நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Read and liked by Bro Ignatious Elango


Militant

Status: Offline
Posts: 830
Date:
Read and liked by Bro Ignatious Elango
Permalink  
 


https://www.facebook.com/era.jmb/posts/2239887573592
இத்தொடுப்பில் சகோ.இக்னேஷியஷ் இளங்கோ இவ்வாறு பதித்துள்ளார்.
Read and liked!!

A man dies and goes to heaven. St. Peter meets him at the pearly gates.

St. Peter says, "Here's how it works. You need 100 points to make it into heaven. You tell me all the good things you've done, and I give you a certain number of points for each item, depending on how good it was. When you reach 100 points, you get in."

"Okay" the man says, "I attended church every Sunday"
"That's good, says St. Peter, " that's worth two points"

"Two points?" he says. "Well, I gave 10% of all my earnings to the church"
"Well, let's see," answers Peter, "that's worth another 2 points. Did you do anything else?"

"Two points? Golly. How about this: I started a soup kitchen in my city and worked in a shelter for homeless veterans."
"Fantastic, that's certainly worth a point, " he says.

"hmmm...," the man says, "I was married to the same woman for 50 years and never cheated on her, even in my heart."
"That's wonderful," says St. Peter, "that's worth three points!"

"THREE POINTS!!" the man cries, "At this rate the only way I get into heaven is by the grace of God!"

"Come on in!"

Ephesians 2:8 For ye are saved by grace, through faith; and this not of yourselves; it is God's gift:

இப்பதிவைக் குறித்த விமர்சனங்கள் அடுத்து வரும் பதிவுகளில்....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Lovejeen Paulose Elango one real question (just a curiosity) only christians will be saved.

  • Lovejeen Paulose Only a query

  • Lovejeen Paulose If every is saved why this big drama

  • Ignatius Elango ‎//Was that man from the congregation of the scholar?// That man was a self righteous man who believed on his own works rather than grace of God!!

  • Ignatius Elango Sorry Lovejeen, I couldn't attend your query!! When you said drama, then it is a drama!! And these human saviours are the greatest actors in that!! The real savior came and gave himself for the whole humanity (not for Christians alone, as these actors preach)!! These people want to be in a self righteous state and see others as sinners!! Remember the parable of the Pharisee (the actors of religion) who lifted high his face and prayed and the other tax collector who confessed himself as a sinner and was justified before God!! Our modern day Pharisees are worst than even the Pharisee of the Parable!!

  • Gnana Piragasam Ephesians 2:8 For ye are saved by grace, through faith; and this not of yourselves; it is God's gift:

    According to your understanding of this Verse, Bro Ignatius Elango, it seems the following Verses contradict the above verse.

    Matt 5:20 For I tell you that unless your righteousness surpasses that of the Pharisees and the teachers of the law, you will certainly not enter the kingdom of heaven.

    Matt 7:21 "Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of heaven, but only he who does the will of my Father who is in heaven.

    Matt 18:3 I tell you the truth, unless you change and become like little children, you will never enter the kingdom of heaven.

    In some other thread, you have said as below Bro Ignatius Elango.

    //மரணத்துக்கு ஏதுவான (நித்திய மரணம், உயிர்த்தெழுதல் இல்லாதது) பாவம் செய்தவர்கள் அன்று கிறிஸ்துவை தேவ குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் அவரை சிலுவைக்கு ஒப்பு கொடுத்து, இவர் இரத்தம் எங்கள் தலைகள் மீதும் எங்கள் பிள்ளைகளின் தலை மீதும் வரட்டும் என்று சாபத்தை வரவைத்துக்கொண்டவர்களுக்கு நேர்ந்தது!! ஒரு வேளை வெளி. இரண்டாம் மரணம் என்று சொல்லுவது இதையே!!//

    இவர்களுக்கு பரலோகம் செல்ல “கிருபை” கிடையாதா சகோதரரே??

    இவர்கள் அறியாமல்தான் தம்மை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததாகச் சொல்லி, இவர்களை மன்னிக்கும்படி இயேசு வேண்டினாரே, அப்படியிருந்தும் இவர்கள் மன்னிக்கப்படமாட்டார்களா?

    “அறியாமல் அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனுக்கு சில அடிகள் மட்டும் கொடுக்கப்படும்” என லூக்கா 12:48 சொல்வதற்கு முரணாக இவர்களுக்கு 2-ம் மரணமா?

    https://www.facebook.com/era.jmb/posts/2210965210551?ref=notif&notif_t=mentions_comment
    Mat 3:7 But seeing many of the Pharisees and Sadducees coming to his baptism, he...See More



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elango Please don't get confused between the age of Law and the Age of Grace!!

  • Gnana Piragasam What is age of Law and what is age of Grace? Please explain Bro Ignatius Elango.

  • Ignatius Elango As for my understanding, Christ came to preach only to the lost sheep of Israel. He did not work among gentiles. So what ever "Works" Christ is talking, was for the Jews to follow. When the gospel came to gentiles, it was by grace, because it was given to the gentiles who were not knowing God or his laws and works!!

    If you think you have better understanding on Eph 2:8, you should have placed its meaning here!!

  • Gnana Piragasam ‎//As for my understanding, Christ came to preach only to the lost sheep of Israel. He did not work among gentiles. So what ever "Works" Christ is talking, was for the Jews to follow. When the gospel came to gentiles, it was by grace, because it was given to the gentiles who were not knowing God or his laws and works!!//

    OK. Then what about the fate of the man if he was an Israelite in the story told above?

  • Ignatius Elango Age of Law was finished (finished means completed and not that a part was completed and a part was left for the gentiles to fulfill) on the cross!!

    Eph 2:14 For he himself is our peace, who has made the two groups one and has destroyed the barrier, the dividing wall of hostility, 15 by setting aside in his flesh the law with its commands and regulations. His purpose was to create in himself one new humanity out of the two, thus making peace, 16 and in one body to reconcile both of them to God through the cross, by which he put to death their hostility.

    The end of law started, the age of grace, Gospel of kingdom o the gentiles!!

    Matthew 21:43 “Therefore I tell you that the kingdom of God will be taken away from you and given to a people who will produce its fruit.

  • Ignatius Elango ‎//OK. Then what about the fate of the man if he was an Israelite in the story told above?/

    "Okay" the man says, "I attended church every Sunday"

    I don't think a Jew would have attended Church every Sunday!!

  • Gnana Piragasam You say the man was a Gentile. My question is if the man was an Israelite what would be the fate of him.

  • Ignatius Elango I am no Israelite to guess that, and neither are you to worry for that!! God in his own ways dealt with them!!

  • Gnana Piragasam ‎//I am no Israelite to guess that, and neither are you to worry for that!! God in his own ways dealt with them!!//

    Please don’t try to escape, Bro Ignatius Elango.

    1 தீமோ. 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

    இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி, எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மிக உறுதியாக நீங்கள் கூறி வந்தீர்கள்.

    எல்லா மனிதர்கள் என்றால் “எல்லாருமும்தான்” எனத் திட்டமாகக் கூறி அத்தனை மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் எனக் கூறினீர்கள். இப்போது இஸ்ரவேலருக்கு என்னவாகும் என்பதை உங்களால் சொல்லமுடியாது என்கிறீர்கள்.

    கிரியை சம்பந்தமான போதனைகள் இஸ்ரவேலருக்கே கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறீர்கள்.

    //So what ever "Works" Christ is talking, was for the Jews to follow. When the gospel came to gentiles, it was by grace, because it was given to the gentiles who were not knowing God or his laws and works!!//

    உங்களது தற்போதைய நிலை என்னவென்பது குழப்பமாயுள்ளது. பின்வரும் கேள்விகளுக்கு தெளிவான பதிலைச் சொல்லுங்கள்.

    கிரியை இருந்தால்தான் இஸ்ரவேலர்கள் இரட்சிக்கப்படுவார்களா?

    ஆம் எனில், எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் எனும் உங்களது முந்தைய கருத்து தவறா?

    ஆம் எனில், கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்கமுடியாது என தற்போது நீங்கள் கூறுகிறீர்களா?

    தயவுசெய்து நேரடியான பதிலைக் கூறுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elango What is there to escape in it. I never said I am quitting!! Don't imagine things.

    பல வருடங்கள் முன்பு கத்தோலிக்கனாக இருப்பதற்கும் தான் வசனம் காட்டினேன், புரிந்துக்கொள்ளுதல் வர வர திடமான ஆகாரம் கிடைக்க கிடைக்க வளர்சி அடைகிறோம்!! திடமான ஆகாரம் என்று வசனத்தையே சொன்னேன்!!

    கிரியைகளினால் உண்டான அந்த நியாயத்தீர்ப்பு முடிந்து விட்டது!! புறஜாதிகளிடம் சுவிசேஷம் வந்த பிறகு அது கிருபையினால் மட்டுமே அளவிடப்படும்!!

    ஆகவே தான்,

    எபே 2:8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

    இது உங்களால் உண்டானதல்ல என்றால் இது உங்கள் கிரியைகளினால் சாத்தியமே இல்லை!! இது தேவனுடைய கிருபை என்றே அர்த்தமாகிறது!! கிறிஸ்து கிரியைகளை பற்றி யூதர்களிடம் போதித்தார், ஆனால் அவரின் அப்போஸ்தலர்களோ கிருபையை பற்றி புறஜாதியின்டத்தில் போதித்தார்கள்!!

  •  
  • Ignatius Elango ‎//கிரியை இருந்தால்தான் இஸ்ரவேலர்கள் இரட்சிக்கப்படுவார்களா?//

    வெள்ளை சிங்காசன தீர்ப்பு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு என்று நம்புகிறேன்!!

    //ஆம் எனில், எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் எனும் உங்களது முந்தைய கருத்து தவறா?//

    எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்கிற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை!!

    //ஆம் எனில், கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்கமுடியாது என தற்போது நீங்கள் கூறுகிறீர்களா?//

    நான் இதை சொல்லவில்லை!! இது ஏதோ நீங்களாகவே கேள்விகளை உருவாக்கி நான் சொல்லாததை சொல்லி மகிழ்கிறீர்கள்!!

  •  
  • Gnana Piragasam ‎//வெள்ளை சிங்காசன தீர்ப்பு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு என்று நம்புகிறேன்!!//

    இந்த நியாயத்தீர்ப்பின்படி கிரியை செய்த யூதர்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் (அல்லது இரட்சிக்கப்படுவார்கள்), அப்படித்தானே Bro Ignatius Elango?

  •  
  • Ignatius Elango சுமார் 70 கிபியில் அழிந்த இஸ்ராயேல் வேறு, இப்பொழுது இஸ்ராயேல் என்றும் அதில் இருப்பவர்களும் அன்றைய யூதர்கள் கிடையாது!! இவர்கள் சட்டத்தின் கீழும் இல்லை, இவர்கள் அன்றாட பலியோ வருடத்தின் பலியோ செலுத்துவதும் இல்லை!! அப்படி இருக்க, காணாமல் போன ஆடுகளான அன்றைய இஸ்ராயேலர்களுக்காகவே கிறிஸ்து வந்திருக்கிறார், கிறிஸ்து பரமேறும் வரை சுவிசேஷம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உண்டாயிருந்தது!! தேவனின் ஜனங்களான யூதர்களை சேர்த்துக்கொள்ள அதுவே கடைசி வாய்ப்பாக இருந்தது, கிறிஸ்துவே அதற்காக வந்தார்!! இதை பல உவமைகளிலும் கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!!

    சட்டத்தின் கீழ் இருந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் போனார்கள், அவரை தேவனின் குமாரன் என்று என்னாமல் தங்களின் காலின் கீழ் போட்டு மிதித்தார்கள்!! அவரின் சிலுவை மரணத்தின் போதும் கிறிஸ்து சிந்தும் இரத்தத்தை தன் தலை மீதும் தன் தலைமுறையினரின் தலை மீதும் சாபமாக பெற்றுக்கொண்டார்கள்!! ஆகவே தான் சிலுவை சுமந்து செல்லும் போது கிறிஸ்து அழுதுக்கொண்டிருக்கும் ஸ்திரிகளிடம், "உங்களுக்குகாகவும், உங்களின் பிள்ளைகளுக்காகவும் அழுவுங்கள்" என்றார்!! இப்படி சில யூதர்கள் மீது தான் தேவனின் கோபாக்கினை இறங்கியது!! தேவனின் சொந்த குமாரனை அவர்கள் தங்களின் கால்களின் கீழ் போட்டு மிதித்து தள்ளியதால்!!

    இவர்களின் நித்திய முடிவு கிறிஸ்துவிற்கு தெரிந்திருந்திருக்கும், ஆகவே தான் அவர் அந்த ஜனங்களுக்காகவும் அந்த பட்டனத்திற்காகவும் கண்ணீர் விடுகிறார்!!

    லூக் 13:6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.

    7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

    8. அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,

    9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

    தோட்ட சொந்தக்காரர் தேவன், அத்திமரம் யூதர்கள், தோட்டக்காரன் கிறிஸ்து, கனிக்கொடாத யூதர்களை (கிறிஸ்துவை மறுதலித்த யூதர்களை) தேவன் வெட்டினார்!!

  •  
  • Gnana Piragasam அதாவது கிபி 70-க்கு முந்தின யூதர்களில் கிரியை செயதவர்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறீர்கள், அப்படித்தானே Bro Ignatius Elango?

  •  
  • Gnana Piragasam அதாவது கிறிஸ்துவை மறுதலித்த யூதர்கள் இரட்சிக்கப்படவில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?

  •  
  • Ignatius Elango வேதம் அப்படி சொன்னதை இப்பொழுது புரிந்துக்கொண்டேன்!!

  • Gnana Piragasam ‎//வேதம் அப்படி சொன்னதை இப்பொழுது புரிந்துக்கொண்டேன்!!//

    நல்லது Bro Ignatius Elango. இப்பொழுது சொல்லுங்கள், 1 தீமோ. 2:4 கூறுகிற “எல்லா மனுஷரும்” என்ற சொற்றொடரில், “கிறிஸ்துவை மறுதலித்த யூதர்கள்” அடங்குவார்களா, இல்லையா?
  • Gnana Piragasam சமீபகாலமாக உங்களது கருத்துக்கள் குழப்பமாகவும் முரணாகவும் உள்ளன Bro Ignatius Elango.

    வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு கிபி 70-ல் அழிந்து போன யூதர்களுக்கு/இஸ்ரவேலர்களுக்கு என்கிறீர்கள். அவர்கள் மீதான நியாயத்தீர்ப்புக்கான காரணம், அவர்கள் கிறிஸ்துவை மறுதலித்ததுதான் என்கிறீர்கள். ஆனால் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு என்பது முழுக்க முழுக்க கிரியைகளின் அடிப்படையிலானது என மத்தேயு 25:33-41 மற்றும் வெளி. 20:11,12 வசனங்கள் சொல்கின்றன.

    கிறிஸ்துவை மறுதலித்த யூதர்களுக்கு நியாயத்தீர்ப்பாக 2-ம் மரணம் என்கிறீர்கள். அப்படியானல் அவர்களுக்கு இரட்சிப்பு இல்லை என்றாகிறது. ஆனால் 1 தீமோ. 2:4-ன்படி எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள்.

    உங்கள் கூற்றுக்கள் ஒவ்வொன்றையும் இணைத்துப்பார்த்தால் சற்று குழப்பமாகத்தான் உள்ளது. இக்குழப்பத்தைப் போக்கத்தக்கதாக உங்களது நிலையை சற்று தெளிவாகக் கூறும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elango புரியாமல் இருந்தால் எதுவுமே குழப்பம் தான்!!
    1. தேவன் யூதர்களை தன் சொந்த ஜனங்களாக எடுத்து நடத்துகிறார். தேவனால் அனுப்பபட்ட தீர்க்கதரிசிகளை அவர்கள் நிராகரிக்கிறார்கள்!! தேவனின் சொந்த குமாரனை அவர்கள் நிராகரிக்கிறார்கள்!! தேவனின் கோபாக்கினை அவர்கள் மீது வருகிறது!! கிரியைகளின்படி நியாயத்தீர்ப்பில் நின்றவர்கள் கிறிஸ்துவின் வருகையின் போது உயிர்த்தெழுந்தார்கள், சட்டத்தின் கீழ் வந்த யூதர்களில் புறகனித்தவர்கள் வெட்டுண்டு போனார்கள் (ஒரு வேளை இது தான் இரண்டாம் மரணமோ!!??)

    2. யூதர்கள் அல்லாத மற்றவர்கள் (புறஜாதிகள்) ஆதாமின் பாவத்திற்கு உண்டான தண்டனையை (மரணத்தை) அனுபவித்தி வருகிறார்கள். அவர்களுக்கு தேவன் எந்த விதமான சட்டமோ, நியாயப்பிரமானமோ, கிரியையோ கொடுக்கவில்லை!! யுதார்களிடமிருந்து கிறிஸ்துவின் சுவிசேஷம் வெளியே புறஜாதிகளிடத்தில் வந்தது, அதுவே அனைவருக்கும் கிருபையினால் இரட்சிப்பு என்கிற செய்தி!!

    யூதனின் மேன்மையை பற்றி ரோம் 3ம் அதிமாரம் சொல்லுகிறது!! கிறிஸ்துவும் உலகத்திற்காக வரவில்லை, இஸ்ராயேலர்களுக்காக தான் வந்திருக்கிறேன் என்கிறார்!! அவர்களுக்காக மட்டும் கண்ணீர் விடுகிறார்!! ஏன் அவர்களுக்காக கண்ணீர் விட வேண்டும்!! ஏன் அவர்களின் வீடு அவர்களுக்கு பாழக்கப்படும் என்று சொல்ல வேண்டும்? ஏனென்றால் யூதர்கள் கிரியையின்படி நியாயந்தீர்க்கப்பட்டார்கள்!!

    தேவன் யூதர்களுக்கு கிரியை, புறஜாதியாருக்கு கிருபையை வைத்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வருகையின் போதே யூதர்களின் நியாத்தீர்ப்பு நடந்தாகிவிட்டது!!

  • Gnana Piragasam ‎//புரியாமல் இருந்தால் எதுவுமே குழப்பம் தான்!!//

    ஆம், புரியவில்லைதான். புரியும்படி உங்களது நிலையை சற்றுத் தெளிவாகக்கூறும்படிதான் வேண்டுகிறேன். ஆனால் இன்னமும் நீங்கள் கூறவில்லை. சரி, போகட்டும்.

    தேவன் புறஜாதிகளுக்கு கிருபை வைத்திருக்கிறார் என்கிறீர்கள்; அப்படியானால் பின்வரும் வசனங்களுக்கு உங்கள் விளக்கம் என்ன?

    ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

    ***** 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் ***** பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

    ***** 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் ***** எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

    *******11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. *******

    12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

    ***** 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். *****

    14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

    பட்சபாதமில்லாமல், புறஜாதியினருக்கும் கிரியையின்படியே நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா Bro Ignatius Elango?

  • Gnana Piragasam புறஜாதியினருக்கும் கிரியையின்படியே நியாயத்தீர்ப்பு என்பதற்கான மேலும் சில ஆதாரங்கள்:

    அப். 10:34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,

    **** 35 எந்த ஜனத்திலாயினும் ****

    அவருக்குப் பயந்திருந்து நீதியைச்

    **** செய்கிறவன் எவனோ ****

    அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

    வெளி. 2:1 (புறஜாதியினரான) எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: 5 நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி,

    **** ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; ****

    இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

    7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam‎//When the gospel came to gentiles, it was by grace, because it was given to the gentiles who were not knowing God or his laws and works!!//

    //The end of law started, the age of grace, Gospel of kingdom to the gentiles!!//

    புறஜாதியினருக்கு முழுக்க முழுக்க கிருபையின் காலம் மட்டுமே, சட்டத்தின் காலம் முடிந்துவிட்டது என்கிறீர்கள். ஆனால் எபேசியர் 4-ம் அதிகாரத்தைப் படித்து பாருங்கள்; கிருபையைப் பற்றி எதுவும் சொல்லாமல் முழுக்க முழுக்க கிரியைக் குறித்தே பவுல் உபதேசிக்கிறார். தொடர்ந்து 5-ம் அதிகாரத்தையும் படியுங்கள். அதில் பவுல் இவ்வாறு கூறுகிறார்.

    எபே. 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

    விபசாரம், பொருளாசை போன்ற பாவங்களைச் செய்கிற யாராயிருந்தாலும், அவர்கள் (எபேசியரான) புறஜாதிகளாயிருந்தாலும், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பங்கடைய மாட்டார்கள் எனப் பவுல் சொல்கிறரே!

    இப்போது உங்களது Status Update Post-ஐ படித்துப்பார்த்து, (புறஜாதியினருக்கு) பரலோகம் செல்ல கிருபை மட்டும் போதுமா, அல்லது கிரியையும் வேண்டுமா என்பதைச் சொல்லுங்கள், Bro Ignatius Elango.

 

  • Ignatius Elangoஐய்யா, புறஜாதிகளுக்கு விசுவாசம் ஒன்றே போதுமாக இருக்கிறது

    ரோம் 1:17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

    ரோமர் 2ம் அதிகாரத்தில் அவர் சொல்லுவது யூதர்களிடமே!! ஆகவே தான் கிரியைகளை சொல்லுகிறார், அதை தொடர்ந்து தான் 3ம் அதிகாரத்தில் யூதனுடைய மேன்மையை சொல்லுகிறார்!!

 

  • Ignatius Elangoமேலும் வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டிருக்கும் 7 சபைகள் அப்பவே இருந்த சபைகள் தானே அன்றி, இனி வரபோகும் சபைகள் கிடையாது!! எபேசு என்கிற சபை எபேசு பட்டினத்தில் இருந்தது, அவர்களுக்கே அது எழுதப்பட்டது!!

    நீங்களாகவே ஏபேசுவில் வாழ்ந்த புறஜாதிகளுக்கு என்று சொல்லிக்கொண்டால் எப்படி? அந்த நிரூபமே எபேசுவில் வாழும் யூதர்களுக்கே எழுதப்பட்டிருக்கிறது!!

    கிரியை செய்யாமல் கிருபையினால் மட்டும் தேவனுடைய ராஜியத்தை காணமுடியும்!! கிரியை செய்ய இயலாத சூழலும் இருக்கிறது, ஆனால் கிருபையின்றி ஒன்றும் இல்லை!!

    நீங்கள் எழுதுவதன் நோக்கத்தை பார்த்தால் தேவனுடைய கிருபையை காட்டிலும் மனுஷர் செய்யும் கிரியைகளை மேன்மைப்படுத்துவது போல் இருக்கிறது!!

    என் பதிவில் படித்தீர்களென்றால், அந்த மனிதன் செய்த கிரியைகளின்படி அவனுக்கு பரலோகம் செல்ல மார்க் கிடைக்கவில்லை, மாறாக தேவனின் கிருபை என்று ஒப்புக்கொண்டதற்கே மார்க்!! அந்த கிரியை செய்யாமல் இருந்திருந்தாலும் தேவ கிருபையின் மீதூள்ள விசுவாசம் அவனை பரலோகத்திற்குள் அனுமதித்திருக்கும்!! சரியாக நீங்கள் தான் வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்!!

    வெளிச்சம் கிடைக்க கிடைக்க தெளிவும் கிடைக்கும்!! அதற்காக முன்பு அப்படி சொன்னீர்கள், இப்ப இப்படி சொல்லுகிறீர்கள் என்பதெல்லாம் தேவையில்லாத வாதங்கள்!!

 

  • Gnana Piragasam‎//ரோமர் 2ம் அதிகாரத்தில் அவர் சொல்லுவது யூதர்களிடமே!! ஆகவே தான் கிரியைகளை சொல்லுகிறார், ...//

    யாரிடம் சொல்கிறார் என்பது பிரச்சனையல்ல. என்ன சொல்கிறார் என்பதுதான் கேள்வி. யூதராக இருந்தாலும், கிரேக்கராக இருந்தாலும் அவரவர் கிரியையின்படிதான் நியாயத்தீர்ப்பு என ரோமர் 2:6-16 வசனங்களில் பவுல் மிகத் தெளிவாகக் கூறியிருந்துங்கூட, அதை ஏற்க மறுத்தால் நான் என்ன செய்வது?

 

  • Gnana Piragasam‎//நீங்கள் எழுதுவதன் நோக்கத்தை பார்த்தால் தேவனுடைய கிருபையை காட்டிலும் மனுஷர் செய்யும் கிரியைகளை மேன்மைப்படுத்துவது போல் இருக்கிறது!!//

    நான் எதை மேன்மைப்படுத்துகிறேன் என்பது போன்ற விமர்சனங்களைச் சொல்லி விவாதத்தை திசை திருப்பாமல், வசனங்களின் அடிப்படையில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

 

  • Gnana Piragasam‎//என் பதிவில் படித்தீர்களென்றால், அந்த மனிதன் செய்த கிரியைகளின்படி அவனுக்கு பரலோகம் செல்ல மார்க் கிடைக்கவில்லை, மாறாக தேவனின் கிருபை என்று ஒப்புக்கொண்டதற்கே மார்க்!!//

    இவையெல்லாம் உங்கள் கற்பனையில் உருவான கட்டுக்கதைகளேயொழிய, இவற்றிற்கு வசனஆதாரம் எதுவும் கிடையாது.

 

  • Gnana Piragasam‎//அந்த நிரூபமே எபேசுவில் வாழும் யூதர்களுக்கே எழுதப்பட்டிருக்கிறது!!//

    அப்படியானால் எபே. 2:8 யூதர்களுக்குத்தானே?

    Ephesians 2:8 For ye are saved by grace, through faith; and this not of yourselves; it is God's gift:

    அதாவது யூதர்களுக்கு கிருபையினால்தானே இரட்சிப்பு?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elango
    யூதன் தான் கிரியைகளின்படி நியாயத்தீர்ப்பு அடைந்தான் என்று எழுதியிருக்கிறேனே!! உங்களுக்கு கிரியை தான் முக்கியம், ஆனால் அது யாரிடம் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியமே இல்லை போல்!! நீங்கள் சொல்லும் ரோமரில் சொல்லப்பட்ட கிரியைகளின் படியான நியாயத்தீர்ப்பு முடிந்துவிட்டது!! இதை தெரியவேண்டுமென்றால் கிறிஸ்துவின் வருகை புரிய வேண்டும்!!

    என் புரிந்துக்கொள்ளுதலின்ப்படி கிறிஸ்துவின் வருகை (இரண்டாம்) நடந்தேறியது!! ஆகவே கிரியைகளை முக்கியப்படுத்தி அதினால் தான் பிழைக்கமுடியும், என்கிற நியாயத்தீர்ப்பு முடிந்தாகிவிட்டது!! அவர்களிடம் சென்ற சுவிசேஷத்தினால் அவர்களிடத்தில் கனியில்லாததினால் தான் அது கிருபையாக புறஜாதியிடத்திற்கு வந்தது!!

    மத்தேயு 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

    நீங்கள் கிரியை கிரியை என்று சொல்லுவது எதை என்று முதலில் தெளிவுப்படுத்துங்கள்!! நியாயப்பிரமானத்தின் கிரியைகளா அல்லது பொய் பேசாதே, திருடாதே போன்ற நலொழுக்க கிரியைகளா? ஏனென்றால் நியாயப்பிராமனத்தின் கிரியைகளுக்காக தான் எழுதுகிறீர்களென்றால் அது கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்டு இல்லாமல் போயிற்று!! நீதியின் கிரியைகள் என்றால், அதை இயன்றவர் செய்கிறார்கள், இல்லாதவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்!! ஆனால் பொதுவானது கிருபை மட்டுமே!! அந்த கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறோம், இது உங்களால் ஆனது அல்ல என்பதை இல்லை என்கிறீர்களா??

 

  • Ignatius Elango
  • இப்படி எழுதியதால் தான் நான் எழுதினேன்!!

    //இப்போது உங்களது Status Update Post-ஐ படித்துப்பார்த்து, (புறஜாதியினருக்கு) பரலோகம் செல்ல கிருபை மட்டும் போதுமா, அல்லது கிரியையும் வேண்டுமா என்பதைச் சொல்லுங்கள், Bro Ignatius Elango.//

    நான் எழுதுவதை மட்டும் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாமோ!!

    //இவையெல்லாம் உங்கள் கற்பனையில் உருவான கட்டுக்கதைகளேயொழிய, இவற்றிற்கு வசனஆதாரம் எதுவும் கிடையாது.//

    //நான் எதை மேன்மைப்படுத்துகிறேன் என்பது போன்ற விமர்சனங்களைச் சொல்லி விவாதத்தை திசை திருப்பாமல், வசனங்களின் அடிப்படையில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.//

    கேள்விகள் எப்படி வேண்டுமென்றாலும் கேட்கலாமோ?? நீங்கள் கிரியைக்காக வாதிடுகிறீகள், நான் நிச்சயமாக அதைவிட மேன்மையான கிருபைக்காக வாதிடுகிறேன்!!

    உங்களுக்கு இறுதியான பதில் இதுவே!!

    கிருபை இல்லாமல் இரட்சிப்பு இல்லை!!

 

  • Gnana Piragasam
    ‎//உங்களுக்கு கிரியை தான் முக்கியம், ஆனால் அது யாரிடம் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியமே இல்லை போல்!!//

    எனக்கு எது முக்கியம், எனது நோக்கம் என்ன என்பதென்ல்லாம் நம் விவாதத்திற்குத் தேவையில்லை. வசனங்களின் அடிப்படையிலான எனது கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல விருப்பமானால் சொல்லுங்கள். நிற்க.

    ரோமர் 2:6-16 வசனங்கள்தான் எனது வாதத்திற்கு முக்கிய ஆதாரம். அதில், கிரேக்கரானாலும் சரி, யூதரானாலும் சரி அவரவர் கிரியைகளிபடிதான் நியாயத்தீர்ப்பு என பவுல் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறார். அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

    //நீங்கள் கிரியை கிரியை என்று சொல்லுவது எதை என்று முதலில் தெளிவுப்படுத்துங்கள்!! நியாயப்பிரமானத்தின் கிரியைகளா அல்லது பொய் பேசாதே, திருடாதே போன்ற நலொழுக்க கிரியைகளா?//

    ரோமர் 2:6-16-ல் பொல்லாங்கு செய்தல், நன்மை செய்தல் போன்ற கிரியைகளைத்தானே பவுல் கூறுகிறார். பின்னர் ஏன் கிரியை என்றால் என்ன என்பதில் உங்களுக்கு சந்தேகம்?

 

  • Ignatius Elangoசகோதரரே, நீங்கள் எப்படி கிரியைக்காக வசனத்தை வைக்கிறீர்களோ, அப்படியே நானும் தேவனின் கிருபை என்று வசனம் வைக்கிறேன்!! நான் கிருபையை விட்டுக்கொடுக்கப்போவதாக இல்லை!! அப்படி என்றால் கிருபைக்கென்று இருக்கும் வசனங்கள் எல்லாம் பொய்யா??

 

  • Ignatius Elangoகிரியை தேவையில்லை என்று சொல்லவில்லை ஆனால் கிரியை தான் அவசியம் என்றும் சொல்லவில்லை!! கிரியை இல்லாதவனும் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறான் என்பதே என் வாதம்!!

 

  • Gnana Piragasam
    ‎//கிருபை இல்லாமல் இரட்சிப்பு இல்லை!!//

    இதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. கிருபை என்பது தேவனைச் சார்ந்தது. அதை அவர் எல்லோருக்கும் பட்சபாதமின்றி கொடுத்துவிட்டார். இப்போது நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் கேள்வி.

    தேவகிருபையைப் பெற்ற நாம், கிரியையும் செய்யவேண்டியது அவசியமா என்பதுதான் கேள்வி. அவசியம் என்பதற்கு ஆதாரமாகத்தான் ரோமர் 2:6-16 உட்பட பல வசனங்களைச் சொல்கிறேன். வசனங்களுக்குப் பதில் சொல்லாமல் என்னையே விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் என்ன செய்வது?

 

  • Ignatius Elango
    அப்படி என்றால் பவுல் எழுதிய இந்த வசனம் பொறுத்தமில்லாததா? நீங்கள் கேள்விகள் மட்டுமே கேட்க தெரிந்தவரா? உங்களின் பதிவுகளின் அடிபடையில் நீங்கள் எதை வாதிடுகிறீர்கள் என்று சொன்னால், அது அவசியம் இல்லை என்கிறீர்களே, என்ன நியாயம்!!

    எபே 2:8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

    9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

    கிரியைகளினால் உண்டானதல்ல ஆகவே அதை பெருமைபாராட்டாதப்படிக்கு கிருபை தேவனின் ஈவு!!

 

  • Ignatius Elango
    நீங்கள் கிரியை செய்தாலும் செய்யாமல் போனாலும் தேவனின் கிருபை ஹிட்லர் போன்றோரையும் இரட்சிக்கும்!! கிரியை செய்கிறவராக இருந்தீர்களென்றால் அதற்குண்டான ஸ்தானத்தை பெறுவீர்கள்!!

    யோவான் 14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;

    வாசஸ்தலங்கள் என்றால் நிச்சயமாக வீடாக இருக்க முடியாது, அது அவர் அவருக்கு உண்டான ஸ்தானங்களாக () இருக்கலாம்!! கிரியை செய்பவர்களுக்கு அதற்குண்டான இடமும் (வாசஸ்தலம்) கிரியை இல்லாதவர்களுக்கு அதற்குண்டான இடமும் (வாசஸ்தலம்) கிடைக்கும்!! ஆனால் எத்துனை தான் கிரியை இருந்தாலும் கிருபை இல்லாமல் இருந்திருந்தால்...............??


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    நாம் கிரியை செய்து, அதன் மூலம்தான் இரட்சிப்பைப் பெறுகிறோம் என நினைத்து, அதைக் குறித்து பெருமைபாராட்டக் கூடாது என்பதே எபே. 2:8,9-ன் கருத்து.

    ஏனெனில், கிருபை இல்லாவிடில், நாம் எத்தனை நற்கிரியை செய்தாலும் அதன்மூலம் இரட்சிப்பை ஒருபோதும் பெறமுடியாது. எனவே இரட்சிப்புக்கு முதன்முதலான தேவை “தேவகிருபை”. அதை தேவன் எல்லோருக்கும் வழங்கிவிட்டார். கிருபையை அடுத்து இரட்சிப்புக்கு அடுத்தபடியான தேவை “கிரியை”. எனவேதான் தேவனுடைய நியாய்த்தீர்ப்பில் கிரியையும் பங்குவகிக்கிறது என ரோமர் 2:6-16 உட்பட பலவசனங்கள் கூறுகின்றன.

 

  • Gnana Piragasam
    ‎//நீங்கள் கிரியை செய்தாலும் செய்யாமல் போனாலும் தேவனின் கிருபை ஹிட்லர் போன்றோரையும் இரட்சிக்கும்!! கிரியை செய்கிறவராக இருந்தீர்களென்றால் அதற்குண்டான ஸ்தானத்தை பெறுவீர்கள்!!

    யோவான் 14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;

    வாசஸ்தலங்கள் என்றால் நிச்சயமாக வீடாக இருக்க முடியாது, அது அவர் அவருக்கு உண்டான ஸ்தானங்களாக () இருக்கலாம்!! கிரியை செய்பவர்களுக்கு அதற்குண்டான இடமும் (வாசஸ்தலம்) கிரியை இல்லாதவர்களுக்கு அதற்குண்டான இடமும் (வாசஸ்தலம்) கிடைக்கும்!! ஆனால் எத்துனை தான் கிரியை இருந்தாலும் கிருபை இல்லாமல் இருந்திருந்தால்...............??//

    தயவுசெய்து ரோமர் 2:6-16 வசனங்களை ஒவ்வொரு வசனமாக எடுத்து முதலாவது விளக்கம் சொல்லுங்கள்.

 

  • Ignatius Elangoஅப்படி என்றால் கிரியை இல்லாதவனுக்கு இரட்சிப்பு கிடையாது என்கிறீர்களா? மனுஷனின் கிரியைக்கு முன்பாக தேவனின் கிருபை செயலற்று போகுமோ?

 

  • Gnana Piragasam‎//அப்படி என்றால் கிரியை இல்லாதவனுக்கு இரட்சிப்பு கிடையாது என்கிறீர்களா?//

    அப்படித்தான் ரோமர் 2:6-16 வசனங்கள் சொல்கின்றன. (நான் சொல்லவில்லை)

 

  • Gnana Piragasam‎***** ரோமர் 2:9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் ***** பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

    ***** 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் ***** எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

    *******11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. *******

 

  • Gnana Piragasamரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

 

  • Gnana PiragasamPlease note the words "முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும்".

 

  • Ignatius Elango
    நான் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்!! ஏனென்றால், என்னால் தேவனின் கிருபையை விட்டு கொடுக்க முடியாது!! எனக்கு மனுஷரின் கிரியைக்காட்டிலும் இரட்சிப்பின் கிருபை தான் தேவை!! எனக்கு தெரிந்தப்படி புரிந்தபடி தேவனின் கிருபை கிறிஸ்துவினால் இரட்சிப்பை கொடுக்கிறதே தவிர, ஒருவனின் செயல் அவனுக்கு இரட்சிப்புக்கொடுப்பதாக வசனமே இல்லை!! கிரியை செய்யாதவனுக்கு இரட்சிப்பு இல்லை என்கிற வசனம் இருக்கிறதா? இல்லை!! ஆனால் கிருபையினால் இரட்சிப்பு இருக்கிறது என்கிற வசனம் இருக்கிறது!! என்னால் நேரடியாக சொல்லப்பட்டதை வைத்து விவாதிக்க முடியும்!! ஒவ்வொருவரும் ஒவ்வொரு வசனத்தை எப்படி புரிந்துக்கொள்கிறார் என்பதை வைத்து விவாதிக்க முடியாது!!

    ஆனாலும் கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என்று பவுல் எங்கும் சொல்லவில்லை அது நீங்கள் மட்டும் தான்சொல்லுகிறீர்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்!!

    II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

    எபேசியர் 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

    கிரியைகளினால் இரட்சிக்கப்படுகிறீர்கள் அல்லது பட்டீர்கள் என்று ஏதாவது வசனம் இருந்தால் தொடருங்கள் இல்லாட்டி என்னை மன்னியுங்கள் என்னால் கிருபையை விட்டுக்கொடுக்க முடியாது!! இல்லாத ஊருக்கு வழிக்கேட்டால் என்னால் சொல்ல முடியாது!!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Gnana Piragasam
    ‎//ஆனாலும் கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என்று பவுல் எங்கும் சொல்லவில்லை அது நீங்கள் மட்டும் தான்சொல்லுகிறீர்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்!!//

    அப். 10:34 தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

    (நீதியைச் செய்யாதவன் அவருக்கு உகந்தவன் அல்ல. எல்லோரையும் போல் அவனுக்கும் கிருபை உண்டு; ஆனால் அவன் தேவனுக்கு உகந்தவன் அல்ல; தேவனுக்கு உகந்தவனாயிராதவன் நித்தியஜீவனைப் பெறமுடியுமா?)

    எபேசியர் 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

    எல்லோருக்கும் கிருபை உண்டுதான். ஆனாலும் நாம் என்ன பாவம் செய்தாலும் இரட்சிப்பு கிடைத்துவிடும் என நம்பி, விபசாரம் பொருளாசை போன்ற பாவங்களைச் செய்தால் நிச்சயம் இரட்சிப்பை இழந்துபோவோம். ஆம், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டோம். இப்படி நான் சொல்லவில்லை; பவுல்தான் சொல்கிறார். இதற்கு மாறாக யாராவது சொல்லும் வீண்வார்த்தைகளை நம்பி மோசம்போகாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.

    14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

    ஆம், இப்போது விளங்காதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில்தான் விளங்கும்.

 

  • Ignatius Elangoகிரியைகள் இல்லை என்றால் இரட்சிப்பு இல்லை என்கிற வசனத்தை தவிர உங்களின் புரிந்துக்கொள்ளுதலையும் உங்களின் நியாயத்தீர்ப்பையும் கேட்க்கவில்லை!! கிருபைனால் இரட்சிப்பு என்கிற ஒரு வசனம் அல்ல, பல வசனங்களை காட்டியாகிவிட்டது!! கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என்கிற ஒரு வசனமும் இல்லை என்றால் எப்படி??

 

  • Ignatius Elango‎//ஆம், இப்போது விளங்காதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில்தான் விளங்கும்.//

    இனி எந்த நியாயத்தீர்ப்பு!! கிருபைக்கு நியாயத்தீர்ப்பு தேவையில்லை!!

 

  • Gnana Piragasam
    எபிரெயர் 12:12 ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, 13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். 14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

    **** 15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் ****

    யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

    கிருபை எல்லோருக்கும் உண்டுதான்; ஆனால் அதை நாம் இழந்துபோகவும் வாய்ப்புண்டு. எனவே அதை இழந்துபோகாதபடி எச்சரிக்கையாயிருப்போமாக.

 

  • Ignatius Elangoநான் கேட்கிற வசனம் உங்களிடம் இல்லை என்றால் விட்டு விடுங்கள்!! தேவனுடைய கிருபை மனுஷனின் கிரியைகளை நம்பியல்ல‌!!

 

  • Gnana Piragasam‎//நான் கேட்கிற வசனம் உங்களிடம் இல்லை என்றால் விட்டு விடுங்கள்!! //

    நீங்கள் ஒரு வாக்கியத்தைச் சொல்லி அதே வாக்கியம் வசனமாக உள்ளதா எனக் கேட்டால் அதைக் கொடுக்கமுடியுமா? அதற்கு இணையான நிகரான வசனங்களைத்தான் சொல்ல முடியும்.

    “கிரியை இல்லாதவனுக்கும் நித்தியஜீவன் உண்டு” இப்படி ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?

 

  • Gnana Piragasam“கிரியை இல்லாதவனுக்கும் நித்தியஜீவன் உண்டு”

    இவ்வாக்கியத்திற்கு இணையான/நிகரான வசனத்தைக்கூட உங்களால் காட்டமுடியாது.

 

  • Gnana Piragasam‎**** எபிரெயர் 12:15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் ****

    ஒருவன் எப்போது தேவனுடைய கிருபையை இழப்பான்? இக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elangoஏங்க அதான் கிருபையினால் இரட்சிப்பு என்று வசனத்தை காட்டிவிட்டேன்!! இனி இல்லாத ஒன்றை வைத்துக்கொண்டு இதற்கு வசனத்தை காட்டுங்கள் என்றால் நான் எங்கே போவது!! இருப்பதை மட்டுமே சொல்ல முடியும்!! கிருபையினால் இரட்சிப்பு என்று நான் சொல்லுவதற்கு காட்டி விட்டேன்!! கிரியை பற்றியான எல்லா வசனங்களையும் நீங்கள் தானே காட்ட வேண்டும்!!

    //“கிரியை இல்லாதவனுக்கும் நித்தியஜீவன் உண்டு” இப்படி ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?// என்பது தான் உண்மையிலேயே விவாதத்தை திசைத்திருப்ப பயன்ப்படுத்தப்படும் கேள்விகள்!! இப்பவும் நீங்கள் இல்லாத ஊருக்கு போகும் வழியை கேட்க்கிறீர்கள்!! மன்னிக்கனும், என்னால் தேவனின் கிருபையை மனுஷரின் கிரியைக்கு ஒப்பாக பார்க்க முடியவில்லை!!

 

  • Ignatius Elangoஇப்பவும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்!! இழந்துபோகாதபடிக்கு என்றால் இழந்து போகிறான் என்று நீங்கள் மட்டுமே அர்த்தம் கொள்கிறீகள்!! தேவனின் கிருபை மனிதனின் கிரியைகளை சார்ந்திருக்கிறது என்பதை நான் நம்புவதாக இல்லை!!

 

  • Gnana Piragasam‎//கிரியை பற்றியான எல்லா வசனங்களையும் நீங்கள் தானே காட்ட வேண்டும்!!//

    கிரியைக்குத்தான் ஏகப்பட்ட வசனங்களைக் காட்டிவிட்டேனே!! குறிப்பாக ரோமர் 2:6-16-ஐக் காட்டியுள்ளேனே!! நீங்கள்தான் அவற்றிற்கு பதில்தர மறுக்கிறீர்களே, நான் என் செய்வது?

 

  • Gnana Piragasam‎//இழந்துபோகாதபடிக்கு என்றால் இழந்து போகிறான் என்று நீங்கள் மட்டுமே அர்த்தம் கொள்கிறீகள்!!//

    அப்படியானால் “இழந்துபோகாதபடிக்கு” என்றால் என்னதான் அர்த்தம்? நீங்கள் சொல்லுங்களேன்!!

 

  • Gnana Piragasam
    ‎//அதான் கிருபையினால் இரட்சிப்பு என்று வசனத்தை காட்டிவிட்டேன்!!//

    இரட்சிப்புக்கு கிருபை தேவையில்லை என நான் ஒருபோதும் சொல்லவில்லையே!! அதுதான் எல்லோருக்கும் ஏற்கனவே பலித்துவிட்டதே!! யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிருபை எல்லோருக்கும் உண்டு.

    ஆனால் கிரியை இல்லாவிட்டாலும் இரட்சிப்பு (அதாவது நித்தியஜீவன்) உண்டா என்பதுதான் கேள்வி.

    நன்மை செய்பவனுக்குத்தான் நித்தியஜீவன் என்பதற்கு ஆதாரமான பல வசனங்களை நான் சொல்லிவிட்டேன். நீங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. நான் என் செய்வது?

 

  • Gnana Piragasam
    ‎//தேவனின் கிருபை மனிதனின் கிரியைகளை சார்ந்திருக்கிறது என்பதை நான் நம்புவதாக இல்லை!!//

    தேவனின் கிருபையை ஒருவன் இழக்கமுடியும் என்றால், அது மனிதரின் கிரியைகளை சார்ந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

    எபிரெயர் 12:15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

    இவ்வசனத்தின் அர்த்தமென்ன? ஒருவன் வேசிக்கள்ளனாக இருந்தால் அவன் தேவனுடைய கிருபையை இழந்துபோவான் என்பதுதானே? சற்று சிந்தியுங்கள் சகோதரரே!!

 

  • Gnana Piragasam
    ‎2 பேதுரு 2:9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

    //கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என்று பவுல் எங்கும் சொல்லவில்லை//

    ஆனால் யாக்கோபு சொல்லியுள்ளார்.

    யாக்கோபு 2:14 ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

    24 ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.

    26 ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

 

  • Gnana Piragasamஎபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9 தாம் பூரணரானபின்பு,

    ** தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,**

    10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.

    எல்லோருக்கும் கிருபை உண்டு என்றபோதிலும், கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே நித்திய இரட்சிப்பாம்.

 

  • Gnana Piragasamஎபிரெயர் 2:4 தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

    எல்லோருக்கும் கிருபை உண்டு என்றபோதிலும், இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருந்தோமானால் தண்டனைக்குத் தப்பமுடியாதாம்.

 

  • Gnana Piragasam‎1 தீமோ. 4:16 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

    உபதேசத்தில் நிலை கொண்டிருந்தால்தான் தீமோத்தேயுவுக்கு இரட்சிப்பாம்; நான் சொல்லவில்லை, பவுல் சொல்கிறார். அது மட்டுமல்ல, அப்படிச்செய்தால்தான் தீமோத்தேயுவின் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சிக்கமுடியுமாம்.

 

  • Gnana Piragasam‎1 தெச. 2:16 புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்;

    புறஜாதியாரிடம் பவுல் பேசினால்தான் அவர்களுக்கு இரட்சிப்பா? கிருபை மட்டும் போதாதா?

 

  • Gnana Piragasam
    பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

    இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டுமா? அதான் கிருபையினால் எல்லோருக்கும் இரட்சிப்பு கிடைத்துவிடுமே (Bro Ignatius Elango சொல்கிறபடி). பின்னர் ஏன் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படவேண்டும்?

 

  • Gnana Piragasam‎2 கொரி. 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.

    எல்லோரும் இரட்சிக்கப்படுகிறவர்கள்தானே? பின்னர் ஏன் கெட்டுப்போகிறவர்கள், இரட்சிக்கப்படுகிறவர்கள் என 2 பிரிவாக பிரித்து பவுல் பேசுகிறார்?

 

  • Gnana Piragasam
    ‎1 கொரி. 15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

    பவுல் பிரசங்கித்ததை கைக்கொண்டால்தான் இரட்சிப்பாம்; இல்லாவிடில் விசுவாசம் வீணாகிப்போகுமாம்.

    கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என்று பவுல் எங்கும் சொல்லவில்லை என Bro Ignatius Elango சொன்னதும் தவறு என நிரூபித்தாயிற்று.

    ஆம், பவுல் பிரசங்கித்ததைக் கைக்கொள்ளுதல் எனும் கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை என பவுலே சொல்லிவிட்டார். இதற்கு மேலும் வசனம் வேண்டுமா?

 

  • Gnana Piragasam
    ‎//The end of law started, the age of grace, Gospel of kingdom to the gentiles!!

    Matthew 21:43 “Therefore I tell you that the kingdom of God will be taken away from you and given to a people who will produce its fruit.//

    Bro Ignatius Elango, நீங்கள் இங்கு காட்டியுள்ள வசனத்திற்கும் கிருபைக்கும் சற்றும் சம்பந்தமில்லை.

    மத்தேயு 21:43 தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

    கனி கொடாதவர்களான இஸ்ரவேலரிடமிருந்து தேவனுடைய ராஜ்யம் நீக்கப்பட்டு, கனி கொடுக்கக்கூடிய ஜனங்களுக்கு அது வழங்கப்படும் என்றுதான் இயேசு சொல்கிறார். இவ்வளவு தெளிவாக இயேசு சொல்லியும்கூட, கனி கொடுத்தவர்கள்/கொடாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் “கிருபையாக” தேவனுடைய ராஜ்யம் கொடுக்கப்படும் என்கிறீர்களே, இப்படிச் சொல்வது இயேசுவின் வசனத்தை அவமாக்குவது இல்லையா?

 

  • Gnana PiragasamBro Ignatius Elango//கிரியை தேவையில்லை என்று சொல்லவில்லை ஆனால் கிரியை தான் அவசியம் என்றும் சொல்லவில்லை!! கிரியை இல்லாதவனும் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறான் என்பதே என் வாதம்!!//

    “கிரியை இல்லாதவனும் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறான்” எனும் கூற்று உண்மையெனில், கிரியை தேவையில்லை என்றுதானே அர்த்தம்? அதைச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?

    கிரியை தேவையா? தேவையில்லையா? எனும் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவும்.

 

  • Gnana Piragasam
    ‎//எபே 2:8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

    இது உங்களால் உண்டானதல்ல என்றால் இது உங்கள் கிரியைகளினால் சாத்தியமே இல்லை!! இது தேவனுடைய கிருபை என்றே அர்த்தமாகிறது!! கிறிஸ்து கிரியைகளை பற்றி யூதர்களிடம் போதித்தார், ஆனால் அவரின் அப்போஸ்தலர்களோ கிருபையை பற்றி புறஜாதியின்டத்தில் போதித்தார்கள்!!//

    இத்திரியில் இப்படியாகச் சொன்ன Bro Ignatius Elango, சில பதிவுகளுக்குப் பின்னர் இப்படியும் சொல்லியுள்ளார்.

    //நீங்களாகவே ஏபேசுவில் வாழ்ந்த புறஜாதிகளுக்கு என்று சொல்லிக்கொண்டால் எப்படி? அந்த நிருபமே எபேசுவில் வாழும் யூதர்களுக்கே எழுதப்பட்டிருக்கிறது!!//

    அப்போஸ்தலர்கள் கிருபையைப் பற்றி புறஜாதியினத்தில் போதித்தனர் என ஒருபுறம் சொல்லிவிட்டு, மற்றொரு புறம் கிருபையைக் குறித்த வசனமான எபே. 2:8 அடங்கியுள்ள நிருபத்தை யூதர்களுக்கே பவுல் எழுதினதாகச் சொல்கிறார்.

    இவ்விரு கூற்றுகளில் எது சரி? தவறானதொரு கருத்தை அடிப்படையாக வைத்து விவாதித்தால் இப்படித்தான் முரண்பாடாக பேசவேண்டியதிருக்கும்.

 

  • Gnana Piragasam
  • ‎//ஐய்யா, புறஜாதிகளுக்கு விசுவாசம் ஒன்றே போதுமாக இருக்கிறது

    ரோம் 1:17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.//

    Bro Ignatius Elango அவர்களே! ரோமர் 1:17-ஐ எழுதின அதே பவுல், 1 கொரி. 15:2-ஐயும் எழுதியுள்ளாரே! சற்று கவனிக்கவும்.

    1 கொரி. 15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

    எந்த விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என ரோமர் நிருபத்தில் பவுல் சொன்னாரோ, அதே விசுவாசம் (கிரியை இல்லாவிட்டால்) வீணாகியும் போகும் என கொரி. நிருபத்தில் கூறுகிறாரே!!

    பவுல் பிரசங்கித்த பிரகாரம் கைக்கொள்ளுதல் எனும் கிரியை இருந்தால்தான் இரட்சிப்பு, இல்லாவிட்டால் இரட்சிப்பு இல்லாமல் விசுவாசம் வீணாகிப்போகும் எனத் தெளிவாகச் சொல்கிறாரே, சற்று கவனித்துப் படியுங்கள் சகோதரரே!!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

  • Ignatius Elango
    உங்கள் ஒரே நோக்கம் (மன்னிக்கனும், இதை சொல்லியே ஆகவேண்டும், ஏனென்றால் நீங்கள் கிருபையை காட்டிலும் கிரியையை அதிகம் சொல்லுபவராக இருக்கிறீர்கள், இதை தள்ளிவிட முடியாது) கிரியைகள் மட்டுமே!! ஆகவே உங்களுக்கு கிருபைக்கான வசனங்கள் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்!!

    கிரியை மற்றும் கிருபையுடன் நியாயத்தீர்ப்பு சொல்லப்பட்டிருப்பது யூதர்களுக்கே!! அவர்களுக்கு சட்டம், நியாயப்பிரமானம், தேவன் இருந்தபடியால் அவர்களுக்கு கிரியை தேவைப்பட்டது!! கிறிஸ்துவின் சிலுவை மரணம் அவர்களுக்கும் கிருபையை தந்தது, ஆனாலும் சட்டத்தின் கீழ் இருந்த அவர்களுக்கு கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்பு இருந்தது!!

    புற்ஜாதியாருக்கு கிருபையே மேன்மைப்பாராட்டும், கிரியை அல்ல!! நீங்கள் யூதனாக இருந்தீர்கென்றால் நீங்கள் கிரியையில் மேன்மைப்பாராட்டுங்கள், நான் புறஜாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன், கிருபை எனக்கு போதும்!! நான் கிரியைகளில் மேன்மைப்பாராட்டும் அளவிற்கு எனக்கு கிரியை அல்ல, செய்யும் கிரியை தேவன் அறிந்திருக்கிறார், ஆகிலும் அவரின் கிருபையே மேன்மைப்பாராட்டும்!!

    ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

    II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

    அவ்வுளவு தான்!! கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல் தம்முடைய தீர்மானத்தின்படியும் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே தான்!!

    கிரியை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, அது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் செய்கிறார்கள், ஏன், கடவுள் இல்லை என்று சொல்லுபவரும் செய்கிறார்!! அப்படி இருக்க அவர்களுக்கு தெரியாது இருக்கும் கிருபையே அவர்களையும் இரட்சிக்கிறது!! கிறிஸ்துவை தெரிந்தவர்களுக்கு அவர் கொண்டிருக்கும் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பின் மீது இருக்கும் விசுவாசமே போதும்!! கிரியை செய்த கொர்நலேயுவிற்கு கிருபை அருளப்பட்டது, சுவிசேஷம் அவனிடம் சென்றது!! கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் கிரியைகளில் மேன்மைபாரட்ட வேண்டியதில்லை, அது அவர்களுக்கு அருளப்படுகிற ஒரு காரியம் தான்!!

    வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

    இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது என்று நம்புகிறவன் நான்!! கிரியைகள் தேவையில்லை என்று சொல்லவில்லை, ஆனால் கிரியைகள் செய்யாவிட்டால் இரட்சிப்பு இல்லை என்பதை மட்டுமே ஒத்துக்கொள்ளவில்லை!! கிரியை செய்யமுடியாதப்படிக்கு அநேக காரணங்கள் இருக்கும், பிறவியில் முடவனாக பிறந்தவன், இன்னும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் எந்த கிரியைகளை செய்து இரட்சிப்பு அடைவார்கள் என்று யோசித்து பாருங்கள்!! உங்கள் தீர்ப்பின்படி இவர்கள் அனைவரும் அழிந்து போகிறார்கள் என்றால் தேவனின் கிருபையை அவமாக்குகிறீர்கள் என்றே நான் சொல்ல முடியும்!! ஆக தேவ கிருபை எல்லார் மீதும் இருப்பதால் தான் கிரியைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை!!

 

  • Ignatius Elango
    ‎//எந்த விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என ரோமர் நிருபத்தில் பவுல் சொன்னாரோ, அதே விசுவாசம் (கிரியை இல்லாவிட்டால்) வீணாகியும் போகும் என கொரி. நிருபத்தில் கூறுகிறாரே!!//

    கிரியை இல்லாவிட்டால் என்று நீங்கள் குறிப்பீட்டுக்குள் போட்டுக்கொண்டால் அது பவுல் சொன்னதாகிவிடுமா??

    அவர் எதை விசுவாசிக்க சொல்லுகிறார் என்று தொடர்சியாக வாசியுங்கள்!!

    1 கொரி 15:3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

    4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

    தொடர்ந்து வாசியுங்கள்!!

    10. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

    கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தான் அவர் விசுவாசமாக கைக்கொள்ள சொல்லுகிறார்!! நீங்களாகவே அதை கிரியை என்று நினைத்துக்கொள்கிறீர்கள்!! கைக்கொள்வது என்றவுடன் அது கிரியை என்று என்ன வேண்டியதில்லை!! விசுவாசத்தையும் கைக்கொள்வது என்றே சொல்லலாம்!!

 

  • Ignatius Elango
    எபே 2:9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

    10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

    கிரியைகளில் பெருமை பாராட்டவேண்டாம், ஏனென்றால் அது என்னமோ நாம் நம் சொந்த முயற்சியில் செய்துக்கொள்கிறோம் என்றும் என்ன வேண்டாம்!! அதுவே ஒரு ஈவாக கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருந்து வெளிப்படுகிறது!!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard