
".... அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போட்டது" வெளி20:9 இவர்கள் யார்? இது எப்போது நடக்கிறது? இது அவர்களுக்கு முதல் மரணமா அல்லது இரண்டாம் மரணமா?
அதன் பின் வரும் 13ம் வசனம் இவ்வாறாகச் சொல்கிறது, "சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்." 9ம் வசனத்தில் அக்கினியால் பட்சித்துப்போடப்பட்டவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்களா? அப்படியென்றால் 15ம் வசனத்தின் "அக்கினிக்கடல்" மூன்றாம் மரணமா?
"பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும், முந்தின பூமியும் ஒழிந்து போயின....... வெளி 21:1 என்று ஆரம்பிக்கும் வசனம் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் நடக்கும் காரியம் என்று நாம் யூகிக்க ஏதுவல்ல.
பின்பு என்று யோவான் எழுதியது அவரது தரிசனத்தின் வரிசையைக் குறிக்கிறதேயன்றி அது முடிந்தபின்பு இது நடக்கும் என்பதல்ல. இந்தக் காட்சி முடிந்தபின் இந்தக்காட்சியைப் பார்த்தேன் என்றுதான் அர்த்தமாகும்.//
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களைக் குறித்து “இது முடிந்தவுடன் அடுத்தது நடக்கும் என்பதல்ல.” என மிகுந்த தெளிவுடன் எழுதியிருக்கும் சோல்சொல்யூஷன், மற்றொரு பதிவில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்.
//21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
"பங்கடைவார்கள்"(இனிமேல்) இது 21:8ல் வரும் வசனம், இவர்கள் யார்? உங்கள் கூற்றுப்படி 'இம்மாதிரியான' ஜனங்கள்தான் ஏற்கனவே மரித்தாயிற்றே? 4ம் வசனம் இவ்வாறு கூறுகிறது..
4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
4ம்வசனத்தில் மரணமில்லை என்று சொல்லிவிட்டு, 8ம் வசனத்தில் இரண்டாம் மரணமா?//
சோல்சொல்யூஷனோடு ஒத்த கருத்துள்ளவரான பெரியன்ஸ் ஒரு திரியில் இப்படி எழுதியுள்ளார்.
//நீங்கள் குறிப்பிட்ட வெளி. 21:8 க்கு சற்றே மேலே 21:4ஐ வாசித்து பாருங்களே, "இனி மரணம் இல்லை" என்று இருக்கும். அதாவது மரணம் இல்லை என்று சொன்ன பிறகு, இரண்டாம மரணத்தில் பங்கடைவார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும் படியாக கேட்டு கொள்கிறேன். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவை எல்லாம், systems.//
இப்படி எழுதியுள்ள பெரியன்ஸ், மற்றொரு திரியில் வெளி. 21:8-க்கு இப்படியாக விளக்கம் தந்துள்ளார்.
//வெளி. 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இனி மரணமுமில்லை என்கிறதே!! இந்த வசனத்தை மாத்திரம் வாசிப்பது கிடையாதா!!?? ஆக மரணம் என்கிற ஒன்றை அக்கினிக்கடலில் (இரண்டாம் மரணம்) தள்ளிவிடுகிறார் தேவன் என்று தான் வசனம் தெளிவாக சொல்லுகிறதே!! இதையும் ஏற்க மனமில்லாமல் இருக்கிறீர்கள்!!
வெளி. 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.
என் புரிந்துக்கொள்ளுதலின்படி, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவை எல்லாம் சாத்தானின் கிரியைகளே!! இந்த கிரியைகள் இனிமேல் இந்த பூமியில் காணாதப்படிக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே (இரண்டாம் மரணம் தான்) தள்ளப்படும்!!//
மொத்தத்தில், “இனி மரணமில்லை” என வெளி. 21:4 சொன்ன பிறகு, 21:8 கூறுகிற மரணம் “மனிதரின் மரணமல்ல, systems-ன் அழிவு” என்பதே பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனின் கருத்தாக உள்ளது.
ஒரு திரியில் வெளி. புத்தகத்தில் வரும் காட்சிகள் தொடர்ச்சியான சம்பவங்களல்ல எனக் கூறிவிட்டு, வேறொரு திரியில் “இனி மரணமில்லை” என ஒரு வசனம் சொன்னபின், அவ்வசனத்திற்குப் பின் மரணம் சம்பவித்தல் பற்றி காட்சி இருக்கக்கூடாது என வாதிடுகின்றனர்.
தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் வசனங்களின் கருத்தை திரித்துக் கூறுகிற இவர்களின் முரண்பாடான தன்மைக்கு, இவர்களின் இந்த வாதம் மற்றுமொரு ஆதாரமாக உள்ளது.