நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எவன் பிசாசினால் பிறந்தவன்? வேதம் கூறுவது என்ன?


Militant

Status: Offline
Posts: 830
Date:
எவன் பிசாசினால் பிறந்தவன்? வேதம் கூறுவது என்ன?
Permalink  
 


கோவை பெரியன்ஸ் தளத்தின் கிருபையின் மேன்மை. Part 2 திரியில் பின்வருமாறு பதிக்கப்பட்டுள்ளது:

//1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

தேவனுடைய இந்த சித்தம் நிறைவேறாது என்று எவ்விதத்திலாவது, எவனாவதுகூறுவானானால் அவன் பிசாசுக்குப் பிறந்தவனாக இருப்பான்.//

இக்கூற்றுக்கு வேதவசன ஆதாரம் தரப்படவில்லை. ஆனால் எவன் பிசாசுக்குப் பிறந்தவன் என்பதைக் கூறும் வேதவசனங்கள் பல உண்டு; அவற்றில் சில:

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுப்பவன்தான் தேவனால் உண்டானவன்; செவிகொடாதவன் பிசாசினால் உண்டானவன் (பிசாசுக்குப் பிறந்தவன்).

தேவனால் பிறந்தவன் இயேசுவினிடத்தில் அன்பாயிருப்பான் (வசனம் 42). இயேசுவிடம் அன்பாயிருப்பவன் அவரது வசனத்தைக் கைக்கொள்ளுவான் (யோவான் 14:14,21,23).

எனவே இயேசுவின் வசனத்தைக் கைக்கொள்ளாதவன் பிசாசுக்குப் பிறந்தவன்.

1 யோவான் 2:29  அவர் (தேவன்) நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

தேவனில் பிறந்தவன் நீதியைச் செய்கிறான்; அப்படியானால் “நீதியைச் செய்யாதவன்” எவனில் பிறந்தவன்? பிசாசில் பிறந்தவன் தானே?

1 யோவான் 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்;

9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

1 யோவான் 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்;

அன்புள்ளவன் தேவனால் பிறந்தவன்; அப்படியானால் அன்பில்லாதவன்? .... பிசாசினால் பிறந்தவன்.

1 யோவான் 5:18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.

தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான்; அப்படியானால் வேறு எவன் பாவஞ்செய்வான்? ... பிசாசினால் பிறந்தவன்தான்.

எவன் பிசாசுக்குப் பிறந்தவன் என கோவைபெரியன்ஸ் தளம் கூறுவதற்கும், பிசாசினால் பிறந்தவன் பற்றி கூறுகிற மேற்கூறிய வசனங்களுக்கும் சற்றாகிலும் சம்பந்தமுள்ளதா என்பதை “அறிவுள்ளவர்கள்” சிந்தித்துப் பார்க்கக்கடவர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard