யோவான் 3:13-ன் மூல பாஷை வார்த்தைகள் மற்றும் அவற்றின் அர்த்தங்களின்படி பார்க்கையில், பின்வரும் மொழிபெயர்ப்புதான் சரியாக இருப்பதாக நான் அறிகிறேன்.
Weymouth New Testament
3:13 There is no one who has gone up to Heaven, but there is One who has come down from Heaven, namely the Son of Man whose home is in Heaven.
மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளைவிட இதில் அதிக வார்த்தைகள் உள்ளபோதிலும், இதுவே சொல்லப்பட்ட வசனத்தின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதாக நான் அறிகிறேன். இதன் தமிழாக்கம்:
பரலோகத்திற்கு போனவர்கள் எவரும் இலர்; ஆனால் பரலோகத்தை வாசஸ்தலமாகக் கொண்டவரான மனுஷகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.
இதை இன்னும் சற்று சுருக்கிச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்.
பரலோகத்திற்கு போனவர்கள் எவரும் இலர்; ஆனால் பரலோகத்தில் இருந்தவரான மனுஷகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.
இவ்வசனத்திற்கு மூலபாஷையில் காணப்படும் வார்த்தைகளும், அவற்றிற்கான அர்த்தங்களும்:
kai: and; oudies: none; anabaino: to go up;
eis: to; ho: the; ouranus: heaven;
ei me: if not; ho: he; ek: from; ho: the; ouranus: heaven; katabaino: to descend;
ho: the; huis: son; ho: of; anthropos: man.
இந்த அர்த்தங்களில், if not எனும் சொற்றொடருக்கு, exceptஅல்லது but எனும் வார்த்தைகள்தான் பெரும்பாலான ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. except எனும் வார்த்தை ஒரு விதிவிலக்கான விஷயத்தைக் கூறும்போது பயன்படுத்தப்படுவதாகும்.
எனவே மேற்கூறிய வசனமானது, “பரலோகத்திற்கு போனவர்கள் யாருமில்லை என்பது விதியாக இருந்தாலும், மனுஷ குமாரன் அதற்கு விதிவிலக்காக உள்ளார்” எனக் கூறுவதாக உள்ளது. அதாவது “மனுஷ குமாரன் மட்டுமே பரலோகத்திற்கு சென்றுள்ளார், வேறு யாரும் செல்லவில்லை” எனக் கூறுவதாக உள்ளது. ஆனால் மற்றொரு வசனத்தில் இயேசு இவ்வாறு கூறுகிறார்.
யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
இயேசு உயிர்த்தெழுந்த பின்னர்கூட உடனடியாக பரலோகத்திற்கு போகவில்லை என இவ்வசனத்தில் கூறுகிறார். மேலும் அடுத்து தாம் பரலோகத்திற்கு போகப்போவதை விசேஷித்தவிதமாக தமது சீஷரிடத்தில் கூறுகிறார். எனவே இப்பூமியில் ஜீவித்த நாட்களில் அவர் பரலோகத்திற்கு போயிருக்கமாட்டார் என அறிகிறோம்.
எனவே யோவான் 3:13-ன் மொழிபெயர்ப்பின்படி, “மனுஷ குமாரன் மட்டுமே பரலோகத்திற்கு சென்றுள்ளார்” எனும் விதிவிலக்கு சரியல்ல. மாறாக மனுஷர்கள் யாரும் போகாத அந்த பரலோகத்திலிருந்து, மனுஷ குமாரனான இயேசு மட்டுமே இறங்கி வந்துள்ளார் எனும் விதிவிலக்குதான் சரியானதாக இருக்கும். இக்கருத்துக்கு ஒத்ததாக Weymouth New Testament ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. எனவே அதன் தமிழாக்கமான:
பரலோகத்திற்கு போனவர்கள் எவரும் இலர்; ஆனால் பரலோகத்தில் இருந்தவரான மனுஷகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.
என்பதே யோவான் 3:13-ன் சரியான மொழிபெயர்ப்பாக இருக்கமுடியும் என நான் கருதுகிறேன்.