நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...

மனிதர் அனைவருக்கும் ஒரே தரம் தான் மரணம், அந்த மரணத்திலிருந்து அனைவரும் உயிர்த்தெழுந்து பின்னர் நியாயத்தீர்ப்பை அடைவதுதான் தேவநியமனம், மரித்து உயிர்த்தெழுந்து நியாயத்தீர்ப்பு அடைந்தபின்னர் யாரேனும் மரிப்பது தேவநியமனம் அல்ல, அதாவது இரண்டாம் மரணம் என்பது யாருக்கும் கிடையாது எனத் திட்டவட்டமாக கோவை பெரியன்ஸ் தள நிர்வாகி கூறுகிறார். அவரது கூற்றுக்கு ஆதாரமாக மேற்கூறிய வசனத்தைக் காண்பிக்கிறார்.

ஆனால் வெளி. 20:14 மற்றும் 21:8 வசனங்கள், மனிதர்களின் இரண்டாம் மரணத்தைக் குறித்து தெளிவாகக் கூறுகின்றன. அப்படியிருக்க எபிரெயர் 9:27-ஐ வைத்து மனிதர்கள் ஒரு தரம் மட்டுமே மரிப்பார்கள் எனக் கூறமுடியுமா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

வேதாகமத்தில் எபிரெயர் 9:27-க்கு முரணாக வெளி. 20:14 மற்றும் 21:8 வசனங்கள் மட்டுமின்றி வேறு பல வசனங்களும் உண்டும். அவை:

யோவான் 11:43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்.

2 ராஜா. 4:32 எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். 35 அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.

எபிரெயர் 9:27-ன்படி ஒருதரம் மரித்து பின்னர் உயிர்த்தெழுந்தவர்களான லாசரு, சூனேமியாளின் மகனைப் போல வேறு பலரும் மரித்து உயிர்த்தெழுந்ததாக வேதாகமத்தில் பார்க்கிறோம். இவர்களெல்லாம் சில வருடங்களில் மீண்டும் மரித்திருப்பார்கள் என்பது நிச்சயம். அப்படியானால் இவர்களுக்கெல்லாம் 2 - தரம் மரணமா? இது எபிரெயர் 9:27-க்கு முரணானது இல்லையா?

ஆதியாகமம் 5:24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

2 ராஜா. 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

ஏனோக்கும் எலியாவும் ஒரு தரம் கூட மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டதாக இவ்வசனங்கள் கூறுகின்றன. மனிதர்கள் அனைவருக்கும் ஒரு தரம் மரணம் என்பது தேவ நியமனம் என எபிரெயர் 9:27 கூறுகிறது. அப்படியிருக்க ஏனோக்கும் எலியாவும் ஒரு தரம் கூட மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டது எப்படி?

2 தீமோ. 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், ...

ஒரு தரம் மரித்தபின்தானே நியாயத்தீர்ப்பு என எபிரெயர் 9:27 கூறுகிறது? ஆனால் உயிரோடிருப்பவர்களுக்கும் நியாயத்தீர்ப்பு என பவுல் சொல்கிறாரே, அது எப்படி?

1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

மனுஷர் அனைவரும் ஒரு தரம் மரிக்கவேண்டும் என எபிரெயர் 9:27 கூறியிருக்க, இங்கு நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை, அதாவது மரிப்பதில்லை; மரிக்காமலேயே மறுரூபமடைவோம் என பவுல் சொல்வது எப்படி?

இயேசுவின் 2-ம் வருகையின்போது 1 கொரி. 15:51-ன்படி மறுரூபமடைந்தவர்களைத்தவிர மற்றெல்லாரும் இயேசுவின் 1000 வருட அரசாட்சியின் குடிமக்களாவார்கள் அல்லவா? இவர்கள் ஒரு தரம்கூட மரிக்காமல்தானே இவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கப்படும்? இது எபிரெயர் 9:27-க்கு முரணானதுதானே?

இக்கேள்விகளுக்கெல்லாம் கோவை பெரியன்ஸ் நிர்வாகி நண்பர் பெரியன்ஸ் என்ன பதில் சொல்லப்போகிறார்? பதிலறிய ஆவலாக உள்ளேன்.

எபிரெயர் 9:27-க்காட்டி, இரண்டாம் மரணம் பற்றி பேசியவர்களை பரியாசம் செய்த சோல்சொல்யூஷன், மேற்கூறிய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்:

//வசனம் சொல்லுவதை சொல்லுகிறோம், அதை ஏற்கும் தன்மை தேவனின் ஆவியினால் மாத்திரமே ஏற்படும்!!//

ஆம், நானும் வசனம் சொல்வதைத்தான் சொல்கிறேன், அதை ஏற்கும் தன்மை தேவனின் ஆவியினால் மாத்திரமே ஏற்படும். நான் சொல்கிற வசனம்:

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;

வெளி. 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.

பெரியன்ஸ்:

//அப்படி என்றால் ஒரே தரம் மட்டுமே மரிப்பது என்பது தேவனின் நியமனம் இல்லாமல் பவுலுக்கு தோன்றியதை எழுதியிருக்கிறாரோ!!??//

எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் பவுல்தான் என்பது திட்டமாகத் தெரியாத விஷயம். ஆகிலும் இது தற்போதைய பிரச்சனையில்லை.

ஒரேதரம் மரிப்பது எனும் தேவநியமனத்தின் அர்த்தம் என்ன என்பதை சரியான கோணத்தில் புரிந்துகொள்வதற்காகவே அதற்கு முரணாகத் தோன்றும் வசனங்களின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். அவற்றிற்கு நேரடியான பதிலும்/விளக்கமும் தந்தால் போதுமானது. அதை விடுத்து “அவர் இப்படி எழுதினாரா”, “இவர் அப்படி எழுதினாரா” என்பது போன்ற சாரமற்ற கேள்விகள் தேவையில்லை.

ஒரேதரம் மரிப்பது என்றால் “ஒரே தரம் தான்” என பெரியன்ஸ் சாதிக்கிறார். அப்படியானால் லாசரு 2-தரம் மரித்தது எப்படி, சூனேமியாளின் மகன் 2-தரம் மரித்தது எப்படி எனக் கேள்வி கேட்டால், அது “உயிர்த்தெழுதலை நிரூபிப்பதற்காக” என வியாக்கியானம் செய்கிறார். ஆனால் வசனம் எதுவும் அப்படிச் சொல்லவில்லையே! உயிர்த்தெழுதலை நிரூபிப்பதற்காகத்தான் லாசருவும் சூனேமியாளின் மகனும் உயிரோடெழுப்பப்பட்டனர் என எந்த வசனமும் சொல்லவில்லையே!

சூனேமியாளின் துக்கத்தைப் போக்குவதற்காகத்தான் அவளது மகனை எலிசா எழுப்பினார் என்றுதான் அச்சம்பவத்தின் மூலம் நாம் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளதேயன்றி, உயிர்த்தெழுதலை நிரூபிப்பதற்காக எலிசா அதைச் செய்ததாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லை (2 ராஜா. 4:27). 

லாசருவின் சகோதரியின் துக்கத்தைப் போக்குவதற்காகத்தான் லாசருவை இயேசு எழுப்பினார் என்றுதான் அச்சம்பவத்தின் மூலம் நாம் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளதேயன்றி, உயிர்த்தெழுதலை நிரூபிப்பதற்காக இயேசு அதைச் செய்ததாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லை (யோவான் 11:33).

ஒரேதரம் மரித்தல் என்பது அனைவருக்குமான தேவநியமனம் என பெரியன்ஸ் மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார். அப்படி அவர் சொன்னால், அதில் எக்காரணத்திற்காகவும் எந்த மாற்றமும் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்பதே எனது வாதம். ஆனால் பெரியன்ஸோ, தன் வசதிக்கேற்ப ஒருசிலர் மட்டும் 2-தரம் மரித்ததை ஏதோ விளக்கத்தைச் சொல்லி நியாயப்படுத்துகிறார்.

பெரியன்ஸ்:

//ஏனோக்குடைய நாளெல்லாம் என்றால் ஏனோக்கு வாழ்ந்த நாட்கள் 365 வருடங்கள்!! அவன் வாழ்ந்தது அத்துனை வருடங்கள் என்றால் அதன் பின் அவன் மரித்து போனான் என்று புரிந்துக்கொள்ள தனிப்பட்ட அறிவின் அவசியம் கிடையாது!! மேலும் தமிழில் "காணப்படாமற்போனான்" என்கிற வார்த்தை தமிழில் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை, அன்பு அவர்கள் மூல பாஷையை பார்ப்பவராயிற்றே, இப்படி இல்லாத வார்த்தையுடன் வசனத்தை சுட்டி காண்பித்து எபிரேயர் 9:27ல் சொல்லப்பட்ட ஒரே தரம் மரணம் என்பது தவறு என்று சொல்ல விரும்பிகிறீர்களோ!!//

ஏனோக்கு காணப்படாமற்போனாரா, காணப்பட்டு போனாரா என்ற ஆராய்ச்சிக்கு நான் வரவில்லை. அவர் மரித்ததாக வேதாகமம் சொல்லவில்லை என்பதுதான் எனது வாதம். அவர் 365 வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்தார் என்று மட்டுமே வேதாகமம் சொல்கிறது.

ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வம்ச வரலாற்றைக் கவனமாகப் படித்தால், ஏனோக்கிற்கு முன்/பின் வம்சத்தார் யாவரையும் “அவன் மரித்தான்” என specific-ஆக வேதாகமம் கூறுவதைக் கவனிக்கலாம். ஆனால் ஏனோக்கின் விஷயத்தில் மட்டும் “அவர் மரித்ததாகக்” கூறாமல், “அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்” எனக் கூறுகிறது. இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான குறிப்புதான். மேலும் “ஒரேதரம் மரிப்பது” எனும் தேவநியமனத்தை எழுதின அதே “எபிரெய நிருப ஆக்கியோன்”, “ஏனோக்கு மரணத்தைக் காணவில்லை” என்றும் எழுதியுள்ளார்.

எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்;

இதற்குப் பின்னரும் “ஏனோக்கு மரித்தார்” என்றுதான் பெரியன்ஸ் சொல்லப்போகிறாரா?

பெரியன்ஸ்:

//அவன் வாழ்ந்தது அத்துனை வருடங்கள் என்றால் அதன் பின் அவன் மரித்து போனான் என்று புரிந்துக்கொள்ள தனிப்பட்ட அறிவின் அவசியம் கிடையாது!!//

பெரியன்ஸ்-ன் அறிவு புரிந்துகொண்டதை, எபிரெய ஆக்கியோனின் அறிவு புரிந்துகொள்ளவில்லையே! அவர் “ஏனோக்கு மரணத்தைக் காணவில்லை” என்றல்லவா சொல்கிறார்? உண்மையில் பெரியன்ஸ்-ன் “புரிந்து கொள்ளும் அறிவு” அபாரம் தான்.

பெரியன்ஸ்:

//ஒன்று எபிரேயர் 9:27 தப்பு என்று சொல்லிவட வேண்டியது தானே,//

எபிரெயர் 9:27 தப்பு எனச் சொல்வது எனது நோக்கமல்ல. இதைக்கூட ஏனோ பெரியன்ஸ்-ஆல் புரிந்துகொள்ள இயலவில்லை.

பெரியன்ஸ்:

//நாம் அனைவரும் நித்திரயடைந்து நீண்ட நாட்கள் இருக்காமல், நொடிப்பொழுதிலோ, ஒரு நிமிஷத்தில் மறுரூபமாவோம் என்கிறார்!//

அதாவது “நித்திரையடைவதில்லை” எனும் வார்த்தைக்கு, “நித்திரையடைந்து நீண்ட நாட்கள் இருக்காமல்” என்கிற வினோதமான அர்த்தத்தை பெரியன்ஸ் சொல்கிறார். தனது “தவறான” கொள்கையை நிலைநாட்ட வசனத்தின் கருத்தை பெரியன்ஸ் எப்படியெல்லாம் வளைக்கிறார் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நித்திரையடையவில்லை என்றால் நித்திரையடையவில்லைதான். “இல்லை” எனும் வார்த்தைக்கு கிரேக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள “ou” எனும் வார்த்தையின் அர்த்தம் “absolute negative (முழுமையான எதிர்மறை)” என்பதாகும். எனவே “இல்லை” என்றால் “இல்லை” தான். No other compromises allowed.

கிறிஸ்துவின் 2-ம் வருகையின்போது உயிரோடிருக்கிற பரிசுத்தவான்கள் மரிக்காமல் நொடிப்பொழுதில் மறுரூபமடைவார்கள் என்பது வேதாகமம் சொல்கிற மறுக்கமுடியாத உண்மை.

மறுரூபமடைபவர்களைக் குறித்து வினோதமான விளக்கத்தைத் தருகிற பெரியன்ஸ், மறுரூபமாகாத மற்றவர்களைக் குறித்து என்ன சொல்லப்போகிறார்? இவர்கள்  அத்தனை பேரும் ஒரு நொடிப்பொழுதில்  மரித்து, நீண்ட நாட்கள் இருக்காமல், உடனடியாக உயிர்த்தெழுந்துவிடுவார்கள் என்பாரோ?

அடுத்து, பின்வரும் வசனத்திற்கு பெரியன்ஸ் தந்துள்ள விளக்கத்தைப் பார்ப்போம்.

2 தீமோ. 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், ...

இவ்வசனத்தின் அடிப்படையில் நான் கேட்ட கேள்வி:

//ஒரு தரம் மரித்தபின்தானே நியாயத்தீர்ப்பு என எபிரெயர் 9:27 கூறுகிறது? ஆனால் உயிரோடிருப்பவர்களுக்கும் நியாயத்தீர்ப்பு என பவுல் சொல்கிறாரே, அது எப்படி?//

இதற்கு பெரியன்ஸ்-ன் பதில்:

//நியாயத்தீர்ப்பு என்பதே உயிர்த்தெழுந்த பின் நடக்கும் காரியம் தான்!! அப்பொழுது எல்லாரும் உயிரோடு தான் இருப்பார்கள்!!//

மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் மரிக்காமல் உயிரோடிருப்பவர்களைப் பற்றி 2 தீமோ. 4:1-ல் பவுல் கூறுகிறாரே, அதற்கு என்ன பதில்? என்பதுதான் எனது கேள்வி. இதற்கு பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாத எதையோ பெரியன்ஸ் கூறுகிறார்.

2 தீமொ. 4:1 -ல் 2 பிரிவினரைக் குறித்து பவுல் கூறுகிறார். 1. மரித்தவர்கள், 2. உயிரோடிருக்கிறவர்கள் (அதாவது மரிக்காமல் உயிரோடிருக்கிறவர்கள்).

முதல் பிரிவினரைப் பற்றி கேள்வியில்லை. ஏனெனில் இவர்கள் எபிரெயர் 9:27-ன்படி ஒரு தரம் மரித்துவிட்டனர். 2-வது பிரிவினரைக் குறித்துதான் எனது கேள்வி. இவர்களை உயிரோடிருப்பவர்கள் என பவுல் சொல்வதால், இவர்கள் ஒரு தரம் கூட மரிக்கவில்லையே என்பதுதான் எனது கேள்வி.

மொத்தத்தில் எனது எந்தக் கேள்விக்குமே திருப்தியான/சரியான பதிலை/விளக்கத்தை பெரியன்ஸ் தரவில்லை.

எனது நோக்கம் எபிரெயர் 9:27-ஐ தவறு என நிரூபிப்பதல்ல. அவ்வசனம் சொல்வதை சரியான கோணத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெரியன்ஸ்:

//வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;

முதலாம் உயிர்த்தெழுதல் என்பது இங்கே எண்ணிக்கையை குறிப்பிடும் முதல் அல்ல!! முதலாம் என்றால் பிரதான அல்லது முதல் தரம்!!

Original Word: πρῶτος, η, ον
Part of Speech: Adjective
Transliteration: prótos
Phonetic Spelling: (pro'-tos)
Short Definition: first, before
Definition: first, before, principal, most important.

NASB Word Usage
before (3), best (1), first (128), first of all (2), first importance (1), first man (1), first one (1), first things (1), first time (1), foremost (5), leading (2), leading man (1), leading men (5), outer (3), previous (1).

ஏனென்றால் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுபவர்கள் சாகாமையை பெற்றுக்கொள்வார்கள், கிறிஸ்துவின் சாயலில் இருப்பார்கள்!! எப்படி கிறிஸ்து சாகாமையை அடைந்திருக்கிறாரோ, அப்படியே இந்த முதலாம் தரம் உயிர்த்தெழுதல் பெறுவோர் அதே சாகாமையை பெற்றுக்கொள்வார்கள்!! இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை என்று தானே இருக்கிறது, நீங்களாகவே உங்கள் "அறிவை" கொண்டு அப்படி என்றால் மற்றவர்களுக்கு இரண்டாம் மரணம் தான் என்கிற முடிவில் இருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்!!//

முதலாம் உயிர்த்தெழுதல் பற்றிய பெரியன்ஸ்-ன் விளக்கத்திற்கு பாராட்டுக்கள். ஆனால் தற்போதைய கேள்வி “எது முதலாம் உயிர்த்தெழுதல்” என்பதல்ல. உயிர்த்தெழுதல் எனும் வார்த்தை நம்மை மிரட்டுகிற ஒரு வார்த்தையல்ல. அது எப்படியிருந்தாலும் யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லை. அது பெரியன்ஸ் சொல்வதைப் போலவே இருந்துவிட்டுப் போகட்டும். அதை எதிர்த்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை, அது இப்போது அவசியமுமில்லை.

ஆனால் மரணம் என்பது நம்மை மிரட்டுகிற ஒரு வார்த்தையாக உள்ளது. அந்த வார்த்தையைக் குறித்து ஆதாம் அச்சம் கொள்ளாததால்தான், சாத்தான் சொன்ன பொய்வார்த்தையை நம்பி, தானும் மரணத்திற்குள்ளாகி தன் சந்ததியையும் மரணத்திற்குள்ளாகி விட்டார்.

எனவே நாம் ஆதாமைப் போலிராமல், “இரண்டாம் மரணம்” என வேதாகமம் சொல்வதைக் குறித்து அச்சம் கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை பெரியன்ஸ் போன்ற சிலரது அதிமேலான புத்திக்குஇரண்டாம் மரணம்” என்பது “மரணமல்ல”, அது “மரணத்தின் மரணம், systems-ன் மரணம்” எனத் தோன்றலாம். அவர்கள் சொல்வது சரியாகவே இருந்தால் மிகவும் சந்தோஷம்தான். ஆனால் ஒருவேளை தவறாகிப் போனால்?

சாத்தான் சொன்னது சரியாக இருக்கும் என நம்பித்தான் ஆதாம் ஏமாந்து போனார். அதுபோலவே பெரியன்ஸ் சொல்வது சரியாக இருக்கும் என நம்பி நாம் ஏமாந்து போகக்கூடாதல்லவா? எனவேதான் “இரண்டாம் மரணம்” என்பது இப்படியாகவும் இருக்க வாய்ப்புள்ளது, அன்று சாத்தான் சொன்னதை நம்பி ஆதாம் ஏமாந்ததைப்போல் இன்று பெரியன்ஸ் சொல்வதை நம்பி நம்மில் யாரும் ஏமாந்து போகவேண்டாம் என நான் எச்சரிக்கிறேன்.

மனிதர்களின் அழிவை நான் விரும்புவதால்தான் நான் அழிவைக் குறித்து சொல்கிறேனாம், மனிதர்கள் மேல் அன்புகொண்டு அவர்களின் ஜீவனையே பெரியன்ஸ் விரும்புவதால் ஜீவனைக்குறித்து பெரியன்ஸ் பேசுகிறாராம்.

அவரது இக்கூற்று, ஆதியில் தேவனும் சாத்தானும் ஆதாமிடம் சொன்னதைத்தான் நினைவுபடுத்துகிறது.

கனியைப் புசித்தால் சாகவே சாவாய் என தேவன் ஆதாமிடம் கூறினார். பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி தேவன் ஆதாமின் அழிவை விரும்பியதால்தான் அப்படிச் சொல்லியிருப்பார் போலும். கனியைப் புசித்தால் சாகவே சாவதில்லை என சாத்தான் ஏவாள் மூலம் ஆதாமிடம் சொன்னான். பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி சாத்தான் தான் மனிதனிடம் மிகவும் அன்புள்ளவன். ஏனெனில் அவன்தான் அழிவைக்குறித்து சொல்லாமல், அழிவின்மையைக் குறித்து சொன்னான். சாத்தானைப் பின்பற்றி இன்று பெரியன்ஸ்-ம் அழிவின்மையைக் கூறுகிறார், எல்லோருக்கும் நித்திய ஜீவன் என்கிறார்.

இவர் சொல்வதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால் இவர் சொல்வதை நம்பி, ஒருவேளை சாத்தான் சொன்னதைப் போல இவர் சொல்வதும் பொய்யாகிப்போனால் நம் நிலை என்னாகும் என்பதை சிந்தித்துப்பார்க்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...

இவ்வசனத்தின்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நடக்கவேண்டுமெனில், பின்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடாது.

1. லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் ஆகியோர் 2 தரம் மரித்தது.

2. ஏனோக்கு மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாத்திரமல்ல, மேற்கூறிய வசனத்தின்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நடக்கவேண்டுமெனில், பின்வரும் 2 வசனங்களைப் பவுல் கூறியிருக்கவும் கூடாது.

1. 2 தீமோ. 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், ...

இவ்வசனத்தில் “மரித்தவர்களை” நியாயந்தீர்க்கப்போகிற இயேசு எனச் சொல்வது எபிரெயர் 9:27-க்கு பொருத்தமாயுள்ளது; ஆனால் “உயிரோடிருக்கிறவர்களை” அதாவது “ஒருதரம்கூட மரிக்காமல் இருப்பவர்களை” நியாயந்தீர்க்கப்போகிற இயேசு எனச் சொல்வது எபிரெயர் 9:27-க்கு முரணாகத்தான் உள்ளது.

2. 1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

இவ்வசனத்தில் ஒரு பிரிவினராகிய ஜனங்கள் “நித்திரையடைவதில்லை” அதாவது “மரிப்பதில்லை” எனப் பவுல் தெளிவாகக் கூறுகிறார். எனவே எபிரெயர் 9:27 கூறுகிற “ஒரு தரம் மரித்தல்” எனும் நியமனத்திற்கு முரணாகத்தான் பவுலின் இக்கூற்று உள்ளது.

மேற்கூறிய 4 காரியங்களுக்கும் பெரியன்ஸ் என்ன விளக்கம் சொன்னாலும், இவை எபிரெயர் 9:27-க்கு முரணானவை என்பதை அவரால் மாற்ற இயலாது.

ஆனால் உண்மையில், இந்நான்கு காரியங்களும் எபிரெயர் 9:27-க்கு முரணானவையல்ல. எபிரெயர் 9:27-ன் சரியான கருத்தை நாம் புரிந்துகொண்டால், அந்த 4 காரியங்களும் எபிரெயர் 9:27-க்கு முரணானவையல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

தொடரும் ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


வேதாகமத்தின் பல வசனங்கள், விதிவிலக்குடன் கூடிய பல பொதுப்படையான கருத்தைக் கூறுகின்றன. உதாரணமாக, பின்வரும் வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.

சங்கீதம் 90:10 எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே;

சங்கீதம் 14:2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

முதல் வசனத்திற்கு விதிவிலக்காக ஆதாமும் ஏவாளும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஸ்திரீயினிடத்தில் பிறவாமல், தேவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். ஸ்திரீயினிடத்தில் பிறக்காத அவர்கள் ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்களைவிட அதிக நாட்கள் வாழவில்லையே!

ஸ்திரீயினிடத்தில் பிறந்த யாரேத்தின் ஆயுசு 962 வருஷம் (ஆதி. 5:20), மெத்தூசலாவின் ஆயுசு 969 வருஷம் (ஆதி. 5:27), நோவாவின் ஆயுசு 950 வருஷம் (ஆதி. 9:29); ஆனால் ஸ்திரீயினிடத்தில் பிறவாத ஆதாமின் ஆயுசு 930 வருஷம் மட்டுமே (ஆதி. 5:5). அப்படியானால் யோபு 14:1 பொய்யாகிப்போகுமா? நிச்சயமாக அல்ல. மனிதனின் வாழ்நாள் எத்தனை குறுகினது எனச் சொல்வதுதான் யோபு 14:1-ன் நோக்கமேயொழிய, “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவன், ஸ்திரீயினிடத்தில் பிறவாத மனிதன் வாழ்நாள் கூடினவன்” எனும் திட்டவட்டமான ஓர் உண்மையைச் சொல்வதற்காக அல்ல.

அடுத்து, மனிதனின் ஆயுட்காலம் 70-80 வருஷம் என சங்கீதம் 90:10 கூறுகிறது. இக்கூற்றின்படி அப்படியே நடக்கவேண்டுமெனில், இன்றைய தினத்தில் வாழ்கிற பல லட்சம் பேர் சில வருடங்களுக்கு முன்னேயே மரித்திருக்கவேண்டும். ஏனெனில் 80 வயதைத் தாண்டி பல லட்சம் பேர் நம் மத்தியில் உயிர் வாழ்கின்றனர். அப்படியானால் சங்கீதம் 90:10 சொல்வது தவறு என்றாகிவிடுமா? நிச்சயமாக அல்ல.

மனிதனின் ஆயுசு சுமார் 70-80 வரைதான், அவனது ஆயுசு மிகவும் குறுகினதுதான் எனச் சொல்வதே சங்கீதம் 90:10-ன் நோக்கமேயொழிய, மனிதன் 80 வயதுக்குமேல் வாழவே மாட்டான் எனத் திட்டவட்டமாகக் கூறுவதற்கல்ல. இம்மாதிரி கூற்றுக்களெல்லாம் பொதுப்படையான ஒரு கருத்தின் அடிப்படையில் கூறப்படுவதாகும். இவற்றிற்கு கண்டிப்பாக விதிவிலக்கு உண்டு.

அடுத்து, சங்கீதம் 14:2,3-ஐ எடுத்துக்கொள்வோம். அவ்வசனங்கள் கூறுகிற கூற்றுக்கு முரணான கூற்று அதே அதிகாரத்திலேயே உள்ளது.

சங்கீதம் 14:4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே;

5 தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.

4-ம் வசனம் கூறுகிற “என் ஜனம்” என்பது 2,3 வசனங்களில் கூறப்பட்டுள்ளவர்கள் அல்ல. இந்த “என் ஜனத்தைச்” சேர்ந்தவர்கள் தேவனைத் தேடுபவர்களே. 5-ம் வசனம் நீதிமானின் சந்ததியைக் குறித்து கூறுகிறது. 3-ம் வசனத்தின்படி நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லாதபோது, நீதிமான் எங்கிருந்து வரமுடியும்?

இதுபோக பல நீதிமான்களைக் குறித்து தேவன் நேரடியாக சாட்சி கூறியுள்ளார் (யோபு, நோவா); பல வேதவசனங்கள் நீதிமான்களைக் குறித்து கூறுகின்றன. எனவே சங்கீதம் 14:2,3-ன் கூற்றுக்கள் விதிவிலக்குடன் கூடிய பொதுப்படையான கூற்றுக்களேயன்றி, “ஒரு நீதிமானும் இவ்வுலகத்தில் கிடையாது” எனத் திட்டவட்டமாக அறிவிக்கும் கூற்றுக்கள் அல்ல.

இதைப் புரிந்துகொள்ளாமல், குறுகிய மனப்பான்மையுடைய கோவைபெரியன்ஸின் இரட்டை நண்பர்கள் பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன், நீதிமான் யாரும் கிடையாது என அடித்துச் சொல்வதிலேயே குறியாக உள்ளனர். இதே போங்கில் இவர்கள் சென்றால், 80 வயதுக்கு மேல் வாழ்பவர்களெல்லாம் வேதவசனத்தை உண்மையாக்கும்படி உடனே சாக வேண்டும் என்றுகூட சொன்னாலும் சொல்வார்கள்.

எதையும் குறுகின கண்ணோட்டத்தில், ஒரேயொரு வசனத்தின் அடிப்படையில் மட்டும் பாராமல், பரந்த கண்ணோட்டத்தில் பல வசனங்களின் கருத்தை ஒருங்கிணைத்து வேதத்தை ஆராய்ந்தால்தான் வசனங்களின் சரியான கருத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

 இனி, எபிரெயர் 9:27-ன் கருத்தை தியானிப்போம்.

எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...

இவ்வசனம் கூறுகிற நியமனம் எந்த விதிவிலக்குமின்றி அப்படியே நடந்துதானாக வேண்டுமென நினைத்தால், இவ்வசனம் பல வேதவசனங்களோடு முரண்படத்தான் செய்யும்.

ஒரு மனிதனால் தண்ணீர்மீது நடக்க இயலாது என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இவ்விதிக்கு மாறாக இயேசு தண்ணீர்மீது நடந்தார், பேதுருவும் நடந்தார். இதனால், “மனிதனால் தண்ணீர்மீது நடக்க இயலாது” எனும் விதி பொய்யெனச் சொல்லக்கூடாது. மாறாக, “இயேசுவும் பேதுருவும் அற்புதமாக தண்ணீரில் நடந்தனர்” என்றுதான் சொல்லவேண்டும்.

இன்னுமொரு உதாரணம்: அக்கினிக்குள் போடப்படுகிற பொருட்கள் எரிந்து சாம்பலாகும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் அக்கினிக்குள் போடப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியில் எரியாமலும் அக்கினியின் வாசம்கூட இல்லாமலும் இருந்ததாக வேதாகமத்தில் படிக்கிறோம். இதற்குக் காரணமென்ன? அவர்களுக்கு நடந்தது ஓர் அற்புதம்.

பொதுவான விதிக்கு மாறாக நடப்பதுதான் அற்புதம்; பொதுவான விதிக்கு உட்பட்டு நடப்பது அற்புதமல்ல.

எப்படி பொதுவான விதிக்கு மாறாக இயேசுவும் பேதுருவும் அற்புதமாக தண்ணீரில் நடந்தனரோ, எப்படி பொதுவான விதிக்கு மாறாக சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அற்புதமாக அக்கினியில் எரியாமல் இருந்தனரோ, அப்படித்தான் ஒரேதரம் மரிக்கவேண்டும் எனும் பொதுவான நியமனத்துக்கு மாறாக ஏனோக்கு அற்புதமாக மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டார், லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் அற்புதமாக உயிர்த்தெழுந்து 2 தரம் மரித்தனர்.

எனவே ஏனோக்கு மரணத்தைக் காணாதிருந்தது, லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் 2 தரம் மரித்தது போன்ற சம்பவங்கள் எபிரெயர் 9:27-ன் பொதுவான நியமனத்தைப் பொய்யாக்குவதில்லை.

இனி, 2 தீமோ. 4:1 மற்றும்1 கொரி. 15:51,52  வசனங்களில் பவுல் சொல்வதைப் பார்ப்போம்.

2 தீமோ. 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், ...

இவ்வசனத்தில் பவுல் கூறுகிற 2-பிரிவினருமே “பரிசுத்தவான்களல்லாதவர்கள்” என்பதை முதலாவதாக நாம் அறியவேண்டும். பரிசுத்தவான்கள் எனப்படுவோர் மற்றவர்களை நியாயந்தீர்ப்பவர்களாகத்தான் இருப்பார்களேயொழிய, அவர்கள் நியாயத்தீர்க்கப்படுவோராக இருக்க மாட்டார்கள். இதற்கான ஆதாரம்:

1 கொரி. 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

எனவே 2 தீமோ. 4:1-ல் பவுல் கூறுகிற 2 பிரிவினருமே “பரிசுத்தவான்களல்லாதவர்கள்தான்”. அவர்கள்:

1. இயேசுவின் 2-ம் வருகையின்போது இவ்வுலகில் உயிரோடிருப்பவர்கள்.

2. இயேசுவின் 2-ம் வருகைக்கு முன்னர் மரித்துப்போனவர்கள்.

மரித்துப்போன 2-வது பிரிவினர் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பை அடைவார்கள்; உயிரோடிருக்கிற முதல் பிரிவினர் நேரடியாக நியாயத்தீர்ப்பை அடைவார்கள்.

கிறிஸ்துவின் பாவநிவாரணபலியால் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டுவிட்டதால், அதன் பின்னர் எல்லோரது மரணமும் தற்காலிக மரணமாக மாறிவிட்டது. அதாவது எல்லோருமே உயிர்த்தெழுவார்கள் எனும் உத்தரவாதம் கிடைத்துள்ளது. எனவே மரித்து, உயிர்த்தெழுந்து, நியாயத்தீர்ப்படைவது என்பதும், மரிக்காமல் நேரடியாக நியாயத்தீர்ப்படைவது என்பதும் ஒன்றுக்கொன்று சமமானவைகளே.

கிறிஸ்துவின் 2-ம் வருகைக்குப்பின் உடனடியாக நியாயத்தீர்ப்பு நடக்கவிருப்பதால், கிறிஸ்துவின் வருகையின்போது உயிரோடிருப்பவர்கள் மரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது எபிரெயர் 9:27-ன் நியமனத்திற்கு மாறானதுதான். ஆனால் இந்த மாற்றத்தை விதிவிலக்கு எனச் சொல்வதைவிட, இயேசுவின் 2-ம் வருகையையொட்டி உலகில் உண்டாகும் பல நியமன மாறுதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.

இயேசுவின் 2-ம் வருகையையொட்டி இவ்வுலகில் உண்டாகும் நியமன மாறுதல்களில் சில:

1. சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் (மத்தேயு 24:29)

2 மரித்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் (1 கொரி. 15:22,23,52; வெளி. 20:6).

மரித்தவர்கள் அனைவரும் இயேசுவின் 2-ம் வருகை வரை மரித்த நிலையிலேயே இருப்பார்கள். இதுதான் எல்லோருக்குமான நியமனம். ஆனால் இயேசுவின் வருகையின்போது இந்நியமனம் மாறி, மரித்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுதலை அடைவார்கள்.

இதேவிதமாகத்தான் எபிரெயர் 9:27-ன் நியமனமும் இயேசுவின் 2-ம் வருகையின்போது சற்று மாறுகிறது. அதாவது ஒரு தரம் மரித்து உயிர்த்தெழுந்து நியாயத்தீர்ப்படையும் நியமனமானது, மரிக்காமல் அப்படியே நேரடியாக நியாயத்தீர்ப்படையும் நியமனமாக மாறுகிறது.

இது ஒரு நியமன மாறுதல் மட்டுமேயொழிய, நியமனத்திற்கு முரணானது அல்ல.

அடுத்து, 1 கொரி. 15:51,52-ல் பவுல் கூறுவதைப் பார்ப்போம்.

1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளோர் அனைவரும் பரிசுத்தவான்கள். இவர்களிலும் 2 பிரிவினர் உண்டு.

1. இயேசுவின் 2-ம் வருகையின்போது இவ்வுலகில் உயிரோடிருப்பவர்கள்.

2. இயேசுவின் 2-ம் வருகைக்கு முன்னர் மரித்துப்போனவர்கள்.

முதல் பிரிவினர்தான் “நித்திரையடைவதில்லை” எனப் பவுல் கூறுகிறார். இவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லாதிருக்கத்தக்கதாக (வெளி. 20:6), இவர்களின் சரீரம் மறுரூபமடைந்து அழிவில்லாததாக மாறும்.

அவ்வாறே, 2-வது பிரிவினர் மீதும் 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லாதிருக்கத்தக்கதாக, இவர்களும் அழிவில்லாதவர்களாக உயிர்த்தெழுவார்கள்.

ஆக, மரித்து அழிவில்லாதவர்களாக உயிர்த்தெழுவோரும் மரிக்காமல் மறுரூபமடைவோரும் சமமான நிலையில் இருப்பார்கள்.

இயேசுவின் 2-ம் வருக்கைக்கு முன் மரித்த பரிசுத்தவான்களுக்கு மரித்து உயிர்த்தெழுந்து அழியாமையை அடைதல் என இருந்த நியமனம், இயேசுவின் 2-ம் வருகையின்போது உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களுக்கு மரிக்காமல் அழியாமையை அடைதல் எனும் நியமனமாக மாறிவிடும்.

இவையெல்லாம் இயேசுவின் 2-ம் வருகையையொட்டிய நியமன மாறுதல்கள். இதைக் குறித்து நாம் கேள்வி கேட்க முடியாது.

சுருக்கமாகச் சொல்லப்போனால்:

1. ஏனோக்கு மரணத்தைக் காணாததும் லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் 2 தரம் மரித்ததும் எபிரெயர் 9:27-ன் நியமனத்திற்கு விதிவிலக்கான சம்பவங்களாகும்.

2. இயேசுவின் 2-ம் வருகையின்போது உயிரோடிருக்கிற பரிசுத்தவான்கள் நித்திரையடையாமல் மறுரூபமடைவதும், பரிசுத்தவான்களல்லாதவர்கள் மரிக்காமல் நேரடியாக நியாயத்தீர்ப்படைவதும் இயேசுவின் 2-ம் வருகையையொட்டிய நியமன மாறுதல்களேயொழிய, எபிரெயர் 9:27-ன் நியமனத்திற்கு எதிரானவையல்ல.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


ஆதாமின் பாவத்தால் வந்த மரணம், இயேசுவின் பலியால் அந்த மரணத்திலிருந்து விடுதலை, அவனவன் கிரியைகளுக்குத்தக்க தேவன் வழங்கவிருக்கும் நியாயத்தீர்ப்பு மற்றும் பலன் ஆகியவற்றை இப்பதிவில் சற்று சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.

1. ஆதாமின் மீறுதலால் உலகில் பாவமும் அதன் பலனான மரணமும் பிரவேசித்தது, அந்த மரணம் எல்லா மனுஷரையும் ஆட்கொண்டது (ரோமர் 5:12).

2. அந்த மரணத்திலிருந்து மனுஷரை மீட்கும்படி சித்தங்கொண்ட தேவன், தமது குமாரனான இயேசுவை சுமார் 2000 வருடங்களுக்கு முன் இவ்வுலகுக்கு அனுப்பி, அவரை பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்தார்.

3. இயேசுவின் பாவநிவாரணபலியால் ஆதாமின் பாவம் நிவிர்த்தியானதோடு, தங்கள் பாவத்தை உணர்ந்து மனம் திரும்புகிற எல்லா மனிதரின் பாவங்களும் நிவிர்த்தியாகும் (1 யோவான் 1:9).

4. இயேசுவின் பலியின் மூலம் ஆதாமின் பாவம் நிவிர்த்தியானதால், ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்திலிருந்து எல்லா மனிதரும் விடுதலை பெற்றனர்.

5. இந்த விடுதலை 2 விதமாக மனிதரிடம் நிறைவேறும். 1. இயேசுவின் 2-ம் வருகைக்குமுன் மரித்தவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் உயிர்த்தெழுதல் மூலம் நிறைவேறும், (1 கொரி. 15:22) 2. இயேசுவின் 2-ம் வருகையின்போது உயிரோடிருப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மரிக்காமல் உயிரோடிருப்பதன் மூலம் நிறைவேறும் (1 கொரி. 15:51,52; 2 தீமோ. 4:1).

6. மரணத்திலிருந்து விடுதலை பெற்ற மனிதர்களுக்கு, இயேசுவின் 2-ம் வருகைக்குப்பின் அவரவர் சுயகிரியையின்படி பலன் அல்லது நியாயத்தீர்ப்பு வழங்கப்படும்.

7. அந்த பலனைக் கொடுக்கும்படி, மனிதர்களை 2 பிரிவாக தேவன் பிரிப்பார். 1. பரிசுத்தவான்கள், 2. பரிசுத்தவான்களல்லாதவர்கள்.

8. பரிசுத்தவான்களுக்கான பலன் இயேசுவின் 2-ம் வருகையின்போதே கொடுக்கப்பட்டுவிடும். அது என்ன பலன் என்பது 10-ம் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

9. மற்றவர்கள், எனது யூகத்தின்படி இரக்கமில்லாதவர்கள், இரக்கமுள்ளவர்கள் எனும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, முதல் பிரிவினர் 2-ம் மரணத்திற்கு நியமிக்கப்படுவார்கள். ஆம், இரக்கமில்லாத அவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் (ஆதாரம்: மத்தேயு 25:41-46; யாக்கோபு 2:13; மத்தேயு 6:15). இரண்டாவது பிரிவினர், இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்ற வசனத்தின்படி (மத்தேயு 5:7) இரக்கம்பெற்று, கிறிஸ்துவின் நீதியைக் கற்றுக்கொள்ளத்தக்கதாக, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாவார்கள்.

10. 8-ம் குறிப்பில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்கள், 1000 வருட அரசாட்சியில் கிறிஸ்துவோடுகூட இவ்வுலகை ஆளுவார்கள்/நியாய்ந்தீர்ப்பார்கள்.

11. 1000 வருட அரசாட்சியில், ஜனங்களின் மனதிலுள்ள பிசாசின் சிந்தைகள் யாவும் நீங்கும்படி, கிறிஸ்துவின் நீதி கற்றுக்கொடுக்கப்படும் ; அதோடுகூட கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் கற்றுக்கொடுக்கப்படும்.

12. கிறிஸ்துவை விசுவாசிப்பதோடு பிசாசின் சிந்தைகள் யாவும் அகற்றப்பட்ட ஜனங்கள், நித்திய ஜீவனைப் பெற தகுதி பெறுவார்கள். இதன் மூலம் கீழ்க்கண்ட வசனம் நிறைவேறும். ஆதாரம்:

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

13. கிறிஸ்துவை விசுவாசியாமலோ அல்லது பிசாசின் சிந்தைகளை அகற்றாமலோ இருக்கும் ஜனங்கள், நித்திய ஜீவனைப் பெறாமல், இரண்டாம் மரணத்திற்கு நியமிக்கப்படுவார்கள். ஆதாரம்:

யோவான் 3:18 விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

வெளி. 21:8  பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் .



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

anbu57 wrote:
10. 8-ம் குறிப்பில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்கள், 1000 வருட அரசாட்சியில் கிறிஸ்துவோடுகூட இவ்வுலகை ஆளுவார்கள்/நியாய்ந்தீர்ப்பார்கள்.

ஐயா அருமையாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள்; பைபில் முழுவதையும் படித்தது போலிருக்கிறது. ஒரு சந்தேகம், 

"ஆனாலும், கடைசி நாட்களில்... சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்." (மீகா.4:1,5)

ஐயா, மேலே போடப்பட்ட பைபில் வசனப்படி கர்த்தருடைய 1000 வருட ஆட்சியில் எல்லா தெய்வ வழிபாடும் கோவில்களும் வழக்கம்போல நடைபெறுமல்லவா..?



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


அன்பான சகோதரர் ஆர்யதாசன் அவர்களே!

வசனங்களை நம் இஷ்டம்போல் வெட்டி/ஒட்டி எடுத்துப்போட்டால், வசனங்களின் கருத்து எப்படி அனர்த்தமாகிப் போகும் என்பதற்கு தாங்கள் வெட்டி/ஒட்டி போட்டுள்ள வசனபகுதி ஆதாரமாயுள்ளது.

நீங்கள் மீகா 4:1-ன் முதல் 3 வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற வார்த்தைகளை வெட்டி எறிந்துவிட்டு, தொடர்ந்து 2,3,4 வசனங்களையும் வெட்டி எறிந்துவிட்டு, பின்னர் 5-ம் வசனத்தை சேர்த்துக்கொண்டு (ஒட்டிக்கொண்டு) எடுத்துப்போட்டுள்ளீர்கள். எனவேதான் கடைசி நாட்களில் பிற தெய்வ வழிபாடும் இருக்கும் என்கிறதான அனர்த்தமான கருத்து உருவாகியுள்ளது. உண்மையில், மீகா 4:1-ம் 4:5-ம் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைக் கவனித்து, ஏன் இந்த முரண்பாடு என நீங்கள் யோசித்திருந்தால், முரண்பாடு நீங்கி தெளிவைப் பெற்றிருப்பீர்கள்.

மீகா 4:1 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

மீகா 4:5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

ஒன்றாம் வசனத்தில் “எல்லா ஜாதிகளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஓடிவருவார்கள்” எனக் கூறிவிட்டு, 5-ம் வசனத்தில் “சகல ஜனங்களும் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றி நடப்பார்கள்” எனக் கூறினால், 2-ம் ஒன்றுக்கொன்று முரணானவைகள் தானே? ஏன் இந்த முரண்பாடு? இக்கேள்விக்கு பதில் காண மீகா 4:1-5 வசனங்களை முழுமையாகப் படிப்போம்.

மீகா 4:1 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். 2 திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். 3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 4 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

இப்பகுதியில், 1-4 வசனங்கள் ஒரு தனி துண்டுப்பகுதியாகவும், 5-ம் வசனம் அப்பகுதியோடு ஒட்டாமல் தனியே நிற்பதையும் கவனித்தீர்களா?

கடைசி நாட்களில் என்னென்ன நிகழும் என்பது பற்றிய தீர்க்கதரிசனம் 4-ம் வசனத்தோடு நிறைவுபெறுகிறது. அவ்வசனத்தின் இறுதியில், “கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று” என்று சொல்லி, கடைசி நாட்களுக்கான தீர்க்கதரிசனம் நிறுத்தப்படுகிறது.

பின்னர் அத்தீர்க்கதரிசனத்திற்கு சம்பந்தமில்லாத “புதியதொரு” தீர்க்கதரிசனம் 5-ம் வசனம் முதல் கூறப்படுகிறது.

உண்மையில், 4-ம் அதிகாரத்தின் முதல் 4 வசனங்களில் கூறப்பட்டுள்ள “கடைசி நாட்களைப் பற்றிய” தீர்க்கதரிசனம், 3-ம் அதிகாரத்தின் இறுதி வசனத்தில் சீயோனுக்கு விரோதமாகக் கூறப்பட்டுள்ள துக்கமான காரியங்கள், எப்போது நன்மையான காரியங்களாக மாறும் என்பதைப் பற்றியதே.

தீர்க்கதரிசனம் எழுதப்பட்ட காலத்தில், அதிகாரம்/வசனம் என்ற பிரிவெல்லாம் கிடையாது. பல காலத்திற்குப் பின்னர், மொழிபெயர்ப்பாளர்கள்தான் அப்பிரிவுகளைக் கொண்டு வந்தனர். மீகா 3,4 அதிகாரங்களைப் பொறுத்தவரை, தற்போதைய அதிகாரம்/வசனம் பிரிவுக்குப் பதிலாக பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தால், அதன் கருத்தைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்திருக்கும்.

மீகா 3:9-12 மற்றும் 4:1-4 வசனங்கள் இணைக்கப்பட்டு, மீகா 3:9-16 வசனங்களாக:

மீகா 3:9-12 நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி, சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போம்.

மீகா 3:13-16 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

இனி, 4-ம் அதிகாரத்தின் 5-ம் வசனத்தை அவ்வதிகாரத்தின் 1-ம் வசனமாக்கி, அவ்வதிகாரத்தைப் படித்துப் பாருங்கள்; அது புதியதொரு தீர்க்கதரிசனம் அடங்கிய புது அதிகாரமாகக் காணப்படும்.

இதன்மூலம் மீகா 4:5-ம் வசனத்திற்கும், 4:1-4 வசனங்களுக்கும் சம்பந்தமில்லை என எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.

தீர்க்கதரிசன புத்தகங்களில் கூறப்படுபவை எல்லாம் தொடர்ச்சியாக வரிசைக்கிரமமாக நடைபெறும் சம்பவங்களாக இருக்கவேண்டியதில்லை. உதாரணமாக மீகா 4:1-4 வசனங்களையும் மீகா 5:1,2 வசனங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மீகா 5:1 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.

இவ்விரு வசனங்களும் இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறித்து கூறுகின்றன. ஆனால் மீகா 4:1-4 வசனங்களோ, இயேசுவின் 2-ம் வருகைக்குப் பின்னான கடைசி நாட்களைக் குறித்து கூறுகின்றன.

இதுபோலத்தான் மீகா 4:1-4 வசனங்களின் தீர்க்கதரிசனமும், 5-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனமும் ஒன்றுக்கொன்று வரிசையில்லாததும் தொடர்பில்லாததுமாகும்.

இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள் தேவையான தெளிவைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.

தீர்க்கதரிசன புத்தகங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் வரிசைக்கிரமமாக நிகழவேண்டிய அவசியமில்லை என்பதை நம் கோவை பெரியன்ஸ் நண்பர்கள் அறியாததால்தான், வெளிப்படுத்தின விசேஷத்தின் பினவரும் வசனங்களில் நிகழ்பவை வரிசைக்கிரமமாக நிகழவேண்டும் எனப் புரிந்துகொண்டு, தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

வெளி.21:3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

வெளி. 21:6 அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். 7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். 8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
RE: ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


நல்லதொரு விளக்கம் கொடுத்ததற்காக நன்றி,ஐயா; நான் வெட்டியும் ஒட்டியும் போட்டதாகக் கூறியிருப்பது சரியல்ல; நான் சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொல்லும் நோக்கத்துடனே அவ்வாறு போட்டிருக்கிறேன்; மற்றபடி நீங்கள் மொத்த வசனத்தையும் கவனத்தில் கொண்டே கருத்து கூறுவீர்கள் என்பதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன்;அதுவே சரியானது, எனது கேள்வியின் நோக்கமே இந்த வசனம் நடந்துவிட்டதா, நடைபெறுகிறதா அல்லது நடைபெற இருக்கிறதா என்பதே; அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விளக்கம் கொடுக்கிறார்கள்; நீங்களும் முயற்சித்திருக்கிறீர்கள்,அவ்வளவே.

கடைசியாக, 5- ம் வசனத்தைக் குறித்த உங்கள் கருத்தை தெளிவுபடுத்தாதது போலிருக்கிறதே; தயவுசெய்து கோபித்துக்கொள்ளாமல் மீண்டும் விளக்கவும்.



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


ஆர்யதாசன்:

//நல்லதொரு விளக்கம் கொடுத்ததற்காக நன்றி,ஐயா; நான் வெட்டியும் ஒட்டியும் போட்டதாகக் கூறியிருப்பது சரியல்ல; நான் சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொல்லும் நோக்கத்துடனே அவ்வாறு போட்டிருக்கிறேன்; மற்றபடி நீங்கள் மொத்த வசனத்தையும் கவனத்தில் கொண்டே கருத்து கூறுவீர்கள் என்பதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன்;//

தங்கள் தன்னிலை விளக்கத்தை ஏற்கிறேன். நீங்கள் வசனங்களை “ஒட்டி/வெட்டி” போட்டுள்ளதாகச் சொல்லி உங்களைத் தவறாக விமர்சித்தமைக்காக வருந்துகிறேன்.

//கடைசியாக, 5- ம் வசனத்தைக் குறித்த உங்கள் கருத்தை தெளிவுபடுத்தாதது போலிருக்கிறதே; தயவுசெய்து கோபித்துக்கொள்ளாமல் மீண்டும் விளக்கவும்.//

ஆம், 5-ம் வசனத்திற்கு முழுமையான விளக்கம் தரவில்லைதான். கோபிக்காமலேயே விளக்கம் தர முயல்கிறேன்.

5-ம் வசன காரியங்கள், 1-ம் வசனம் கூறுகிற கடைசி நாட்களுக்கு முன்னானவை என்பதில் உங்களுக்கு ஐயம் இருக்காது என நம்புகிறேன்.

மேலும், அவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளவை தீர்க்கதரிசன கூற்றாக இராமல், தீர்க்கதரிசியானவர் மெய்யான தேவன் மீது வைத்துள்ள பக்தி வைராக்கியத்தின் அடிப்படையில் சொன்ன கூற்றாக இருக்கின்றன. இம்மாதிரி கூற்றுக்களை மீகா தீர்க்கதரிசி மட்டுமல்ல, நீங்களும் நானும் கூட சொல்லலாம்.

அவ்வசனத்தில் “தேவனாகிய கர்த்தர்” எனும் சொற்றொடரின் சரியான மொழிபெயர்ப்பு “யெகோவா தேவன்” என்பதாகும். மாத்திரமல்ல, “மற்ற ஜனங்கள் தங்கள் தங்கள் தேவனின் நாமத்தைப் பற்றி நடப்பவர்களாக இருக்கலாம் (may be), ஆனால் நாங்களோ யெகோவா தேவனின் நாமத்தையே என்றென்றும் பற்றி நடப்பவர்களாக இருப்போம்” என பக்திவைராக்கியமாக மீகா தீர்க்கதரிசி சொல்வதாகவும் அவ்வசனம் அமைந்துள்ளது.

சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், “All people will walk" எனக் கூறுகின்றன, சில ஆங்கில மொழிபெயர்ப்புகளோ “All people may walk” எனக் கூறுகின்றன. வசனத்தின் 2 வாக்கியங்களையும் இணைக்கும் வார்த்தையாக, சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் and எனும் வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளன, சில ஆங்கில மொழிபெயர்ப்புகளோ but மற்றும் though எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளன.

Please follow this link for various English Translations.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆராயும்போது, அவ்வசனம் தனிப்பட்ட ஒருவர் (அதாவது மீகா தீர்க்கதரிசி) மெய்யான தேவன் மீது வைத்துள்ள பக்தி வைராக்கியத்தில் மற்றவர்களையும் தன்னையும் ஒப்பிட்டுக் கூறுகிற ஒரு கூற்றாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

மெய்யான தேவனாகிய “யெகோவா தேவனின்” நாமத்தையே பற்றி நடக்கிற நீங்களும் நானுங்கூட மீகா தீர்க்கதரிசி சொல்வதைப் போல் சொல்லலாம்.

ஆம், “யெகோவா தேவனின்” நாமத்தையே பற்றி நடக்கிற நானுங்கூட இப்படிச் சொல்லலாம்.

சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடக்கலாம்; ஆனால் நானோ என் யெகோவா தேவனின் நாமத்தையே பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்பேன்.

யேசுவா 24:15-ல் “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என யோசுவா சொல்வதற்கு நிகரான ஒரு கூற்றாகவே மீகா 4:5-ஐயும் நான் கருதுகிறேன்.

தேவன் சொன்ன தீர்க்கதரிசனங்களைச் மீகா சொல்லிவருகையில், மெய்யான தேவன் மீது தான் வைத்திருந்த பக்திவைராக்கியத்தின் காரணமாக, இடைச்செருகலாக மீகா 4:5-ஐக் கூறியுள்ளதாக நான் கருதுகிறேன்.

ஒருவேளை, இதுவும் ஒரு திட்டமான தீர்க்கதரிசனமாக இருந்தாலும், இத்தீர்க்கதரிசனம் மீகா 4:1 கூறுகிற கடைசி நாட்களுக்கு முன்னதாக நடப்பதாகத்தான் இருக்கும்.

இந்த தீர்க்கதரிசனத்தின்படி, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக் காலத்தில் பல ஜனங்கள் வேறு தெய்வ வழிபாடு உடையவர்களாக இருப்பார்களா எனக் கேட்டுள்ளீர்கள்.

கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக் காலத்தைப் பொறுத்தவரை, அது நீதியைக் கற்றுக்கொடுக்கிற காலமாகவே இருக்கும். எனவே அக்கால ஜனங்கள், ஆரம்பத்தில் நீதியை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள். குறிப்பாக, அவர்களில் சிலர்/பலர் மெய்யான தேவனை அறியாமல், பொய்யான தேவனின் நாமத்தைப் பற்றி நடக்கிறவர்களாகவும் இருப்பார்கள். ஆகிலும் இஸ்ரவேலர் மற்றும் புறஜாதிகளில் நம்மைப் போன்ற பலர் மெய்யான தேவனின் நாமத்தைப் பற்றி நடக்கிறவர்களாக இருப்போம்.

பொய்யான தேவனின் நாமத்தைப் பற்றி நடக்கிறவர்களுக்கு, மெய்யான தேவனின் நாமத்தைப் பற்றிய அறிவு கற்றுக்கொடுக்கப்படும். அக்காலத்தில் சாத்தான் கட்டப்பட்டவனாக இருப்பதால், அவர்கள் மெய்யான தேவனை அறிவதற்கு தடை இருக்காது. எனவே அவர்கள் மெய்யான தேவனை எளிதில் அறிந்துகொள்வார்கள்.

இதுபோலவே, பிசாசின் சிந்தையுடையவர்களுக்கும் கிறிஸ்துவின் சிந்தையாகிய நீதி கற்றுக்கொடுக்கப்படும். அக்காலத்தில் பிசாசின் தாக்கம் இருக்காது என்பதால், கிறிஸ்துவின் சிந்தையாகிய நீதியை எல்லோரும் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.

எனவே அப்போது பின்வரும் வசனங்கள் கூறுகிற தீர்க்கதரிசனம் நிறைவேறும்.

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். என்னதான் ஜனங்கள் மெய்யான தேவனை அறிந்து, கிறிஸ்துவின் நீதியைக் கற்றுக்கொண்டாலும், துன்மார்க்கரான சிலர் தாங்கள் அறிந்த மெய்யான தேவனைப் புறக்கணிக்கவோ, அல்லது தாங்கள் கற்றுக்கொண்ட கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவும்கூடும்.

இதை ஒத்துக்கொள்ள நமக்குக் கடினமாக இருக்கலாம்; ஆனால் எல்லாம் அறிந்தும், அறிந்ததை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உண்டு என்பதற்கு நம்மில் பலரே உதாரணமாக உள்ளோம். இதைக் குறித்து சற்று விளக்கமாகக் கூறவேண்டுமெனில் தெரிவிக்கவும்; பிறகு எழுதுகிறேன்.

மெய்யான தேவனைப் புறக்கணிக்கிற, அல்லது கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற துன்மார்க்கர்கள், பின்வரும் வசனத்தின்படி சபிக்கப்பட்டு 2-ம் மரணத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

இங்கு மற்றொரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். 1000 வருட அரசாட்சி காலத்தில் எல்லோரும் மொத்தமாக உயிர்த்தெழ மாட்டார்கள். அவரவர் தங்கள் தங்கள் வரிசையில் உயிர்த்தெழுவார்கள். இதற்கு ஆதாரம்:

1 கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

தங்கள் தங்கள் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுகிற அவர்கள், மெய்யான தேவனையும் கிறிஸ்துவின் நீதியையும் ஏற்றுக்கொள்ள, 100 வருட கால அவகாசம் கொடுக்கப்படும். அந்த 100 வருட காலத்திற்குள் மெய்யான தேவனையும் கிறிஸ்துவின் நீதியையும் ஏற்றுக்கொண்டவர்களும் மரிப்பார்கள், ஏற்றுக்கொள்ளாத பாவிகளும் மரிப்பார்கள் (ஏசாயா 65:20).

ஏற்றுக்கொண்டவர்கள் நித்தியஜீவனைப் பெறும்படி எழும்புவார்கள்; ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரண்டாம் மரணத்திற்குள்ளாகும்படி எழும்புவார்கள் (வெளி. 20:12-15).

இவ்விளக்கத்தில் சந்தேகம் இருந்தாலோ, அல்லது மேலும் விளக்கம் தேவைப்பட்டாலோ தயங்காமல் தெரிவிக்கவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Permalink  
 


இனி இத்திரி துவக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு வருவோம்.

எபிரெயர் 9:27-ஐ ஆதாரமாகச் சொல்லி, இரண்டாம் மரணம் கிடையாது என கோவைபெரியன்ஸ் நண்பர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிக்கும்படியாகத்தான், எபிரெயர் 9:27-ன் நியமனத்திற்கு விதிவிலக்கான/மாறான சில காரியங்களை வேதாகமத்தில் நாம் பார்த்தோம்.

எபிரெயர் 9:27-ன் “ஒரேதரம் மரணம்” எனும் நியமனம், கிறிஸ்துவின் 2-ம் வருகை மட்டுமே. அதன்பின் ஒரு பிரிவினர்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்பதற்கு வெளி. 20:6 தெளிவான ஓர் ஆதாரமாயுள்ளது.

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;

பரிசுத்தவான்கள்மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? பரிசுத்தவான்களல்லாதவர்கள்மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் உண்டு என்பதுதானே?

பரிசுத்தவான்கள்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லாதிருக்கும்படியாகத்தான் அவர்களது சரீரம் மறுரூபமடைந்து அழியாமையைத் தரித்துக்கொள்ளும் சரீரமாக மாறுகிறது. இதைக் குறித்த வேதவசனங்கள்:

1 கொரி. 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

1 தெச. 4:16 கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

மத்தேயு 24:30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

1 கொரி. 15:51-54 சொல்கிற காரியங்கள் பரிசுத்தவான்களுக்கு மட்டுமே உரித்தானவை. பரிசுத்தவான்களல்லாதவர்களில் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமம் இப்படியாகச் சொல்கிறது.

2 தெச. 1:7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, 10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

2 பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

தேவனை அறியாதவர்கள் மற்றும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் எனும் பிரிவினர், நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள் என மேற்கூறிய வசனங்கள் தெளிவாகக் சொல்கின்றன. அப்படியானால் இவர்களின் சரீரம் எப்படி 1 கொரி. 15:53 கூறுகிற அழியாமையின் சரீரமாக இருக்கமுடியும்?

எனவே 1 கொரி. 15:51-54 வசனங்கள் பரிசுத்தவான்களுக்கு மட்டுமே உரித்தானதாகும். மற்றவர்கள் மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு. இக்கூற்றை சற்று கவனமாக நாம் பார்க்கவேண்டும். மற்றவர்கள்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்றுதான் சொல்கிறோமேயன்றி அவர்கள் எல்லோரும் இரண்டாம் மரணம் அடைவார்கள் எனச் சொல்லவில்லை.

பரிசுத்தவான்களல்லாத எல்லோர்மீதும் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு. அதாவது அவர்கள் இரண்டாம் மரணத்தைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. ஆகிலும், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாகி, அங்கு நீதியைக் கற்று, அதை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவையும் விசுவாசித்தால், அவர்கள் இரண்டாம் மரணத்திலிருந்து தப்புவிக்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

பரிசுத்தவான்களல்லாதவர்களில், எவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாவார்கள், எவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாக மாட்டார்கள் என்பது திட்டமாகத் தெரியவில்லை என ஏற்கனவே கூறியிருந்தேன்.

ஆகிலும் ஒருவன் 1000 வருட அரசாட்சியின் பிரஜையானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, அவன் தேவனை அறியாதவானகவும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தால், அவன் நிச்சயமாக நித்திய அழிவாகிய தண்டனையை அடைவான் என 2 தெச. 1:7-10 வசனங்கள் திட்டமாகக் கூறுகின்றன. இந்த நித்திய அழிவாகிய தண்டனைதான் இரண்டாம் மரணம் என அழைக்கப்படுகிறது.

எல்லோருக்கும் நித்தியஜீவன் உண்டு, ஆனால் சிலர் மட்டும் அழியாமையின் சரீரத்தில் உயிர்த்தெழுவார்கள்” என சாதிக்கும் கோவைபெரியன்ஸ் நண்பர்களால் “அழியாமைக்குரிய சரீரம்” என்றால் என்வென்பதை சரியாக விளக்க இயலாது.

அவர்களின் கூற்றுப்படி, உயிர்த்தெழுகிற எல்லோருமே நித்தியஜீவனைப் பெறும்படியாக உயிர்த்தெழுவார்கள் எனில், அவர்கள் எல்லோரது சரீரமும் அழியாமைக்குரியதுதானே? பின்னர் எப்படி ஒருசிலரது சரீரம் மட்டும் அழியாமைக்குரியது எனச் சொல்லமுடியும்? அழியாமைக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுபவர்கள், நித்தியஜீவனைப் பெறும்படி உயிர்த்தெழுபவர்கள் ஆகிய இருபிரிவினருமே என்றென்றும் அழியாமல்தானே இருக்கப்போகிறார்கள்? பின்னர் ஏன் சிலரது சரீரம் அழையாமைக்குரியது என்றும் மற்றவர்களின் சரீரம் அழியாமைக்குரியது அல்ல என்றும் சொல்ல வேண்டும்? இக்கேள்விக்கு அவர்களால் தெளிவான விளக்கம் சொல்ல இயலாது.

1 கொரி. 15:22-ன்படி எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்பது நிச்சயம்தான். ஆனால் அவர்களில் பரிசுத்தவான்கள் மட்டும் அழியாமைக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுவதால், அவர்கள் மரணமடைய இனி வாய்ப்பே இல்லை என்றாகிவிடும். அதைத்தான் “அவர்கள்மீது இரண்டாம் மரனத்திற்கு அதிகாரம் இல்லை” என வெளி. 20:6 கூறுகிறது.

ஆனால் பரிசுத்தவான்களல்லாத அனைவரும் அழிவுக்குரிய சரீரத்தோடுதான் உயிர்த்தெழுவார்கள். இவர்கள்மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் உண்டு. இரண்டாம் மரணத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு பலர் உயிர்த்தெழக்கூடும் என்பதற்கு உதாரணம்தான், லாசரு மற்றும் சூனேமியாளின் மகன் போன்றோர். ஆகிலும், அவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி, கிறிஸ்துவையும் அவரது நீதியை கற்பதோடு மட்டுமின்றி கிறிஸ்துவையும் அவரது நீதியையும் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவும் செய்தால், அவர்கள் நித்திய ஜீவனைப் பெற நியமிக்கப்படுவார்கள். மற்ற அனைவரும், இரண்டாம் மரணத்துக்கு நியமிக்கப்படுவார்கள்.

பின்னர் இறுதி நியாயத்தீர்ப்பின்போது, நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் (அதாவது வெளி. 21:27 கூறுகிறபடி ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் மாத்திரம்) நித்தியஜீவனைப் பெறுவார்கள். மற்றவர்கள் வெளி. 21:8, 27 கூறுகிறபடி இரண்டாம் மரணத்தில் பங்கடைவார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard