Face Book தளத்தில் Yauwana Janam எனும் புனைப் பெயரில் தற்போது தீவிர ஊழியம் செய்துவரும் ஓர் ஊழியர்(?), கடந்த காலங்களில் சில்சாம் எனும் புனைப்பெயரில் பெயரில் பல தளங்களில் ஊழியம்(?) செய்தவராவார். தனது உண்மையான பெயரை பகிரங்கமாக அறிவிக்காத இவர், இத்தளம் துவக்கப்பட்ட போது இதை விஷஜந்து என முகாந்தரமின்றி தூஷித்தவராவார்.
இவரது பிரதான தொழில் இத்தளம், இறைவன் தளம், மற்றும் கோவைபெரியன்ஸ் தளத்தை தரக்குறைவாக எழுதுவதுதான் என்பது அனைவரும் அறிந்ததே.
இவரது தரக்குறைவான எழுத்துக்களுக்கு திரித்துவவாதிகளின் மத்தியில் ஏக வரவேற்பு. குறிப்பாக TCS-ன் அற்புதராஜ், ராஜ்குமார், கொல்வின், ஜாண், ராபின், விஜயகுமார் போன்றவர்கள் இவரை வெகுவாக ஊக்கமளித்து வந்தனர்.
ஒரு காலகட்டத்தில் இவரது நடவடிக்கை எல்லை மீறிப்போனதால், இவரது எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்கப் போவதில்லை எனும் முடிவுக்கு வந்தேன். இப்படியாக சில காலம் சென்றது. பின்னர், அநேக நபர்கள் Face Book தளத்திற்குச் சென்றனர். அப்போது சில்சாமும் அங்கு சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனால் அங்கு ஏற்பட்ட ஒரு சலசலப்பால் இவரது கணக்கு முடக்கப்பட்டதென்றும், இவரது யௌவன ஜனம் தளத்தில் மூன்றாமவர் அத்துமீறி நுழைந்து தளப்பணியைக் கெடுத்ததாகவும் புகார் செய்தார்.
இப்புகாரை அவரது திரித்துவக் கூட்டாளிகளில் பலர் நம்பாததால், இவரைப் பொய்யர் என்று சொல்லி கிட்டத்தட்ட அனைவரும் குற்றஞ்சாட்டி இவரைத் தனிமைப்படுத்தினர். அவ்வேளையில் இவர் தந்த இவரது தன்னிலை விளக்கம் மிகவும் பரிதாபத்தைத் தூண்டுவதாக இருந்தது. தனது கூட்டாளிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு தனிமைப்படுத்த நிலையில் இருந்த இவரது தன்னிலை விளக்கம் உண்மையானதாக எனக்குத் தோன்றியது.
எனவே இவருடனான எனது கடந்தகால கசப்புகளை மறந்து, சிறுமைப்பட்டவனுக்கு நீதி செய்யுங்கள் எனும் வசனத்தின்படி (சங்.82:3), இந்த சில்சாம் சார்பாக நின்று அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன். நிலைமை சரியானபின் இவர் நம்மீது மீண்டும் பாய்வார் என்பது தெரிந்தபோதிலும், இவருக்கு நான் ஆதரவளித்தேன். ஏனெனில் குறிப்பிட்ட அந்த விஷயத்தில் அவர் பொய் சொல்பவராவோ, அல்லது மற்ற அனைவரும் இவரைத் தனிமைப்படுத்துமளவு இவர் மாபாதகம் செய்ததாகவோ எனக்குத் தோன்றவில்லை.
எனது ஆதரவை அவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். இப்படியாக சில நாட்கள் செல்லவும், அவரது பழைய கூட்டாளிகளுடனான உறவு மீண்டும் துளிர்விட்டது. உடனே கொஞ்சங்கொஞ்சமாக மீண்டும் முருங்கை மரம் ஏற முற்பட்டார்; அதாவது பழைய குருடி கதவைத் திறடி கதையாக மீண்டும் கொஞ்சங்கொஞ்சமாக என்மீது அவதூறுகளைக் கொட்டத் தொடங்கினார். இதனால் நான் சற்றும் சலனமடையவில்லை; ஏனெனில் இது நான் எதிர்பார்த்ததானே!
என்ற கட்டுரையில் பின்வருமாறு இவர் பதித்ததுதான் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.
//இதையெல்லாம் நேற்றிரவு இயேசு பெருமானே என் அறையில் பிரத்தியட்சமாகத் தோன்றி எழுதச் சொன்னார் என்று ரீல் சுற்ற எனக்கு விருப்பமில்லை. ஒருவேளை அப்படி சொன்னாலே என்னுடைய கருத்துக்களை ஏற்பார்கள் என்ற பரிதாப நிலையில் மார்க்கம் இருக்குமானால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்..!//
குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் இவர் பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று கருதி, இவருக்கு ஆதரவளித்த எனக்கு, இவ்வரிகளைப் படித்ததும், குறிப்பிட்ட அந்த விஷயத்திலும் இவர் பொய் சொல்லியிருப்பாரோ, நாம்தான் தவறாக இவரை ஆதரித்துவிட்டோமா என நினைக்கத் தோன்றியது.
இயேசுவை நேரில் பார்த்ததாக பொய் சொல்லத் தயங்காதவர், எந்தவொரு பொய்யையும் துணிகரமாகச் செய்வார் என உறுதியாகக் கூறலாம். இவர் பொய் சொல்லித்தான் இவரது (திரித்துவ) மார்க்கத்தை இவர் காப்பாற்ற வேண்டுமாம். இதுவே இவரது திரித்துவ மார்க்கம் ஒரு பொய்யான மார்க்கம் என்பதற்கு ஆதாரமாயுள்ளது.
இவர் சொல்வதைத்தான் பல திரித்துவவாதிகள் ஏற்கனவே செய்தும்வருகின்றனர். இயேசுவின் நேரடிக் கட்டளைகளுக்கு (மத்தேயு 4:10; 23:8-10) கீழ்ப்படிய மனமில்லாத இந்த திரித்துவக்கூட்டத்தார், அவரை ஆராதிப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவதாக பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த லட்சணத்தில் “கிறிஸ்துவை ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி, என்னை நையாண்டி செய்துகொண்டும், நான் தோற்று ஓடிவிட்டதாக புரளி கிளப்பிக்கொண்டும் தன்னைத்தானே இந்த யௌவன ஜனம் பாராட்டிக் கொண்டார்.
பலியைக் காட்டிலும் கீழ்ப்படிதலையே விரும்புகிறேன் என தேவன் எவ்வளவாய் நேரடியாகச் சொல்லியுள்ள போதிலும், கீழ்ப்படிதலை புறக்கணித்துவிட்டு ஆராதனையைப் பிரதானப்படுத்துவதுதான் இந்தப் பொய்யரின் வேலையாக உள்ளது.
துஷ்டனைக் கண்டால் தூர ஓடு என தமிழ் பழமொழி சொல்கிறது. வேதமோ இரண்டொரு தரம் புத்திசொல்லிவிட்டு விலகு என்கிறது. இதன்படியே அவரைவிட்டு நான் விலகினேன். அவரோ நான் தோற்று ஓடிவிட்டதாகக் கொக்கரித்துக் கொண்டரிக்கிறார்.
இவர் இவ்வளவாய் பகிரங்கமாக தன்னைப் பொய்யர் எனக் காட்டிவிட்டபிறகும், இவரது (போலி) நண்பர்கள் இவருக்குத் தாலாட்டு பாடுகின்றனர். இவர்களெல்லாம் நீதி. 27:5 கூறுகிறபடி மறைவான சிநேகத்தையுடையவர்கள்.
கிறிஸ்தவர் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு, “கிறிஸ்தவ மார்க்கத்தை வளர்க்க நான் பொய் சொல்லத் தயார்” என இவர் அறிவித்ததன் மூலம் இவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இவர் ஆராதிப்பதாகச் சொல்லும் கிறிஸ்துவுக்கும், சர்வ வல்லவரான தேவனுக்கும் தூஷணத்தை உண்டாக்கிவிட்டார்.
இவருக்குக் கைத்தாளம் போடுகிற கூட்டத்தாரிடம் சற்றாகிலும் மனச்சாட்சி இருந்தால், அவர்கள் இந்த யௌவன ஜனத்தைக் கடிந்துகொள்வார்களாக.
இவரது தரக்குறைவான எழுத்துக்களுக்கு திரித்துவவாதிகளின் மத்தியில் ஏக வரவேற்பு. குறிப்பாக TCS-ன் அற்புதராஜ், ராஜ்குமார், கொல்வின், ஜாண், ராபின், விஜயகுமார் போன்றவர்கள் இவரை வெகுவாக ஊக்கமளித்து வந்தனர்.
சகோ. அன்பு அவர்களே இதில் தேவையில்லாமல் என் பெயரை சம்பந்தப்படுத்த வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். சில்சாமை பல சமயங்களில் அவரின் தளத்திலும் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் கண்டித்துத்தான் வருகிறேன். ஒரு சோகம் என்னவென்றால் சில காலம் சில்சாமின் எழுத்திற்கு நான் பலியாகியதுதான்.
சில்சாமை இந்த விடயத்தில் எப்படி நீங்கள் நம்பினீர்கள்கள் என தெரியவில்லை. பல மோசடி பெயர்களில் போனதே அவர் மீதான தடைக்கு காரணமாகும். எனவே பேஸ்புக் அவரின் பெயரை தடை செய்தது நியாயமானதே. இதில் ஆட்சேபி்க்க எதுவும் இல்லை இன்னும் பல போலி ID களை உருவாக்கி வைத்துள்ளார். இது Facebook சட்ட திட்டங்களுக்கு முரணானதாகும். சாதாரண மனித சட்டங்களை மதிக்காதவர் தேவனுடைய சட்ட திட்டங்களை மதிப்பாரா என்ன? எனவே அவரை பொருள் படுத்த தேவையில்லை
Google இல் சில்சாம் என்று Type செய்து தேடி பாருங்கள். இவரை மாற்று மதத்தினரும் கிறிஸ்தவர்களும் எப்படி மதிக்கின்றனர் என புரியும்.
சில்சாமை யாராலும் திருத்த முடியாது. அதேவேளை உங்களுடனும் உடன்பாட்டிற்கு வர இயலாது.
எனவே தயவு செய்து சில்சாமுடன் என்னை முடிச்சுப் போட வேண்டாம்.
நீங்கள் என்னை இதில் சம்பந்தப்படுத்தியதால்தான் நான் இதை எழுத நேர்ந்தது.
//சகோ. அன்பு அவர்களே இதில் தேவையில்லாமல் என் பெயரை சம்பந்தப்படுத்த வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். சில்சாமை பல சமயங்களில் அவரின் தளத்திலும் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் கண்டித்துத்தான் வருகிறேன். ஒரு சோகம் என்னவென்றால் சில காலம் சில்சாமின் எழுத்திற்கு நான் பலியாகியதுதான்.
சில்சாமை யாராலும் திருத்த முடியாது. அதேவேளை உங்களுடனும் உடன்பாட்டிற்கு வர இயலாது.
எனவே தயவு செய்து சில்சாமுடன் என்னை முடிச்சுப் போட வேண்டாம்.
நீங்கள் என்னை இதில் சம்பந்தப்படுத்தியதால்தான் நான் இதை எழுத நேர்ந்தது.//
அன்பான கொல்வின் அவர்களே!
நான் உங்களைப் பற்றி தேவையில்லாமல் எதுவும் எழுதவில்லை, உங்களைப் பற்றி தவறாகவும் எழுதவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதியுள்ளேன். சில்சாமை ஆதரித்து பாராட்டி யௌவன ஜனம் தளத்தில் நீங்கள் எழுதினதை உங்களால் மறுக்கமுடியாது. இந்த சில்சாம் தொடக்கத்திலிருந்தே கண்மூடித்தனமாக என்னையும் கோவை பெரியன்ஸ்-ஐயும் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கியவர். இவரால்தான் இணையதளங்களில் கிறிஸ்தவர்களின் விவாதங்கள் தரங்கெட்டவையாயின எனச் சொன்னால் அது மிகையாகாது.
மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டி கோபத்தை வெளிப்படுத்த வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! ஆனால் இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், நீங்கள் உட்பட பலரும் சில்சாமின் எழுத்துக்களை ஊக்குவித்து வந்ததுதான். (தற்போதுகூட FB-ல் பலரும் அவரை ஊக்குவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்) ஒருசில சமயங்களில் நீங்கள் சில்சாமைக் கண்டித்துள்ளீர்கள், இதை நான் மறுக்கவில்லை. ஆகிலும் வேறு பல சமயங்களில் நீங்கள் அவரைத் தட்டிக்கொடுத்தும் வந்தீர்கள்; இதற்கு ஆதாரம் வேண்டுமெனில் தேடிப்பிடித்து எடுத்துப்போட என்னால் முடியும்.
உங்களது கடந்த கால நிலையின் அடிப்படையில்தான் நான் உங்களை சில்சாமுடன் இணைத்துள்ளேனேயொழிய, தற்கால நிலையின் அடிப்படையில் இணைக்கவில்லை.
சகோ அன்பு அவர்களே அப்படிப் பார்த்தால் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உங்களையும் பாராட்டி எழுதியுள்ளேனே. ஒருவரை ஒரு விடயத்திற்காக பாராட்டினேன் என்றால் எல்லா விடயத்திலும் அது பொருந்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுத்த மனசாட்சியுடைய யாரும் சில்சாமை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
நான் இங்கிருந்து பல தடவைகள் தொலைபேசியில் பேசியுள்ளேன். பல தடவை அவர் என்னிடமே தான் சில்சாம் இல்லை என பொய் கூறினார். அது மட்டுமல்ல எனது பதிவுகள் பலவற்றை அவரின் தளத்திலிருந்து நீக்குவதாக ஒப்புக் கொண்டு விட்டு தற்போது அந்தர் பல்டி அடிக்கிறார். எனவே அவரின் நேர்மையை புரிந்து கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.
ஆயினும் திரித்துவம் போன்ற விடயங்களில் அவரின் கருத்தினையே ஒத்திருக்கிறேன்.
//குறிப்பாக TCS-ன் அற்புதராஜ், ராஜ்குமார், கொல்வின், ஜாண், ராபின், விஜயகுமார் போன்றவர்கள் இவரை வெகுவாக ஊக்கமளித்து வந்தனர்.//
அன்பான கொல்வின் அவர்களே!!
மேற்காணும் கூற்றில் மட்டுமே உங்களைப் பற்றி நான் கூறியுள்ளேன். அதில் “சில்சாமை வெகுவாக ஊக்கமளித்து வந்தனர்” எனக் கடந்த காலத்தில்தான் எழுதியுள்ளேன். கடந்த காலத்தில் நீங்கள் சில்சாமை ஊக்கமளிக்கவில்லை என உங்களால் சொல்ல முடியுமா? முடிந்தால் அதைச் சொல்லுங்கள்.
//ஒருவரை ஒரு விடயத்திற்காக பாராட்டினேன் என்றால் எல்லா விடயத்திலும் அது பொருந்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, நிறைய விஷயத்தில் பாராட்டினீர்கள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது. எல்லா விஷயத்திலும் அவரை பாராட்டி வருவதாக நான் எழுதவில்லை. குறிப்பாக உங்கள் பெயரைக் குறிப்பிடாவிடினும், கீழ்க்காணும் கூற்றையும் நான் கூறியுள்ளேன்.
//இப்புகாரை அவரது திரித்துவக் கூட்டாளிகளில் பலர் நம்பாததால், இவரைப் பொய்யர் என்று சொல்லி கிட்டத்தட்ட அனைவரும் குற்றஞ்சாட்டி இவரைத் தனிமைப்படுத்தினர்.//
உங்களையும் மனதில் வைத்துதான் இக்கூற்றை நான் எழுதினேன். எனவே எப்போதும் நீங்கள் சில்சாமைப் பாராட்டுபவர் என நான் நினைக்கவுமில்லை; அப்படி ஒரு கருத்தில் நான் எழுதவுமில்லை என்பதை அறிவீர்களாக.
//அன்பின் சகோதருக்கு இத்தளத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் நலமாக இருக்கும்
Last in First என்ற அடிப்படையில் Post களை மாற்றி அமையுங்கள். அதுவே வசதியாக இருக்கும். இறுதியாக பின்னூட்டம் இட்டது முதலில் வர வேண்டும். அல்லது பதிவுகளை வாசிக்க சோர்வு ஏற்படும்.
ஒவ்வொருமுறையும் புதிய பதிவுகளை இடும் போது Mouse இனை உருட்ட வேண்டியுள்ளது.//
ஆலோசனைக்கு நன்றி சகோதரரே!
உங்கள் ஆலோசனைப்படி செய்வதில் வேறொரு பிரச்சனை உள்ளது. ஒரு திரியில் புதிதாக post வரும்போது, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனை பக்கங்களின் post-களும் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால் தற்போதைய முறையில் அப்படி மாறாது. கடைசி பக்கம் மட்டும்தான் மாறும். எனவே ஒரு திரியை save செய்து அதை update செய்வது எளிதாக இருக்கும். ஏனெனில் update செய்வதற்கு கடைசி பக்கத்தை மாத்திரம் update செய்தால் போதும். நீங்கள் சொன்ன ஆலோசனைப்படி செய்தால், எல்லா பக்கங்களையும் update செய்ய வேண்டியதிருக்கும்.
இதை மனதில் வைத்து, உங்களுக்கு எது வசதி என்பதை மீண்டுமொருமுறை சிந்தித்து சொல்லுங்கள். உங்கள் ஆலோசனைப்படி செய்கிறேன்.
சில்சாம் காரியத்தை இத்தோடு விட்டுவிடுவோம்.
தற்போது ஒரு வாரம் நான் வெளியூர் செல்வதால், உங்கள் ஆலோசனையை ஒரு வாரத்திற்குப் பின் செயல்படுத்துகிறேன். நன்றி.
\\எனவே இவருடனான எனது கடந்தகால கசப்புகளை மறந்து, சிறுமைப்பட்டவனுக்கு நீதி செய்யுங்கள் எனும் வசனத்தின்படி (சங்.82:3), இந்த சில்சாம் சார்பாக நின்று அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன். நிலைமை சரியானபின் இவர் நம்மீது மீண்டும் பாய்வார் என்பது தெரிந்தபோதிலும், இவருக்கு நான் ஆதரவளித்தேன். ஏனெனில் குறிப்பிட்ட அந்த விஷயத்தில் அவர் பொய் சொல்பவராவோ, அல்லது மற்ற அனைவரும் இவரைத் தனிமைப்படுத்துமளவு இவர் மாபாதகம் செய்ததாகவோ எனக்குத் தோன்றவில்லை.//
எதன் அடிப்படையில் இப்படி முன் வந்தீர்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. பொதுவாக சில்சாம் என்பவர் அனைவராலும் வெறுக்கப்படுகின்றவர். இந்து சகோதரர்கள் கூட விவாதத்தின் போது நாகரீகமான வார்த்தைகளை பாவிக்க சில்சாமோ சாக்கடையில் ஊறியவர் போல நடந்து கிறிஸ்துவிற்கு நிந்தனையை தேடி தந்துள்ளார். இவர் எந்த ஒரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில்லை என்பது சிறப்பு.
பிரஜா தான் இயேசுகிறிஸ்து என அறிவித்து கிறிஸ்துவை கடுமையாக நிந்தித்துள்ளார் இந்த பிரஜா தன் சொந்த மகளுடனே உடலுறவில் ஈடுபட்டவர். சில்சாம் இதன் மூலம் இந்துக்களுக்கு இயேசுவை பற்றி தெளிவான செய்தியை கொடுத்துள்ளார்.
கிறிஸ்தவ சகோதர்களுக்கு எதிராகவே இரத்தம் கக்கி சாவாய், மூலவியாதி வந்து முக்கட்டும், குத்தம் சொல்ல...... ஓ சகிக்கவே முடியாத வார்த்தைகள். தன்னை போதகர் என்று அழைப்பதையே விரும்பாதவர் எப்படிதான் ஊழியம் செய்ய போகிறாரோ! வாயைத் திறந்தால் பொய்... பொய்....
சில்சாம் போன்றோர் கர்த்தரின் சபையிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்
அன்பின் சகோதருக்கு இத்தளத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் நலமாக இருக்கும்
Last in First என்ற அடிப்படையில் Post களை மாற்றி அமையுங்கள். அதுவே வசதியாக இருக்கும். இறுதியாக பின்னூட்டம் இட்டது முதலில் வர வேண்டும். அல்லது பதிவுகளை வாசிக்க சோர்வு ஏற்படும்.
ஒவ்வொருமுறையும் புதிய பதிவுகளை இடும் போது Mouse இனை உருட்ட வேண்டியுள்ளது.
சிரமமாக இருப்பின் விட்டு விடுங்கள் சகோதரரே. வேறு சில தளங்களில் இந்த வசதியை கண்டேன். அதனால்தான் கேட்டேன். இதுவும் ஓகே தான். வீணாக சிரமபட வேண்டாம். எளிதாக இருப்பின் மட்டும் மாற்றுங்கள். மற்றபடி அவசியமில்லை.
சில்சாமை பற்றி பேசாதிருக்கத்தான் எண்ணுகிறேன். ஏதோ ஒரு விடயத்தில் பேச வைத்து விடுகிறார். இனி எச்சரிக்கையாக செயற்படுகிறேன்.
I have changed display of pages as you requested. There is nothing difficult to do so. Let is keep like this for some time. If needed, let us change to earlier method.