//உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.
உன்னை ஒரு பொருட்டாக எண்ணி இதுவரை பதில் பதித்தது எங்கள் தவறு. வேதத்தைதே ஒரு பொருட்டாக எண்ணாத பிசாசுக்கு இடங்கொடுத்தது எங்கள் அறிவீனம்.//
யௌவன ஜனம் தளத்தில் சோல்சொல்யூஷனுக்கு எதிராக விவாதித்துக்கொண்டிருக்கும் கோல்டா எனும் சகோதரிக்கு எதிராக இப்பதிவை சோல்சொல்யூஷன் தந்துள்ளார். இப்பதிவின் முதல் வரி விவாதத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாததும் தேவையற்றதும் மிக மட்டரகமானதும் ஒரு பெண்ணை மனோதத்துவ ரீதியில் கடுமையாகத் தாக்குவதுமாகும். அவரது இச்செயலை இத்தளத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்பதிவின் 2-ம் வரியின் பின்பகுதியில் தனது அறிவீனத்தை ஒத்துக்கொண்ட அவருக்குப் பாராட்டுக்கள்.
மத்தேயு 15:14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.
ஏசாயா 29:10 கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.
ஏசாயா 6:9,10 அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
மத்தேயு 13:14,15 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
அப்போஸ்தலர் 28:26,27 நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.
சங்கீதம் 58:4 சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.