நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்
Permalink  
 


இத்திரியின் தலைப்பில் கூறப்பட்டுள்ள இதே வாசகத்தைத் தலைப்பாகக் கொண்டு திருவாளர் யௌவன ஜனம் என்பவர் Face Book-ல் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.

இத்தலைப்பைப் படிக்கிற யாவருக்கும் உடனடியாக மனதில் தோன்றும் எண்ணம்: இயேசுவை ஆராதனை செய்யும்படி வேதாகமம் கூறுகிறது, ஆனால் ஞானப்பிரகாசமாகிய நானோ வேதாகமத்திற்கு எதிராக இயேசுவை ஆராதனை செய்ய மறுக்கிறேன் என்பதே.

ஆனால் இயேசுவை ஆராதனை செய்யும்படி வேதாகமத்தில் ஒரு வசனமும் சொல்லவில்லை என்பது 100-க்கு 100 உண்மையாகும். என்னைப் பொறுத்தவரை யெகோவாவுக்கு ஆராதனை என்றோ பிதாவுக்கு ஆராதனை என்றோ ஒரு போதும் வாயால் சொல்லவோ அல்லது சடங்காச்சாரமாக ஆராதனை செய்யவோ நினைத்ததுமில்லை, அப்படி செய்யும்படி போதித்ததுமில்லை. ஆயினும் ஆராதனை என ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால் அதை யெகோவா தேவனுக்கு மட்டுமே செய்யவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்வேன். குறிப்பாக இயேசுவுக்கு ஆராதனை செய்யலாமா என யாராவது கேட்டால், இயேசுவுக்கு ஆராதனை செய்யும்படி ஒரு வசனமும் கூறவில்லை, தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே ஆராதனை செய்யவேண்டும் என இயேசுவே சொல்லியுள்ளார் (மத்தேயு 4:10), எனவே அதன்படி தேவனாகிய கர்த்தராகிய யெகோவாவை மட்டுமே ஆராதனை செய்யவேண்டும் என உறுதியாகச் சொல்வேன்.

மற்றபடி நம் சரீரமே தேவனுடைய ஆலயமாக இருப்பதால் ரோமர் 12:1 கூறுகிற புத்தியுள்ள ஆராதனையைச் செய்தால் போதுமானது என மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன்.

ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

எனது நிலை இப்படியிருக்க, நான் ஏதோ வேதாகமத்திற்கு எதிராக இயேசுவை ஆராதனை செய்ய மறுக்கிறேன் எனும் தோற்றத்தை உண்டாக்கத்தக்கதான தலைப்பில் திரு.யௌவன ஜனம் அவர்கள் Face Book-ல் கட்டுரை வரைந்துள்ளார். அவரது தலைப்பில் சொல்லப்பட்டு கூற்று என்னவோ சரியானதுதான்; ஆனால் இவரைப்போலவே வேதாகமத்தை சரியாக அறியாதவர்களும் புரியாதவர்களும், என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளத்தக்கதாக அக்கட்டுரையின் தலைப்பை அவர் அமைத்துள்ளார்.

அக்கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் நித்திய ஜீவன் தள வாசகர்கள் அறியும்படி அவற்றை இங்கு பதிக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்
Permalink  
 


இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்

by Yauwana Janam on Friday, January 6, 2012 at 12:46am

                 

இன்று திரு.ஞானப்பிரகாசம் என்பவருடைய பக்கத்தில் யாருக்கு ஆராதனை என்ற தலைப்பில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையைப் பார்வையிட நேர்ந்தது. இதனால் காலையிலேயே பல மணி நேரங்கள் இதில் செலவிடும்படியானது.ஐயா ஜாண்ஸன் ராஜூ அவர்களை கண்டபடி கேள்விகேட்டு மடக்குவதாக நினைத்துக்கொண்டு எப்படியெல்லாமோ வாதிக்கிறார்,திரு.ஞானப்பிரகாசம் அவர்கள். ஆம்,அவர் விவாதிக்கவில்லை,வாதிக்கிறார்.வழக்கம்போல நாம் அவரிடம் தோற்றுப்போய்விட்டோம், அவருடைய கூற்றின்படி..!அதில் நாம் பதித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறேன்...

 

  • Yauwana Janam ‎Johnson Raju ///We are still counting it; hope it will be upto my expectation.//

     

    @Gnana Piragasam //உண்மையை நேர்மையுடன் சொன்னதற்கு நன்றி பாஸ்டர்.பொய்யான தேதியில் தேவன் வெறுக்கும் பண்டிகையை ஆசரித்து, தேவன் அகற்றச் சொன்ன பாட்டுக்களின் இரைச்சலை உண்டாக்கி, இவ்வளவாய் காணிக்கை வசூல் செய்த உங்கள் திறமையே திறமை! //

     

    திரு.ஞானப்பிரகாசம் அவர்களே,

    இந்த திரியை இப்போதுதான் முழுவதுமாக வாசித்தேன். நீங்கள் அநியாயத்துக்கு அடாவடி செய்கிறீர்கள்,இது நல்லதுக்கல்ல.

     

    பொய்யான தேதியில் அல்ல,நிர்ணயிக்கப்பட்ட தேதியில்...தேவன் வெறுக்கும் பண்டிகையை அல்ல,தூதர்கள் கொண்டாடிய நிகழ்வை...பரம சேனையின் திரள் இசைத்த இன்பமான பாடலகளைப் பாடி கிறிஸ்துவின் பிறப்பினை பக்திவிருத்தியுண்டாகும் நோக்கத்துடன் கொண்டாடினார்கள்,கிறிஸ்தவர்கள். வசூல் செய்யப்பட்ட காணிக்கை முழுவதும் சபையாருக்கே செலவு செய்யப்படுகிறது.காணிக்கை என்பதே தன்னார்வமாகக் கொடுக்கப்படுவது என்பதால் அதில் பரியாசம் செய்ய ஒன்றுமில்லை.

     

    ”ஆவிக்குரிய தகப்பன்” என்றழைப்பது குறித்து மூலபாஷையின் அடிப்படையில் ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

     

    http://yauwanajanam.activeboard.com/f499712/forum-499712/

     

     

    வà¯à®¤à®¾à®à®® மாணவர௠மறà¯à®±à¯à®®à¯ யà¯à®à¯à®µà®¾ à®à®¾à®à¯à®à®¿à®

     

    yauwanajanam.activeboard.com

    விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமà®

    20 hours ago ·

  •  

    Yauwana Janam ரோமர் 14:19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

     

    ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

     

    பண்டிகைகள் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கு இவ்விரண்டு அதிகாரங்களைவிட சிறப்பான வேதப்பகுதி இருக்கமுடியாது.குறிப்பாக இவ்விரண்டு அதிகாரங்களின் முதல் வசனங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

    20 hours ago

  •  

    Yauwana Janam இயேசுவானவர் சபையில் நிறைவேற்றப்படவேண்டிய ஐந்து ஊழியங்களைக் குறித்து சொல்லாவிட்டாலும் அவர் மூலம் அகத்தூண்டல் பெற்ற பவுலடிகள் கூறுகிறார்.மேலும் மற்ற மார்க்கத் தலைவர்களைப் போல நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் எங்கோ ஒய்ந்திருக்கவில்லை.இன்றும் நம்மோடு இருந்து கிரியை செய்கிறார்.எனவே அவருடைய மார்க்கத்துக்கு எதிராகவும் அவ்ருக்கு எதிராகவும் பேசுவோர் (தைரியமிருந்தால் ???) அவரையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

     

    எப்படியெனில் கோர்ட்டு நடைமுறைகளில் ஒரு வழக்கம் உண்டு.ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தனது கருத்தையும் நியாயத்தையும் சொல்லவிரும்புகிறவர் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள கோர்ட்டாரிடம் முறையிடுவார்.கோர்ட்டும் அவசியம் கருதி அவரை அனுமதிக்கும்.இப்படியே சுப்ரமணியசாமி என்றொருவர் அடிக்கடி அலம்பல் பண்ணுவதுண்டு.

     

    அதுபோலவே நாம் யாரைக் குறித்து விவாதிக்கிறோமோ அவரையும் இந்த காரியத்தில் ஒரு நியாயம் சொல்ல கேட்கலாமே..ஏன்,நம்முடைய ஆண்டவர் இப்போதெல்லாம் யாருடனும் பேசுகிறதில்லையா ? ஜீவனோடு தானே இருக்கிறார்..?

Yauwana Janam ஒரு ஆலோசனை:@Gnana Piragasam உங்கள் ப்ரொஃபைல் செட்டிங்கிலிருந்து உங்கள் பெயருக்கு டாக் (Tag.) அனுமதியுங்கள்.

 

https://www.facebook.com/settings/?tab=privacy&ref=mb

 

ஐயா, உங்களது பதிலில் நான் எழுதியதில் ஒரு குறிப்பிட்ட பத்தியை முழுவதுமாக தவிர்த்திருக்கிறீர்களே,அதுவே உங்கள் தவறான நிலைகளுக்கு உதாரணமாக இருக்கிறது.

 

ஒரு தனிப்பட்ட மனிதனின் பக்திவிருத்தியை யார்- எதன் மூலம் தீர்மானிக்க இயலும்? ஒரு செத்த எலியின் மாம்சத்தை ரெண்டு காகங்கள் பக்கத்துக்கு ஒன்றாக இழுப்பதுபோல இங்கே எடுத்துக்கொண்ட தலைப்பு ஒன்று நீங்கள் வ்ந்து நிற்கும் இடம் இன்னொன்று.காரணம் எப்படியாவது எதிராளியை மடக்கிவிடவேண்டும் என்ற அவசரம்.ஆனாலும் இயேசுவின் சரீரம் செத்த எலியின் சரீரம் அல்ல என்பதை நாம் அறியவேண்டும்.அவரைக் குறித்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு அவரே.வேதமும் அவரே என்பதை அறிவோம்.

 

முதலில் ஒருவரையொருவர் மதிக்கவேண்டும்.நம்ம ஊர் லோக்கல் பாஸ்டரும் கௌரவமானவர்கள் மத்தியில் ஒரு வேலைக்காரனைப் போல தனது பொறுப்பை நிறைவேற்றும் Pastor Johnson Raju.அவர்களும் சமமாக முடியுமா? நேற்று கூட ஒரு பாஸ்டர் பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக செய்தித்தாள் ஒன்றில் பார்த்தேன்.

 

இதேபோல அடிக்கடி விமானங்களும் விழுந்து நொறுங்குகிறது.அதற்காக யாரும் விமானத்தில் பயணம் செய்யவில்லையா ? இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.மோசடியாளர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.எல்லா இடத்திலும் மோசடியாளர்கள் இல்லை. “தீய நோக்கம் பாவமாம்” என்று வேதம் சொல்லவில்லையா ? குடிப்பதற்காகவே காரல் பாடிச்செல்லுகிறார்கள் என்று உங்களால் தீர்க்கமுடியுமானால் உங்களைப் போன்ற குடிகாரர் யாரும் இருக்கமுடியாது.எப்படியெனில் மற்றவரைக் குற்றஞ் சாட்டுவது குறித்த காரியத்தில் வேதம் இப்படியே தீர்க்கிறது.

 

கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறுதல் மாத்திரமே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆகும்.அதுவே கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்திலிருந்து மார்க்கத்தை மீட்க சீர்திருத்த சபையார் எடுத்துக்கொண்ட நிலையாகும்.அது இன்னும் தூய்மையடைந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது எல்லாம் சரியாகும்.ஏனெனில் சீர்திருத்தம் உண்டாகவே பண்டிகை கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டதாக வேதமே கூறுகிறது.

 

தூதர்கள் கிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு அறிவித்து பாடி மகிழ்ந்தார்கள் என்பதை லூக்கா.2 பதிவுசெய்தாலும் அதன் இன்னொரு பார்வையை எபிரெயர்.1 ல் பார்க்கிறோம்.கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து வந்துசேர்ந்துகொண்ட சில தேவையற்ற காரியங்களை இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக கிறிஸ்தவ மார்க்கம் கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது. தற்போது அதிலிருந்து மார்க்கம் மீட்கப்பட்டு (கடந்த சுமார் 200 வருடங்களுக்குள் ) தூய்மைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.பொறுத்திருப்போம்.

 

Yauwana Janam

‎@Gnana Piragasam // நீங்கள், அற்புதம், ஜாண்சன் ராஜூ, கோல்டா போன்ற பலர் எனது விவாதங்களுக்குப் பதில் சொல்லாமல் அப்படியே நிற்பதை பல திரிகளில் நீங்கள் காணலாம்.//

 

மற்றவருக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரையிலும் நான் சமதளத்திலிருந்து எல்லாவற்றுக்கும் பதிலளித்திருக்கிறேன். அதேபோல Pastor Johnson Raju அவர்களும் அவருடைய இயல்புக்கு மாறாக அதிகமாகவே பதிலளித்திருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய வாதங்களைப் புறக்கணித்துவிட்டு அவரையே போப்பாண்டவரைப் போல நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.ஆனால் அவருடைய கருத்துக்களோ எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறதே.

 

கத்தோலிக்கர்கள் செய்யும் தவறுகளுக்கு சீர்திருத்தவாதிகள் எப்படி பொறுப்பாக முடியும் என்பதே என்னுடைய கேள்வியாகும்.ஒரு பாலத்தைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே என்னத்த பெரிசா கட்டுறான் இதைவிட பெரிய பாலத்தையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்,இது இடிந்தே விழும் என்பதுபோல இருக்கிறது உங்கள் கருத்துக்கள். நாம் யாருடன் யாரை சேர்க்க இங்கே போராடிக்கொண்டிருக்கிறோம் ? உங்களுடைய நோக்கம் கிறிஸ்துவின் அன்பை அறியாதோர்க்கு அறிவித்து அவரோடு சேர்ப்பதாக இருந்தால் உங்கள் வாதமே வித்தியாச்மாக இருந்திருக்கும்.

 

நான் உஙகளைக் குற்றஞ்சாட்டவில்லை.என்னுடைய வரிகளை மீண்டும் படித்துப்பாருங்கள்,நீங்கள் ஒரு பத்தி முழுவதும் உள்நோக்கத்துடன் தவிர்த்திருப்பது தெரியும்.

 

மற்றொரு திரியில் நான் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து வந்து தனது பாடல்களால் கிறிஸ்தவத்தில் எழுச்சியுண்டாகக் காரணமாக இருந்தவரைக் குறித்து என்ன எழுதியிருக்கிறேன் என்று பாருங்கள்.ஆனாலும் தந்தை பெர்க்மான்ஸ் என்று அறியப்பட்ட ஒருவரை நாம் சகோதரர் பெர்க்மான்ஸ் என்று அழைக்கவேண்டுமானால் சற்று சிரமமாக இருக்கும்.இதில் உச்சரிப்பைக் காட்டிலும் உணர்வே பிரதானம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

உதாரணமாக நடிகர் ஏவிஎம் ராஜன் அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டதும் தன்னை இயேசுவினடிமை என்று அறிவித்துக்கொண்டார்.இன்று வரை அப்படியே அழைக்கப்படுகிறார்.அதேபோல ஐயா பெர்க்மான்ஸ் அவர்களும் அறிவித்திருந்தால் சிறப்பாகவே இருந்திருக்கும்.ஆனால் அவரும் அதனை செய்யவில்லை,நம்முடைய சபையாரும் அதனை எடுத்துரைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.ஆனாலும் அவரால் சபை எழுச்சி பெற்றது உண்மை.அவர் தனக்கென்று கூட்டம் சேர்க்காமல் மிக இயல்பாக ஊழியம் செய்வது உண்மை.உங்களுக்கு அவர்மீது இனம்புரியாத எரிச்சல் ஏற்பட்டிருப்பதும் உண்மை.இன்னும் ஏவிஎம் ராஜன் ஐயா தன்னை இயேசுவினடிமை என்று சொல்லிக்கொள்வது உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதும் உண்மை.இதுபோன்ற நீண்ட விவாதங்களை நடத்துவதில் நாங்கள் சோர்ந்துபோனோமே தவிர தோற்றுப்போகவில்லை என்பதும் உண்மை.

 

ஏனெனில் நீங்கள் எங்களை வஞ்சிக்கமுடியாதது போலவே நாங்களும் உங்களைத் திருத்தமுடியாது என்பதை அறிந்திருக்கிறோம்.ஆனாலும் உங்களுடைய பிழையான உபதேசங்களுக்கு பதிலில்லாத மாயை இங்கே தோற்றுவிக்கப்படக்கூடாது எனும் காரணத்தினாலேயே இயன்றமட்டும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 

நண்பர்கள் கவனத்துக்கு: John Edward Golda Jasmine Arputharaj Samuel

 

https://www.facebook.com/note.php?note_id=127032334080746

 

Yauwana Janam

‎@Gnana Piragasam // ஆம், விமானத்தில் பலரும் பயணம் செய்கின்றனர்தான். ஆனால் கோளாறான விமானம் என முன்னமேயே தெரிந்த விமானத்தில் யாரும் பயணம் செய்வதில்லையே! //

 

ஆம்,அதன்காரணமாகவே நாங்கள் உங்களைக் குறித்து முக்கியமாக சபையாரை எச்சரிக்கிறோம்.

 

ஒரு பாஸ்டர் மோசடியாளராக இருந்தால் அவர் பாஸ்டர் அல்ல என்பதையும் ஒரு நல்ல பாஸ்டர் மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

 

இப்படியே நேர்மையான அதிகாரி லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்பார்.மோசடியான அதிகாரியோ லஞ்சம் வாங்குவார்.அவரை நேர்மையாளர் என்று யாரும் புகழமாட்டார்கள்.

 

இவ்வாறு அந்தரங்களை வெளிப்படுத்தி அவமானத்துகிறவரே பரிசுத்தாவியானவர் தானே..? அவருக்குத் தெரியும் தனது சபையை எப்படி பரிசுத்தமாக்கவேண்டும் என்பது.

 

  • Yauwana Janam

    YJ //குடிப்பதற்காகவே காரல் பாடிச்செல்லுகிறார்கள் என்று உங்களால் தீர்க்கமுடியுமானால் உங்களைப் போன்ற குடிகாரர் யாரும் இருக்கமுடியாது.//

     

    Gnana Piragasam

    // இது எனது தீர்ப்பல்ல. நாம் கொடுக்கும் அல்லது பிறரால் வசூலிக்கப்படுகிற காணிக்கை பணம் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக நான் தந்த ஓர் உண்மைத் தகவல், அவ்வளவே.//

     

    நாளிதழில் பல்வேறு நல்ல செய்திகளும் வருகிறது. துர்ச்செய்திகளும் வருகிறது.உதாரணமாக ”சொந்த பேத்தியை கற்பழித்த தாத்தா,” “அண்ணியுடன் கள்ளக்காதல் வாலிபர் கொலை..” என்பன போன்ற செய்திகளையே ஒருவர் தேடிதேடி படித்தால் அவர் ஒரு மனநோயாளி என்று அர்த்தம்.

     

    அவ்வாறே கிறிஸ்மஸ் கேரல் பாடி பணம் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும்.சபை ஐக்கியத்தை நிலைநிறுத்தவும் தூதர்கள் இரவில் கீதம்பாடியதை நினைவுகூறவும் தங்கள் வாசலுக்கு வரும் நண்பர்களை கனப்படுத்த அவர்களுக்கு சபையார் இயன்ற காணிக்கை தருகிறார்கள்.

     

    இது கிறிஸ்துவை முன்னிட்டு செய்யப்படுவதால் தவறல்ல.இதனால் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகிறது என்பது நிச்சயம். இது தேவையில்லாவிட்டால் காலப்போக்கில் மறைந்துவிடும். இப்போதே சலிப்பான முணுமுணுப்புகள் தோன்றி காரல் வருவது குறைந்துவருகிறது. ஏனெனில் காரல் வருவோர் பலரும் வேலைக்கு செல்லுவோர் மற்றும் மாணவர்கள்.எனவே அவர்கள் அதிகம் பிரயாசப்பட்டே வருகிறார்கள்.

     

    காரல் காணிக்கை பணத்தில் குறிப்பிட்ட பணம் வண்டி வாடகைக்கு போய்விடும்.அடுத்து சபையில் நடைபெறும் சிறுவர் நிகழ்ச்சிக்கான பரிசு பொருள் மற்றும் அலங்காரத்துக்கு செலவிடப்படும்.இக்காலத்தில் சாதாரண பிளாஸ்டிக் பரிசுகளை சபையார் மதிக்கிறதில்லை.எனவே நல்ல பரிசுகள் தரப்படவேண்டும்.ஏன் பரிசு என்று தமிழர்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.மேலும் விதவைத் தாய்மார் மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது.புத்தாண்டுக்கான காலண்டர் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.இவையெல்லாம் கிறிஸ்மஸ் காலத்தின் நிர்வாக செலவுகள்.இதற்கும் மேல் பணம் மீதம் இருந்து சிலர் குடித்தால் அதற்கான தண்டனை பரத்தில் அல்ல இகத்திலேயே தரப்படும்.உபாகமம்.28:15 முதல் அவர்கள் படிக்கட்டும். அவையனைத்தும் அவர்கள் மீதல்ல அவர்களுடைய சந்ததியின் மீதே வரும்.

     

    இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுப்போருக்கும் இது பொருந்தும்.

    11 hours ago

  •  

    Yauwana Janam

    YJ //கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறுதல் மாத்திரமே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆகும்.//

     

    Gnana Piragasam

    // கிறிஸ்துவின் பிறப்பு மறக்கக்கூடிய ஒரு விஷயமா? //

     

    மறக்கக்கூடாத ஒரு விஷயத்தை கொண்டாடாமல் இருக்கலாமா..? உங்கள் பேரன் பிறந்த நாளைக் கொண்டாடமாட்டீர்களா ?

     

    YJ //இன்னும் தூய்மையடைந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது எல்லாம் சரியாகும்.//

     

    Gnana Piragasam

    // புண்ணை மேலாகத் துடைத்து எண்ணைய் தடவினால் அது சரியாகாது. புண்ணின் ஆணி வேர் வரை அறுத்தெடுத்தால்தான் அது சரியாகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எனும் ஆணி வேரை அறுத்துவிட்டால் அது நிரந்தர தூய்மைக்கு வழிவகுத்துவிடுமல்லவா?

     

    அப்படியல்ல, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கண்டிப்பாக வேண்டும் என நீங்கள் சொன்னால் அதற்கான முகந்தரத்தை வேத ஆதாரத்துடன் உங்களால் சொல்லமுடியுமா? //

     

    முகாந்தரமும் கட்டாயமும் வேதத்தில் இல்லை.ஆனால் சமுதாயத்தில் இருக்கிறது.இயேசுவானவர் மரித்த ஒரு மகான் அல்ல,அவர் மனிதனாக வந்த இறைவன் என்று சமுதாயத்துக்குச் சொல்ல இதனைப் பயன்படுத்துகிறோம்.ஏனெனில் இந்த சமுதாயம் கண்டவனுக்கு சிலைவைத்து கொண்டாடும் சமுதாயம்.இதனை தேவனிடமாகத் திருப்ப எதைச் செயதாலும் சரி.நோக்கம் நிறைவேறியாகவேண்டும்.மனிதனுக்கான அனைத்து வாய்ப்பு வசதிகளையும் செய்துகொடுத்திருக்கும் தேவன் அவனது ஒவ்வொரு அன்றாட காரியங்களிலும் தலையிடுகிறதில்லை.

     

    உதாரணமாக ஒரு சாதாரண டீச்சர் தனக்கு தற்செயல் விடுப்பு எடுக்க மாவட்ட கல்வி அதிகாரியிடம் செல்லவேண்டிய அவசியமில்லை.அதுபோலவே ஒரு கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராம நிர்வாக அதிகாரியை முதலமைச்சர் கட்டுப்படுத்துகிறதில்லை.ஆனாலும் இவர்களெல்லாரும் அந்த மேலான அமைப்புகுட்பட்டவர்களே.அதுபோலவே கிறிஸ்துவின் சபையில் அனைவருக்கும் சுயாதீனம் உள்ளது.உதாரணமாக ஒரு ஸ்திரீ ஆண்டவருடைய தலையில் தைலம் ஊற்றி கனப்படுத்த அனுமதியோ கட்டளையோ தேவைப்படவில்லை.அதேபோல என் இரட்சகரை நான் எப்படி கொண்டாடவேண்டும் என்று அப்போஸ்தலர்களோ தூதர்களோ அல்லது எந்தவொரு மார்க்க அமைப்போ கட்டுப்படுத்தமுடியாது.அவர்கள் செய்தார்களா,செய்யச் சொன்னார்களோ என்பதைப் போலவே செய்யக்கூடாது என்று சொன்னார்களா என்பதையும் கவனிக்கவேண்டும்.

     

    அதற்காகவே பக்திவிருத்தி எனும் வாதத்தை முன்வைத்துள்ளேன்.பக்திவிருத்தியுண்டாக்குமானால் எதுவுமே பாவமல்ல.அது ஒருவேளை சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கும்.ஆனால் அதுவும் காலப்போக்கில் மறைந்துவிடும்.

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam

    YJ //நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக கிறிஸ்தவ மார்க்கம் கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது. தற்போது அதிலிருந்து மார்க்கம் மீட்கப்பட்டு (கடந்த சுமார் 200 வருடங்களுக்குள் ) தூய்மைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.//

     

    Gnana Piragasam

    // தூய்மைப்படுத்தும் பணியில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் வேண்டாம் எனச் சொல்வது.//

     

    பண்டிகைகள் இல்லாவிட்டால் மார்க்கம் செத்துவிடும். வீட்டில் இருக்கும் கிழங்கள் அந்த காலத்து கதை எதையாவது பேசிக்கொண்டிருக்கும்.ஆனால் அதுகளால் ஒரு குண்டூசியைக் கூட எடுத்துப்போடமுடியாது.எல்லாம் முடிந்துபோன அவர்களுக்கு எல்லாம் மாயை போலவே இருக்கும்.என்ன கல்யாணமோ என்ன சாந்தி முகூர்த்தமோ என்று சலித்துக்கொள்ளுவார்கள். ஆனாலும் இளம்தலைமுறையினர் முதிர்ச்சியடையும்வரை அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

     

    வேதமானது பண்டிகைகளுக்கான தாற்பரியங்களைப் போதிக்கிறதேயன்றி பண்டிகைகளை ஒழிக்கவில்லை. சடங்குகள் மாத்திரமே ஒழிக்கப்பட்டது,ஆண்டவருடைய கடைசி பந்தியிலேயே அது பஸ்கா பண்டிகை விருந்தாக இருந்தும் அங்கே ஆட்டுக்குட்டி நியமம் இல்லை.ஆனால் புளிபில்லாத அப்பமும் இரசமும் இருந்தது.புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பலருக்கும் ஆண்டவருடைய வருகை இத்தனை தாமதமாகும் என்பதைக் குறித்த் தரிசனம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே ஆவியானவர் கட்டளையிடாதிருந்தும் சொந்த விருப்பத்தின்பேரில் அவரவர் தத்தமது சொத்துக்களை விற்று மடம் அமைத்தார்கள்.ஆனால் அந்த மடத்தில் பவுல் சேரவில்லை.நாங்கள் பவுல் வழியே புதுப் பரிமாணம் பெற்ற கிறிஸ்தவத்தையே பின்பற்றுகிறோம். சுவிசேஷம் உரைக்கப்பட்ட களமும் நோக்கமும் வேறு; நிருபங்களில் விளங்கும் தேவனுடைய நடத்துதலும் வேறு.உதாரணமாக உயிர்த்தெழுந்த இயேசுவையே முதன்முதலாக யோவான் கர்த்தர் என்கிறான்.

     

    எனவே கர்த்தருடைய வருகை பரியந்தமும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.ஏனெனில் அவை மார்க்கத்தை உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்ளவே உதவுகிறது.ஆனால் இடைப்பட்ட காலத்தில் கலந்துவிட்ட அந்நிய மார்க்க சடங்குகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

     

    இன்னும் என்ன சொல்ல..?

Yauwana Janam

‎@Gnana Piragasam // நெடுநாட்களாக சகோதரர் என அழைக்கப்பட்டு வந்த அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் சமீபத்தில் ரெவரெண்ட் எனும் அடைமொழியை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். இதன் மூலம் அவரும் மோசடியாளர் லிஸ்டில் வந்துவிட்டார் எனச் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவில்லை. //

 

அமைதி விரும்பிகள் விதண்டாவாதங்களுக்கு எப்போதுமே பதிலளிப்பதில்லை.அதனால் அவர்கள் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை.அவரவருக்குக் கிடைத்த வெளிச்சத்தில் போய்க் கொண்டிருக்கிறோம்.

 

நீங்கள் பதிலளிப்பதிலும் வேதத்தை நிரூபிப்பதிலும் சிறந்தவராக இருந்தால் உடனே நீங்கள் செய்யவேண்டியது இஸ்லாமியரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே.

 

அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் ரெவரெண்ட் என்று போட்டுக்கொள்ளுவதற்கு முன்பே அவர் ரெவரெண்ட்டாகவே இருக்கிறார்.ஆனாலும் கர்த்தரைப் போலவோ கர்த்தருக்கோ அல்ல,கர்த்தருடைய ஜனத்துக்கோ அல்ல,சாத்தானின் ராஜ்யத்துக்கு எதிராக.

 

அண்மையில் ஒரு பெந்தெகொஸ்தே போதகரிடம் இதே காரியத்தை விசாரித்தபோது அவர் சொன்னது இதுதான்.அதாவது அடிக்கடி வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு இமிக்ரேஷனிலும் விசா நடைமுறைகளிலும் இதுபோன்ற பட்டங்கள் தேவைப்படுகிறதாம்.அது தற்கால பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள உலக நிலவரத்தில் ஏற்புடைய காரணமாகவே இருந்தது.

 

மேலும் வேதத்திலுள்ள் ஐந்துவிதமான ஊழியத்தையும் சிறப்பாக செய்துள்ள அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கு ரெவரெண்டு பட்டம் தகுதி குறைவுதான்.

 

ஐயா @Gnana Piragasam அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் கிறிஸ்தவரே அல்ல, என்கிறோம்.அல்லது கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் நீங்கள் ஏற்றுக்கொண்ட போதனைக்கு மாறாக நடப்பவரையே திருத்த முயற்சிக்கவேண்டுமே தவிர உங்களுக்கு எதிரியாக இருப்பவரைக் குறைகூறக்கூடாது.அது காழ்ப்புணர்ச்சியாகவே கருதப்படும்.

 

அடிப்படையிலேயே உங்கள் உபதேசத்துக்கு மாறானவர்களைக் குறைகூறி உங்களால் என்ன சாதிக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள் ? அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மலையைப் பார்த்து நாய் குலைக்கிறது என்று போய்க் கொண்டே இருப்பார்கள்.

 

Yauwana Janam

Gnana Piragasam // நீதிமொழிகள் 14:19 தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. //

 

அப்படியானால் பிலாத்துவுக்கு முன்பாகவும் பிரதான ஆசாரியனுக்கும் முன்பாகவும் ஆண்டவர் தலைதாழ்த்தி நின்றதற்குக் காரணம்,என் ஆண்டவர் துன்மார்க்கன் என்ற காரணத்தினாலா..?

 

// உங்களைப் போன்றோரிடம் ஆவிக்குரிய முதிர்ச்சி இல்லை என ஒத்துக்கொள்கிறீர்கள். //

 

நான் என்னைக் குறித்து இங்கே எழுதவில்லை. சமுதாயத்தைப் பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர் என்று சொல்லிக்கொள்ளுவதை நினைத்தால் ஒரே சிரிப்பாக வருகிறது.உங்களுக்கு வந்த முதிர்ச்சிக்குக் காரணம் இயேசுவாக இருந்திருந்தால் நிச்சயம் பொறாமைப்பட்டிருப்பேன்.

 

மேலும் கிழவனெல்லாம் முதிர்ச்சியடைந்தவனுமில்லை முதிர்ச்சியடைந்தவனெல்லாம் கிழவனுமில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

 

//ஆக, இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்போட அகஸ்டின் ஜெபக்குமாரும் ஒத்துக்கொண்டார் என்கிறீர்கள்.//

 

இதுபோலவே வேத வசனத்தையும் திரிக்கிறீர்கள்.நான் எழுதியிருப்பது என்ன,நீங்கள் அர்த்தம் கொள்வது என்ன..? நாம் இதுவரை எழுதியிருப்பவற்றை முதலில் வாசகர் வாசித்து முடிக்கட்டும்.ஓரிரு விருப்பக் குறியோ அல்லது ஓரிரு வரி பின்னூட்டங்களோ வரட்டும்.பிறகு நீங்களா,நானா பார்த்துவிடலாம்.

 

அல்லது வாசகருக்காக எழுதவில்லை எனக்கு மாத்திரமே எழுதுகிறீர்கள் என்றால் நேரத்தை வீணாக்காமல் உங்கள் வேலையைப் பாருங்கள்.உங்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு ஒன்றுமில்லை.நீங்கள் ஒரு போதக்ராகவோ குருவாகவோ தகப்பனாகவோ ஆகமுடியாது.கிறிஸ்துவே எனக்கு குருவாகவும் தகப்பனாகவும் போதகராகவும் இருக்கிறார்.அவரே சர்வ வல்ல தேவனாகிய கிறிஸ்து எனும் இரட்சகர். அவருக்கே நான் ஆராதனை செய்வேன். ஓகேவா..?!

 

பிதாவாக இருந்து சிருஷ்டித்தவர்.தந்தை என்பவர் பாதுகாவலர் மாத்திரமே என்பதை அறிந்திருக்கிறோம்.

போதகராக இருந்து பரலோகத்தின் விசேஷங்களைப் போதிக்கிறார்.அவரிடமிருந்து பெற்றதைப் போதிப்பவன் ஆசிரியன்.குருவாக இருந்து எனது பாவப் பரிகார பலியான அவரிடம் என்னை நடத்துபவர் மேய்ப்பராக இருக்கிறார்.எனவே பிரதான மேய்ப்பன் எனும் மற்றொரு மாறாத பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டது.

 

நீங்கள் கேட்ட வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன்.இது எனது சொந்த விளக்கம் என்றால் நீங்கள் தருவதும் சொந்த விளக்கமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

  • Yauwana Janam

    ‎// நீங்கள் கேட்ட வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன்.இது எனது சொந்த விளக்கம் என்றால் நீங்கள் தருவதும் சொந்த விளக்கமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.//

     

    //மற்ற மார்க்கத் தலைவர்களைப் போல நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் எங்கோ ஒய்ந்திருக்கவில்லை.இன்றும் நம்மோடு இருந்து கிரியை செய்கிறார்.எனவே அவருடைய மார்க்கத்துக்கு எதிராகவும் அவ்ருக்கு எதிராகவும் பேசுவோர் (தைரியமிருந்தால் ???) அவரையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

     

    எப்படியெனில் கோர்ட்டு நடைமுறைகளில் ஒரு வழக்கம் உண்டு.ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தனது கருத்தையும் நியாயத்தையும் சொல்லவிரும்புகிறவர் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள கோர்ட்டாரிடம் முறையிடுவார்.கோர்ட்டும் அவசியம் கருதி அவரை அனுமதிக்கும்.இப்படியே சுப்ரமணியசாமி என்றொருவர் அடிக்கடி அலம்பல் பண்ணுவதுண்டு.

     

    அதுபோலவே நாம் யாரைக் குறித்து விவாதிக்கிறோமோ அவரையும் இந்த காரியத்தில் ஒரு நியாயம் சொல்ல கேட்கலாமே..ஏன்,நம்முடைய ஆண்டவர் இப்போதெல்லாம் யாருடனும் பேசுகிறதில்லையா ? ஜீவனோடு தானே இருக்கிறார்..?//

     

    பரிசேயர்கள் தான் அடிக்கடி பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுவார்கள்.ஆனாலும் இயேசுகிறிஸ்து நேற்றும் தேவனாக இருக்கிறார்,இன்றும் தேவனாக இருக்கிறார்,நாளையும் அவரே. (எபிரெயர்.13:8)

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam

    Gnana Piragasam //அமைதி விரும்பிகள் விதண்டாவாதங்களுக்கு எப்போதுமே பதிலளிப்பதில்லை.//

     

    நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்; ஆனால் வேதமோ இப்படிச் சொல்கிறது.

     

    நீதிமொழிகள் 14:19 தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.//

     

    மேற்காணும் வரிகளை நன்கு நிதானித்து சொல்லுங்கள்.உங்களுக்கு எதிராக எழுதுவோரெல்லாம் துன்மார்க்கர் நீங்கள் நீதிமானா ? உங்கள் பதிலளிக்காவிட்டால் நாங்கள் தீயவராகிவிடுவோமா ?

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam ”அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” (ஏசாயா.53:7)

    11 hours ago

  •  

    Yauwana Janam ”என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.” (சங்கீதம்.39:3)

Yauwana Janam ஐயா,நீங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் அல்ல,நான் கைகட்டி நிற்க குற்றவாளியுமல்ல.நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை எல்லாம் என்னால் சொல்லமுடியாது.ஆனாலும் தகுந்த பதில் சொல்லியிருக்கிறோம்.அடிப்படையிலேயே தவறாக வேதத்தை வியாக்கியானம் செய்வோரிடம் நான் வசனத்தையெடுத்து பிரயோகிக்கிறதில்லை.

Unlike · · Unfollow Post · Share



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

யௌவன ஜனத்தின் இக்கட்டுரைக்கு தூண்டுகோலாக இருந்த “யாருக்கு ஆராதனை?” எனும் தலைப்பிலான எனது கட்டுரையையையும் அதன் பின்னூட்டங்களையும் முழுமையாகப் படிக்க பின்வரும் தொடுப்புக்குச் செல்லவும்.

https://www.facebook.com/notes/gnana-piragasam/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/10150469829669367



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்
Permalink  
 


யௌவன ஜனத்தின் கட்டுரை திரியில் பதிக்கப்பட்ட பின்னூட்டங்கள்:

  • Yauwana Janam http://yauwanajanam.activeboard.com/f499712/forum-499712/
    yauwanajanam.activeboard.com
    விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமà®
  • Yauwana Janam https://www.facebook.com/note.php?note_id=10150469829669367
    அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆரா...See More
  • Gnana Piragasam
    அன்பான யௌவன ஜனமே உங்களது நல்லதொரு தலைப்பில் இக்கட்டுரையைப் பதித்துள்ளீர்கள். இத்தலைப்பு நிச்சயமாக சிந்தனைவாதிகளின் சிந்தனையைத் தூண்டும். இந்த ஞானப்பிரகாசம் இயேசுவை ஆராதிப்பதை மறுப்பதாகக் கூறப்பட்டுள்ளதே, அப்படியானால் இயேசுவை ஆராதிக்கச் சொல்லும் வசனம் வேதாகமத்தில் உள்ளதா எனத் தேடிப்பார்க்கச் சொல்லும். அப்படி தேடிப் பார்க்கையில், தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதிக்கச் சொல்கிற இயேசுவின் கூற்றை (மத்தேயு 4:10) அவர்கள் படிக்க நேரிடும். அதன் மூலம் அவர்களின் சிந்தனை தூண்டப்படும். அவர்களின் சிந்தனையின் முடிவு எதுவாயிருந்தாலும் அது எனக்குப் பொருட்டல்ல. அவர்கள் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாவது உங்கள் கட்டுரைத் தலைப்பின் மூலம் கிடைக்கிறதே என்பதில் எனக்கு ஏக திருப்தி.

    நன்றி. இதுபோல மேலும் பல தலைப்புகளில் கட்டுரை வரைந்து ஜனங்களின் சிந்தனை தூண்டப்படுவதற்கு வாய்ப்பளிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
  • Selwyn Joyson
    கிறிஸ்மஸ் கொண்டாட கூடாது happy new year சொல்ல கூடாது திருமணநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது போன்ற பைத்தியக்காரத்தனமான விவாதங்களை பலர் பரப்பி வருகின்றனர் இதைப் போன்ற கட்டுரைகளால் யாருக்கும் எந்த ஆவிக்குரிய பிரயோஜனமும் இல்லை இவர்களது கூற்றுப்படி இது போன்று கொண்டாடுபவர்கள் ஏதோ பாவிகளைப் போல சித்தரிக்கப்படுகிறார்கள். இது போன்ற குழப்பங்களை உண்டாக்கும் செய்திகள் வீணானவைகள். இன்னும் சில நாட்களில் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, குழந்தைகளை கொஞ்சக்கூடாது என்பது போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். (வேதத்தில் facebook use பண்ணுவதைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லை எனவே அதைவிட்டு வெளியேறலாமே..... அதுநடக்காது ஏனெனில் இவர்கள் தங்களுக்கு பிடிக்காத காரியங்களுக்கு வேதத்தை துணையாக வைத்துக் கொண்டு மற்றவர்களை குழப்புகின்றனர்)
  • Gnana Piragasam ‎1 கொரி. 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
  • Selwyn Joyson வசனங்களை தங்களது ஆவிக்குரிய வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் தங்களுக்கு சாதகமான வேளைகளில் அதை பயன்படுத்துவது தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதற்கு ஒப்பானது.தேவையற்ற தர்கங்களை உண்டாக்குவோர் தங்கள் பார்வைக்கு ஞானிகளாக தென்படுகிறார்கள்.ஏதாவது மக்களின் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமான கட்டுரைகளை எழுதுங்கள்
  • Selwyn Joyson நாட்களை விஷேகிக்கிறவன் கர்த்தருக்கென்று விஷேஷித்துக்கொள்ளுகிறான் என்று ஆவியானவரே ஆலோசனை கூறியபின்னும் விஷேஷமாக கொண்டாடுபவர்களை குறை கூற யாருக்கும் உரிமை இல்லை
  • Gnana Piragasam
    ஆமோஸ் 5:20 21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. 22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். 23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

    24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.

    24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.

    24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.

    மல்கியா 2:3 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

    ஆமோஸ் 8:4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி: 5 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும், 6 நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.

    10 உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
    Yesterday at 2:51am · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்
Permalink  
 


  • Selwyn Joyson
    நீங்கள் தந்திரமாக வசனத்தை குறிப்பிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது ஆமோஸில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அன்றைய சூழ்நிலையில் கொடுத்தது.இன்றைய காலத்தில் அதே வசனங்கள் தனிப்பட்ட ஓவ்வொருவருக்குமாக வெளிப்படுகிறது.தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் புறஜாதியரைப் போல் கிறிஸ்மஸ் கொண்டாடும் பெயர் கிறிஸ்தவர்களுக்கு அந்த வசனம் பொருத்தமாக இருக்கும்... தேவன் கிருபையாய் தமது குமாரனை எங்களுக்கு அளித்ததை நினைவுகூர்ந்து அதை ஆசரிக்கும் நாங்கள் தங்களுடைய வசன ஜாலங்களால் ஏமாறுவதில்லை... முதலில் ஒரு வசனத்தை குறிப்பிடும் முன்பு அ பின்பு ஏன் அந்த வசனம் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது என்று மனித ஞானத்தால் அல்ல தேவ ஆவியின் துணையோடு அறிபவர்கள் தவறாக வியாக்கியானம் செய்யமாட்டார்கள்.எனவே பதிலாக ஏதோ ஒரு அதிகாரத்தில் இருந்து ஒரு வசனத்தை குறிப்பிடாதீர்கள்
  • Selwyn Joyson
    பண்டிகை ஆசரிப்பவர்கள் அனைவரும் ஏதோ மகா பாவிகள் துன்மார்கர் கள்ளதராசை உபயோகிப்போர் போன்ற பார்வையில் நீங்கள் பார்ப்பது தங்களது அறியாமையைக் காட்டுகிறது நாங்களும் தேவகிருபையால் அவரது சிலுவையை எடுத்து அனுதினமும் பின்தொடர்பவர்கள்தான் தேவன் பரிசுத்தமாக்கின எங்களை குற்றவாளிகளாக தீர்க்க நீங்கள் யார்.... அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் என்ற தலைப்பில் எப்படி பண்டிகையை ஆசரிக்க வேண்டும் என்று கட்டுரை வரைந்தால் மக்களின் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாக இருக்கும்... பண்டிகைகளை ஆசரிக்கவே கூடாது என்ற தங்களது நிலைப்பாடு வெறும் ஏட்டுச்சுரைக்காய்
  • Yauwana Janam அன்பான சகோதரர் செல்வின் அவர்களே,

    நீங்கள் இளைஞராக இருந்தாலும் இத்தனை தெளிவாகவும் நிதானமாகவும் எழுதுகிறீர்கள்.எனக்கு அந்த பொறுமையில்லையே...உங்களுடைய வரிகளை எனக்கன்பான நண்பர் Vijay Kumar அவர்களுடைய மேலான கவனத்துக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

    கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
  • Yauwana Janam ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
  • Vijay Kumar
    இக்கட்டுரை இயேசுவை தெய்வமாக தொழுதுகொள்ளாத ஒருவர் குறித்த கட்டுரை என்பதாலும் கிறிஸ்துமஸ் குறித்த என் எதிர்மறைக் கருத்துக்கள் அவருக்கு பலம் சேர்க்கும் என்பதாலும் நான் எனது கருத்துக்களை இங்கு பதிய தயங்குகிறேன்.

    மற்றபடி சகோ.செல்வின் அவர்கள் ஆரோக்கிய உபதேசத்திலும், உண்மைக் கிறிஸ்தவத்திலும் அதிக வாஞ்சையுள்ளவர் என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். அவரை நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஆனாலும் தனது கருத்தில் அவர் செய்துள்ள ஒரு தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    //அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் என்ற தலைப்பில் எப்படி பண்டிகையை ஆசரிக்க வேண்டும் என்று கட்டுரை வரைந்தால் மக்களின் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாக இருக்கும்... //

    பிரசங்கிப்பதின் வடிவம் எதுவாக இருந்தாலும் சரி பேச்சொ, எழுத்தோ பிரசங்கிப்பவன் அதை தேவனிடத்திலிருந்து பெற்று ஜனங்களுக்குத் தரவேண்டுமே தவிர அதை ஜனங்களின் விருப்பபடி தரக்கூடாது. அப்படிக் கொடுத்தால் அவன் அக்மார்க் கள்ளப்போதகன்.

    "எதைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளையை நான் உனக்குத் தருகிறேன், நான் கேட்பது எதுவோ நீ அதை எனக்குப் பிரசங்கி!" என்று கேட்கும் விசுவாசி ஒரு சீஷனாக இருக்க முடியாது. அவன் தேவனுடைய ஸ்தானத்தை தான் எடுத்துக் கொள்ளுகிறான். கடைசிகால போலிக்கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கும்.

    ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு…(II தீமோத்தேயு 4:3 ), நான் சகோதரரை தவறாகச் சொல்லவில்லை. ஆனால் என் அன்பு சகோதரன் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து தவறைச் சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே சொல்லுகிறேன்.

    கிறிஸ்துமஸ் சரியா தவறா என்ற முடிவை தாங்கள் தேவனிடத்திலிருந்துதான் பெறவேண்டும். சரி என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டு அதை எப்படி கொண்டாடுவது என்று எனக்கு போதி என்று ஒரு மனிதனுக்குக் கட்டளையிடக்கூடாது. சரி என்ற கருத்தை தாங்கள் இயேசுவிடமிருந்து பெற்றிருப்பீர்களானால் அவரே அதை எப்படிக் கொண்டாடுவது என்றும் கற்றுத்தருவார். ஒரு மனிதனிடம் கேட்பானேன்???
  • Yauwana Janam
    எபிரெயர் 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

    ஹாப்பி கிறிஸ்மஸ்-2012

    I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

    கலாத்தியர் 6:15 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.

    அப்படியே கிறிஸ்மஸ் கொண்டாடினாலும் ஒன்றுமில்லை, கொண்டாடாவிட்டாலும் ஒன்றுமில்லை. அன்று சாலை விபத்தில் மண்டையை உடைத்துக்கொண்டவனுக்கு கிறிஸ்மஸ் இல்லையே..!
  • Gnana Piragasam
    ‎//எபிரெயர் 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.//

    நண்பர் யௌவன ஜனம் அவர்களே! இக்கட்டுரையின் தலைப்பில் “இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்” எனக் கூறியுள்ளீர்கள். தற்போது எபிரெயர் 1:6-ஐ சமர்ப்பித்துள்ளீர்கள்.

    ஏன், இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?

    கிடைத்தால் அதையும் பதியலாமே!
  • Selwyn Joyson
    விஜயகுமார் அண்ணணுக்கு நான் கிறிஸ்மஸ் எப்படி கொண்டாடுவது என்று கேட்டது எனக்காக அல்ல கர்த்தருடைய கிருபையால் நாங்கள் அதை அறிந்திருக்கிறோம் எங்கள் கிராமத்திலுள்ள புறஜாதி சிறுவர்களை நாங்கள் இந்நாட்களில் எளிதாக சந்திக்க முடிகிறது இது போன்ற பல காரியங்கள் ஆனால் தேவன் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு நானும் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறேன் என்று இருப்பவர்கள் மாற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.அதேபோல் கிறிஸ்மஸ் ஆசரிப்புக்கு எதிராக இருக்கும் தங்களை போன்றோர் தனிப்பட்ட கருத்தை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அதை கொண்டாடுபவர்கள் எல்லாம் வேதத்தை அறியாதவர்கள் என்பது போன்ற கருத்துக்களை எதிர்க்கிறோம்... தேவனை அறியாத ஜனங்கள் கோடிகோடியாய் இருக்கும் இந்நேரங்களில் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் சில கிறிஸ்தவர்களையும் குழப்பி தேவையற்ற நேரவீணடிப்புகளும் விவாதங்களும் யாருக்கும் பிரயோஜனமற்றது..
  • Yauwana Janam
    Vijay Kumar // இக்கட்டுரை இயேசுவை தெய்வமாக தொழுதுகொள்ளாத ஒருவர் குறித்த கட்டுரை என்பதாலும் கிறிஸ்துமஸ் குறித்த என் எதிர்மறைக் கருத்துக்கள் அவருக்கு பலம் சேர்க்கும் என்பதாலும் நான் எனது கருத்துக்களை இங்கு பதிய தயங்குகிறேன்.//

    திரு.விஜய் அவர்களின் வயதைக் காட்டிலும் ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் அனுபவமே அதிகமாகும். எனவே இதற்கு மேல் ஒருவர் அவரைக் கெடுத்துவிடமுடியாது. இன்னும் சொல்லப்போனால் திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் உபதேசத்தின் மற்றொரு பரிமாணமே திரு.விஜய் அவர்கள் சொல்லுவது.

    வேறுமாதிரி சொன்னால் திரு.விஜய் அவர்கள் என்ன எழுதினாலும் அது திரு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு பழங்கஞ்சியாகவே இருக்கும்.ஏனெனில் இதை அவர் சுமார் 30 வருடம் முன்பே கேள்விபட்டுவிட்டார். திரு.விஜய் அவர்களின் கிறிஸ்மஸ் விரோத கருத்துக்கள் எனக்கு 20 வயதிருக்கும்போதே வந்துசேர்ந்துவிட்டது. நான் அது பயனற்றது என்று புறக்கணித்தேன்.நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.அவ்வளவு தான் வித்தியாசம். ஏனெனில் அவற்றின் வேர்கள் அப்படி..!

    சத்தியத்தைப் பொருத்தவரை ஒருவர் என்ன சொல்லுகிறார் என்பது மட்டுமல்ல,எந்த ஆதாரத்திலிருந்து சொல்லுகிறார் என்பதும் முக்கியமாகும்.பொதுவாகவே எதிர் கிறிஸ்துவின் போதனைகள் கிறிஸ்தவ சபையை பாபிலோனிய வேசி மார்க்கம் என்று தூஷித்துவருகிறது.கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அவள் ஊற்றிக்கொடுக்கும் மது என்று சொல்லப்படுகிறது.

    ஐயா Gnana Piragasam... நான் சொல்றது சரிங்ளா..?!
  • Vijay Kumar :) நான் கத்துக்குட்டி என்பதும், எனது செய்திகள் பழங்கஞ்சி என்பதையும் நானே நன்கு அறிந்திருக்கிறேன் :) அது பழங்கஞ்சியாக இருப்பதால்தான் பலருக்குப் பிடிக்கவில்லை.

    பிறருடன் நடக்கும் விவாதத்தில் என் சகோதரரை விட்டுக்கொடுக்கவும், அவர்களுக்கு எதிராக கமண்ட் போடவும் விருப்பமில்லை என்பதே என் நிலைப்பாடு.
  • Gnana Piragasam Yauwana Janam
    இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?
    3 hours ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Yauwana Janam
    Gnana Piragasam

    // Yauwana Janam , இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா? //

    திரு.ஞானப்பிரகாசம் அவர்களே,ஆராதனை என்பது என்னவென்றும் தொழுதல் சேவித்தல் ஆகியன என்னவென்றும் அறிந்திருதீர்களானால் இந்த கேள்வியைக் கேட்டிருக்கமாட்டீர்கள்.அல்லது ஒவ்வொன்றுக்கும் மூல பாஷையில் வெவ்வேறு அர்த்தங்களை வைத்திருப்பீர்கள்.ஆனால் பாமர ஜனங்களுக்கு இந்த இறையியல் தத்துவங்களெல்லாம் தேவையற்றது.எனவே அறிவிக்கப்படவேண்டிய ஒரே செய்தி சிலுவையின் செய்தி என்பதையும் போற்றப்படவேண்டிய ஒரே நாமம் இயேசுகிறிஸ்து என்பதையும் கடந்த 2000 வருடங்களாக அறிந்து உபதேசித்துக்கொண்டிருக்கிறோம்.ஒரு காலத்தில் நாங்களே மார்க்கபேதத்தின் முதலாளிகள் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பூமியின் ராஜாக்களால் விசாரணைக்கும் கொடுந்தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டோம்.ஆனால் இப்போதோ சுதந்தர தேசத்தில் இருப்பதால் கொஞ்சம் தப்பியிருக்கிறோம்.இப்போதும் கிறிஸ்து எனும் நாமத்தைப் பிரசங்கிப்பதற்கே தடையிருக்கிறதேயல்லாமல் ஆதி பகவன் முதற்றே உலகு என்று சொல்ல தடையில்லை.

    பின்வரும் வசனங்கள் உங்களுக்குப் போதுமானவையல்ல என்று நாங்கள் அறிந்திருந்தாலும் எங்களுக்குப் போதுமானவையாக இருக்கிறதே என்ன செய்யலாம்.எங்களைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு மூல பாஷையிலிருந்து இந்த வசனங்களை மொழிபெயர்த்து உபதேசித்தவர்களையே நாங்கள் நம்புகிறோம்.ஏனெனில் அதன் விளைவை எங்கள் வாழ்வில் ஏற்கனவே ருசித்துவிட்டோம்.எனவே ஏற்கனவே வாழ்க்கைப்பட்ட ஒருத்தியை மயக்கி கடத்திச்செல்லும் இழிவான செயலைச் செய்யும் கள்வனுக்கு ஒப்பாக சுற்றி வருவோரிடம் நீங்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகிறோம்.நன்றி.

    ரோமர் 1:25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

    இயேசுகிறிஸ்து சிருஷ்டிகர்.

    எபிரெயர் 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

    இயேசுகிறிஸ்துவை ஆராதிப்பது தேவனுக்குப் பிரியமானது.ஏனெனில் கிருபை அவராலே வெளிப்பட்டது.
  • Yauwana Janam
    மத்தேயு 23:39 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    அவர் பூத கணங்களாலும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.

    I கொரிந்தியர் 9:1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

    இங்கே கர்த்தர் எனும் வார்த்தை இரண்டு முறை வருகிறதே, இரண்டும் ஒருவரையே அல்லது வெவ்வேறு நபர்களைக் குறிக்கிறதா ?

    எபேசியர் 1:20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,

    21. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,

    22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

    23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

    இயேசுவை ஆராதிக்க மறுப்போர் தலையில்லாத முண்டங்கள் என்று பவுல் கூறுகிறாரோ ???
  • Yauwana Janam http://yauwanajanam.activeboard.com/t41282290/topic-41282290/
    yauwanajanam.activeboard.com
    நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
  • Yauwana Janam http://yauwanajanam.activeboard.com/f499712/forum-499712/
    yauwanajanam.activeboard.com
    விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமà®
  • Gnana Piragasam
    Yauwana Janam மன்னிக்கவும் யௌவன ஜனமே! உங்களது அத்தனை உப்புச்சப்பில்லாத வாதங்களுக்கும் எனது ஒரே பதில்:

    இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?

    என்பதே.

    இயேசுவுக்கு ஆராதனை செய்ய நான் மறுப்பதாகச் சொல்லி கட்டுரை வரைந்து என்னைக் குற்றஞ்சாட்ட முற்பட்டது நீங்கள். எனவே நீங்கள்தான் “ஆராதனை, தொழுதல், பணிதல்” எனும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் அவற்றின் மூல பாஷை வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் சொல்லி என்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும்.

    இந்த எளிய நடைமுறையைக்கூட நீங்கள் அறியீர்களா?

    உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய தளத்தில் பகிரங்கமாக எனது பெயரைக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டும் வண்ணமாக கட்டுரையை வரைந்துவிட்டு, குற்றச்சாட்டை நிரூபிக்க மறுக்கிறீர்கள். பொறுப்புள்ள ஒருவர் செய்யக்கூடிய செயலா இது?

    “ஆராதனை, தொழுதல், பணிதல்” எனும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் அவற்றின் மூல பாஷை வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் சொல்லி என்னால் விளக்க முடியும். ஆனால் அதை நீங்கள் ஏற்கமாட்டீர்கள்.

    எனினும் உங்களுக்காக இல்லாவிடினும் சிந்திக்கத் தெரிந்த மற்றவர்களுக்காகவாவது அந்த விளக்கத்தை எனக்கு விருப்பமான நேரத்தில் தருவேன்.

    ஆனால், ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்ல ஆசிக்கிறேன். நீங்கள் ஏதோ ஒரு எண்ணத்தில் பகிரங்கமாக எனது பெயரை இணைத்து கட்டுரை வரைந்து விட்டீர்கள். ஆனால் இதை முன்னிட்டு வருகிற/போகிற அதிமேதாவிகள் எல்லோரும் என்னை நிந்தித்துச் செல்வதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
  • Selwyn Joyson ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது....... புதிதாக வரும் கிறிஸ்தவர்களை இவர்களைப் போன்ற புத்திசாலி என்று எண்ணிக்கொள்கிறவர்கள் குழப்பி கிறிஸ்துவுக்குள் வேறூன்ற விடாமல் இதுபோன்ற வீணான தர்க்கங்களில் அவர்கள் சிந்தனைகளை கொண்டுவந்து விடுகின்றனர்
  • Gnana Piragasam
    Yauwana Janam //இயேசுவை ஆராதிக்க மறுப்போர் தலையில்லாத முண்டங்கள் என்று பவுல் கூறுகிறாரோ ???//

    எதற்கு வெட்டித்தனமான விவாதம்? வசனம் சொல்லாததைச் சொல்வதுதானே உங்கள் வழக்கம்? எதற்கு மரித்துப்போன பவுலை இழுக்கிறீர்கள்? “இயேசுவை ஆராதிக்க மறுப்பவர்கள் தலையில்லா முண்டங்கள்” என நீங்களே சொல்லிவிட வேண்டியதுதானே? இயேசுவை வாயினால் ஆராதனை செய்துகொண்டு, அவரது வசனத்துக்குக் கீழ்ப்படியாமல், முகாந்தரமின்றி பிறரை “தலையில்லா முண்டங்கள்” எனச் சொல்கிற உங்களைப் போல் இருப்பதைவிட, இயேசுவை ஆராதிக்க மறுத்தாலும் அவரது வசனத்துக்குக் கீழ்ப்படிந்து தலையில்லா முண்டங்கள் என உங்களைப் போன்றவர்களால் அழைக்கப்படுவது எத்தனையோ மேல்.

    இயேசுவை ஆராதிக்கச் சொல்லும் வசனம் இருக்கிறதா, இல்லையா? நெஞ்சில் திறமிருந்தால் நேரடியாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
  • Gnana Piragasam திரு.செல்வின் ஜாய்சன் அவர்களே! “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”, சரி ; ஆனால் “நாய் வாலை நிமிர்த்த முடியாது” என்றும் அதே உலகத்தான் சொல்லியிருக்கானே? எதற்கு தம்பி இந்த மாதிரி உலகத்தார் பழமொழிகளைச் சொல்லி வெட்டிவிவாதம் செய்கிறீர்கள்? நீங்கள் உலகத்தான் பேச்சுக்கு கொடுக்கிற மரியாதையை வேதாகமத்துக்குக் கொடுப்பதிலை போலும். I pity you Mr.Selwyn.

    நீங்களும் நானும் யாரையும் வளைக்கவும் முடியாது, எந்த வாலையும் நிமிர்த்தவும் முடியாது. விளையச் (வளையச்) செய்கிறவர் கர்த்தரே என்பதுதான் வேதம் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அது ஐம்பதாக இருந்தாலும் சரி, எண்பதாக இருந்தாலும் சரி, நாய் வாலாக இருந்தாலும் சரி, தேவன் நினைத்தாலும் யாரையும் வளைப்பார், எந்த வாலையும் நிமிர்க்கவும் செய்வார், சரிப்பட்டு வரவில்லையெனில், வாலை ஒட்ட நறுக்கவும் செய்வார்.

    வேதாகம புருஷன் மோசேயைத் தெரியுமா? அவர் 40 வயது வரை புற தேவ வணக்கத்தாரோடு ஒன்றிக்கிடந்தார். 40 வயதில் தனது முன்னோர்களின் தேவனைக் குறித்த வைராக்கியம் வந்ததோ இல்லையோ, ஆனால் தன் சொந்த இனத்தார்மீது வந்த வைராக்கியத்தால், தன் தேசத்தலைவனின் விரோதத்தை சம்பாதித்து, வேறொரு தேசத்திற்குப் போய் அங்கும் 40 வருடம் இருந்தார். இப்படியாக 80 வயது ஆனபின்னர்தான் மெய்யான தேவன் அவரைச் சந்தித்து தமது பணியைச் செய்ய அழைத்தார். ஆனாலும் 80 வயது மோசே கொஞ்சம் இடும்பு செய்யத்தான் செய்தார். ஆனால் அது தேவனிடம் பலிக்குமா? அவர் மோசேயை வளைத்து நிமிர்த்து தமது பணிக்கென அனுப்பினார்.

    இப்படி ஒரு கதையுள்ள அதே வேதாகமத்தில் இப்படியும் ஒரு கதை உண்டு. சாலொமோன் என்பவர் தன் இளவயதிலேயே தேவனுக்கு நன்கு வளைந்து கொடுத்தவராக இருந்தார். தேவனிடமிருந்து அதீத ஞானத்தையும் பெற்றார். ஆனாலும் என்ன? ஐம்பதோ எண்பதோ வயதானபோது தேவனுக்கு விரோதமான காரியங்களில் வளைந்துகொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

    அதனால தம்பீ, வேதாகமத்தை நல்லா படிச்சு, அதிலிருந்து முதல்ல பாடத்தை படிங்க. அதுக்கப்புறம் இந்த உலகத்தாரின் பழமொழிகளிலிருந்து பாடம் கத்துக்கலாம். OK-வா?

    அடிக்கடி இப்படி வெட்டித்தனமான எழுதி உங்க பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். எடுத்துக்கொண்ட தலைப்பின் அடிப்படையிலான உங்க கருத்தை வசன ஆதாரத்தோட (முடிஞ்சா) சொல்லுங்க, போட்டுப் பாத்துருவோம், தேவன் ஐந்தை வளைக்கிறாரா ஐம்பதை வளைக்கிறாரான்னு.

    இல்லை, என்னை வளைக்க முடியாதுன்னு தெரியுதுலா? பேசாம வேற உருப்படியான வளைக்கக்கூடிய வேலையைப் பாருங்க.
    17 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Selwyn Joyson
    உங்களை மாற்ற நான் யார்.. நான் நட்டேன் அப்பல்லோ நீர் பாய்ச்சினான் தேவன் விளையச் செய்தார்.. தேவன் விளையச் செய்தாலும் நமக்கென்று கடமை கொடுத்திருக்கிறார் நடுவதும் நீர்பாய்ச்சுவதும் நமது வேலை இதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் செடியை போய் ஆட்டாமல் இருந்தால் சரி.. உங்களுடைய வீண்வாதங்களால் யாருக்காவது ஆவிக்குரிய பிரயோஜனம் உள்ளது என்று நிருபியுங்கள் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் நான் ஒரு பழமொழி சொன்னதற்கு தங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே அதை குறைப்பதுதான் நாம் அடைகின்ற ஆவிக்குரிய வளர்ச்சி.சிறப்பு தினங்களில் மற்றவரை வாழ்த்தாமல் இருந்தால் அதை நீங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்னவென்று கூறுவது.... நான் இங்கே பின்னூட்டம் எழுதியது யெனவ ஜன தளத்தில் எழுதினால் எங்கள் கருத்துக்கள் சரியாக வெளிப்படும் என்பதால்தான் அப்படியில்லையெனில்
  • Gnana Piragasam
    ‎//நான் ஒரு பழமொழி சொன்னதற்கு தங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே அதை குறைப்பதுதான் நாம் அடைகின்ற ஆவிக்குரிய வளர்ச்சி.//

    தம்பீ செல்வின், உங்கள் பதிவை விமர்சித்து ஒரே ஒரு பதிவு, அதிலும் ஒரே ஒரு பழமொழி மட்டும் சொல்லி விவாதம் வைத்துள்ளேன். அதைக்கூட தாங்க முடியாத நீங்கள் நான் கோபப்பட்டதாக அபாண்டமாகச் சொல்லி எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சி பற்றி பாடம் எடுக்க வந்துவீட்டீர்கள். நீங்கள் என்னைவிட வயதில் எவ்வளவு சிறியவராக இருந்தாலும், ஆவிக்குரிய வளர்ச்சி என்ற பெயரில் நீங்கள் பாடம் சொல்லியுள்ளதால் உங்கள் பாடத்தை நான் மதிக்கிறேன், வரவேற்கிறேன்.

    ஆகிலும் தொடக்கத்திலிருந்தே என் மீது காழ்ப்புணர்ச்சியையே கொட்டிவரும் உங்களுக்கு நான் எத்தனை தாழ்மையாக எழுதினாலும் அது உங்களுக்குக் கோபமான பதிவாகத்தான் தெரியும். I can do nothing for that brother.

    தொடக்கத்தில் நீங்கள் எனது விவாதத்தை பைத்தியக்காரத்தனமானது என்றீர்கள்; அத்தோடு சில பரியாசங்களையும் செய்திருந்தீர்கள். அதற்குப் பதிலாக நான் ஒரு வசனத்தை மட்டுமே பதித்தேன். பின்னர் அடுத்த பதிவில் “நான் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதாகக்” குற்றஞ்சாட்டி, ஆவிக்குரிய வாழ்வுக்குப் பிரயோஜனமான கட்டுரை பதிக்கும்படி கட்டளையிட்டீர்கள். அப்போதுகூட “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமாயுள்ளது” எனும் வசனத்தை நான் பதித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல், எனது கட்டுரைகள் ஆவிக்குரிய வாழ்வுக்குப் பயனுள்ளதுதான் என்பதை எடுத்துக்காட்டும்படி ஆமோசின் வசனங்களை எடுத்துக் காட்டினேன். குறிப்பாக “நீதி, நியாயத்தை வலியுறுத்துவதே எனது நோக்கம்” என்பதைக் காட்டும்படி நீதி நியாயம் சம்பந்தமான ஒரு வசனத்தை 3 முறை காட்டியிருந்தேன்.

    அப்போதும் உங்கள் மண்டையில் அது ஏறவில்லை. வசனம் மட்டுமே அடங்கின என் பதிவுக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாத நிலையில், “வசனத்தை வைத்து பதில் எழுத வேண்டாம்” எனக் கட்டளையிட்டீர்கள். நானும் உங்களுக்கு எதிராகப் பதிவு எதுவும் தராமல் இருந்தேன். ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளைத் தந்த நீங்கள், ஒரு பதிவில் விவாத நாகரீகத்தை மீறி, எனது வயதின் அடிப்படையில் உலகத்தானின் ஒரு பழமொழியைச் சொல்லி என்னை மட்டந்தட்டினீர்கள். நானும் அதே உலகத்தானின் பழமொழியைப் பதிலாகத்தந்து இதெல்லாம் நமக்கு வேண்டாம், வேதாகமத்தை வைத்து விவாதிப்போம் என்றேன்.

    நீங்களோ நான் கோபப்பட்டதாக அபாண்டமாகச் சொல்லி ஆவிக்குரிய ஒரு போதனையையும் தந்துள்ளீர்கள், தங்கள் போதனைக்கு மிக்க நன்றி.

    நான் ஏற்கனவே சொல்ல நினைத்த வசனத்தை தற்போது கூறுகிறேன்.

    அப். 5:29 மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

    எனவே தேவன் எனக்கு என்ன சொல்லச் சொல்கிறாரோ அதை அப்படியே செய்வதுதான் என் வேலையேயொழிய, அற்ப மனுஷர் ஆட்டுகிற ஆட்டத்துக்கெல்லாம் ஆடுவது என் வேலையல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
  • Gnana Piragasam
    ‎//இருக்கும் செடியை போய் ஆட்டாமல் இருந்தால் சரி.. //

    செடியா? என் கண்களுக்கு நிறைய மரங்கள் தான் தெரிகின்றன. அதுவும் நல்ல கனிகொடாமல் கெட்ட கனி கொடுக்கும் மரங்கள். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் தேவன் தந்த பணத்தை கரியாக்குவதன் மூலம் கெட்ட கனி கொடுக்கும் மரங்களைத்தான் காண்கிறேன். ஏதோ என்னாலியன்ற சில வார்த்தைகளைச் சொல்லி அதன் மூலம் இந்த மரங்கள் நல்ல கனி கொடுக்கும் மரங்களாக மாறினால், நாளைக்கு இந்த மரங்களெல்லாம் வெட்டப்படாமலும் அக்கினியில் போடப்படாமலும் தப்பிக்குமே என்ற எண்ணத்தில் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன்.

    தெரியாமல்தான் கேட்கிறேன் தம்பீ, நீங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடினால்/கொண்டாடாவிட்டால் எனக்கு என்ன லாபம்/நஷ்டம்? தேவன் தந்த அறிவைப் பயன்படுத்தி சற்று சிந்தியுங்கள் தம்பீ.
  • Selwyn Joyson கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் கனியற்றவர்கள் என்பதுபோன்ற கருத்தை மறுக்கிறேன் மேலும் இதைக்குறித்து எழுத விரும்பவில்லை இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை அவர் வரும் நாளில் கனிகொடுக்கும் மரங்கள் அறியப்படும்.... மேலும் தங்களது குறிப்பிட்ட கருத்தை எதிர்த்து எனது கருத்துக்களை பதிவுசெய்த முறைகளில் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.happy new year
  • Gnana Piragasam
    ‎//கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் கனியற்றவர்கள் என்பதுபோன்ற கருத்தை மறுக்கிறேன்.//

    சரி, உங்கள் இஷ்டம்.

    //மேலும் இதைக்குறித்து எழுத விரும்பவில்லை//

    Good decision.

    //இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.//

    அதனால்தான் Good decision என்றேன்.

    //அவர் வரும் நாளில் கனிகொடுக்கும் மரங்கள் அறியப்படும்.... //

    Correct.

    //மேலும் தங்களது குறிப்பிட்ட கருத்தை எதிர்த்து எனது கருத்துக்களை பதிவுசெய்த முறைகளில் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.//

    இது பண்பட்ட மனது, அத்தனை எளிதில் புண்படாது. Anyhow, நன்றி.

    //happy new year//

    கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி. 4:4).
  • Yauwana Janam
    Gnana Piragasam //இயேசுவை ஆராதிக்கச் சொல்லும் வசனம் இருக்கிறதா, இல்லையா? நெஞ்சில் திறமிருந்தால் நேரடியாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.//

    ஐயா நீங்க நன்கு வேதத்தை ஆராய்ந்து அறிந்தவர் என்ற நம்பிக்கையிலேயே அதிக வசனங்களை நான் பதிக்கிறதில்லை.ஆனாலும் நீங்கள் இத்தனை சாதாரணமாக ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று அழைப்பது போல சவால் விடுவதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    நான் கேட்கிறேன்,தூதன் கூட தன்னை விழுந்து பணிவதைத் தடுக்கும் வசனம் இருக்கிறதே, அப்படியானால் இயேசுவை ஆராதிக்கக்கூடாது என்ற வசனம் இருந்தால் தாருங்களேன்.

    இயேசுவை மட்டுமல்ல,தேவனும் தம்மை ஆராதிக்கச் சொன்ன வசனங்களைக் காட்டிலும் அன்புகூறச் சொன்ன வசனங்களே அதிகம்.அதன்படி நான் இயேசுவின் அன்புகூறலாமா ? ஏனெனில் தூதனில் அன்புகூறவோ மரித்த ஒரு அப்போஸ்தலன் மீது அன்புகூறவோ நமக்கு கட்டளையில்லை.ஆனால் ஆண்டவர் பலமுறை ”என்னிடத்தில் அன்பாயிருங்கள்,”என்று சொல்லுகிறார்.

    இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்..?
  • Yauwana Janam
    Selwyn Joyson //தங்களது குறிப்பிட்ட கருத்தை எதிர்த்து எனது கருத்துக்களை பதிவுசெய்த முறைகளில் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.happy new year //

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் எனக்கு பிரியமான நண்பர் செல்வின் அவர்களே,
    ாங்கள் தங்கள் கைப்பேசியின் மூலமே இத்தனை நீளமான பின்னூட்டங்களை மிகுந்த சிரமத்துடன் எழுதி பதிக்கும் வைராக்கியம் பாராட்டுக்குரியது.இதனால் உங்கள் கைப்பேசியின் கீபேட் கூட பழுதுபட்டிருப்பது குறித்து அறிந்து மிகவும் வருந்தினேன்.உங்களைப் போன்ற அர்ப்பண இருதயமுள்ள இளைஞர்கள் இன்னும் எழும்பவேண்டுமாய் ஜெபிக்கிறேன். வாழ்த்துக்கள்.
  • Jesintha Paul
    உங்கள போல தெளிவான அறிவு அதாவது வேதத்தை பற்றிய அறிவு எல்லோருக்கும் இருந்தால் யாருமே பிழையான கருத்துக்களை கூற மாட்டார்கள். மதங்களை தான் குழப்புரார்கள் என்று நினைத்தால் மனங்களையும் சேர்த்தே குழப்புரார்கள் அதுவும் ஒரு சில கிறிஸ்தவர்கள் வருந்த வேண்டிய விடயம் . யாருமே பூரனமானவங்க கிடையாது .ஆனாலும் எதாவது ஒரு விடயத்தை எழுதும் போது அதை ஜனங்கள் வாசிக்க முன்பு, எழுதியவர் ஒன்றுக்கு மூன்று தடவை வாசித்து எழுதுவது தான் அழகு அதுவும் வேதத்தைபற்றி எழுதும் போது விஷேசம் . நம்மை உண்டாக்கின கர்த்தர் ஒவ்வொருவரையும் ஆளுகை செய்வாராக
  • Gnana Piragasam ‎//இயேசுவை ஆராதிக்கக்கூடாது என்ற வசனம் இருந்தால் தாருங்களேன்.//

    திரு.யௌவன ஜனமே! இப்படி நீங்கள் கேட்பது வேடிக்கையாக உள்ளது.

    இயேசுவை ஆராதிக்கக்கூடாது என்ற வசனம் வேதாகமத்தில் இல்லைதான். இதிலிருந்து நீங்கள் சொல்ல வருவது என்ன? இயேசுவை ஆராதிக்கலாம் என்றா?

    சரி, பெற்றோரை ஆராதிக்கக்கூடாது என்றும் வசனம் இல்லை; அப்படியானால் பெற்றோரை ஆராதிக்கலாம் என்கிறீர்களா?
  • Gnana Piragasam ‎//இயேசுவை மட்டுமல்ல,தேவனும் தம்மை ஆராதிக்கச் சொன்ன வசனங்களைக் காட்டிலும் அன்புகூறச் சொன்ன வசனங்களே அதிகம். அதன்படி நான் இயேசுவின் அன்புகூறலாமா ? ஏனெனில் தூதனில் அன்புகூறவோ மரித்த ஒரு அப்போஸ்தலன் மீது அன்புகூறவோ நமக்கு கட்டளையில்லை. ஆனால் ஆண்டவர் பலமுறை ”என்னிடத்தில் அன்பாயிருங்கள்,”என்று சொல்லுகிறார்.//

    இதைத்தானே ஐயா ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லி வருகிறேன்? நீங்களும் உங்களைப் போன்ற பலரும்தான் அதைப் புரிந்துகொள்ளாமல் ஆராதனை, தொழுகை செய்வதைப் பற்றியே கூறிவருகிறீர்கள்.

    என்னிடத்தில் அன்பாயிருங்கள் என்று சொன்ன இயேசு, அந்த அன்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

    யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

    மிக எளிமையாகச் சொல்லப்பட்டதைப் புரிந்துகொள்ளாமல் ஆராதனை/தொழுகை என்று சொல்லி எல்லோரையும் குழப்பிக்கொண்டிருக்கிறோம். இயேசு சொன்ன மற்றொரு வசனத்தையும் உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். எல்லாம் உங்களுக்கும் நிறைய பேருக்கும் நன்கு தெரிந்த வசனம்தான்; ஆனாலும் ஏதோவெரு பிடியில் சிக்குண்டவர்களைப்போல் நடக்கிறீர்கள்.

    மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

    இதைச் சொன்னால், பிதாவின் சித்தம் என்ன என்ற கேள்வியைக் கேட்டு, இயேசுவை ஆராதிப்பதுதான் பிதாவின் சித்தம் என்ற முடிவுக்கு வருவீர்கள் (TCS-ல் எழுதியதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).

    இயேசுவை கர்த்தாவே கர்த்தாவே என அழைப்பதுகூட முக்கியமல்ல என்ற கருத்தில் மத்தேயு 7:21 கூறப்பட்டிருக்க, நீங்களோ அதே வசனத்தின் அடிப்படையில், இயேசுவை ஆராதிக்கவேண்டும் எனச் சொல்கிறீர்கள். இந்நிலையில் என்ன சொல்லித்தான் உங்களுக்குப் புரியவைப்பது?
    about an hour ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Yauwana Janam
    நான் குறிப்பிட்டிருந்த முக்கியமான வசனங்களையே உப்புசப்பில்லாதது என்று நீங்கள் ஒதுக்கிவிட்டபிறகு உங்களுடன் எந்த அடிப்படையில் விவாதிப்பது என்றே புரியவில்லை.

    மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

    மேற்காணும் வசனத்திலுள்ள கர்த்தாவே எனும் சொல் இயேசுவானருக்குரியதல்ல என்று தீர்க்கமாக சொல்லியிருக்க அவரை கர்த்தர் என்று விளித்தோர் அனைவருமே குற்றவாளிகள் ஆகிறார்கள்.உங்கள் பார்வையில் நாங்களெல்லாம் தேவ தூஷணம் செய்வோர்.நீங்கள் ஒருவேளை ஒரு யூத மதகுருவாக இருந்தால் எங்களைக் கல்லெறியக் கட்டளையிடுவீர்கள் அல்லது ரோம அதிகாரியாக இருந்தால் சிலுவையில் அறைவீர்கள்.ஏதோ தேவ கிருபையால் நாங்களெல்லாம் தப்பியிருக்கிறோம் அல்லவா ? தயவுசெய்து இனியும் வசனத்தைக் குறிப்பிட்டு எழுதி ஒரே நேரத்தில் இரண்டு பாவத்தை செய்யாதீர்கள் ஐயா..?

    ஏனெனில் நீங்கள் வசனத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களை அதினிடத்திலிருந்து பிரிக்கும் பாவத்துடன் வசனத்தை தவறாக வியாக்கியானம் செய்யும் துணிகரத்தையும் மேற்கொள்ளுகிறீர்களே..!
  • Gnana Piragasam ‎//நான் குறிப்பிட்டிருந்த முக்கியமான வசனங்களையே உப்புசப்பில்லாதது என்று நீங்கள் ஒதுக்கிவிட்டபிறகு...//

    Mind your words Mr.Yauwana Janam. வசனங்களையா நான் சொன்னேன்? உங்கள் வாதத்தைத்தான் சொன்னேன். வசனங்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்தினால்தான் வசனத்தின் வல்லமை சரியாக விளங்கும்.

    சாத்தானுங்கூட வசனத்தைப் பயன்படுத்தினான். ஆனால் அவனது நோக்கம் விஷமத்தனமானதாக இருந்தது. இதனால் வசனம் விஷமத்தனமானதாக ஆகிவிடுமா?

    அதுபோலத்தான் நீங்களும் வசனத்தைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சரியாகப் பயன்படுத்தினால் அது வல்லமையுள்ளதாக இருக்கும். சும்மா சம்பந்தமில்லாமல் பயன்படுத்தினால் அது உங்கள் வாதத்தை உப்பச்சப்பு இல்லாததாக்கிவிடும்.

    இயேசுவை ஆராதிக்க நான் மறுக்கிறேன் என்பதுதான் உங்கள் குற்றச்சாட்டு. அப்படியானால் இயேசுவை ஆராதிக்கச் சொல்லும் வசனத்தைச் சொல்வதுதான் உப்புச்சப்புள்ளதாக இருக்கும்.
  • Gnana Piragasam ‎//மேற்காணும் வசனத்திலுள்ள கர்த்தாவே எனும் சொல் இயேசுவானருக்குரியதல்ல என்று தீர்க்கமாக சொல்லியிருக்க ...//

    யார் அப்படிச் சொன்னது?

    //உங்கள் பார்வையில் நாங்களெல்லாம் தேவ தூஷணம் செய்வோர்.//

    இப்படி தேவையில்லாமல் எதையாவது சொல்வதைத்தான் உப்புச்சப்பு இல்லாதது என்கிறேன்.

    //நீங்கள் ஒருவேளை ஒரு யூத மதகுருவாக இருந்தால் எங்களைக் கல்லெறியக் கட்டளையிடுவீர்கள் அல்லது ரோம அதிகாரியாக இருந்தால் சிலுவையில் அறைவீர்கள்.//

    கற்பனை உலகத்தைவிட்டு வெளியே வந்து உருப்படியான வாதத்தை வையுங்கள். (அது உங்களால் முடியவில்லை என்பதால்தானே எதையாவது சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்)

    //தயவுசெய்து இனியும் வசனத்தைக் குறிப்பிட்டு எழுதி ஒரே நேரத்தில் இரண்டு பாவத்தை செய்யாதீர்கள் ஐயா..?

    ஏனெனில் நீங்கள் வசனத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களை அதினிடத்திலிருந்து பிரிக்கும் பாவத்துடன் வசனத்தை தவறாக வியாக்கியானம் செய்யும் துணிகரத்தையும் மேற்கொள்ளுகிறீர்களே..!//

    மீண்டும் மீண்டும் சம்பந்தமில்லாத எதையாவது சொல்லி வெட்டிப்பேச்சு பேசுகிறீர்கள். நான் பாவம் செய்யக்கூடாது என்பதில் உங்களுக்குள்ள கரிசனையை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். ஆனால் எது பாவம் என்பதை அறியாத நிலையிலுள்ள உங்களைப் பார்க்கத்தான் பாவமாக உள்ளது.
  • Gnana Piragasam மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

    மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடியவகையில் நேரடியாக இயேசு சொன்ன இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதில் ஏன் இத்தனை தடுமாற்றம் Yauwana Janam அவர்களே? இவ்வசனம் நீங்கள் நம்பியுள்ள கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் எதிராக இருப்பதாலா? அல்லது மெய்யாகவே வசனத்தைப் புரிந்துகொள்ளும் ஞானம் உங்களுக்கு இல்லாததாலா?

    நீங்களும் உங்களைப் போன்றவர்களும் புரிந்துகொள்ளத்தக்கதாக இவ்வசனத்தை சற்று விளக்கிக் கூறுகிறேன். திறந்த மனதுடன் படித்து, புரிகிறதா எனப் பாருங்கள்.

    இவ்வசனத்தில் ஜனங்களின் 2 விதமான நடவடிக்கைகளை இயேசு சொல்கிறார். 1. பிதாவின் சித்தப்படி செய்வது, 2. இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்வது.

    ஜனங்களில் சிலர் இந்த 2 நடவடிக்கைகளையும் செய்பவராக இருக்கலாம், வேறு சிலர் ஒன்றைச் செய்து அடுத்ததைச் செய்யாமல் இருக்கலாம், வேறு சிலர் இரண்டையுமே செய்யாமல் இருக்கலாம். இதன்படி ஜனங்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. பிதாவின் சித்தப்படி செய்பவர்கள், அத்தோடு இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்றும் சொல்பவர்கள்.

    2. பிதாவின் சித்தப்படி செய்பவர்கள், ஆனால் இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லாதவர்கள்.

    3. இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்பவர்கள், ஆனால் பிதாவின் சித்தப்படி செய்யாதவர்கள்.

    4. பிதாவின் சித்தப்படியும் செய்யாதவர்கள், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்றும் சொல்லாதவர்கள்.

    இந்த நான்கு பிரிவுக்குள் உலகமக்கள் அனைவரையும் அடக்கிவிடலாம்.

    முதல் 2 பிரிவினரும் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிப்பார்கள், கடைசி 2 பிரிவினரும் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிக்க மாட்டார்கள் என்பதுதான் இயேசுவின் திட்டவட்டமான அறிவிப்பு or *வாக்குத்தத்தம் + எச்சரிக்கை*.

    இந்த விளக்கத்தில் இன்னும் சொல்லவேண்டிய விஷயங்கள் சிலவுண்டு. தேவைப்பட்டால் கேளுங்கள், சொல்கிறேன்.

    இப்போது சொல்லுங்கள்: இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்வதும் அவரை ஆராதனை செய்வதும் முக்கியமா? அல்லது பிதாவின் சித்தப்படி செய்வது முக்கியமா? என்று.
    7 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam ஜனங்கள் இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லும் நடவடிக்கை பற்றி ஒரு சிறிய விளக்கம்:

    இயேசு கர்த்தர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இயேசுவை மகிமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, ஓயாமல் “கர்த்தாவே கர்த்தாவே” எனச் சொல்வதைப் பற்றித்தான் இயேசு சொல்கிறார். அதாவது இயேவை கர்த்தர் என விசுவாசிப்பதோ அதை அறிக்கை செய்வதோ தவறு அல்ல.

    ஆனால் இயேசுவை நோக்கி ஓயாமல் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, பிதாவின் சித்தப்படி செய்யாதிருப்பதுதான் தவறு.
    a few seconds ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    திரு.யௌவன ஜனமே! இயேசுவை ஆராதனை செய்ய நான் மறுப்பதாகச் சொல்லி இக்கட்டுரையை நீங்கள் வரைந்ததன் பின்னணி, யாருக்கு ஆராதனை எனும் தலைப்பிலான எனது கட்டுரையே.

    நல்லது, யாருக்கு ஆராதனை என்பது பற்றிய எனது கருத்தின் அடிப்படையில், இத்தனை பெரிய கட்டுரையும் வரைந்து, அதில் இத்தனை பின்னூட்டங்களும் இட்டு வருகிறீர்களே, ஒரு தடவையாவது “யாருக்கு ஆராதனை” எனும் எனது கட்டுரையில் ஒரு வரி அல்லது ஒரு பகுதியை அப்படியே எடுத்துப் போட்டு, இவ்வரி இந்த வசனத்தின்படி தவறு எனச் சொல்லியிருக்கிறீர்களா, அல்லது இங்கு பின்னூட்டமிட்டுள்ள வேறு யாரும் தான் சொல்லியுள்ளார்களா?

    சும்மா சும்மா “நான் அப்படி நான் இப்படி” எனச் சொல்லி என்னை விமர்சிப்பதில்தான் வருகிற/போகிறவர்களும் குறியாயுள்ளனர், நீங்களும் குறியாயுள்ளீர்கள். இதைத் தவிர வேறு உருப்படியான எதிர்வாதத்தை யாரும் வைக்கவில்லையே!

    எல்லாம் உங்கள் இயலாமையைத்தான் காட்டுகிறது என நான் உறுதியாகச் சொல்வேன்.
  • Yauwana Janam
    ‎// இயேசுவை ஆராதிக்க நான் மறுக்கிறேன் என்பதுதான் உங்கள் குற்றச்சாட்டு. அப்படியானால் இயேசுவை ஆராதிக்கச் சொல்லும் வசனத்தைச் சொல்வதுதான் உப்புச்சப்புள்ளதாக இருக்கும். //

    இயேசுவானவரே ஆராதிக்கச் சொன்னவரைவிட்டு இயேசுவானவரையே ஆராதிக்கிறோம் என்பது உங்கள் குற்றச்சாட்டு.அப்படியானால் இயேசுவானவரை ஆராதிக்கக்கூடாது என்று சொல்லும் வசனத்தைச் சொல்வதுதான் உலகத்துக்கு உப்பாகவும் சாரமுள்ளதாகவும் இருக்க உதவும்.

    ஏனெனில் ஒவ்வொருவருடைய ஸ்தானமும் உரிமையும் கடமையும் வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இயேசுவானவர் மாத்திரமே வேதம் முழுவதும் பேசப்படும் வேத நாயகமாகவும் உலகம் முழுவதும் பேசப்படும் சரித்திர புருஷனாகவும் இருக்கிறார்.மூன்று உலகங்களிலும் அறியப்பட்ட பெரிய (யெகோவா) நாமத்தையுடையவராகவும் இருக்கிறார்.தூதர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்.மேலும் அவர் டெமி காட் அல்ல,கோ ஈக்வல் டு ஆல்மைட்டி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

    இது பிதாவே சாட்சிகொடுத்து அங்கீகரித்த கிருபையின் நாமம்;எனவே ஆயிரங் கைகள் மறைத்துநின்றாலும் ஆதவனான இயேசுவானவரின் புகழை மறைக்க ஒருவனாலும் கூடாது.ராஜ்யங்களும் சாம்ராஜ்யங்களும் அஞ்சி நடுங்கிய வல்ல நாமம்;அண்ட சாராசரங்களை வார்த்தையினால் சிருஷ்டித்த பரிசுத்த நாமம்;மரணத்தையும் பாதாளத்தையும் வென்ற வீரத் திருநாமம்...

    http://www.youtube.com/watch?v=S-ICaox08TE
    www.youtube.com
    Yesu Yentra Naamathirku (இயேசு என்ற நாமத்திற்கு) very wonderful Old Tamil Keerthanai song..
  • Yauwana Janam http://tamilchristianworship.com/praiselyrics/thuthi2.html
    www.tamilchristianworship.com
    இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம்
  • Yauwana Janam
    Gnana Piragasam
    // 1. பிதாவின் சித்தப்படி செய்பவர்கள், அத்தோடு இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்றும் சொல்பவர்கள்.

    2. பிதாவின் சித்தப்படி செய்பவர்கள், ஆனால் இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லாதவர்கள்.

    3. இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்பவர்கள், ஆனால் பிதாவின் சித்தப்படி செய்யாதவர்கள்.

    4. பிதாவின் சித்தப்படியும் செய்யாதவர்கள், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்றும் சொல்லாதவர்கள்.

    இந்த நான்கு பிரிவுக்குள் உலகமக்கள் அனைவரையும் அடக்கிவிடலாம்.

    முதல் 2 பிரிவினரும் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிப்பார்கள், கடைசி 2 பிரிவினரும் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிக்க மாட்டார்கள் என்பதுதான் இயேசுவின் திட்டவட்டமான அறிவிப்பு or *வாக்குத்தத்தம் + எச்சரிக்கை*.//

    முதல் 2 பிரிவினரும் நிச்சயமாக பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று எப்படி அத்தனை தைரியமாகச் சொல்லுகிறீர்கள் ? அதற்கு மாத்திரம் வசனம் இருக்கிறதா? எப்படியோ முதல் இடத்தில் இயேசுவை கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிட்டு சொல்லுவோர்க்கு இடம் கொடுத்தீர்களே, தப்பித்தீர்கள். இதற்காகவே நீங்கள் ஒருவேளை (???) ராஜ்யத்தில் காணப்படலாம்..!

    ஆனாலும் இரண்டாவது இடத்திலுள்ள பிதாவின் சித்தப்படி செய்தும் இயேசுவைப் புறக்கணித்துவிட்டு பிதாவை நெருங்க முயற்சிப்பவர்கள் அக்கிரம செய்கைக்காரரே. எப்படியெனில் வாசலில் அம்மா,தாயே என்று அழைப்பவனும் உள்ளே இருந்து தன்னைப் பெற்றெடுத்த தாயை அம்மா என்று அழைப்பவனுக்கும் வித்தியாசம் உண்டல்லவா ?

    பிதாவின் சித்தம் செய்வோரிலும் பிதாவை அறிந்து (குமாரனை அறியாமலும் அறிக்கையிடாமலும்) அவருடைய சித்தம் செய்வோர் (நியாயப்பிரமாணம் என்றும் வைத்துக்கொள்ளுவோம்..) பிதாவை அறியாமலே சுபாவத்தின்படி பிதாவின் சித்தம் செய்தவர்கள். “செய்வோர்” என்று இறந்த காலத்தில் சொல்லுவதைவிட இரட்சிப்பு வெளிப்பட்டுவிட்ட படியினால் ”செய்தோர்” என்று சொல்லலாம்.அந்த வாசல் மூடப்பட்டுவிட்டது.இனி இயேசுவின் வழியாக மாத்திரமே ஒருவன் இரட்சிக்கப்படமுடியும் என்று அறிகிறோம்.

    பிதாவை அறிந்து அவருடைய சித்தம் செய்தோருக்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் அறியாமலே அவருடைய சித்தம் செய்தோருக்கு புத்தர் போன்ற மகான்களையும் குறிப்பிடலாம்.(உதாரணத்துக்கு மாத்திரமே.) ஆனாலும் இயேசுவானவர் வெளிப்பட்ட பிறகும் சொந்த மார்க்கங்களை ஸ்தாபித்த முகமது மற்றும் காந்திஜி போன்ற ஞானிகளைக் குறித்து ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

    (தொடருகிறது...)
  • Yauwana Janam
    இறுதியாக பிதாவை அறிந்தும் சித்தம் செய்யாதோர் பிதாவை அறியாமலும் சித்தம் செய்யாதோர் பிதாவை அறியாததால் சித்தம் செய்யாதோர் இப்படி இன்னும் சில பிரிவுகளும் இருக்கலாம்.

    ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி நியாயத்தீர்ப்பு இருக்கிறது.நம்முடைய நோக்கமும் பரலோக தேவனால் தரப்பட்டதுமான அரிய வாய்ப்பு இவையெதுவும் இல்லை.

    அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

    மேற்கண்ட வசனத்தின்படியும்

    யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

    எனும் வசனத்தின்படியும் இயேசுவின் வழியாகச் செல்லுவோர் அனைத்து வாசல்களையும் கடந்து சிங்காசத்தின் அருகில் நிற்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்று விசுவாசிக்கிறோம்.

    சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

    யாருக்கு புரிகிறதோ இல்லையோ..?!
  • Yauwana Janam
    Gnana Piragasam
    //உங்கள் பார்வையில் நாங்களெல்லாம் தேவ தூஷணம் செய்வோர்.//

    இப்படி தேவையில்லாமல் எதையாவது சொல்வதைத்தான் உப்புச்சப்பு இல்லாதது என்கிறேன்.//

    ஐயா சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ? ஃபுல் டைட்ல இருப்பவனுக்கு உப்பு,புளிப்பு,காரம் இப்படி எந்த ருசியுமே தெரியாதுங்க...அந்த அளவுக்கு போதையில நாக்கு தடிச்சு போயிரும்.சாராயம் குடிப்பவன் தொட்டுக்க ஊறுகாய் கேட்பானே,சினிமாவில அந்த காலத்தில் பார்த்தது..!

    இப்படியே கள்ள உபதேசமும்... உங்க வாய்க்கு ருசியாக சமைக்க எங்களுக்கு தெரியலீங்க..!
  • John Edward
    ‎//இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?//

    ஏன் இல்லை?

    மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

    யாரிந்த தேவனாகிய கர்த்தர்? அவர் பிதாவாகிய தேவன் மட்டும்தான் என்று திரு. ஞான பிரகாசம் அவர்களுக்கு எப்படி தெரியும்?

    வேதம் சொல்லுகிறது ஒரே ஒரு கர்த்தர் அந்த கர்த்தர் இயேசு கிறிஸ்துவே! அப்படி என்றால் இந்த வசனம் இயேசுவை தொழுது கொள்ள சொல்லுகிறது என்று தானே பொருள்?

    எபேசியர் 4:5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

    I கொரிந்தியர் 8:6 ....இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    2 hours ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?
  • Gnana Piragasam இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?
  • Gnana Piragasam இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?
    a few seconds ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • John Edward இயேசு நல்லவர் என்று கூட வசனம் இல்லை "கர்த்தர் நல்லவர்" என்றுதான் இருக்கிறது அப்போ இயேசு நல்லவர் இல்லையா அய்யா?

    தேவனாகிய கர்த்தர் என்பது பிதா மட்டுமே என்று எப்படி சொல்லுகிறீர்கள்?
  • Yauwana Janam
    John Edward // இயேசு நல்லவர் என்று கூட வசனம் இல்லை "கர்த்தர் நல்லவர்" என்றுதான் இருக்கிறது அப்போ இயேசு நல்லவர் இல்லையா அய்யா? தேவனாகிய கர்த்தர் என்பது பிதா மட்டுமே என்று எப்படி சொல்லுகிறீர்கள்? //

    அன்பு நண்பர் ஜாண் அவர்களே,தங்கள் வலுவான விவாதங்களில் எத்தனையோ முறை தோற்றுப்போன (மேசியாவின்) எதிரிகள் தங்கள் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் அதே வாதத்தை முன்வைக்கிறார்கள். நீங்களும் சிரமம் பாராது எழுதியதையே மீண்டும் மீண்டும் பொறுமையாக எழுதுவது பாராட்டுக்குரியது.
  • Selwyn Joyson yj தளத்தார் என்னை மன்னிக்கவும் இயேசுவானவர் தொழுகைக்கு பாத்திரர் அல்ல என்ற கருத்துடையவரோடு நான் வீணாக பண்டிகை ஆசரிப்பு குறித்து வாக்குவாதம் செய்து விட்டேன்.... இயேசு தொழுகைக்குரியவரல்ல என்று கூறுவதால் அவர் பொய்யனும் அந்திகிறிஸ்துவுமாயிருக்குறார்.. வஞ்சகத்தால் நிறைந்து பிறரை விசுவாசத்தை விட்டு விலகத்தக்கதாக வஞ்சிக்க திரியும் இவர்களை கர்த்தர் விசாரிப்பாராக.... 1யோவான் 2:18,22,23 3:3
  • Gnana Piragasam இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?
  • Gnana Piragasam
    இயேசுவை ஆராதனை செய்ய மறுப்பவன் என என்னைக் குற்றஞ்சாட்டுகிற அதிமேதாவிகள் யாராயிருந்தாலும், முடிந்தால் இயேசுவை ஆராதனை செய்யச்சொல்லும் வசனத்தைக் காட்டக்கடவர்கள்.

    அப்படி அவர்களால் காட்ட முடியவில்லையெனில், அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக தருகிற வேறெந்த வாதமும் அவர்களின் இயலாமையைத்தான் காட்டும்.

    இது திரு.யௌவன ஜனம் அவர்களின் திரி. இதில் இனி யார் என்னைப் பற்றி என்ன சொன்னாலும்

    “அது கையாலாகாதவர்களின் கூற்றாகத்தான் கருதப்படும், அதுதான் உண்மையுங்கூட”.

    இதற்கு மேல் இத்திரியில் நான் எழுதி, இவர்களில் யாரும் அறிவைப் பெறப்போவதுமில்லை, இவர்கள் கண்கள் திறக்கப்படப்போவதுமில்லை.

    மத்தேயு 15:13 இயேசு பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

    “14 அவர்களை விட்டுவிடுங்கள்,”

    அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

    இயேசு சொன்னபடியே அவர்களை விட்டுவிடுகிறேன்.

    மத்தேயு 13:14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். 15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக,

    “அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;”

    காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

    Mr.Yauwana Janam, I don't want to be a friend who is accusing baseless charge against me and unable to prove it.

    So I cancel the FB friendship with you, and say Good Bye.

    I pray the Heavenly Father through my Lord Jesus Christ to open your eyes and your fellow people's eyes.

    ரோமர் 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

    என்ற வசனத்தின்படியே உங்களை விட்டு விலகுகிறேன், உங்களை விலக்குகிறேன்.
    3 minutes ago · Like


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Yauwana Janam Gnana Piragasam ஐயா, விவாதம் என்பதன் முக்கிய நோக்கமே ஒருவருடைய கருத்தை ஒருவர் பரிசீலிக்கவேண்டும் என்பதே.ஆனால் தாங்கள் ஏற்கனவே இறுதிசெய்துகொண்டுவிட்ட காரியத்துக்குள் எல்லோரையும் கொண்டு சென்று திணிக்க முயற்சிக்கிறீர்கள். இது செருப்புக்கேற்ற காலை செய்வது போலாகும்.சிறுவயதில் இப்படியே கணக்கு பாடத்தில் பெலவீனமான மாணவர்கள் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இருக்கும் விடையை எடுத்து எழுதிவிட்டு அதனை நிரூபிக்க படாதபாடுபடுவார்கள்.அதுபோலவே உங்கள் செயலும் இருக்கிறது.

    நீங்கள் கூறும் அடிப்படையற்ற கூற்றுகளுக்கு நண்பர் ஜாண் போன்றவர்கள் வைக்கும் எதிர்வாதத்தை தாக்குபிடிக்கமுடியாமல் நீங்கள் ஓடுவதாகவே கருதவேண்டியதாகிறது.சற்று பொறுமையாக இருந்தீர்களானால் நாம் விவாதிக்கலாம்.ஆனால் ஒருபோதும் உங்கள் கருத்துக்கு எதிர்தரப்பினர் தலைவணங்கவேண்டும் என்று எண்ணுவது இயல்புக்கு மாறானதாகும்.எல்லாமே தனித்தனி கொள்கைகளாக கிறிஸ்தவ சமுதாயத்தில் ஊடுறுவி நிலைத்துவிட்ட பிறகு நாம் வாதிடுவதும் விட்டு விலகுவதும் வீணான முயற்சியாகும்.இவையெல்லாமே அந்தந்த காலகட்டத்தில் வந்துபோகும் மக்களுக்காகவே என்பதை அறிந்தீர்களானால் உணர்ச்சிவயப்படமாட்டீர்கள்.

    பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும்.நீங்கள் அண்மையில் எழும்பி எதையோ கற்றுக்கொண்டு உலகப் பிரகாரமான தர்க்க சாஸ்திர சூட்சமங்களுடன்கூடிய விவாதங்களின் மூலம் அதனை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள்.இதில் நிச்சயம் வெற்றிபெறக்கூடும்.ஆனால் அதனால் ஒருபோதும் நாங்கள் அடைந்துள்ள ஆன்ம விடுதலையை உங்களால் வாக்களிக்கவேமுடியாது என்பதை அறியவேண்டுகிறேன்.

    கிறிஸ்தவம் என்பது விசுவாசத்தின் அடிப்படையில் செய்யப்படும் தீர்மானமேயன்றி தர்க்கத்தின் மூலம் அல்ல.அவ்வாறு நாங்களும் கேள்வி கேட்கத் துவங்கினால் ஆதியாகமம் ஒண்ணாம் அதிகாரத்தையே நம்மால் தாண்டிசெல்ல முடியாது.
  • Yauwana Janam அந்தி கிறிஸ்துவின் ஆவிகளின் உபதேசத்துக்கு எதிராக தனது முதுமையிலும் போராடிய அன்பின் அப்போஸ்தலனின் பெயரில் ஒருவர் வந்ததுமே அவரிடம் தாக்குபிடிக்கமுடியாமல் உலக ஞானமும் அதன் பிரகாசமும் மறைந்துவிட்டதே ஆச்சர்யம்தான்..!

    வாழ்த்துக்கள், John Edward
  • John Christopher John Edward
    //இயேசுவை ஆராதனை செய்யக்கடவர்கள் எனும் வார்த்தைகள் அடங்கிய வசனம் கிடைக்கவில்லையா?//

    ஏன் இல்லை?

    மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கி...றதே என்றார்.

    யாரிந்த தேவனாகிய கர்த்தர்? அவர் பிதாவாகிய தேவன் மட்டும்தான் என்று திரு. ஞான பிரகாசம் அவர்களுக்கு எப்படி தெரியும்?

    வேதம் சொல்லுகிறது ஒரே ஒரு கர்த்தர் அந்த கர்த்தர் இயேசு கிறிஸ்துவே! அப்படி என்றால் இந்த வசனம் இயேசுவை தொழுது கொள்ள சொல்லுகிறது என்று தானே பொருள்?

    எபேசியர் 4:5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

    I கொரிந்தியர் 8:6 ....இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
  • John Edward Thanks Bro.YJ for your encouragement. I am just a sojourner like you! It is the word of God which has the power to drive out the cults!

    எபிரெயர்:4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.எபிரெயர்:4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard