நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? FB - Arputharaj


Militant

Status: Offline
Posts: 830
Date:
துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? FB - Arputharaj
Permalink  
 


Face Book தளத்தில் அற்புதராஜ் என்பவர் பதித்துள்ள கட்டுரையும் அதற்கான பின்னூட்டங்களும்:

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

by Arputharaj Samuel on Wednesday, November 23, 2011 at 11:46pm

சபையின் ஆரம்ப கால முதலே தவ்றான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப் போனால் அப்போஸ்தலர்கள் காலம் முடிவதற்கு முன்பே கள்ள உபதேசங்கள் முளைத்துவிட்டன. வெளிப்படுத்தல் புத்தகத்திலும் கூட் பல துர் உபதேசங்கள் சபையில் இருப்பதை ஆண்டவர் சுட்டிக் காட்டுவதை நாம் காணலாம். விதை விதைக்கும் எல்லா இடங்களிலும் களையும் முளைக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேத வசனத்தில் தெளிவுள்ளவர்களாய் இருக்கவேண்டும். போதகர்களும் வேத வசனத்தின்படி சரியாய் பகுத்து போதிக்கவேண்டும். இஷ்டப்படி உளறிக் கொட்டி உபதேசமாக்கிவிடக் கூடாது. இக்கட்டுரை கண்களை தெளிவிக்கும் கலிக்கமாக இருக்கும்.

 

துர் உபதேசங்களின் பிறப்பிடம்

1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

 

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

 

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

 

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்.

 

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

 

தவறான போதனை யாரிடம் இருந்து வரும்?

 

தவறான போதனை எவரிடமிருந்தும் வரலாம் என்பது சற்று அதிர்ச்சியளிக்கக் கூடிய கசப்பான உண்மைதான். ஆனபடியால் எல்லாருமே தவறான போதனையைத்தான் செய்கிறார்கள் என்ற கள்ள உபதேசக்காரர்களின் கூற்றை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எவரும் தவறு செய்யும் ஆபத்து உள்ளது என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் ஊழியர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு. வல்லமையான ஒரு ஊழியர் மூலம் பலத்த செய்கைகள் திரளாய் நடக்கும்போது அவருடைய போதனைகள் யாவும் சரியே என்று கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டுவிடக் கூடாது. ஆனால் வழக்கமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அற்புதங்கள் ஆவிக்குரியவர்களின் கண்களை மங்கச் செய்து நிதானிப்பை மழுங்கச் செய்கின்றன. ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது தேவன் அவரை கிருபையாய் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். அவ்ருக்கு இருக்கிற திறமைகளினிமித்தமாகவோ அல்லது அவர் அதிக வசனம் தெரிந்தவர் என்பதினால் அல்ல கிருபையினால் மாத்திரமே தேவன் பயன்படுத்துகிறார்.

 

இதற்கு சரியான உதாரணமாகக் கூற வேண்டுமானால் பாலாசீர் லாறி என்பவரைக் கூறலாம். என்னை கிறிஸ்துவுக்குள் நடத்திய மூத்த போதகர் பாஸ்டர் கே.ஜே ஆபிரகாம் என்பவர் அவரைக் குறித்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆரம்ப நாட்களில் பாலாசீர் லாறிக்கு பிரசங்கிக்க சரியாக வருவதில்லை. ஆனால் இரவு நேரத்தில் எல்லாரும் படுக்கச் சென்றால் இவர் மாத்திரம் முழங்கால் படியிட்டு ஆண்டவரே கிருபை தாரும் என்று தேவனிடத்தில் மன்றாடுவார். காலையில் எல்லாரும் எழும்பும்போது பார்த்தாலும் அவர் இரவில் ஆரம்பித்த அதே ஜெப நிலையில்தான் இருப்பார். நான் கேள்விப்பட்டவரையில் இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். இன்றும் இவருடைய ஆசிரமம் எங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்டம் உலக மக்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர் கூழையும் கஞ்சியையும் குடித்துக் கொண்டு.

 

சரி நாம் துர் உபதேசங்களின் பிறப்பிடத்தை சற்று ஆராயலாமா?

1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

 

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று மொடவாதம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். வேத வசனத்தின் உண்மையான பொருளை விளங்கிக் கொள்ளாமல் இவர்களின் தலையில் உதிப்பது எதுவோ அதையே உபதேசமாக்குகின்றனர். இப்படிப்பட்ட தவறான புரிந்து கொள்ளுதல்களுக்கு பல உதாரணங்களை நாம் வேதாகமத்திலிருந்தும் சரித்திரத்திலிருந்தும் உதாரணமாகக் கூறலாம். உதாரணமாக அந்திக் கிறிஸ்து என்ற பதத்தை எடுத்துக் கொள்வார்கள். இதில் அந்தி என்பது மாலையைக் குறிக்கிறது. அப்படியானால் கடைசிக் காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்திக் கிறிஸ்து என்பர். ஆனால் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதுதான் அந்திக் கிறிஸ்து என்ற பதத்தின் சரியான பொருள். இப்படிப்பட்ட குழப்பங்கள் துர் உபதேசங்கள் என்னும் அரசியலில் சர்வ சாதாரணம். நாம் கண்டு கொள்ளவேக் கூடாது.

 

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

 

போதிப்பவர் எப்போதும் வேதாகமத்தின் கருத்தையே வலியுறுத்தி போதிக்க வேண்டும். தன் சொந்தக் கருத்தை நிலை நிறுத்துவதற்காக வேதத்தை பயன் படுத்தினால் அது துர் உபதேசத்தில் விட்டுவிடும். பொதுவாக அமெரிக்க அரோப்பிய நாடுகளில் பாவம் குறித்து உங்களிடம் ஏதேனும் புத் சரக்கு இருந்தால் உங்கள் காட்டிலே மழைதான். திரளான பேர் உங்கள் சபையில் சீக்கிரம் சேர்வர். நீங்கள் செய்ய வேண்டியது பாவத்தைக் குறித்து கடுமையாக பேசாமல் பாவம் செய்வது தவறல்ல என்று போதிக்க வேண்டும். அவ்வளவுதான். அமெரிக்காவில் ஒரு போதகர் இப்படியாகச் சொன்னார். ஆண்டவராகிய இயேசு அனைத்துப் பாவங்களுக்காகவும் மரித்து விட்டார். அதாவது நாம் செய்த செய்து கொண்டிருக்கிற செய்யப் போகிற பாவங்கள் எல்லாவற்றிற்காகவும் சிலுவையில் கிரயம் செலுத்திவிட்டார். ஆகவே நாம் இஷ்டம் போல வாழலாம். உலக சிற்றின்பங்களில் திளைக்கலாம் என்பது இவரின் போதனை. நடந்தது என்ன தெரியுமா? அவரது சபையில் சீக்கிரமே ஏராளமானோர் இணைந்தனர். இதுபோல சபைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உள்ளவர்கள் ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டுவதில்லை, அந்த அபிசேகமே உங்களுக்கு சகலத்தையும் குறித்து போதிக்கிறது என்ற வசனத்தை காட்டி திசை திருப்ப முயல்வர். ஆனால் சபை கூடி வருதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இதன் சுவையை உணர்ந்த அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கிறிஸ்தவன் ஒழுங்காய் தவறாது சபைக்கு செல்வான். உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது.

 

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

 

இதற்கு பல உதாரணங்களை வேதத்திலிருந்தே கூறலாம். ஸ்திரீயை தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது ( 1கொரி.7:1) - அப்படியனால் ஒருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதா? 2.அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அனேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்.3.1) - அப்படியானர் ஒருவரும் போதகராகக் கூடாது! இப்படிப்பட்ட ஒருவசன உடும்புகள் துர் உபதேசங்களில் ஏராளம் உண்டு. ஏழாம் நாள்

ஓய்வுநாள் சபையாரும் கூட இப்படிப்பட்ட உபதேசக் குழப்பத்தில் ஊறினவர்கள்தான்.

 

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்

வேதாகமே எந்த கிறிஸ்தவ உபதேசத்திற்கும் அடிப்படியாக இருக்கவேண்டும். மாறாக தாங்கள் கண்ட சொப்பனங்கள், தரிசனங்கள், வெளிப்பாடுகளின் அடிப்படையில் வேதாகமத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க முயல்வது என்றுமே ஆபத்தானது ஆகும். தேவன் மனிதனுக்கு சொல்ல வேண்டிய நற்செய்தியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சொல்லிவிட்டார். பரிசுத்த ஆவியானவர் பல ஆவிக்குரிய இரகசியங்களை நிருபங்களில் எழுதியுள்ளார். இதற்கு மாறாக கர்த்தர் எனக்கு புதிதாக வெளிப்படுத்தினார் என்று யாராவது கூறினால் அது வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை. தேவன் ஒருபோதும் மாறாதவர். அவர் தம் வேதாகமத்தில் இருப்பதற்கு மாறாக எதையும் கூறுவதில்லை.

 

வில்லியம் பிரென்ஹாம் என்கிற அடிக்கடி தரிசனம் கண்ட ஊழியரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இவரும் ஒரு காலத்தில் பிரபலமான அற்புதங்களைச் செய்யும் பிரசங்கியார். பிரச்சனை என்ன வெனில் இவர் கண்ட தரிசனங்களை உபதேசமாக்கியதுதான். இன்று பல பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கும் இவரைப் பின்பற்றுபவர்கள் ஏராளம் ஏராளம். தரிசனங்கள் சொப்பனங்கள் வெளிப்பாடுகள் என்று வரும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாம் நம்ப வேண்டியது வேதாகமத்தை மாத்திரமே. அதுவே நம் அஸ்திபாரம். நாம் காண்கிற கேட்கிற கேள்விப்படுகிற சொப்பனங்கள் தரிசனங்கள் வெளிப்பாடுகள் அல்ல.

 

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

 

தேவன் ஒரு சிலரை சில குறிப்பிட்ட அனுபவங்கள் மூலமாக நடத்துகிறார். அதற்காக அவர் அதையே உபதேசமாக்கிவிடக் கூடாது. ஒரு தேவ ஊழியர் தன் தலைமுடியை பராமரிப்பதில் அதிக நேரம் பணம் செலவழித்தாராம். ஒரு நாள் தேவன் அவரை மொட்டை அடிக்கும் படிக் கூறினாராம். மொட்டையடித்த அந்த ஊழியர் எல்லாரும் என்னைப் போல மொட்டையடிங்கள் என்று சபையில் போதித்தால் எப்படியிருக்கும். ஆனால் இன்று பல ஆவிக்குரிய சபைகளிலும் கூட இந்த போக்கை நாம் காணலாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்பாய் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இல்லையேல் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துவிடவ் ஏண்டியதுதான். எனக்கு மேற்சொன்ன சம்பவத்தை வாசிக்கும் போது சிறுவயதில் படித்த மொட்டை வால் நரி என்ற பஞ்ச தந்திர கதைதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையில் விபத்து ஒன்றில் தனது வாலை இழந்த ஒரு நரி அந்தக் காட்டிலிருந்த அனைத்து நரிகளும் வாலை வெட்டிக் கொண்டு மொட்டையாக இருக்க தந்திரம் செய்ததாம். அது போல வஞ்சிக்கப் பட்ட பலர் தங்களோடு கூட்டு சேர ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். மேலே நாம் கண்டவை எல்லாம் ஒரு சாம்பிள்தான். நாம் விழிப்பாயிருந்தால் எவரும் நம்மை விழத்தள்ள முடியாது. நாம் எளிதாய் தவறான உபதேசங்களை அடையாளங் கண்டு கொள்ளலாம். என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று துணிகரங் கொண்டு எவரும் கள்ள உபதேசங்களில் மாட்டிவிடாதீர். பிறகு ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகிவிடும். தேவனைப் பற்றீய சரியான அறிவும் வேதாகம அடிப்படை அறிவும் இருந்தால் நாம் எத்தகைய உபதேசங்களையும் இனம் கண்டு கொள்ளலாம். நாம் நம்மை சுத்திகரிக்கும் உபதேசத்தில் இருக்கிறோமா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    கட்டுரை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இக்கட்டுரையிலுங்கூட ஆங்காங்கே தவறான உபதேசங்கள் மறைந்துள்ளன.

    1. //திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார்.//
    பாலாசீர்லாறி திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறியதை தவறு என்பதுபோல் கட்டுரையாளர் சொல்கிறார். திரித்துவம் என்பது வேதாகமத்தில் இல்லாதது. இதுபற்றி கட்டுரையாளர் என்ன சொல்கிறார்? திரித்துவம் சரி என்கிறாரா? அல்லது தவறு என்கிறாரா?

    2. //உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது.//
    இது முழுக்க முழுக்க கட்டுரையாளரின் சுய அனுபவத்தின் கருத்தேயொழிய வேதாகமத்தின் கருத்து கிடையாது. இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்பவன்தான் உண்மையான சீஷன் அல்லது கிறிஸ்தவன் (யோவான் 8:31). மெய்யான ஆராதனை என்பது என்ன? ரோமர் 12:1 மற்றும் யாக்கோபு 1:27-ஐ படித்துப்பார்க்கவும். சபை கூடிவருதலை வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் சபை மூலம் கூடி ஆராதிக்காதவன் உண்மைக் கிறிஸ்தவன் அல்ல எனும் கூற்று தவறானது.
    இன்றைய பெரும்பாலான சபைகள் மத்தேயு 15:9-ல் இயேசு கூறுவதுபோல், “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து வீணாகத்தான் ஆராதனை செய்கின்றனர்”.

    3. //ஏழாம் நாள் ஓய்வுநாள் சபையாரும் கூட இப்படிப்பட்ட உபதேசக் குழப்பத்தில் ஊறினவர்கள்தான்.//
    ஏழாம் நாள்தான் ஓய்வுநாள் எனச் சொல்வது ஒரு குழப்பமா? அப்படியானால் தேவனுங்கூட குழப்பவாதியாகிவிடுவார். ஏனெனில் ஏழாம்நாள்தான் ஓய்வுநாள் என தேவன்தான் யாத்திராகமம் 20:10-ல் கூறியுள்ளார். வாரத்தின் முதலாம்நாளை ஓய்வுநாள் என ஒரு வசனமும் சொல்லவில்லை. அப்படி ஒரு வசனம் இருந்தால் அதை இக்கட்டுரையாளர் சொல்லட்டும்.
  • John Edward
    ‎//பாலாசீர்லாறி திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறியதை தவறு என்பதுபோல் கட்டுரையாளர் சொல்கிறார். திரித்துவம் என்பது வேதாகமத்தில் இல்லாதது. இதுபற்றி கட்டுரையாளர் என்ன சொல்கிறார்? திரித்துவம் சரி என்கிறாரா? அல்லது தவறு என்கிறாரா?
    //

    கட்டுரையாளரின் விசுவாசம் தங்களுக்கு தெரியாததா? இயேசு கிறிஸ்து உருவாக்கப்பட்டவரா? அப்படி என்றால் உண்டான எல்லாவற்றையும் அவரே உருவாக்கினார் என்று வேதம் எப்படி சொல்லுகிறது?

    யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

    தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும் யார்? பிதாவா? இயேசுவா?

    .தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். (ஏசாயா 8:14-15)

    ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; (1 பேதுரு 2:7)

    "தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

    ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)


    சபையின் மணவாளன் பிதாவா அல்லது கிறிஸ்துவா?

    ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.

    நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (II கொரிந்தியர் 11:2)

    ஏசாயா யாரை பார்த்தான்?

    அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH) ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)

    யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

    ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)
  • Gnana Piragasam
    கட்டுரையாளரின் விசுவாசத்தை நான் அறிந்தால் போதுமா? எல்லோரும் அறிய வேண்டாமா?

    ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் வைத்து அதையே உபதேசமாக்குவதுகூட தவறான உபதேசத்துக்கு வழிவகுக்கும் எனச் சொன்ன அவர், வசனமே இல்லாத திரித்துவ உபதேசத்தை உடையவர் என்பதை எல்லாரும் அறிய வேண்டாமா? எனவேதான் அக்கேள்வி.

    அவரது சார்பாக பதிலுரைத்த நீங்கள், எனது “நித்திய ஜீவன்” தளத்தில் விவாதம் செய்துவிட்டு, இறுதியில் எனது தேவன் லூசிபர் எனத் தீர்த்துவிட்டுச் சென்ற ஜாண் தானே? லூசிபரைத் தேவனாகக் கொண்ட என்னிடமிருந்து இன்னும் என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை. முதலாவது திரித்துவத்தின் கொள்கைகள், அவற்றிற்கான வசன ஆதாரங்கள் என்னென்ன என்பதை விரிவாகச் சொல்லுங்கள் அதன்பின் உங்கள் வசனங்களுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

    உங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காக எனது சில விளக்கங்கள்:
  • Gnana Piragasam
    திருத்துவம், ஒருத்துவம் எனும் 2 வார்த்தைகளும் வேதாகமத்தில் இல்லை. ஆனால் ஒருத்துவம் எனும் வார்த்தைக்கு நிகரான “தேவன் ஒருவருக்கே, தேவன் ஒருவரே, ஒரே தேவன்” எனும் வார்த்தைகள் அடங்கின பல வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன.

    மல்கியா 2:10 நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ?
    மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

    மாற்கு 12:29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். ... என்றார். 32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. ... என்றான். 34 அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்.

    ரோமர் 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக (1 தீமோ. 1:17; யூதா 1:25).
    1 கொரி. 12:6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
    1 தீமோ. 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
    யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

    கலாத்தியர் 3:20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
    1 கொரி. 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
    எபேசியர் 4:6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
  • Gnana Piragasam
    இயேசுவை தேவனுடைய குமாரன் எனப் பல வசனங்கள் சொல்கின்றன. மனிதனின் குமாரன் மனிதாக இருப்பதுபோல தேவனுடைய குமாரனும் தேவத்துமுள்ள தேவன்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் யெகோவாகிய தேவன், இயேசுவுக்கும் தேவானாகவும், தேவாதி தேவனாகவும் இருக்கிறார். Unique God எனச் சொல்வதானால், யெகோவாகிய தேவன் ஒருவரை மட்டுமே சொல்லமுடியும்.

    சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான்; மோசேயானவன் பார்வோனின் தேவனாக இருந்தான்; தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களுங்கூட தேவர்கள் என அழைக்கப்பட்டனர்; வானம் பூமி அவற்றிலுள்ள எல்லாமுக்கும் இயேசு தேவனாக இருக்கிறார்; ஆனால் இயேசு உட்பட வானம் பூமி அனைத்துக்கும் யெகோவா மட்டுமே தேவாதி தேவனாக இருக்கிறார்.
  • Paul Prabhakar ‎@ Gnana Piragasam பிதாவாகிய தேவனுடைய பெயர் யெகோவா தானா?
  • Gnana Piragasam
    ‎1 கொரி. 8:9 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

    லூக்கா 20:37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

    பிதாதான் ஒரே தேவன் என பவுல் சொல்கிறார். எனவே லூக்கா 20:37-ல் இயேசு சொல்கிற தேவனும் பிதாவாகிய தேவனும் ஒருவரே என அறிகிறோம். லூக்கா20:37-ல் இயேசு சொல்கிற “ஆபிரகாமின்/ஈசாக்கின்/யாக்கோபின் தேவன் தான் மோசேயுடன் பேசினார். அந்த தேவன் தான் மோசேயிடம் தமது நாமம் யெகோவா எனக் கூறினார்.

    யாத். 6:2 தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, 3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

    எனவே பிதாவாகிய தேவனின் நாமம்தான் “யெகோவா”.
  • Arputharaj Samuel
    ‎||கட்டுரை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இக்கட்டுரையிலுங்கூட ஆங்காங்கே தவறான உபதேசங்கள் மறைந்துள்ளன.||
    இந்தக் கட்டுரையை இங்கு மறுபதிப்பு செய்யும் போதே சகோ.அன்பு @ ஞானப்பிரகாசம் போன்றவர்களை எதிர்பார்த்தேன். சர்ப்பத்தின் வார்த்தைகளைப் போன்ற விஷம் நிறைந்த சந்தேக விதைகளை விதைப்பதில் தாங்கள் எவ்வளவு கில்லாடி என்பதை நாங்கள் அறிவோம். ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் மனதில் தேவனைப் பற்றிய சந்தேகத்தை தந்திரமாக சாத்தான் விதைத்ததற்கும் உங்களின் வரிகளுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.
    நீங்களும் ஒரு ஒருவசன உடும்புதான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகிறேன்.
  • Arputharaj Samuel
    ‎||3. //ஏழாம் நாள் ஓய்வுநாள் சபையாரும் கூட இப்படிப்பட்ட உபதேசக் குழப்பத்தில் ஊறினவர்கள்தான்.//
    ஏழாம் நாள்தான் ஓய்வுநாள் எனச் சொல்வது ஒரு குழப்பமா? அப்படியானால் தேவனுங்கூட குழப்பவாதியாகிவிடுவார். ஏனெனில் ஏழாம்நாள்தான் ஓய்வுநாள் என தேவன்தான் யாத்திராகமம் 20:10-ல் கூறியுள்ளார். வாரத்தின் முதலாம்நாளை ஓய்வுநாள் என ஒரு வசனமும் சொல்லவில்லை. அப்படி ஒரு வசனம் இருந்தால் அதை இக்கட்டுரையாளர் சொல்லட்டும்.||

    வாரத்தின் முதல் நாள்தான் ஓய்வு நாள் என்று நான் எங்கும் கூற வில்லையே. ஆதிச் சபையிலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான வாரத்தின் முதல் நாளை விசேசமாக்கிக் கொண்டு கூடிவந்து ஆராதித்தனர். ஆனாலும் ஆராதனை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மட்டுமானதன்று. எல்லா நாளும் கர்த்தருக்குள் ஆராதனை நாளே.
    நீங்கள் கூறும் ஓய்வு நாள் என்பது நியாயப் பிரமாணத்திற்குட்பட்டது. இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் என (ரோமர்.10:4) வாசிக்கிறோம். ஏழாம் நாள் ஓய்வு நாள் என்பது நித்திய கட்டளை என்பதாக ஏழாம் நாள் ஓய்வு நாள் சபையினர் கூறுவர். நியாயப்பிரமாணத்தின் படி நடந்து கொண்டு கிருபையின் பிரமாணத்துக்குள் ஒருவரால் வரவே முடியாது. அது மாத்திரமல்ல நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் ஒருவரும் நீதிமானாக்கப்படுகிறதில்லை. விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான். இன்னுமதிகத் தகவல்களுக்கு எபிரேயர் 4 ஆம் அதிகாரம் வாசியுங்கள்.

    ஓய்வுநாள் குறித்த மற்றுமொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். தேவன் தம் கிரியைகளை எல்லாம் செய்து முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதைப் பரிசுத்தமாக்கினார். தேவன் ஓய்ந்திருந்த ஏழாம் நாள் என்பது மனிதனுக்கு இரண்டாவது நாள் அப்படித்தானே! ஏழாம் நாள் ஓய்வுச் சபையார் இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணருவதைக் கண்டிருக்கிறேன். வேதாகமத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒரே ஒரு வசனத்தில் தொங்கினால் அது முட்டாள்தனமானதாகவே இருக்கும்.
  • Gnana Piragasam ‎//சர்ப்பத்தின் வார்த்தைகளைப் போன்ற விஷம் நிறைந்த சந்தேக விதைகளை விதைப்பதில் தாங்கள் எவ்வளவு கில்லாடி என்பதை நாங்கள் அறிவோம்.//

    //நீங்களும் ஒரு ஒருவசன உடும்புதான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறீர்கள்.//

    //வேதாகமத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒரே ஒரு வசனத்தில் தொங்கினால் அது முட்டாள்தனமானதாகவே இருக்கும்.//

    இக்கூற்றுகள் யாவும் அவற்றை எழுதினவருக்கே திருப்பியனுப்பப்படுகிறது.
  • Gnana Piragasam
    ‎//வாரத்தின் முதல் நாள்தான் ஓய்வு நாள் என்று நான் எங்கும் கூற வில்லையே.//
    அப்படியானால் வாரத்தின் ஏழாம் நாள்தான் ஓய்வுநாள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படி ஒப்புக்கொண்டால், வாரத்தின் முதலாம் நாளை ஓய்வுநாளாக்கி குழப்பம் விளைவித்தவர்களை அல்லவா முதல் துர் உபதேசக்காரராகக் கூறவேண்டும்? ஒருவேளை எந்த நாள் ஓய்வுநாள் என்பது உங்களுக்கு ஒரு பொருட்டல்லவெனில், வாரத்தின் முதல்நாள் மற்றும் 7-ம் நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கிற அத்தனை சபையாரையும் குழப்பவாதிகள் என நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

    உண்மையில், ஓய்வு நாளை ஏழாம் நாளிலிருந்து முதலாம் நாளுக்கு சில அதிகப்பிரசங்கிகள் மாற்றாமல் இருந்திருந்தால், “ஏழாம் நாள் ஓய்வுநாள் சபை” என்ற ஒரு சபையே உருவாகியிருக்காது

    //ஆராதனை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மட்டுமானதன்று. எல்லா நாளும் கர்த்தருக்குள் ஆராதனை நாளே.//
    எந்த நாளில் ஆராதனை செய்வதென்பது என்னைப்பொறுத்தவரை ஒரு பொருட்டேயல்ல. புத்தியில்லாத ஆராதனையை வாரத்தின் 7 நாட்களும் செய்வதைவிட சும்மா இருக்கலாம்.
    ரோமர் 12:1 நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
    இந்த புத்தியுள்ள ஆராதனையைச் செய்யாமல், வாரத்தின் 7 நாட்களும் கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லி ஆராதனை செய்வதால் எந்தப் பயனுமில்லை.
  • Gnana Piragasam
    ‎//தேவன் ஓய்ந்திருந்த ஏழாம் நாள் என்பது மனிதனுக்கு இரண்டாவது நாள் அப்படித்தானே!//

    இதைக்குறித்த கேள்வியே நமக்கு அவசியமில்லை. ஓய்வு நாள் எந்த 7 நாட்களுக்கு ஒருமுறை (அதாவது தேவன் ஓய்ந்திருந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஒருமுறை, அல்லது மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஒருமுறை) வருகிறது என்பதை அறிய நாம் உலகத்தொடக்கத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளை ஒழுங்காக ஆசரித்துவந்துள்ளனர். அவர்கள் ஆசரித்த ஓய்வுநாள் சரியான ஓய்வுநாள்தான். எனவே அந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஒருமுறை வருகிற 7-ம் நாளையே நாம் ஓய்வுநாளாக எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவு கூட இல்லாமல், பெரிய புத்திசாலி மாதிரி, மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட நாளையெல்லாம் இழுத்து கேள்வி எழுப்புவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
  • Arputharaj Samuel
    ‎|இக்கூற்றுகள் யாவும் அவற்றை எழுதினவருக்கே திருப்பியனுப்பப்படுகிறது.|
    இங்கே நான் கூறின வார்த்தைகள் யாருக்குப் பொருந்தும் என்று அனைவரும் அறிவர். சம்பந்தமே இல்லாமல் “உள்ளேன் ஐயா” என்று வருகை தந்ததிலிருந்தே தாங்கள் யாரென்பதைக் கண்டு கொண்டோம் ஐயா.

    வாரத்தின் முதல் நாள் தான் ஓய்வு நாள் என்று நான் சொல்லவில்லை. ஆதிச் சபையிலிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து ஆதித்திருச்சபை வாரத்தின் முதல் நாளில் கூடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. உங்களைப் பொறுத்தவரையில் அப்போஸ்தலர்கள் தாம் அந்த அதிகப் பிரசங்கிகள் என்றால் நான் அந்த அதிகப் பிரசங்கிகள் கூட்டத்தில் இருப்பதையே இன்னும் விரும்புவேன். இன்னும் விட்டால் இயேசு ஏன் வாரத்தின் முதல் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று கேள்வி கேட்பீர்கள் போல!

    இஸ்ரவேலர்களைப் பின்பற்றி ஓய்வுநாளை ஆசரிக்க விரும்பும் நியாயப் பிரமாணப் போதகரே! நாங்கள் இஸ்ரவேலரை அல்ல, இயேசுவைப் பின்பற்றுகிறோம். இயேசுவின் மீதும் நீங்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பதை மறந்துவிட வேண்டாம். அட நீங்கள் இன்னும் எபிரேயர் 4 ஆம் அதிகாரத்தை வாசிக்கவில்லையா?
  • Arputharaj Samuel
    ‎|ஆனால் சபை மூலம் கூடி ஆராதிக்காதவன் உண்மைக் கிறிஸ்தவன் அல்ல எனும் கூற்று தவறானது.|
    2. //உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது.//

    இரண்டு வரிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சகோ ஞானப்பிரகாசம் எவ்வளவு அருமையாக வார்த்தைகளைத் திரித்திருக்கிறார். இங்கே யார் மனுசர் கற்பனைகளைப் போதிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. யார் புரட்டுகிறவர்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி யாக இருக்கிறது ஐயா.

    சபை என்பது கட்டிடம் அல்ல, கிறிஸ்துவை அஸ்திபாரமாகக் கொண்டு அவர் மீது கட்டி எழுப்பப்படும் விசுவாசிகளே என்பதை பலமுறை சொல்லிவந்திருக்கிறேன். இப்போதும். கூடி வர ஒரு கட்டிடம் தேவை என்றாலும், கட்டிடம் இல்லாவிட்டாலும் கூடிவரவோ தேவனை ஆராதிக்கவோ தடை இல்லை. உண்மைக் கிறிஸ்தவன் தனித்து இருக்க மாட்டான். கிறிஸ்துவோடும், கிறிஸ்துவின் அடியவர்களோடும் இணைந்திருக்க விரும்புவான், விழைவான். தனித்திருக்கும் ஒரு சரீர உறுப்பு பிண்டம் ஆகும். அது சீக்கிரத்தில் அழுகி நாறி விடும். அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை.

    கிறிஸ்து என்னும் அஸ்திபாரமே சரியாக இல்லாதவர்களுக்கு மற்ற விசயங்கள் சரியாகத்தான் விளங்கியிருக்கும் என்று நினைப்பது எவ்வளவு தவறு.
  • Gnana Piragasam
    ‎//வாரத்தின் முதல் நாள் தான் ஓய்வு நாள் என்று நான் சொல்லவில்லை.//
    நீங்களும் நானும் என்ன சொல்கிறோம் என்பது வாதமல்ல. வேதத்தின்படி சரியான நாளை ஓய்வுநாளாகக் கடைபிடிக்கும் சபையாரை துர் உபதேசக்காரர் எனச் சொன்ன நீங்கள், தவறான நாளை ஓய்வுநாளாகக் கடைபிடிப்போரை எதுவும் சொல்லத் தவறியது ஏன் என்பதுதான் என் கேள்வி. ஓய்வுநாள் ஆசரிப்பின் அடிப்படையில் குற்றஞ்சொல்வதானால், இரு தரப்பு சபையாரையும் குற்றஞ்சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாமல் ஒரு தரப்பு சபையாரை மட்டும், அதுவும் வேதத்தின்படி சரியான நாளை ஓய்வுநாளாக அநுசரிப்போரை மட்டும், பாரபட்சமாக குற்றஞ்சொல்வது ஏன் என்பதுதான் என் கேள்வி? முதலாம் நாளை ஓய்வுநாளாக அநுசரிக்கும் சபையில் நீங்கள் ஐக்கியமாயிருப்பதாலோ என்னவோ, அந்த சபையாரைக் குறித்து எதுவும் சொல்லாமல், ஓரவஞ்சகமாக ஏழாம் நாள் ஓய்வுநாள் சபையை மட்டும் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள்.
  • Gnana Piragasam
    ‎//ஆதிச் சபையிலிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து ஆதித்திருச்சபை வாரத்தின் முதல் நாளில் கூடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.//
    அய்யா பல வசன ஆராய்ச்சிக்காரரே, பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

    அப். 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, ...

    அப். 13:14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
    42 அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
    16:13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
    17:2 பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, ...
    18:4 ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.

    ஓய்வுநாளில் “ஜெபஆலயத்தில் அல்லது வேறிடத்தில் கூடிவருதலை” வழக்கமாகக் கொண்டிருப்பதைப்பற்றி 5 வசனங்கள் உள்ளன. ஆனால் முதலாம்நாளில் அப்பம் பிட்கப்பட்டதைப் பற்றி ஒரேயொரு வசனம் மட்டுமே உள்ளது. அதுவும் “வழக்கம்” எனும் வார்த்தை ஓய்வுநாளில் கூடிவருதல் பற்றின வசனங்களில்தான் உள்ளதேயன்றி, முதலாம்நாளில் அப்பம்பிட்குதல் பற்றின வசனத்தில் இல்லை. ஆனால் இப்படி ஒரு வசனம் சொல்கிறது.

    1 கொரி. 16:1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். 2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

    தர்மப்பணம் சேகரிக்கும்பணிதான் முதலாம்நாளில் வழக்கமாக நடைபெற்றது. இந்த சேகரிப்புப்பணிக்கு பொருத்தமாயிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் முதலாம்நாளை ஓய்வுநாளாக்கி, அன்று ஆராதனை செய்து காணிக்கையை (தங்களுக்கு தர்மப்பணமாக) சேகரிக்கின்றனர் போலும்.

    ஆக, முதலாம்நாளில் கூடிவந்ததைப் பற்றி ஒரு வசனம் மட்டுமே உள்ளது; ஆனால் ஓய்வுநாளில் கூடிவருதல் பற்றி 5 வசனம் உள்ளது. நீங்களோ முதலாம் நாள் கூடிவருதலுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள். இப்போது தெரிகிறதா, யார் ஒரு வசன உடும்பு என்று? இப்போது தெரிகிறதா, யார் முட்டாள்தனமாக ஒரே ஒரு வசனத்தில் தொங்குபவர் என்று? இப்போது தெரிகிறதா, உங்களது கூற்றுக்களை உங்களுக்கே நான் திருப்பிவிட்டது ஏன் என்று?
  • Gnana Piragasam
    ‎//உங்களைப் பொறுத்தவரையில் அப்போஸ்தலர்கள் தாம் அந்த அதிகப் பிரசங்கிகள் என்றால் நான் அந்த அதிகப் பிரசங்கிகள் கூட்டத்தில் இருப்பதையே இன்னும் விரும்புவேன்.//
    அப்போஸ்தலர்கள் அதிகப்பிரசங்கள் அல்ல, அவர்களுக்குபின் வந்த “மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்தான் (அப். 20:29)” அதிகப்பிரசங்கிகள். இந்த ஓநாய்களான அதிகப்பிரசங்கிகளின் கூட்டத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

    //இன்னும் விட்டால் இயேசு ஏன் வாரத்தின் முதல் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று கேள்வி கேட்பீர்கள் போல!//
    ஆம், நிச்சயமாக. எல்லோரும் இயேசுவைப்போல் சிலுவையில் அறையப்பட்டு மரித்து, வாரத்தின் முதலாம் நாளில்தான் உயிர்த்தெழவேண்டும் எனும் சட்டத்தை உங்கள் சபையில் போட்டால், அக்கேள்வியை நான் நிச்சயமாகக் கேட்பேன். முதலாவது இயேசுவைப் போல் மரித்து உயிர்த்தெழுந்து வாருங்கள், அதன்பின் உங்களிடம் அக்கேள்வியைக் கேட்கிறேன்.

    //இஸ்ரவேலர்களைப் பின்பற்றி ஓய்வுநாளை ஆசரிக்க விரும்பும் நியாயப் பிரமாணப் போதகரே! ... //
    சும்மா சும்மா அபாண்டமாக எதையாவது சொல்லி, படிப்போரின் கவனத்தை இழுக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, “ஓய்வுநாள் ஆசரிப்பும் தேவையில்லை, சபை கூடிவந்து ஆராதிப்பதும் தேவையில்லை, ரோமர் 12:1 கூறுகிற “புத்தியுள்ள” ஆராதனையே போதும்” என நான் சொன்னது காதில் விழவில்லையா அல்லது கண்ணில் படவில்லையா?
  • Gnana Piragasam
    ‎//இரண்டு வரிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சகோ ஞானப்பிரகாசம் எவ்வளவு அருமையாக வார்த்தைகளைத் திரித்திருக்கிறார். இங்கே யார் மனுசர் கற்பனைகளைப் போதிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. யார் புரட்டுகிறவர்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது ஐயா.//
    இரண்டு வரிகளுக்கும் என்னய்யா வித்தியாசமுள்ளது? உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது என்றால், கூடி ஆராதிக்காமல் இருக்க முடிபவன் உண்மைக் கிறிஸ்தவன் அல்ல என்றுதானே அர்த்தம்? இந்த logic கூட தெரியாவிட்டால் போய் ஒரு 10 வயது குழந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

    எல்லாம் என் மீதான தேவசித்தம், இப்படி மட்டமான logical power உள்ளவரிடமெல்லாம் போராட வேண்டுமென்பது.
  • Gnana Piragasam
    ‎//உண்மைக் கிறிஸ்தவன் தனித்து இருக்க மாட்டான். கிறிஸ்துவோடும், கிறிஸ்துவின் அடியவர்களோடும் இணைந்திருக்க விரும்புவான், விழைவான்.//

    ஆம், கிறிஸ்துவின் அடியவர்களோடு நான் இணைந்திருக்கவே விரும்புகிறேன். ஆனால் இன்றைய பல ஆலயங்களில் கூடிவருகிற “அடியவர்களில்” பலர் கிறிஸ்துவின் சரீரமாக இல்லாமல் பிசாசின் சரீரமாக இருப்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேனே!

    2 கொரி. 6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

    அநீதியான அவிசுவாசிகளோடு ஐக்கியம் கொள்வதுதன் கிறிஸ்துவின் சரீரத்துடன் இணைவது என்கிறீர்களா? கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பினர்களை அடையாளம் காணமுடியாத ஒரு நிலைக்குள் நாம் வந்துவிட்டோம். கடைசிநாட்களில் அக்கிரமம் மிகுதியாகி அன்பு தணிந்து போம் என வேதம் சொல்கிறபடியே, உலகத்தில் மட்டுமல்ல, சபைக்குள்ளும் அக்கிரம் பெருகியுள்ளதை உலகமக்களே நன்கறிவார்கள். அப்படி அக்கிரமம் பெருகியுள்ள சபையில் இணையாத என்னை, தனித்த ஒரு சரீர உறுப்பு பிண்டம் என நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில் தலையாகிய கிறிஸ்துவோடு நான் இணைந்துள்ளேன். எனவே உங்களைப் போன்றோரின் விமர்சனத்தை தவிர்ப்பதற்காக பிசாசின் சரீரத்தோடு என்னால் இணைய முடியாது.
  • Gnana Piragasam ‎//கிறிஸ்து என்னும் அஸ்திபாரமே சரியாக இல்லாதவர்களுக்கு மற்ற விசயங்கள் சரியாகத்தான் விளங்கியிருக்கும் என்று நினைப்பது எவ்வளவு தவறு.//

    ஆம் நிச்சயமாக. கிறிஸ்து என்னும் அஸ்திபாரமே சரியாக இல்லாத “உங்களுக்கு” மற்ற விசயங்கள் சரியாகத்தான் விளங்கியிருக்கும் என்று நினைப்பது எவ்வளவு தவறு?
  • Gnana Piragasam
    ‎//ஆதிச் சபையிலிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து ஆதித்திருச்சபை வாரத்தின் முதல் நாளில் கூடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.//
    இதற்கான வசன ஆதாரம் இல்லை. ஒரேயொரு வசனம் இப்படிச் சொல்கிறது.

    அப். 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, ...

    இந்த ஒரேயொரு வசனத்தை வைத்து வாரத்தின் முதலாம் நாள்தான் அப்பம் பிட்கவேண்டும் எனும் முடிவை எடுத்தால்,

    அப். 2:46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, ...
    எனும் வசனத்தின்படி, ஆலயத்தில் அநுதினமும் தரிக்கவேண்டும், வீடுகள் தோறும் அப்பம் பிட்கவேண்டும்;

    அப். 2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
    4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். ...
    எனும் வசனங்களின்படி, நாங்களெல்லாம் கிறிஸ்துவின் சரீரம் எனச் சொல்கிற அற்புதத்தோடு சேர்ந்த “அழுகாத நாற்றமில்லாத சரீரங்கள்” அனைவரும் தங்களுடைய சகலத்தையும் பொதுவாக அனுபவிக்க வேண்டும்; காணியாட்சி, ஆஸ்தி, நிலம், வீடு எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலர் பாதபடியில் வைத்து, எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும்.

    ஆதித்திருச்சபையாரின் இச்செயல்களையெல்லாம் இன்றைய சபைகள் செய்கின்றனவா? கொம்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக, முக்கியமான காரியங்களில் ஆதித்திருச்சபையாரின் மாதிரியை விட்டுவிட்டு கதைக்குதவாத காரியங்களில் அவர்கள் எப்போதோ ஒரு நாள் செய்ததைக் கடைப்பிடிக்கிறேன் எனச் சொல்லிக் கொள்வதுதான் கிறிஸ்துவின் சரீரத்தின் லட்சணமா?
  • Mahesh Rajasekaran முதல் நாள் ஆராதனை சரியல்ல என்றும் ஏழாவது நாள் ஆராதனை சரி என்று சொல்பவற்கும் அப்படியல்ல புதிய ஏற்பாட்டின் பிரகாரம் நாம் முதல் நாள் ஆராதனை செய்வது தான் சரி என்று சொல்பவற்கும் ஒரு கேள்வி. வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுகிழமை என்றும், ஏழாம் நாள் சனிக்கிழமைஎன்றும் சொல்லபட்டிருகின்ற ஒரு வசனம் தயவுசைத்து காண்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. அதன் பின் தயவாக ரோமர் 14:6 வாசிக்க மறக்க வேண்டாம்
  • Golda Jasmine ‎6 நாள் வேலை. ஒரு நாள் (ஆணடவருக்குள்) ஓய்வு என்பதுதான் கணக்கே தவிர அது சனிக்கிழமையா, ஞாயிற்றுக் கிழமையா என்பது தேவையற்றது.
  • Gnana Piragasam ‎//ஏழாவது நாள் ஆராதனை சரி என்று சொல்பவற்கும் ... முதல் நாள் ஆராதனை செய்வது தான் சரி என்று சொல்பவற்கும் ஒரு கேள்வி.//
    இக்கேள்வி எனக்குரியது அல்ல. ஏனெனில் "புத்தியற்ற ஆராதனையை வாரத்தின் முதல் நாளோ அல்லது ஏழாம் நாளோ அல்லது ஏழு நாட்களுமோ செய்வதால் எந்த பயனுமில்லை; மாறாக, ரோமர் 12:1 சொல்கிற புத்தியுள்ள ஆராதனையைச் செய்வதே பயனைத் தரும்”என்ற கருத்தை உடையவன் நான்.

    ரோமர் 12:1 சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

    பவுலின் வேண்டுதல்தான் எனது வேண்டுதலும். நாளும் கிழமையும் பார்த்து புத்தியற்ற ஆராதனையைச் செய்துகொண்டு “இவன் துர் உபதேசக்காரன், அவன் துர் உபதேசக்காரன்” என ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டிருப்போரே, பவுல் சொல்கிற புத்தியுள்ள ஆராதனையை அநுதினமும் செய்வதற்கான வழியைப் பாருங்கள்.
    9 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Arputharaj Samuel
    இங்கே நாளையும் கிழமையையும் பார்த்து மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டிருப்பது யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
    ஞாயிற்றுக்கிழமைதான் ஓய்வு நாள் என்று நாம் சொல்லவில்லை. அன்று பொதுவான விடுமுறையாக இருப்பதினால் விசுவாசிகள் கூடி ஆராதிக்கின்றனர். இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை ஆராதிக்கின்றனர். ஆராதனைதான் முக்கியமே அன்றி நாட்கள் அல்ல.

    புத்தியில்லாமல் புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது. வசனத்தைச் சரியாக நிதானிக்காமல் மற்றவர்களை நிதானிக்கத் துணியக் கூடாது.

    ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசேயர்.2:16-19)

    நிழல் அனுபவத்தில் இன்னும் இருப்பவர்களே, நிழலாகச் சொல்லப்பட்டவைகள் கிறிஸ்துவில் நிறைவேறிவிட்டன. இயேசு கிறிஸ்துவைச் சரியாக ஏற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றிலும் சரியாக இருக்க முடியாது.
  • Jeyaseelan Jawahar excellent bro........God bless u.......
  • Yauwana Janam Arputharaj Samuel // ஞாயிற்றுக்கிழமைதான் ஓய்வு நாள் என்று நாம் சொல்லவில்லை. அன்று பொதுவான விடுமுறையாக இருப்பதினால் விசுவாசிகள் கூடி ஆராதிக்கின்றனர். இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை ஆராதிக்கின்றனர். ஆராதனைதான் முக்கியமே அன்றி நாட்கள் அல்ல. //

    நல்ல கருத்து.
  • Jeyaseelan Jawahar Arputharaj Samuel what u said is right.......but please dont give any evidence fron islam....they dont worship our father but the fallen angel..according to bible anti christ deny jesus crucification and resurrection.Islam denies jesus crucification and resurrection...isam is the religion of anti christ....if u need any further explanation i can explain..i know that book and i read the book...
  • Gnana Piragasam ‎//புத்தியில்லாமல் புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது.//
    புத்தியில்லாத நான் “புத்தியுள்ள ஆராதனையைப்” பற்றி பேசுகிறேன் என்பதையும், புத்தியுள்ள நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் “புத்தியில்லாத ஆராதனை” பற்றி பேசிக்கொண்டும் அதையே செய்துகொண்டும் இருக்கிறீர்கள் என்பதையும் ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    //புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது.//
    அப். 5:29 (அற்ப)மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

    //புத்தியில்லாமல் புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது.//
    ஏனய்யா தேவையில்லாமல் இம்மாதிரி விமர்சனங்களுக்கு உங்கள் புத்தியைச் செலவளிக்கிறீர்கள்? சொல்லப்பட்ட விஷயங்களுக்கு உருப்படியான வாதத்தை வைக்க முயலுங்கள். அது உங்களால் முடியாததால்தானோ என்னவோ, தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி திருப்தியாகிறீர்கள்.
    ஆனால் என்னதான் நீங்கள் அழுத்தி அழுத்தி “என்னை புத்தியில்லாதவன்” என்றும் “உங்களை புத்தியுள்ளவன்” என்றும் சொல்லிக்கொண்டாலும், “உண்மையாகவே” யார் புத்தியில்லாதவன் யார் புத்தியுள்ளவன் என்பது தேவனால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
  • Gnana Piragasam ‎//ஞாயிற்றுக்கிழமைதான் ஓய்வு நாள் என்று நாம் சொல்லவில்லை.//
    மீண்டும் மீண்டும் உங்கள் விசுவாசத்தைப் பற்றியே பேசுகிறீர்களே! அதைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கவில்லை. ஏழாம் நாள் சபையார் குழப்பத்தை உண்டாக்குவதாக சொல்லி அவர்களை துர் உபதேசக்காரர் பட்டியலில் சேர்த்த நீங்கள், அந்த சபையார் உருவாகக் காரணாமாக இருந்த மகா குழப்பவாதிகளும் குழப்பத்தின் ஊற்றுமான “முதலாம் நாள் சபையாரைப்” பற்றி எதுவும் சொல்லாதது ஏன் என்பதுதான் என் கேள்வி.
    மந்தையைத் தப்பவிடாத கொடிதான அந்த ஓநாய்களின் கூட்டத்தில் நீங்களும் ஓர் அங்கமாக இருப்பதால்தான் அவர்களைச் சொல்வதற்கு மறுக்கிறீர்களோ?

    ஞாயிற்றுக்கிழமைதான் ஓய்வு நாள் என நீங்கள் சொல்லாவிட்டாலும், அப்பாவிகளான பல ஜனங்கள் 2000 வருடமாக “ஞாயிற்றுக்கிழமைதான் ஓய்வு நாள்” என்றல்லவா நம்பிக் கொண்டிருக்கின்றனர்? இந்த நம்பிக்கையை உருவாக்கியவர்கள்தானே கொடிதான துர் உபதேசக்காரர்? அவர்களைச் சொல்வதற்கு ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்?

    இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் “வம்பும் புத்தியீனமுமான” பேச்சையே பேசிக்கொண்டிருக்கிறீர்களே, மத்தேயு 23:8-க்கு எதிராக “போதகர்” என அழைக்கப்படும் உங்களுக்கு இது தகுமா?
  • Gnana Piragasam ‎//ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையாக இருப்பதினால் விசுவாசிகள் கூடி ஆராதிக்கின்றனர்.//
    ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக (கொடிதான ஓநாய்களான) உங்கள் முன்னோர்கள் ஆசரித்ததால் அன்று பொதுவான விடுமுறையாக ஆனதா? அல்லது அன்று பொதுவான விடுமுறையாக இருப்பதால் நீங்கள் கூடி ஆராதிக்கிறீர்களா?

    “அன்று பொதுவான விடுமுறையாக இருப்பததால்தான் நீங்கள் கூடி ஆராதிக்கிறீர்கள்” என்பது உங்கள் பதில் எனில், ஏனய்யா இப்படி மாறி மாறிப் பேசுகிறீர்கள்?

    ஆதித்திருச்சபையாரின் வழக்கத்தைப் பின்பற்றுவதாக முதலில் சொன்னீர்கள்; இப்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் அன்று ஆராதிப்பதாகச் சொல்கிறீர்கள். ஏனய்யா இப்படி அன்றைய இஸ்ரவேலரைப் போல குந்திக்குந்தி நடக்கிறீர்கள்?

    1 ராஜா. 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. (ஒன்றும் சொல்ல முடியவில்லை)
  • Gnana Piragasam ‎//ஆராதனைதான் முக்கியமே அன்றி நாட்கள் அல்ல.//
    ஆம், ரோமர் 12:1 சொல்கிற “புத்தியுள்ள ஆராதனையே” முக்கியமேயன்றி, நாளும் கிழமையும் முக்கியமல்ல; வெறுமனே கைதட்டி ஆர்ப்பரித்து “ஆராதிக்கிறோம், ஆராதிக்கிறோம்” என்று சொல்லி கூப்பாடுபோட்டு ஆராதிப்பதும் முக்கியமல்ல.

    //இயேசு கிறிஸ்துவைச் சரியாக ஏற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றிலும் சரியாக இருக்க முடியாது.//
    ஆம், இயேசு கிறிஸ்துவைச் சரியாக ஏற்றுக் கொள்ளாமல் “உங்களால்” எல்லாவற்றிலும் சரியாக இருக்க முடியாது.
  • Gnana Piragasam ‎//புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது.//

    ஏன்? உங்களது “புத்தியில்லாத ஆராதனை” பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயமா?
    34 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Arputharaj Samuel
    முகப்பக்க நண்பர்களே, துர் உபதேசக்காரர்களின் முக்கியமான அடையாளம் ஒன்றை நான் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அதை சகோ.ஞானப்பிரகாசம் அவர்கள் நினைவுபடுத்தியும், செயல்படுத்தியும் கொண்டிருக்கிறார்கள். அதென்னவெனில், ....

    ஒரு வரிக்கு ஒன்பது பதிவுகள் என எழுதித் தள்ளுவார்கள்.
    இந்த விவாதத்தை நீங்கள் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை நன்கு புலப்படும். இங்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் இவர்கள் விவாதிக்க வருகிறார்களோ அங்கெல்லாம் அள்ளித் தெளித்த கோலம் போல அவசரப் பதிவுகள் இவர்களால் பதியப்படும்.

    இஸ்லாமியரும் இதே பாணியைத்தான் பின்பற்றுகிறார்கள். திறந்த மனதுடன் விவாதிக்க மாட்டார்கள். இவர்கள் நினைப்பு என்னவெனில், கேள்விகளால் நம்மைத் திணறடிக்கிறார்களாம்?! ஐயோ... ஐயோ பாவம். பரிதாபமாக இருக்கிறது.
  • Gnana Piragasam ‎//துர் உபதேசக்காரர்களின் முக்கியமான அடையாளம் ஒன்றை நான் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். ... அதென்னவெனில், ....

    ஒரு வரிக்கு ஒன்பது பதிவுகள் என எழுதித் தள்ளுவார்கள்.//

    அற்புதராஜின் ஒரு வரிக்கு எனது பதில் பதிவு 1:

    யோவான் 3:9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? ... 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

    (நிக்கொதேமின் ஒரு கேள்விக்கு இயேசுவின் பதில் 12 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 2:
    அப். 2:13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். 14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, ... 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

    (ஜனங்களின் ஒரு வரி பரியாசத்துக்கு பேதுருவின் பதில் 23 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 3:
    அப். 3:11 குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12 பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? ... 26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

    (ஒரு வரிகூட சொல்லாமல் வெறுமனே ஆச்சரியப்பட்ட ஜனங்களுக்கு பேதுருவின் பதில் 15 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 4:
    அப். 7: 1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். 2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். .... 53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

    (பிராதான ஆசாரியனின் ஒரு கேள்விக்கு ஸ்தேவானின் பதில் 52 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 5:
    அப். 11:2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: 3 விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். 4 அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: .... 17 தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்

    (விருத்தசேதனமுள்ளவர்களின் ஒரு கேள்விக்கு பேதுருவின் பதில் 14 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 6:
    அப். 17:19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? 20 நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள். ... 22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். .... 31 அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

    (அத்தேனே பட்டணத்தாரின் ஒரு கேள்விக்கு பவுலின் பதில் 10 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 7:
    அப். 21:37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா? 38 நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான். ... 40 உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயு பாஷையிலே பேசத்தொடங்கினான். 22:1 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான். ... 21 நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

    (ஒரு வார்த்தை பேசலாமா எனக் கேட்டு உத்தரவு வாங்கிய பவுல் பேசினதோ 21 வசனங்கள்)
  • Gnana Piragasam பதிவு 8:
    மத்தேயு 12:24 பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; .... 37 .... உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

    (பரிசேயரின் ஒரு வரி சிந்தனைக்கு இயேசுவின் பதில் 13 வசனங்களில்)
  • Gnana Piragasam பதிவு 9:
    மத்தேயு 13:10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, .... 23 ... நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

    (சீஷர்களின் ஒரேயொரு கேள்விக்கு இயேசுவின் பதிலோ 13 வசனங்களில்)

    போதகர் அற்புதராஜின் ஒரு வரி கூற்றுக்கு 9 பதிவுகளைத் தந்து, அவரது கருத்துப்படி நான் ஓர் துர் உபதேசக்காரன் என மீண்டும் நிரூபித்துள்ளேன். ஆனாலும் என்ன? எனக்கு முன்பாக “இயேசு, பேதுரு, ஸ்தேவான், பவுல்” ஆகியோருங்கூட அற்புதராஜின் கருத்துப்படி தங்களை துர் உபதேசக்காரர்கள் என நிரூபித்துள்ளனர்.

    ஆம், அவர்களுங்கூட ஒரு வரி கேள்விக்கு/சந்தேகத்திற்கு/சிந்தனைக்கு 9-க்கும் மேலான வசனங்களில் பதில் தந்துள்ளனர்.

    எனவே அற்புதராஜின் வரையறைப்படி ஏற்கனவே துர் உபதேசக்காரர்களாக இருக்கும் இயேசு மற்றும் அப்போஸ்தலரின் வரிசையில் தற்போது நானும் இணைக்கப்பட்டுள்ளேன்.

    என்னை துர் உபதேசக்காரன் எனச் சொல்வதற்காக நிதானமின்றி வரையறை வகுத்து, அதன் மூலம் இயேசு மற்றும் அப்போஸ்தலர்களையுங்கூட துர் உபதேசக்காரர்களாக தீர்த்த போதகர் அற்புதராஜை நினைத்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தேவன் தாமே அவருக்கு நல்புத்தியைக் கொடுப்பாராக.
    4 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Arputharaj Samuel
    சகோ.ஞானப்பிரகாசம் என்கிற அன்பு ஐயா நீங்கள் யாரென்பதை ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.
    இயேசுவும் அப்போஸ்தலரும் ஒருவரும் கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர். ஆனால் உங்கள் எண்ணம் அதுவல்ல... அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த அக்கறை இன்றி தான் மட்டுமே சரி என்ற மிதப்பில் நீங்கள் எழுதுபவவைகள் அனைத்தும் சரி என்று ஆகிவிடாது.

    ஒரு விசயத்தை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். இங்கே கேள்வி எழுப்பியதே நீங்கள் தான் என்பதை..... நீங்களே கேள்வி எழுப்பிக் கொண்டு நீங்களே சுய புரிதலுடன் வார்த்தைகளால் அலப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
  • Gnana Piragasam
    ‎//நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.//

    ஐயா அற்புதராஜ் அவர்களே! நீங்கள் கிறிஸ்தவரா நான் கிறிஸ்தவரா என்பதை முடிவு செய்ய நாம் இங்கு விவாதிக்கவில்லை. நம்மில் யார் கிறிஸ்தவர் என்பதை தேவன் தீர்மானித்துக் கொள்வார். தேவனின் தீர்மானத்திற்குள் நீங்கள் ஏன் அதிகப்பிரசங்கித்தனமாக தலையிடுகிறீர்கள்?

    இப்படியான தீர்மானங்களை எடுப்பதை விட்டுவிட்டு, எனது பதிவுகளுக்குப் பதில் சொல்ல வழியிருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

    //இயேசுவும் அப்போஸ்தலரும் ஒருவரும் கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர். ஆனால் உங்கள் எண்ணம் அதுவல்ல... அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த அக்கறை இன்றி தான் மட்டுமே சரி என்ற மிதப்பில் நீங்கள் எழுதுபவவைகள் அனைத்தும் சரி என்று ஆகிவிடாது.//

    எனது இருதயத்தை ஆராய்ந்து பார்த்து எனது எண்ணங்களையும் நோக்கங்களையும் அறிவதற்கு நீங்கள் என்ன தேவனா?

    எரேமியா 17:10 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? 10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

    தேவன் மட்டுமே ஒருவனின் இருதயத்தை ஆராய்ந்து சோதித்து அறியத்தக்கவர். நீங்கள் உங்களை தேவனுக்குச் சமமாக பாவிக்க முயலவேண்டாம். செப்பனியா 2:2 கூறுகிறபடி உங்கள் இருதயத்தை உய்த்து ஆராய்ந்து சோதித்தறியுங்கள்.
  • Gnana Piragasam
    ‎//ஒரு விசயத்தை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். இங்கே கேள்வி எழுப்பியதே நீங்கள் தான் என்பதை..... நீங்களே கேள்வி எழுப்பிக் கொண்டு ....//

    நான் எதையும் மறக்கவில்லை ஐயா. கட்டுரையை எழுதியது நீங்கள், அது சம்பந்தமாக கேள்வி எழுப்பியது நான் என்பது எனக்கு நன்றாகவே நினைவிலுள்ளது. ஒருவேளை அதை நான் மறந்தாலும், மறுக்க முடியாதே! எனவே அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

    //உங்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகிறேன்.//

    எனது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எழுதுவதாக தொடக்கத்தில் வேகமாகச் சொன்ன நீங்கள், அதை தற்போது மறந்துவிட்டு, “நான் யார், எனது எண்ணமென்ன” என்பதை ஆராய்வதிலேயே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
  • Arputharaj Samuel
    ஒருவன் கிறிஸ்தவனா இல்லையா என்பதை அவனுடைய சாட்சியை வைத்து மற்றவர்கள் சொல்லவேண்டும். அந்தியோகியாவில் அதுதான் நடந்தது. உங்க உபதேசத்துக்குத்தான் சின்னக் கடவுள், குட்டிக் கடவுள் குட்டிப் பிசாசுக் கடவுள் எல்லாம் உண்டு. ஆகவே நீங்கள் எந்த எல்லைக்கும் சென்று ஒருவனை வஞ்சிக்க தந்திரமாக முயல்கிறீர்கள்.

    நான் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கொடுத்துதான் வருகிறேன். சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து திசை திருப்புவது யார்?

    முதலில் இந்தப் பதிவு துர் உபதேசக் காரர்களுக்கு அல்ல. துர் உபதேசங்களுக்கு கிறிஸ்தவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதே என் பதிவின் நோக்கம்.
    இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்த அடிப்படைப் புரிதல் உங்களுக்குச் சரியாக இல்லாததினால் தான் உங்களுக்கு எல்லாம் , எல்லாரும் தவறாகத் தெரிகிறது.
  • Gnana Piragasam ‎//உங்க உபதேசத்துக்குத்தான் சின்னக் கடவுள், குட்டிக் கடவுள் குட்டிப் பிசாசுக் கடவுள் எல்லாம் உண்டு. ஆகவே நீங்கள் எந்த எல்லைக்கும் சென்று ஒருவனை வஞ்சிக்க தந்திரமாக முயல்கிறீர்கள்.//

    உங்களது இக்கூற்றுக்கு ஆதாரமான எனது பதிவை எடுத்துக் காட்டவும்.

    //நான் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கொடுத்துதான் வருகிறேன்.//

    ரொம்ப சந்தோஷம்; நன்றி.

    //சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து திசை திருப்புவது யார்?//

    எனக்குத் தெரியவில்லை.

    //இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்த அடிப்படைப் புரிதல் உங்களுக்குச் சரியாக இல்லாததினால் தான் உங்களுக்கு எல்லாம் , எல்லாரும் தவறாகத் தெரிகிறது.//

    இக்கூற்று உங்களுக்கே திருப்பியனுப்பப்படுகிறது.
    about a minute ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Gnana Piragasam ‎//ஒருவன் கிறிஸ்தவனா இல்லையா என்பதை அவனுடைய சாட்சியை வைத்து மற்றவர்கள் சொல்லவேண்டும். அந்தியோகியாவில் அதுதான் நடந்தது.//

அந்தியோகியாவில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் எனும் பெயர் வழங்கப்பட்டது என்பது மெய்தான். ஆனால் இதெல்லாம் புறம்பான சில நடவடிக்கைகளை வைத்து மனிதர்கள் வழங்கும் பெயராகும். மனிதர்களால் “சீஷன்” என அழைக்கப்படுவன் மெய்யான சீஷன் ஆவதுமில்லை, மனிதர்களால் “கிறிஸ்தவன்” என அழைக்கப்படுவன் மெய்யான “கிறிஸ்தவன்” ஆவதுமில்லை. இதற்கு வேதாகமத்திலிருந்தே சில ஆதாரங்களை நான் தருகிறேன்.

முதலாவது பேதுருவை எடுத்துக் கொள்ளுங்கள். பேதுருவுங்கூட கிறிஸ்தவர் என்றும் சீஷர் என்றும் பலராலும் அழைக்கப்பட்டிருப்பாரல்லவா? ஆனால் உண்மையில் அப்போது பேதுருவுங்கூட மாயம் பண்ணுகிறவராக இருந்தார் என பவுல் சொல்கிறார் (கலா. 2:11-13).

அடுத்து, யூதாசை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் இயேசுவால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு சீஷன். ஆனாலும் அவன் குருவையே காட்டிக்கொடுத்த சீஷனானான்.

கொரிந்தியருக்கான நிருபத்தை பரிசுத்தவான்களுக்கும் சபைக்கும்தான் பவுல் எழுதுகிறார். ஆனால் அவர்களுக்குள்ளும் பலர் விபசாரராக இருந்ததாக 1 கொரி. 5:1-ல் பவுல் கூறுகிறார். எனவே “மனிதர்களால்” சபை என அழைக்கப்படுவது மெய்யான சபையுமல்ல; அப்போஸ்தலன் என அழைக்கப்படுபவர் மெய்யான அப்போஸ்தலருமல்ல; போதகர் என அழைக்கப்படுபவர் மெய்யான போதகருமல்ல; சீஷன் என அழைக்கப்படுபவன் மெய்யான சீஷனுமல்ல; கிறிஸ்தவன் என அழைக்கப்படுவன் மெய்யான கிறிஸ்தவனுமல்ல.

ஏதோ சில புறம்பான நடவடிக்கைகளை வைத்து மனிதர்கள் இப்படி, அப்படி சொல்வது வழக்கம்தான். மனிதர்களிடம் நற்சாட்சி பெறுவது நல்லதுதான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மனிதர்களின் சாட்சியை மட்டும் வைத்து நாம் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஏனெனில் மனிதர்களின் சாட்சி பல சமயங்களில் தவறாகவும் இருக்கும். ஆனால் தேவனின் சாட்சி அப்படியல்ல. எனவேதான் பவுல் இப்படிச் சொல்கிறார்.

பிலிப்பியர் 1:8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி.

எனக்கும் தேவன்தான் சாட்சி.

Gnana Piragasam ‎//ஒருவன் கிறிஸ்தவனா இல்லையா என்பதை அவனுடைய சாட்சியை வைத்து மற்றவர்கள் சொல்லவேண்டும்.//

மனிதர்களின் சாட்சிக்கு இத்தனை முக்கியத்தும் கொடுக்கும் அற்புதராஜ் அவர்களே! இயேசுவின் பின்வரும் வசனத்தையும் சற்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

லூக்கா 16:15 நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

நம் பதிவுகளுக்கு “like" போடுவோர், அல்லது நம் முகத்துக்கு முன்பாக புகழ்ச்சியாய் பேசுவோர் போன்றவர்களின் சாட்சியை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். மனிதர்களின் சாட்சிகள் தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
8 minutes ago · Like



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Gnana Piragasam ‎//இயேசுவும் அப்போஸ்தலரும் ஒருவரும் கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர்.//

ஒருவரும் கெட்டுப்போய் விடக்கூடாதே என்ற எண்ணமிருந்ததால் இயேசுவும் அப்போஸ்தலரும் நீண்ட பதில்களைத் தந்தனர் என்கிறீர்கள். அதாவது “ஒருவரும் கெட்டுப்போய் விடக்கூடாதே என்ற எண்ணமுள்ளவர்கள்” நீண்ட பதில்களைத் தருவார்கள் என்கிறீர்கள்.

ஆனால் சற்று முன்னரான பதிவில், “துர் உபதேசக்காரர்கள்தான் நீண்ட/நிறைய பதிவுகளைத் தருவார்கள்” என்றீர்கள். ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறீர்கள்?
about a minute ago · Like



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

Yauwana Janam ஞானப்பிரகாசம் ஐயாவுக்கு ஒரே ஒரு கேள்வி...

”இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா” என்று சொல்லுங்கள். மற்றவை பிறகு..!

Gnana Piragasam ‎//"இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா” என்று சொல்லுங்கள். மற்றவை பிறகு..!//

திரு.யௌவன ஜனமே!

உங்கள் முகப்புக்குச் சென்று பார்த்ததில், நீங்கள் செய்யும் பணியின் எஜமானர் “சர்வ வல்லவரான தேவன்” என அறிந்தேன். நீங்கள் படித்த கல்லூரி வேதபுத்தகமே என்பதையும் அறிந்தேன். எனவே உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் நீங்கள் அறிவீர்கள். அந்த பதிலை தனியாக வேறொரு “முகபக்க குறிப்பாக” எழுதி, அதில் உங்கள் பதிலுக்கான வேதவசன ஆதாரத்தையும் விபரமாகத் தெரிவியுங்கள். அங்கு எனது பதிலைத் தெரிவிக்கிறேன்.
a few seconds ago · Like



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    போதகர் (?) அற்புதராஜ் அவர்களே!

    தீத்து 1:7 கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், 8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், 9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், “எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி”, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
  • Yauwana Janam
    ‎//"இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா” என்று சொல்லுங்கள். மற்றவை பிறகு..!//

    திரு.யௌவன ஜனமே!

    உங்கள் முகப்புக்குச் சென்று பார்த்ததில், நீங்கள் செய்யும் பணியின் எஜமானர் “சர்வ வல்லவரான தேவன்” என அறிந்தேன். நீங்கள் படித்த கல்லூரி வேதபுத்தகமே என்பத...ையும் அறிந்தேன். எனவே உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் நீங்கள் அறிவீர்கள். அந்த பதிலை தனியாக வேறொரு “முகபக்க குறிப்பாக” எழுதி, அதில் உங்கள் பதிலுக்கான வேதவசன ஆதாரத்தையும் விபரமாகத் தெரிவியுங்கள். அங்கு எனது பதிலைத் தெரிவிக்கிறேன்.

    @Gnana Piragasam // அற்புதராஜ் மற்றும் கூட்டாளிகளுக்கு என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல திறமில்லை போலும்! சத்தத்தையே காணோம்.//

    ஐயா, இது ”நீயா, நானா..” என்று புஜபலம் காட்டுகிற காரியம் அல்லவே. இது தேவகாரியம் என்பதால் நம்முடைய ஞானத்தை அல்ல,நிதானத்துடன் தேவ கிருபையை சார்ந்து ஆலோசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.அதற்கு முதலாவது தேவையானது அதிகமான தாழ்மையும் நீடிய பொறுமையும்...

    உங்களுடைய ஒரு குறிப்பிட்ட கருத்தை இன்னொரு வசனம் மறுக்குமானால் நீங்கள் சொல்லுவது தவறானதாகவோ அல்லது அவசரமான வியாக்கியானமாகவோ இருக்கும்.வசனமும் அதன் வியாக்கியானமுமே பிரதானம் அல்லவா ? வியாக்கியானம் செய்பவரின் பின்னணியும் இதில் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.ஏனெனில் எல்லோருமே ஏதோ ஒரு ஸ்தாபனத்தினால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவரவர் மனதுக்கு சௌகரியமானதில் அமர்ந்திருக்கிறார்கள்.யாருக்குமே தேவனோடு இருப்பதில் ஆர்வம் குறைவாக இருக்கிறது.இதில் விதிவிலக்குகளே இல்லையென்பதே இன்றைய நிலைமை.
  • Gnana Piragasam
    ‎//அதற்கு முதலாவது தேவையானது அதிகமான தாழ்மையும் நீடிய பொறுமையும்...//

    உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை திரு.யௌவன ஜனமே!

    ஆனால் இதைத் தொடக்கத்திலேயே நீங்கள் சொல்லாததால் உங்கள் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தொடக்கத்தில் திரு.அற்புதராஜ் என்னை எப்படியெல்லாம் விமர்சித்தார் என்பதைப் படித்தீர்களல்லவா? அவரது மேட்டிமையும் அகம்பாவமுமான சில விமர்சனங்கள்:

    //சர்ப்பத்தின் வார்த்தைகளைப் போன்ற விஷம் நிறைந்த சந்தேக விதைகளை விதைப்பதில் தாங்கள் எவ்வளவு கில்லாடி என்பதை நாங்கள் அறிவோம். ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் மனதில் தேவனைப் பற்றிய சந்தேகத்தை தந்திரமாக சாத்தான் விதைத்ததற்கும் உங்களின் வரிகளுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.
    நீங்களும் ஒரு ஒருவசன உடும்புதான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறீர்கள்.//

    //வேதாகமத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒரே ஒரு வசனத்தில் தொங்கினால் அது முட்டாள்தனமானதாகவே இருக்கும்.//

    இவையெல்லாம் உங்கள் பார்வையில் தாழ்மையும் பொறுமையுமான வார்த்தைகளா? இவ்வார்த்தைகளைப் படிக்கும்போது உங்களது ஞானம் எங்கே போனது?

    அற்புதராஜின் மேலும் சில தகாத கூற்றுக்கள்:

    //புத்தியில்லாமல் புத்தியுள்ள ஆராதனையைப் பற்றிப் பேசக் கூடாது. வசனத்தைச் சரியாக நிதானிக்காமல் மற்றவர்களை நிதானிக்கத் துணியக் கூடாது.//

    //ஐயோ... ஐயோ பாவம். பரிதாபமாக இருக்கிறது.//

    //நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதை நாங்கள் அறிவோம். //

    //உங்க உபதேசத்துக்குத்தான் சின்னக் கடவுள், குட்டிக் கடவுள் குட்டிப் பிசாசுக் கடவுள் எல்லாம் உண்டு. ஆகவே நீங்கள் எந்த எல்லைக்கும் சென்று ஒருவனை வஞ்சிக்க தந்திரமாக முயல்கிறீர்கள்.//

    இப்படி இவர் சொல்லும்போதெல்லாம் உங்களது நியாய உணர்வு எங்கே போனது? நீயா நானா என்ற விதத்தில் வாதத்தை தொடங்கியவர் அற்புதராஜ். அவரிடம் எதுவும் சொல்லாமல், என்னிடம் தாழ்மை, பொறுமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனெனில் நீங்களும் அவருடனான ஒரு கூட்டாளிதான்.
  • Gnana Piragasam
    நீங்களுங்கூட நித்திய ஜீவன் தளத்தில் என்னை “விஷ ஜந்து” எனச் சொன்னதையெல்லாம் நான் மறந்துவிடவில்லை. நீங்கள் எப்படி எடுத்த எடுப்பிலேயே என்னை “விஷ ஜந்து” எனச் சொன்னீர்களோ, அதேபோல்தான் அற்புதராஜும் எடுத்த எடுப்பிலேயே என்னை சர்ப்பம் என்றார். இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான் என்பதை அதன்மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.

    சில்சாம் எனும் பெயரில் நீங்கள் இங்கு பதிவைத் தந்திருந்தால், உங்களுக்கு நான் பதிலே சொல்லியிருக்கமாட்டேன். யௌவன ஜனம் என்ற பெயரில் நீங்கள் வந்துள்ளதால்தான், சில்சாமுக்கு நான் எடுத்த முடிவை “யௌவன ஜனமான” உங்களிடம் அமல் படுத்தவில்லை. நீங்கள் இன்னமும் சில்சாமாகத்தான் இருப்பதை தற்போது நிரூபித்துவிட்டீர்கள்.

    சில்சாமுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என நீங்கள் சொல்வதாக இருந்தால், உங்களை சில்சாமோடு தொடர்பு படுத்தி மேலே எழுதியுள்ளவற்றை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

    //எல்லோருமே ஏதோ ஒரு ஸ்தாபனத்தினால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவரவர் மனதுக்கு சௌகரியமானதில் அமர்ந்திருக்கிறார்கள். யாருக்குமே தேவனோடு இருப்பதில் ஆர்வம் குறைவாக இருக்கிறது.//

    இக்கருத்து அற்புதராஜ் உட்பட பலருக்கும் பொருந்தும் என்பது மெய்யேயாயினும், உங்கள் கருத்துக்கு விதிவிலக்கான பலருங்கூட உண்டு.

    நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒருவரோடொருவர் பரிமாறி, சாந்தமான முறையில் விவாதம் செய்து, கருத்து வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்பதே என் அவா. ஆனால் அற்புதராஜ் அவர்களோ, எடுத்த எடுப்பிலேயே “சர்ப்பம், உடும்பு, முட்டாள்” என்றெல்லாம் என்னை சொல்லி ஆணவமாக ஆரவாரம் செய்ததால்தான், தற்போது மிக நளினமான அவரது இயலாமை நிலையைச் சுட்டிக்காட்டினேன். அதற்குள் உங்களுக்குப் பொறுக்கவில்லை.

    உங்களிடம் நடுநிலை இல்லை என்பது மெய்யேயாயினும், உங்கள் கருத்துப்படி, நான் இன்னுங்கூட அதிக தாழ்மையாக/பொறுமையாக இருந்திருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
    8 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard