//1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தேவனுடைய இந்த சித்தம் நிறைவேறாது என்று எவ்விதத்திலாவது, எவனாவதுகூறுவானானால் அவன் பிசாசுக்குப் பிறந்தவனாக இருப்பான்.//
இக்கூற்றுக்கு வேதவசன ஆதாரம் தரப்படவில்லை. ஆனால் எவன் பிசாசுக்குப் பிறந்தவன் என்பதைக் கூறும் வேதவசனங்கள் பல உண்டு; அவற்றில் சில:
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான்; அப்படியானால் வேறு எவன் பாவஞ்செய்வான்? ... பிசாசினால் பிறந்தவன்தான்.
எவன் பிசாசுக்குப் பிறந்தவன் என கோவைபெரியன்ஸ் தளம் கூறுவதற்கும், பிசாசினால் பிறந்தவன் பற்றி கூறுகிற மேற்கூறிய வசனங்களுக்கும் சற்றாகிலும் சம்பந்தமுள்ளதா என்பதை “அறிவுள்ளவர்கள்” சிந்தித்துப் பார்க்கக்கடவர்கள்.